இஷ்டம் – 22
கார்த்திக் சொன்னது போலவே மேகலையின் உறவு கூட்டங்கள் அவனை பிடித்து தான் வைத்திருந்தனர்.
என்ன இருந்தாலும் தாங்கள் அன்று அப்படி நடந்திருக்க கூடாது.. செய்திருக்க கூடாது.. நின்றிருக்க கூடாது.. அத்தனை கூடாது போட்டு, மன்னிப்பு படலம் இல்லை மன்னிப்பு புராணமாய் நீண்டு கொண்டே சென்றது.
இதில் இளவட்டங்கள் எல்லாம் அவனோடு சேர்ந்து கொண்டு “இந்த ஓல்டுஸுக்கு அறிவே இல்லிங் மச்சான்.. அண்ணா.. தம்பி” என்று ஒவ்வொரு உறவு முறை சொல்லி அவனோடு சேர்ந்து இதுதான் சாக்கு என்று அவர்களை சாட… கார்த்திக் சிரித்து முகமாகவே அமர்ந்திருந்தான்.
ஆனால் அந்த முகத்திற்கு பின்னே “போதும்டா.. விடுங்கடா என்னை!! வலிக்குது, என் பெண்டாட்டிய பாரக்கணும் டா!” என்று வடிவேல் மைண்ட் வாய்ஸோடு!!
அவ்வப்போது மேகலையும் அவன் கண் படவே சுற்றிக் கொண்டிருந்தாள் வந்தவர்களை கவனிக்க என்று… ஆனால் அவளின் உள்ள அர்த்தம் தெரியாதா அவனுக்கு??
தலைக்கு ஊற்றி நீண்ட கூந்தலை கோடாலி முடிச்சிட்டு.. நடுவில் நெருக்கி கட்டிய மல்லிகை சரம் இருப்பக்கமும் வழிந்தாட… காதோரம் முடிக்கற்றைகள் காற்றில் அசைந்தாடி காவியம் பாட…
பெரிய ஜிமிக்கயோ அவள் கன்னத்தோடு உறவாட…
அழகிய இளமை செழுமைகள்
அவனின் உணர்ச்சிகளுக்கு தூபம் போட… அந்த இழுத்து சொருகிய முந்தானை இசைந்தாட…
என்று அவனை அவளுள் முழுவதுமாக நிரப்பிக் கொண்டிருந்தாள்!!
கைக்கு அருகில் மனைவி… ஆனால் காரத்திக்கால் அவளை நெருங்க என்ன பார்க்க கூட விட மாட்டேன் என்றார்கள் சொந்த பந்தங்கள்!!
இவன் மணி.. இல்லை மேகலை என்று அழைத்தாலே…
“ஏனுங் மாமா?” என்று ஆண் குரலில் சத்தம் கேட்க.. திரும்பி பார்த்தால் மேகலையின் தம்பி ஒருவன் நின்றிருப்பான்… அலாவுதீனின் ஜீனி பூதமாய் ‘உங்கள் அடிமை ஆலம்பலா’ என்று!!
மற்றவர்களோ அவன் சொல்வதை நிறைவேற்றுவது தங்கள் சித்தம் என்பது போலவே நிற்க.. இவனோ அழுத்தமாக வாயை மூடிக்கொண்டான், பிறகு எங்கு பொண்டாட்டியை கூப்பிட?? கண்களை கூட அவள் மீது பார்க் பண்ண பயப்பட்டான் கட்டியவன்!!
ஒரு சமயம் அவளாகவே வந்து அனைவருக்கும் இஞ்சி டீ கொடுத்து செல்ல…
அந்த வியர்வையில் பளப்பளத்த அவளது மெல்லிடையும்.. அவ்வப்போது அவள் ஈரப்படுத்தி கொள்ளும் அவளது மாதுளை இதழ்களும்… அவனை சதிராட அழைத்தன!!
“பொறுமை.. பொறுமை.. பொறுமைக்கெல்லாம் பொறுமை!!” என்று சிஞ்சான் நிலையில் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான் கார்த்திக்!!
காலையிலேயே போதை தெளிந்ததும் பசுபதி கிருஷ்ணகுமாருக்கு சொல்லிவிட அவரும் மகிழ்ந்து கொண்டார் ஆனால் தங்களால் இப்பொழுது வர முடியாது. நீங்க பொண்ணு மாப்பிள்ளை பார்த்துக்கோங்க என்று அவர் வைத்துவிட.. நேரம் கிடைக்கும் போது வாங்க என்று அழைப்பை விடுத்து விட்டு இங்கே கவனிக்கலானார்.
