ATM Tamil Romantic Novels

2 அசுரன்

2 அசுரன்
 
நீ என்ன ஊமையா? .. இவளின் மவுனத்துக்கு அங்கிருந்து உறுமல் வர..
 
இல்ல ல்ல.. சார்.. ஸ்ஸ்ஸா…சாரி சார்
 
என்ன பேசணும்? சட்டுனு சொல்லு..
 
ஒப்ப..ந்தம்.. ம்ம் 
 
ஐய! உனக்கு திக்கு வாயா?
வம்சி முகம் சுளிக்க..
 
மதுவுக்கோ ஐயகோ! எனும் பதற்றம்.. என்ன செய்வா? 
 
இல்ல சார்… நீங்க பெரிய ஆள் உங்க கூட பேச வாயே வரல.. அதனால் வந்த தயக்கம் தான்..
 
என்ன சொல்லணும் ஒப்பந்தம் பற்றி..
 
அந்த எல்லாம் என்றால் என்ன சார்?
 
எல்லாம் ன்னா எனக்கு  எந்த நேரத்துக்கு என்ன வேணுமோ செய்யனும்..
 
உள்ளடக்கம்?
 
அதுவும் தான் ஆனால் எனக்கு மூட் வரணும் உன்னிடம் வரணும் தோணுனா வருவேன்.. அதெற்கெல்லாம் சேர்த்துதான் சம்பளம்.. ஓகே .. இங்கேயே ட்ரைனிங் எடுத்த பின் டார்ஜிலிங் கூப்பிடலாம் நினைச்சேன்.. இவ்ளோ பேசுறியே உன்னை நிச்சயம் நேரில் பார்க்கணும் .. வந்துசேர்.. அவ்ளோதான் கட் பண்ணிட்டான்..
 
என்னதிது? கொஞ்சம் கூட மேன்னர்ஸ் இல்லாது பேசும் பொழுதே..
 
திரும்ப கூட அழைக்கலாம்.. இவளுக்கு முகரடியா பேசுபவன் கிட்டே என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு.. முதலாளி vs தொழிலாளி முகம் வாடி விட்டுவிட்டாள்..
 
அவனிடம் போனால் இதுகூட செய்ய முடியாது தெரில.. பணத்துக்காய் ஒரு பாசக்கிளி தினமும் வெக்கையில் வேகப்போகும் விவரம் தெரில.. வாழ்க்கையின் ஸ்வாரஸ்யமே நாளை என்ன நடக்கும் என்பது தெரியாததே..
 
திரும்ப ஆபிஸ் க்கு விவரம் போன் பண்ணி கேட்கணுமா என்ன? அவர்களாகவே வரட்டும் இல்லன்னா மொத்தமா போவட்டும்.. அக்கறையில்லாது தன் வழியில் வீட்டில் வேலை செய்து சுற்றிக்கொண்டிருக்க.. மதியம் கதவை தட்டி.. பணம் கட்டாகவே கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு.. நாளை டேட் போட்டு டார்ஜிலிங்க்கு இவள் பேரில் விமான டிக்கெட்  ஒன்றும் வைக்கப்பட்டு இருக்க.. எல்லாமே அவசரமாவே தோணுச்சு மதுவுக்கு.. மலைத்தாள்..
 
வந்தவர்களும் ஏதும் பேசல இவளும் விவரம் கேட்கலை.. ஒரே ஒரு வருஷத்துக்கு மட்டுமே என்று கடைசி வரி முடிக்கப்பட்டிருக்க.. ஒரு வருஷம் தானே .. சமாளித்துவிடலாம் மதுவின் கணக்கு.. இவளுக்கும் ஒரு காபி தந்து அவர்கள் செல்ல.. பணத்தை பத்திரம் பண்ணி.. எந்திரமாய் தன் பொருள்களை அடுக்க ஆரம்பித்தாள்.. மனம் புது இடம் போவது பயந்து ஏனோ வெறுமை கொண்டது..
 
பணம் நிலுவையில் இருக்கும் ஹவுஸிங் லோன் போக தம்பிக்கு பீஸ் கட்ட அடகு வைத்த குட்டி குட்டி நகைகள் எடுக்கணும்.. கணக்கு போட்டு
 
அம்மாவை வேலை கிடைத்து விட்டது.. அட்வான்ஸ்  தந்திருக்காங்க.. சொல்லி, போன் போட்டு வர வைத்து.. நகை திருப்பும் வேலைகளை செய்ய வைத்தாள்
 
 வீடு லோன் அந்த ஆபிசரை கூப்பிட்டு அமௌண்ட் கேட்டு நாளை டி டி எடுத்து தரேன் பேங்க்லேயே வாங்கிக்கோங்க சொல்லிட்டாள் ..
 
