24
எங்கு காணினும் நின் காதலே!!
ஜியா ஜானவி ❤️
எதிர்பாராத தருணத்தில்.. எதிர்பாராத சந்திப்பு.. எதிர்பாராத நபர்களிடமிருந்து!!
முதலில் அண்ணனை பார்த்து அதிர்ச்சியில் அவன் சொன்னதை முழுதாக கவனிக்கவில்லை நிவேதிதா.
பின் தான் தான் நிற்கும் நிலையை உணர்ந்து.. “அச்சச்சோ!!!” என்று பதறி.. குளியலறைக்குள் புகுந்து கொள்ள.. தங்கை ஓடியவுடன் தான், அவனும் அதிரச்சி விலகி “அய்யயோ!!” என்றான் சத்தமாக..
இரண்டு பேரும் அதிர்ச்சிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாமல் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் வெற்றி வேந்தன்!!
வேகமாக சென்றவன் போர்வைக்குள் பதுங்கியிருந்த நம் அரிமா வெற்றியை இழுக்க முயன்று தோற்ற மருதுவோ, சட்டென்று அவன் போர்வையில் கை வைத்து இழுக்க..
போர்வை முற்றிலுமாக அவனிடமிருந்து விடை பெறும் அந்தக் கடைசி நொடியில், சட்டென விழித்த வெற்றி போர்வையை கைப்பற்றி தன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டான்.
“டேய் மாப்ள!! நீ எப்படா வந்த?” என்று தன் வேதாவை மறந்து மச்சானோடு அவன் பாசப்பயிர் வளர்க்க, போர்வையை வேட்டி போல சுற்றிக் கொண்டு மருதுவை ஆரத்தழுவ வெற்றி நெருங்க.. இரண்டு எட்டு பின்னுக்கு நகர்ந்தவன், “கருமம் கருமம்.. போய் முதல்ல குளிச்சிட்டு வாடா” என்று தலையிலடித்துக் கொண்டே மருது திரும்பி நின்று கொள்ள..
“ஐயையோ!!” என்று வெற்றியும் சத்தமிட்டவன், தான் இருக்கும் நிலைமை அப்போது தான் புரிய பாய்ந்து குளியலறைக்குள் நுழைந்தான்.
ஏற்கனவே குளியலறைக்குள் நுழைந்திருந்த நிவேதாவோ கதவைத் தாளிடாமல், “அச்சோ நிவே.. இந்த கோலத்துல போய் அண்ணன் கிட்ட மாட்டிகிட்டியே.. இனிமே அவரு முகத்தில் எப்படி விழிப்பேன்?” என்று தனக்குத்தானே கண்ணாடி முன் நின்று பேசிக் கொண்டிருந்தாள் நிவேதிதா.
குளியல் அறைக்குள் புகுந்த வெற்றியும் அவள் பின்னால் நின்று “ஆமாம் வேதா டார்லிங்.. இனிமேல் எப்படி உங்க அண்ணன் மூஞ்சில விழிப்போம்” என்று கூட சேர்ந்து சிந்து பாட…
நேற்று வெற்றியின் காதல் களியாட்டங்களால் பற்தடம் பட்டு ஆங்காங்கே சிவந்த நிறத்தில் கன்னிப் போய் இருந்தது நிவேதிதாவிற்கு. அதை கண்ணாடி வழி பார்த்தவனுக்கு.. நேற்றைய அவன் இச்சுக்களின் அச்சுகளை பார்த்தவனுக்கு இன்று அவற்றின் மிச்சங்களை தொடர ஆவல் பீறிட..
பின்னிருந்து அணைத்தான் தன் காதல் கிளியை.. அவளை கசட்டாவாக மாற்றி சுவைத்திட ஆரம்பித்தான் இந்த கள்வன்.
அவன் அணைப்பினால் படர்ந்த சூடு உடல் முழுவதும் ஊடுருவி கன்னங்களில் பரவி கண்கள் வழியாக வெளியேறியது. பயம் கலந்த அதிர்வுடன் நீள்மூச்சு விட்டபடி அவன் கழுத்தை பின்பக்கமாக இறுக்கிக் கொண்டாள் நிவேதிதா. இருவரிலும் மோகத்துக்கான ஆவேசம் எழ.. உணர்ச்சிகளின் உச்சத் தூண்டலில் உடலின் மொத்த பாகங்களும் சிலிர்க்க.. அவளது காது மடலைக் கவ்விச் சப்பி விடுவித்தவன்.