பசுபதி மதிய விருந்தை தடபுடல் ஆக்கினர்.
மதிய சாப்பாட்டுக்கு வாங்க என்று அழைத்ததுமே ஜெர்க்கானான் கார்த்திக்!!
‘இன்று எத்தனை பதார்த்தங்கள் க்யூவில் நிக்குதோ?’ நடுக்கத்தோடு தான் இவன் பந்தியில் அமர்ந்தான்.
இவன் சாப்பிட்ட அதே கோழி ஆடு மீன் கறி வகைகள் தான்… ஆனால் இவர்கள் அதற்கு வாயில் நுழையாத பெயர்கள் ஏன் அவன் தெரிந்து கூட இருக்காத பெயர்களை எல்லாம் அதற்கு சூட்டி.. அதை இவனின் தலைவாழை இலையில் வைத்து அவர்கள் சொல்ல.. சொல்ல.. வெறும் தலையாட்டலோடு தலைகறியை உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்தான்.
“கொஞ்சம் போதும்! கொஞ்சம் போதும்!” என்று கெஞ்சாத குறையாக அவனது வார்த்தைகள் தான் அதிகம்!!
ஆண்கள் சாப்பிட்டதும் மதிய உணவிற்கு பெண்கள் அமர… அவர்களுக்கு ஆண்கள் பரிமாற…
என்று பேச்சும் சிரிப்புமாய் செல்ல… சாப்பிட்டு கை கழுவ வந்த மேகலையை ஒரு முரட்டு கரம் திடீரென்று வாயை இறுக்க பொத்த.. அவள் பயந்து அலற முடியாமல் நிற்க… அவள் திமிற திமிற தோளில் தூக்கி போட்டு கொண்டு ஓடியது அந்த நெடிய உருவம்!!
தோட்ட வீட்டின் முற்றத்தில் நின்றிருந்தது அந்த உருவம்!!
அந்த நெடிய உருவம்… கார்த்திக் இன்றி வேற யாராக இருக்கும்???
கணவனை முறைத்துக் கொண்டிருந்தாள் மேகலை இடுப்பில் கை வைத்து…
“என்னங் மாமா இதெல்லாம்?” என்று கேட்க…
“வேற என்னடி பண்ண சொல்லுற?”
நொடி கூட தவிப்பைத் தாங்க முடியாமல்.. தாவி வந்து அவளை இருக்கிக்கொண்டு அவள் உச்சியில் முத்தம் கொடுத்தான். ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை ஒரு நெற்றி முத்தம் தந்துவிடும்!!
இருவரும் அணைத்த நிலையில் கட்டுண்டு நிற்க… வெகு நாளைக்கு பின்னான மனைவியின் ஸ்பரிசம்… அவள் வாசத்தை..
அவள் மணத்தை..
அவள் மென்மையை…
உணர்ந்தப்படி நின்றான் கார்த்திக்!!
ஒரு மாத பிரிவு.. ஒரு ஜென்மமாய் தோன்றியது இருவருக்கும்.
அதிலும் கார்த்திக் தவியாய் தவித்து போனான் என்பதே நிதர்சனம்!!
ஒருமுறை ஒரே ஒரு முறை அவள் முகம் காண வேண்டும்..
அவன் பேசியவற்றுக்கு அவள் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்க வேண்டும்..
அவளை கட்டித்தழுவிட வேண்டும்.. கண்ணோடு கண் கலந்து காதல் கொள்ள வேண்டும்.. நடக்குமா? இழந்த இன்பங்கள் கிடைக்குமா? அனுபவித்து அறிந்த தருணங்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்குமா? ஒருமுறை போதுமா… ஏக்கம் தீருமா? நிச்சயம் போதாது!!
ஜென்ம ஜென்மங்களாய் தீராத இந்த ஏக்கம்!!
இது காதல் ஏக்கம்!!
அனைத்தும் கானல் நீராய் கரைந்து போக… இதோ கரத்தினுள் கட்டியவள்!!
இது.. இது.. இத்தருணம் தான் வேண்டும்!!
இவள்.. இவள்.. இவள் மட்டும் தான் வேண்டும்!!
அவளது கழுத்தில் புதைத்திருந்த அவன் முகத்தை மெல்ல மெல்ல மேலேற்றினான்.
அவளது கழுத்தில் கடித்து..
