அத்தியாயம் – 4
அங்கு இருந்து ஓடி வந்த இதழுக்கு என்ன செய்வதென்றே தெரியா நிலை அவனிடம் இருந்து இப்படி ஒரு செயலை அவள் எதிர் பார்க்க வில்லை அல்லவா ?
அங்கிருந்த ஓய்வு அறைக்குள் நுழைந்தவளோ தன் முகத்தை தண்ணீர் கொண்டு அடித்து கழுவிக் கொண்டே அங்கிருந்து வெளியே வந்தால் .
அதன் பின் இனிமேல் இங்கிருந்தால் இது சரி வராது என்று அங்கிருந்த வேறு ஒரு நபரிடம் சொல்லிவிட்டு அவள் சென்றுவிட.
அங்கு செழியனுக்கு தாங்கெனா கோபம் மட்டுமே அவனிடம் மிஞ்சி இருந்தது . அதன் காரணமாக அங்கிருந்த அழகுக்காக வைத்திருக்கும் பூ ஜாடிகளை தூக்கி போட்டு உடைத்தான் . உள்ளே வந்த கதிரோ சார் நீங்க ஓகே தான என்று கேள்வி எழுப்ப .
செழியனோ நான் ஓகே என்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவனது இதழ்களில் ஒரு புன்னகை அந்த புன்னகை பின் இருக்கும் அர்த்தம் என்னவென்று அவன் மட்டுமே அறிவான் .
இதழோ அங்கிருந்த கிளம்பி நேராக வந்தது என்னவோ நந்தன் ஹோட்டலுக்கு தான் அங்கிருந்த தனது ஓனரிடம் சார் இனிமே நான் அங்க போகல என்று கெஞ்சிக் கொண்டிருக்க அவரோ என்னமா இதழு ஆச்சு எதாவது பிரச்சனையா என்று அவர் பரிதவிப்பாக கேட்க .
அவளோ அப்படிலாம் இல்ல சார் எனக்கு அது கொஞ்சம் அலைச்சலா இருக்கு அதான் நான் போகல என்று சமாளிக்க முயல
அவரோ சரிமா உனக்கு சிரமமா இருந்த வேண்டாம் என்று அவர் கூறிவிட
அதன் பின்னே இதழுக்கு மனதில் நிம்மதி பரவியது . அவளிடம் யார் சொல்வது அவளை இனி எங்கு சென்றாலும் அவன் விடப் போவதில்லை என்று .
அன்று தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்க .
அதே சமயம் அவள் அருகில் ஒரு கார் வந்து உரசும் படி நிற்க இதழோ சற்று நேரத்தில் பயந்து தான் போனால் . அவள் என்ன என்று உணரும் முன்னரே அவளை ஒரு கரம் இழுத்து காருக்குள் தள்ளி காரை எடுத்து விட
இதழுக்கோ என்ன நடந்து என்பது உணரும் முன்பு அனைத்தும் முடிந்துவிட்டது .
இதழோ இப்ப எதுக்கு இப்படி பண்றீங்க என்ன முதல்ல இறக்கி விடுங்க என்று அவள் கத்த
செழியனோ அவளை திரும்பி அழுத்தமாக பார்க்க அந்த பார்வையே அவளுக்கு பயத்தை கொடுக்க அதன் பின் அவள் எங்கு பேசினால் , அப்படியே காரின் சீட்டோடு ஒட்டிக் கொண்டால் . கார் சிறிது தூரம் சென்று ஒரு ஆள் அரவம் இல்லாத இடத்தில் நின்றது .
இதழோ இங்க எதுக்கு நிறுத்திறீங்க என்ன கொண்டு போய் வீட்டுல விட்ருங்க என்று பயத்துடன் கூற
அவனோ அதை எல்லாம் எங்கு காதில் கேட்டான் இப்போதைக்கு நான் உன்னை வதைப்பதே குறிக்கோள் என்பது போல் அவளை முழுங்குவது போல் பார்த்து வைக்க , அவளோ அவனை எங்கு பார்த்தால் அவளது பார்வை அனைத்தும் அந்த இடத்தில் இருந்து எப்படி செல்வது என்பதிலே குறியாக இருக்க .
