ATM Tamil Romantic Novels

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 12

இஷ்டம் -12

 

 

திருமணத்திற்கு ஒரு வாரமே ஜாஸ்தி என விடுமுறை எடுத்து வந்தவனை.. மறுவீட்டு சடங்கு, குலதெய்வ கோவில் பூஜை, கறி விருந்து, கிடா விருந்து, சொந்தக்காரர்கள் வீட்டில் விருந்து.. என்று இனி விருந்து என்றாலே அலறி ஓடும் அளவுக்கு கதறடித்தனர் பாசத்தால் மேகலையின் உறவினர்கள்!! அந்த உறவினர்களுக்குள் அடக்கம் கிருஷ்ணகுமாரும்..

 

தொழில் முன்னேறி இன்று பிரபல தொழிலதிபராக கிருஷ்ணகுமார் வலம் வந்தாலும், இவ்வளவு நாட்களாக விட்டுப் போன உறவுகளை காணும் போது.. மனதோ சிறு பிள்ளையாய் உற்சாகம் கொண்டது!!

 

இத்தனை நாள் சாதனை எல்லாம் என்ன பெரிய சாதனை? அப்படி என்ன சாதித்து விட்டோம்? என்று எண்ணம் கொண்டார். உறவுகளோடு ஒன்றியிருக்க முடியாமல்.. ஒன்றாக கலந்து சிரித்து பேச முடியாமல்… விருந்தாட முடியாமல்.. என்ன பெரிய சாதனை கிடக்கிறது? என்று மனநிலைக்கு வந்த கிருஷ்ணகுமாரும்.. அவர்களோடு சேர்ந்து கொள்ள, கார்த்திக்கால் ஒன்னும் செய்ய முடியவில்லை!!

 

அவ்வப்போது அம்மாவை இவன் பாசமாக முறைத்துப் பார்க்க அப்போதெல்லாம் அவன் முறைப்புக்கு பயந்து மகனருகில் வருவதே இல்லை இப்போதெல்லாம் பாமா.

 

போதாத குறைக்கு மருமகள் அவரை விட ட்ரெண்டியாக.. டிசைன் டிசைனாக ப்ளவுஸ் அணிந்தவாறு இருக்க… பெரும்பாலும் அதைப்பற்றியே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் மாமியாருக்கும் மருமகளுக்கும்!!

 

அதைக் காணும் போது இன்னும் காண்டவான் கார்த்திக்!!

 

“இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க.. சீரியல் பார்க்காம கெட்டு போய்ட்டாங்க!! சென்னை போனதும் சன் டிவியிலிருந்து விஜய்.. ஜீ.. இன்னும் என்னென்ன சானலில் மாமியார் மருமகள் சண்டை ஜோராக போகுதுனு ஒரு கண்க்கெடுத்து எங்க அம்மாவ பார்க்க வைக்கனும். அப்போ தான் நாம் நிம்மதியா இருக்க முடியும்!” என்று பொரிந்துக் கொண்டே செல்வான்.

 

கோயம்புத்தூரில் அவர்கள் வீட்டில் இருந்தாலும் விருந்து விஷேஷம் என்று பெரும்பாலான நேரம் கருமத்தம்பட்டி சுற்றியுள்ள ஏதோ ஒரு பட்டியில் தான் அவர்கள் இருக்க நேர்ந்தது!!

 

அவனை வைத்து செய்தனர் இந்த பத்து நாட்களும்!! இதற்கெல்லாம் வந்து அவனுக்கு தொக்காக மாட்டியது கண்ணன் தான்!! ஃபோனில் பேசிப்பேசியே அவனை போட்டுத் தள்ளினான் கார்த்திக்.

 

“டேய்.. புது மாப்பிள்ளைனா ஹனிமூன் பத்தி பேசனும்.. பொண்டாட்டி அத செஞ்சுது கொடுத்தா செம டேஸ்ட்னு ஸ்டேட்டஸ் போடனும்.. நாய்க்குட்டிக்கு பொண்டாட்டி பால் ஊத்தினா.. அவள் அன்னை தெரசாவின் மறுபிறப்புனு எப்பியில ஸ்ட்டேட்ஸ் போடனும்.. அதான்டா உலக வழக்கம்!! இவன் என்னடான்னா எதுக்கெடுத்தாலும் எனக்கு ஃபோனை போட்டு காட்டு கத்தல கத்துறானே!” என்று ஃபோன் அலறினாலே.. அலற ஆரம்பித்தான் கண்ணன்.