அவள் தாடையில் பயணித்து.. கன்னத்தில் நாக்கால் கோலமிட்டு.. இதழ்களை கடித்து உறிஞ்சினான்..!!
அவன் நெஞ்சில் தேங்கிக்கிடந்த.. அவள் மீதான.. அன்பு.. காதல்.. நேசம்.. காமம்.. மோகம்.. எல்லாம் அணை உடைந்த வெள்ளமெனப் பொங்கிப் பெருகி வர… அவள் முகமெங்கும் முத்த மழையாகப் பொழியத் தொடங்கினான் கார்த்திக்!!
அவள் மீது அவனுக்கிருந்த பிடிக்காத காரணங்கள் எல்லாம் காணாமல் போயின..
அவனுக்குள் புரையோடிப் போயிருந்த அனைத்தும் அவனது காதல் இப்போது வென்றது..!!
அவனது சித்தம் முழுவதும்.. பித்தம் ஏறிப்போயிருக்க.. இப்போதைய அவனது ஒரே உணர்வு.. அவள் வேண்டும் என்பதாக இருந்தது..!!
அதேபோல அவனால் புறக்கணிக்கப் பட்டுக்கொண்டிருந்த.. ஏங்கிப் போயிருந்த.. மேகலையின் பெண்மை இப்போது நந்தவனத்தில் பூத்த பூவென மலர்ந்து நறுமணம் பரப்பியது!!
காதல் நிறைந்த இரண்டு உள்ளங்களும் பிரிவாலும்.. விதியாலும்.. அடக்கி வைத்திருந்த தங்கள் இணையின் மீதான உள்ளக்கிடக்கையை தயக்கமின்றி வெளிப்படுத்தின!!
இது வெறும் காமத்தின் தேவையோ மோகத்தின் தேவையோ.. உடல் சார்ந்த தேவையோ அல்ல!!
இருவரது உள்ளத்தில் பொதிந்து கிடந்த..
அன்பின் தேடல்!!
ஆசையின் தடவல்!!
காதலின் தீண்டல்!!
நேசத்தின் சீண்டல்!!
உதடுகளும்.. உதடுகளும் சந்தித்துக்கொண்ட போது..
இரண்டு இதயங்களுமே உருகிக் கரைந்து விட்டன!!
இருவரின் இதயத் தவிப்பும் ஒரே நேரத்தில் பொங்கி எழுந்து.. இருவரின் உணர்வகளையும், இடம் மாற்றிக் கொள்ளத் தவித்தது..!!
எவ்வளவோ முறை அவளை முத்தமிட்டிருக்கிறான் கார்த்திக்!!
ஆனால் இது போல இதயம் காதலில் உருகி.. அவளை இனி இழந்து விட கூடாது கலந்துவிடத் தவிக்கும்..
ஒரு ஆழ்ந்த முத்த அனுபவத்தை.. அவன் வேறு எப்போதும் உணர்ந்ததில்லை!! இனி உணரப்போவதுமில்லை!!
ஆம்.. இனி பிரிவு இருந்தால்தானே??!!
பெண்ணவளின் பெண்மைக்குள் தொலைந்து விடவே விரும்பினான்.
ஒரு சிறு பனித்துளியாகி அவளுக்குள் உருகிக் கரைந்து… அப்படியே காணாமல் போய் விடவேண்டும்!!
ஒரு பெரும் மழைத்துளி மண்ணில் விழுந்து கிரகிப்பது போல அவளுள் கிரகித்துப் போய் விட வேண்டும்!!
சிறு தென்றலாய் அவளுள் எப்போதும் நிரம்பி இருக்க வேண்டும்!!
இந்தப் பிறவியின் இழிநிலை இத்துடன் நிறைவு பெற்றுவிட வேண்டும் என்கிற ஆழமான ஒரு இதயத் தவிப்பை உணர்ந்தான் கார்த்திக்!! அந்தத் தவிப்பின்.. வெளிப்பாடாய் மேகலையின் உதடுகளைக் கடித்துக் குதறுவது போல உறிஞ்சிச் சுவைத்தான்!!
அவனது ஏக்கமும்.. தவிப்பும்.. மிக ஆழமாக அவளுக்குள் பாய.. அவனைத் தழுவிக்கொண்டு.. கண்மூடிக் கிறங்கிக் கிடந்தாள் மேகலை!!
