ATM Tamil Romantic Novels

ஜான்வி – அத்தியாயம் இரண்டு

ஜான்வி – அத்தியாயம் இரண்டு

கடற்கரையில் அவினாஷிடம் கைபேசி என்னை பெற்று கொண்டு அவனிடம்
“எனக்கு உதவி தேவை பட்டால் போன் செய்கிறேன் .. உங்கள் பெயர் என்ன எப்படி பதிவு செய்து கொள்ளட்டும்” என்றாள்.

அவள் தமிழ் வித்தியாசமாக இருந்தது அதனை கவனித்து ” என் பெயர் அவினாஷ் , கனரா வங்கியில் கிளை மேலாளராக உள்ளேன் ” என்று கூறிவிட்டு மேலும் ” ஆமாம் நீங்கள் உண்மையில் தமிழ் நாடு தானா இல்லை வேறு மாநிலமா.. தமிழ் உச்சரிப்பு தமிழ் பெண்கள் பேசும் தமிழ் போல இல்லையே ..”. என்றான்

நன் வளர்ந்தது, படித்தது சென்னையில் அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ரெசிடென்ட்டில் ஸ்கூல் அங்கே தமிழ் நாட்டவர் கிடையாது. அதனால் தமிழ் கொஞ்சம் சரியா தெரியாது. ஆனால் அமெரிக்கன் இங்கிலிஷ் நன்றாக பேசுவேன் .. பள்ளியில் அமெரிக்கன் இங்கிலிஷ் மீடியம் .. பேசுவதும் அமெரிக்கன் இங்கிலிஷ் .. உச்சரிப்பும் போனெடிக்ஸ்உம அமெரிக்கன் ஸ்டைல் .. அது தான் இப்படி என்று சரளாமாக பொய் சொல்ல வந்தது அவளுக்கே ஆச்சர்யம் . தன்னையே கிரேட் என்று மெச்சி கொண்டாள். நன்றாக படித்ததால் ஸ்சோலர்ஷிப்பில் ஹார்வார்ட் யூனிவர்சிட்டிஇல் ஒன்லைன் டிகிரி பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் படித்து இருக்கிறேன் என்றாள்.

அதுவும் ரெசிடன்சியல் கல்லூரியா ? என அவினாஷ் கேட்க .. இல்லை அதே பள்ளியில் எனக்கு கொடுக்கப்பட்ட சலுகையில் காரணமாக அங்கேயே எனக்கு தனி அறை கொடுத்தார்கள் .. தங்கி கொண்டேன் .. என இஷ்டத்துக்கு பொய் சொல்லி கொண்டே போனாள்.

அப்பா அம்மா என்ன ஆனார்கள் எங்கே போனார்கள் என்றான்.
போனில் மட்டும் வீடியோ கால் வரும் , பேசுவார்கள்.

இப்போ உயிரோடு உள்ளார்களா இல்லையா என்றான் வெறுப்பாக.

அது தான் சொன்னேனே அவர்கள் இருந்தும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாததால் எனக்கு யாரும் இல்லை என்று சொன்னேனே என சொல்ல

அவினாஷின் அம்மா தேவி.. ” அச்சச்சோ என்ன கொடுமை மா இது உனக்கு
இப்படி நடந்து இருக்கு.. நீ அப்பா அம்மாவோடு நெருக்கமாக இல்லையா .. இப்படி போனில் பேசினால் எப்படி .. என்று கேட்டாள் .

அப்பா அம்மாவுக்கும் சில பிரச்னை அதனால் தனி தனியே இருக்கிறார்கள் வெளி நாட்டில். எங்கே என்று எனக்கு தெரியாது என்று மீண்டும் பொய் சொன்னாள்.

அதனால் தான் எனக்கு யாரும் இல்லை என்று சொன்னேன் இப்போது உங்களுக்கு புரிகிறதா என்ன கேட்டாள் அம்மாவிடம் ..