 

பெங்களூரில் அப்பார்ட்மெண்ட் மருமகள் வந்து தங்கும் அளவு வசதியாக இருக்கிறதா என்று ஒரு முறை கிருஷ்ணகுமார் சென்று விசிட் அடித்து வந்து விட்டார். மகன் மருமகளின் வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதை காட்டிலும்.. மருமகள் அவருக்கு பிடித்த ஐயாவின் மகள்!! அந்த ஊரின் அன்புக்கு பாத்திரப்பட்டவள் அப்படிப்பட்டவள் தனக்கு மருமகள் வரும்போது தான் எப்படி தாங்க வேண்டும் என்று அதை சொல்லாமல் செயலில் காட்டினார்.

 

தன்னை விட மருமகள் மீது தன் கணவன் அதிகம் பாசம் காட்டுகிறார் என்று வார்த்தைகளால் கடித்து குதற.. வஞ்சம் வச்சி தீர்க்க… மகனோடு சேரவிடாமல் தடுக்க.. பாமா ஒன்றும் சீரியல் மாமியார் அல்லவே.. அவர் சாதுவான இன்றைய நவீன யுக மாமியார்!!

 

ஆமாம்.. மருமகளுக்கு நிகராக தன்னையும் அலங்கரித்துக் கொண்டு.. வீடு வேலை என்று தன்னை பிஸியாக வைத்துக் கொள்பவர்!!

 

விருந்து எல்லாம் முடிந்து புதுமணமக்கள் பெங்களூர் அப்பார்ட்மெண்டுக்கு வந்து குடியேறி பத்து நாட்கள் சென்று விட்டது!!

 

முதலில் அப்பா அப்பத்தா படைப்படை வாருங்கள் கூடவே பிறந்தது மேகலைக்கு கஷ்டமாக இருந்தாலும் நிதர்சனத்தை புரிந்து இங்கே தன்னை பொருத்திக் கொள்ள முயன்றாள். ஆனாலும் கோயம்புத்தூர் பொண்ணுக்கு பெங்களூரில் தன்னை பழகிக் கொள்ளவே பெரும் சிரமப்பட்டாள்!!

 

 

அந்தி சூரியன் அர்த்தமனம் கொள்ள நேரம் பார்க்கும் வேளை… தங்கள் அப்பார்ட்மெண்ட் பால்கனியில் இருந்து இருளை மீறி மினுக்கும் விளக்குகளையும்.. சாலைகளில் வாகனங்களுக்கு ஈடாக ஓடும் மனிதர்களையும்… கான்கிரீட் உபயத்தால் உயர்ந்து நிற்கும் மனித கூடுகளையும் பார்த்திருந்தாள் மேகலை!!

 

மனதில் தன் வீட்டின் மொட்டை மாடியை ஒப்பிட்டு பார்த்தாள்!!

 

எங்கும் பசுமையாக இருக்கும் அவ்விடமும்.. பசுமையா என்னவென்று கேட்கும் நகரமும்..

 

அத்தனை அத்தனை வித்தியாசம்!! 

அத்தனை அத்தனை வலிகள்!!

 

இன்னும் கணவனுடன் அத்தனை அந்நியோன்யம் இல்லை!! உடலால் எத்தனை நெருங்கி இருந்தாலும் மனத்தால் விலகியே.. அரேஞ்ச் மேரேஜ் என்றால் அப்படிதானே.. மெல்ல மெல்ல தான் புரிதலும் புரிந்துணர்வும் வரும். மெல்ல வரும் புரிதல் சற்று ஆழமான அஸ்திவாரத்தை இடவும் வாய்ப்பு உண்டு!! விவாகரத்துக்காக கோர்ட் படி ஏறுவதை தடுப்பதும் உண்டு!!