அதன் பின் தான் அவளுக்கு ஒன்று புரிந்தது தான் தான் பேசிக் கொண்டு இருக்கிறோம் அவன் பேச்சையே காணும் என்று அவனை திரும்பி பார்க்க
இது தான் சமயம் என்று அவளை சீட்டில் இருந்து தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டவனோ அவள் என்ன என உணரும் முன்னமே அங்கு இதழும் இதழும் மோதிக் கொண்டது .
அதன் பின் சிறிது நேரம் கழித்தே அவள் மூச்சிற்கு ஏங்க அதன் பின்பே அவளை விட்டான் . அவளோ மூச்சு வாங்க அவன் மார்பிலேயே துவண்டு விழ .
அவளை அப்படியே அனைத்து பிடித்து இருந்தவனோ அவள் காதோரம் குனிந்து இந்த நைட்டுக்கு எவ்வளோ பணம் என்று கேட்க
இதழுக்கோ தூக்கி வாரிப்போட்டது என்ன பேசுகிறான் இவன் , என்னை என்ன சொல்கிறான், விலை மாதுவும் நானும் ஒன்றா ? .
அவளுக்கோ பேச்சே வரவில்லை கண்களில் நீர் வழிந்த வண்ணம் இருக்க அவனை உதறித் தள்ளியவளோ அந்த காரை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கினால் .
செழியனோ காரை ஓட்டியவாரே அவள் பின்னே வர
செழியனோ என்ன மேடம் இங்கிருந்து அப்படியே நடந்து வராதா உத்தேசமா என்று அவளை கேட்க
அவளோ பதில் பேசினால் இல்லை , அவள் பாட்டிற்கு தன் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே நடக்க
செழியனோ சரிதான் போடி என்றுவிட்டு காரை அங்கிருந்து எடுத்து சென்றுவிட
அதன் பின் இதழோ கதறி அழுதவாறு அந்த ரோட்டிலேயே அப்படியே அமர்ந்து விட .
சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவள் . தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்க நிமிர்ந்து பார்க்க அங்கு இருந்த இருவர் அவளையே பார்த்துக் கொண்டே அவளை நோக்கி நடக்க .
அவளோ அதன் பின்பு தான் அவள் இருக்கும் இடம் புரிந்து அங்கிருந்து எழுந்து வேகமாக நடக்க தொடங்க.
அவ்விருவரோ அவளையே பின் தொடர , இதழுக்கோ அடுத்து என்ன செய்வது என்று புரியா நிலை மூச்சு வாங்க அங்கிருந்த ஒரு இடத்தில் மறைவாக அமர்ந்து கொள்ள .
வந்த இருவரோ அவளை தேடியவாரு மற்றொரு பக்கம் சென்று விட இதழுக்கு அப்பொழுதுதான் மூச்சே வந்தது .
அப்படியே அவள் தலைகுனிந்தவாறு அமர்ந்து இருக்க தன் முன் ஒரு காலடி சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தவள் முன் அவன்.
அவளோ அழுகையுடன் எழுந்து அவனை இறுக அணைத்துக் கொண்டால். வலி கொடுக்கும் அவனிடமே அவள் மனம் ஆறுதல் தேடி செல்கிறது அல்லவா . இந்த மனம் ஒரு விந்தையான ஒன்றல்லவா .
வலியும் அவனே அதற்கு மருந்தும் அவனே
அதன் பின் என்ன நினைத்தாலோ அவனை விலகி விட்டு அங்கிருந்து நடக்க தொடங்க
செழியனோ அவளை திரும்பி பார்த்துவிட்டு அவளை அப்படியே தன் தோள் மேல் தூக்கி சென்று காரில் போட்டு காரை எடுத்தான் . அவளோ அவனிடம் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டவில்லை . அப்படியே அமைதியாகி விட .