 தாய்க்கு சிறுபணம் மட்டுமே அட்வான்ஸ் வாங்கி இருப்பதாய் முதல் பொய் சொன்னாள்.. குருவி தலையில் பனங்காய் .. சிறுபெண் வயதுக்கு மீறி யோசித்தாள்..
 
அம்மாவை இனி வேலைக்கு போகவேணாம் அப்பாவை பார்த்துக்கோங்க.. அப்பா முத முறையா வேலைக்கு போறேன் ஆசீர்வாதம் பண்ணுங்க.. தன் பிரிய அப்பாவின் கைகளை முத்தமிட்டு ஆசீர்வாதம் வாங்கினாள்.. என் ராஜா குட்டி அம்மாக்கு எப்பவும் ஹெல்ப் பண்ணு நல்லா படி அக்கா உன்னை தேடிட்டே இருப்பேன்.. தினமும் போன் போடுறேன்.. சரியா?
 
அக்கா நீயும் வீட்டில் பத்திரமா இரு நான் கொஞ்சோண்டு வளர்ந்துக்குறேன் .. நான் வேலைக்கு போய் அப்பா போல நிறய சம்பாரிக்கிறேன்.. நீ இங்கேயே இரேன்.. ஐ மிஸ் யூ க்கா.. முகில் பாசத்தில் மெய் சொல்ல..
 
இது போறுமே!! இந்த வார்த்தைகளுக்கு எவனுக்கு வேணும்னாலும் தோலை செருப்பாக கூட தச்சு போடலாமே.. தம்பியை அணைத்துக்கொண்டு உருகினாள் மது..
 
உடைகளுக்கு இவளுக்கு பஞ்சமில்லை பணம் இருந்தால் அதற்குத்தானே முதல் செலவு போகும்.. ஆதலால் இருப்பதிலேயே மாடர்ன் அண்ட் ஸ்டைலிஷ் உடைகளை ரெண்டு ட்ராலி பாக் எடுத்துக்கொண்டாள்.. குட்டி குட்டி கொக்கி தங்க தோடுகள் உடைகளுக்கு ஏற்ற மாதிரி போட்டுக்கலாம்.. கழுத்தில் மின்னும் ஒரு  மைனர் செயின் .. தண்டை அமைப்பில் மெல்லிய கொலுசு.. வலது கையில் சாய்பாபா கயிறு..  கையில் ப்லைன் வளையல்கள் என்று எப்பவும் ஒரே தோற்றத்தில் இருக்கும் படி தன்னை சரி செய்துக்கொண்டாள் மது..
 
மறுநாள் வீட்டை ஓரளவு செட் பண்ணிட்டு திருப்தியா பீச் கலர் புல் கவுனில் கண்ணுக்கு இதமான மேக்கப்போடு தலைவனின் ஊர் சென்றாள் இந்த தலைவி.. 
 
இங்கு போல அங்கும் இவளை அழைத்து செல்ல படகு கார் வந்திருந்தது.. அவ்ளோ பிளான்… எங்கும் கச்சிதமான செயல்பாடு.. ஊழியர்களும் சரியாக இருந்தார்கள்.. வம்சியின் வெற்றியே இதுதான்.. அவரிடமுருந்து தொழில் நடத்துவது பற்றிலாம் கத்துக்கோணும்.. நாமும் அவர் கிங் என்றால் இந்த வயதில் உடனே முடியாதென்றாலும் கண்டிப்பா குயின் என்று சொல்லக்கூடிய அளவு வளரனும் வளரனும் .. திரும்ப திரும்ப உரு போட்டாள்..
 
பணக்கார நிலையிலிருந்து கீழே வந்த பெண்ணாக இருந்தால் அவளுக்கு சின்ன கனவுகள் வரல.. பெரிதாய் ஆசைப்பட்டாள்.. 
 
கார் அந்த இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதைகளை கடக்க.. ஏற்கனவே 10ஆம் வகுப்பு லீவில் இங்கெல்லாம் வந்திருக்கிறாள் அதனால் அப்போ தவற விட்ட டார்ஜிலிங் அழகையெல்லாம் இப்பொழுது கண்ணில் கவ்வி மனசில் பதித்தாலும் இதயம் வம்சியின் வீட்டை நெருங்க நெருங்க தானாய் பட படத்தது..
 
