ATM Tamil Romantic Novels

மோகவிழியால் எனை தைக்காதே

  1. மோகவிழியால் எனை தைக்காதே

 

கிருஷ்ணாவின் ஆலிங்கனத்தை தாங்கமுடியாதவள் என்னை விடுங்க கிருஷ்ணா.. என்று கத்தி விட.. தான் செய்து கொண்டிருக்கும் மடத்தனமாக காரியத்தை எண்ணி சுயம் வந்தவன்.. அவளை தன்னிடமிருந்து பிரித்து அவள் கன்னத்தை அழுத்தப்பற்றிஇனிமேலும் உன் மாமன கல்யாணம் பண்ணிப்பியாடிஎன்று அவனது காந்த விழிகளில் செம்மை படர அவள் இதழோரம் கசிந்த உதிரத்தை நாவால் துடைத்து கேட்க..

 

ஏன் நெட்டக்கொக்கு இப்படி என்ன சித்ரவதை பண்ணுற.. என் அம்மா வாழ்க்கையில இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க அவங்ககிட்ட போய் அருள் மாமாவ கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்ல முடியாதுடா.. அவர் மனச என்னால காயப்படுத்தவும் முடியாது.. இப்ப என்ன தொட்ட உன்னை விட்டு அருள் மாமாவையும் கல்யாணம் பண்ணமுடியாம பண்ணி என்னை உசிரோடு கொன்னு போட்டஎன்று அவனது மார்பில் அடிக்கத்துவங்கினாள்..

 

அப்பவும்.. கிருஷ்ணா, “உன் அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னா கல்யாணம் பண்ணிப்பியாடிஎன்று அவளை திருமணம் செய்வதிலேயே குறியாக பேச.

 

ச்சே நீயெல்லாம் ஒரு மனுசனா.. அருள் மாமாவ நான் விரும்பலதான்.. ஆனா அவர் மனசுல என்னை தான் நினைச்சுட்டிருக்காரு.. இப்ப போய் நான் அவருக்கிட்ட உங்கள கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னா அவர் மனசு எவ்ளோ வலிக்கும்னு உங்களுக்கு தெரியலையாஎன்று உதடு துடிக்க கிருஷ்ணாவின் சட்டை காலரை பிடித்துக்கேட்க.

 

அவனோ,அவள் முகத்தை ஏளனமாக பார்த்து அவள் கையை சட்டை காலரிலிருந்து எடுத்துவிட்டு..அப்போ நான் உன்னை லவ் பண்ணுறேனே.. உன் கண்ணுக்கு என்ன பாத்தா பாவமா தெரியலையாடிஎன அவள் கீழ் இதழை விரலால் வருடி கேட்க.

 

இது சரிபட்டுவராதுங்க.. நான்,உங்களை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்.. உங்க ஒருத்தர் சந்தோசத்துக்காக என் குடும்பத்து ஆளுங்களை நான் பலிகடா ஆக்க மாட்டேன்என்று கிருஷ்ணாவிடமிருந்து எழுந்து அவன் பக்கம் வைத்திருந்த ரிமோட்டால் கதவை திறந்து வெளியே சென்றாள்.

 

போடி போ.. நீயே என்கிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லுவஎன்று இதழ் வளைத்து நகைத்தான்.

 

அருள் அவனது டிராவல்ஸ் ஆபிஸில் டிரைவரிடம்..அண்ணா நம்ம டிராவல்ஸ்க்கு வண்டியோட்ட பெண் டிரைவர் வேணும்னு விளம்பரம் கொடுத்தோம்ல யாரும் இதுவரைக்கும் வரல.. உங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தாலும் சொல்லுங்கஎன்று பேசிக்கொண்டிருக்கையில் அப்போது அங்கே ஒரு பெண் வந்தாள்.. அவள் ஈஸ்வரி.. சுடிதாரில் தான் வந்திருந்தாள்.. மாநிறம் கலையான முகம்.. காதில் குட்டி சிமிக்கி வைத்த தோடு.. கழுத்தில் மெல்லிய செயின்.. கையில் கண்ணாடி வளையல் என்று அவளை பார்க்கும் போது நடுத்தரவர்க்கத்துப்பெண் என்று தெரிந்தது.

