1.
ஊரையே காக்கும் அந்த எல்லை சாமி கோவிலில் பொது மக்கள் அனைவரும் திரண்டு இருக்க அவர்கள் மத்தியில் வைத்து
“உன் கழுத்துல நான் கட்டுறது தாலி கையிறு இல்லடி சுருக்கு கயிறு என்னை பொறுத்தவரை இது கல்யாணம் இல்லை உனக்கு நீயே வச்சிகிட்ட கருமாதி சை…!!” என கோவத்தில் கைகள் நடுங்க கொற்றவையின் சங்கு கழுத்தில் தாலி கட்டினான் பத்ரி @ பத்ரிநாத் சக்ரவர்த்தி… ஆதிரன் அனுவின் ஏக புதல்வன் ( உன் மத்தம் ஆகுதடி சகியே )
அவன் கண்ணில் காதல் இல்லை துளியும் புதுமாப்பிள்ளைக்கான கலை அவன் முகத்தில் தென்படவில்லை மாறாக கோவமும் ரௌத்திரமும் போட்டிப் போட வேண்டா வெறுப்பாக தன் முன்னால் தலை குனிந்து நின்ற கொற்றவையை கண்களால் எரித்துக் கொண்டு இருந்தான்…
இராவணனும் ஊர் மக்களும் இல்லாவிட்டால் கொற்றவையை அங்கேயே கொன்று புதைத்து இருப்பான் அத்தனை ஆத்திரம் அவள் மேல் அவனுக்கு இருந்தது… செய்யக் கூடியவன் தான் ஆனால் இத்தனை கோபம் கொண்டவனின் கைகளை கட்டிப் போட்டது உலகம் அறியா ஓர் உன்னத உயிர்… அவளே பத்ரியின் உயிரானவள் அவளுக்காக அல்லவா அத்தனையும் தாங்கி தரையில் ஊன்றி நிற்கிறான்…
அவளுக்கு மட்டும் எதாவது ஆச்சுனா உன்னையும் இந்த ஊரையும் மொத்தமாக கொளுத்திடுவேன் என்று கோவத்தில் கொந்தளித்தவனை…
அதெல்லாம் சொல்ற இடத்துல நீ இல்லடி மாப்பிளை… ஒழுங்கா நான் சொல்ற படி கேட்டு நடந்தா உனக்கு நல்லது இல்லாட்டி என்றவன் மயக்கத்தில் கிடந்த அந்த உருவத்தை ஒரு முறை உற்று பார்த்து விட்டு… நீ என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டுற வரை உன் உயிர் என் பாதுகாப்புல…அந்த நினைப்பு இருக்கட்டும்டி மாப்பிளை… அனாயாசமாக அடக்கினான் விதுரன் வளவன் கொற்றவையின் தவப் புதல்வன்…
விதுரன் பெயரை கேட்டாலே பத்ரியின் ரத்த நாணல் எல்லாம் எரிமலைப் பிழம்பாக வெடித்து சிதறியது… ஆனானப்பட்ட ஆதிரன் மகனை கேவலம் எங்கோ ஒரு முலையில் குக்கிராமத்தில் பிறந்த இந்த அண்ணன் தங்கையிடம் தோற்று ஒடுங்கி போவதா…நெவெர்
என்னை உற்று பார்த்தாலே அவங்களை தூக்கிடுவேன் இருந்தும் என் உயிர் மேலேயே கை வச்சிட்டிங்க இல்லை… இன்னைல இருந்து உங்க அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருக்கும் கெட்ட நேரம் தொடங்கிடுச்சு… இனி உங்க வாழக்கையில விடியுற ஒவ்வொரு நாளும் ஏன்டா பொறந்தோம் ஏன்டா இவனை பகைச்சி கிட்டோம் எண்ண வைக்கல நான் பத்ரிநாத் சக்ரவர்த்தி இல்லைடா என மனதில் கருவினான்… அதில் அவன் செய்த தவறை மட்டும் வாகாக மறந்து போனது தான் மனித மனதின் விந்தையிலும் விந்தையே…
இங்கு கொற்றவையும் பத்ரியையும் பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு வீடு திரும்பிய இராவணனுக்கு இன்னும் அலங்காரம் கலையாத அவ்வரண்மனையை கண்டதும் நெஞ்சில் பாரம் ஏறிக் கொண்டது… நகராத கால்களை கஷ்டப்பட்டு எடுத்து வைத்து உள்ளே சென்றவன் சோபாவில் சுருண்டு கிடந்த மகிழினியை கண்டதும் இவளை எப்படி தேற்ற போகிறோம் என்கிற பெரும் கவலை வந்து ஒற்றிக் கொண்டது அவள் ரத்தத்தில் உதிக்கவில்லை என்றாலும் அவள் ரத்தத்தில் உயிரான அவள் உயிரான செல்வத்தின் வாழ்க்கையே இங்கு கேள்வி குறியாகி விட்டது…
