ATM Tamil Romantic Novels

காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் மூன்று

காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் மூன்று

சென்னை கோடம்பாக்கம்
பிருந்தாவன் இல்லம் ..

இந்த வீடு சில மாதங்களுக்கு முன் அனைத்து சந்தோஷங்களையும் கொண்டு உண்மையாகவே பிருந்தாவனமாக இருந்தது. இப்போது இல்லை . அதற்கு காரணம் ஒரு கார் விபத்து.

ரவிகுமார் , மைதிலி , அவனது இரு ட்வின்ஸ் குழைந்தைகள் ரவியின் மாமனார் மாமியார் என அனைவரும் மிக சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்தனர். யார் கண் பட்டதோ , சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சொந்த ஊரான திருச்சிக்கு சென்று விட்டு திரும்பும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மைதிலி மற்றும் அவளது அம்மா இருவரும் அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர். மைதிலி அப்பாவுக்கு பெரிய காயங்கள் கால் எலும்பு முறிந்து வீல் சேரில் அமர்ந்து விட்டார். ஆண்டவன் அருளால் குழந்தைகளுக்கு பெரிய காயங்கள் இல்லை. ரவிக்குமாருக்கு கை எலும்பு முறித்து கட்டு போட்டு குணமாகி கொண்டு இருக்கிறான்.

இவன் ஒரு மிக பெரிய டெக்ஸ்டைல் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் முதலாளி.

அந்த வீடே இப்போது மைதிலி இல்லாமல் களை இழந்து நிற்கிறது. குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லை. இவனுக்கும் , மாமனாருக்கும் கவனிக்க ஆள் தேவை பட்டது.

இரண்டு வாரம் ஒரு வேலைக்காரி வந்தாள். அவளால் சரிவர இவர்களை முறையாக கவனித்து கொள்ள முடியவில்லை. ஒரு பெண் இல்லாத வீடு எப்போதுமே நன்றாய் இருக்காது. அது இப்போது இங்கே கண் கூடாய் தெரிந்தது.

ஒரு தினசரியில் விளம்பரம் கொடுத்தான். ஒரு மிக பெரிய நிறுவனத்தின் முதலாளி வீட்டை , குழந்தைகளை பராமரிக்க நல்ல சகிப்புத் தன்மை உள்ள படித்த பெண் தேவை என்று… சம்பளம் : வேலை திறன் பார்த்து கொடுக்கப்படும். தொடர்புக்கு : ரவிகுமார் கைபேசி எண் கொடுத்து இருந்தான். வாட்சப்பில் பயோ-டாட்டா அனுப்புமாறு கேட்டுக்கொண்டான்.

கோமதி அந்த விளம்பரத்தை பார்த்து இவளும் பயோ டாட்டா வை அனுப்பி இருந்தாள். இனிமேல் அவளால் பரமசிவத்தின் நிறுவனத்தில் வேலை பார்க்க பிடிக்கவில்லை. மேலும் ஒரு மாதத்தில் பத்து லட்ச ரூபாயை கொடுக்க வேண்டும்.

கார்த்திக்கிடம் தான் ராஜினாமா செய்வதாக சொல்லிவிட்டாள். ஒரு மாதத்தில் கொடுக்காவிட்டால் தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து அந்த பணத்தை கொடுப்பதாக தன்னுடைய வீடு பத்திரத்தின் நகலை அவனிடம் கொடுத்து ஒரு ஒப்பந்தம் போட்டு இருந்தாள்.

வாட்சப்பில் இவளுக்கு ஞாயிறு காலை 10 மணிக்கு வர சொல்லி பதில் அனுப்பி இருந்தான் ரவிக்குமார் .

நல்ல காட்டன் சாரியில் மிடுக்காக சென்று இருந்தாள். வீட்டை பார்த்ததும் ஓ மிக பெரிய பணக்காரர் போல இருக்கு என்று அவளுக்குள் சொல்லி கொண்டாள். கேட்டில் வாட்ச்மன் கொடுத்த பதிவேட்டில் முகவரி எழுதி கையொப்பம் இட்டாள்.

4 விலை உயர்ந்த கார்கள் நின்று இருந்தன. அதற்கு 4 டிரைவர் இருந்தனர்.

தோட்டக்காரர்கள் செடிகளை பராமரித்து கொண்டு இருந்தனர்.