 

ஒரு விஷயத்தை பெண்கள் மனதால் உணர்வால் புரிந்துக் கொண்டால்.. ஆண்களோ அது அறிவால் பிரித்தறிவார்கள்!!

 

இங்கே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு இல்லை.. அறிவுக்கும் மனதுக்குமான புரிந்துணர்வு!!

 

தனக்குள்ளே ஏதே ஏதோ நினைவுகளை அசைப்போட்டப்படி நின்றிருந்தவளை பின்னிருந்து அணைத்தது இரு வலிய கரங்கள்!!

 

“மேகி…!!” என்று ஆசை அழைப்போடு அவள் பின்கழுத்தில் தன் ஈர இதழ்களை பதித்தான் கார்த்திக் நச்சென்று!!

 

மேகலை.. மணி எல்லாம் சென்று இவள் இப்போது மேகி ஆகியிருந்தாள். 

 

கணவனின் அணைப்பில் மேகலையின் கை பூனை முடிகள் கூட சிலிர்த்து இருக்க.. அவனின் முத்தத்தில் உணர்வுகள் பொங்க நின்றிருந்தாள் பெண்!!

 

“மாமா.. பால்கனிங்.. யாராவது பார்க்க போறாங்க?” என்றாள் மெல்லிய குரலில்..

 

கார்த்திக் அவளை எதிரே இருந்த சுவற்றில் சாய்த்தான். இருள் கவ்வி இருந்த நேரம்.. இப்போது யார் கண்களுக்கும் தெரியாமல்!!

 

கார்த்திக் தன் கூர் பார்வையால் அவள் உடலைத் துளைத்தெடுக்க, அவள் நின்றபடி தவியாய் தவித்தாள். அவள் தவிப்பை ரசித்தப்படி… “இரு.. ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வரேன்”

மெதுவாக விலகி சென்றான்.

 

குளியலறையில் இருந்து தலையை துவட்டியப்படி வந்த கார்த்திக்கின் பரந்து விரிந்த திண்ணிய மார்பும்.. அதில் கருகருவென்று இருக்கும் சுருள் முடிகளும்.. கட்டு கட்டான சிக்ஸ் பேக்கும்… முட்டி மேல் வரை இருக்கும் ஷார்ட்ஸூம்… தேக்கு மரத்தை ஒத்த கால்களும்… அவனை கந்தவர்வனாய் காட்ட.. காரிகையின் மனதினை கொள்ளை கொண்டான்!!

 

அழுத்தமான நடையோடு அவன் மேகலையை நெருங்க நெருங்க, அவளின் விழிகள் அகண்டு விரிந்தது. அவளின் திமிறிய மென்மைகள் இரண்டும் இனிய படப்படப்பில் ஏறி இறங்க, இதழில் பதித்த டீ கப்பை எடுக்க மறந்திருந்தாள் நங்கை!!

 

டீ கப்புக்குள் அவளின் மூச்சு காற்று பாய.. அனலாய் கொதித்தது குளிர்ந்து போக.. அவ்வனல் பெண்மையின் உள்ளுக்குள் இடம் மாறியது… அவளது இதயமோ தடம் மாறியது!!

 

“ஏனுங்.. மாமா.. எதுங்கிந்த பார்வைங்” என்றவளின் 

ஆழ் மனது படப்படக்க.. 

கைகள் நடுக்கத்தில் தடதடக்க.. 

இதயமோ லப்டப்.. லப்டப் துடிதுடிக்க..

பெண்ணவளின் இமைகளோ பட்டாம்பூச்சி சிறகாய் விரிந்து விழிதனை மூடிக் கொண்டது.. பாந்தமாய்!!

 

மேகலையை நெருங்கிய கார்த்திக் அவளின் கனிந்த கன்னத்தில் சுருண்டு விழுந்த கற்றைக் கூந்தலை தன் விரலால் விலக்க.. அவன் தீண்டலில் உடல் சிலிர்க்க இன்னும் அழுத்தமாக கண்களை மூடினாள் பாவை. 

