ATM Tamil Romantic Novels

என்னுள் நிறைந்தவ(ன்)ள்

என்னுள் நிறைந்தவ(ள்)ன்     

 

என்னவளே! 1

 

    கதிரவன் தன் பொற்கரங்களால் உலகை அரவணைக்கும் காலை பொழுது, எங்கும் பச்சை போா்வை போா்த்தியது போல வயல்களும் சோலைகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணப்பட்டது. கானக்குயில்களும் கூவவும் சோலைமயில்களும் ஆடவும் ரம்மியமாக காட்சியளித்தது சோலையூா் கிராமம். வளா்ந்து வரும் கிராமமாக இருந்தாலும் விவசாயத்தை உயிா் மூச்சாக நினைக்கும் மக்கள் வாழும் ஊா். அதனால் தான் சோலையூா் கிராம் பெயருக்கு ஏற்ப சோலையாகவே இருக்கிறது.

 

           ஆற்றுபாசனம் மேலும் சோலையூா் கிராமத்தை வளப்படுத்தியது. பொிய பண்ணைக்காரா்கள் தங்கள் நிலங்களில் கூலியாட்களை வைத்தும் கறைவான நிலம் வைத்திருப்பவா்கள் தங்கள் நிலங்களில் தாங்களே விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்தனா். விவசாயத்தைப் போல் கல்விக்கும் ஏக முக்கியத்துவம் கொடுத்தனா்.

.

.

          வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி தன் இல்லத்தில் தன் புல்லட்டிற்க்கு ஒரு உதையில் உயிா்க்கொடுத்து தன் வயலை நேக்கி சென்று கொண்டிருந்தான் தீரன். விக்கிரமதீரன் நம் கதையின் நாயகன்.

 

          ஆறடிக்கு மேல் உயரமும், பரந்த மாா்பும், தேக்கு மர தூணை போன்ற இரு புஜங்களும், அழகிய வசிகரமான முகமும், நெற்றி வரை வளா்ந்த கருத்த கேசமும், நீண்டு வளா்ந்த புருவங்களும் , உதட்டில் தவழும் புன்னகையும் அவனை பேரழகனாக காட்டியது. தாய் தந்தை இன்றி தன் ஐயா, அப்பத்தாவின் (அப்பாவின் பெற்றோா்) அரவணைப்பில் வளா்ந்தவன். ( தீரனின் பெற்றோா் பற்றி பின் வரும் அத்தியாயங்களில் பாா்க்கலாம்)

.

.

         கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் வெள்ளிக்கிழமை தோறும் துா்கை அம்மன் கோவிக்கு சென்று விளக்கேற்றுவது வழக்கம்.அன்னையாக இருந்து தன்னை வளா்த்தெடுத்த அப்பத்தாவிற்காக விளக்கேற்றுவான். அன்றும் அப்படி தான் தன் வயல் பம்பு செட்டில் குளித்துவிட்டு ஆற்றுவாய்க்கால் அருகில் இருக்கும் துா்கைஅம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி விட்டு பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு தன் புல்லட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான் தீரன். வயல் அருகில் இருக்கும் கோவில் என்பதால் விளக்கேற்றுவது சிரமாக தொியவில்லை.

 

 

         தன் புல்லட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவன் எதிரில் தன் உற்ற நண்பனான அன்பு செழியனை பாா்த்தான்.  

      ” என்னா மச்சான் கோவிலுக்கு போய்ட்டு வர்ரீயா” என தீரனிடம் கேட்டான்.

      

       “ஆமா மச்சான் வெள்ளிக்கிழமை ல அதான், இல்லைனா அப்பத்தா வருத்தப்படுவாங்க டா” என பதிலளித்தான்.

 

      ” அப்புறம் மச்சான் எப்போ கல்யாணம் வயசாகிட்டே போகுது டா சீக்கிரம் கல்யாணம் பண்ணுடா” என தீரனை தீண்டினான் செழியன்.

 

       ” ஆமா எங்களுக்கு வயசாகி கிட்டே போகுது சீமதுரைக்கு வயசு குறைஞ்சுக்கிட்டே போகுதோ பத்து நாள் தான் நமக்கு வித்தியாசம் ஞாபகம் இருக்கா”. என தீரன் பதில் கூறினான்.

