வானம் வசப்படும் – இறுதி அத்தியாயம் 9
விவேக் அவர்களை ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு DLF அலுவலகம் வந்தான்.
நர்மதாவிடம் அனைத்தையும் சொன்னான்.
ஓ அம்மாவும் கமலியுடன் சென்று விட்டால் நீங்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வீர்கள் விவேக். நான் என் வீட்டில் இருந்து எடுத்து வரவா என கேட்டாள்.
விவேக் அவளுக்கு நன்றி கூறிவிட்டு ” வேண்டாம் நான் பார்த்து கொள்கிறேன் . நீ DLF ப்ரான்ச்சை முழுமையாக கவனித்து செயல்படுத்து . பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை விரிவான அசிடிவிட்டி ரிப்போர்ட் எனக்கு அனுப்பிவிடு. ஏதும் உதவி தேவை என்றால் என்னை கேட்க தயங்க வேண்டாம். என கூறி விட்டு அடையார் வந்தான்..
அங்கே ஹச் ஆர் மானேஜரை கூப்பிட்டு கமலி — ஆன் லாங் லீவு போர் ஹேர் ஹையர் ஸ்டடீஸ் ஒன கம்பெனி ஸ்பான்சர்ஷிப் என ரெகார்ட் பண்ணிக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு .. அவளுக்கு சாளரி போட்டுவிடுங்கள் நிறுத்த வேண்டாம் என சொல்லிவிட்டு வந்தான்.
ஓகே சார் என குறித்து கொண்டார் ஹச் ஆர் மேனேஜர் இளங்கோ ..
பின் தன கேபினுக்குள் வந்தான்.. கமலி அமர்ந்து இருந்த இடத்தை பார்த்தான். ஒரு வெறுமை ஓடியது மனசுக்குள்.. சே நான் அவளிடம் என் மனதை இழந்து விட்டேனா.. அவள் இல்லாதது நம்மை இப்படி வாட்டுகிறதே.. என நினைத்தான்.
பிறகு அவளுக்கு வாட்சப்பில் .. கமலி ஐ ரியலி மிஸ் யு என மெசேஜ் செய்தான்..
அவள் போனை ஏரோபிளான் மோடில் வைத்து இருந்ததால் மெசேஜ் டெலிவரி ஆகாமல் இருந்தது. மணி பார்த்தான் 4 : 30 காண்பித்தது.
டெல்லிக்கு அவர்கள் இன்று மாலை 5 மணிக்கு மேல் தான் சென்று அடைவார்கள் .. அப்புறம் பேசி கொள்ளலாம் என வீட்டுக்கு வந்தான்.
குளித்து விட்டு காபி கலந்து குடித்தான். கமலி கொடுக்கும் காபி நினைவுக்கு வந்தது.
பூஜை அறையை பார்த்தான் கமலி பூஜை செய்து பாடல் பாடியது நினைவுக்கு வந்தது.
டைனிங் டேபிளில் ஆவலுடன் அமர்ந்து உணவு அருந்தியது நினைவுக்கு வந்தது.
எங்கே பார்த்தாலும் அவள் முகமே இவனுக்கு நினைவுக்கு வர …
தனக்குள் சிரித்தான்.. கமலி என வாய் விட்டு ஒருமுறை சொல்லி பார்த்தான்.
வாட்சப்பில் நியூ மெசேஜ் வந்தது. ” ஐ டூ மிஸ் யு ” என்று ..
சுப்ரியா இவனுக்கு போன் செய்தாள். “டேய் விவேக் நீ படிக்கும் போது எந்த பெண்ணிடமும் ஈடுபாடு காண்பித்தது இல்லையே.. நீ ஒரு பெண்ணுக்கு வரிந்து கட்டிக்கொண்டு இவ்வளவு தூரம் உதவி செய்கிறாய் என்றால்.. உன் மனதில் அவள் ஆழமாக பதிந்து விட்டாள் என்று தானே அர்த்தம்.. ” என அவனை சீண்டினாள்.
ஆமாம் சுப்ரியா , கமலியிடம் நான் மனதை இழந்து விட்டேன் .. அவளிடம் நீ எதுவும் சொல்ல வேண்டாம். அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்து நானே சொல்லிக்கொள்கிறேன்” என்றான்
ஓகே டா விவேக் .. கமலி நல்ல செலெக்ஷன். அவளையே திருமணம் செய்து கொள்ளடா.. உனக்கு ஏற்ற பெண் தான் இவள் .. என சொல்ல..
ஹ்ம்ம் .. பார்க்கலாம்.. என்றான்.
“குட் லக் டா” என்றாள் மேலும் இது சார்பாக என உதவி உனக்கு எப்போதும் உண்டு என்றாள் .
நன்றி கூறி விட்டு அம்மாவிடம் போனை கொடுக்க சொன்னான்..