“மார்னிங் ஷிஃப்ட் போடலாமா வேதா டார்லிங்?” என்றவன், அவள் பதிலுறைக்கும் முன், இதழ்களை கொய்திருந்தான் பக்கவாட்டில் திருப்பி அவள் முகத்தை..
பின் அவன் உதடுகள் அவள் கன்னத்தை கவ்வி, அவள் கன்னத்தின் மீது தன் கன்னத்தை வைத்து தேய்த்தபடி அண்ட சாரசங்களை மறந்து அவர்களுக்கு மட்டுமேயான உலகில் சஞ்சரித்தனர்
காதல் கொண்ட புறாக்கள் மோகத்தில் திளைத்து தாபத்தில்..
அண்டசராசரமே மறந்து போன நிலையில் அதில் ஒரு தூசு போல் வாழும் மருது மட்டும் ஞாபகத்தில் இருக்கவா போகிறான் அவர்களுக்கு??
இடி மின்னலாக ஆரம்பித்து காற்றில்லா மழையாக பெய்து ஊசித் தூறலாய் மின்னியபடி நின்று பெய்யும் மென்மழை போல, அவர்களது மோகங்களும் அவர்களிடையே சதிராட்டம் ஆட...
நேற்றிரவு பெய்த மழையால் ஊரே குளிர்ந்திருந்தது. அந்த குளிர்ச்சியை அனுபவித்து உடல் சிலிர்த்தபடி விரிந்த அவன் கைகளுக்குள் அடைக்கலமானாள் பெண்ணவள். அவளைக் கட்டிப் பிடித்தவன். முகத்தை மறைத்த முடிக்கற்றைகளை மிருதுவாக பிரித்தெடுத்து காதுக்கு பின்னால் சொருகிவிட.. அவளும், அவனின் முடி படர்ந்த மார்பில் அணைத்து அவனைக் கட்டிப்பிடித்து நின்றாள் கிறக்கமாக..
அவள் கழுத்தில் முகம் வைத்து அவளை வாசம் பிடித்தவன், பின் மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட அவளோ மயங்கி கண்களை மூடினாள். அவள் கண்கள் மீது முத்தமிட்டு மூக்கோடு மூக்கை உரசி முத்தமிட்டான். நுனி மூக்கை வாயில் கவ்வ சிணுங்கி முகத்தை விலக்கினாள் காந்தையவள்.
பட்டு போலிருந்த அவளின் பருவக் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். மெல்லக் கடித்துச் சுவைத்தான். சிணுங்கியபடி அவனை பலமாக இறுக்கி அவன் நெஞ்சத்தில் தஞ்சமடைந்தாள் அவள். மீண்டும் அவள் கன்னத்தில் உதடுகளை அழுத்தி பொருத்திக் கொள்ள.. உணர்ச்சியின் உச்ச கணத்தில் அவன் மார்பை கவ்விக் கொண்டாள் மாது. அவனை பலமாக இறுக்கிப் பின்னிக் கொண்டு முனகித் தவித்தாள்.
நேற்று கற்றுக்கொண்ட பாலபாடம் இன்னும் இன்னும் சுவையூட்ட அதிலேயே மயங்கி முயங்கி இவர்கள் திளைத்துக் கொண்டிருக்க..
பாவம் அவர்களை சேர்த்து வைக்க வந்த அந்த அப்பாவி ஜீவனோ வெளியில் வயிற்றை பிடித்தவாறு இங்கும் அங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தான்.
காதலர்களுக்கு இடி மின்னலாக மோக மழை பொழிந்து கொண்டே இருக்க அங்கே மருதுவுக்கோ அதே இடி மின்னல் மழை எல்லாம் வயிற்றுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது. விமானத்தில் கொடுத்த ஏதோ ஒரு உணவுப்பொருள் அவனுக்கு ஒத்துக் கொள்ளாமல் போக நேராக மச்சானை பார்க்க வேண்டுமென்று அதுவும் அவன் அறையிலேயே தங்கி கொள்ளலாம் என்று வந்தவனுக்கு இப்பொழுது அதற்காக அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கிறான்.
பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஒரு கட்டத்தில் பொங்கி எழ வேண்டிய நிலைக்கு ஆளாக வேகமாக வந்து மீண்டும் கதவை தட்டினான்.
“உன் அண்ணனுக்கு இதே பொழப்பா போச்சு.. காலையில நிம்மதியான தூங்கிட்டு இருக்கும் போது தட்டி எழுப்பி விட்டான்.. இப்ப பாரு கொஞ்சமாச்சும் ரொமான்ஸ் பண்ண விடுறானா இவன் என்னை?” அப்போதுதான் மருதுவை பற்றி எதுவுமே நிவேதிதாவிடம் சொல்லாமல் இருப்பதை உணர்ந்தவன் “அச்சோ வேதா” என்று இரு கைகளாலும் வாயை பொத்தி அவளை பார்க்க..
அதுவரை அவனது அணைப்பிலும் காதலுடன் கொஞ்சம் கிளியாக இருந்தவள் இப்போது சீறும் வேங்கை என சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“நேத்து நைட்டு நான் சொல்ல வந்தேன் வேதா டார்லிங்..” என்று அவன் ஆரம்பிக்கும் போதே முன்னால் கையை நீட்டி நிறுத்து என்பது போல் சைகை செய்தவள் “வந்து உனக்கு இருக்கு” என்று அவசரமாக குளித்துவிட்டு மீண்டும் அவனது உடையை அணிந்து கொண்டு அவள் வெளியே வர..
“அந்த நாதாரி உள்ள என்ன பண்றான்? பாப்பா.. சீக்கிரம் வர சொல்லு. எனக்கு அவசரமா போகணும்?” என்று மச்சானும் மச்சானும் ஏதோ ஆண்டாண்டு காலமாகப் பழகி வருபவர் போல உரிமையுடன் கேட்க.. நிவேதிதா முறைத்த முறைப்பில் தான் அவனுக்கு உண்மை.. குட்டு வெளிப்பட்டது புரிய அதுவரை வயிற்றை பிடித்துக் கொண்டிருந்தவன் இப்போது வாயை பொத்திக் கொண்டான்.
“உங்க ரெண்டு பேரையும் வந்து வச்சிக்கிறேன் டா!!” என்றவள் தனது ஹாண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு அவளது அறையை நோக்கி ஓடி விட்டாள்.
மீண்டும் குளியலறை கதவை தட்ட “அடேய்.. இப்ப தான்டா குளிக்க போறேன்” என்று உள்ளிருந்து வெற்றி குரல் கொடுத்த..
“நீ எல்லாம் குளிச்சு ஆஸ்திரேலியாவுக்கு தண்ணீர் பஞ்சம் வந்திட போது முதலில் வெளியே வந்து தொலைடா.. இதுக்கு மேல என்னால தாங்காது” என்றான்.
அவசரகதியில் குளித்துவிட்டு பூந்துவாலையை கட்டிக் கொண்டு வெளியில் வந்த வெற்றியோ “ஆமாண்டா நான் சந்தோஷமா இருந்தா உனக்கு தாங்கவே தாங்காது” என்று அவனிடம் கோபமாக கத்த..
“என் வாயில் நல்லா வந்துடும்!! ஆனா இப்ப எனக்கு பேசறதுக்கு டைம் இல்லை ஒதுங்கி நில்லு டா” என்று அவனை தள்ளி நிறுத்திவிட்டு வேகமாக குளியல் அறையில் சென்று கதவை அடைத்தான்.
“ஆமா இவன் ஏன் இவ்வளோ வேகமா உள்ள போறான்?” என்று யோசித்தவாரே ஆடையை அணிந்து கொண்டிருந்தான் வெற்றி.
சிறுது நேரத்தில் வெளியே வந்த மருது சோபாவில் அமர்ந்து “ஸ்ஸ்ப்பாபா!!” என்று தலையை பின்னால் சாய்த்து ஆசுவாசமடைந்தான்.
