6
வைசாலி பேச்சில் அதிர்ந்து நின்றான் நந்தன். இவன் சாவகாசமாக இருக்க அங்கே அவளுக்கு சம்பந்தம் பேச ஆள் வருகிறார்கள், என்ற செய்தியே அவனுக்கு இதுநாள் வரை உள்ளத்தில் அழுந்தி கொண்டிருந்த உணர்வுகள் எழுந்து பேயாட்டம் போட.. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வீட்டுக்கு சென்று விட்டான்.
மறுநாள் எப்படியாவது அவளிடம் தன் மனதை சொல்லியே தீர வேண்டும் என்ற சபத்துடன் தான் அவன் துயில் கொண்டான். அடுத்த நாள் காலை அவனால் கல்லூரியில் அவளை நெருங்கவே முடியவில்லை.. தயங்கி தயங்கி சென்றாலும் அவளின் பழுப்பு பாவையின் வீச்சு தாங்காமல், அதிலேயே கட்டுண்டு அவளை பார்த்த வண்ணமே நின்று விடுவான்.
வைசாலி அவனை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க, அவன் தலை அவன் சம்மதம் இல்லாமல் ஒன்றுமில்லை என்று கூறி அவனுக்கு சதி செய்து விடும்.
அன்று அவர்களுக்கான விடுமுறை ஒரு மாதம் அறிவிக்க பட, இனி அவளை எப்படி நெருங்குவது.. அதை விட எப்படி பார்ப்பது என்று முடியை பிய்த்து கொள்ளா குறையுடன் திரிந்தான் நந்தன்.
அன்று இரவு தன் அறையினுள் குறுக்கும் நெடுக்குமாக நடந்த படி அதி தீவிர சிந்தனையில் இருந்தான் நந்தன்.
நாம் ஏன் அவளுக்கு தாலி கட்ட கூடாது என்று அறுந்த பழதான ஐடியா உதிக்க.. அவன் மனசாட்சியே அவனை காறி உமிழ்ந்தது..
‘ நீ தாலி கட்டினா அவ அப்படியே.. கல்லானாலும் கணவன்.. அப்படின்னு இருப்பா நினைக்கிரீயா… கல்லை எடுத்து உன் மண்டையில் போட்டு கொன்றுவா.. ’
‘ ஆமாமில்லை..’
‘ அதுக்கு மேல.. உனக்கு தைரியம் இருக்கா? அவளுக்கு தாலி கட்ட?’
‘ ஏன் இல்லாம? அது எல்லாம் நிறைய இருக்கு.. ‘
‘ நீ தாலி கட்டுன்னா.. அவளே ஒத்துக்கமாட்டா.. இதுல உன் பேரண்ட்ஸ் எப்படி ஒத்துப்பாங்க.?’
‘ நான் அவங்களுக்கு ஒரே பிள்ளை.. என் சந்தோசத்திற்கு குறுக்கே நிக்க மாட்டாங்க ‘
‘ ஆஹான்.. அப்படியா? அப்போ முதல உன் பேரண்ட்ஸ் கிட்ட சம்மதம் வாங்கு.. அவர்களை வைத்தே, அவளை ஈஸியா கல்யாணம் பண்ணிக்கலாம் ‘
‘ கரெக்ட்.. ஃபர்ஸ்ட் என் பேரண்ட்ஸை கரெக்ட் பண்ணுறேன் ‘ என்று கூறியவாறு தன் பெற்றோர் அறை நோக்கி சென்றான்.
அப்போது தான் மனோகரும் வந்திருந்தார்.
இருவரும் தன் தந்தை பார்த்திருந்த அந்த வாணிஸ் குடும்ப பெண்ணை பற்றி தான் பேசி கொண்டிருந்தனர். அதிசயமாக எல்லாத்துக்கும் போர் கொடி பிடிக்கும் ரூபாவதி இந்த குடும்பத்து பெண் என்றதும் ஒத்து கொண்டார். காரணம் அவர்களின் பணம் மற்றும் அந்தஸ்து..
அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த மகனை இருவரும் யோசனையாக நோக்கினார். இப்படி எல்லாம் வருபவன் இல்லை அவன்.. எது தேவை என்றாலும் ஒன்று அவன் அம்மாவிடம் தனியாக கேட்பான்.. இல்லை பொதுவாக அப்பா முன்னிலையில் முன் இரவு பொழுதிலேயே கேட்பான். இப்படி அவர்கள் அறை வரை தேடி கொண்டு வந்து இருக்கிறான் என்றால்…
முதலில் ரூபாவதி தான், ” கண்ணா.. உடம்பு ஏதும் சரியில்லையா? இந்நேரத்தில் வந்து இருக்க.. ஏதும் அவசரமாக வேணுமா?” என்றார் ஒரு வேளை பிள்ளைக்கு பணம் அவசரமாக தேவையோ என்று எண்ணி..
” அதானே.. உன் பிள்ளைக்கு பணத்தை செலவு செய்யத்தான் தெரியும்.. பெருக்கவா தெரியும்? போ.. போய் எடுத்து கொடு.. இன்னும் கெட்டு போகட்டும்” என்றார் எரிச்சலாக…
” அதெல்லாம் ஒன்னும் பணம் தேவை இல்லை. எனக்கு ஒரு முக்கியமான விஷயம் உங்க ரெண்டு பேர் கிட்ட பேசணும்..”
“இந்த ராத்திரில வந்து எழுப்பி பேசுற அளவுக்கு அப்படி என்னடா முக்கியமான விஷயம் “என்று வியந்தார் மனோகர்..
ரூபாவதிக்கும் அதே எண்ணம்தான்..
“அது வந்து.. நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்”
“என்னது ?” என்று இருவரும் ஏகபோகமாக அதிர்ந்து கூவினர்..
“ஆமா லவ் பண்றேன்.. எங்க காலேஜ் தான் அவளும்.. பேரு வைசாலி. அதனால நீங்க வாணிஸ் சம்மந்தப்பட்ட பேச்சு எடுக்காதீங்க”
“உனக்கே 24 வயசு தான் ஆகுது. அப்போ அந்த பொண்ணுக்கு இருபது , இருபத்தியொரு வயசு தான் இருக்கும். காலேஜ் படிக்கிற வயசுல இதெல்லாம் என்னாத்துக்குடா.. ” மனோகர் நந்தனை பார்த்து கோபமாக கத்தினார்..
“எங்க காலேஜ்ன்னு சொன்னேன்.. ஆனா அதுல படிக்கிறான்னு சொன்னேனா?என்று கூறயவனை இருவரும் ” என்னடா சொல்ல வர ” என்று குழம்பிப்போய் பார்த்தனர்.
“அவ எனக்கு லக்சரர்..” என்ற அணுகுண்டை அனாயசமாக தூக்கி போட்டான்.
” என்னது உன் லெக்சரர..லவ் பண்றியா?” இதுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று இருவருக்கும் தெரியவில்லை..
முதலில் சுதாரித்த மனோகர் தான் வேகமாக வந்து நந்தன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
“லெக்சரர்ன்னா குரு டா.. அந்த பொண்ண லவ் பண்றேன்னு சொல்ற.. அந்த பொண்ணும் உன்னை லவ் பண்ணுதா?”
“அந்த பொண்ணுக்கும் என் வயசு தான்.. என்ன நான் வந்து கம்பெனியில் ஒரு வருஷம் உட்கார்ந்து வீணடிச்சேன்.. அந்த பொண்ணு அந்த வஷத்தில் படிப்பை முடிச்சுட்டு , லெக்சரர் ஒர்க் பண்ண வந்துட்டா.. அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் ஆனா நான் அவ கிட்ட இன்னும் லவ் சொல்லல.. உங்களை கூட்டிட்டு போய் கல்யாணம் பேசலாம் நினைச்சேன்.. நீங்க இல்லைன்னா நான் மட்டுமே போய் பண்ணிக்கிறேன்.. இந்த முடிவில் எந்த மாற்றமும் கிடையாது யோசிக்க வேண்டியது நீங்கதான்.. எப்போ பொண்ணு பார்க்க போகலாம்னு யோசிங்க.. வேற எதுவும் யோசிக்காதீங்க.. நீங்க பத்தடி பாய்ந்தீங்கன்னா, நான் 20 அடி பாய்வேன்… இல்ல உங்களுக்கு பணம் அந்தஸ்து தான் முக்கியம் என்றால் புள்ளைய மறந்துடுங்க.. நான் இதுல டேம் சூர்..” என்றவன் பெற்றோர் அறை கதவை வேகமாக சாத்தி விட்டு தன் அறை நோக்கி விரைந்து விட்டான்..
