காலை 6:00 மணி அளவில் பேருந்தில் இருந்து இறங்கிய நருவி தன்னுடைய உடைமையான ஒரு பெரிய ட்ராலி லேப்டாப் பேக் மற்றும் அவளின் கைப்பையை தோளில் போட்டபடி பெட்டியை உருட்டியபடி தன் வீட்டை நோக்கி நடந்தால் அந்த காலை வேளையில் குளிர் காற்றை ரசித்தபடி தன் தாயையும் தந்தையையும் பார்க்கும் ஆர்வத்தில் வேகமாக எட்டி நடையை போட்டவள் எண்ணி 15 நிமிடங்களில் தன் வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை அழுத்தினால்…. மூன்றாவது முறையாக அழுத்த கையை எடுத்தவள் பக்கத்து வீட்டின் காயத்ரி குரலில் திரும்பினாள்.
“ ஏய்!…. நருவி…. நீ எப்ப வந்த?.. நீ இன்னைக்கு வருவதாக யாரும் சொல்லலையே? என்று கேட்டால்…..
“ நான் தான் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லாம வந்தேன்… எங்க பெண்ணை பார்க்கும் ஆர்வம் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இல்லையே இன்னும் கதவை கூட திறக்காமல் இருக்காங்க காயத்ரி” என பதிலளித்தாள்.
“ஏய் லூசு!…. அவங்க வீட்ல இருந்தா தானே திறப்பாங்க உங்க வீட்ல தான் நேத்தே கன்னியாகுமரி போய்ட்டாங்களே என்று நருவிற்கே……சர்ப்ரைஸ் கொடுத்தால் காயத்ரி