அதற்குள் அறையையும் தன்னையும் வெற்றி ஒழுங்குபடுத்தி இருக்க.. “அப்புறம் மச்சான் பயணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா?” என்று இவன் குசலம் விசாரிக்க.. கட்டில் அருகில் இருந்த தலையணையை தூக்கி அவன் மேல் எறிந்தான் மருது.
“ஏன்டா சொல்லி தொலைந்து இருக்க வேண்டியதுதானே? பாப்பா உன்னை அண்ணன்னு கூப்பிடுறானு குமுறி குமுறி என்கிட்ட அழுதவன்.. அவகிட்ட சமாதானம் ஆனதை என் கிட்ட சொன்னியா டா? இப்படி நான் வந்து ராங் டைம்ல என்ட்ரி கொடுத்து இருக்க மாட்டேன் தானே.. பாப்பாவுக்கு தெரிஞ்சிப் போச்சு.. ரெண்டு பேரும் நல்லா வாசமா மாட்டிகிட்டோம் பாப்பா கிட்ட..” என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் மருது.
“அது டா மாப்ள.. நேத்து இப்படி சமாதானம் ஆகுவோம்னு எனக்கே தெரியாதுடா.. அவகிட்ட எல்லாத்தையும் டைம் கிடைச்சா சொல்லிடலாம்னு தான் நினைச்சு போனேன். பேசிக்கிட்டு இருக்கும் போது மழை வந்துச்சா?? ரெண்டு பேரும் நனைஞ்சோமா??அப்படியே வீட்டுக்கு வந்தோமா??” என்று நேற்று நடந்தவற்றை இன்று லைவ் கமெண்டரி வெற்றி கொடுத்துக் கொண்டிருந்தான்.
“போதும் போதும் நிறுத்து!! முடியல என்னால.. ஏன்டா நைட்டு தான் சரி.. ஓகே!! அது நான் வந்ததுக்கப்புறம் பாத்ரூம்ல கூடவா? வெளியில ஒருத்தன் இருந்தானேனு நினைச்சு பார்த்தியாடா? என் அவஸ்தை எங்க உனக்கு புரியும்? என்றான் அவன்.
“அது மச்சான்.. நான் கூட உன் தங்கச்சியை மடக்க ரொம்ப கஷ்டப்படனும்னு நினைச்சேன். இப்படி சட்டுன்னு மடங்கும்னு நானே எதிர்பார்க்கல மச்சான். அதான் ஆனது ஆகிப்போச்சுன்னு…” என்று அவன் இழுக்க.. இப்போது வாசல் பக்கத்தில் இருந்து ஹான்ட் பேக் பறந்து வந்தது வெற்றியை நோக்கி.. சடுதியில் அதிலிருந்து தப்பித்தான்.
ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்த மருது “வட போச்சே!!” என்ற ரீதியில் வாசல்புறம் பார்க்க.. அங்கே ஆங்காரத்தோடு நின்றிருந்தாள் நிவேதிதா.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அசட்டு சிரிப்பை அவளை பார்த்து உதிர்க்க..
கோபத்துடன் நடந்து வந்தவள் இருவரையும் பார்த்து “இரண்டு பேரும் அப்படி தள்ளி தள்ளி உட்காருங்க. நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் சரியா பதில் சொல்லல அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது?” என்று கோபத்தின் முழு உருவாய் இருந்தாள்.
மருது அமர்ந்திருந்த சோஃபாவின் அருகிலேயே அவனும் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நான் கேட்கிற கேள்விக்கு இரண்டுபேரும் அட்ட டைம்ல பதில் சொல்லணும்.. எவ்வளவு நாளா உங்க ரெண்டு பேருக்குள்ளே ஃப்ரெண்ட்ஷிப் ஓடிக்கிட்டு இருக்கு?” என்று கேட்க..
வெற்றி “இப்பத்தான் கொஞ்ச நாளா உன்ன சமாதானப்படுத்துவதற்காக!!” என்று கூற..
“அது ரொம்ப நாளாவே..” என்று மருது வாய் விட்டவன்.. சட்டென்று வாயைப் பொருத்தி தங்கையையும் மச்சானையும் மாறி மாறி பார்த்தான்.
“அண்ணே உன்னை ஆஸ்திரேலியா யாரு வர சொன்னா?” என்று கேட்க..
“இவன்தான் வர சொன்னான்!!” என்று மருது வெற்றியை கை காட்ட..