சரி நீ எங்கு தான் தனி இருக்கிறாய் இப்போது என்ன கேட்டாள் ..

பள்ளியில் கிடைத்த சில நண்பர்களின் வீட்டில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கி உள்ளேன் என்றாள்.

இவ்வளவு படித்த உனக்கு வேலை கிடைக்க வில்லையா .. என்று கேட்க பணம் , வேலை எனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு சாதாரணமான நடுத்தர குடும்பத்து வாழ்க்கை வாழ ஆசை .. அதனால் தான் மனிதர்களுடன் சோசியலாக பழக ஆசையாக உள்ளது. அதனால் தான் உங்கள் இருவரையும் பார்த்ததும் வந்து உங்கள் அருகில் அமர்ந்தேன்.” என்று கூறிவிட்டு மேலும் “உங்களுடன் நான் கொஞ்ச நாட்கள் உங்கள் வீட்டில் தங்கி கொள்ளலாமா” என கேட்டாள்.

அம்மாவுக்கு அவளை பிடித்து இருந்தது ஆனாலும் அவினாஷ் என்ன சொல்வானோ என்று அவனை பார்த்தாள். அவினாஷ் என்னை ஏன் பார்க்கிறாய் அம்மா .. இதெல்லாம் பெரிய இடத்து பிரச்சனை .. ஏதாவது சிக்கல் நமக்கு வந்து விட போகிறது .. என்று கூற ..

என்னால் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது .. என்னை யாரும் தேட மாட்டார்கள். போனில் மட்டும் பேசுவார்கள். என்றாள்.

சரி நீ எங்களுடன் பேயிங் கெஸ்டாக தங்கி கொள்.. அதற்கு முறை படி ஒரு வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். என்றான்.

அவன் பெசன்ட் நகரில் உள்ள அபார்ட்மெண்டில் அவன் வேலை செய்யும் வங்கியிலேயே லோன் போட்டு ஒரு 2BHK இரண்டாம் தளத்தில் ஒரு 800 சதுர அடி வீட்டை வங்கி இருந்தான். மூவரும் அவனுடைய ஸ்விப்ட் கார் (செகண்ட் ஹாண்டில் வாங்கியது) மூலம் வீட்டுக்கு வந்தனர்.

வீட்டை சுத்தமாக வைத்து இருந்தாள் அவினாஷின் அம்மா தேவி .

இவள் வந்ததும் .. வீடு சுத்தமாக இருக்கு .. எளிமையா இருக்கு .. நைஸ் என்றாள்.

“நீ எதிர் பார்க்கிற வசதி இருக்காது இங்கே ” என்று அவினாஷ் கூற

இந்த வீடு நல்லா இருக்கு .. என்றாள்.

எங்கள் உலகம் நடுத்தர வர்க்கம் .. இவ்வளவு வசதிக்கே லோன் போட்டு தான் வாங்க முடியும்.

உனக்கு இது செட் ஆனால் நீ இங்கே தங்கி கொள்ளலாம் என கூறினான்.

சரி நாளை என் லக்கேஜ் எடுத்து கொண்டு நான் இங்கே வருகிறேன் . அதற்குள் ரெண்டல் அக்ரீமெண்ட் போர் பேயிங் கெஸ்ட் தயார் செய்து வையுங்கள்.

சாப்பாடு நான் வெளியில் சாப்பிட்டு கொள்கிறேன் .. எனக்கு நீங்கள் தயார் செய்ய வேண்டாம் .. என்று சொல்லி விட்டு .. இப்போது நான் போகிறேன் . நாளை வருகிறேன் .. என் ரூமில் AC போட்டு வையுங்கள் என்று சொன்னாள். அதற்கு ஆகும் செலவை நான் கொடுத்து விடுகிறேன் என்றாள்.

இவன் அம்மாவை பார்த்து விழிக்க..