நான் இந்த வாரம் சண்டே டெல்லி வருகிறேன் வந்து என்ன செய்யலாம் என பேசலாம். சுப்ரியா வீட்டில் அது வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்றான்.
ஓகே டா .. கமலியிடம் அடிக்கடி பேசு போனில் என்றாள் அம்மா..
சரி அம்மா .. என்று சொல்லிவிட்டு நீ சொல்லாவிட்டாலும் பேச தானே போகிறேன் என நினைத்து கொண்டான்..
அவனை அந்த அளவுக்கு இது வரை எந்த பெண்ணும் ஈர்த்தது இல்லை.
இப்படி அவன் மனதை கொள்ளை கொண்டது இல்லை. இவனே நிறுவனம் மட்டுமே தான் மூச்சாக நினைத்து செயல் பட்டு கொண்டு இருப்பவன் தானே ..
கமலி சுப்ரியாவிடம் “டெல்லி மிக குளிராக இருக்கிறது .. ஸ்வீட்டெர் வாங்கி கொள்ளலாமா வெளியில் சென்று.” என கேட்டாள்.
“யாராவது கெஸ்ட் வந்தால் போட்டு கொள்ள என்று நாங்களே வாங்கி வைத்து இருக்கிறோம் அதனால் கவலை வேண்டாம். இதோ எடுத்து தருகிறேன்” என்று கூறி விட்டு, ” அதற்குள் நீங்கள் ரெப்ரெஷ் பண்ணிக்கொள்ளுங்கள் ” என்று வாட்டர் ஹிட்டேரை ஆன் பண்ணிவிட்டு வந்தாள்.
அம்மாவும் கமலியும் ரெப்ரெஷ் பண்ணிக்கொண்டு வர .. சுப்ரியா அனைவர்க்கும் டிபன் எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு உணவருந்த அழைத்தாள். மணி 9 ஆனது . சுப்ரியாவின் கணவரும் இரண்டு வயது மகளும் வீட்டுக்கு வந்தனர்.
சுப்ரியாவின் கணவர் .. இவர்களிடம் நலம் விசாரித்து விட்டு மாடியில் உள்ள ஒரு ரூமை இவர்கள் உறங்க தயார் செய்து கொடுத்தார். சுப்ரியாவின் மகள் கமலியிடம் வந்து ஒட்டிக்கொண்டாள்.
கமலி சிறிது நேரம் அந்த சுட்டி பெண்ணோடு விளையாடி கொண்டு இருந்தாள்.. பின்னர் அம்மாவும் கமலியும் தங்கள் அறைக்கு வந்தனர்.
அம்மா கட்டிலில் பதித்து கொண்டாள். தான் கொண்டு வந்து இருந்த சாமான்களை எல்லாம் அங்கு இருந்த கபோர்டில் அடுக்கி வைத்து விட்டு கைபேசியை எடுத்து பார்த்தாள்.
வாட்சப்பில் விவேக் ” ஆல் ஓகே ? ” என கேட்டு இருந்தான்.
“இவள் சுப்ரியா வீட்டில் சௌகரியமாக உள்ளது. எங்களை நன்கு உபசரித்தார்கள். ” என சுப்ரியா புராணம் பாடினாள்.
அவன் அதற்கு “சுப்ரியா நல்ல மனம் கொண்ட பெண் உன்னை போலவே .
அதனால் தான் உன்னை அவளிடம் அனுப்பி வைத்து இருக்கிறேன்.” என்றான்.
சரி நீங்கள் சாப்பிடீர்களா என கேட்டாள்..
“என்னமோ சாப்பிட்டேன் இங்கே ஒன்றுமே எனக்கு பிடிக்கவில்லை.. ஆனாலும் சாப்பிடத்தானே வேணும் .. இல்லாவிட்டால் பசிக்குமே ..” என்றான்.
“அம்மாவை நீங்கள் எதற்கு என்னோடு அனுப்பினீர்கள். அம்மா இருந்தாலும் உங்களை கவனித்து கொள்வார்கள் அல்லவா. இப்போது சாப்பாட்டிற்கு கஷ்டப்படுகிறீர்களே ” என்றாள்.
நீ அங்கு செட் ஆன பிறகு .. அம்மாவை இங்கு அழைத்து கொள்கிறேன் அல்லது என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன் .. என்றான்..
வேறு ஒரு யோசனை உள்ளது . நீ மத்திய அரசு அலுவலகத்துக்கு அனுப்பிய டெண்டர் விண்ணப்பம் தேர்வு ஆகி விட்டதாக நம் அலுவலகத்துக்கு இன்று லெட்டர் வந்துள்ளது. டெல்லி ஆபீஸ் கு வந்து விரிவான பிளான் பற்றி ப்ரெசன்ட்டேஷன் கேட்டுள்ளார்கள். நீ அதை தயார் செய்து விடு ..” என்று கூறிவிட்டு மேலும் தான் வரும் ஞாயிற்று கிழமை வருவதாக சொன்னான் ..