 

வணக்கம் சார்… பெண் டிரைவர் வேணும்னு விளம்பரம் பார்த்து வந்தேன்தயங்கி நின்றாள்

 

உட்காருங்கஎன்றதும்.. அவள் அமைதியாக உட்கார்ந்து தன் லைசன்ஸ் எடுத்து அருள் கையில் கொடுத்தாள்.

 

லைசன்ஸை பார்த்துவிட்டு அதில் அவள் பெயரை பார்க்க ஈஸ்வரி என்றிருக்க..ஈஸ்வரி உங்களுக்கு பகல்நேரம் மட்டும்தான் வண்டியோட்ட வேண்டியதிருக்கும்.. வாலண்டியரா யாராவது பெண் டிரைவர் வேணும்னு கேட்டாமட்டும் இரவு நேரத்துல ஓட்ட வேண்டியிருக்கும்.. இன்னிக்கே நாள் நல்லாயிருக்கு ஜாயின் பண்ணிடுங்கஎன்று கூறியவன் கார் சாவியை எடுத்து அவள் கையில் கொடுக்க.

 

சார் எங்க வீட்ல அம்மா மட்டும்தான் அவங்களுக்கு உடம்பு சரியில்லை.. அவங்களை பார்த்துக்க ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. நாளையிலிருந்து ஜாயின் பண்ணுறேன்என்றதும்..

 

ம்ம்ஓ.கே.. ஆனா இன்னிக்கு நாள் நல்லாயிருக்கு இந்த கார் சாவியை பிடிங்கஎன்றான் ..

 

அவள் வாங்கியதும்..வாங்கஎன்று கூட்டிச்சென்றவன் புது காரை அவளிடம் ஓட்டச்சொன்னான்.. டெஸ்ட் பார்த்திடலாம் என்று நினைத்தானோ என்னவோ.. அவள் ஓட்டிக்காட்ட..

 

நல்லாத்தான் ஓட்டுராங்கஎன்று பக்கத்திலிருந்த டிரைவரிடம் கூற..

 

ஆமா அருளண்ணா.. நல்ல எக்ஸ்பிரியன்ஸ் உள்ளவங்களாத்தான் தெரியுராங்கஎன்று டிரைவரும் கூற.

 

ஈஸ்வரி காரை வட்டமடித்து கொண்டு வந்து நிறுத்தி காரிலிருந்து இறங்கினாள்.

 

நான் கார் நல்லா ஓட்டுவேன் சார்.. எங்கப்பா சின்ன வயசுலிருந்து எனக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுத்திருக்காங்கஎன்று கண்கள் விரிய புன்னகையுடன் கூற.

 

உங்கப்பா இப்ப என்ன பண்றாருஎன்று அவள் குடும்பத்தைப்பற்றி தெரிந்து கொள்ள கேட்க..

 

அப்பா போன வருஷம் ஆக்சிடன்ல இறந்துட்டாருஎன்று சொல்லும் போது ஈஸ்வரியின் கண்கள் கலங்கியது..

 

ஓ சாரிமாஎன்று அவளிடமிருந்து கார் சாவியை வாங்கி விட்டுநாளைக்கு 9.00 மணிக்கு வந்திடுங்க

 

சரிங்க சார்என்று தலையசைத்து சென்றாள். ஈஸ்வரியின் தந்தை குமார் ஆசிரியர்.. நல்ல ஓரளவு வசதியான குடும்பம் தான்.. கார் கூட வைத்திருந்தனர்.. ஒரு விபத்தில் கோமாவுக்கு சென்று விட ஈஸ்வரியின் அம்மா பரிமளா அவரை பிழைக்க வைக்க தன்னிடமிருந்த பணமெல்லாம் வைத்து செலவு செய்தார்.. கடைசியில் சிகிச்சை பலனிக்காமல் அவரது இதயம் நின்று விட்டது.. கடன்காரர்கள் அவர்கள் இருந்த வீட்டையும் ஏலத்தில் எடுத்துக்கொண்டனர்..