 

அவளின் இரு கைகளுக்கிடையே இருந்த டீ கப்பை கார்த்திக் மெதுவாக பறித்து அருகில் இருந்த டேபிளில் வைத்தான். மேகலையின் இதழ்கள் முழுவதும் டீயில் நனைந்து செவ்விதழ்கள் ஈரத்தில் மிளிரியது. அவள் பயத்தில் எச்சில் முழுங்க, அதில் அவளது தொண்டைக் குழி சுருங்கி விரிந்தது.. நெஞ்சோ விம்மி எழுந்தது!!

 

இப்போது நூலிழை இடைவெளி கூட இல்லை!!

ஆயிலையவளின் உடலோடு உரசிக் கொண்டே அவன்!!

 

கார்த்திக் அவளின் இதழ்களை நெருங்க.. அவனின் சூடான மூச்சுக் காற்று அவள் முகத்தில் படர.. அவளின் சிவந்த முகம் மேலும் சிவக்க.. மேகலையின் உதடுகள் நடுங்க ஆரம்பித்தது. 

 

ஆனாலும் அசையாமல் மேகலை வடித்து வைத்த சிலை போல் நின்றாள். கார்த்திக்கின் வலது கை உயர்ந்து மேகலையின் ஈர கூந்தலை விலக்கி அவளின் பின் கழுத்துக்குள் நுழைய.. மேகலையின் ரோஜா இதழ்கள் விரிந்து, “ப்ளீஸூங் … வேணாங்… மாமா….” என்று அவள் சிணுங்கித் தவிக்க.. அவனோ “ம்ஹூம்..!!” என்று இட வலமாக தலையசைத்தான்.

 

இத்தனை நாட்களில் அவனின் ம்ஹூம் என்பதன் அர்த்தம் தெரிந்தவள்.. அடுத்து நடக்க போவதை அறிந்து நடுக்கத்தோடு அவனைப் பார்த்தாள்.

 

கார்த்திக்கின் பிடிக்குள் மேகலையின் பின் கழுத்து நசுங்க, மேகலையின் முகத்தில் வியர்வை பூக்கத் துவங்கியது. 

 

மேகலையின் மூக்கோடு தன் மூக்கை கார்த்திக் உரசி.. 

“ஆனா.. எனக்கு வேணுங்..” என்றதும், அவளின் நெஞ்சு துடிப்பு அதிகமாகி மென்மை கலசங்கள் இரண்டும் மேலும் கீழும் ஏறி இறங்கியது.

 

மேகலையின் உடலுக்குள் மோகம் மோகனமாய் கவிப்பாட.. கார்த்திக்கோ தாபம் வெடித்து கிளம்ப.. கார்த்திக் மெல்ல அவளின் தளிர் விரல்களை பற்றி தன் மார்பின் மீது படரவிட்டான்!!

 

குளித்து வந்ததில் ஈரம் மிகுந்த குளிர்ந்திருந்த அவனது மார்பில் அவளின் வெம்மையான விரல்கள் படர.. ஆணின் ஆண்மை கிளர்ந்து எழுந்தது!! அதுவும் அவனின் கருகருவென்ற சுருள் சுருளாய் சுருண்டிருந்த முடியில் அவள் விரல்கள் நளினமாய் நடனமாட.. சொல்லால் விவரிக்க முடியா அவ்வுணர்வுகளின் பிடியில் சிக்கி தவித்து மிதந்தான் கார்த்திக்!!

 

மேகலை கையை பதித்து அவனை பின்னோக்கி தள்ளினாள். ஒரு வாரமாக பெண்மை ருசி கண்ட கார்த்திக்கின் ஆண்மை.. தாபமாய் வெடித்து கிளம்ப, கார்த்திக் வேகமாக நெஞ்சை அவளை நோக்கி அழுத்தினான்.

 

அவள் விசுக்கென்று கையை விலக்கி தன் உதட்டை நெருங்கிய கார்த்திக்கின் முகத்தில் பதித்து தடுத்தாள். மேகலையின் மென்மைகள் அவன் திண்மையோடு மோதி பார்க்க.. என்ன அதிசயம் இங்கே திண்மை முயங்கி போனது!