யார் செய்தது குற்றம்…?? யார் செய்தது பிழை…??யாரை இங்கு குற்றம் சொல்ல…?? ஒருவர் வாழ்க்கையை அழித்து மற்றவர் வாழக்கை தொலைத்தது தான் இங்கு விதியா அல்லது மனிதர்களின் சதியா…?? விதியாடும் விளையாட்டில் நாம் அனைவரும் கை பாவைகள் மட்டுமே வேறன்ன நான் சொல்ல…
இராவணன் முன்பு தலை நிமிர்ந்து பார்க்கவே தயங்கியவர்கள் எல்லாம் இன்று அவனை கை நீட்டி கேள்வி கேட்பதெல்லாம் அந்த விதி ஆடும் சதீராட்டம் என்றே சொல்ல வேண்டும்
அழுது அழுது ஓய்ந்து போனவளை தேற்ற வழி இன்றி அவள் அருகிலே அமர்ந்து விட்டத்தை வெறித்து பார்த்து இருந்தான் இராவணன்…அவனுக்கும் இது உயிர் வதையே ஆண் அழக் கூடாது என்று யாரோ என்றோ சொல்லி வைத்து விட்டார்களே…
அவன் மௌன நிலையை கலைக்க வென்றே வந்தது சாம்பவியின் அழு குரல்…
அண்ணே என கதறிக் கொண்டு வந்தவள் இராவணன் காலிலே விழுந்தாள்…
அண்ணே என்னை மன்னிச்சுடு அண்ணே… பாவி மகள் பிறந்த வயித்தல பிரண்டைக் கொண்டு தேய்ச்சாலும் என் பாவம் போகாது அண்ணே…
பேரும் சொல்லுமா அவங்களை நீதான் வளர்த்து ஆளாகின ஆனால் இன்னைக்கு உன்னையே மூச்சந்தில நிக்க வச்சிட்டாங்களே அண்ணே…எங்க அண்ணா எப்படி வாழ்ந்த மனுஷன் அவரையே இன்னைக்கு தலை குனிய வச்சிட்டாளே பாவி…அவள் வாழ்க்கைய பணயம் வச்சி அடுத்தவ வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கிட்டாளே நான் என்ன செய்வேன் என சாம்பவி ஆதங்கம் தாங்காது கத்தி அழ… அருகில் இருந்த மகிழினிக்கு நெஞ்சு வேதனையில் விம்மியது…
ஒரு கையால் மனைவியையும் மறு கையால் சகோதரிக்கு ஆறுதல் அளித்தவன்…
நடந்து முடிஞ்சத இனி யாராலும் மாற்ற முடியாது…இனி நடக்க போறது அந்த ஆண்டவன் கட்டளைன்னு ஏத்துகிறத தவிர வேற வழி இல்லை சாம்பவி என்று தங்கைக்கு சொல்வது போல் தனக்கும் சொல்லிக் கொண்டான் இராவணன்…
அண்ணே அவள் சின்ன பொண்ணு அண்ணே அவளை எப்படி அண்ணே அந்த பையன் கூட…?? அவன் வேற என சாம்பவி மேலே பேசும் முன்னே தடுத்த இராவணன்…
கொற்றவை பற்றி நீ கவலை பட வேண்டிய அவசியமே இல்லை சாம்பவி…இனி அவளை பத்திரமா பார்த்துக்க வேண்டியதும் என் கடமை தான்… நான் மட்டும் இல்லை அங்க அவளை மொத்தமா தாங்க ஆதிரன் குடும்பமே காத்து கிடக்கு நீ பயப்படுற மாதிரி எதுவும் ஆகாது ஆகவும் விட மாட்டேன்… அவளுக்கு ஒன்னுனா நான் யாருன்னு சக்ரவர்த்தி குடும்பம் பார்க்க வேண்டி வரும் உன் அண்ணா இன்னும் அதே பழைய இராவணன் தான் என்கிறத மறந்துடாத சாம்பவி கொற்றவை என் வளர்ப்பு…எனக்கு நம்பிக்கை இருக்கு என திடமாக சொன்னான் இராவணன்…
அதெல்லாம் சரிதான் மச்சான் கொற்றவை குறும்புக்காரியா இருந்தாலும் இருக்கிற இடத்துல இருக்கிற சூழல தனக்கு சாதகமா பயன்படுத்திப்பாள் சாமர்த்தியசாலி அவளை உன் பொறுப்புல வச்சி இருக்கும் வரை எனக்கு எந்த பயமும் இல்லை ஆனால் இந்த விதுரன் அவனை நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு அவன் கொற்றவை அளவு சாமர்த்தியம் கிடையாது எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவு எடுக்கிறவன்… தனக்கு ஒரு கண்ணு போனா எதிரிக்கு இரண்டு கண்ணுமே போகணும் நினைக்கிற முரட்டு சுபாவம் உள்ளவன்… அவனை நினைச்சா தான் எனக்கு பயம் இருக்கு எங்க அவனால மூணுப் பேரோட எதிர்காலமும் கேள்வி குறியாகிடுமோன்னு என்கிறது தான் என் பயமே என வளவன் தன் மனதில் உள்ளதை மறையாமல் சொல்லி விட்டான்…