 

ஈஸ்வரிக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை.. ஒரு டிகிரி வாங்கவே அவளுக்கு நாக்கு தள்ளியது..

 

கம்பெனியில் போய் வேலை செய்யணும் என்றால் ஒரளவு இங்கிலிஷ் தெரிந்திருக்கணும்.. கம்ப்யூட்டர் நாலேஜ் இருக்கணும்.. இது இரண்டும் ஈஸ்வரிக்கு இல்லை.. அவள் தந்தை கார் ஓட்ட சொல்லிக்கொடுக்க அதை அவள் ஆர்வமாக கற்றுக்கொண்டாள்.. பைக் ரேஸ் செல்லும் அளவிற்கு பைக் ஓட்டுவாள்..

 

அவளது அம்மாவிற்கு கணவன் குமார் இறந்ததில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போக.. அவரை விட்டு எங்கேயும் போகமுடியவில்லை அவளால்.. பேப்பரில் கார் ஓட்ட பெண் டிரைவர் தேவை என்பதை பார்த்துதான் அருளின் டிராவல்ஸ்க்கு வந்து சேர்ந்தாள்.. வீட்டுக்கு சென்ற ஈஸ்வரி.. அறையில் இரும்பிக்கொண்டிருந்த பரிமளாவிடம், “அம்மா எனக்கு ஒரு டிராவல்ஸ்ல வேலை கிடைச்சிருச்சுஎன்றதும்..

 

ஈஸ்வரி.. டிரைவர் வேலையெல்லாம் வேண்டாம்டி.. அது ரொம்ப ஆபத்தானது.. ஏதாவது கடை கண்ணிக்கு போஎன்று நெஞ்சை பிடித்து உட்கார.

 

அம்மா எந்த வேலையிலதான் ஆபத்து இருக்காதுஎன்று அவரை சமாதானப்படுத்தி இருமல் மருந்தை எடுத்துக்கொடுத்தாள்.. அவருக்கு டிபி இருந்தது.. அவருக்கு மருத்துவம் பார்க்க காசு வேண்டுமே.. அதற்குதான் இப்போது வேலைக்குச் செல்ல முடிவெடுத்தாள் ஈஸ்வரி.

 

குருமூர்த்தியை தனி வார்டுக்கு மாற்றியிருந்தான் கிருஷ்ணா..

 

குருமூர்த்தி இருந்த அறைக்கதவை தங்கமீனா திறந்து உள்ளே செல்ல சாம்ராட் அவரை பரிசோதித்துக்கொண்டிருந்தார்..குட்மார்னிங் சார்என்று சொல்லி அவர் பக்கம் போய் நிற்க..

வாமா மருமகளே.. உன்னைப் பார்க்கத்தான் காத்திருக்கேன்.. நாளை மறுநாள் நான் ஊருக்கு கிளம்பிடுவேன்.. நீயும் என்கூட வீட்டுக்கு வாயேன்.. எங்க ஊர சுத்தி பார்த்தமாறியிருக்கும்.. அப்படியே நீ வாழ போற வீட்டையும் பார்த்தது போல இருக்கும்என்று குருமூர்த்தியாக சந்தோசத்துடன் கூற.

 

சார்.. நான் உங்க பையனை விருஎன்று அவள் பேச வாயெடுக்க.. சட்டென்று கதவு திறந்து உள்ளே வந்தான் கிருஷ்ணா.. அவன் வருவதற்குள் குருமூர்த்தியிடம் தன் குடும்பத்தைப் பற்றி சொல்லிவிடலாம்.. என்று நினைத்து வந்தவளை தடுத்து நிறுத்தி விட்டான்..