அணங்கவளை முற்றும் முழுதாக தனக்குள் வாங்கி மோக முத்தங்களை அவளுக்கு பரிசளித்து அவள் பெண்மையை சிறிதாக சிறிதாக மலர செய்தான். மெல்ல மெல்ல விரல்களால் அவளை மீட்ட தொடங்கினான். இடையில் விளையாடிய அவன் விரல்கள் நாபி குழியில் சரசம் செய்ய கிளர்ந்தெழுந்தாள் மேகலை…
அவன் விரல்கள் அவளது உடலில் முன்னேற அவன் அதரங்களோ அவ்விரல்களைப் பின்தொடர்ந்து செல்ல அங்கே அழகிய கூடல் தொடங்கியது.
அவனின் மூச்சு காற்று வெப்பத்தில் மேகலை கண்கள் தானாய் மூட.. தாகத்தைத் தீர்க்க வேகம் கொண்டவனின் மோகத்தை மிக லாவகமாக கையாண்டு அவனில் தன்னை தொலைத்து, தன்னில் அவனைத் தொலைத்து.. எல்லையில்லா இன்பத்தை சுகித்துக் கொண்டிருந்தனர் அவ்விருவரும்.
மீண்டும் மீண்டும் மேகா.. மேகா.. என்று மோகம் கொண்டு வந்தவனின் ஆசைகளுக்கு வெட்கங்கள் தடை போட்டாலும் அவனை மடித்தாங்க தயங்கவில்லை பெண்!! மெல்லினமாய் தொடங்கியவன் வல்லினமாக மாறி அவள் இடைவிடாது காதல் செய்தான் கார்த்திக்!!
நாட்கள் இடைவிடாது
பெண்ணவளின் காதலிலும்…
கிருஷ்ணகுமாரின் கண்டிப்பிலும்…
பசுபதியின் மரியாதையிலும்…
மேகலை சொந்தத்தின் உற்சாக கவனிப்பதும்…
ஏகாந்தமாய் சென்றது!!
இப்போது சென்னையோடு வந்து விட்டான் கார்த்திக்!!
காரணம் ஒன்றல்ல இரண்டு!!
ஒன்று அவனின் மனைவி தான் இப்போது அவர்கள் கடைகளின் பிரதான டிசைனர்.
இரண்டு மேகலையின் கர்ப்பம்!!
ஆம் மேகலை இப்போது ஏழாம் மாதம்!! அவளை தனியே பெங்களூர் அப்பார்ட்மெண்ட்டில் இருக்க விடாமல் இங்கே சென்னைக்கு வந்து விட்டான். அதுவும் இரட்டை குழந்தைகள் என்பதால்…
அப்போ மூன்று காரணமோ???
இப்போதெல்லாம் வாரத்தில் ஒரு நாள் பெங்களூர் என்றால் இரண்டு நாள் சென்னை தான்!! இன்றும் அது போல பெங்களூரில் வேலையை முடித்துவிட்டு விடியற்காலை தான் வந்தான்.
காலை வேளையில் முடிகற்றைகள் காதோரம் படர்ந்திருக்க.. வழக்கம்போல அவற்றை காதோரம் ஒதுக்கிவிட்டு.. ஜிமிக்கியை இரு விரலால் சுண்டி விட்டு.
மேகலையின் மதி முகத்தை பார்த்தான். தாய்மை கொடுத்த பூரிப்பில் இன்னும் மிளிர்ந்தாள் பெண்!!
அவன் வந்ததும் முடிவை ஒதுக்கியதும் அவளுக்கு தெரியும். ஆனாலும் எதுவும் நடக்காதது போல் அவள் படுத்திருக்க, அவளின் கூந்தல் கலைந்து தலையணை முழுவதும் படர்ந்திருக்க, கார்த்திக் சத்தம் இல்லாமல் அவளின் கூந்தலின் வாசம் பிடித்து அதன் தலை வைத்துப் படுத்தான்.
“கண்டிப்பாக இவள் தூங்க வாய்ப்பே இல்லை.. கள்ளி!! என்று கார்த்திக் மேகலையின் கன்னத்தோடு கன்னம் உரச..
“ம்ம்ம்ம்… தூங்க விடுங் மாமா…..” என்று அவள் அனத்திய படி திரும்பிப் படுத்தாள். மேகலையின் இதழுக்கள் சிரிப்பை அடக்க முடியாமல் தலையணையை கடித்தாள். அதைக் கண்டு கொண்டவனும் இப்பொழுது இதழ்களுக்கு இம்சை கொடுத்தான் இனிமையாக!!