ஓகே ஓகே .. நானே AC ஆர்டர் செய்து விட்டு பணம் கட்டிவிட்டு போகிறேன். AC மெக்கானிக் வந்தது பொருத்தி விடுவார். என கூறி விட்டு சென்றாள்.

“அம்மா… இதெல்லாம் தேவையா … எல்லாம் உன்னால் வந்தது. பேசாமல் இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காது .. நீ போய் வேறு இடம் பார்த்து கொள்.. என சொல்லி விடவா.. என்று கேட்டான்.

சரியோ தவறோ… வர சொல்லிவிட்டோம்… இந்த பெண் அன்புக்காக ஏங்கும் பெண் என்று நினைக்கிறன். கொஞ்ச நாட்கள் பார்ப்போம்.. சரி வராது என்றால் சொல்லி விடலாம் டா.. என்றாள்.

சரி .. இது எங்கே போய் முடிய போகிறதோ போ.. எனக்கு ஒன்றும் சரியாய் படவில்லை… என்றான்.

சொன்னது போலவே AC வந்து இறங்கியது .. மெக்கானிக் வந்து மாட்டி விட்டு போனான்.

இவன் அவனுடைய அறையில் தான் AC மாட்ட வசதியாய் இருந்ததால் அதை ஒதுக்கி கொடுத்தான். மேலும் அட்டாச்சுட் டாய்லெட் மற்றும் பாத்ரூம் இருந்ததும் ஒரு காரணம்.

இவன் ஹாலுக்கு வந்து விட்டான். அம்மா அவளுடைய அறையை அவனுக்கு கொடுக்க வந்தாள். ஆனால் நீ வசதியாக வாழ வேண்டும் அம்மா .. நீ கஷ்ட பட கூடாது .. என்று சொல்லி மறுத்தான்.

மறுநாள் காலையில் 3 செட் ஜீன் பாண்ட் அண்ட் டாப்ஸ் எடுத்து வந்து விட்டாள்.

ரெண்டல் அக்ரீமெண்ட் கொடுத்தான் சைன் பண்ணி கொடுத்தாள். அட்வான்ஸ் 20000 கொடுத்தாள்.

வரும் போது ஜீன்ஸ் பாண்ட் அண்ட்ரெட் டாப்ஸ் நெக் லெஸ் டீ ஷர்ட் இடுப்பு வரை போட்டு வந்து இருந்தாள். முடியை பிரீ ஸ்டைலில் ஷாம்பு போட்டு அழகாக கற்றையாக விட்டு இருந்தாள்.

பொட்டு வைக்க வில்லை . தோடு , மூக்குத்தி ஏதும் இல்லை .. நகையும் எதுவும் அணிய வில்லை . ஆனாலும் அழகாக இருந்தாள்.

அவள் வளர்ந்த விதம் அப்படி ..
பின்னல் டாக்ஸி டிரைவர் லக்கேஜ் கொண்டு வந்து கொடுத்தான்.

அவனுக்கு 100 ருபாய் டிப்ஸ் கொடுத்தாள்.

இவர்களுக்கு அது ஒரு நாளைக்கு ஆகும் செலவு..

அதற்குள் அவள் அறைக்குள் சென்று AC ஒன பண்ணி விட்டு வந்தாள்.

அம்மா அவளிடம் வந்து சாப்பிட்டாயா.. என்று கேட்டாள். வரும் போதே சப் வே சீஸ் பர்கர் சாப்பிட்டேன். லஞ்ச் என்ன என்று கேட்டாள் .

அம்மா என் உணவு வேறு மாதிரி ஸ்டைல். நான் பார்த்து கொள்கிறேன் என்றாள். நான் உங்களுடன் ஜஸ்ட் பேசி பழக மட்டும் தான் வந்துள்ளேன் என்றாள்.