“பொய் இவன் தான் வந்தான்” என்று வெற்றி மருதுவை கைகாட்ட..
சற்று நேரம் இருவரையும் பார்த்தவள் பின்பு ஒன்றும் பேசாமல் அமைதியாக கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
“அப்போ உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே நல்லா பழக்கம் இருந்திருக்கு. நான் இந்தியா வந்த போது என்னை இவர் கடத்திட்டு போனதும் எல்லாமே ப்ரீ ப்ளாண்ட் தான் இல்லையா?” என்று கேட்க.. இருவரும் மௌனியாக அமர்ந்திருந்தனர்.
“எங்க அப்பா செஞ்சது மன்னிக்க முடியாத தப்பு தான். ஆனால் நான் என்ன தப்பு செஞ்சேன்? நான் உன் தங்கச்சி தானே?” என்று மருதுவை பார்த்து அவள் கேள்வி கேட்க..
“மீனாவும் என் அக்கா தானே?” என்று திரும்பி கேட்க..
இம்மாதிரி பதிலை அவள் மருதுவிடம் இருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோபத்தில் விரக்தியில் அவள் கண்கள் கலங்கி தவிக்க.. சட்டென்று ஒரு பெருந்துளி கண்ணீர் வழிந்து ஓடியது நிவேதாவின் இடது கண்ணில்..
பார்த்திருந்த இருவருக்கும் மனது வலிக்கத்தான் செய்தது. அடுத்த நிமிடம் இருவரும் அவளது இரு பக்கத்தில் அமர்ந்து..
“டார்லிங்.. வேண்டாம் டா!! நீ அழுகாத எல்லாத்தையும் நான் சொல்றேன்” என்று வெற்றி சமாதானப்படுத்த..
நிவேதாவை தன் பக்கம் திருப்பி “அதுக்காக நீ என் தங்கச்சி இல்லைன்னு ஆகிடாதுடா.. நாங்க செஞ்சதுக்கு அர்த்தம் வேற.. நாங்க சொல்றோம் உனக்கு புரியும்” என்று மருது இந்த பக்கம் சமாதனம் செய்ய..
“போங்கடா எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான்!! தப்பு செய்தது எல்லாம் நீங்க அதுக்கு தண்டனையும் வலியும் மட்டும் எங்களுக்கா? ஒருத்தனும் என்னை சமாதானப்படுத்த வேண்டாம்.. கட்டனவனும் சரியில்லை அண்ணனும் சரியில்லை.. நீங்க ரெண்டு பேருமே கொஞ்சுக்கோங்கடா” என்று அவள் கோபத்தில் காரை நோக்கி செல்ல..
“பாப்பா.. பாப்பா.. நில்லு” என்று மருதுவும்..
“டார்லிங்.. டார்லிங்.. வேதா” என்று வெற்றியும் அவள் பின்னாடியே ஓடினார்கள்.
அவள் கார் எடுத்துக்கொண்டு வேகமாக பறக்க “அவ போற ஸ்பீடுக்கு எங்கேயாவது முட்டி மோதிக்க போறாடா பின்னாடி கேப் வருது புடி” என்று அவசரமாக பின்னால் வந்த கேபி பிடித்து அவளை பின் தொடர்ந்தனர்.
வழக்கம்போல தன் அலுவலகத்தில் கண்ணீரை துடைத்துக்கொண்டே உள்ளே நுழைந்த நிவேதிதாவை பார்த்த அவள் நண்பர்கள் “என்ன ஆச்சு??” என்று பதறிக் கொண்டு வர.. பின்னாலேயே வந்த இருவரையும் பார்த்தப்படி நிற்க..
“டார்லிங்..” என்று வெற்றி பறக்கும் முத்தத்தை விட்டு கொண்டே வந்ததை பார்த்து மூவரும் அதிர்ந்தனர்..
“வெற்றி?? நீங்க அவங்க ப்ரோ இல்ல!!” என்று தாமஸ் கேட்க..
“அது நான்தான்!!” என்றான் தெளிவான ஆங்கிலத்தில் மருது. அவர்களைப் பார்த்து.. “அப்ப இவர் ப்ரோன்னு சொன்னா?” என்று டேனி கேட்க..
“ஹலோ அது ஒரு பெரிய சோகக்கதை” என்று நண்பர்களிடம் மருது விளக்கம் கொடுக்க.. அதற்குள் கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானப்படுத்தி அழைத்து கொண்டு வெளியில் வந்தான் வெற்றி.
அதன் பின் மூவரும் ஒரு ரிசார்ட்டுக்கு சென்றார்கள். “இது யாருடைய ரிசார்ட்?” என்று கேட்டாள்.
“நம்மளோடது தான்.. நாங்க வந்தா இங்க தான் தங்குவோம்” என்றான் வெற்றி..
“நாங்கன்னா??”
“நானும் மச்சானும்!!” என்றான் வெற்றியின் தோள் மீது மருது கை போட்டுக் கொண்டே..
எப்பொழுதுமே பெண்களுக்கு தன் கணவரும் உடன்பிறந்தவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது பெரிய கனவு தான். பெரும்பாலான இடங்களில் பலித்தாலும் ஒரு சில இடங்களில் அவை பலிப்பதில்லை.. இன்று இருவரையும் ஒற்றுமையாக பார்த்தபோது மனது சந்தோசமாக இருந்தாலும்.. இவளுக்கு உண்மை அறிந்தே ஆகவேண்டும் என்று முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு இருவரையும் முறைத்தாள்.
“டேய் கையை எடுடா.. என் டார்லிங் முறைக்கிறா நீ என்ன கட்டி புடிச்சா?” என்று கிண்டலோடு மருதுவை தள்ளி நிறுத்தினான் வெற்றி.
“நீ நடத்து நடத்து மச்சான்!!” என்று கண்ணடித்துவிட்டு மூவருக்கும் சாப்பாடு வரவழைத்தான் மருது.
“அந்த நிகழ்ச்சிக்கு அப்புறமா எங்க ரெண்டு பேர் வீட்லயும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால் ஒரே ஊர்ல இருந்தாலும் நானும் மருதுவும் அப்பப்போ சந்திச்சுக்குவோம். வெளியிடங்களில் பெரும்பாலும் நாங்கள்.. பெரும்பாலும் என்ன? சுத்தமாக பேசிக் கொண்டது கிடையாது. எங்க ரெண்டு பேருக்குள்ள எந்தவித சண்டையோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. ஆனால் எங்க இருவரின் மனசுக்குள்ள ஒரு வன்மம் இருந்தது. அது அந்த பிரதாபனையும் உன் அப்பா மேகநாதனையும் பழி வாங்குறது..
நான் காலேஜுக்கு சென்னைக்கு படிக்க வந்தேன். இவனும் அதுக்கு அடுத்த வருஷம் சென்னைக்கு வந்தான் இங்கதான் எங்கள் நட்பு இன்னும் பலமாச்சு. நான் பிசினஸ் மேனேஜ்மென்ட்.. இவன் அக்ரிகல்ச்சர் ரிலேட்டட் டிகிரி. சோ எங்களோட ப்ராஜெக்ட்க்காக நாங்கள் தேர்ந்தெடுத்த நாடு ஆஸ்திரேலியா. பணம் ஒரு விஷயமே இல்லை எங்களுக்கு.. எங்களுக்கான நட்பு வட்டத்தை ஆஸ்திரேலியாவில் உருவாக்கி விரிவாக்க.. அதை பயன்படுத்திக் கொண்டோம். அதன்படி இங்கே எங்களுக்கு நிறைய ப்ரண்ட்ஸ்..
அக்ரிகல்ச்சர் ரிலேட்டட்டா மருது அவன் நட்பு வட்டாரத்திலும்.. பிசினஸ் மேனேஜ்மென்ட் சம்பந்தப்பட்ட என் நட்பு வட்டாரத்திலும் பிரதாபனை நாங்கள் தேடினோம். கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் முன்னாடி அவனை நாங்க கண்டுபிடித்தோம். ஆமா உங்க அப்பாவுக்கு ஏன் திடீர்னு ஸ்ட்ரோக் வந்தது என்று உனக்கு தெரியுமா?” என்று கேட்க..
நிவேதிதாவுக்கு எப்படித்தெரியும்? அவள் அப்போது மெல்போர்னில் தான் படித்துக் கொண்டிருந்தாள்.
இல்லை என்று அவள் தலையாட்ட..
வெற்றியின் முகத்திலோ வன்மமான சிரிப்பு குடியேறியது.
“அதற்கு காரணம் நாங்க தான்..” என்று மருது கூறியவுடன் அவள் சட்டென்று அதிர்ந்து எழ.. “இவ்வளவு ஷாக் ரியாக்ஷன் எல்லாம் தேவையில்லை.. உட்காரு!! உட்காரு!!” என்று அவள் கையில் ஒரு குளிர்பானத்தை திணித்தான் வெற்றி.
“.பிரதாபனை நாங்கள் அணுவணுவாக சித்திரவதை செய்து கொல்லாமல் கொன்றதை உங்க அப்பாவுக்கு அப்படியே லைவா போட்டு காண்பித்தோம். அதுவும் அவன் என்ன தப்புக்காக இந்த தண்டனையை அனுபவிக்கிறான் என்று சொல்லியே எங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் செய்தோம். அப்படியே விட்டிருந்தால் கூட உங்க அப்பாவுக்கு ஜஸ்ட் மரண பயம் மட்டும்தான் வந்திருக்கும்..
பிரதாபன் உடலை நாயும் நரியும் கழுகும் கொத்திக் கொத்தித் தின்றதை பார்த்தவனுக்கு பயம் வந்தது. ஆனால் அது மட்டுமே எங்களுக்கு பத்தாது..
நாங்க துடிச்ச அந்த துடிப்பு..
நாங்க அனுபவித்த அந்த வலி.. இன்னமும் ரணமாய் இருக்கிற அந்தக் காயம்..
இதையெல்லாம் உன் அப்பாவும் அனுபவிக்கனும்னு நாங்க முடிவெடுத்தபோது.. எனக்கு கிடைத்த துருப்பு சீட்டு தான் நீ!!” என்றான் வெற்றி இரக்கமே இல்லாமல்..
“ஹல்க்!!! நீ ஹல்க்கே தான்டா!!” என்றாள் அவள் கண்ணீர் மல்க..
“ஹே.. ஹே.. வேதா.. எனக்கு அப்போ முழுக்க முழுக்க பழிவாங்குவது மட்டுமே!! அதே சமயம் உனக்கு ஆபத்தை விளைவிக்க உங்க அண்ணன் விடுவானா?” என்று மருதுவை பார்த்து சிரித்தான் வெற்றி.
“உன்னை கடத்தனும்.. உனக்கு டார்ச்சர் கொடுக்கனும் அதையெல்லாம் வீடியோவா.. போட்டோவா உங்க அப்பாவுக்கு அனுப்பனும்.. அப்போது தான் ஒரு பொண்ணை கூட்டிக் கொடுக்கும் போது அவளுக்கு வலித்தது. தன் பெண்ணுக்கு அதே நேரும் போது உன் அப்பாவுக்கு வலிக்கும்னு நான் நினைச்சேன்.. ஆனா உங்க அண்ணன் ஒத்துக்கல.. மீனா எப்படி எனக்கு அக்காவோ.. அதே மாதிரி நிவேதாவும் என் தங்கச்சி.. அதனால இதற்கு சம்மதிக்கவே மாட்டேன் வேறு வழி பார்ப்போம் என்று முரண்டு பிடித்தான்” என்று வெற்றி கூற..
அருகில் நின்று கொண்டிருந்த மருதுவை தாவி அணைத்துக் கொண்டாள் நிவேதிதா. சிறுவயது முதல் போட்டோக்கள் மட்டுமே அறிமுகமாகி அவ்வப்போது வீடியோ காலில் மட்டுமே பேசிய அண்ணன் தன் அக்கா மீது கொண்ட அதே பாசத்தை தன் மீதும் வைத்திருக்கிறான் என்று நினைத்தவளுக்கு பேச நா வரவில்லை.. “லவ் யூ ணா.. லவ் யூ ணா..” என்று நூறு முறை சொல்லிருப்பாள்.
