3
ஊரில் இருந்து புறப்பட்டதில் இருந்து கொற்றவை எதுவுமே சாப்பிடவில்லை… திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்தக் கூத்தில் அவள் சரியாக உறங்காததால் பத்ரியின் காரில் ஏறியதுமே உறங்கி விட்டாள்… இப்போது அவள் வயிறு தான் இருப்பதை சப்தமிட்டு உணர்த்த மெல்ல கண் மலர்ந்தவளுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி…
வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவில் உருவமில்லா உருண்டை உருண்டு ஓடியது… காரணம்…?
ஜன நெரிசல் நிறைந்த மும்பை ட்ராபிக்கில் பத்ரியின் ஜப்பானின் அதி வேக ட்ரெயின் போல் பாய்ந்து சென்றது… அவன் ஒவ்வொரு முறை ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் போதும் குறுக்கே செல்லும் வண்டியில் மோதாவது போல் சென்று ஒடித்து திருப்பும் போதும் கொற்றவையின் அடி அல்லு விட்டு போனது… “
ஓ கண்ணு முழிச்சிட்டியா பேபி… உன்னை எப்படி எல்லாம் எழுப்பி விடலாம் யோசிச்சிட்டு இருந்தேன் பரவால்ல நீயே எழுந்துட்ட… ஆமாம் நீ மும்பைக்கு புதுசுல உனக்கு ஒரு வெல்கம் ட்ரீட் கொடுக்கணுமே என்றவன் புருவத்தை வில்லாக வளைத்து விஷமமாக சொன்னவன் நொடியில் வண்டியை ஆட்டோ மோடில் போட்டு விட்டு கைகளை பின்னால் கொண்டு வந்து தலைக்கு கீழாக கொடுத்து விட்டு ஹாயாக உட்கார்ந்துக் கொண்டான்… கார் கட்டுப்பாடு இன்றி தறிக்கெட்டு தாறுமாறாக ஓடியது…
உடன் செல்லும் கார்களை எல்லாம் மிக நெருக்கத்தில் உராய்ந்துக் தீ பறந்தது…
ஐயோ என்ன பண்றிங்க வண்டி வண்டிய நிறுத்துங்க போச்சு இடிக்க போகுது கடவுளே ஏன் இப்படி எல்லாம் பண்றிங்க என கொற்றவை கேட்டு கொண்டு இருக்கும் போதே பத்ரியின் கார் முன்னே சென்றுக் கொண்டு இருக்கும் ஆபாயக் குறியீடு போட்ட எரி ரசாயனம் கொண்டு செல்லும் டேங்க்ர் லாரியை விரைவு கதியில் இடிக்க தயாரானது…
ஏங்க பிரேக் போடுங்க எதிர்ல இ
போல லாரில மோதிடப் போகுது என கொற்றவை பயத்தில் பதற… பத்ரியோ அதை எல்லாம் காதில் வாங்காது காலனை கூலாக வரவேற்றான்…
ஐயோ ப்ளீஸ் எதாவது பண்ணுங்க கடவுளே காப்பாத்துங்க காப்பாத்துங்க என கதறியவள் பத்ரி எதுவும் செய்ய மாட்டான் என்பது அவள் மூளைக்கு எட்டும் நேரத்தில் மண்டை ஓடு குறியீடு போட்ட அந்த லாரியின் பின் புறத்தை பத்ரியின் காரின் முன் புறம் உரசி வந்தது…
அவ்ளோ தான் நம்ம கதை ஆரம்பிக்கும் முன்னவே முடியப் போகிறது என எண்ணியவள்… முருகா முருகா முருகா என வேண்டியபடியே இறுதியாக அவள் கண்களை மூடும் போது கார் லாரியின் பின் புறத்தை வேகமாக இடித்தது…
முருகாஆஆ என அவள் அடித் தொண்டையில் இருந்து கத்தி முடிக்கும் போது அங்கு அனைத்தும் நடந்து முடிந்து இருந்தது…
அவ்ளோ தான் செத்து போயிட்டோம்…இனி பானி பூரி திங்க முடியாது என நினைத்தப்படி கண்ணை திறந்தவளுக்கு சில வினாடிகளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை… அவ்ளோ பெரிய லாரி மேல மோதியும் எப்படி ஒன்னுமே ஆகாம முழுசா இருக்கிறோம் என்று அவள் மூளை சில நிமிடம் இயங்கவில்லை…