 

என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லத்தான் வந்தா ஐய்யாஎன்று அவளை தோளோடு அணைத்து நின்றான்.

 

 

பெரியவர் முன்னே தன்னை அணைத்தது பிடிக்காமல் மெல்ல அவன் கையை எடுத்துவிட.. அவனது அணைப்பை இன்னும் இறுக்கினான்.. அவனாக,அவளை விட்டால் தான் உண்டு.. சில நொடிகளில் அவளை விட்டு கையை எடுத்தான்.. அப்பாடா என்று மூச்சு விட்டுக்கொண்டாள் பெண்ணவள்.. அன்றைய தினம் ஒரு வழியாக கழிய.. அடுத்த நாள் காலை யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ.. என்று விடியற்பொழுது நன்றாக விடிந்தது..

 

பக்கத்து வீட்டு பாட்டியிடம் பரிமளாவை பார்த்துக்க சொல்லிவிட்டு சாப்பாடு எல்லாம் அவர் பக்கம் எடுத்து வைத்துவிட்டுஅம்மா.. நான் வேலைக்கு போய்ட்டு வரேன்.. பார்த்து இருங்கம்மா எதுனா போன் பண்ணுங்கஎன்று வேலைக்கு கிளம்ப..

 

பார்த்து வண்டியோட்டு.. உன் அப்பா இருந்தா நமக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. என்று அவள் தலையை நீவிக்கொடுக்க..

 

அப்பா என்கூடவே எனக்கு எப்பவும் துணையாயிருப்பாரும்மாஎன்று தந்தையின் படத்திற்கு முன் நின்று அவரை கும்பிட்டு வெளியே செல்ல..

 

பக்கத்துவீட்டு பாட்டி எதிரே வர..பாட்டி அம்மாவ கொஞ்சம் பார்த்துக்குங்க..

 

சரி கண்ணு நீ பத்திரமா போய்ட்டு வாஎன்று அவளை அனுப்பி வைக்க.. தனது பழைய ஸ்கூட்டியில் அருள் டிராவல்ஸ்கு சென்றாள்.

 

அவளின் வரவிற்காக காத்திருந்தான்.. இன்று பிரபுவின் பேங்க் வேலைக்கு பணம் கட்ட வேண்டிய கடைசி நாள்.. அங்கே வேறு போக வேண்டும்.. இந்தப் பொண்ணு வரன்னு சொல்லுச்சு இன்னும் காணோம்.. என்று ஈஸ்வரியை எதிர்பார்த்து தடம் பார்த்திருந்தான்.. அவள் வேகமாக வந்து ஸ்கூட்டியை ஆபிஸ் முன்னே நிறுத்த.

 

எதுக்கு வண்டில இவ்ளோ வேகமா வரீங்க பொறுமையா வாங்க..  என்ன அவசரம்.. உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணுறேன்.. என்று அவளிடம் சாவியை கொடுத்து.. கம்பெனி சார்பாக அவளுக்கு ஒரு மொபைல் போனையும் அவள் கையில் கொடுத்து.. அவன்இதில் என் நெம்பர் இருக்கு ஏதாவது தேவைன்னா கால் பண்ணுங்க..ஆல் தி பெஸ்ட்என்று அவன் கை கொடுக்க.. அவள்தேங்க்ஸ்என்று கைகூப்பினாள்..

 

அதற்குள் ஒரு சவாரி வர.. அவர்களிடம்எங்கே போகணும் சார்என்று கேட்டு காரில் ஏறினாள்.

 

நல்ல பொண்ண இருக்க என்று தோளை குலுக்கி கொண்டவன்  பிரபுவை பார்க்கச் சென்றான்.

 

அருள்,பிரபுவை கூட்டிச்செல்ல வீட்டுக்கு வர.. கலைவாணி பூஜையறையிலிருந்து பணத்தை எடுத்து அருளின் கையில் கொடுத்தாள்.. அருள் பணத்தை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான்..