கார்த்திக்கின் எதிரே மேகலை அமர்ந்தாள். கிருஷ்ணகுமார் வழக்கம் போல காலையில் கடைக்கு சென்று விட்டார். மூன்று பேரும் மௌனமாக சாப்பிட்டு கொண்டிருக்க.. மேகலையின் உடல் விறைத்து அவள் நெளிந்தாள். சாப்பிட முடியாமல் தவிக்க..
“மேகி.. என்ன இன்னும் சாப்பாட்டை கோதிக்கிட்டே இருக்க சீக்கிரம் சாப்பிடு!” என்றார் பாமா.
கார்த்திக் மேகலையை பார்த்தப்படி இதழுக்குள் சிரிக்க, மேகலை கார்த்திக்கை முறைத்தாள்.
“மாமா… கால எடுங்…” என்று சொல்ல முடியாமல் அவள் தவிக்க, டைனிங் டேபிளுக்கு கீழே கார்த்திக்கின் வலது கால் மேகலையின் விரலை சுரண்டியப்படி இருந்தது, அவனுடைய பாதம் அவளின் கெண்ட காலை அழுத்தி கொண்டிருக்க.. வெளியே சொல்ல முடியாமல் மேகலை தவித்து கொண்டிருந்தாள்.
நேரம் செல்ல செல்ல கார்த்திக்கின் கட்டை விரல் மேகலையின் புடவையை சற்றே விலக்கி காலை வருட.. மேகலையின் உடலில் உதறல் எடுக்க ஆரம்பித்தது. வியர்த்து கொட்ட துவங்கியது. கார்த்திக் வேக வேகமாக மேகலையின் காலை உரச உரச.. உதட்டை கடித்த மேகலை, விசுக்கென்று எழுந்தவள் கார்த்திக்கின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“அப்படி வா வழிக்கு!! என்றவன் அதன்பின் அவளுக்கு ஊட்டி விட.. பாமாவோ சிரிப்போடு எழுந்து சமையலறைக்கு சென்று விட்டார்.
“அப்பவே கூப்பிட்டா வரமாட்டியா நீ? இப்ப பாரு எப்படி வர வைச்சேன்!” என்று அவன் சிரித்து கண்ணடிக்க..
“வரவர நான் பண்ற குறும்பு அலும்பெல்லாம் ஒண்ணுமே இல்லை என்கிற மாதிரி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க மாமோய் நீங்க..” என்று அவன் பூஜையில் முகத்தை முட்டியப்படி சொன்னாள் மாது!!
“பிடிக்கலையா?” என்றான் வழக்கம் போல அவள் காது ஜிமிக்கியை உதட்டால் உரசிய படி..
“சாதாரணமா பிடிக்கலிங் மாமா!!” என்றதும் அதிர்ந்தவன், “ரொம்ப ரொம்ப பிடிக்குங் மாமா..” இருக்கையையும் சிறுபிள்ளை போல கைகளை விரித்து கூற.. அத்தனை நிறைவு சந்தோஷம் கார்த்தியின் முகத்தில்.
நாட்கள் செல்ல.. வளைகாப்பு போட்டு பேருக்கு ஒரு வாரம் மட்டுமே மனைவியை கருமத்தம்பட்டியில் விட்டவன், அதன்பின் சென்னைக்கு அழைத்து வந்து விட்டான்!!
முணுமுணுத்த ஜனங்களை பார்த்து “ஏன் அங்க வந்து உங்களால உங்க வீட்டு பொண்ண பாத்துக்க முடியாதோ?” என்று அவன் கேட்ட கேள்வியில் ரோசமும் பாசமும் பொங்க..
இதோ நித்தமும் ஒருவராய் ஒவ்வெரு பதார்த்தத்துடன் படை எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர் மேகலையைக் காண கருமத்தம்ப்டடியில் இருந்து…
இப்போது விழி பிதுங்கியது கார்த்திக்கு தான்!!
வந்தவர்களை என்னமோ இவன் நன்றாக கவனிக்க.. ஆனாலும் அதைவிட நன்றாக கவனித்து சென்றது அப்பாசக்கார உறவுகள்!!
அப்பத்தா கொள்ளு பேரனோ பேத்தியோ அதை காணும் வரையில் நகர மாட்டேன் என்று சென்னையில் லேண்ட் ஆகி விட்டார்!!
“மாமா..…. ப்ளீஸ் ம்ஹும்….” என்று மேகலை சிணுங்க….