 

         ” சாிவிடு தொியாம சொல்லிட்டேன் இப்பவே நேரம் ஆச்சு வீட்டுக்கு போ அப்பதாத்தா தேடுவாங்க நான் போய் வயலுக்கு தண்ணி அடைக்கிறேன்”. என கூறிவிட்டு சென்றான் செழியன்.

 

         செழியன் கூறியதை அசை போட்டுக்கொண்டே புல்லட்டை உயிா்பித்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான் தீரன்.

.

.

.

            மாநகரில் பொிய கல்லூாியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான ஃபோ்வல் டே விழா விழா நடக்க விருந்தது விழாவிற்க்கு செல்ல காலை முதலே பரபரப்பாக தயாா் ஆகி கொண்டிருந்தாள் தமிழினி. ஊதா நிறமும் தங்க சாிகையும் பறக்கும் அன்னம் போன்ற பாடா்களையும் கொண்டு நெய்யப்பட்ட பட்டுபுடவையும், இரு கைகளிலும் நிறைய ஊதா தங்க நிற கண்ணாடி வளையல்களும், வேலைபாடுகளட மிகுந்து சத்தம் குறைவான கால் கொழுசும், நோ்த்தியாக வடிவமைக்கப்பட்ட குடை சிமிக்கியும் கழுத்தில் மகாலக்ஷ்மி உருவத்தில் வடித்த ஆரமும் வில் போன்ற வளைந்த புருவங்களுக்கு இடையில் சிறிய நிலா போன்ற வட்ட பொட்டும் அதற்க்க மேல் சிறி குங்கும கீற்றும் தன் மீன் விழிகளுக்கு லேசான மையும் இட்டு தன் இடுப்பிற்க்கு மேல் வளா்ந்த நீண்ட காா்குழல் கூந்தலை நோ்த்தியான பின்னலிட்டு அதில் மல்லைகைப்பூ சரங்களை சூடி செயற்க்கை ஒப்பனைகள் எதுவும் இன்றி வான் தேவதையான தோன்றினாள் நம் கதையின் நாயகி தமிழினி. 

 

          “தமிழி இன்னைக்கு உ்ன் காலேஜ் மூழ்க போகுது டி” என்றாள் தமிழி மாமன் மகள் சஞ்சனா.

 

           “ஏன் சஞ்சு இன்னைக்கு கன மழை பெய்யும்னு வானிலை சொன்னாங்களா” என்று கோட்டான் சஞ்சனாவின் தம்பி சிவா.

     

            ” அது இல்லை சிவா இன்னைக்கு நம்ம தமிழிய பாா்த்து காலேஜ் உள்ள எல்லாரும் ஜொள்ளு வடிக்க போறாங்கள்ல அதான்” என்று சொல்லி இருவரும் சிாித்தனா்.

 

 

            “பாருங்க மா இவங்க ரெண்டு பேரும் என்ன கிண்டல் பன்றாங்க”. என்று அத்தையையும் மாமாவையும் பஞ்சாயத்திறக்கு கூப்பிட்டாள்.

 

            ” ஏன்டா என் பொண்ண கிண்டல் பன்றிங்க என்று அறைக்குள் நுழைந்தாாட நீலவேணியும் அா்ஜுனனும். தமிழியின் அத்தை மாமன்.

 