வந்து விட்டு திங்கள் அன்று பிட்ஸ் பிலானி சென்று உன்னை எம் எஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸில் சேர்த்து விட்டு வருகிறேன் என்றான்.
கமலி.. .. “தேங்க் யு சோ மச் ” என்றாள்
உனக்கு சம்பளம் வந்து கொண்டு இருக்கும் எப்போதும் போல எந்த பிடித்தமும் இல்லாமல் என்றான். அது உனக்கு செலவுக்கு உதவியாக இருக்கும். மேலும் பணம் தேவை என்றால் என்னிடம் கேட்க தயங்காதே என்றான்.
நீ ஒரு கம்பளைண்ட் கொடுத்தால் உன் ஜமீனில் வேலுச்சாமியை விசாரித்து உன்னை தொந்தரவு பண்ணாமல் ரெண்டு தட்டு தட்டி வாய்ப்பதாக தான் நண்பன் சுரேஷ் உதவுவதாக சொன்னான்.
அதெல்லாம் வேண்டாம் நான் வேலுச்சாமிக்கு கடிதம் ஒன்று அனுப்ப உள்ளதாக தெரிவித்தாள்.
ஜமீனை நன்கு மேற்பார்வை செய்து ஒழுங்காக வைத்து இருந்தால் அங்கே நீ இருக்கலாம். இல்லாவிட்டால் வெளியேறிவிடும் படி எழுதப்போவதாக சொன்னாள்.
விவேக் நீ எழுத வேண்டாம் .. நான் அதை என நண்பர் சுரேஷை விட்டு சொல்ல சொல்லுகிறேன்.. என்றான் ..இல்லை என்றாள் நானே சென்று வேலுச்சாமியிடம் பேசுகிறேன் என்றான்..
அவன் முரடன் .. தயவு செய்து நீங்கள் போகவேண்டாம் .. உங்களை ஏதாவது செய்து விட்டால் என்னால் நிம்மதியாக இங்க இருக்க முடியாது
உங்கள் நண்பரையே அனுப்புங்கள் .. என்றாள்
ஓ என் மீது அவ்வளவு கரிசனமா உனக்கு… என்றான் .
“ஆமாம் .. என் ஜமீனே என் கையை விட்டு போனாலும் பரவாயில்லை. நீங்கள் அங்கே சென்று அவனிடம் பேச வேண்டாம். ” என்றாள். உங்கொளுக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால் என்னால் உயிர் வாழ முடியாது.. என்றாள்.
அசட்டு தனமாக பேசாதே..இப்போது தூங்கு .. நான் நாளை அலுவலகம் செல்ல வேண்டும். பை என்று வாட்ஸாப்ப் உரையாடலை முடித்துக்கொண்டான்.
அவள் இந்த மீது வைத்து இருக்கும் அன்பை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். அப்படியென்றால் அவள் மனதில் நான் இருக்கிறேன் என புரிந்து கொண்டான்.
டெல்லி – பிட்ஸ் பிலானி
இவளை கோர்ஸில் அட்மிட் செய்து விட்டு .. டெல்லியை சுற்றினார்கள். இவளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து விட்டு அம்மாவிடம் “அடுத்த வாரம் வரும் போது உன்னை எண்ணத்துடன் சென்னை அழைத்து செல்கிறேன் அம்மா.. என்றான்.
“அப்போது இவள் ஹாஸ்டல் சென்று விடுவாள்” என்றான்.
தனக்காக அம்மாவை பிரிந்து இருக்கிறான்.. என கமலி அவனை நினைத்து பெருமை கொள்ளலானாள். இதெற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என நினைத்து கொண்டாள்.
அவனிடம் அதை சொன்னாள் .. அதற்கு விவேக்.. “கைமாறு கண்டிப்பாக செய்து தான் தீர வேண்டும், அது என்ன என்று பின்னாளில் சொல்வேன் ” என கண் சிமிட்டினான்.
ஜமீன் வீடு.
சுரேஷ் கோயம்பத்தூர் ஸ்டேஷனில் சொல்லி வேலுச்சாமியிடம் ஒழுங்காக ஜமீனை பார்த்து கொள்ள வில்லை என்றால் உடனே ஜமீனை விட்டு வெளியேறும் படி சொல்ல சொன்னான்.
இவளுக்கு எங்கே இருந்து இவ்வளவு அதிகாரம் கிடைக்கிறது. போலீஸ் வந்து என்னை மிரட்டும் அளவுக்கு இவள் செல்வாக்கு உயர்ட்ந்து விட்டதா
என்ன ..
இவன் நண்பர்கள் இணை இவன் பருப்பு இங்கே வேகாது என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொருவராக இவனை விட்டு வெளியேறி விட்டனர்.
