மாமனே 18
பிறை நிலவு அவள் முழு மதியாய் மாறிக் கொண்டிருக்கும் காலமது!!
கன்னி பெண்ணவளும் காதலாய் கைசேர்ந்த கணவனிடம் தஞ்சம் கொண்டு அவன் மஞ்சம் சேர்ந்து திருமதியாய் மாறக் காத்திருக்கும்
நன் இரவது!!
மொட்டை மாடியோடு இணைந்திருக்கும் மற்றொரு அறையில் தான் மனைவிக்காக காத்திருந்தான் மாணிக்கவேல்!!
அன்றைய இரவில் அவளை அணைத்து ஆலிங்கனம் செய்து அளவற்ற முத்தங்கள் கொடுத்து, அவனவளை எடுத்துக் கொள்ள அவனை அறியாமல் உணர்வு பிரவாகம் எடுத்தது!!
ஆனால்… இன்றோ ஏனென்று தெரியாத ஒரு தடை!! அவனுள் மெல்லிய பதட்டம்!!
“என்ன மாம்ஸ்… ஒரே டென்ஷனா இருக்கீங்க போல?” என்று கொஞ்சல் குரல் கேட்டு திரும்ப.. அங்கே மோகன புன்னகையோடு எழிலோவியமாய் நின்று இருந்தாள் மலர்விழி, தன் விழியால் அவனை காந்தமென இழுத்து!!
அவனை அறியாமல் அவள் பால் ஈர்க்கப்பட்டவன் எழுந்து மெல்ல அவளை நோக்கி நடந்தான்.
நிலவுக்கு ஈர்ப்பு சக்தி இல்லை என்று சொன்னது யாரடி??
இதோ முழு நிலவாய் நின்று எனை நீ ஈர்ப்பதும் ஏனடி!!
அவசரமாய் அவன் மனதில் ஒரு காதல் கவிதை!!
“மாம்ஸ்… என்ன ட்ரீம்ஸா?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி ஒய்யாரமாக நின்று கேட்டவளை ரசித்துப் பார்த்தான் கணவனாய்!!
அவள் கேட்ட தினுசில் சிரிப்பு வந்தாலும் உண்மை அதுதான். சற்று படபடப்போடு தான் இருந்தான் மாணிக்கவேல்.
மதுரையில் இருந்தவரை ஒன்றும் தெரியவில்லை. இன்று தன் சொந்த மண்ணை மிதித்ததும் அவனையும் அறியாமல்.. அழையாமல்.. பழைய நினைவுகள் அவன் மனதில் முட்டி மோதி அவனை ஒரு வழியாகத்தான் செய்தது!!
மனைவியின் அருகாமையில் அதனை மறந்தாலும் மற்ற வேளையில் அவ்வுணர்வுகள் அவனுக்கு வலியை கொடுக்க.. ‘மனைவியிடம் சொல்லிவிடலாமா?’ என்று பலமுறை முயன்று வேண்டாம் என்று தன் மனதுக்குள் புதைத்து விட்டான்.
இது அவனோடு மட்டும் போகாது இன்னொரு பெண்ணோட வாழ்க்கையும் உள்ளது. மனைவி சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், அடுத்த முறை அவளை பார்க்கும் போது அந்த கேள்வி வரும்? நன்றாக செல்லும் அவர்கள் வாழ்க்கையில் ஏன் நாம் குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும் என்று, அதை முழுவதுமாக மறந்து விட, மனதினுள் மறைத்து விட முடிவெடுத்தான்!!
“ஆமா கொஞ்சம்…!” என்று ஹஸ்கி வாய்ஸில் தலையை சாய்த்து கண் சிமிட்டி ஒத்துக் கொண்ட கணவனை விழி விரித்து பார்த்தாள்.
அது அவன் கொண்ட பதட்டத்துக்காய் அல்ல.. அவனின் இந்த குழைந்து நின்ற விதத்தில்!!
“அப்போ சரி.. நீங்க கொஞ்சம் டென்ஷனை குறைங்க! நான் கொஞ்சம் தூங்குறேன். காலைல இருந்து செம டயர்ட்!” என்ற அவள் கட்டிலில் அவன் அருகில் படுத்துக்கொள்ள..
