மலர்தல்-3
அவன் மனமெல்லாம் அவள் நினைவுகள் ..ஒரு ஆழிப்பேரலையாய் எழுந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
தன்னையும் அறியாமல் அவனது அறையின் சோபாவில் மயங்கிக் கிடக்கின்றாள் அவள்.
உரிமைப்பட்டவனாக இருந்தும், தள்ளி நின்று பார்க்க வேண்டிய பரிதவிப்பான நிலை அவனுக்கு. சர்க்கரை வியாதிக்காரன் மிட்டாய்க்கடையை பார்ப்பது போல.
அவள் வனப்புக்களை..ஏக்கத்துடனும்,தாபத்துடனும் கண்களில் நிரப்பிக் கொண்டவன்..அவளில் நின்றும் தன் ஆறடி உயரத்துக்குமாக நிமிர்ந்தான்.
தற்போதோ, அவன் பழைய அர்ஜூன் மனோஹராக மீண்டிருந்தான்.ஆம்,அவன் முகத்தில் இறுக்கமும், உணர்ச்சியற்ற பாவமும் குடியேறியிருந்தது.
தன் உயர்ரக கோட்டினை இழுத்துச் சரி செய்த வண்ணம்..அழுத்தமான காலெட்டுக்களுடன்..டாக்டர்.உஷா தனக்காகக் காத்திருக்கும் அறைக்குள் நுழைந்தான் , ‘அர்ஜூன் மனோஹர்!’.
நரம்போடிய அழுத்தமான வலிய கைகளால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் அர்ஜூன்.
அந்தச் சின்ன அரவத்தில் திரும்பிப் பார்த்த டாக்டர் .உஷா..அவனைக் கண்டதும்..தானாகவே உடனே எழுந்து நின்றாள்.
அவன் நடை!! போர்க்களம் கண்ட இராஜ க்ஷத்திரியர்கள் போன்ற நடை.. உஷாவையும் நயந்து பார்க்கத் தான் செய்தது.
ஆங்கிலத்தில் சொல்வார்களே? ‘இன்ஃபினிட்டி ஆரா (Infinity Aura)’ என்று.அது போல , அதிகாரமும்,செருக்கும், இறுக்கமும் அவன் மணிமகுடங்களாகச் சூடியவையோ?
டாக்டர் .உஷாவோ, அவனைக் கண்ட நொடி முதல், ‘ஒரு இளம் ஆடவனால் எப்படி இவ்வளவு அழகாக இருக்க முடியும்?’ என்றே விழிகள் இரண்டும் மேலுயர வியந்து நின்றாள்.
அவனது விலையுயர்ந்த பிரேசில் நாட்டு திரவிய வாசனை..காற்றில் எங்கனும் நிறைத்திருந்தமையானது, அவனது ஆண்மையை இன்னும் மெருகேற்றுவதாய் இருந்தது.
ஆனால் என்ன?எந்தவித உணர்ச்சிகளுமற்று கல்லினாலான ஓர் முகமோ?என்று எண்ணும் வகையில் இருப்பவனைக் கண்டதும் உள்ளூர ஓர் நடுக்கமும் எட்டிப் பார்க்கவே செய்தது.
டாக்டர்.உஷாவின் கண்கள் அவனது அழகிய முகவெட்டினையும்..இறுகிய தாடையையும் ஆராய்ந்தபடியே.. அவனது கரங்களையும் ஏறிடலானது.
வலதுகை முழுவதையும் மறைத்த வண்ணம் கையுறை அணிந்திருந்தவனின்..இடது கரம் மாத்திரம் வெறுமையாக இருந்தது.
அவ்விடது கரத்தின் நான்காவது விரலில்..பிளாட்டினத்தினாலான..ஒரு மோதிரம் அணிந்திருந்தான் அவன்.
அவனது திருமண மோதிரமோ?எனில் ,இவன் திருமணமானவனோ?
மனதுக்குள் நினைத்துக் கொண்ட உஷாவோ.. அவன் முன்னிலையில்..தான் வந்த காரியத்தை எடுத்தியம்பவும் கூட..சற்றே சங்கோஜமாக உணர்ந்தாள்.
அவனோ..நடந்து வந்து மேசையின் பின்னால் தனக்கென்று போடப்பட்டிருந்த ஆசனத்திற்கு வந்து சேர்ந்த சமயம்..மரியாதை நிமித்தம்..தன் கையினை நீட்டியிருந்தாள் உஷா.கைக் குலுக்கலுக்களுக்காக.
“ஹாய்..ஐ ஆம் டாக்டர்.உஷா.பேர்ள் ஹாஸ்பிட்டல் சிஇஓ” என்று இங்கிதமாக தன்னைப் பற்றி சிறிய அறிமுகமும் செய்து கொண்டாள்.
ஆயினும்,அர்ஜூன் மனோஹரோ..டாக்டர் உஷாவின் நீட்டப்பட்ட கைகளுக்குள் தன் கையினை பதிக்காமல்.. அசிரத்தையாகப் பார்த்தான்.
எந்தவிதமான மரியாதை முகமனும் இல்லாமல் ,”சிட் டாக்டர்.உஷா…” என்றான் ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாக.
அமர்த்தலான அவன் குரல் அவளின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்தது.உண்மையில் கைக் குலுக்கல் இக்காலத்தில் சாதாரண நடைமுறையே.
அதுக்குக் கூட இடங்கொடாத அளவிற்கு ஆணவமோ?பணத்திமிரோ??
எதுவாயினும் தன்னை விடவும் பலநூறு மடங்கு உயரத்தில் இருப்பவனை எப்படி கடிந்து பேச முடியும்?குறைந்தபட்சம் கண்டனப்பார்வை ஒன்றாவது செலுத்த முடியுமா என்ன?
அவன் கையை நீட்டாதது கண்டு..தனக்குள் முகம் கருக்க நின்றிருந்தாலும்..வெளிக்குக் காட்டாமல் புன்னகைக்க முயன்றாள் உஷா.
அவன் அமர்ந்ததும் தானும் அமர்ந்து கொண்டவளுக்கோ, தான் நாடி வந்ததை சொற்கோர்வை கொண்டு சொல்ல, அகம் முழுவதும் தயக்கம்.
ஒருவாறு தன்னைத் தானே திரட்டிக் கொண்டு,ஆரம்பித்தாள் உஷா.
“சார்..நம்ம ஹாஸ்பிட்டல் விஷ..யம்?” என்று இழுத்தவளுக்கு மேற்கொண்டு பேச மீண்டும் தயக்கம் சூழ்ந்தது.
காரணம்? அவனது ஆளுமையும், எதிராளியை வெட்டும் பார்வைப் பார்க்கும் அந்த விழிகளும்.
அவை எந்த பெண்ணையும் வீழ்த்தும் அஸ்திரங்களாக இருப்பதைக் கண்டாள்.