நல்லவேளை இவள் அங்கு செல்லும் பொழுது அவனில்லை.. அந்த கிளாசிக் லுக் பிரமாண்ட கட்டடத்தில் நுழையும் பொழுதே ஒரு பெண்மணி இவளின் உடைமைகள் பூரா ஒருவரை தூக்கி வரச்சொல்லி இவளுக்கான ஒரு அறையை காட்டி கொடுத்துவிட்டு.. இன்டெர்காம் எண்கள் கொண்ட ஒரு அட்டையை தந்துவிட்டு.. தன் பேர் குடியா இவ்வீட்டின் கேர்டேக்கர் என்று மில்லி மீட்டர் அளவு புன்னகைத்து விட்டு செல்ல.. முத முறையா இவ்ளோ பெரிய ஜெயிலா??!! பயம் வந்தது.. 
 
கதவை கவனமாய் லாக் செய்தாள் மது
 
எட்டு பேர் படுக்கக்கூடிய பெரிய கட்டில்.. பயண களைப்பில் மட்ட மல்லாக்க படுத்து முதுகை சமம் பண்ணி..
அவன் இஷ்டமென்றால் என்ன செய்வான் வம்சி? காரில் ஹீட்டர் இருந்தது வந்தப்போ குளிர் தெரில.. பெரிய திரைகள் கண்ணாடி ஜன்னல்கள்  குளிரை பூஸ்ட் பண்ணி அறையை கடுங்குளிரில் வைத்திருக்க .. தன் பேகில் இருந்து கெட்டி ஷால் ஒன்று எடுத்து பதமாய் காது பொத்தி.. இவள் குளிரோடு வாழ பழக.. சூடா காபி குடிச்சா நன்றாக இருக்கும்.. நினைக்கும் பொழுதே கால்.. வாசலில் காபி வந்திருக்கிறது என்று..
 
மகிழ்ச்சியா கதவை திறந்து பிளாஸ்க்யோடு கப் தரப்பட.. தான்க்ஸ் சொல்லி வாங்கிக்கொண்டாள்.. இரவுக்கு ஏதும் வேண்டாம் சொல்லி விட்டாள்.. போட்டிருந்த உடையே குளிருக்கு இதமாயிருக்க.. பல்விளக்கி தன்னை சுத்தம் செய்துவிட்டு தனியே படுப்பது பயம் தந்தாலும் நீ பெரிய பொண்ணு மது உனக்கு 20 வயது 2 வயசு இல்ல.. மனசை தேற்றி ராஜாய் கொண்டு முழுக்க தலையோடு மூடி முருகா! முருகா!  சொல்லி பயத்தை ஓட்டி தூங்கியேவிட்டாள்..
 
நள்ளிரவு ஒரு மணிக்கு  நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட வம்சி முழு போதையில் தள்ளாடியபடியே தன்னறைக்கும் மதுவின் அறைக்கும் நடுவில் ஆளுயர கண்ணாடி தான் ரகசிய கதவு அதை திறந்து விடி விளக்கில் ஒருக்களித்து படுத்திருந்தவளிடம் பின்னோடு அணைத்துக்கொண்டான்.. மொச்சு மொச்சு வென முத்தங்கள் அவள் பின்னங்கழுத்துக்கும் காதுக்கும்.. என்ன நடக்குது தெரியவே மதுவுக்கு 5 நிமிடம் பிடிக்க.. அதற்குள் அவளின் முதுகில் தைக்கப்பட்ட ஜிப் அமைப்பு முழுக்க கீழ் இறக்கப்பட்டு அவன் விரல்கள் முன்னழகில் விளையாடத்தொடங்கி விட்டன.. பயத்தில் நடுங்கினாள் மது.. இருட்டில் யார் என்னன்னே தெரில..
 
அவன் கையை கடித்து வேகமாய் தட்டி விட்டு.. யார் நீ? ச்சீ விடு.. என்று  குரல் கொடுக்க..
 
 நான் வம்சி.. வாயோடு வாய் சேர்த்து மூடினான் அந்த அசுரன் இரக்கமில்லாதவன்..
 
ஹ்ஹா! திகைத்து உதடு பிரித்தவளின் பிஞ்சு உதடுகள் அதி ஆல்கஹால் வாசத்தோடு கூடிய தடித்த அதரங்களுள் சிக்கி தன் முதல் முத்தத்தை பெற்றன.. அது மட்டுமா முதல்??!!! மதுவுக்கு.. 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top