இவனும் பின்னோடு அவளை இறுக்கமாக அணைத்திருந்தவன்,
“புருஷன் டென்ஷன்னு சொன்னா அந்த டென்ஷனை குறைக்கிற தார்மீக பொறுப்பு மனைவியை சேரும் அம்மிணி..” அணைத்து இருந்தவனின் கரங்கள் முன்னால் அவள் வயிற்றோடு கோர்த்திருக்க… இருவருக்குள்ளே உள்ள இடைவெளியை அவன் இஷ்டப்படி குறைத்திருக்க.. அவன் கையின் வேற்றுமை பெண்ணவளுக்கு அப்போது புரிய.. மெல்லிய சிலிர்ப்பு அவளது உடலில்!!
“இப்போ நீ ஏன் டென்ஷன் உங்களுக்குனு கேட்கோணும்?” என்றான் சீண்டலாக.. சீண்டல் வார்த்தைகளில் மட்டுமில்லை, வாயாலும் தான்!!
மாணிக்கவேலின் இந்த அமைதியான தாக்குதலில் பேச்சு வரவில்லை மலருக்கு வெறும் மூச்சு மட்டுமே பலமாய்!!
“கேளுங்க… அம்மிணி?” என்று மீண்டும் சீண்ட.. இம்முறை நாவினால்!!
“ச்சொல்லுங்க… ஏ.. ஏன்… ட்டென்ஷன்?” என்று திக்கித் திணறி ஒரு வழியாக கேட்டு விட்டாள்.
“அதுவா அம்மிணி… எனக்கும் என்ற பொஞ்சாதிக்கும் இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்டுங்கோ.. எனக்கு இதுல அனுபவம் இல்லிங்… ஆனா.. என்ற பொஞ்சாதிக்கு பயங்கர கேள்வி ஞானமுங்க… அது தான் பயந்து பயந்து வருதுங்… காலையில என்ற ஐயன் அம்மா முன்னில நான் முழுசா இருப்பேன்னானு?” முதலில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாதவள்… புரிந்ததும் திரும்பி அவனது புஜத்தில் நறுக்கென்று கடித்து வைத்தாள்.
“நான் சொன்னேன் தானுங்.. பாருங்.. இப்பவே உங்க ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டீங்க. இனி விடியறதுக்குள்ள என் நிலைமை என்னவோ??” என்று அவன் பாவம் போல முகத்தை வைத்து சொன்னதும், இவளோ செல்ல கோபம் கொண்டு மீண்டும் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
“கோபமுங்களா…?” என்று அவன் கேட்க… கோபம் என்று சொன்னால் கணவன் சமாதானப்படுத்துவானோ என்று எண்ணி, “ஆமாம்…” என்று கூறி தலையாட்டினாள்.
“என்ன நீங்க பொசுக்குனு ஆமா சொல்லிட்டீங்க. அப்போ நமக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்லையாங்? நான் உங்களோட ஹெவி பர்பாமன்ஸ பார்க்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேனுங்.. இப்படி ஏமாத்திட்டுங்களே.. அம்மிணி?” என்று உதட்டில் முகிழ்த்த சிரிப்பை அவன் மறைத்தாலும், அவன் தோள்கள் என்னவோ குலுங்கி அதனை காட்டிக் கொடுத்தன.
“உங்கள… உங்கள…” என்று பெரு மூச்சு விட்டவள் என்ன சொல்லி அவனை திட்டுவது என்று கூட தெரியாமல் திரும்பாமலேயே இருந்தாள்.
சற்று நேரம் அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. “உறங்கி விட்டானோ? பாரேன் நம்மள சீண்டி விட்டு இவர் தூங்குவதை!” என்று எண்ணினாலும் திரும்பி அவனை பார்க்காமலே படுத்திருந்தாள்.
அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டின் ஓரம் தோளிலிருந்து மெல்ல விலக்கப்பட.. மெல்லிய அதிர்வு அவளிடத்தில், அவள் பின் கழுத்தில் முகம் புதைத்து இதழ்களால் உரசினான். கூடவே அவனது கற்றை மீசையும் அதில் கவி பாட…
“தூங்கலையா நீங்க?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் பெண்.
“நான் டென்ஷனா இருக்கேன்னு சொன்னேன்லங்.. நீங்க தான் ஹெல்ப் பண்ணுல! அதான் அந்த டென்ஷனை நானே குறைச்சுக்கிட்டு இருக்கேனுங்!! குறைச்சிக்கவா?” என்று அவன் குரல் அவளை உரச.. இந்த புது உணர்வில் புல்லரித்தது உடல் எங்கும்!!
