ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 14

14

 

 

 

உள்ளே நுழைந்தவன் கதவை தாழ்ப்பாள் போட்டு, ஆர் யூ ரெடி பார் செலிப்ரேட் அவர் ஃபர்ஸ்ட் நைட் ??? என்று கூறி அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினான் தேவா..

 

உதடுகளில் நெளியும் கள்ள புன்னகையுடன் மெதுவாக அவளை நோக்கி சென்றான்.. தன் ஷர்ட் பட்டன்களை கழற்றி கொண்டே மெல்ல மெல்ல முன்னேறினான்.. தன் முழு கை சட்டையை மடித்து முழங்கை வரை மேலேற்றி அவளை நெருங்க.. அவள் சிறிதும் அசைந்தாளில்லை.. அவனின் வெகு அருகாமையை கண்டு அசரவும் இல்லை.. அவனையே விழி விரிய பார்க்க.. அதை வைஷூ மிரண்டதாக எண்ணி கொண்டான்.

 

 ” என்னை பார்த்தா பயப்பட மாட்டேன்னு சொன்ன.. மனுஷன்.. புருசன் என ரைமிங் ஆஹ பேசுன.. இப்போ ஸ்டேச்சூ மாதிரி நிக்கிற.. ம்ம்.. அவ்வளோ தானா உன் வீரம் எல்லாம் ” என்றான் எள்ளலாக…

 

 

வைஷூ அவனை ஆழ்ந்து பார்க்க.. அப்பார்வையை தவிர்த்தவன்.. அவளை நெருங்கி தன் ஆள் காட்டி விரலால் அவள் தாடையை மேல் நோக்கி நிமிர்த்தி ” விருப்பம் இல்லாத பெண்ணை தொட நான் மிருகம் இல்லை ” 

 

காலையில் அவன் தான் அவள் விருப்பம் இல்லாமல் முத்தம் கொடுத்தான் என்பதை மறந்து அவளிடம் பேசினான்.

 

பின் கட்டிலை காட்டி.. ” இதுல உன்னை தோற்கடிக்க நான் ஒன்னும் பேடியோ இல்லை கோழையோ இல்லை.. நான் தேவாடி ” என்றவன், ” தூங்கு ” என்று விட்டு அவன் நகர எத்தனிக்கும் நேரம்.. அவன் கை பற்றி தடுத்தவள் தன் ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தாள்.

 

இவ என்ன இப்படி பார்க்கிறா.. சரிக்கு சரி நிற்கிறா… என்ன இவ மைண்ட் வாய்ஸ்.. என்று இப்போது குழம்பி போவது அவனின் முறை..

 

” கல்யாணம்னா என்னன்னு தெரியாம இருக்க நான் என்ன சின்ன தம்பி பிரபு வா?? ம்ம் எல்லாம் தெரிஞ்சு தானே சம்மதிச்சேன்.. பட் உங்க பர்ஃபாமென்ஸ் ரொம்ப ஓல்டு.. டிரை சம்திங் நியூ.. ” என்று கூறி மிதப்பான புன்னகையை அவனுக்கு அவள் பார்சல் செய்ய.. அதில் விழ போன மனதை இழுத்து பிடித்தான் தேவா..

 

” நீ எல்லாம் என்ன பொண்ணுடி?” என்று தன் பக்க சரிவதை தடுக்க கோபமாக கேட்க..

 

” வேணும்ன்னா கிட்ட வந்து நல்லா பார்த்துக்கோங்க.. பொண்ணா.. இல்லை மோகினி பிசாசுன்னு? ” என்று அவனை சீண்ட… 

 

அவளின் சீண்டலில் அவள் மீதான கோபத்தை தாண்டி ஒரு ஈர்ப்பு விசை ஏற்பட.. அவளை உறுத்து பார்த்தான்.

 

” இப்படி நின்று கிட்டே பார்க்க போறிங்களா.. ஓகே.. கோ ஹெட்.. ஆனா எனக்கு பயங்கர டயர்ட்.. நான் தூங்க போறேன்.. நீங்க அப்படிக்கா அந்த சோஃபாவில் உட்கார்ந்து பொறுமையா பார்த்து கிட்டு இருங்க” என்று கூறி ஒற்றை கண்ணடித்து படுக்கையில் விழுந்து விட்டாள்.

 

” போடி ” என்று விட்டு அவனும் சோஃபாவில் அமர.. கலகல வென்று சிரித்தாள் வைஷூ..

 

அப்போது தான் அவளின் சிரிப்பிற்கான அர்த்தம் புரிய, அச்சோ என்றானது தேவாவிற்கு..

 

” சிரிக்காதடி மோகினி பிசாசு.. நிஜ பிசாசு பயந்திடும் போல ” என்று கடுப்பாக மொழிந்து விட்டு, தன் லப் டாப் மூழ்கி விட்டான். ஆனால் மனமோ அவளையே சிந்திக்க தொடங்கியது.. அவள் அருகில் வரும் போது தன்னை அறியமால் அவள் பால் ஈர்க்கபடுவது அவனுக்கே சற்று கடுப்பை தான் தந்தது.

 

வைஷூ கண்களை மூடி படுத்திருந்தாலும், அவன் பேசியதை ரீவெயின்ட் செய்தது அவள் மனம். அவனின் இந்த பேச்சு தன் மனதை மறைத்து கொள்ள போடப்படும் அவனின் தற்காப்பு கவசமோ என்று… உன் கர்வம் வீழும் நாள் தொலைவில் இல்லை தேவா… அதை செய்து முடிப்பாள் வைஷூ என்று எண்ணியவாரே தூங்கி போனாள்.