அவளது தயக்கம் உணர்ந்தவனாக இம்முறை தன் அழுத்தமான இதழ்கள் திறந்து உரையாடியிருந்தான் அவன்.
“ஃபைன்… ஊட்டியில ஊசிவளைவு பாதைகளுக்கு மத்தியில் பரவலா
ஆக்ஸிடெண்ட் நடக்கும் ஸ்பாட்.. அது பக்கத்துல ஒரு ஹாஸ்பிட்டல் இருக்கறது..எல்லா வகையிலும் நல்லது தான்..இன்பாக்ட் நான் இன்னிக்கி உயிரோட இருக்கேன்னா..அப்போ தகுந்த சமயத்தில் ..அருகிலேயே.. ஒரு ஹாஸ்பிட்டல் இருந்ததுவும் ஒரு காரணம்..என் ‘உயிரே’ திரும்பக் கிடைக்க காரணமும் அந்த ஹாஸ்பிட்டல் தான். !” என்றவன் முகத்தில் வந்து போனது நொடி நேர இளகல்.
மனக்கண்ணில் அவனது உயிருக்கு நிகரான ஒரு தேவதைப் பெண்ணின் வதனம் வந்து போனது.
கடும் உஷ்ணத்தில் இருந்தவனின் மேனி தழுவிச் சென்ற தென்றலின் சுகம் அவனில்.
உண்மையில் ‘அவனுக்கு திரும்பக் கிடைத்த உயிரென்று குறிப்பிட்டது எதனையோ??’
அவளையா.? தன் அன்புக் காரிகையையா?
அது அவன் உள்மனத்துக்கு மாத்திரமே வெளிச்சம்!
அடுத்த விநாடி மீண்டும் குரல் இறுக,“தேங்க்ஸ் ஃபார் தேட்!” என்றான் ரோபோ போல.
அவனது நன்றி நவிலலைக் கேட்டுக் கொண்டிருந்த உஷாவுக்கோ வேறு மாதிரியான உணர்வுகள்.
எந்த விதமான புன்முறுவலும் இல்லாமல்..இறுக்கமான முகத்துடனேயே நன்றி நவிலல் கூற யாராலும் முடியுமோ..?
அப்படி இறுக்க முகபாவம் வைத்து நன்றி சொல்ல, இதோ இவனால் முடிகிறதே!! அவனை.. ஆச்சர்யமாகத் தான் பார்த்தாள் உஷா.
“சார்.. பத்து வருஷங்களாக.. பலபேர் உயிர்களைக் காப்பாத்தின ஹாஸ்பிட்டல் சார் இது..இப்போ கொரோனா சீசனுக்கு அப்றம்.. கொஞ்சம் கடன்ல தான் ஓடிட்டிருக்கு, அப்பாவுடைய உயிர் அந்த ஹாஸ்பிட்டல்.. நான் டாக்டருக்கு படிச்சதே மக்களுக்கு சேவை செய்யணும்னு தான்.. ஆனா இப்போ ஹாஸ்பிட்டல் மூடக்கூடிய நிலைமையில.. எல்லாமே வீண் தானோன்னு பயமா இருக்கு…” என்றவளின் பார்வை தாழ்ந்தது சோகத்தில்.
அவன் இம் மருத்துவமனையினை வாங்கிக் கொள்வதாக.. தன் வாயாலேயே சொல்லும் வரை.. எதையும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியாது அல்லவா?
ஆகையால்.. அவன் மனம் இரங்கும் வண்ணம்.. தனக்கு அம் மருத்துவமனை மேலுள்ள தீராத அபிமானத்தை.. இதமாகச் சொன்னாள்.
அவனது கையுறை அணிந்திருந்த வலது கை அந்தரத்தில் உயர்ந்தது.ஏதோ ‘இட்ஸ் ஓகே’ என்று சொல்வது போல. அது அவனது மேனரிசம் போல.
ஆயினும் ஏனிந்த கையுறை? உஷாவை சிந்திக்க விடாமல் கேட்டது அவன் குரல்.
“பயப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.. உங்க ஹாஸ்பிட்டல்ல எழுபத்தைந்து வீதமான ஷேர்ஸ் வாங்குறதுல எனக்கு பரிபூரண சம்மதம்..” என்று அவன் தீர்க்கமான குரலில் தன் முடிவினை எடுத்துரைக்க.. தற்போது தான் உஷாவின் வதனத்திலோ புன்னகையின் சாயை.
“ தே.. தேங்க்ஸ். தேங்க்ஸ் அ லா..!!” என்று அவள் நன்றியை கூட முழுதாக முடித்திருக்கவில்லை. அதற்குள் இடையிட்டிருந்தான் அவன், மீண்டும்.
தன் மேசையின் மீதிருந்த.. பேப்பர்வெயிட்டினை.. ஒரு தரம் உருட்டி நிறுத்தியவாறு.. அடிக் கண்களால் அவளை ஏறிட்டான் அர்ஜூன்.
“பட் ஒன் கன்டிஷன்!!”
“எ.. என்ன கன்டிஷன் சார்?”
“பத்து வருஷம் வரையில் உன் அப்பாவுக்கு கீழே ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் எப்படி வேணா இயங்கியிருக்கலாம்..ஆனா எனக்குக் கீழ.. வரப் போறது புது நிர்வாகம்.. அதனால.. ஆட்குறைப்பு செய்றதா.. ஆட்சேர்வு செய்றதான்னு நான் தான் முடிவெடுப்பேன்.. அதுக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கக்கூடாது “என்றான் அதே அமர்த்தலான குரலில்.
அவன் கைக்கு மருத்துவமனையின் முக்கால்வாசிப் பங்குகள் என்றானதும், அவனது புது நடைமுறையை அவளால் எங்ஙனம் மாற்ற முடியும்? அதுவும் பூம் பூம் மாடு போல தலையாட்டுவதைத் தவிர.
“ உ.. உங்க இஷ்டம் சார்”
அத்தோடு பேச்சைக் கத்தரித்துக் கொண்டாற் போல.. அவளைப் பார்த்தான் அர்ஜூன்.
“ரைட்.. டூ ஒன் திங்க்.. நாளைக்கு சனிக்கிழமை.. அதனால நாளை வேண்டாம்.. நாளை மறுநாள் கழிச்சு.. மன்டே ஹாஸ்பிட்டல் ஸ்டாப்ஸ் எல்லாரையும் கேதர் பண்ணுங்க..நான் அவங்களை மீட் பண்ணியாகணும்.. ” என்று பேசிக் கொண்டிருக்கும் போது.. விலை மதிப்புமிக்க அவனது ஐபோன் அலைபேசியும் சிணுங்கியது.
திரையில் மிளிர்ந்த நாமத்தினைக் கண்டதும்.. அவனது புருவங்களும் மெல்ல இடுங்கியது.
அதிமுக்கிய அழைப்போ என்னவோ.. இரண்டாவது ரிங்க் போவதற்கு முன்.. சட்டென்று அழைப்பை ஏற்று.. காதில் வைத்திருந்தான் அர்ஜூன்.
தன் காந்தர்வக் குரலில், “ஹலோ” என்றிருப்பான். மறுகணம் மறுமுனையிலருந்து என்ன சொல்லப்பட்டதுவோ?. அவன் முகம் கற்சிலையாகி.. இரத்த நாளங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின.
அப்படி என்ன தான் சொல்லப்பட்டன?
இதோ இவை தாம்!!
“சார் மேடம் கண்ணு முழிக்கப் போறதுக்கான அறிகுறிகள் தெரியுது..இன்னும் டூ மினிட்ஸ்ல அவங்க கண்ணு முழிக்கலாம்”என்றது ஓர் ஆண்குரல்.
அவ்வாண்குரல் செப்பிய ‘மேடம்?’ அது வேறு யாருமில்லை. தற்போது ஆழ்ந்த மயக்கத்தின் வசம் ஆட்பட்டிருக்கும் நம் நாயகி மீராவே தான்.
அவள் கண்விழித்ததும் ஏனோ தன்னை அவள் எக்காரணம் கொண்டும் பார்த்து விடவே கூடாது என்று உறுதியாக இருந்தான் அர்ஜூன்.
ஆகையினால்.. “ம்ம்” என்ற ஒற்றைச் சொல்லோடு அழைப்பைத் துண்டித்து விட்டு.. எதிரே அமர்ந்திருந்த உஷாவை.. அதே முசுட்டுப் பார்வைப் பார்த்தான் நாயகன்.
“டாக்டர். உஷா#?”
“எஸ். சார்?”
“மீதியை அப்றம் பேசிக்கலாம்.. ஐ ஹேவ் டு டேக் அ லீவ் நவ்.” என்றவனுக்கு அவளது சம்மதத்தைக் கேட்கக் கூட பொறுமையிருக்கவில்லை.
தன் மணிக்கட்டைத் திருப்பி அதிலிருந்த ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தில் மணிபார்த்தவன் புருவங்கள் இரண்டும் சுருங்கின.
” சீ யூ தென்…” என்றவன்.. வந்த பாதையிலேயே.. விறுவிறுவென முன்னேறிச் சென்றிருந்தான்.
புயல் வேகத்தில் கிளம்பிப் போனவனின் முதுகையே ஒரு சில கணங்கள்.. ஆச்சரியத்துடன் இமையாமல் பார்த்திருந்தாள் உஷா.
‘எவ்வளவு பெரிய ஆள் அவன்..?ஆயினும் அவனது ஃபங்க்சுவாலிட்டி தான் என்னே’ என்று உள்ளுக்குள் மலைப்பாக எண்ணிக் கொண்டாள் அவள்.
ஹாஸ்பிட்டல் டீல் சரியாக முடிந்த சந்தோஷத்தில் இருந்த உஷாவோ.. தன்னிடமிருந்த விடைபெற்றுச் சென்றவனை நோக்கி.. “ஓகே சார்.. ஷ்யூர் சார்”என்று புன்னகையுடன் சொன்னது கண்டிப்பாகக் காற்றுக்குத் தான் கேட்டிருக்கும்.
உஷாவுக்கோ.. எப்படியும் தான் நாடி வந்த காரியம்.. நிறைவேறியதில் ஏக மகிழ்ச்சி. அவளும் வந்த வழியே வெறியேறலானாள்,தான் தேடி வந்த காரிகையைக் காண.
ஆனால் அவன்? ஏன் அத்தனை தொழில்களைக் கட்டியாளும் சாம்ராஜ்யபதி.. ஓட வேண்டிய அவசியம் என்ன?
ஒரு இளம்பெண்ணைக் காண அச்சம் கொண்டு ஓடுகிறானா?
அவளுடனான தன் கடந்தகாலத்தின் எச்சங்கள் அவனுக்குத் தருவித்தது அச்சத்தின் உச்சங்கள்!!
கண்டதும் திட்டிவிடுவாளா? முறைப்பாளா? அறைவாளா?
அனைத்துக்கும் தயாரானவனாக அவன் தற்சமயம் இல்லை.
அவளைக் காணும் தருவாயில்.. அழகான தருவாயிலாக இருக்க வேண்டும் என்று பெரிதும் நாட்டம் கொண்டவன்.. மனதினுள்.. அவள் அகத்தை அடைய பத்தும் பலதையும் உருப் போட்டுக் கொண்டான்.
மலர்தல்-4
“மீரா.. ஹேய்.. மீ.. ரா” என்று யாரோ அவள் தோளினைப் பற்றி உலுக்கிய உலுக்கலில் தான்.. ஆழ்ந்த கனவில் நின்றும் விழிப்பவள் போல அடித்துப் பிடித்துக் கொண்டு.. “ஆஹ்” என்று மூச்சை இதழ்கள் திறந்து வெளியேற்றியவளாக விழித்தாள் மீரா.
அவளுக்கோ தான் எங்கிருக்கிறோம்? எவ்வாறிருக்கிறோம் என்று தலையெது? வாலெது என்று எதுவுமே புரியாத நிலைமை.
கண்களைத் திறந்து பார்த்த போது.. அவள் ஏதோ முற்றிலும் வெண்ணிறப் பூச்சு பூசப்பட்ட அறையில் இருப்பதையும், எதிரே அவளது மருத்துவமனையின் தலைமை நிர்வாகி உஷா நின்றிருப்பதையும் கண்டாள்.
“மேம்..?” என்று எதுவும் புரியாமல்.. விழித்தவளுக்கு.. சொற்ப மணிநேரங்களுக்கு முன்பு.. தனக்கே தனக்கென்று உரித்தான ஆடவனின் கைவளைவில் எக்குத்தப்பானக் கோலத்தில் கிடந்தது தெரியவே தெரியாது.
உஷாவோ.. இடுப்பில் கைவைத்து போலியாக முறைத்தவளாக, “ என்ன பகல் நேரத்துலயே தூக்கமா??” என்று கேட்கலானாள்.
என்ன அயர்ந்து உறங்கிவிட்டாளா? அதுவும் பட்டப்பகலில்?
அவளா? நிஜம்தானா? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவளுக்கு நடப்பது மெய்யா? பொய்யா என்பதறிய தன்னுடலைக் கிள்ளிக் கொள்ள வேண்டும் என்பது போல ஆர்வம் எழுந்தது.
அதே கணம்.. அழகிய பூம்பாவைக்கோ.. இலேசாக தலைவலிப்பது போல இருக்க.. நெற்றியைப் பிடித்துக் கொண்டு சிந்திக்கலானாள்.
அப்படி பகல் நேரத்தில் கண்டமேனிக்கு தூங்கும் ரகமில்லையே அவள். அது அவள் வழக்கமும் அல்ல. பின்பு எப்படி அவளையும் அறியாமல் தூங்கிப் போனாள்?
அவளோடு வந்த உஷா மாத்திரம் அவனது சந்திப்பு அறைக்கு விரைந்தது, இவள் இந்த அறைக்குள் வழிநடத்தி அழைத்து வரப்பட்டது என்று அனைத்தும் நினைவு வந்தது.
இறுதியாக.. டீயை ‘சிப்’பினாள்? பின்பு.. என்ன நடந்தது ? மூளையைப் பிழிந்து யோசித்தும் ஞாபகம் வரவில்லை.
அவளையே புரியாமல் நோக்கும் உஷாவைப் பார்த்து, முணுமுணுக்கலானாள் மீரா.
“ஒ..ஒரு டீ சாப்பிட்டேன்.. அப்.. அப்றம் என்ன ஆச்சுன்னு ஞாபகமே இல்ல மேம்” என்றவள்.. அறையையே சுற்றிச் சுற்றிப் பார்க்கலானாள், ஏதும் தெரியாத பேதையாய்.
“மீரா… ரொம்ப நாளா ஹெக்டிக் வொர்க்ல? அதனால உன்னையும் மீறி தூங்கியிருப்ப. நத்திங்க் எல்ஸ். வா போகலாம்” என்று அவளது கைவளைவை உரிமை மீதூறப் பற்றி எழச் செய்தவளாக வெளியே நடந்தாள் உஷா.
மீராவும், ‘ஒருவேளை அது தான் உண்மையோ? இருக்கும் இருக்கும்’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு.. உஷாவின் முகத்தை ஏறிட்டாள்.
உஷா எப்போதும் இல்லாதவாறு இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றியது,நாயகிக்கு.
“ மேம்.. உள்ளே போன காரியம் என்னாச்சு? எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?” கேட்டாள் மீரா.
அவன்.. அர்ஜூன் மனோஹரைச் சந்தித்த பிறகு டாக்டர் உஷா முகத்தில் தொற்றிக் கொண்ட உவகையைக் கண்டு.. இளையவளின் விழிகளும் அதே உவகையை கடன்வாங்கிக் கொண்டது.
“ஆமா எல்லாமே பர்ஃபெக்ட்டா முடிஞ்சுது.. இந்த திங்கள்கிழமை நம்ம ஹாஸ்பிட்டலுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காரு.. கண்டிப்பா அவருக்கு கிரான்ட் வெல்கம் கொடுக்கணும் மீரா” என்று பேசிக் கொண்டே இருவரும் வெளிமுகப்பை அடைந்து.. தம் காரில் ஏறியிருந்தனர்.
இரு பெண்களும் தங்களுக்குள் சன்னமாகப் பேசிச் சிரித்தபடி கிளம்ப, அதனையே மொட்டைமாடி பால்கனிப் பக்கம் நின்று.. வெறிக்க வெறிக்கப் பார்த்திருந்தன இரு கண்கள்.
அது நம் நாயகன் அர்ஜூன் மனோஹரின் கண்கள்!!
அவள்,தன் மனையாள்.. தன்னை சந்திக்கும் தருவாயினை என்றும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற இவன் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்க.. இவளோ.. ‘தனக்கு உயிரினும் மேலான கேள்வன் ஒருவன் உறவாக இருக்கிறான்’ என்பது கூடத் தெரியாது உழன்று கொண்டிருந்தாள்.
ஆம், அவன் பற்றிய நினைவுகளை முற்றிலுமாகத் தொலைத்திருந்தாள் அவள்.
உடல்..மீயுயர்பட்ச வலியை உணரும் போது தன்னையும் மீறி மூர்ச்சைக் கொள்ளும். தற்காப்பு நடவடிக்கையாக .
அது போல அவள் மனமும்?மீயுயர்பட்ச வலியை தாங்கொணாது தன்னையும் மீறி அவன் நினைவுகளை மறந்ததுவோ?
அவள் தன்னை மறந்தது அறியாமல்..அவளின் அகம் பற்றத் துடிக்கும் இந்தக் காதல் தீவிரவாதியின் நிலையும் என்னவாகும் ?
மலர்தல்-5
வெளியே பால்நிலா.. யாருக்கும் காத்திராமல்.. தனியே ஒளிர்ந்து கொண்டிருந்தது.
வெள்ளைநிற சாளரத் திரைச் சீலைகள் மாத்திரம்.. காற்றுக்கு அங்கிங்கெனாதபடி ஆடிக் கொண்டேயிருந்தது.
அவ்வறையில்.. ஓர் பாலகனின் அழுகுரல் சப்தம் மட்டும்.. இடைவிடாது ஓயாமல் கேட்டது.
அழுதழுது முகமே வீங்கிப் போயிருந்த அந்தப் பிஞ்சுப் பாலகனின் வயது சர்வநிச்சயமாய் ஐந்துக்கும் மிகாது.
முழங்கால்களைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு.. அதில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கும் சிறுவனை.. நெஞ்சோடு அணைத்துத் தேற்றுவார் தான் அங்கே யாருமில்லை.
உலகமே இரக்கமற்றுப் போனதோ அந்தப் பிஞ்சு விஷயத்தில்.
அக்கணம்..பூட்டப்பட்ட அறைக்கு வெளியே.. “டக்.. டக்.. டக்” என்று யாரோ ஒருவனின் காலடிச் சத்தம் கேட்கத் தொடங்கியது.
அவ்வரவம்.. செவிகளை அடைந்த கணம்.. தன் கண்ணீர் சொட்டும் விழிகளின் அழுகையை நிறுத்தி விட்டு, மருண்ட விழிகளுடன் நிமிர்ந்தான் சிறுவன்.
அக்கணம்.. அவன் நிமிர்ந்து பார்ப்பதற்கும், யாரோ கதவைப் படாரென்ற ஒலியுடன் திறந்த வண்ணம் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
அந்த இருட்டில் நுழைந்த உருவத்தின் விழிகள் விரிந்து.. அச்சிறுவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தது.
சிறுவன்.. சுவற்றோடு முதுகை ஒட்டிய வண்ணம்.. நிமிர்ந்து எழ..அவனது சிறு விழிகள் கண்டு கொண்டன.. அவ்வுருவத்தின் கைகளில் இருந்த அதனை.
பழுக்கக் காய்ச்சிய கம்பியினை!!
இருட்டிலும்.. செம்மஞ்சள் நிறத்தில் தகதகவென சூடு பறக்க.. சிறுவனைப் பார்த்து.. கொடூரமாகப் பல்லிளித்துக் கொண்டிருந்தது அது.
அதனைக் கண்டவன்.. அவ்விடத்தை விட்டும் ஓடவும் முடியாதவனாக, ஒளியவும் முடியாதவனாக.. “வேண்டாம்.. வேண்டாம்.. எ.. என்னை வி.. விட்.. ருங்க..” என்று கத்தத் தொடங்கினான் பரிதாபமாக.
அந்த உருவம்.. ‘ஒரு பிஞ்சுப் பாலகனை வதைக்கிறோம்’ என்ற அணு இரக்கம் கூட இலாது.. கர்ண கொடூரமாக விழிகள் விரிய இரைந்தது.
“இனி போவீயாஆஆ.. சொல்லூஉ.. சொல்லூஉ.” என்று கர்ண கொடூரமான குரலில் அதட்டிக் கேட்டது.
அந்த பேய்முகத்தைக் காணப் பிடிக்காத குழந்தையும் ..கண்ணை மூடிக் கொண்டு மிச்சசொச்ச கருணைக்காக இறைஞ்சலானது;கதறலானது.
“இ.. இல்.. இல்ல.. இ.. இனி போக மாட்டேன்.. நீங்க சொன்னதைக் கேட்டு நடந்துக்குவேன்..இ..இல்ல.. ப்ளீஸ்.. வி.. வி..”
பாவம் பாலகன்.இன்னும் மழலை மாறிடாத குரல். சரியாகப் பேசக்கூட முடியவில்லை.
அச்சத்திலும், அழுகையின் வீரியத்திலும்.. மூச்சுக்கும் சிரமப்பட்டு விம்மலானான் சிறுவன்.
சிறுவன் வாயால் தந்த உறுதிமொழியை நம்பாமல் தான் போனானோ கொடூரனும்??
அடுத்த விநாடி ,அக்குரூரனின் கைகள்.. பையனின் உள்ளங்கையில் வைத்தது சூட்டுக் கம்பியினை.
“அம்ம்மாஆஅஅ!!” என்று சூட்டின் எரிச்சல்.. தாங்க முடியாமல்.. அடித்தொண்டையில் நின்றும்.. அவ்வில்லமே அதிரக் கத்தியிருந்தான் பாலகன்.
‘அம்மா’ என்ற வாசகம் கேட்டதும் மென்மேலும் அதியுச்ச வஞ்சினம் பூண்ட மிருகம்.. இன்னும் அப் பாலகனைக் கடித்துக் குதறச் சித்தமானது.
“அம்மா சொல்லுவீய்யாஆஆ..?நோ..உன் வாயிலிருந்து அம்மான்ற வார்த்தை வரவேக் கூடாது” என்று நச்சரிக்கும் அந்தக் குரல்.. இன்றும் இதோ.. கேட்கிறது.
***
ஆழ்ந்த துயிலின் வசம் ஆட்பட்டிருந்த ஆறடி உயரத்துக்கு வளர்ந்த குழந்தையான.. அர்ஜூன் செவிகளுக்குள் இன்றும் ஒலிக்கிறது.
மூட்டப்பட்ட இமைகளின் பின்னே ஓடித்திரிந்த கருமணிகள்.. உறக்கத்துக்கும், உண்மைக்கும் இடைப்பட்ட நிதர்சனம் தெரியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தது.
ஊட்டியின் இயற்கை குளிரிலும்.. அவனுடைய வியர்வைச் சுரப்பிகள்.. அதீதமாக வேலைச் செய்ய.. மணிமணியாக வியர்த்தது.
உள்ளங்கைகளோ.. இன்று இக்கணம்.. சூடு வாங்கப்பட்டது போல.. அடங்கவே மாட்டாமல் எரிந்தது.
அன்று போலவே தோல் பொசுங்கி.. கொப்புளம் கொண்டு.. வலிப்பது போல வலிக்க.. இன்றும்..”ஆஆ!” என்று கத்திக் கொண்டே.. பட்டென்று கண் விழித்திருந்தான் அர்ஜூன்.
அவன் கண்ட துர்சொப்பனத்தில் வேண்டுமானால் இரவாக இருந்திருக்கலாம்.
இப்போதோ..கீழ்வானம் சிவந்து வெளுத்திருந்தது.
ஆம், நற்காலைப்பொழுதின் சூரியக் கிரணங்கள்.. சாளரம் தாண்டி விழுவது கூட தெரியாமல்.. காலை, மாலை அறியாமல்.. தன் உள்மனக் காயங்கள் பின்னிய வலைக்குள் அகப்பட்டிருந்தான் அர்ஜூன்.
அவன் நுரையீரலோ.. சுவாசத்துக்கு ஏங்கித் தவிக்க.. “ஹாஹ்.. ஹாஹ்..” என்று மூச்சுக்களை.. தன் வன்மார்புகள் ஏறியிறங்க விட்டுக் கொண்டே நிமிர்ந்த கணம் அது.
அப்போது தான்.. அவனுக்காக.. காலை காபியினை தட்டில் எடுத்துக் கொண்டு வந்த புது பணிப்பெண்ணும்.. தட்டை.. அவனது கட்டிலுக்கு அருகாமையில் உள்ள டிராயர் மீது வைக்கப் போன கணமும் அதுவே.
இவன் சடாரென்று துயில் கலைந்து எழுந்த வேகத்தில் அஞ்சிப்போன பணிப்பெண்ணும்.. “ஹஹ்” என்று அலறிய வண்ணம்.. காபித் தட்டினை கீழே விட்டிருந்தாள்.
போசிலின் கோப்பை தரையில் மோதி உடைந்து.. காபியும் தரையில் சிந்தப்பட்டு ..நிலமும் அலங்கோலமானது.
தனக்கு மிக மிக அருகாமையில்.. தன் பணிப்பெண்.. சிந்திய காபித்தட்டோடு நின்றிருப்பதைக் கண்டவனோ.. அவள் ஒரு பெண்ணென்றும் பார்த்தானில்லை.
அவளது ஏப்ரன் அணிந்திருந்த வயிற்றின் மீது கைவைத்து.. மூர்க்கத்தனமாக.. மிலேச்சத்தனமாக தள்ளிவிட்டிருந்தான் பணிப்பெண்ணை.
பணிப்பெண்ணோ..அவனது எதிர்பாராத தாக்குதலில்.. சுவற்றோடு மோதுண்டு.. “அம்மாஆ!!” என்றவாறே தரையில் வீழ்ந்திருந்தாள் மறுவிநாடி.
‘அம்மா’ என்ற நாமம் கேட்டதும்..தன்னிலை மறந்து மூர்க்க மிருகமாகவே மாறிப் போனான் அர்ஜூன்.
அவன் கத்திய கத்தலில்..ஒட்டு மொத்த மனையின் பணியாளர்களும்..அஞ்சி நடுங்கிய விழிகளுடன்..கைகளைப் பிசைந்தவாறே அவனது அறைக்கு வெளியே திரளலாயினர்.
அதில் சில பெண்களோ.. “ இந்தப் புது பொண்ணு எதுக்கு சாருக்கு பெட் காபி கொடுக்க போனா? மணியண்ணா தானே வழக்கமா போவாரு..இப்போ என்ன செய்யப் போறாரோ..” என்று தங்களுக்குள் கிசுகிசுத்துப் பதறித் தவிக்கலாயினர்.
அவனோ, கண்கள் சிவக்க கொடூரமாக மாறியவனாக, அந்தப் பணிப்பெண்ணை அடிக்க ஓங்கி கை தூக்கியிருந்தான்.
அப்பெண் விழிகள் மூடி , “சார்” என்று இறைஞ்சியது கண்டதும்..அப்படியே அந்தரத்தில் நின்ற கைகளை அழுத்தி மடக்கிக் கொண்டான்.
அவன் சுட்டுப் பொசுக்குவது போலப் பார்த்திருந்தான்.
“ப்போஓ.. இங்கேயிருந்து போஓஓ.. வெளியே போஓஓ..” என்று அங்கிருந்த டீப்போய்.. பொருட்கள் என்று எல்லாவற்றையும் தள்ளிவிட்டுக் கத்தலானான் அவன்.
கழுத்து நரம்புகள் புடைக்க..முகம் செஞ்சாந்து பூசியது போல சிவந்து..கைமுஷ்டி மடக்கி நிற்கும் அவன் தோரணை..அரக்கனை சம்ஹாரம் செய்திடும் அரனின் மறுமுகமோ??என்று நினைக்கவல்லதாக இருந்தது.
அப்பெண்ணோ.. ‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வெளியேறியும் அவன் ஆத்திரம் அடங்கியபாடில்லை.
இன்னும் கனவின் தாக்கம் போகவில்லை அவனுக்கு.
அன்றைய கையின் சூட்டின் எரிவு..இன்றும் புத்துயிர்ப்பாய் எரிவைத் தருவதை உணர்ந்தான் அவன்.
தாங்க முடியாமல்.. அவன்.. பற்களை நறுநறுவெனக் கடித்தபடி.. அறையில் இராட்சதனாக வலம் வந்தான்.
உண்மையில் ,ருத்ர தாண்டவம் ஆடும் சிவனை ஆசுவாசப்படுத்த.. அந்த சக்தி ஒருத்தியால் தான் முடியும்.
அது போலத் தான் அர்ஜூனையும்.
ஆயினும் ,தற்சமயம் அவன் சக்தி தேவி இல்லையே அவன் புறம்?
அச் சமயம் அவன் விழிகளும் ரௌத்திரத்துடன்..எதேர்ச்சையாகத் திரும்பியது சாளரம் தாண்டிய டெராசினை நோக்கி.
அங்கே ஒரு தள்ளி அமைக்கப்பட்டிருந்த.. மருத்துவர்களின் வளாகத்தின்.. மூன்றாவது அறை மொட்டை மாடியில்..நின்றிருந்த அவளும் விழிகளில் விழுந்தாள்.
“மீ..ரா!!”
அன்றலர்ந்த பூவாய்.. தன் முழங்கால் தாண்டி தொங்கிய கூந்தல்க் கற்றையை.. ஈரம் சொட்டச் சொட்ட துவாலை கொண்டு உலர்த்திய வண்ணம் நின்றிருந்தாள் அவள்.
மீரா இவனைப் பார்க்க வாய்ப்புக்கள் அரிதாகினும், இவன் பார்வை வட்டத்தில் முழு தரிசனம் தர ஏதுவான கோணத்தில் அவள்!!
இவனது கழுகு விழிகள் கண்டு கொண்டது அவளை. அவன் கண்டான் தன் சக்தியை.சிறுகச் சிறுக மீட்டான் ஒட்டுமொத்த சக்தியை.
அவளைக் கண்டதும்.. அவனது ஆர்ப்பரித்த இதயக் கடல் அமைதியானது; கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்கிய தோள்புஜங்கள் சமரசம் கொண்டது; விடைத்த மூக்குத்துவாரத்தின் வழி வெளிப்பட்ட மூச்சுக்காற்று சமாதானம் கண்டது.
ஆக , ‘கண்டேன் சீதையை’ என்பது போல அக்கணம்..அங்க அசைவுகள் அத்தனையும் நின்று போனது.
விழிகளில் என்றும் அழியாததாய் அவள் விம்பம் விழுந்தது.
அடுத்த கணம் அவன் மனம் கொண்ட ஆற்றாமை, வஞ்சினம், துயர், காயங்கள், வடுக்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாயமானதைப் போல உணர்ந்தான் அவன்.
அவளை தன்னருகே இருத்தி.. அள்ளி அணைக்க ஆசை பிறக்க.. அவளை நோக்கி நகரப் போனது பாதங்கள்.
உண்மை நிதர்சனம் தீச்சுட்டாற் போல அவனைச் சுட்டது.பாதங்களும் விலங்குப் போட்டாற் போன்று தடைப்பட்டது.
அவனுக்கும்,அவளுக்கும் இடையே பெரும் மனச்சுவர் விழுந்திருக்க.. எப்படி அவனால் அவள் பால் நகர முடியும் ?
மனச்சுவரைக் கட்டியவனே அவன் அல்லவா ? அதை மீளவும் உடைக்கத் தலைப்படும் நிலையில் இருப்பவனும் அவன் தான் அல்லவா ?.
அவளை அருகாமையில் பார்க்க பிரயாசையில் துடித்தது ஆண்மனம்.மூளையும் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவாறு எதையோ ஒன்றை உரைக்க..சுறுசுறுப்பு கண்டது ஒட்டுமொத்த தேகமும்.
மறுகணம்..அவனது வலிய கைகள் எதையோ ஒன்றை அடைய பரபரக்கலானது.
இதழ்களோ.. “பைனாக்குலர்ஸ் ..பைனாக்குலர்ஸ்”என்று ..முணுமுணுக்கலானது.
விறுவிறுவென்று ஓடிச்சென்றவன்.. பட்டென்று டிராயரினை இழுத்து திறந்து.. எடுத்தான் ஒரு தொலைக்காட்டியினை.
அதன் வழியாக.. தூரத் தெரிந்தவளை.. அருகிருந்து பார்ப்பது போல.. பார்க்க பேராவல்!!
அவளை கண் வழி கொண்டு..இதயத்தில் சிறைப்பிடித்து..மனதோடு புளகாங்கிதமடையவும் முற்பட்டான் அவன்.
இது எதையும் அறியாது.. கூந்தல் உலர்த்திக் கொண்டிருந்தாள் அந் நன்மாது.
இதோ அந்த தொலைக்காட்டியின் கண்ணாடி விம்பத்தில்..பெரிதாக அவள் உருவம்!!
தன்னைப் போல எழுந்த கைகள்..அவளது உருவத்தை..இங்கிருந்தே காற்றில் ஸ்பரிசித்துப் பார்க்கத் துவங்கியது.
நீளமான முடிக்கற்றைகள்.. மாலைச்சரம் போலத் தொங்க.. அதில் முத்து முத்தாய் நீர்த்திவலைகள் பால்கனியில் விழுந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தது.
அவளுடைய நீளக் கருங்கூந்தலில்.. தன் முகம் புதைத்து அதன் போதை வாசனை நுகர்ந்து பித்தங்கொள்ள ஆசை முகிழ்த்தது,அவனுக்கு.
அவளைக் கண்ணெல்லாம் நிரப்பிக் கொண்டிருந்தவனின் இதயத்துடிப்பின் வீதம் சன்னம் சன்னமாக சமரச நிலையை அடைந்து கொண்டிருந்தது.
அவளின் சூரியோதய தரிசனமே… அவனுள் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போதுமாகவிருந்தது.
தொலைக்காட்டி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தவனது பார்வை.. தற்சமயம்.. இளஞ்சிவப்பு நிறத்தில் சிவந்திருந்த அவள் முகத்தில் விழுந்தது.
அவள் வதனமும்.. அதன் மிருதுத் தன்மையையும்.. தன் கைகளால் தீண்டிப் பார்க்க ஆசை எழவே.. அவனது கண்களில் இதுகாறும் தகித்துக் கொண்டிருந்த தீக்கங்கும்.. தணிந்தது மெல்ல மெல்ல.
அவளைத் தொலைவிலிருந்து உற்றுப் பார்ப்பதே.. அவனது அடாவடித்தனமான நடவடிக்கையில் மாறுதல் கொண்டு வருமாயின்.. அவளின் அருகாமை?
அவனுக்குப் பீடித்திருக்கும் நோய்க்கு முற்றுமுழுதான மருந்து.. அவள்!! சிரஞ்சீவி மூலிகையும் அவள்!! அம் மருந்தை உட்கொள்ளும் நாளும் எந்நாளோ?
அவள் சிவந்த முகத்தில் தன் குறுகுறு மீசை அதரங்கள் குத்த.. முத்தாட ஆசை பிறந்தது அவனுக்கு!!
அவனுக்காக ,அவள் இதழ்களும் மலர்ந்து சிரிக்க வேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது,கூடவே.
அவளோ..கூந்தலை உலர்த்தி முடித்து.. அத்தனை கற்றைகளையும் ஒரு கையில் அள்ள முடியாமல் அள்ளி.. பின்னாடி போட.. அவள் புஷ்டியான விரல்கள்..தெரிந்தன.
வீணை மீட்டுவது போல அவள் விரல்களை மீட்டி.. மென்மையாகத் தடவிட.. இங்கே ஆணுள்ளம் மருகித் தவித்தது.
தன்னை ஓர் ஆடவன் உருகி மருகிப் பார்த்துக் கரைவது தெரியாமல்.. பட்டென்று.. பால்கனியில் நின்ற வண்ணமே குனிந்தாள் மீரா.
பால்கனிக் கைப்பிடி வரிசையின்.. கீழ்த்துண்டில்.. தன் செம்பருத்திப் போலச் சிவந்த பாதங்களில் ஒன்றைத் தூக்கி வைத்து.. தன் சேலையின் கரை.. கணுக்கால் வரை மெல்லத் தூக்கினாள் அவள்.
கணுக்கால் கூட கருப்பற்ற.. அவளது சிவந்த பாதங்கள்… இதுகாறுமிருந்த மனநிலையை மாற்றி.. புத்துணர்ச்சியைத் தரவல்லதாக அமைந்தது.
அவன் தனது முழு நாளையும் அப்படியே அவளது அழகிய பாதங்களைப் பார்த்த வண்ணமே கழித்திட அவா கொண்டான்.
அவன் உதட்டில் இருந்த இறுக்கம் தளர்ந்து சிறு புன்னகை தவழ்ந்தது. அவனைப் பிரிந்திருந்த இம்மூன்று வருடங்களில் அவள் மிகவும் அழகியாக.. அவனை மயக்கும் மோகனாங்கியாக மாறிவிட்டதாகத் தோன்றியது அவளுக்கு.
அவள் குனிந்து போது தெரிந்த பருவக் கோளங்களில்.. அவனுக்குக்
காட்டுத்தனமாக.. மூச்சுக்கும் தவிக்கும் நிலை.
அங்கே இடைவெளி கொடுக்காது.. முத்தமிட ஆசை பிறந்த கணம்.. தன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கினான் அவன்.
சட்டென உடல் முறுக்கேற.. தொலைக்காட்டியைக் கண்களிலும் நின்றும் நீக்கிக் கொண்டு நிமிர்ந்தான் அவன்.
‘அவன் உன் மனையாள்;இதயத்துக்கு உகந்தாள்; இல்லாள்.அவளைப் பார்ப்பதில் எதற்கு ஓரவஞ்சனை?ஏராளமாக தாராளம் காட்டு’என்று தாபத்துக்கு தூபம் போட்டது மையலுற்ற மனம்.
அலைபாயும் மனதை அடக்கிக் கொண்டான் அவன். இம்முறை.. அவன் மிக மிகப் பொறுமையாக.. சதுரங்கம் விளையாட எண்ணினான். இராணியை தன் வலையில் வீழ்த்த புத்திசாதுர்யமாக காய் நகர்த்தவும் எண்ணினான்.
காற்றில் தெரிந்த வரிவடிவத்தை மென்மையாக வருடிக் கொடுத்தவன்.. ஊனுருக.. உயிர் கரைய.. அவளோடு அளவளாவலானான்.
“உ.. உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கறேன் கண்ணம்மாஹ்.. இங்கே என் இதயத்துக்கு பக்கத்துல உன்னை இறுக்கி அணைச்சுக்கணும்னு தோணுது.. ஒரு முறை உன்னை தவறவிட்டுட்டேன்.. இனியும் மாட்டேன்..” என்றவன் பால்கனிக்கம்பித் திட்டினை.. உள்ளங்கையில் அழுத்திப் பிடித்தான்.
“உன்னை அருகில் வைச்சுக்கிட்டு.. தள்ளி நிற்கறது.. எவ்வளவு பெரிய சித்திரவதை தெரியுமா.. யூ ஆர் மைன்.. ஒன்லி மைன்!!”என்று அவன் ஆழமான குரலில் கிசுகிசுக்கலானான்.
பல கடல்கள் ஓடி.. திரவியம் தேடிப் போன கடல் கொள்ளையன்.. கண்டு கொண்ட அள்ள அள்ளத் தீராத பொக்கிஷம் அவள்!!
பாலைவன மணல்,மேடெல்லாம் அலைந்து திரிந்த பசியாளனின் கண்முன் தோன்றிய நீர்ச்சுனை அவள்!!
அவளை அள்ளிப் பருகிட.. . அவள் உதடுகளை வெறித்தனமாக முத்தமிட்டு முகிழ்த்திட ஆசை.
இவனது ஆசை அறியாத பெண்ணவள்.. கூந்தல் உலர்த்திய பூந்துவாலையை.. கொடியில் காயப்போட்டு விட்டு உள்ளே நகரலானாள்.
அவளைக் காண முடியாத ஏக்கத்துடன்.. அவன் மனமும் அவளோடு நகரலானது.
ஒரு நொடி கூட அவள் அருகில்.. நிஜமாகவே அவள் அருகில் இருந்திருந்தால்.. இவன் தாபப்புயல் கரையைக் கடந்திருக்கும்.
“தூரத்தில இருந்தும் மயக்கறடீ..” என்று ஹஸ்கி குரலில் கிசுகிசுத்தவன்..
ஆர்ப்பரிக்கும் மனதிற்கு இரும்புக் கடிவாளமிட்டவனாக.. கண் மூடிக் கொண்டான்.
அந்த கணம் கீழே தெருவிலிருந்து ஓர் ஆண்மகன்..தன்னவளை பெயர் சொல்லி உரக்க அழைக்கும் சப்தம் கேட்டது.
“மீராஆஆஆ!! மீராஆஆ!!”
தன்னவளை இன்னொரு ஆடவன் அழைப்பது கேட்டு அவன் செவிகளும் கூர்மையானது. தொலைக்காட்டியும் பட்டென்று சப்தம் வந்த திசை நோக்கி நகர்ந்தது.
அங்கே .. டீஷேர்ட் மற்றும் டெனிமில் நின்றிருந்தான் ஓர் ஆடவன்!!
இவளும் பால்கனியில் நின்றும் சிரித்த முகமாக எட்டிப் பார்த்து.. “ என்ன பாலாஆஆ??” என்று சற்றே கத்திக் கேட்டது ..ஆளரவமற்ற சாலையில் நாயகனுக்கும் கேட்டது.
நாயகனோ.. “பாலா” என்று புதியவன் பெயரை கடித்துத் துப்ப..நெஞ்சமெல்லாம் திகுதிகுவென எரிந்தது.அவனைக் கொன்று சிதையில் போடும் ஆர்வம் எழுந்தது.
கைமுஷ்டி மடக்கி..அடக்கிக் கொண்டான் தன்னில் திரளும் வஞ்சினத்தை.
கீழே நின்றிருந்த பாலா ஆகப்பட்டவனோ, கையிலிருந்த ஒரு பாக்ஸைக் காட்டி , “ கீழே வா..உனக்காக ஒரு ஐட்டம் கொண்டாந்திருக்கேன்” என்றான்.
“என்ன்னஅஅ?” மேலிருந்த வண்ணமே..தன் கூந்தலை காதுக்குப் பின் சொருகிய வண்ணம் கேட்டாள் அவள்.
“உனக்கு ரொம்ப பிடிச்ச காஜூகட்லி” என்று அவன் சொல்ல..இவளோ துள்ளிக்குதித்தாள் குழந்தை குமரியாக.
“ஹைய் காஜூ கத்லியா.. இரு வர்றேன் ”என்று மகிழ்ச்சியில் ஆரவாரித்தவளாக..கீழே படிகளை நோக்கி ஓடி இறங்கலானாள்.
இங்கே மீண்டும் வெடிக்கச் சித்தமானது எரிமலை!!
அவனது தொலைக்காட்டியின் திசையும்..மருத்துவர் விடுதிவளாகத்தின் நுழைவாயிலை நோக்கி நகர்ந்தது.
புள்ளிமானாக துள்ளிக் குதித்து இறங்கி வந்த அவளும்.. பாலாவும் சிரித்துப் பேசி ..அவளுக்கு அவன் காஜூகத்லி ஊட்டி விட்டு..அவளைத் தொட்டுத் தொட்டுப் பேசுவதைப் பார்த்தவனுக்கு,அது எதுவும் பிடிக்காமற் போனது.
அதைக் கண்டவனுக்கு.. தாயின் அன்பு பறிக்கப்பட்ட மழலையின் நெஞ்சம் போல மனமெல்லாம் பொறாமைத் தீ கிளர்ந்தது.
அவளை ஸ்பரிசிக்கும் ஓர் ஆணாகவும் அவன் தான் இருக்க வேண்டும் .அவளுக்கு அவன் மட்டுமே ஊட்ட வேண்டும் .அவளது ஒட்டுமொத்த அன்பும் ,பாசமும் ,கவனமும் அவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
மீண்டும் நீர்த்துப் போன கோபக்கங்கு கண்களில் பற்றியெரிய.. தன் செல்பேசியை எடுத்து வந்தவன் ..அவர்களை பார்வையால் எரித்த வண்ணம் அழைப்பெடுத்தான்,யாருக்கோ.
“ ஐ ஹேவ் அ வொர்க் டு டன்!” என்றவன் மறுமுனையில் என்ன சொன்னானோ??
அவனது அடாவடித்தனமான காதலின் ஆழம்…எந்த எல்லை வரைக்கும் செல்லும் என்பதை அவள் அறிந்தால்?
ஒரு காதல் தீவிரவாதியின் காதலை அவள் அறிந்தால்.. அதிர்வாளா? அஞ்சுவாளா? ஆர்ப்பரிப்பாளா? ஆரவாரிப்பாளா?
கடந்த காலத்தில் பல தவறுகள் செய்த கட்டிளங்காளையின் மெய்க்காதல் கட்டிப்போடுமா கன்னியை??
உரசி மலர்த்த வருவான்.
(மறுபடியும் ஒரு வருஷம் கழிச்சு நானே..அது நானே!!❤️❤️😘😘 உங்களையெல்லாம் இனிமையான எழுத்துக்களுடன்..இன்முகமாக சந்திக்க வந்துட்டேன்.💓💗💕
அது வந்து..ம்ம்..இப்ப நான் உங்க கிட்ட சொல்றது..?💓💋❤️💕ம்ம்.. கடந்த ஒரு வருடமாக தாய்மைப் பேறை அடைந்து.. மேட்டர்னிட்டி லீவு எடுத்துக்கிட்டதால் தான் இந்த லாங்க் லீவு மக்களே .😅😅☺️☺️❤️💕
எஸ் எஸ்..உங்க வீட்டுப்பிள்ளை விபிக்கு போனவருஷம் செப்டம்பர் மாதம் ஏக இறைவன் அருளால் அழகான பெண் குழந்தை பிறந்தூ..💋💋💓💓😘❤️💗
அதனால தான் இந்தப்பக்கமே வர முடியலை பட்டூஸ்..பட் இப்போ என் சுட்டிப்பாப்பா கொஞ்சம் பெரிய ஆளாயிருச்சு.அதனால வந்துட்டேன்.😍😍😘❤️💓
இனி தொடர்ந்து சந்திக்கலாம். நம்ம அர்ஜூன் மனோஹர்- மீரா கூட.ஓகே?💞❤️💕💗💋)