 

தங்கமீனா கோவிலுக்கு போய் பிரபுவின் பேரில் அர்ச்சனை செய்து வந்தவள் பிரபுவிற்கு திருநீறு இட்டுவிடஎனக்கும்என்று நெற்றியை காண்பித்தான் அருள்.

 

அருளுக்கும் திருநீறு வைத்து விட்டாள்.. அதிலே அருளுக்கு சந்தோசம்.. பிரபு,கலைவாணியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்பினான்.. தங்கமீனாவும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்ப..இன்று அருள் காரில் வந்திருந்தான்.. பணம் பைக்கில் கொண்டு செல்வது ஆபத்து என்று தெரிந்தவன் கார் எடுத்து வந்திருந்தான்.. அருள் காரில் ஏற.. பிரபு முன் சீட்டில் உட்கார்ந்து கொள்ள.. தங்கமீனா பின்னாடி உட்கார்ந்தாள்.. போகும் வழியில் பிரபு..அக்கா அடுத்த வாரம் மாமாவுக்கு,உனக்கும் கல்யாணம் முடிந்திருக்கும்என்று சிரிக்க..

 

அருள்.. தங்கமீனாவின் முகத்ததை பார்க்க அவளோ முகத்தில் எந்த ஒரு சந்தோசமும் இல்லாமல் இருக்க.. முதன் முறையாக அருளின் மனம் தவித்துப்போனது.. இத்தனை நாள் கல்யாண விசயம் பேசும் போதெல்லாம் தலை குனிந்து கொள்வாள்.. அதை வெட்கமென்று நினைத்துவிட்டான் அருள். கல்யாணம் என்று பேசும்போது இன்று தான் அவள் முகத்தை அருள் நன்றாக பார்த்தான்.. அவளும்,அருளை பார்க்க.. கட்டாய புன்னகை பூத்தாள் அருளை பார்த்து..

 

என்ன ரெண்டும் பேரும் ரொமான்ஸ் பண்றதுக்கு நான் தடையா இருக்கனாஎன்று பிரபு நேரம் காலம் தெரியாமல் கிண்டல் செய்து சிரித்தான். இன்னும் சிறிது நேரத்தில் நடக்க போகும் விபரீதம் தெரியாமல்.

 

கிருஷ்ணாவின் ஹாஸ்பிட்டல் வந்து விட..ஆல் தி பெஸ்ட்என்று பிரபுவுக்கு கைக்கொடுத்து தங்கமீனா காரிலிருந்து இறங்கி நடக்க.. அவளை பார்த்துக்கொண்டே சென்ற அருள்.. எதிரே லாரி வந்ததை கவனிக்காமல் சட்டென்று திரும்ப கார் கரண்ட் கம்பத்தில் மோதியது.. டிரைவர் சீட் பக்கம் என்பதால் அருளிற்கு அடி கொஞ்சம் ஏற்பட்டு விட அப்படியே ஸ்டேரிங்கில் மயங்கினான்.. பிரபுவுக்கு லேசாக அடி மட்டும் பட்டது.. 

 

வண்டி சத்தம் கேட்டு திரும்பியவள் அருள் கார் கரண்ட் கம்பத்தில் மோத மாமாஆஆ.. பிரபுஊஊ.. என்று கத்திக்கொண்டு கார் அருகே ஓடினாள்.

 

அதற்குள் கூட்டம் கூடிவிட பிரபு மெல்ல காரிலிருந்து இறங்கினான்.. பிரபுக்கு ஏதுவும் ஆகவில்லை.. என்று அவனை பார்த்து நிம்மதியடைந்தாலும்.. தங்கள் குடும்பத்துக்காக அருள் அடிப்பட்டதை எண்ணி வேதனைகொண்டு அருளை,பிரபுவின் உதவியுடன் ஹாஸ்பிட்டலுக்குள் தூக்கிச் சென்றாள் தங்கமீனா.

