காதல் கனிச்சாறே… நிறையே…
1.
“ப்ளார் ப்ளார்…!” என நடு ரோட்டில் வைத்து ஒரு ஆணை அதுவும் மலைமாடு மாதிரி வளர்ந்தவனை ஒரு பெண் அதுவும் சிறு பெண் அடிப்பதை வேடிக்கை பார்த்தது ஜனக் கூட்டம்…
“ஏய்ய்ய் *தா அடிங்க யார் மேல கை வைக்கிற … வாங்கியவன் சும்மா இருப்பானா…?? நாக்கை மடித்து கொண்டு கையிலியை ஏத்தி கட்டி கோதாவில் இறங்கிய சமையம்…
” கனி இந்த ரோட் சைடு ரோக்ஸ் கூட நமக்கு எதுக்கு பிரச்சனை வா போலாம் என இருவருக்கும் இடையில் புகுந்த ஸ்கோர் பண்ணான் பாய் பெஸ்ட்டி ஹர்ஷா… கடஞ்செடுத்த அயோக்கியன் ஆனால் அது அவளுக்கு தெரியாதே…
“விடு ஹர்ஷா நானும் பார்த்துக்கிட்டே தான் இருக்கேன்… இந்த பொறுக்கிக்கு இதே வேலையா போச்சு… தட்டிக் கேட்க ஆள் இல்லை என்கிற திமிரல்ல ஆடிட்டு இருக்கான்… இவனை நிக்க வச்ச நாலு போடு போட்டா தான் அடங்குவான் இல்ல… விடு விடு ஹர்ஷா…!!”இழுக்க இழுக்க வீரியம் கூடியது
அதற்குள் அங்கு ஒரு சலம்பல்… “அடிங்க **** மவளே நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் இந்த *** மவ நம்ம வழில கிராஸ் பண்ணிகிட்டே இருக்கா மச்சி விடு மச்சி… இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாக்காம விட மாட்டேன்…விடுடா *** பயலே அவன் அகராதியில் உள்ள நல்ல வார்த்தையால் அவன் நெஞ்சின் உடே கையை போட்டு தடுத்துக் கொண்டிருக்கும் அவனின் பாலிய நண்பன் மாரியை கேட்டான் …
அவனும் அதே குட்டையில் ஊறிய மட்டை தானாம்…
“***த்தா சும்மா கிடந்து குதிக்காதடா *** பயலே… இப்போ தான் ஜெயில்ல இருந்து ரீலீஸ் ஆகினு கிற நீ காட்டியும் அந்த பொண்ணு மேல கை வச்சிக்கிண மறுபடியும் தொகுக்கா தூக்கி உன்னை உள்ள போட்ருவாங்கடா செத்த நேரம் கம்மினு கிட எழவா கூட்டாத கஸ்மாலாம் அப்பாலிக்கா பார்த்துகீலாம் டா…வாடா…!!” என தனது ஜிகிரி தோஸ்த் குணாவை தடுத்து தங்கினான்…
****
சில மாதங்களுக்கு முன்பு கனி அந்த பிரபலமான ஷாப்பிங் மாலில் தன் தேவையை தான்டி ஆடம்பர பார்ட்டிக்கு ஆடை வாங்க வந்து இருந்தாள்…வார்டுரோப் முழுக்க இருந்தாலும் பெண்களுக்கு உடுத்த ஒன்றுமே இல்லையாம்…ஆண்களுக்கு ஒரு மாதத்திற்கும் ஒரே ஃபேண்ட் தான்…நான் சொல்லல ஆய்வு சொல்லுது ஈஈ…
வர்க்க மக்கள் வைக்கணையாக செலவு செய்யவே வாரி இறைத்து கட்டிய காம்ப்ளக்ஸ்… பார்த்து இடமெல்லாம் கொழிப்பு தெரிந்தது…
சற்றும் பொறந்தாத குணாவும் மாரியும் மூடை கெடுத்தார்கள்… நுனி நகத்தில் கூட அழுக்கை விரும்பாத மேல் வர்க்கம் அன்றோ… வெயிலில் வேர்த்து நலுங்கிய ஆடையில் இருப்பவர்களை கண்டால் எங்கிருந்து தான் வருமோ இந்த இளப்ப பார்வை…
ஓசி ஏசிக்காக வந்துடுதுங்க என ஏளனமாக நினைத்து கொண்டு கடந்தவள்… கை நிறைய பையுடன் திரும்பினால்… பர்ஸ் போச்சா…
வாங்க நினைத்தது ஒன்று ஆனால் பார்த்தது பிடித்தது அள்ளி வந்தது நூறு…