 

வைஷூவின் சீரான மூச்சு அவளின் ஆழ்ந்த உறக்கத்தை கூற, அவளை தான் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான் தேவா. எவ்வித பயமும் இல்லாமல் தன் அறையில் ஆனந்த சயனத்தில் இருக்கும் அவள் மீது ஆச்சர்யம் தான்.. எப்படி அவளால் நிம்மதியாக தூங்க முடியுது.. என்று யோசித்தவாறு மெத்தையின் மறு பகுதியில் படுத்தவன் கண்களோ, தூங்கும் அவளின் முகத்தை பார்த்த வண்ணமே மெல்ல மெல்ல துயில் கொண்டது.

 

காலையில் எழ முற்பட்ட தேவாவால் முடியவில்லை.. என்ன டா என்று பார்க்க அவன் கழுத்தை ஒரு மென் கரங்கள் வளைத்திருக்க இடையை மற்றொரு கரம் வளைத்து பிடித்திருந்தது. எல்லாம் நம் நாயகி தான்.. அவளோ நன்றாக உறங்க.. இவனுக்கு தான் பல உணர்ச்சிகளின் எழுச்சி.. மெல்ல அவளை விலக்கிவிட்டு எழ, ” டிவீட்டி டோண்ட் கோ.. ஏன் இப்படி இளச்சி போய்ட்ட.. உன் கொழுக்கு மோழுக்கு தொந்தி எங்க டெட்டி ” தூக்கத்தில் உளறியவாறு அவன் வயிற்றை தடவ.. இதற்கு மேல் தாங்காது என்று அவன் எழுந்து விட்டான்..

 

” இவ எல்லாம் லெக்சரர்… இன்னும் டெட்டி கட்டிப்பிடிச்சி தூங்குறா ” என்று திட்டிக்கொண்டே சென்றான் அவளின் சிக்ஸ் பேக் காஸ்ட்லி டெட்டி தேவா இதழில் புன்னகையுடன்….

 

 

காலையில் பாப் சாங் அலறியது அவன் தளத்தில்.. மொத்த வீடும் குலுங்கியது.. மிருவின் அறையில் இருக்கும் போதே அரண்டவள் இப்போது கேட்கவா வேண்டும்.. வாரி சுருட்டி எழுந்தவள், குளியலறையில் புகுந்து கொண்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி, தன்னையுஅ சுத்த படுத்தி வந்தவள், போய் நின்றது அவனின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் அறையில் தான் இரு காதுகளையும் பொத்திக்கொண்டு…

 

 

சென்றவள் பார்த்து, பாப் சாங்க்கு ஷூம்பா பிராக்டீஸ் செய்தவனை தான்.. இது என்னடா காம்பினேஷன் என்று எண்ணியவள், என்றைக்கு இவனை புரிந்து கொள்ளகிற மாதிரி இவன் நடந்து இருக்கான். சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்களில் மெயின் ஸ்விட்ச் ஃபோர்ட் தெரிய. விரைந்து சென்று அதனை அணைத்தாள். பாட்டு நின்றதில் ஏன் ? என்று பார்க்க.. வைஷூவை கண்டவுடன் அவன் பொறுமை பறக்க… ஏய் பிசாசு… ஏண்டி இப்படி இம்சை கூட்டுற.. காலையிலே ” என்று கத்தியவன் மீண்டும் விட்டதை தொடர்ந்தான் பாட்டை போட்டு விட்டு…

 

அவள் மீண்டும் காதை பிளந்த பாட்டை கேட்டு, காதை பொத்தியவள், உங்களுக்கு இருக்கு என்று கூறி சென்று விட்டாள்.

 

 குளித்து கீழே சென்றவள், மோகன் தமயந்தி ஏதோ விவாதித்து கொண்டு இருக்க, இவளை பார்த்து தயங்கவும்.. 

” எதுவும் பெர்சனல் ஆ அத்தை.. நான் பிறகு வரேன் ” என்று திரும்ப, ” வைஷூ நில்லுமா” என்றார் மோகன்.

 

 

” பெர்சனல் எல்லாம் ஒன்னும் இல்லை.. அது.. சற்று இழுத்தார்… ” நம்ம குடும்பத்து பிள்ளைகளுக்கு வாணிஸ் குருப் பெண்களை பேசி இருந்தோம்.. அப்பாவுக்கு தான் இந்த சம்மந்தத்துல ரொம்ப விருப்பம்.. இப்போ உங்க கல்யாணம் நடந்த விசயம் தெரியாது.. அதான் அவங்க கிட்ட சொல்லுறது பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்.”

 

” அதோட நாளைக்கு தேவா பிறந்த நாள். ஏற்கனவே நிறைய பேரை இன்விட் செய்தாச்சு பார்ட்டிக்கு.. இப்போ அதை கேன்சல் செய்யுறதா.. இல்லையா ஒரே குழப்பம் ” என்றார் தமயந்தி.

 

இவர்களை பேசியதை கேட்டு கொண்டே வந்த தேவா.. ” இட்ஸ் வெரி சிம்பிள் அப்பா… என் பர்த்டே ஃபுங்ஷன்ல எங்க மேரேஜ் பத்தி எல்லோருக்கும் தெரிவிச்சிடலாம். அவங்களுக்கும் அப்போவே தெரிய வரட்டும்” என்றான்.

 

” குட் சொலுயூக்ஷன்.. அப்படியே பண்ணிடுறேன்.. ