காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் இரண்டு
கோமதி அழுவதை பார்த்ததும் அங்கே வேலை பார்க்கும் அக்கவுண்டண்ட் செல்வகுமாருக்கு மிக ஆனந்தம். பெரிய முதலாளியை இவள் கைக்குள் வைத்து இருப்பதாக புரளியை அலுவலகத்தில் கிளப்பி விட்டான். அதுசின்ன முதலாளி கார்த்திக் காது வரைக்கும் சென்றது. அதனால் அவள் மேல் வெறுப்பு ஏற்பட்டது.
அன்றிலிருந்து தானே நிறுவனத்தை பார்த்து கொள்வதாக அப்பாவிடம் சொன்னான் கார்த்திக்.
பரமசிவத்திற்கு எது எப்படியோ பையனுக்கு பொறுப்பு வந்து விட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டார்.
அவர் தன மனைவியை அழைத்து கொண்டு ஆன்மீக சுற்றுலா செல்ல நிறுவனம் முழுதும் கார்த்திக் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
செல்வகுமாரல் பரமசிவத்தை நெருங்க முடியாமல் இருந்ததால் இவளுக்கு பரமசிவம் முழு அதிகாரம் கொடுத்து இருந்தார்.
ஏனென்றால் இருமுறை நிறுவன பணத்தை எடுத்து சொந்த பயன்பாட்டிற்கு செலவு செய்ததை இவள் அகௌண்ட்ஸ் சரி பார்க்கும் போது கண்டு பிடித்து விட்டாள். பிறகு அவன் சம்பளத்தில் பிடித்து கொண்டு வருகிறார்கள். இதனால் பரமசிவத்திடம் கெட்ட பெயர் வாங்கி விட்டான். அது முதல் இவளை பழி வாங்க காத்து கிடந்தான். இப்போது நேரம் கூடி வந்தது. சின்ன முதலாளி கார்த்திக்கிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்தான்.
அலுவலகத்தில் பரமசிவம் அவசரத்திற்கு பயன்படுத்தி கொள்ள கொடுத்த பிளாங்க் செக் ஒன்றை தன் மேசை ட்ராயரில் வைத்து இருந்தாள். அதை ஒரு நாள் செல்வகுமார் பார்த்து விட்டு அதை என்றாவது பயன் படுத்த திட்டம் போட்டான்.
இவளிடம் வந்து கார்த்திக் அவசரமாக அழைப்பதாக சொல்ல இவள் மறதியாக டிராயர் சாவியை ட்ராயரிலேயே விட்டு சென்றாள் . தனக்கு இது தன் சரியான நேரம் என எண்ணி அந்த பிளாங்க் செக்கை எடுத்து விட்டான்.
கார்த்திக்கிடம் கோமதி ” ஏதோ அவசரம் என்று அழைத்தீர்களா என்ன விஷயம் சார்” என்று கேட்டாள்.
நான் அழைத்தேனா இல்லையே .. என கூற இவள் குழப்பமாய் தன் இருக்கைக்கு வந்தாள். பிறகு செல்வகுமார் ஏன் அவ்வாறு சொன்னான் என யோசித்து விட்டு தன் வேலையை பார்க்க துவங்கி விட்டாள்.
அசைவம் sir
ஒரு மதம் கழித்து அலுவலகத்தில் இன்டெர்னல் ஆடிட் செய்யும் போது ஒரு பத்து லட்ச ருபாய் கணக்கில் இடிக்க .. செல்வகுமார் கார்த்திக்கிடம் பரமசிவம் சார் தன் எடுத்து உள்ளதாக பேங்க் ஸ்டேட்மென்ட் காண்பிக்க
அப்பாவிடம் விசாரித்தான் கார்த்திக் . அவர் தன் எடுக்கவில்லை என சொல்ல .. வங்கிக்கு சென்று கேட்டான்.
வங்கியில் பணம் எடுக்கப்பட்டிருக்கு என சொல்ல .. யார் வந்தார்கள் என கேட்டான். சார் இங்கே CCTV காமிரா சில நாட்களாக வேலை செய்ய வில்லை அதனால் பார்ப்பது மிக கடினம் என்றார் வாங்கி அலுவலர்.
அப்பாவிடம் கேட்டான் யாருக்காவது செக் கொடுத்தீர்களா என்று. அப்போது அவருக்கு தான் கோமதிக்கு கொடுத்த பிளாங்க் செக் பற்றி சொல்ல..
கார்த்திக் இவளிடம் அதை கொண்டு வர சொல்ல .. இவள் அதை தேடி பார்த்து விட்டு வைத்த இடத்தில் இல்லாமல் போக .. இவள் மேல் பழி ஏற்பட்டு விட்டது.
இவள் தான் அப்படி பட்டவள் இல்லை என்று எவ்வளவோ மன்றாடியும் பரமசிவமும் அவளுக்கு சப்போர்ட் செய்து பேசியும் கார்த்திக் நம்பவில்லை.
பணம் ஒரு மாதத்தில் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டான். இல்லாவிட்டால் போலீசில் புகார் கொடுக்க இருப்பதாகவும் சொன்னான்.
இவளுக்கு மிகுந்த அதிர்ச்சி .. எப்படி இது சாத்தியம் .. எந்த தேதியில் எத்தனை மணிக்கு பணம் எடுக்க பட்டிருக்கு என்று பார்த்தாள். மிக சரியாக இவள் வங்கிக்கு சென்ற அதே நாள் பணம் எடுக்க பட்டு இருந்தது.
இனி தான் என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். வீட்டிற்கு மிக சோகமாக வந்தாள். எவ்வளவு அவமானம். சே எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து விட்டேன். அப்போதே அந்த செக்கை கார்த்திக்கிடம் கொடுத்து இருக்கா வேண்டும். இப்போது பழி வந்து விட்டது. எப்படி மீள்வது இதில் இருந்து .. என யோசித்து யோசித்து களைப்படைந்தாள்.
தொடரும்
👌👌👌👌👌👌