 

அருளின் தலையிலிருந்து இரத்தம் வடிவதைப் பார்த்த தங்கமீனாவின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது.. என்னை மன்னிச்சுரு மாமா என்னாலதான் உனக்கு இப்படி அடிப்பட்டிருக்கு.. எனக்கு நல்லாத்தெரியும் எல்லாம் இந்த நெட்டக்கொக்கு வேலையாத்தான் இருக்கும்.. இன்னிக்கு அவருக்கு இருக்கு என்கிட்ட கச்சேரியிருக்கு.. என்று தப்புக்கணக்கு போட்டாள் தங்கமீனா.

 

அருளை எமர்சன்ஸி வார்ட்டில் வைத்துப் பார்க்க.. அவரை பரிசோதித்த டியூட்டி டாக்டர்..இதுக்கு கிருஷ்ணா டாக்டர் தான் வரணும்என்று சொல்லிவிட்டு அருளிற்கு பர்ஸ்ட்டெய்டு மட்டும் செய்துவிட்டு சென்றார்.

 

ச்சே நம்மனாளத்தான் மாமாவுக்கு இப்படி ஆக்சிடன்ட் ஆகிடுச்சு என்று கவலைப்பட்டு அருளின் பக்கம் நின்றிருந்தான் பிரபு.

 

பிரபு நான் போய் கிருஷ்ணா டாக்டர கூட்டிட்டு வரேன்.. என்று வெளியே வர.. அதற்குள் கேஷ் செக்சனிலிருந்து ஒரு பெண் அருளிருக்கும் இருக்கும் அறைக்கு வந்துமேடம் அட்வான்ஸ் பே பண்ணுங்கஎன்றதும்..

 

நான் இங்க தான வொர்க் பண்ணுறேன் பணம் கட்டுறேன்என்று தங்கமீனா அந்தப் பெண்ணிடம் கூற..

 

மேடம் ஹாஸ்பிட்டல் ரூர்ஸ்ல பேசன்ட் அட்மிட் ஆனவுடன் யாராயிருந்தாலும் அட்வான்ஸ் கட்டணம்என்று கறாராக கூற..

 

ஒரு மணி நேரம் டைம் கொடுங்கஎன்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு,பிரபுவிடம் திரும்பி தம்பி..நான் கிருஷ்ணா சார பார்த்துட்டு வரேன்என்று கிருஷ்ணாவை பார்க்கச் சென்றாள்.

 

அட்வான்ஸ் பணம் வாங்கச்சொன்னதே கிருஷ்ணாதான்.. என்று அறியாமல் அவனை பார்க்கச்சென்றாள் தங்கமீனா. 

6 thoughts on “மோகவிழியால் எனை தைக்காதே”

  1. ทดลองเล่นสล็อต pg
    สล็อตออนไลน์ เกมยอดฮิต ในยุคปัจจุบัน.
    ทุกวันนี้ สล็อต บนอินเทอร์เน็ต จัดเป็น หนึ่งในเกมที่ได้รับความนิยมสูงสุด ในวงการคาสิโนออนไลน์ ด้วย รูปแบบการเล่นที่เข้าใจง่าย ไม่ซับซ้อน และ ให้ความสนุกทันที ไม่ว่าผู้เล่นจะเป็นมือใหม่หรือมีประสบการณ์ เกมสล็อต ก็ยังตอบโจทย์ สำหรับการเล่นในระยะยาว.

    เหตุผลที่ผู้เล่นเลือกเล่น สล็อต .
    สล็อต มีข้อดีหลายประการ เช่น เข้าใจง่าย ไม่ต้องใช้ทักษะซับซ้อน, มีธีมหลากหลาย และกราฟิกสวยงาม, ใช้เงินลงทุนต่ำ และ มีฟีเจอร์โบนัส รวมถึงฟรีสปิน. ด้วยเหตุนี้ สล็อต จึงถือเป็น เกมยอดนิยม ในหมู่นักเล่น.