 

மேகலையின் உள்ளங்கையில் கார்த்திக் “இச்….” என்று அழுத்தி முத்தமிட.. அவன் உதட்டின் சீண்டலில்.. கற்றை மீசையின் உரசலில்.. அவள் உடல் கிருகிருத்து விறைக்க ஆரம்பித்து.

 

“மேகி…. !!”

 

அவள் நெஞ்சம் ஏறி இறங்க.. “ம்ம்ம்ம்ம்….” என்று அவள் சிணுங்கி தவிக்க..

 

“ப்ளீஸ் டீ…. ” என்று கார்த்திக் அவளின் உள்ளங்கையை கடித்தான்.

 

“ஆஆஆ……” என்று மேகலை வாயைத் திறக்க.. கார்த்திக் அவளின் இரு கைகளையும் கொத்தாக சேர்த்து பிடித்து, மின்னல் வேகத்தில் மேகலையின் உதட்டைக் அழுத்தி முத்தமிட்டான்!!

 

மேகலை மூச்சை உள் இழுப்பதை நிறுத்தினாள். அவளின் கண்கள் அதிர்ச்சியில் அகண்டு விரிந்தது. கார்த்திக் இப்போது மேகலையின் மேல் உதட்டைக் கவ்வினான்.

 

கார்த்திக்கின் பிடிக்குள் அவள் உடல் திமிற.. அவள் உடல் வியர்வையில் நனைய துவங்கியது. விசுக்கென்று கார்த்திக்கின் பிடியில் இருந்து அவள் நழுவி, கைகளால் முகத்தை மூடி சுவற்று பக்கம் திரும்பி நின்றாள்.

 

இத்தனை நாட்களில் ஏனோ இப்படி காணும் இடத்தில் காமம் கொள்ள பெண்களுக்கு பிடித்தமில்லை!! அதை அழுத்தமாக அவனிடம் உரைக்க அவளுக்கு துணிவு இல்லை!!

 

வார்த்தையின் பொருள் மாறிவிட்டால் இருவருக்குமே சங்கடம்!! அல்லவா? அதனால் அதனை தனது செய்கை கொண்டு புரிய வைக்க முயன்றாள் மேகலை!!

 

ஆனால் கார்த்திக்கோ தின்று கொண்டிருந்த மிட்டாயை பிடுங்கிய குழந்தையின் நிலையில் இருந்தானே ஒழிய.. அவளை புரிந்து கொள்ளும் எண்ணம் இல்லை!! நேரமும் இல்லை!! 

 

கல்யாணத்திற்கு என்று எடுத்திருந்த 15 நாட்களுக்குமான வேலையை சேர்த்து அவன் பார்க்க.. முழுக்க முழுக்க புத்தியில் வேலை பற்றியே எண்ணங்களை சுழன்று கொண்டிருந்தது!! 

 

இப்படி ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு வந்தது வீட்டுக்குள் நுழைந்தால் மட்டுமே ஞாபகத்தில் இருந்தது அவனுக்கு!! மொத்தமாக அவனது நேரங்களை சுருட்டி இருந்தது 2கே கன்சல்டன்சியும் ரெயின்போ எஃப்எம்மும்!!

 

என்ன செய்வது ஆண்களின் மூளையின் வடிவம் வந்து அப்படித்தான்!! எமோஷன் ஃபேமிலி லவ் எல்லோர்க்கும் அடுத்ததாக இடம்.. முதலில் பிடித்துக் கொள்வதோ வேலை!! வேலை!! வேலை!!

 

அதையும் மீறி அவர்களுக்கு வரும் எமோஷனை காட்டுவது படுக்கையில் தான்!! பாவம்.. அவர்களுக்கு அப்படித்தான் அவர்களது அன்பை காதலை காட்டத் தெரிகிறது.. மனைவியை சமாதானப்படுத்த.. 

 

அதுவே பிள்ளைகள் என்றால் அவர்களுக்கு பிடித்த பொருளை வாங்கி கொடுத்தால் போதும்;! அவர்களை அப்பாவின் தேடுதல் அந்த நேரத்தில் குறையும் என்று எண்ணம்!! 