இயங்க மறுத்த செல்களை எல்லாம் தட்டி எழுப்பி தன் கைகளை கொண்டு தன்னையே அளந்து பார்த்து ஆராய்ந்து கொண்ட பின்பே அப்போ நான் இன்னும் சகலையா என மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக சொல்ல…
நீ இன்னும் சகலை பேபி உயிரோட தான் இருக்க… உன்னை அவ்ளோ சீக்கிரம் சாக விட்டுடுவேனா டார்லிங்…என பத்ரியின் ஆணவம் நிறைந்த குரலில் திடுகென்று உடல் தூக்கிப் போட… பேயை கண்டது போல் பயந்து விழித்தாள் கொற்றவை…
அதுவரையில் தான் தாலி கட்டிய மனைவியின் பயத்தையும் அதில் விளைந்த அவள் முக பாவங்களையும் வேடிக்கையாக பார்த்து ரசித்தான் அவளின் புத்தம் புது கணவன்…( நல்ல புருஷன் டா )
என்ன பேபி பயமா இருக்கா…?? இனிமே பாரு படு பயங்கரமா இருக்கும்…?? ஏன்டா பொய் சொன்னோம் ஏன்டா இவனை கல்யாணம் பண்ணோம்னு ஒவ்வொரு நொடியும் நீ வருந்தி வருந்தி சாகணும்… அது எனக்கு வேணும் பேபி என கூறியவன் அரக்க தனமாக சிரிக்கவும் அவனை அதிர்ந்து நோக்கினாள் கொற்றவை…
…
இனி வரும் இவனோடன வாழ்வு பற்றி கொற்றவைக்கு கேள்வி கூறியானது…
கார் சறுக்கி கொண்டு வந்து நின்ற இடம் நீங்கள் நான் கொற்றவை எதிர்பார்த்தது போல் ஆதிரனின் மளிகையோ அல்லது பத்ரி தன்தனி அப்பார்ட்மெண்ட்டோ இல்லை… அது மும்பையின் பிரசித்தி பெற்ற பிரபலமான பார்…
காரை விட்டு இறங்கியவன் அதிர்ச்சியில் உறைந்து இருந்த கொற்றவையின் பக்கம் வந்தவன்… என்ன பேபி முழிக்கிற கீழ இறங்கு ம்ம்ம் புதுசா கல்யாணம் ஆனவங்க வீட்டுக்கு வந்தா என்ன சொல்வாங்க ஹான்… உன் வலது காலை எடுத்து வச்சு வா பேபி என முதல் முதலாக மனைவியை பாருக்கு அழைத்து வந்தப் பெருமை பத்ரிநாத் சக்ரவர்த்திக்கே சாறும்…
அவள் இறங்க பயந்து அப்படியே உட்கார்ந்து இருக்க அவள் பக்க கார் கதவை திறந்து கொற்றவையை வலுக்கட்டாயமாக காரில் இருந்து இறக்கியவன் அவளை தர தர வென்று பாரின் இழுத்து சென்றான்…
பத்ரியின் தேக்கு மர புஜத்தில் கொற்றவையின் தந்த நிற கரம் பாந்தமாக பொருந்தியதை இருவருமே பொருட்படுத்தவில்லை…
பகல் பொழுதை மறைத்த செயற்கை இருளை பொருத்தப் பட்ட அந்த விலை உயர்ந்த விடுதியின் உள்ளே மிதமான வெளிச்சத்தில் ஆங்காங்கே சிலர் ஜோடிகளுடன் சரக்கடித்துக் கொண்டு இருக்க… அங்கே நடு நாயகமாக அடுக்கி வைக்க பட்டு இருந்தா விலை உயர்ந்த சரக்குகள் உள்ள பார்க்கு சென்றவன்… அவனுக்கென்றே பிரத்தியோகமான இருக்கையில் அமர்ந்தவன் அட்டெண்டரை அழைத்து அவனுக்கு தேவையானதை கொண்டு வர சொல்ல… அவனை கண்டு பார் அட்டெண்டர் முதல் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்…
பத்ரியையும் அவன் உடன் வந்த கொற்றவையும் மாறி மாறி பார்த்தவர்கள் தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக் கொண்டனர்…
தன் உயிர் தோழியின் திருமணத்திற்காக அவள் அணிந்து இருந்த பேஸ்டல் கலர் லேஹங்கா மட்டும் அணிந்து சோலி போடாமல் நின்ற கொற்றவைக்கு அங்கிருந்தவர்களின் பார்வை வெகுவாக கூச செய்தது… தன் இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக போட்டு வக்கிரமாக அவள் மேல் கண்களிடம் இருந்து தற்காத்து கொண்டவள் பத்ரியை கெஞ்சலாக பார்க்க… அவனோ இவள் பக்கம் திரும்பினாள் தானே அவளின் பார்வையின் அர்த்தம் புரியும் அவனோ எனக்கு என்ன வந்தது என்பது போல் அவன் ஆர்டர் செய்த மதுபானத்தை சுவைப்பதிலே குறியாக இருந்தான்… நொடியும் விட்டால் வினாகி விடும் என்கிற எண்ணத்திலே பாட்டில் சிப் அடித்தான்… குடித்தான் குடித்தான் குடித்துக் கொண்டே இருந்தான்…நொடியும் விடாமல் குடித்தான்… குடிக்கவே பிறந்தவன் போல் குடித்தான் இல்லை இனி குடியே கண்ணிலே காணாதவன் குடித்தான்…
பொறுத்து பொறுத்து பார்த்தாள் கொற்றவை… பாரில் உள்ள இருந்த குளிர் அவள் உடலை ஊசியை குத்தியது… வந்ததில் இருந்து நின்று கொண்டே இருந்ததால் அவள் கால்கள் வலியில் துவண்டது… நேற்றில் இருந்து எதுவும் சாப்பிடாத வயிறு கொழுந்து விட்டு எரிய… அவனோ சரக்கை கட்டி அணைத்து கொண்டு விழுந்தான்…
அவன் மயங்கி விழுவதற்காகவே காத்திருந்தவர்கள் போல் கொற்றவை நெருங்கியது சிறு நரி கூட்டம்…
அவன் தான் மயங்கிட்டான்ல இனி எங்களுக்கு கம்பெனி கொடு பேபி அவன் கொடுத்ததை விட அதிகமாகவே நாங்க தரோம்… என முன்னவன் கொற்றவையின் கையை பற்றிடவும் வெடுகென்று உதறிக் கொண்டாள் அன்னிச்சையாக பின்னால் நகர்ந்தாள்…
என்னடி பெரிய பத்தினி மாதிரி நடிக்கிற காசுக்கு வந்தவ தானே… அவன விட உனக்கு நாங்க நல்லா கம்பெனி கொடுப்போம்… என்ற வார்த்தையில் கொற்றவை அருவெறுத்து போய் தகாத வார்த்தையில் பேசியவனை அறைய கையை ஓங்கிட…
அனாயாசமாக அவள் கையை தடுத்து பிடித்த பற்றிய அக்கயவனோ… கொற்றவை கையை பின்னால் வளைத்து வலிக்க பிடித்தவன்… “*** என்னடி **** உன் திமிர அடக்க நாங்க நாலு பேரு போதாதா…என அசிங்கமாக பேசிட அவனை தொடர்ந்த மற்றவர்கள்
டேய் நண்பா குட்டி கோவத்துல கூட செமயா இருக்காடா…சீக்கிரம்டா எனக்கு கை நம நமங்குதே என கொற்றவை பார்த்து விரசமாக சிரிக்க…
அப்போ ஒன்னு பண்ணுவோம் மச்சான் நம்மள்ள யார் முதலில் இவளை அனுபவிக்கிறது சோழி போட்டு பார்த்துடுவோம்…முதலாமவன் சொல்ல…
சோழியா அதுக்கு இப்போ நாம எங்கடா போக…
அதான் நல்ல கொழுத்த சோழிய நம்ம கிட்டையே இருக்காளே இவளை வச்சே சுழட்டி விடுவோம் இவள் மேல போய் விழுறாளோ அவனே அவளை முதல்ல என்ஜோய் பண்ணட்டும் என சொல்ல மற்றவர்கள் சிரித்து அதை ஆமோதிக்க…
அவர்கள் பேசியதை கேட்டு நடுங்கிய கொற்றவை பதறிக் கொண்டு வர பத்ரி அசைத்து எழுப்பினாள் அவளுக்கென்று அறிந்து ஒரே ஜீவன் அவன் தானே…
என்னங்க என்னங்க எந்திரிங்க ஏங்க எந்திரிக்க ப்ளீஸ் ஐயோ எந்திரிங்க என அவள் எவ்ளோவோ கதறியும் அவன் காதில் விழாமல் போக…நிற்கதியான தன் அவல நிலையை நினைத்து தலையில் அடித்து கொண்டு அழுதால் அபலை பெண்…
அன்று துகிலுரிக்கப்பட்ட திரௌபதியை காக்க அந்த கண்ணன் வந்தான் ஆனால் இன்று இந்த கொற்றவையை காக்க அவள் கணவன் வருவானா அல்லது வஞ்சம் கொண்ட நெஞ்சம் மறுத்திடுமா

I absolutely love your blog and find a lot of your post’s to
be exactly what I’m looking for. can you offer guest writers to
write content to suit your needs? I wouldn’t mind publishing a post
or elaborating on most of the subjects you write regarding here.
Again, awesome weblog! https://worldaid.eu.org/discussion/profile.php?id=1329039