அவனின் அந்த மயக்கும் குரல் அவளை கொள்ளையிட.. மெதுவாக திரும்பி அவனை மையலாக பார்த்தாள் மாது!!
“சொல்லுங்… குறைச்சிக்கவாங்?” என்று அவன் இதழ்கள் அவள் வெற்று தோளில் கவிபாட அவன் கேட்க… பதில் சொல்ல முயன்றும் வார்த்தைகள் பஞ்சமானது அவளிடம்!!
“ம்ம்ம்..!!” என்ற மலர்விழியின் காதல் கொஞ்சம் ரகசிய பேச்சில் அவளை மொத்தமாக அள்ளி தன் மீது போட்டுக் கொண்டான் மாணிக்கம். அவளின் மாயவன்!!
ஆம் மாயவன் தான்! மாயம் செய்து கொண்டு இருந்தான் அவளில்!! ரகசிய பேச்சாலும்.. உரிமை தீண்டலாலும்!!
பாவை பாஷை எதுக்கு?
பார்க்கும் பார்வை ஒன்றே போதுமே… என்று அவள் ஒற்றை பார்வைக்காக காத்திருந்தவன் போல.. முத்தங்களை அவன் காணும் இடங்களில் எல்லாம் கொடுத்தான் அவள் அங்கங்களில்..
அவள் அங்கங்களை ஸ்பரிசிக்க முயல..
அதற்கு தடையாய் உடை! அதனை உடை!!
உடைகள் விடை பெற.. பெண்ணவள் தேகமும் தீயின் தகிப்பைக் கொள்ள.. மன்னவன் தன் மோக உணர்வினை தாப மூச்சுகளை மெல்ல மெல்ல அவளுள் கடத்தினான். அதில் சிக்குண்டு சிதறி சிலிர்த்தாள் பெண்ணவள்! அவனின் மீசை முடிகள் கூட பெண்ணை தீண்டி சீண்டி இம்சித்து.. பெண்ணவளின் உச்ச உணர்வுகளை தூண்டின!!
மோக போர்வையில்…
முத்த கும்மாளம் அங்கே!!
ஆம்.. முத்தங்களின் ரீங்கார சத்தங்கள் மட்டும் இடைவிடாது இரவை விடாது
முற்றுகையிட்டது!!
அவளது அங்கங்கள் முழுவதும் அவனின் தீண்டல்கள்!!
அவனது தீண்டலில் தவித்து போனாள் பெண்ணவள்!!
பதிலுக்கு அவள் நகங்கள் பதித்தன காதல் தடங்கள்!!
கிரேக்க சிற்பமாக தன்னுள் விழுந்தவளை முதலில் தன் கண்கள் கொண்டு ஆராதித்தவன், பின்பு கை விரல்களால் மெல்ல வருடினான். பின் தன் முரட்டு உதடுகளால் ஆவேசமாக ஆளுமை செய்தான். பின் ஆளுமை செய்த இடங்களை கன்றி சிவந்திருக்க அவற்றை நாவைக் கொண்டு அர்ச்சித்தான்!!
ஒருமுனை தாக்கலாய் இருந்தது மும்முனை தாக்கலாக மாறியது அவன் விரல்கள் உதடுகள் நாவு என மூன்றாலும்!!
முதலில் முத்த திருட்டில் ஆரம்பமான அவர்களது உறவு நேரம் செல்ல செல்ல மோக திருட்டில் மொத்தமாய் பயணித்தது.
வலிகள் போய் சுகங்களின் மிச்சங்கள் அவள் உடலில் தேங்கி நிற்க… உடல் நடுங்க தன் மீது படர்ந்தவனை அணைத்துக் கொண்டாள்.
இரவினை கொண்டாடி தீர்த்தர்வர்கள்.. சூரியனை வரவேற்கும் எண்ணமற்று ஆழ்ந்த துயிலில் மூழ்கினர்.
அது சரி.. காதலர்களுக்கு இரவு தானே இன்பமயம்!!
விடிந்தும் தாமதமாகவே எழுத்து வந்தவர்களை பலர் கவனிக்காதது போல் கவனித்தாலும்.. வேதாமணிக்கு தான் பெண்ணிடம் எப்படியாவது கேட்டு விட வேண்டும் என்று எண்ண தவிப்பு! அது பெண்களைப் பெற்று அம்மாவிற்கே உள்ள தவிப்பு!!