மனோகரும் ரூபாவதியும் ஸ்தம்பித்து நின்றனர். என்ன செய்வது என்று புரியாத நிலை. நந்தனோ சிறு பிள்ளை இல்லை இது பருவ வயதில் வரும் காதல் என்று சொல்லி அவனை மாற்றுவதற்கு..
அதை விடு தந்தை சொன்ன சம்பந்தத்தை எப்படி மறுப்பது? தந்தையிடம் இதை எப்படி செல்வது என்று அவருக்கு புரியவில்லை. வழக்கம்போல் தேவாவை சரணடைய எண்ணினார்..
ரூபாவதி நிலைமையோ இன்னும் படுமோசமாக இருந்தது. என் மகன் ஒன்னுத்துக்கும் உதவாத அந்த லெக்சரரை கல்யாணம் செய்தால் அவர்களின் நிலை இன்னும் தாழ்ந்து போகும் அல்லவா.. ஏற்கனவே தேவா மின்னல் வேகத்தில் உயர்ந்து கொண்டு செல்கிறான்.. இப்போது வாணிஸ் சம்பந்தமும் சேர்ந்துவிட்டால்.. இனி அவர்களுக்கு இடையே உள்ள அந்தஸ்து பேதம் மலைக்கும் அதல பாதாளத்துக்கும் இடையே உள்ள தொலைவு ஆகிவிடும் என்ற நினைவே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் போல..
என்ன செய்வது என்று அவருக்கு புரியாத நிலை.. பாவமாக தன் கணவரை பார்த்தார்.
அவரோ கடும் கோபத்தில் மனைவியைதான் முறைத்துக் கொண்டு நின்றார்.
“எல்லாம் உன்னால தான் ரொம்ப செல்லம் கொடுக்க வேண்டாம் சொன்னேனே கேட்டியா.. இப்ப பாரு நம்மை மீறி போய்ட்டான்”
“ஆமாம் இப்ப கூட என்னையே நீங்க குத்தம் சொல்லுங்க”
“உண்மை தானே சொல்லுறேன்”
“அய்யோ.. உங்க உண்மையை அப்புறம் உலகுக்கு நீங்க சொல்லலாம். இப்போ இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு.. அதை சொல்லுங்க”
“தேவா” என்றார் அமைதியாக.
“நான் என்ன கேட்டுகிட்டு இருக்கேன்.. நீங்க இப்போ எதுக்கு அவன் பெயரை சொல்லுறீங்க?”
“நீ கேட்ட தீர்வு அவன் தான்.. இந்த நிலைமையில் என்னால் யோசிக்க கூட முடியாது.. ஒரே வழி.. தீர்வு அவன் தான்”
“இந்த விசயம் தெரிஞ்சா.. அவ என்னை பற்றி என்ன நினைப்பா” தமயந்தி பற்றி அவர் கவலை பட..
“உனக்கு உன் மகன் வாழ்வு முக்கியமா? இல்லை உன் ஈகோ.. கௌரவம் முக்கியமா? நீயே முடிவு பண்ணிக்கோ?”
என்று அவர் படுத்து விட..
ரூபாவதி பெரும் யோசனை பின்னே, ” நாம தேவா கிட்டயே பேசுவோம்.. ஆனா வீட்டுக்கு வேணாம்.. ஆபீஸ்ல போய் பேசலாம்.” என்றார். மனோகர் அவரை முறைக்க.. ” நான் ஒன்னும் தமயந்திக்காக சொல்ல, அங்க மாமா அத்தை இருப்பாங்க.. இதை கேட்டு அவங்களும் என்னை தான் சொல்லுவாங்க.. அதான் ” என்றார் மெல்லிய குரலில்..
மறுநாள் எழுந்து வந்த மகனிடம் அவர்கள் எதுவும் பேசவில்லை.. அவனோ அவர்களை தான் பார்த்த வண்ணமே அமர்ந்திருந்தான். இருவரும் பேசுவதாக தெரியவில்லை.. ” என்ன முடிவு செய்து இருக்கீங்க..?” என்றான்.