இளம் கன்று பயம் அறியாது சொல்லுவாங்க அது உண்மை தான்… இதுவரைக்கும் விதுரன் விஷயத்துல என்ன நடந்து இருந்தாலும் அதுல நமக்கும் சம பொறுப்பு இருக்கு… நெருப்பு சுடும் தெரியாம விளையாடிட்டான் அதோட விளைவை அவன் அனுபவச்சி தான் ஆகணும் என வருத்தம் தோய்ந்த குரலில் இராவணன்…
இராவணா என வளவன் பதறிட…
ம்ம் நீ கவலை படாத மச்சான் எல்லாம் நான் பார்த்துக்குறேன் என்றவன் தன் தோளிலே தானே சுமைகளே ஏற்றிக் கொண்டான்… அதே சமையம் அவன் மனசுமையை யாருக்கும் காட்டாமல் விட்டான் அதுவே இராவணனின் தன்னியல்பு ஆகும்…
****
இராவணனுக்கு சொந்தமான பழைய கொடோன் ஒன்றில்…
மேஜை மீது வைக்க பட்டு இருந்த மின் விசிறியில் இருந்து வெளிப்பட்ட காற்றனது எதிரே கயிற்றால் விளங்கிட பட்டு பரிதாபத்துக்குரிய தோற்றத்துடன் அமர்ந்திருக்கும் உருவத்தின் மேல் பட்டு விலக அதில் முன்னால் விழுந்த அவள் முடி கவிதை பாட அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தப் படி அமர்ந்து இருந்தான் விதுரன்…
யார் இவள்…?? தெரியாது…!!
பத்ரிக்கும் இவளுக்கு என்ன சம்மந்தம்…?? அதுவும் தெரியாது…! என்னவா வேனா இருந்துட்டு போகட்டும் ஆனால் இவளை தொட்டாள் அவனுக்கு வலிக்கிறது…அது போதும் இவனுக்கு…
கண்கள் பேசுமா…?? ப்பா என்ன கண்ணு வாய் கட்டப் பட்ட நிலையில் அவள் கண்கள் விதுரனை பார்த்து இறைஞ்சியதா…??? நிச்சயம் இல்லை அவள் கண்கள் விதுரனை எரித்தன…பயம் என்கிற சொல் அவள் அகராதிலே கிடையாதோ…?? இல்லையே முதல் முறை அவளை கடத்திய போது அவள் கண்களில் துளிர்ந்த பயம் அவன் யார் என்று தெரியாத பொழுது வரை அந்நிய ஆடவனிடம் தோன்றும் அந்த அச்சம்… இவன் இராவணன் மருமகன் என்று அறிந்ததும் காணாமல் போனதே… ஒருவேளை பத்ரி இவளை காப்பாற்றி விடுவான் என்கிற நம்பிக்கையா…
கூடாதே அந்த நம்பிக்கையை அழிச்சே ஆகணும்… அவளை காப்பாற்றி இருக்க வேண்டியவன் விதுரனை எதிர்க்க திராணி இன்றி புரமுதுகிட்டு அவன் தங்கையோடு ஊரை விட்டு அல்லவா போய் கொண்டு இருக்கிறான் அந்த உண்மை தெரிந்தால் இவள் முகம் பாவம் எப்படி இருக்கும் என்று யோசித்தப்படி அவன் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்தவன்… உன் பெயர் என்ன சொன்ன என கேட்டப்படி அவள் அருகில் நெருங்கி வந்தான்…
காந்தம் போல் அவள் பளிங்கு முகம் அருகே இழுக்க அவள் மூச்சு காற்றுப் படும் இடத்தில் இவன் இதழ்கள் இருந்தன… பெண்மைக்கே உரிய நடுக்கத்துடன் அவள் முகத்தை பின்னிழுக்க விதுரன் மேலும் நெருங்கிட திகைத்து போனாள் பேதை பெண்…
அவள் கிளிஞ்சல் காதுகளில் இவனின் அதரம் உரசிட உன் கண்ணு செம்ம கிக்கா இருக்குடி என்கவும்… உயிரழுத்த மின்சாரம் பாய்ந்தது போல் உறைந்து போனாள் பேரழகியான அக்காரிகை…