அல்லிமலரிடம் அந்த தவிப்பெல்லாம் காணவே முடியவில்லை. என்று இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டானோ, அதுவும் பெற்றோர்களுக்கு தெரியாமலே… அப்பொழுதே மகனது வாழ்வு மலர்ந்து விட்டதை போல தான் அவர் இருந்தார். அது உண்மை என்று மகனின் முகப்பொலிவே இன்று கட்டியம் கூறியது! பிறகு என்ன பேச்சுக்கு அங்கே வேலை??
மனைவி சென்ற இடமெல்லாம் பார்வையால் தொடர்ந்தான் மாணிக்கவேல். பார்வை என்னவோ விறைப்பாக இருந்தாலும் அதில் இருக்கும் காதலை ஏன் அதை தாண்டிய மோகத்தையும் தெரியாதா மனைவிக்கு?
“அப்பப்பா என்ன இவர் கண்களாலே இப்படி விழுங்கி விடுவது போல பார்க்கிறாரு?” என்று இவளும் விழி எடுக்காமல் அவனையே பார்க்க.. அவனின் பார்வை வீச்சில் கலந்த இவள் பார்வை விலகிக் கொள்ள முடியாமல் தவிக்க… கண்களால் கலவி செய்ய முடியுமா என்ன!?? ஆம்! செய்ய முடியும் என்பதை காட்டிக் கொண்டிருந்தான் காதலனாய் மாணிக்கவேல்!!
“அப்பப்பா இனிமே இவர் பக்கத்தில் கூட நிக்க கூடாது!” என்று வேகமாக ஓடியவளை எல்லாம் விட்டுவிடவில்லை அவன்.
தனிமையில் அவளை பார்க்கும் போதெல்லாம் அணைத்துக் கொண்டவன், கிடைத்த நேரத்தில் இடத்தில் எல்லாம் முத்தமிட்டான்… அவசரமாக இருந்தால் நெற்றியில் சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் நிதானமாக இதழ்களில் என்று ஏதாவது செய்து அவளை திணறடித்துக் கொண்டே இருந்தான் அன்று பார்க்கும் நேரம் அனைத்திலும்.
“ஐயோ விடுங்க.. கோயிலுக்கு கிளம்பனும்! இப்படியே செஞ்சிட்டு இருந்தா எப்ப கோயிலுக்கு போறது? இன்னைக்கு கோயில்ல பொங்க வைக்கணும்னு அத்தை சொல்லி இருக்காங்க.. நீங்க கொஞ்ச நேரம் தள்ளியே நில்லுங்க!” என்று கோபமாக கூறுவது போல் கொஞ்சலாக கூறிவிட்டு செல்லும் மனைவியை சிகை கோதி பார்த்திருந்தான் மாணிக்கவேல்.
அப்போது அந்த வழியாக சென்ற கதிரேசன் மாணிக்கவேலை முறைத்துக் கொண்டே சென்றான்.
“இவன் அவளுக்கு முறைமாமானா? இல்லை எனக்கு முறைமாமனா? எப்ப பார்த்தாலும் என்னை முறைச்சுக்கிட்டே திரிகிறான்! இது சரி இல்லையே??” என்று எப்பொழுதும் போல் நடுவிரல் கொண்டு நடு நெற்றியில் இவன் தேய்த்துக் கொண்டே நிற்க..
“மாப்ள.. உன்னைய மாமா கூப்பிடறாங்க” என்று அவன் மாமாக்களில் ஒருவன் கூப்பிட, “இதோ வந்துட்டேனுங்க…” என்று அவ்விடம் விட்டு சென்றான்.
அடுத்து மீண்டும் சொந்த பந்தங்கள் புடை சூழ குடும்பமாய் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்தனர்.
சமையல் என்றால் அசைவமோ சைவமோ ஆல் இன் ஆல் அழகு ராணி மலர்விழி!! ஆனால் இன்று ஏனோ இந்த பொங்கலை வைக்கத்தான் அத்தனை சிரமப்பட வேண்டியதாய் இருந்தது. காரணம் எதிரில் அமர்ந்து கொண்டு இவளையே விழி எடுக்காமல் பார்க்கும் கணவனின் பார்வையால் அத்தனை தடுமாற்றம் பெண்ணுக்கு!!