ரூபாவதி கணவரை பார்க்க, அவர் தன் குரலை ஒரு முறை சரி செய்து கொண்டு, ” இரண்டு நாள் டைம் கொடுடா.. நான் கொஞ்சம் யோசிக்கணும்”
” தாராளமா யோசிங்க.. ஆனா உங்களுக்கு இரண்டே ஆப்ஷன் தான்.. ஒண்ணு பிள்ளை.. இரண்டு உங்க கௌரவம்.. நாளைக்குள்ள பதில் சொல்லிடுங்க.. “
என்று கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான்.
ரூபாவதி கணவனை பார்த்து ” என்ன செய்ய போறீங்க?”
“கிளம்பு.. நாம தேவாவை பார்க்க போகலாம் “என்றவர் அறைக்குள் சென்று , கிளம்ப ஆயத்தமானார்.
வண்டியில் செல்லும் போதே, தேவாவிடம் பேசி அவனை காண வருகிறோம்.. மிக அவசரம் என்று கூறி இருந்தார்.
என்றும் மலைப்புடன் செல்லும் மனோகர் இன்று அவசரவசரமாக செல்ல, ரூபாவதியோ அப்பிரம்மாண்ட அலுவலகத்தையும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக செயல்படும் அலுவலர்களையும் கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றார். கணவர் தேவாவை பாராட்டுவதில் தவறே இல்லை என்ற உணர்வு ஆட்கொள்ள… தன் மகன் பற்றிய கவலையும் தலை தூக்கியது.
தேவாவே இவர்களை எதிர் கொண்டு வரவேற்று உபசரித்து, அவர்களை நோக்கினான். எதுவா இருந்தாலும் அவர்கள் வாயில் வழியே வரட்டும் என்று.. சித்தப்பா என்றால் அவனின் கணிப்பை சொல்லிருப்பான். ஆனால் கூட சித்தி வேற என்பதால் தான் வெறும் ஆராய்ச்சி பார்வை.
கவலையுடன் கூடிய முகம், அதில் ஒரு பரிதவிப்பு, கூடவே சித்தி, அதுவும் வீட்டில் பேச முடியாமல் அலுவலகத்திற்கு வந்த விதம்.. கண்டிப்பாக நந்தனால் கல்யாணத்தில் ஏதோ பிரச்சனை என்று சரியாக கணித்தான்.
மனோகர் வந்தவர் யோசனையுடன் அமர்ந்து இருக்க, ரூபாவதி அவனின் அறையின் நேர்த்தியை தான் பார்த்து கொண்டிருந்தார். அவர் நினைத்தை விட மிக மிக உயரத்தில் அவர்கள் இருப்பது கண்டு மனதில் பொறாமையும், கவலையும் ஒருங்கே எழுத்தது.
இவர்களின் அமைதியை கலைத்தது தேவாவின் குரல், ” என்ன சித்தப்பா, நந்தன் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லையா??” தேவாவின் வார்த்தையில் அதிர்ந்து போய் பார்த்தார் ரூபாவதி, மனோகர் வழக்கம் போல மகனின் திறமையில் கர்வ புன்னகையுடன் தன் மனைவியை பார்த்து, கண்களாலேயே எப்படி எங்கள் வாரிசு? என்று வினவினார்.
அவர்களின் அமைதி தேவாவின் வார்த்தையை சரி என்று கூற, ” கலெஜ்ல யாரையாவது லவ் பண்ணறானா? என்று அடுத்த கேள்வியையும் சரியாக கூறி ரூபாவதியின் பிபியை எகிற வைத்தான். மனோகர் தன் தலையை ஆட்டிக் ஆமோதித்தார். பின் நேற்று நந்தன் கூறியதை அப்படியே ஒப்புவித்தார் தேவாவிடம்.
” என்ன லெக்சரர் ஆஆ?” என்று அதிர்ந்தவன், உட்கார்ந்து இருந்த இருக்கையின் முன்னே வந்திருந்தான் அதிர்ச்சியில் அவனை அறியாமல்..