    ความหมายของ สล็อตเว็บตรง .
    สล็อตเว็บตรง หมายถึง การเล่นสล็อตผ่านเว็บผู้ให้บริการโดยตรง ไม่มีตัวกลาง ทำให้เกมทำงานได้อย่างราบรื่น. ข้อดีของสล็อตเว็บตรง ประกอบด้วย เข้าเกมได้ไว, ความปลอดภัยสูง, ผลลัพธ์โปร่งใส และ มักมีโปรโมชั่นมากกว่า. ผู้เล่นจำนวนมาก นิยมเลือก เว็บตรง เพื่อความมั่นใจ.

    ทดลองเล่นสล็อต pg แบบไม่ใช้เงินจริง .
    สำหรับผู้เล่นที่ต้องการทดลอง สามารถเลือก ทดลองเล่นสล็อต pg ได้ทันที ซึ่งเป็นระบบทดลอง สามารถเล่นฟรี. การทดลองเล่น ทำให้ผู้เล่น เข้าใจรูปแบบเกม, เข้าใจระบบโบนัส และ เลือกเกมที่เหมาะสมได้ เหมาะกับผู้เล่นใหม่ และผู้ที่ต้องการเลือกเกม.

    pg slot คืออะไร .
    pg slot คือเกมสล็อต จากผู้พัฒนา PG ที่ได้รับการยอมรับ ในตลาดสล็อต. จุดเด่นของ pg slot คือ กราฟิกทันสมัย, รองรับการเล่นบนมือถือ 100%, ระบบลื่นไหล และ ฟีเจอร์โบนัสหลากหลาย. ด้วยเหตุนี้ PG Slot จึงได้รับความนิยมอย่างต่อเนื่อง ในหลายประเทศ.

    บทสรุปโดยรวม .
    การเล่นสล็อต สล็อต ผ่าน สล็อตเว็บตรง พร้อมกับ ทดลองเล่นสล็อต pg และ รวมถึงเกมของ pg slot ช่วยให้ผู้เล่นได้รับประสบการณ์ที่ปลอดภัย สนุก และมีคุณภาพ เหมาะสำหรับการเล่นระยะยาว.

  2. В случае планирования поездку на Тенерифе, определённо стоит посетить Monkey Park Tenerife и бассейны Martianez, а также не обойдите стороной знаменитое Драконово дерево и пляж Тереситас — замечательные места для расслабления и фото. Для движения по острову оптимально использовать bus Tenerife, а время отправления и маршруты, включая ligne de bus Tenerife sud, можно обнаружить здесь [url=https://ispaniagid4.ru]ла пальма[/url] .

    Помимо Тенерифе, заслуживают внимания и другие канарские острова, скажем, Ла Пальма или Иерро, а также следует изучить карту Канарских островов, чтобы спланировать свой маршрут. Если цените Испанию, советую вам также уделить внимание на города у моря, в частности Малага, Гранада и Барселона с её пляжами и парком Цитадель. Погодные условия на Тенерифе в ноябре и марте преимущественно приятная, так что поездка будет спокойной.

  3. [url=https://1xbet-mirror.site/]1xbet[/url] 1xbet login, 1xbet official site, 1xbet website, 1xbet site login, 1xbet access, 1xbet online, 1xbet login today, 1xbet working site, 1xbet mirror, 1xbet working mirror, 1xbet new mirror, 1xbet mirror today, 1xbet no block, 1xbet mobile, 1xbet mobile version, 1xbet app, 1xbet account, 1xbet online betting

  4. у меня 203 1к8 получался вообще жестокии делал на растворителе для снятие лака с ногтей (без ацетона) https://cs-fantom.ru Забирал 6 заказов, ни единого косяка… заказы и на мизерные и на большие суммы. Давали 1 раз даже пробник по моей просьбе бесплатно.Качество тоже супер.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top