இதில் இரண்டு முறை கூட அவள் சுட்டுக் கொள்ள.. அருகில் வந்து பார்ப்பது போல சட்டென்று அந்த விரலை எடுத்து தன் வாய்க்குள் வைத்து அச்சூட்டினை தணிக்க தன் வாய் குளுமையை அவன் பயன்படுத்த.. விதிர்விதிர்த்து போய் கையை பிடிங்கிக் கொண்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“ம்ப்ச்.. என்ன அம்மிணி? அதெல்லாம் யாரும் கண்டுக்க மாட்டாங்க.. அப்படியே கண்டுக்கிட்டாலும் சின்னஞ்சிறுசுகனு அவங்க அந்த பக்கம் போயிடுவாங்க..” என்று மீண்டும் மீண்டும் உரசி நின்றவனை ஒரு வழியாக இழுத்து எதிரில் அமர வைத்தாள்.
அவனது பேச்சு பரவாயில்லை என்றது போல இருந்தது, அவனது விழி வீச்சு!!
“மதனி பாத்துக்கோங்க.. எனக்கு கை கொஞ்சம் எரியுது. நான் அப்படி உட்காருரேன்” என்றதும், “நீ போத்தா.. நான் பாத்துக்குறேன்” என்று எழில் கூற, சற்று தள்ளி அமர்ந்தவள் முன் ஐஸ் கட்டிகள் நிறைந்த கப்பை நீட்டிக் கொண்டு நின்று இருந்தான் கதிரேசன்.
“அப்பா.. ரொம்ப தேங்க்ஸ் அய்த்தான்!” என்று ஐஸ் கட்டிகள் நிறைந்த கப்பை அருகில் வைத்து அதில் கையை வைக்க, அப்போதுதான் அவளுக்கு அந்த வலி கொஞ்சம் மட்டுப்பட்டது.
அப்படி ஒன்றும் பெரிதாக சுட்டு விடவில்லை. இரண்டு இடத்தில் லேசாக காந்தியது. இதை யாரிடம் சொன்னால் ஏதேனும் சகுணத்தடை என்று கூறி விடுவார்களோ என்று பயந்து தான் அமைதியாக விட்டுவிட்டாள்.
ஆனால் கதிரேசனுக்கு அப்படி இருக்க முடியவில்லை. மீண்டும் மாணிக்கவேல் முன்னே நின்று அவனை எரித்து விடுவது போல பார்த்தவன், அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
ஜீவனை அழைத்த மாணிக்கவேல் “அங்க போறான் பாரு என்னோட பங்காளி.. அவனுக்கு நிறைய ஐஸ் வாங்கி கொடுடா! எப்ப பார்த்தாலும் என்னை முறைச்சுக்கிட்டே நிக்கிறான்” என்று கிண்டல் அடிக்க,
“இதோ போய் அந்த பங்காளியை அமுக்கிட்டு வரேன் மாமா..” என்று ஓடினான்.
சொந்தங்களின் கலகலப்பான பேச்சு ஒரு புறம் சென்று கொண்டிருக்க.. இங்கே பொங்கலும் நன்றாக வந்துவிட சாமியின் முன்னால் வைத்து படையல் இட்டு பூஜை செய்தனர்.
இவர்கள் இரு குடும்பங்கள் மட்டுமே அங்கே கருவறையில் நின்று இருந்தது. மற்ற சொந்தங்கள் அங்காளி பங்காளிகள் எல்லாம் அங்கே போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்தனர். இன்னொரு பக்கம் கோயிலில் இருந்த மண்டபத்திலேயே அனைவருக்கும் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
அனைவரும் மனம் உருகி கண்களை மூடி கேட்ட வரம் தரும் அந்த அன்னையை.. உலகை ஆளும் பராசக்தியை.. தியானித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பஞ்சவாத்தியம் முழங்க.. சாமிக்கு ஆரத்தி காட்டுகிறார்கள் என்று அனைவரும் கண்விழித்து பார்த்த.. அதே நேரத்தில் அருகில் இருந்த தேனுவின் கழுத்தில் தாலியை கட்டிக் கொண்டிருந்தான் கதிரேசன், மாணிக்க வேலை முறைத்தப்படி…
Super sis ❤️
Superb sis
Sema 👌👌👌👌👌👌