உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஐந்து
அம்மாவுடன் காரில் தீபிகா ஏறி ஏர்போர்ட் நோக்கி விரைந்தாள்.
அம்மா “உண்மையாகவே அவன் ஒத்துக்கொண்டானா .. எப்படி அவனுக்கு வேலை கிடைத்து விடுமா ? அவ்வளவு சீக்கிரம் அதுவும் ? … எனக்கு புரியவில்லையாடி இது எப்படி சாத்தியம் .. ? ” என தீபிகாவை கேள்வி மேல் கேட்டு துளைத்தாள் .
“ஐயோ.. அம்மா நீ கொஞ்சம் பேசாமல் வா. அவன் அங்கே அனுமதி வெங்கட்டும் முதலில் .. பிறகு உன் கேள்விகளை கேள். அதற்குள் என்ன அவசரம்.” என்றாள்.
“சரி எப்படியோ நீ அவனிடம் செல்வதில் எனக்கு விருப்பம் தான். நீ அப்பாவிடம் அவன் உன் முறைப்பயன் அம்மாவின் அண்ணன் மகன்
என எதையும் சொல்ல வேண்டாம்” என்றாள் பார்வதி அம்மா.
அதெல்லாம் எனக்கு தெரியாதா என்ன .. என அம்மாவை முறைத்தாள்.
ஸ்ரீராம் வீடு ..
ஸ்ரீராம் ஆழ்ந்த யோசனையில் இருந்ததை பார்த்த அவன் அம்மா .. “என்னடா தலை போகிற கவலை உனக்கு .. இப்படி உட்கார்ந்து இருக்காய் ?
உன் முகமே சரியில்லையே.. என்ன ஏதும் பிரச்சனையா? ” என பாசமாக கேட்டாள்.
“இல்லை அம்மா எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்து உள்ளது . போகலாமா வேண்டாமா என யோசித்து கொண்டு இருக்கிறேன். ” என்றான்.
“அதெல்லாம் எதற்கடா .. நீ நிம்மதியாக இந்த வேலையிலே சென்னையிலேயே இரு .. எங்களுடன்.. எங்களுக்கு வயதாகி விட்டது .. உனக்கு கல்யாணம் பண்ணி வைத்து .. உன் சந்ததியை பார்த்துக்கொண்டு சந்தோசமாக இங்கேயே இருடா. எங்கும் அலையவேண்டாம்.. ” என எடுத்த எடுப்பில் தடை போடு விட்டால் அம்மா.
இல்லை அம்மா ஒரு ஐந்து ஆண்டுகள் சம்பாரித்து விட்டு இங்கே வந்து விட்டேன் என்றால் இங்கேயே என் கனவு கார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை சொந்தகமாக ஆர்மபித்து விடுவேன்.
தங்கை நிவேதா வந்தாள் இவர்கள் சீரியசாக பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து விட்டு ..
“என்னமா அண்ணன் என்ன சொல்லுறான்.. ” என கேட்டாள் .
“அவன் அமெரிக்கா போறானாம் வேலைக்காக ” என சோகமாக சொன்னாள்.
“அப்பா விட மாட்டார் அண்ணா .. ஒரே ஆண் வாரிசு நீ. இந்த வீட்டை விட்டு உன்னை வெளியில் அனுப்ப 100 கோடி கொடுத்தாலும் அனுப்ப மாட்டார்.
சிவா பூஜை செய்து இந்த வீட்டில் நீ தலைமை பொறுப்பை ஏற்று வீட்டை வழி நடத்த வேண்டிய இடத்தில் இருக்கிறாய். அதனால் உன்னை வெளிஊருக்கே அனுப்ப மாட்டார். இதில் வெளிநாட்டுக்கு எங்கே அனுப்ப போகிறார் …” என்று ஒரு அணு குண்டை வீசினாள் நிவேதா ..
சரி அவரிடம் இன்று பேசி என் கருத்தை சொல்லும்படி சொல்லி அவரிடம் நான் அனுமதி வாங்கி கொள்கிறேன் நீ எதுவும் அவரை
ஏதாவது சொல்லி கிண்டி விடாமல் இரு. அதுபோதும் என்றான்.
அப்பா இரவு உணவு சாப்பிட்டதும் அனைவரிடமும் கொஞ்ச நேரம் பேசி விட்டு படுக்க செல்வார்.
அப்போது ஸ்ரீராம் தான் அமெரிக்கா செல்வதை பற்றி கேட்க .. அவர் கொஞ்ச நேரம் யோசித்தார். பிறகு என்ன நினைத்தாரோ ” நீ போகலாம் ஆனால் சிவபூஜை நீதான் பண்ண வேண்டும் . நீ அந்த லிங்கத்தை அமெரிக்கா எடுத்து சென்று அங்கே வைத்து அந்த பூஜையை தொடர்ந்து செய்து வருவேன் என சத்தியம் செய்.” என்றார்.
மிக முக்கியமாக நீ இருக்கும் இடம் மிக சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தினமும் சிவ மந்திரங்கள் சொல்ல வேண்டும். தினமும் பூஜை பண்ணியதை போட்டோ எடுத்து வாட்சப்பில் எனக்கு அனுப்ப வேண்டும். என சொன்னார்.
“அதற்கு முன் இந்த வீட்டில் நாளை நான் பூஜை செய்து சோழி பிரசன்னம் பார்த்து சிவன் உனக்கு அனுமதி கொடுக்கிறாரா என பார்த்து சொல்கிறேன்.” என்றார்.
தெய்வ அனுக்கிரஹம் மிக முக்கியம் என் அனுமதியை விட என்று தீர்க்கமாக சொல்லி விட்டு அவரது அறைக்குள் சென்று படுத்து விட்டார்.
ஸ்ரீராம் இதை தீபிகாவிடம் சொல்ல .. “இது வேறயா .. பார்க்கலாம் ..” என்றாள்.
இன்னும் என்ன என்ன சொல்ல போகிறாரோ என்று அவளுக்கு மனசுக்குள் ஒரு வித படபடப்பு ஏறியது.
அம்மாவிடம் சொல்ல அவளும் .. “நினச்சேன் இது போல ஏதாவது அண்ணன் சொல்லுவார் என்று ..” என கவலை பட்டாள்.
அப்பா வெங்கடேசன் வர அவரிடம் தீபிகா ” அப்பா நான் அமெரிக்கா செல்ல துணை கிடைத்து விட்டது. அன்று என் நண்பன் ஒருவன் சென்னையில் இருந்து வந்தானே அவன் அவனது அப்பாவிடம் அநுதி வாங்கிவிட்டு சொல்வதாக கூறினான்” என்றாள்.
“சரி அம்மா ! ஜாக்கிரதை .. யாரோ ஒரு மூன்றாவது நபரை நம்பி இறங்குகின்றாய். அவனது பின்புலத்தை சரிவர விசாரித்து செய்.
நான் வேண்டுமானால் அவனை பற்றி சென்னையில் உள்ள என் போலீஸ் நண்பனிடம் கேட்டு உனக்கு சொல்லவா .. ” என சொல்ல
அதற்குள் அம்மா ” இல்லங்க அதெல்லாம் வேண்டாம் நங்கள் நேற்று அவன் வீட்டுக்கு போனோம் அல்லவா.. அப்போதே அவன் குடும்பத்துடன் பேசினோம், மிகவும் கண்ணியமானவர்கள்.. ” என்றாள்.
பார்வதிக்கு என்ன பயம் என்றால் எங்கே நம் அண்ணனை பற்றி தெரிந்து இவர் டென்ஷன் ஆகி எல்லாத்தியும் களைத்து விடுவாரோ என்று. அதனால் இவள் முந்திக்கொண்டு இவ்வாறு சொல்லி சமாளித்தாள்.
மீண்டும் பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்