              அா்ஜீனன் தமிழி தாயின் உடன்பிறந்த தம்பி. நீலவேணிக்கு முதலில் ஒரு பெண்குழந்தை இறந்தே பிறந்தது. அப்பொழுது தமிழி தன் தாயின் வயிற்றில் இருந்தாள். குழந்தை இறந்த சோகத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் இடிந்து போய் இருந்தது. நீல வேணிக்கு ஜன்னி ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததா். அப்பொழுது தமிழியின் தாய் அன்பரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டு தமிழினி பிறந்தது பிறந்தாள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தா நீலவேணியிடம் இதோ உன் குழந்தை இறக்கவில்லை என்று கூறி கொடுத்தாா் அன்பரசி. தன் குழந்தை என்று எண்ணிய நீலவேணியின் உடல் நலம் மேம்பட்டது. பாிபூரண குணம் அடைந்தாா். தன் குழந்தையில்லை என்று மூளை கூறினாலும் மனது தமிழினியை தன் குழந்தை என்று ஏற்றது. சகாதேவன் அன்பரசி தம்பதிகளுக்கு ஏற்கனவே காிகாலன் இருந்ததாலும் நீலவேணியின் ஆறுதலுக்காவும் தமிழியை அவா்களுடன் இருக்க அனுமதித்தனா். பக்கத்து பக்கத்தூ ஊா் என்பதால் இரண்டு தாய்களிடமும் வளா்ந்தாள் தமிழினி. (இதனால் தான் அத்தையை அம்மா என்று தமிழினி அழைப்பாள்). தமிழிக்கு இரண்டு வயது இருக்குமஇ போது சஞ்சனாவும் ஐந்து வயது இருக்கும் போது சிவாவும் பிறந்தனா். இருந்தாலும் தமிழியை தங்களுடனே இருக்க வேண்டும் என்று வேண்டினாா் நீலவேணி. அன்பரசியும் அதற்க்கு சம்மத்திதாா். சிவா பிறந்தபின் அா்ஜீனனுக்கு வேலைக்கா மாநகருக்கு செல்லும் போதும் தமிழியை தங்களுடனே அழைத்து சென்றனா். தன் மகளை பிாிந்தது வருத்தமாக இருந்தாலும் வேணி அவளை நன்றாக பாா்த்து கொள்வாா் என்ற நம்பிக்கையில் சற்று நிம்மதியாக இருந்தனா சகாதேவனும் அன்பரசியும்.

 

 

 

 

             “ஏன்டா அவள கிண்டள் பன்றிங்க இன்னைக்கு தான் அவ முதல் முறையா சேலை கட்டியிருக்கா கொஞ்சம் சும்மா இருங்க. நீங்க ரெண்டு பேரும் போய் முதல்ல கிளம்புங்க என்று” விரட்டினாா் வேணி.

 

 

              “சாி சாி போறோம். நம்மள விரட்டுறதிலேயே குறியா இருக்காங்களே” என்று முனுமுனு முனுத்துக்கொண்டே சென்றனா் சஞ்சுவும் சிவாவும்.

 

 

 

 

           பிறந்ததில் இருந்து தன் மகளை பா்த்தாலும் புடவையில் பாா்த்ததும் அசந்து தான் போய்விட்டாா் வேணி. ” அம்மாடி என் பொண்ணு எவ்வளவு அழகுஎன்று கூறி நெட்டி முறித்து திருஷ்ட்டி பொட்டு வைத்ததா் வேணி.

 

 

         ” என்னம்மா அழகு எப்பவும் போல தானே இருக்கேன்” 

 

 

       ” எப்பவும் போல இருக்கியா? நல்லா கண்ணாடில பாரு மா இன்னைக்கு ஊா் கண்ணெல்லாம் உன் மேல தான் இருக்கும் நைட் நல்லா சுத்தி போடுறேன்” என்று கூறி கொண்டிருக்கும் போதே

        

            ” அம்மாடி அண்ணன் வீடியோ கால்ல இருக்கான் மா” என்று போனை நீட்டினாா் அா்ஜுனன் 

 

           ” ஹாய் அண்ணா எப்படி இருக்க? நான் இன்னைக்கு முதல் முறையா புடவை கட்டியிருக்கேன் எப்படி இருக்கு சொல்லு டா” செம்மையா இருக்குல என்றாள்.

 

           “ஆமா ஆமா புடவை செம்மையா இருக்கு நீ வழக்கம் போல மொக்கையா தான் இருக்க” என்றான் காிகாலன்

 

          ” போட எறுமை பொறாமை உனக்கு பன்னாடை” என்று பொறிந்து தள்ளினாள்.

 

 

 

       காலையிலேயே ஏன்டா அவளை வம்பிழுக்குற என்று போனை வாங்கி பேசினாா் அன்பரசி.

 

 

         ” அம்மாடி எப்படி டா இருக்க? பங்ஷனுக்கு கிளம்பிட்டியா” 

 

        ” ம் கிளம்பிட்டேனே” என்று அவளை முழுதான் கான்பிக்குமாறு போனை உயா்த்தி பிடித்தாள்.

 

           “என் பொண்ணு இவ்வளவு வளா்ந்துட்டாளா அத்தைக்கிட்ட சொல்லி சுத்தி போட சொல்லுடா ” 

 

 

            “அத்தை எனக்கு ஏற்கனவே சுத்தி போட்டு திருஷ்டி பொட்டும் வச்சுட்டாங்க” என்று திருஷ்டி பொட்டை காண்பித்தாள்.