நான் யாருடனும் நெருங்கி அன்புடன் பழகியவள் இல்லை. என் நண்பர்களுடன் ரொம்ப நெருக்கமாகவும் பழக வர வில்லை. என் வாழ்க்கை எனக்கு பிடித்தது போல இல்லை. அதனால் கொஞ்ச நாள் உங்களுடன் இந்த லைப் எப்படி இருக்கும் என்று பார்த்து விட்டு போகிறேன். என்றாள்.

“அம்மா .. நீங்கள் எனக்கு செய்ய வேண்டியது என்னுடன் பேசுவது மட்டுமே.. உங்களுடன் என்னை நீங்கள் வெளியில் அழைத்து சென்று உங்களில் ஒருத்தியாக வைத்திருங்கள். பிடித்தால் நானும் அது போல இருக்கிறேன். ” என்றாள்.

“நீ வசதியாய் வாழ்ந்தவள் . நாங்களோ வசதியின்றி கிடைத்ததை ஏற்று கொண்டு காலத்தை தள்ளுபவர்கள். இது எப்படி சரியாக வரும் என்று எனக்கு தெரியவில்லை ஜான்வி ” என்றாள் அம்மா தேவி

“அம்மா நீங்கள் என்னை உங்கள் மகளை போல எண்ணி நடத்துங்கள் . நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதற்கு நான் கட்டுப்படுகிறேன் ஓகே வா.. “என்றாள்.

“ஓகே பார்க்கலாம் ஜான்வி ” என்றாள் அம்மா

அவன் அம்மாவிடம் வந்தான் அம்மா லஞ்ச் கு என்ன காய்கறிகள் வேண்டும் என்று கேட்டான் . ஞாயிறு கிழமை ஆதலால் அன்று வீட்டில் இருந்தான். “முளை கீரை, அவரை காய், பீட்ரூட் , ஆனியன், கொத்தமல்லி , கருவேப்பிலை , இன்ஜி , ஒரு நாட்டு நெல்லிக்காய் , பச்சை மிளகாய் .. வாங்கி வா டா” என்றாள்.

என்ன செய்ய போற சமையல் என்று கேட்டான்

அவரை காய் சாம்பார் , கீரை கடைசல், பீட்ரூட் பொரியல், கருவேப்பிலை , இன்ஜி, கொத்தமல்லி , நெல்லிக்காய் , தேங்காய் போட்டு துவையல் என்றாள்.

இவளும் அங்கே இருந்தாள்.. நானும் கடைக்கு வரவா என்று குழந்தையை போல கேட்டாள்.

டேய் கூட்டிகிட்டு போடா .. பத்திரமா பார்த்து அழைச்சுக்கிட்டு போடா என்றால் அம்மா.

டூ வீலரில் அவளை அழைத்து சென்றான். அவள் இவனை கட்டி பிடித்த படி உட்கார .. இவனுக்கு அதெல்லாம் பழக்கம் இல்லாததனால் நெளிந்தான்.

இவன் காய்கறி வாங்குவதை பார்த்து கொண்டே நின்றாள். வாங்கிகொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில் சொன்னாள் , ” இது தான் நான் காய்கறி வாங்குவதை நேரில் பார்த்த முதல் நாள்” என்றாள்.

ஜாலியா இருக்கு என்றாள்.

அக்கரைக்கு இக்கரை பச்சை என்று சொல்வது இதனால் தான் போல என்று அவனுக்கு தோன்றியது ..

தொடரும்

 

 

 

 

 

 

 

2 thoughts on “ஜான்வி – அத்தியாயம் இரண்டு”

  1. பாவியென்னும் இறைவன் படைத்த உலகம்
    உயர்வு உயிரே நன்ற
    உச்ச உயர்வு உயிர் ஆன்மா உங்கள் எழுத்துக்கள்
    நேரெ மின்மையும் தடங்களும் உங்க உயிர் ஆன்மா உயிரோட்டம் இன்றி
    ஞானம் மின்னி போவனோ

    1. I will try to make with out spelling mistakes.. and make sure you will find ” some jeevan” in my stories.
      Anyway Thanks for your comments.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top