வீட்டின் வாசலில் இருந்த புல் தரையில் 4 நாற்காலிகள் கிடந்தன மேலும் ஒரு டீபாய் அதன் மேல் குடிநீர் பாட்டில்கள் மற்றும் சில தமிழ் ஆங்கில தினசரிகள்.

கையில் கட்டுடன் அங்கே வந்தான் ரவிக்குமார். இவளின் உடை மற்றும் அவள் அணிந்து இருந்த விதம், அதில் தெரிந்த ஒரு கண்ணியம் இவனது முதல் பார்வையிலேயே அவள் மீது ஒரு மரியாதையை கொடுத்தது.

இவள் அவனை பார்த்ததும் எழுந்தாள். அவன் பயோ டேட்டாவை படித்தவன் “நீங்கள் இதற்கு முன் ஒரு கார்மெண்ட் எஸ்பியர்ட் நிறுவனத்தில் வேலை வரவேற்பாளினியாக வேலை பார்த்து இருக்குறீர்கள். ஏன் அந்த வேலையை விட்டு இங்கே வீட்டு வேலைக்கு வந்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளலாமா ? ” எண் கேட்டான்.

கோமதி ” தான் உண்மையான காரணத்தை தெரிவித்தாள். தான் செய்யாத ஒரு குற்றத்தில் பழி ஏற்பட்டு விட்டதை சொன்னாள். மேலும் அங்கே எனக்கு இனியும் வேலை பார்ப்பதில் விருப்பம் இல்லை என்றும் கூறினாள்.

“ஓ .. அப்படியா என சொன்னவன் , சம்பளம் என்ன எதிர் பார்க்கிறீர்கள்” என கேட்டான்.

“எவ்வளவு கொடுக்க நீங்கள் எண்ணி இருக்கிறீர்கள். ” என இவள் திருப்பி கேட்க

“நான் எதிர் பரபரக்கும் தரத்தில் நீங்கள் வேலை செய்தால் 1 லட்சம் கூட கொடுக்க நான் தயார். அதற்கு 1 வாரம் நீங்கள் வேளை செய்யும் விதம் , பழகும் விதம், நடந்து கொள்ளும் விதம், குழந்தைகளை நீங்கள் பராமரிக்கும் விதம் அனைத்தும் பார்த்து முடிவு செய்வேன்.” எனக் கூறினான்.

மேலும் உங்களுக்கு உதவிட நீங்களே ஆட்களை அமர்த்திக்கொள்ளலாம் தேவைப்பட்டால் என்றும் கூற

இவள் இப்படியெல்லாம் கூட இருக்குமா என்று மிகவும் வியந்தாள்.

சரி சார் , நான் தயார் ஒரு வாரம் வருகிறேன். பிடிக்கவில்லை என்றால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் எண் கூறினாள்.

அதற்குள் 2 வயதே நிரம்பிய அந்த இரட்டை பெண் குழந்தைகள் விழித்து விட , வேலையாள் வந்து சொன்னாள்.

கோமதி உள்ளே வாருங்கள் , குழந்தைகளை பார்ப்போம் என கூறி அவளை உள்ளே அழைத்து சென்றான்.

உள்ளே அவனது மனைவி மற்றும் மாமியாரின் பெரிய அளவிலான புகைப்படங்கள் ஒரு பிரேமில் மாட்டி மாலை தொங்க விட பட்டு இருந்தது.

அதை தாண்டி மேலே இரண்டு பக்கமும் படிக்கட்டுகள் மாடிக்கு செல்ல ..

அவன் மாடி மீது ஏறி போனான் .. இவளும் அவனை பின் தொடர்ந்தாள்.

ஒரு பெரிய படுக்கை அறை அது அதில் அழகான அச்சில் வார்த்தார் போல ஒரே மாதிரி இருக்கும் இரு பெண் குழந்தைகளை பார்த்ததும்
ஓ இவர்கள் அம்மாவை இழந்து வாடும் பிள்ளைகள் என்று கண் கலங்கினாள்.

அவன் சொல்லும் முன்னரே படுக்கையை ஒழுங்கு படுத்தி விட்டு குழநதைகளை வாரி அணைத்து முத்தமிட்டாள்.

இரண்டும் இவளை கண்டு முதலில் பயந்தன. பின்னர் அவளின் அணைப்பு மற்றும் முத்தத்தில் இவளிடம் ஒட்டிக்கொண்டன.

சார் நான் இவர்களை அழைத்து சென்று சாப்பிட ஏதாவது தயார் செய்து தருகிறேன் மணி 12 ஆகி விட்டது . பசியில் தான் அழுது விழித்து இருப்பார்கள். என கூறி சமையல் அறையை காண்பிக்க சொல்ல , இவன் அழைத்து போனான்.

உள்ளே சென்றவள் காய்கறி கூடையில் இருந்த கேரட் மற்றும் ஆப்பிள் எடுத்து தோல் நீக்கி குக்கரில் ஒரு விசில் விட்டு வைத்து மசித்து குழந்தைகளுக்கு ஊட்டினாள். குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிட்டார்கள்.

இவன் அவள் செய்யும் முறை மற்றும் குழந்தைகளை கவனிக்கும் தன்மையை உடனே அறிந்து கொண்டான்.

வேறு எந்த வேலையை விடவும் குழந்தைகள் பராமரிப்பு மிக மிக முக்கியம் என நினைத்தான். அதற்காகவே இவளை வைத்துக்கொள்ளலாம் என நினைந்தான். சரி உடனே முடிவு எடுக்க வேண்டாம் ஒரு வாரம் பார்ப்போம் என மனதில் நினைத்து கொண்டான்.

குழந்தைகள் சாப்பிட்டதும் அப்பா ரவிகுமாரிடம் வந்து அவன் கால்களை கட்டி கொண்டு சிரித்தார்கள்.

இவனும் அவர்களை வாரி அனைத்து முத்தம் மிட்டான்.

பிறகு அவளுக்கு குழந்தைகள் டிரஸ் எல்லாம் காண்பித்தான். வீட்டின் அனைத்து இடங்களையும் இவனே சுற்றி காண்பித்தான்.

பிறகு அவன் மாமனாரிடம் அறிமுக படுத்தினான். இவர் உங்க அப்பாவை என கேட்டாள்.

என் அப்பா அம்மா இரண்டு வருடம் முன்பு இறந்து போய் விட்டார்கள் என்றான். இவர் எனது மனைவியின் தந்தை என் மாமனார் என்று கூறினான்.

மேலும் அந்த விபத்தில் மனைவி மற்றும் மாமியார் இறந்து போய் விட்டதையும் சொல்லிவிட்டு அதனால் தான் ஒரு நல்ல பெண் எனக்கு வேலைக்கு தேவை படுகிறாள் என்பதையும் சொன்னான்.

சரி சார். உங்களுக்கும் மாமாவுக்கும் சாப்பிட ஏதாவது செய்து கொண்டு வருகிறேன் என கூறி சமையல் செய்து ஒரு மணி நேரத்தில் ருசியாக சப்பாத்தி மற்றும் ஒரு காய்கறி கூட்டு கொண்டு வந்து பரிமாறினாள்.

மாமா சொன்னார் ” நல்ல சுவையை சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு மா” .. இனிமே நீ ஏ சேமித்து விடம்மா என கூற .. இவனும் அதையே ஆமோதித்து “ஆமாம் கோமதி நீயே சமையல் செய்து விடு. உதவிக்கு ஆள் வைத்து கொள். எல்லா வேலையும் எடுத்து போட்டு செய்ய வேண்டாம். மேற்பார்வை பண்ணி பராமரித்தாலே போதும் கோமதி” என்று சொன்னான்.

முதல் நாளே அவள் அனைத்து விதத்திலும் அந்த வீட்டுக்கு உரியவள் போல மாறிவிட்டாள்.

உன் குடும்பம் பற்றி சொல் என கேட்டான்.

அவர்களையும் நீ இங்கே கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்து வந்து விடு கோமதி.. என ஒரு நாளிலேயே எப்படி அவள் வசம் மாறிப்போனான் என்று அவனுக்கே புரியவில்லை.

“சார் ஒரு வாரம் பார்த்து முடிவு எடுத்து கொள்ளலாம்” என்று சிரித்தாள்.

அப்போது தான் அவன் அனைத்தும் மறந்து இப்படி பேசியதை உணர்ந்தான்.

தொடரும்

 

1 thought on “காற்றுக்கென்ன வேலி – அத்தியாயம் மூன்று”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top