“அடியே!! நேத்து நான் லவ் யூ சொன்னதுக்கு மீ டூ தானடி சொன்ன.. இப்போ உங்க அண்ணனுக்கு மட்டும் இத்தனை முறை சொல்ற” என்று பொறாமையில் வெற்றி கத்த.. “போடா ஹல்க்.. நீ என்னை ரிவேன்ஞ் பண்ண தானே பார்த்த.. உனக்கு அதுவே ஜாஸ்தி போடா” என்று இன்னும் அண்ணன் அருகில் வாகாக நின்று கொண்டாள்.
“கெத்தா நிவேதிதா மேகநாதன்னு சொல்லிக்கிற தானே.. அப்போ அப்பாவோட சொத்து கெத்து மட்டுமல்ல.. பாவமும் பிள்ளைகளை தான் சேரும்..
நானும் அவ்வளோ நல்லவனில்லை..” என்று கூறியவனின் கையை அழுத்தமாக பிடித்தான் மருது.
ஒரு மூச்சை விட்டு “அதற்குப்பின் உன் தங்கச்சியை நானே கல்யாணம் பண்ணிக்கிறேன் உங்க அண்ணன் கிட்ட சொன்னாதும் தான் ஒத்துக்கிட்டான். இந்த கல்யாணம் கண்டிப்பாக நம் இருவர் குடும்பத்தையும் பாதிக்கும்.. பழைய நினைவுகள் வந்து கொல்லும் என்று எங்களுக்கு தெரியும்.. ஆனால் எங்களுக்கு வேற வழி இல்லை” என்றான் வெற்றி..
“ஆனா இதை முதலிலேயே என்கிட்ட சொல்லியிருந்திங்கன்னா.. நானே உங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருப்பேனே” என்று கூறி மருதுவின் தங்கை என நிரூபித்தாள் நிவேதிதா.
“அதையும் நினைச்சோம்.. முதல் முறை உன்னை நாங்க பார்க்க வந்த போதுதான் குடிச்சிட்டு உன் பிரெண்ட்ஸ் கூட அப்படி கும்மாளம் போட்டுகிட்டு இருந்த.. நாங்க அமர்ந்து இருந்த சேர் பக்கத்திலுள்ள டேபிளில் தான் உட்கார்ந்து இன்னும் குப்பி குப்பியா குடிச்ச.. எனக்கு ரொம்ப கோபம் எந்திரிச்சு வெளியில போயிட்டேன். மருது தான் சமாதானப்படுத்தினான். சரி என்று உள்ளே வந்தா என் மேலே முட்டி மோதி கீழே விழுந்த.. அப்புறம்தான் தூக்கி கொண்டு போய் நீ தங்கியிருந்த இடத்தில் விட்டு வந்தேன்” என்று வெற்றி கூற.. அப்போதுதான் அன்றுதான் எப்படி வந்தோம் என்று அவளுக்குப் புரிந்தது.
“அது அப்போ!! இனி அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். கண்டிப்பா உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்றாள் நிவேதிதா..
தங்களைப் புரிந்து கொண்ட மனைவி மீது இன்னும் காதல் பெருக்கெடுக்க விழியகாலாமல் அவளைப் பார்த்தவன் “மச்சான் சீக்கிரம் நீ வெளியே போ!!” என்றான்.
இப்பொழுதுதான் தங்கை பாசமாக தன் மீது ஒட்டி கொண்டு நிற்கிறாள்.. இவன் ஏன் வெளியே போக சொல்லுகிறான் என்று புரியாத மருது “எதுக்குடா??” என்று கேட்க..
“உன் தங்கச்சி மீது எனக்கு காதல் காதலா வருது.. உனக்கு ஓசில சீன் காட்ட வேண்டாம்னு தான்” என்றவன் அடுத்த நொடி அண்ணன் தோள் மீது வாகாக நின்றிருந்த நிவேதிதாவை தன்னை நோக்கி இழுத்து இதழ்களை கொய்திருந்தான்.
“ஒரு கன்னி பையன் சாபம் உங்கள எல்லாம் சும்மா விடாது டா” என்று அலறியபடியே வெளியே ஓடினான் மருது!!
காதலே.. காதலே..
After looking over a few of the articles on your
web site, I truly like your technique of writing a
blog. I added it to my bookmark webpage list and will be
checking back in the near future. Please visit
my web site as well and let me know your opinion.