 

அந்நேரம் குறையுமே தவிர ஆழ் மனதில் அது பதிந்திருக்கும் என்றெல்லாம் அவர்கள் எண்ணுவதில்லை!! யாருக்காக உழைக்கிறேன்? யாருக்காக ஓடுகிறேன்! எல்லாம் இவர்களுக்கு தானே என்ற எண்ணமும் கூட!!

அது கொடுத்த தவறான புரிதலை தாண்டி.. பணத்தை தாண்டி.. தனக்காகவும் தன்னுடைய அணைப்பிற்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் உள்ளங்களை புரிந்து கொள்வது ஒரு சில ஆண்களே!!

 

அட விடுங்க பாஸ்… இந்த ஆண்களே இப்படிதான்!!

 

கார்த்திக்கிடம் இருந்து மேகலை விலகி விலகி செல்ல.. அவன் இரத்த நாளங்கள் காமத்தால் வெடித்து சிதறியது. மேகலையின் பாதி கூந்தல் முன் மார்பிலும், மீதி கூந்தல் அவள் பின் முதுகிலும் பரவி விரவி கிடக்க.. தோகையவளை விழிகளால் அளந்தான்!!

 

“ஸ்ஸ்ஸப்பா” பல்லவன் வடித்த சிற்பத்தை போலவே அவளது உடல்.. இடை மெலிந்து.. தனங்கள் பெருத்த மேகலையின் பள்ள மேடுகள் கார்த்திக்கை கிறங்கடித்தது. அவன் மேகலையை மீண்டும் நெருங்க, குளத்து மீன் போல் அவள் நழுவி சுவற்றின் மூலையில் மாட்டிக் கொள்ள, கார்த்திக் “மாட்னியா?” என்று மனதிற்குள் சிரித்த படி.. இரு கரங்கள் கொண்டு இருப்பக்கமும் சிறைப்பிடித்தான்!!

 

அவளை பின்புறமாக அணைத்து தன் தேவையை அவன் உணர்த்த.. அவள் உடல் ஷாக் அடித்தது போல் விறைக்க.. கார்த்திக் அவளின் இடையில் கையை நுழைத்து அவளின் வயிற்றை அழுத்திப் பிடித்தான்!!

 

அதற்கு மேல் பெண்ணவளும் எங்கணம் அவனுக்கு மறுக்க.. அவனிடம் மறைக்க.. இதுவே பெண்களின் நிதர்சன வாழ்க்கை!!

 

அவளை சுகித்து.. அவளையும் சுகிக்க வைத்து கலவியில் களித்து களைத்தான் கார்த்திக்!! மேகலையையும் கலைத்திருந்தான்.. பால்கனியே பஞ்சு மெத்தையாய் பாவித்து!!

 

“பெல்லு… நித்தமும் என் கூட நீ வேண்டுமடி!!” என்று நெற்றி முத்தத்தோடு பிரிந்து படுத்தவன், அங்கே முன்னிறுத்தியது உடல் தேவையை என்று எண்ணிக் கொண்டாள் பெண்!!

 

மனதினை தெளிவாக உரைக்காத காரணத்தினால்.. பின்னாளில் அவளிடம் மொத்தமாக வாங்கி கட்டப் போகிறோம் என்று அறியாமல் சந்தோசமான.. இதமான.. மனநிலையில் உறங்கினான் கார்த்திக்!!

 

ஆனால் அந்த சந்தோசம் எல்லாம் மறுநாள் மீட்டிங்கில் வந்த ஒற்றை ஃபோன் காலில் பறந்து போக… அவளைத் தேடிக் கொண்டு காரில் பறந்தான் கார்த்திக்!!

 

“யூ.. யூ… உன்னோட ஒரே கஷ்டமடி!” என்று ஸ்டேயரிங்கில் கை முஷ்டியால் வேகமாக குத்தியவாறு!!

 

இஷ்டமாகுமா???

2 thoughts on “நீ நீ நீ என்னோட இஷ்டம்… 12”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top