அத்தியாயம் இரண்டு
ஸ்ரீராம் அம்மாவிடம்… “அம்மா நாளை ஒரு கான்பெரன்ஸ் காக பெங்களூரு செல்கிறேன். சிவா பூஜை பண்ணி விட்டு காலை 7 மணி பிலைட் மூலம் போகின்றேன்.. அப்பா விடம் சொல்லி விடு.. ” என்றான்.
அப்பா அவன் பேச்சை கேட்டுக்கொண்டே வந்தார் … நீ வெளியூர் சென்று அங்கே தங்கும்படி சூழ்நிலை வரும்போது .. நான் இங்கே செய்து கொள்கிறேன்..” என்றார். இல்லை என்றால் நீ எங்கே போகிறாயா அங்கே இந்த லிங்கத்தை உன்னுடன் எடுத்து சென்று .. அங்கே வைத்து பூஜை செய் .. ஏனென்றால் கால மாற்றத்தில் நாம் ஒரே இடத்தில எப்போதும் இருப்போம் என சொல்ல முடியாது…
“காலத்து தகுந்த வாறு நம் வழக்கை மாற்றி கொள்ளலாம் தப்பில்லை. ஆனால் எங்கு இருக்கிறோமோ அங்கே வைத்து பூஜையை செய்து கொள்ளலாம்.” என்றார்.
இப்போது நான் உயிரோடு இருக்கிறேன் உனக்கு உதவ முடியும். நீ இல்லாத போது நான் உனக்காக ஒரு நாள் .. ஏன் ஒரு வாரம் கூட செய்யலாம். என்றார்.
புரிகின்றது அப்பா என்றான் ..
பெங்களூர் காலை 9 மணி..
நகரம் மிக பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது.
இவன் ஒரு ப்ரெசென்ட்டேஷன் கொடுக்க இருக்கிறான் அந்த கான்பெரன்ஸில்.. அது கார் வடிவமைப்பு குறித்து ஒரு புதிய முயற்சி என்னும் தலைப்பில்…
அதற்காக பெங்களூரு ஏர்போர்ட்டில் இருந்து டாக்ஸிக்காக வைட்டிங்..
அங்கே தீபிகாவும் பைனான்சியல் மேனேஜ்மென்ட் குறித்த ஒரு டாக் கொடுப்பதற்காக அதே கன்பரான்சுக்கு செல்வதற்காக வரும் தன்னுடன் படித்த பெண்ணை ரிஸீவ் செய்து போவதற்காக அவளுடன் அங்கே டாக்ஸிக்காக வைட்டிங் …
இவர்கள் கேட்ட நேரமோ என்னவோ எல்லாமே முன்பே பதிவு செய்தவர்களுக்கே கொடுத்து கொண்டு இருந்தார்கள்…
ஒரு வழியாக இவன் அர்ஜென்ட் – அதிக சார்ஜெஸ் உடன் கூடிய கார் ஒன்றை பதிவு செய்து விட்டான்.. இவர்களும் தவிப்பதை பார்த்து விட்டு .. “எக்சிகியூஸ் மீ .. நீங்கள் எங்கே போகவேணும் “.. என்று கேட்க
அவர்களும் இவன் செல்லும் அதே கான்பரன்ஸ் பேரை சொல்ல
அப்படியென்றால் நீங்களும் என்னுடன் வரலாம்… நானும் அங்கே தன் செல்கிறேன் என்றான்…
இவன் முன்னால் ஏறிக்கொள்ள ..
ஓ தங்க யு வெரி மச்.. என்று சொல்லி விட்டு அவனுடன் பின் இருக்கையில் ஏறிக்கொண்டனர் தீபிகாவும் அவள் தோழியும் ..
நோ மென்ஸன் ப்ளீஸ் .. என்றான்
அங்கே சென்றதும் ஸ்கெட்யூல் பாம்ப்லேட் பேப்பர் கொடுத்தார்கள்.
அதை பெற்றுக்கொண்டு பிரிந்து சென்று அவரவர் பகுதிக்கு சென்று விட்டனர்.
இவன் தன்னுடைய ப்ரசெண்டஷன் அற்புதமாய் பண்ணினான். ஒரு சிலர் நோட் செய்து கொண்டார்கள் .. இவனுடைய காண்டாக்ட் நம்பர் ஈமெயில் வாங்கிக்கொண்டனர்..
முடித்து விட்டு வரும்போது இவளும் தோழியும் ரெப்ரெஷ்மென்ட் வளாகத்தில் .. கஃபே டே கவுண்டரில் காப்பச்சீனோ ஆர்டர் செய்து நிற்க்க .. இவனும் அங்கே வர .. ஹாய் .. என்று சொல்லி இவனை அழைக்க …
இவனும் அவர்களுடன் இணைந்து காப்பச்சீனோ அருந்தி கொண்டே
இட்ஸ் வொந்டெர்புல் டே போர் மீ என்றாள்..
போர் மீ டூ .. இட் வாஸ் குட் கோயிங் .. சம் நோட்டட் மை கான்டக்ட்ஸ் என்றான். எக்ஸ்பெக்ட்டிங் சூன் சம்திங் கிரேட் ..
ஹலோ வாட்ஸ் யுவர் நேம் அண்ட் வேர் யூ பிரம்? என்றாள்..
இவன் ” மை நேம் ஈஸ் ஸ்ரீராம் பிரம் சென்னை ” என்றான்..
ஓ நீங்க தமிழா என்று கேட்டாள்.. ரொம்ப நாளாச்சு தமிழில் பேசி என்றாள்..
அவனுடைய பேச்சு பழகும் விதம் எல்லாம் பிடித்தது இவளுக்கு …
நேரே கண்ணை பார்த்து பேசினான்.
அதுவே இவளுக்கு இவன் நல்லவன் இவனை நம்பலாம் என்று சொன்னது..
ஆமாம் உங்கள் பேர் என்ன என்றான் தமிழில்
அவள் தீபிகா பிரம் பெங்களூரு பட் நேட்டிவ் சென்னை .. அம்மா சென்னைக்காரங்க .. அப்பா பெங்களூரு .. பட் சேட்டலில்ட் இன் பெங்களூரு .. சென்னை போவதே இல்லை என்றாள் ஆங்கிலமும் தமிழும் கலந்த பாஷையில்
சென்னை வந்தா வீட்டுக்கு வாங்க.. என்றான்
நீங்க பெங்களூரு வந்து இருக்கீங்க .. அப்போ என் வீட்டுக்கு வாங்க இப்போ .. அப்போ தன் நான் சென்னை வருவேன் என்றாள்..
மணி பார்த்தான் “இரவு பத்து மணிக்கு தான் பிலைட்… சோ இ கேன் கம் வித் யு ..” என்றான்..
அம்மாவிடம் கைபேசியில் பேசி .. நம் வீட்டுக்கு என் புது நண்பர் ஒருவர் வருகிறார்.. அவருக்கு ஏதாவது டிபன் செய்து வை என்று சொன்னாள்..
அவள் .. சரி நானே இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்.. சரி ஏத்திச்சும் பண்றேன் என்றாள்,,
👌👌👌👌👌👌