சுமக்க முடியாமல் தன் டிரைவரை திட்டி கொண்டே வந்தவளை தடுத்தது அந்த அறை சத்தம் ப்ளார்… என கேட்க திரும்பி பார்த்தவள் அங்கு அந்த ஓசி பீஸ் ஒரு பெண்ணை அறைந்து இருந்தான்…
” என்ன ஒரு திமிர்…!!”கையில் பை இல்லை அவனை அங்கேயே பதம் பார்த்து இருப்பாள்…தப்பினான் அவள் பார்வையில் தான் பலசாலி…
இரவுக்குள் இன்னொரு உலகம் பப் பார்ட்டி என இளசுகளின் உலகம் சொன்னால் புரியாது அனுபவம்…
பார்ட்டி முடித்து கொண்டு கார் கடற்கரையை தாண்டி செல்லும் போது நாலு ஐந்து ரவுடிக்குள் சண்டை… அதில் தெரிந்த தலை மாலில் பார்த்த மடையன் ஒத்தை ஆளாக அனைவரையும் பந்தாடி கொண்டு இருந்தான்…அப்பவும் அவன் பலம் அவளுக்கு தெரியல…
விசாரித்ததில் பெண்ணுக்காக சண்டையாம் அதுவும் கழிசடை விலைமகளிருக்காக… த்து நாய்… இன்னைக்கு போதை அதிகம் ஆகிடுச்சு இல்லை ஹக்கு இறங்கி செஞ்சு விட்ருப்பேன் பொழச்சு போ என்றவளுக்கு பெரிய மனசு தான்… நோ சிங்கிள் மீனிங்…ஹாஹா
இன்று ஒரு ஃப்ரெண்ட்ஸ் மீட் அவசரம் அவசரமாக கிளம்பி வந்தால் அதே கடற்கரை சாலை நெரிசல் கடுப்புடன் இறங்கி பார்க்க…
அதே பொறம்போக்கு ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தான்…
இவனை பிளாடி **** என்ன நினைச்சிட்டு இருக்கான் இந்த பொறுக்கி அன்னைக்கு ஒரு பொண்ணை அடிச்சான் இன்னைக்கு ஒரு பொண்ணை ரோட்ல வச்சி அடிக்க பாய்றான்…மற்றோரு நாள் ****காக சண்டை போட்டான் இவனை இப்படியே விட கூடாது பொண்ணுனா என்ன நினைச்சிட்டு இருக்கான்…??
பெண் குலத்துக்கே பிரதிநிதியாக அவளே தன்னை முன்னிறுத்தி கொண்டாள் போல… களத்தில் இறங்கி அறைந்து இருந்தாள்… ஆள் யார் என்ன பிரச்சனை எதுவும் விசாரிக்கல தானே தீர்ப்பு வழங்கிட்டா பெண் புத்தி…நோ ஆஃபன்ஸ்
அவன் ஒன்றும் சாதாரணப்பட்டவன் அல்ல… சுற்றி இருக்கும் பதினேழு குப்பத்திற்கும் ராஜா சுயம்பு போல் அவனே உருவாக்கிய சாம்ராஜ்யம்…
வங்க கரையில் வளரந்தவன்…
கடலின் ஆழம் கண்டவன்…
உப்பு காற்றில் உயிர் வாழும்
கடல் காதலன்…
கரையில் வாழும் சுறா எதிரிகளுக்கு…
அறிந்தவர்கள் அவனுக்கு வைத்த பெயர் கடல் ராஜா…
மொத்தம் நாற்பது கேஸ் அவன் மீது இருக்கு அவன் கிரிமினல் வரலாறு தெரியாது கிடந்து தொகுறினாள் கெண்டை…
அவள் நுனி நாக்கில் ஆங்கிலம் ஆடும் அதி நவீன யுவதி… இவன் தர லோக்கல்… எப்படி பார்த்தாலும் பொருந்தாத கேஸ்…
எதிரியதி துருவங்கள் ஈர்க்கப்படுவது விதியாம்…!!
இங்கு உடன்படுமா முரண்…!!
முதல் கோணல் முற்றிலும் கோணல்…நேர் செய்ய நேரம் உண்டே…
ஹாய் குலாபோ சில தோழிகள் என் நடை அதான் ரொமான்ஸ் பிடிக்கலயாம் உள் பெட்டியில் குமுறல்… உங்களுக்கு எப்படி…?? அதை பற்றி உங்கள் கருத்தை எதிர்நோக்கி நான் உங்கள் துருவ் 💘💘
Very nice 👍
Thanks gulabo
Super 👌
Thanks குலாபோ
Pidikkalena padikka vendamnu sollunga
Why angry ma
👌Super start💜
Thanks gulabo