மனோகரிடம் சன்னமான தலை அசைப்பு மட்டுமே.. ரூபாவதி கலக்கமகவே அமர்ந்து இருந்தார்.
” ஓகே… சித்தப்பா கிவ் மீ டூ டேஸ்.. ஐ சார்ட் அவுட் ஆல் பிராப்ளம்”
” தேவா.. அவன் நாளைக்கு பதில் சொல்ல சொல்லி இருக்கான்.. இல்லைன்னா அவனே அவன் லைஃப் பார்த்துப்பானாம்”
” ஒஹ்ஹ்.. அவ்வளோ பெரிய மனுஷன் ஆகிட்டானா.. அவன்? “
” அந்த மாயக்காரி.. என்ன மந்திரம் செஞ்சா தெரியல.. என் பிள்ளை இப்படி எல்லாம் பேசுறான். எல்லாம் பணத்தாசை பிடிச்ச பேய்கள்.. ” இன்னும் காது கொடுத்த கேட்க முடியா பல வார்த்தைகள் அவர் வாய் வழியே வந்து விழுந்தது கொண்டிருந்தது. அதில் பாதி வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை அந்த பாரினில் கோல்ட் மெடல் வாங்கின தொழிலதிபனுக்கு..
” ஓகே.. சித்தி.. கூல்.. நான் பார்த்துக்கிறேன்” என்று அவனின் சமாதான வார்த்தைகள் எதுவும் அவர் காதில் விழவில்லை. நேற்று இருந்து அவர் நெஞ்சை அடைத்த காயங்களுக்கு வார்த்தைகளை கொட்டி தீர்த்து கொண்டிருந்தார். தேவா தன் சித்தப்பாவிற்கு கண் காட்ட.. ஒரு வழியாக மனோகர் ரூபாவதியை அடக்கினார்.
” தேவா.. இந்த விசயம் நமக்குள்ளே இருக்கட்டும்.. அப்பாவிற்கோ.. தாத்தாவிற்கோ இப்போதைக்கு தெரிய வேண்டாம். அப்புறம் என்ன புள்ள வளர்த்து வைச்சு இருக்கடா நீன்னு எங்க அப்பா என்னை ரவுண்ட் கட்டி அடிப்பார்.” என்றார் இலகுவாக, வரும் போது இருந்த இறுக்கம் இப்போது இல்லை அவரிடம்.. அதான் பொறுப்பை தேவாவின் வசம் ஒப்படைத்து விட்டோமே என்று எண்ணமே காரணம்.
மனோகர் தம்பதி சென்றவுடன் தேவா தன் ஆஸ்தான துப்பறியும் நிறுவனத்திற்கு போன் செய்து கடந்த ஆறு மாதங்களாக நந்தன் பற்றியும் அவன் குறிப்பிட்ட அந்த லெக்சரர் பற்றியுமான டீடைல்ஸ் இன்று மாலைக்குள் தருமாறு ஆணை பிறப்பித்தான்.
வைசாலி பற்றிய விவரங்கள் அவன் தனியாக துப்பறியும் நிறுவனத்திலிருந்து கேட்டு இருந்தால், அவனுக்கு வைஷாலியை பெண்பார்க்க வருவதற்கான நிகழ்வுகள் பற்றி தெரிய வந்திருக்கும். அதேபோல் அவள் குடும்பத்தைப் பற்றியும் அவளைப் பற்றியும் தெரிய வந்திருக்கும்.. ஆனால் அவன் கேட்டதும் இவர்கள் இருவருக்குமான சந்திப்புகள் பற்றிய விவரங்கள் மட்டுமே..
மாலை வரை அந்த துப்பறியும் நிறுவனத்தின் தகவலுக்காக காத்திருந்தவன் , அவர்கள் அவனுக்கு அனுப்பிய மெயிலை பார்த்தான்..