”உன்னைய ஒன்னும் ரேப் பன்ன மாட்டேன்… மெதுவா கண்ண மூடு…” என்றவன், மேகலையின் சுருள் முடிக்குள் விரலை நுழைத்தான். கார்த்திக்கின் தீண்டலில் அவள் உடல் சிலிர்க்க அவள் கண்கள் மூடினாள். கார்த்திக்கின் விரல்கள் மெதுவாக அவளின் தலை பகுதி முழுதும் பரவியது. மெதுவாக அழுத்தி மாசாஜ் செய்து விட்டான். அவள் சுருள் முடியை சுற்றி கொண்டை இட்டு இருக்க, மெதுவாக அவிழ்த்து விட்டான்.
கூந்தல் தரையில் தொங்க, கார்த்திக்கின் கை விரல்கள் அவளின் காதை நெருங்கியது. காதின் நுனியில் மெதுவாக விரல்களை படர விட்டு வருடினான்.
ஜிமிக்கியை நிமிண்டினான். மெல்ல மெல்ல தூக்கம் ஆட்கொண்டது மேகலையை.. நாட்கள் நெருங்க நெருங்க அவளது தூக்கம் பறை போக அவளை வருடி தட்டி கெஞ்சி கொஞ்சமா தான் தூங்க வைப்பான் கார்த்திக்!!
ஒரு சுபயோக உதய நேரத்தில் இரு ஆண் மகவுகளை மேகலை பெற்றெடுக்க… பசுபதிக்கு தான் சந்தோசம் தாளவில்லை ஒருத்தனுக்கு இரு பேரன்கள் வாரிசாய் என்று!!
கிருஷ்ணகுமார் “பாப்பா என் மேல கருணை காட்டி ஒரே ஒரு பேத்திய பெத்துக்கு குடுங் பாப்பா!! ஏற்கனவே ஒரு தடுமாட்ட வளர்த்தேன். இப்போ அவன போலவே ரெண்டு பெத்து கொடுத்திருக்கீங்களே?” என்று அவர் வருந்த.. பாமாவோ கணவனை முறைத்தார்.
“ஹா.. ஹா… அப்பா.. நீங்க வளர்த்தது போல் இல்லாமல் என் பிள்ளைகளை நான் எப்படி வளர்க்கிறேன் மட்டும் பாருங்க!!” என்று இரு குழந்தைகளையும் இரு பக்கமும் பிடித்தப்படி கர்வமாக பேசிய கார்த்திக்கை மேலும் கீழும் பார்த்தவர் “பார்க்கிறேன் டா பார்க்க தான போறேன்!!” என்றார்.
“நீ கவலைப்படாதீங் மாமாங்… அடுத்து உங்களுக்கு இரண்டு பேத்திங்க தானுங்க..” என்று மேகலை கூற..
“ஆமா.. பாப்பா உங்கள போல…” என்று அவர் மகிழ்வுடன் கூற…
சொன்னவர்களை பீதியோடு பார்த்தான் கார்த்திக்!!
மேகலையோ… அவனை பார்த்து கண்ணடித்து சிரித்தவள் “கவலைப்படாதீங் மாமா.. எனக்கு நீங்க கிடைத்தது போல உங்க பொண்ணுங்களுக்கும் உங்களை விட அழகான மாப்பிள்ளைங் கிடைக்காமலா போய்டுவாங்க? என்ற மாமாங் இருக்க என்ன கவலைங்க?” என்றதும்… அப்பாவை பார்த்தவன்…
“எதே.. திரும்பவும் மொதல்ல இருந்தா??” மைண்ட் வாய்ஸ் என்று சத்தமாக பேச.. இப்போது மொத்த குடும்பமும் சிரித்தது சந்தோஷமாக!!
ஆனாலும் தனக்காக தான் கணவன் இதோட போதும் என்று சொல்கிறான் என்று மேகலைக்கு புரியாதா என்ன?
அவள் தான் அவனின் இஷ்டம் என்று தெரியாதா என்ன??
நீ.. நீ.. நீ.. என்னோட இஷ்டம் டி!! என்று அது கண்கள் தான் நித்தமும் காதலை புரிந்து கொண்டே இருக்கிறதே!!
கார்த்திக் கிருஷ்ணகுமார் மற்றும் மணிமேகலையை வாழ்த்தி விடை பெறுவோம்!!
சுபம்!!
Super sister 🌷🌷🌷🌷🌷😍♥️♥️♥️
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗💐💐💐
Super sis
Very very cute story 😻😻
Super ❤️