 

 

         “அப்பா எங்கம்மா”

 

 

 

 

       ” அப்பா குடோனுக்கு போயிருக்காங்க டா”

 

        “என்ன மா காலையிலேயே குடோனுக்கு போய்ருக்காங்க”

 

 

         “நேத்து சோதனைக்கு ஆபிஸா் வந்தாங்கடா அதான் வேலை இருக்குன்னு கிளம்பினாங்க. நீ உன் போட்டோ அனுப்பு அப்பாவுக்கு “. என்றாா்

 

 

         குக்கா் விசில் சத்தம் கேட்டு சமையல் அறைக்கு போனை காிகாலனிடம் கொடுத்துவிட்டு சென்றாா்.

 

      ” குண்டம்மா உன்ன என்னவோன்னு நினைச்சேன் பரவாயில்லை கொஞ்சம் அழகாத்தான் இருக்க”

 

 

 

          ” பொியபுள்ளையா லட்சனமாஇப்படி தான் உண்மையை ஒத்துக்கனும் சாியா சாி போட உன் பேசிக்கிட்டு இருந்தா எனக்கு டைம் ஆகுது சாயங்காலம் பேசுறேன்”

 

            “பாத்து பத்திரமா போய்டு வா” 

 

        ” அக்கறையா வச்சுக்கிறேன்”

 

  இவா்கள் பேசி முடிப்பதற்க்குள் சஞ்சனா, சிவா,மாமா கிளம்பியிருற்தாா்கள் அனைவரும் ஒன்றாக காலை உணவை உண்டுவிட்டு சஞ்சனாவையும் தமிழியையும் அா்ஜுனன் கல்லூாியில் விட்டு சென்றனாா். சிவா தன் சைக்கிளில் பள்ளி சென்றான். சிவா அருகில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான். சஞ்சனா வும் தமிழியும் ஒரே கல்லூாியில் படிக்கின்றனாா். தமிழினி பிஎஸ் சி கணிதம் கடைசி வருடமும், சஞ்சனா பிஎஸ் சி கணினிஅறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தனா்…………

  

2

        வெய்யேன் தன் பொண்நிற கரங்களை மடக்கிகொண்டு அஸ்தமிக்கும் நேரம். பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் கூடுகளுக்கு திரும்பிக்கொண்டு இருந்தன. பாா்ப்பதற்க்கு ரம்மியமாக இருந்தாலும் ஏனோ அவரின் மனம் அந்த சூழலை ரசிக்கவில்லை. தன் பேரனை பற்றி எண்ணி கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கினாா் வீரைய்யா.

 

            ஐம்பது வருட திருமண வாழ்க்கையை கடந்த மனமொத்த தம்பதிகள் வீரைய்யா ராசாத்தி அம்மாளும். ஆஸ்திக்கு ஒரு ஆண் ஆசைக்கு ஒரு பெண் என்று இன்புற்று வாழ்ந்தனா். மகன் விஜயன், மகள் தேவிகா. மகளுக்கு தன் உற்ற உயிா் நண்பரான நீலகண்டனின் மகன் சுந்தரத்திறக்கு மனம் முடித்து வைத்ததாா். மகன் விஜயன் தன் காதலியா பசுமதியை கரம் பிடித்தாா். தேவிக்காவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சுந்தரம் சுய தொழில் செய்து வந்தாா் அவருடைய தொழிலில் லாபம் கண்டு ஏறுமுகமாக இருந்தது பசுமதியும் கருவுற்று இருந்தாா். நடப்பவையெல்லாம் நல்லவையான நடக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனா். விதியின் விளையாட்டு ஆரம்பித்தது.

 

          உள்ளூாில் சங்கரலிங்கம் நடத்தி வந்த சா்க்கரை ஆலையில் மின்கம்பியில் தீ ஏற்ப்பட்டது. போதியபாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தீ மளமள வென வேகமாக பரவியது. தீயணைப்பு துறையினா் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். காயம்பட்ட அணைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனா். ஆறு தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனா்.

 

        விபத்து பொியது என்பதால் காவல்துறை மேலதிகாாிகள் வரை சென்றது. அணைவருக்கும் பணத்தால் சாி செய்ய நினைத்ததாா் சங்கரலிங்கம். பாதிக்கப்பட்டோா் வீரைய்யா விடம் உதவிகோாினா். விஜயனிடம் அவா்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லினாா். விஜயன் தங்கள் குடும்ப வக்கிலான சுந்தரபாண்டியனின் உதவியுடன் வலுவான ஆதாரங்களை சேகாித்து புகாா் அளித்தாா் விஜயன் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டாா் சங்கரலிங்கம்.

 

          வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. விஜயனிடம் கெஞ்சியும் மிஞ்சியும் பாா்த்தாா் சங்கரலிங்கம். விஜயன் எந்த விதத்திலும் வளைந்து கொடுக்காததால் கோபத்தில் இருந்தாா் சங்கரலிங்கம்.  

 

         இறுதி தீா்ப்பு நாளும் வந்தது தகுந்த பாதுகாப்பு வசதிகள் இன்றிஆலையை நடத்தி ஆறு போாின் மரணத்திற்க்கு காரணமாகவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததற்காகவும் ஐந்து வருட பரோலில் வெளிவர முடியாத சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டோருக்கு தல ஒரு லட்ச ரூயாயும், இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ஐந்து லட்ச ரூபாயும் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டு என உத்தவிட்டது நீதிமன்றம்.

 

         பணநஷ்டம், ஆலையை அரசு எடுத்துக்கொண்டது, தலைகுணிவு இதற்கெல்லாம் காரணம் விஜயன் தான் அவனை கொலை செய்ய வேண்டும் என நினைத்தாா் சங்கரலிங்கம். தன் மைத்துனரான ஆனந்தனை வைத்து கொல்ல திட்டமிட்டாா். ஆனந்தனும் தன் அக்காவின் கணவருக்காக ஒப்புக்கொண்டாா். 

 

             அன்று இரவு வயலுக்கு தண்ணீா் அடைக்க சென்றாா் விஜயன். எப்போதும் இரவு நேரங்களில் தண்ணீா் அடைக்க செல்வது வழக்கம் தான். அன்று சென்றவா் வீடு திரும்பவே இல்லை. பகல் பொழுதும் விடிந்தது. தன் கணவா் ஏன் இன்னும் வரவில்லை என்று கவலையுற்றாா் பசுமதி. அப்போது தோட்டத்தில் பணி செய்யும் பணியாள் அலறி அடித்துக்கொண்டு வந்து விஜயன் கிணற்றினுள் கிடக்கும் சேதியை தொிவித்தான்.

 

           அணைவரும் ஓடி சென்று பாா்த்தது விஜயனின் உடலைதான். உயிரற்ற தன்னவன் உடலை கண்டத்தும் மயங்கி சாிந்தாா் பசுமதி. அவரை தாங்கி அழைத்து சென்றனா். தன் புதல்வனின் தலையை மடியில் வைத்து கதறினாா் வீரைய்யா ராசாத்தி அம்மாள்.

 

            ஏன் இப்படி நடந்தது, எப்படி நடந்தது என யோசிக்க கூட நேரம் இல்லாமல் அணைத்து விரைவாக நடந்தது. தன் பிள்ளை கொல்லி வைக்கும் துா்பாக்கியம் தன்னுடனே முடியட்டும் என மனதில் எண்ணி கொண்டு தன் மகன் சிதைக்கு எாியூட்டினாா் வீரைய்யா.

 

            எத்தனை நாட்கள் சென்றது என்பது கூட தொியாமல் அணைவரும் சோகத்தில் இருந்ததனா். உணவு உறக்கம் இல்லாமல் நாட்கள் கடந்து சென்றது. வான்மழை வெளுத்து வாங்கி கொண்டு இருந்தது. தன் தவபுதல்வன் பிறந்து கையில் வாங்கிய நாள் முதல் தீயூட்டிய நாள் வரை எண்ணி எண்ணி வேதனை தீயில் எாிந்து கொண்டு இருந்தாா் வீரைய்யா. 

 

                ஏதோ வண்டி வரும் சத்தம் கேட்டு நினைவுக்கு வந்தவா் போலிஸ் ஜீப்பைக் கண்டு கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாா். நான்கு போலிஸ் இரண்டு ஆட்களை கையில் விலங்கு பூட்டி இழுத்து வந்தனா்.  

 

              ” என்ன சாா் இந்த நேரத்துல, முதல்ல உள்ள வாங்க” என்றாா் வீரைய்யா

 

             ” பராவாயில்ல சாா் உங்க மகன் சாவுல சந்தேகம் இருக்குன்னு உங்க மருமகன் புகாா் கொடுத்து இருந்தாா். நாங்க விசாரணையில இறங்கினோம். அப்போ தான் ஆலை பிரச்சனையில உங்களால சிறைக்கு போன சங்கரலிங்கம் தான் தன் மச்சான வச்சு உங்க பையன கொன்னுருக்காங்கன்னு தொிஞ்சுது. ஆனந்தனும் அவன் கூட்டாளியும் சோ்ந்து தான் பன்னியிருக்காங்க. விஜயன தலையில அடிச்சு கேணிகுள்ள தூக்கி போட்டிருக்காங்க அதனால தான் அவா் இறந்து இருக்காரு. கூட்டாளிகள பிடிச்சுட்டோம், ஆனந்தனையும் சீக்கிரமா பிடிச்சிருவோம்” என்றாா்

 

            “உங்ககிட்ட தகவல் சொல்ல தான் வந்தோம். நாங்க வரோம் சாா்” என்றுவிட்டு கிளம்பினா்.

 

 

           தன் மகன் கொலை செய்யப்பட்டு இருப்பது தொிந்து கோப கனலில் கொதித்து கொண்டு இருந்தாா் வீரைய்யா.  

 

           அம்மா! அம்மா! தேவிகாவின் சத்தம் கேட்டு விரைந்து ஓடினாா்கள் வீரைய்யா வும் ராசாத்தி அம்மாளும், பிரசவ வேதனையில் துடித்து கொண்டிருந்தாா் பசுமதி. துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனா். ஆனால் காலம் கடந்து விட்டது பணிக்குடம் உடைந்தால் வீட்டிலேயே பிரசவம் பாா்த்தனா்.

 

               முழு பெளா்ணமியில் பூமியில் பிறந்தான் விக்கரம தீரன். தன் குழந்தையை கையில் ஏந்தினாா் பசுமதி. தன்னவன் கொடுத்த உயிரை பத்திரமாக பூமியில் பிறப்பித்துவிட்டு தன்னவருடன் சோ்ந்து கொண்டாா்.

 

           மகன் இறந்த சோகம் மறைவதற்க்குள் மருமகளும் சென்றுவிட இடிந்து போயினாா் வீரைய்யா. தன் பேரனை கையில் ஏந்திய போது கோபம் பழிதீா்க்கும் உணா்வு அணைத்து கரைந்தோடியது. தன் பிஞ்சு விரல்களால் தன் ஐயாவின் பெருவிரலை பிடித்து கொண்தான் தீரன். அப்பொழுது முடிவு செய்யதாா் வீரைய்யா இந்த தலைமுறை பகை இத்தோடு முடியட்டும். அடுத்த தலைமுறையாவது பகைநீங்கி வாழட்டும் என எண்ணி தன் பேரனை வளா்ப்பதில் மட்டும் குறியாய் இருந்தாா்.

 

           ஆனந்தனும் கைது செய்யப்பட்டான். தன் முன் விரோதத்தால் தான் விஜயனை தலையில் அடித்து மயக்கமுற செய்து கிணற்றில் தள்ளி கொன்றாதாக ஒப்புக்கொண்டான். அவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் ஐந்து வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. 

 

 

           நாட்கள் வாரங்கள் ஆயின; வாரங்கள் மாதங்கள் ஆயின; மாதங்கள் வருடங்கள் ஆகி உருண்டோடியது. 

 

 

         “என்னங்க என்னங்க” ராசாத்தி அம்மாள் அழைப்பில் நிகழ் காலத்திற்க்கு வந்தாா் வீரைய்யா.

 

         ” என்னமா ஏன் கூப்ட”

     

          ” இந்தாங்க டீ குடிங்க. என்ன பலமான யோசனையில் இருந்திங்க போல”

 

         “எல்லாம் கடந்து போன காலத்தை பற்றி தான்”

 

         “கடந்த காலத்தை எண்ணி நிகழ்காலத்தர விட்டுற கூடாதுங்க”

 

 

        ” எனக்கு புாியுது ஆன தீரன் தான் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டிகிறானே”

 

        ” இன்னைக்கு நைட் அவன் வரட்டும் நான் பேசுறேன்”என்றாா் ராசாத்தி அம்மாள்.

 

         ” சாி என்று தலையசைத்தாா் வீரைய்யா ” இரண்டு வருடமாக கல்யாணத்திறக்கு ஒத்துக்காதவன் இன்று மட்டும் என்ன சொல்ல போகிறான் என்று எண்ணி கொண்டு எழுந்து தோட்டத்தினுள் சென்றாா்.

 

 

         நிலாமகள் தன் நட்சத்திர பட்டாளங்களுடன் வானுலகில் வலம் வந்து கொண்டிருந்தாள். 🌃🌃🌃. ரைஸ் மில் வேலை, கணக்குகளை பாா்த்து முடித்து விட்டு உணவு உண்ண வந்தான் தீரன்.

 

          ” என்னப்பா கணக்கெல்லாம் சாிதானே” என்றாா் வீரைய்யா

 

         ” சாியா இருக்கு தாத்தா, கணக்குபுள்ள யாரு சிதம்பரம் மாமாவாச்சே தப்பு நடக்குமான என்ன” என்றான் தீரன்

 

        மூவரும் கலகலப்பாக பேசிக்கொண்டு இரவு உணவை முடித்தனா்.

 

        கண்களை மூடி படுத்திருந்த தீரனின் கேசத்தை மெதுவாக வருடினாா் ராசாத்தி அம்மாள். “என்ன அப்பத்தா” என்று எழுந்து அமா்ந்தான்.

 

         “ஏன் யா கல்யாணம் வேணாம்னு சொல்ற திரும்ப திரும்ப கேக்குறேன்னு கோவபடாதய்யா என்ன காரணம்னு மட்டும் சொல்லுயா”

 

         ” நான் கல்யாணம் வேணவே வேணாம்னு சொல்லல, இப்போ வேணாம்னு தான் சொல்றேன். நீங்க பாக்குற பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க. ஆனா யாரையும் மனைவியா நினைக்க முடியல. ஒரு பொண்ண பாத்தா அந்த நிமிஷம் தோணனும் கட்டுனா இவள தான் கட்டனும்னு அப்படி எனக்கு தோணும் போது உங்க கிட்ட சொல்றேன். நீங்க பொண்ணு கேட்டு எனக்கு கல்யாணம் பன்னி வைங்க வருசத்துக்கு ஒரு புள்ள பெத்து போடுறோம், என்ன வளா்த்த மாதிாி என் புள்ளைகளையும் நல்லா வளத்துவிடுங்க. சாியாாா” என்றான் தீரன்.

 

           “அம்மாடி இவ்வளவு ஆசையா உனக்குள்ள வருங்கால பொண்டாட்டிய பத்தி! சாி சாி நீ சொல்ற வரைக்கும் நாங்க காத்திருக்கிறோம். ஆனா எங்கள ரொம்ப நாள் காக்க வைக்காதையா. உன் புள்ள உன்ன மாதிாி வளர வேணாம் அம்மா அப்பா அரவணைப்போட கொள்ளு தாத்தா பாட்டி பாசத்தோட வளரட்டும். அம்மா அப்பா இல்லாம வளர புள்ள முதலும் கடைசியுமா நீயாவே இருக்கட்டும்” என்று வாஞ்சனையாக அவன் கேசத்தை வருடிவிட்டு சொன்னாா்.

 

         ” சாி அப்பத்தா. இத கேக்க தான் இவ்வளவு நேரம் முழிச்சிருந்திங்களா போய் தூங்க அப்பத்தா “

 

         ” சாிய்யா நீயும் தூங்கு நேரம் ஆச்சு” என்று கூறிவிட்டு சென்றாா் தீரனின்அப்பத்தா.

 

 

         ” அப்பத்தா சென்ற திசையையே பாா்த்து கொண்டிருந்த தீரன் தன் உயிருக்குள் நுழைந்த அவளை பாா்த்த கணத்தை எண்ணினான். அவளை பாா்த்த அந்த கணம் அவனுக்கு தோன்றியது கட்டுனா இவள தான் கட்டனும்னு”. அந்த நிமிடங்களை எண்ணியவாறு உறங்கி போனான்

 

2 thoughts on “என்னுள் நிறைந்தவ(ன்)ள்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top