அதன் சாரம்சம் கடந்த ஆறு மாதங்களாக நந்தனுக்கு வைசாலி தனியாக அரை மணி நேரங்கள் வகுப்பு எடுத்தாள் என்பதும், ஆனால் அந்த வகுப்பில் அவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர் என்பதும் மிக அழுத்தமாக குறிப்பிட்டிருந்தனர். அதன்மூலம் அவர்கள் இருவரும் மிக நெருக்கமானவர்களாக உருவகப்படுத்த பட்டிருந்தனர்…
மேலும் அந்த லெக்சரருக்காக தான் நந்தன் பைனான்ஸ் டிபார்ட்மெண்ட் மாறியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
அதைப் படித்தவுடன் பயங்கர அதிர்ச்சி ஆனது தேவாவுக்கு.. ‘எப்படி இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் போனோம் ‘ என்று தடுமாறினான். ‘ அந்த சோம்பேறி கடைசியில் நம்மை வைத்து அவன் காரியத்தை சாதித்து விட்டானே..’ என்று பெரும் கோபம் நந்தன் மீதும் அந்த முகமறியாத லெக்சரர் மீதும் அவனுக்கு ஏற்பட்டது..
அவனின் அந்த இந்த கோபம் நந்தனை விட, வைஷூவின் மீது அதிகம் திரும்பியது. காரணம் தன் வகுப்பில் படிக்கும் மாணவனை எவ்வாறு ஒரு ஆசிரியை காதல் கண்ணோடு பார்க்கமுடியும்.. எவ்வாறு காதலிக்க முடியும்.. அதை தேவாவின் மனதால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் நந்தன் பணத்தின் மீது அவள் கொண்டுள்ள ஆசை தான் .. என்று மிக சரியாக தவறான முடிவை எடுத்தான் முதன் முறையாக அவன் வாழ்வில்..
இதற்கெல்லாம் சேர்த்து அவளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே தான் வீட்டிற்கு சென்றான். மறுநாள் அலுவலகம் வந்ததும் உடனே தன் சித்தப்பாவிற்கு அழைத்து தன்னை வந்து சீக்கிரம் காணமாறு கூறி வைத்து விட்டான்.
அவரும் என்னவோ ஏதோவென்று பதறி அடித்துக் கொண்டு தான் வந்தார். பின் துப்பறியும் நிறுவனத்தினால் தனக்கு அனுப்பப்பட்ட தகவல்களை அவருடன் பகிர்ந்து கொண்டான்.
மனோகரும் தேவாவை போலவே மிக வருத்தம் கொண்டார். ஆனால் அவரால் ஒன்றும் யோசிக்க முடியாமல் தேவாவின் முகத்தையே பார்த்து ” இப்போ என்ன செய்யலாம் தேவா” என்றார்.
“வெரி சிம்பிள் சித்தப்பா.. ஒரே டென் டேஸ் நந்தன் இந்த பொண்ணு கண்ணுல படாம இருந்தா போதும்.. கண்ணில் படாதது கருத்திலும் படாது. அதனால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி இப்போ அவனுக்கு லீவு தானே.. எங்கேயாவது வெளியூர் இல்ல வெளிநாட்டுக்கு அவனை அனுப்பி வைச்சிடுங்க.. இந்த பொண்ணுகிட்ட நீங்க போய் பேசுறதா சொல்லி அவனை அனுப்பி வைங்க”.
“அப்புறம் அவன் ஊரில் இருந்து வந்து கேட்டா நான் என்ன சொல்றது?”
“அதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம்.. சித்தப்பா’
“என்ன வேணாலும்னா… தேவா நீ ஏதும் பெருசா எல்லாம் பிளான் பண்ணி பிரச்சனை ரொம்ப சிக்கலாக்கிடாதாப்பா” என்றார் மகன் மீது அக்கறையுடன்..
“என்ன சித்தப்பா.. நான் இதுல எதுவும் நேரடியாக செய்ய போறதே கிடையாது.. எல்லாம் நம் ஆட்களை வைத்து தான் மூவ் பண்ண போறேன்.. சோ.. டோண்ட் வொர்ரி”
“சொல்லு தேவா என்ன பண்ண போற”
அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரை பார்த்து சிரித்தவன்..” லெட்ஸ் வெயிட்அண்ட் வாட்ச் சித்தப்பா” என்றான் தன் மீதான அதீத கர்வத்தில்.
தேவாவின் அதிரடியால் வைஷூக்கு நேர போவது என்ன…
காத்திருங்கள்
கர்வம் வளரும்..
Vaishu oda reaction ena va erukum… interesting sis
Super sis 💞