வக்கீலிடம் பேசி இவனுக்கு மாதம் 10000 அக்கோவுன்டில் போட்டு விட்டாள்.. கமலி..
வக்கீலும் ஒரு முறை நேரில் வந்து .. வேலுச்சாமியிடம் ஒழுங்காக இருந்தால் உனக்கு எந்த குறையம் இல்லாமல் பார்த்து கொள்வதாக கமலி சொல்லி இருக்கிறாள். என்றார்.
வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வேலுச்சாமி ஜமீனில்
ஒரு மூலையாக ஒதுங்கி விட்டான்.
வக்கீல் இவை அனைத்தையும் கமலிக்கு தெரியப்படுத்தினார். கமலி அனைத்தையும் விவேக்கிடம் கூறி அவன் தான் நண்பன் சுரேஷ் மோளம் செய்த உதவிக்கு நன்றி கூறினாள்.
விவேக் மூலம் ஒரு டிரஸ்ட் ஏற்பாடு செய்து ஜமீனை டிரஸ்ட் வசம் ஒப்படைத்து விடும்படி கூறினாள்.
விவேக் வக்கீலிடம் இது பற்றி பேசி ஏற்பாடு செய்து விட்டு அவளுக்கு தெரிய படுத்தினான்.
ஒரு வருடம் ஓடி விட்டது. இவள் ஒரு மாத விடுமுறையில் சென்னை வந்தாள்.
விவேக் அதற்குள் நிறுவனத்தை மிக பெரிய லிமிட்டெட் கம்பெனியாக நிலை நிறுத்திவிட்டு இருந்தான்.
அம்மா கமலியிடம் இந்த முறை நீ மறுப்பு ஏதும் சொல்லாமல்
விவேக்கை திருமணம் செய்து கொள்ள சொன்னாள்.
விவேக்கும் தான் திருமணத்திற்கு ரெடி என்று கூற .. கமலி மறுப்பேதும் சொல்லாமல் வெட்கப்பட்டாள்..
அதற்குள் மத்திய அரசின் ப்ராஜெக்ட் கைக்கு கிடைக்க டெல்லியில் தன் நிறுவனத்தின் மற்றொரு கிளையை நிறுவி அந்த ப்ராஜெக்ட் மற்றும் மேலும் சில ப்ரொஜெக்ட்களும் அந்த கிளையில் இருந்து செயல்பட துவங்க ..
இவன் டெல்லி கிளையில் கமலி படிப்பு முடியும் வரையில் அங்கேயே இருந்து செயல்பட்டான் .
கமலி வெற்றிகரமாக தன் எம் எஸ் இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டத்தை பெற்று விட்டு அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கினாள்.
நர்மதா சென்னையில் ஒரு தொழில் அதிபர் ஒருவரை மணந்து கொண்டு தனி நிறுவனம் ஒன்றை செயல்படுத்த தொடங்கிவிட்டாள்.
அம்மா கமலியிடம் “நான் என் பேரன் பேத்திக்காக காத்து இருக்கிறேன் .. விரைவில் நல்ல செய்தி சொல்லுமா ” என்றாள்.
விவேக் அம்மாவிடம் ” இவள் ஜமீனுக்கு அடுத்த வாரம் செல்கிறோம்.. அங்கு தான் அம்மா எங்கள் சாந்தி முஹூர்த்தம் .. அதற்கு ஜமீன் ஜோஷ்யரிடம் கேட்டு தேதி குறித்து ஏற்பாடு செய்துள்ளேன்” என்று கூற கமலி வெட்கப்பட .. கமலியின் வெட்கத்தை அம்மா ரசித்து சிரித்தாள்.
ஜமீன் வீடு ..
கமலி , விவேக் , விவேக் அம்மா அனைவரும் காரில் வந்து இறங்கினர்.
ஊர்க்காரர்கள் தரை தப்பட்டை முழங்க அவர்களை வரவேற்று ஜமீன் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
சாந்தி முஹுர்த்தத்துக்காக அலங்காரம் செய்யப்பட்ட பரம்பரை ஜமீன் கட்டிலில் விவேக்கும் கமலியும் தங்கள் இல்லறத்தை இனிதே துவங்கினர்.
முற்றும்
சுபம்
விவேக் கமலி இருவரது கனவும் இங்கே மெய்ப்பட்டு விட்டது. அவர்களுடைய முயற்சியால் வானத்தை தங்கள் வசமாக்கி கொண்டார்கள். நீங்களும் உங்கள் முயற்சியால் உங்கள் கனவை மெய்ப்படுத்தி வாழ்வில் மேன்மை அண்டைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்த கதை என் முதல் முயற்சி.. வாசித்த உள்ளங்களுக்கு நன்றி.
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..
Super 👌👌👌👌