அதன் பின் அவள் வீட்டின் முன் காரை நிறுத்தியவனோ அவளை திரும்பி பார்க்க அவளோ அப்படியே தூங்கி சன்னலோடு சாய்ந்திருக்க , அவள் முகம் மறைத்த முடியை தன் கைகொண்டு விலக்கியவன் , அவள் பூ முகம் கண்டான் , மாசு மறுவற்ற குழந்தை முகம் , தூங்கும் போது ஒருவரின் உண்மை முகம் தெரியும் என்பார்களே அது இதுதானோ ?
ஆனால் அவளா அப்படி செய்தது என்று நினைக்க நினைக்க அவனுக்கு அவளின் மேல் இருக்கும் காதல் மறைந்து கோபம் தானே வந்து விடுகிறது.
ஆம் காதலிக்கிறான் தான் ஆனால் காதல் வரவில்லையே அவள் மேல் இருக்கும் கோபம் தானே முதலில் முந்தி கொண்டு வந்து நிற்கிறது .
அவன் அவ்வாறு எண்ணிக் கொண்டிருக்க அவனது எண்ணத்தின் நாயகியோ மெல்ல கண் திறந்தால் .
கண் திறந்தவள் தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர்ந்து திடுக்கிட்டு விழிக்க , அதன் பின்பே தன் அருகில் இருக்கும் செழியனை திரும்பி பார்க்க அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருக்க
இதழோ பதட்டத்துடன் காரில் இருந்து இறங்கி செல்ல தயாராக அவளின் கைப்பிடித்து தன்னை பார்க்க செய்தவனோ நாளைக்கு வேலைக்கு வரனும் , அப்படி வரல என்ன நடக்கும் அப்படின்னு உனக்கே தெரியும் என்றுவிட்டு அங்கிருந்து அகன்றான் .
அதன் பின் வீட்டிற்கு வந்த இதழுக்கோ அவளின் சித்தி வள்ளியின் அர்ச்சனை தொடங்கியது .
அன்றைய பணிகள் அனைத்தும் முடித்து அவள் குளிக்க செல்வதற்கு அந்த வீட்டின் பின் பக்கம் செல்ல , அப்போது யாரோ தன்னையே பார்ப்பது போல் இருக்க அங்கு நின்று இருந்தான் அவளின் சித்தியின் தம்பி சிவா ,
அவனோ இதழையே மேல் இருந்து கீழாக பார்க்க , அவளுக்கோ அவனின் பார்வையில் உடல் கூசிப்போனது .
அவளோ வீட்டின் உள்ளே செல்ல தயாராக சட்டென அவள் கைப்பிடித்தவனோ அவளிடம் ஏதோ கேட்க வர அதற்குள் அங்கு கேட்ட தன் அக்காவின் குரலில் அவளை விட்டு அங்கிருந்து அகன்றான் அவன்.
இதழுக்கோ தன்னை நினைத்து வேதனையே மிஞ்சியது . அழுகையுடன் தன் அறைக்குள் சென்றவளோ அங்கிருந்த படுக்கையில் விழுந்தவளின் நினைவுகள் அவனை சந்தித்த நாட்களுக்கு சென்றது .
அதே போல் அங்கு வீட்டிற்கு வந்த செழியனை வரவேற்ற அவனது நண்பன் கதிரோ செழியா நாளைக்கு ரகு இலண்டன் ல இருந்து வரான்டா என்று அவன் கூறிக் கொண்டிருக்க . இவர்களது மற்றொரு நண்பனே ரகு .
செழியனோ அதை எதையும் காதில் வாங்காமல் அங்கிருந்த தனது அறைக்கு சென்றவன் நினைவுகள் அனைத்தும் அவளை சந்தித்த நாட்களுக்கு சென்றது .
தொடரும் …
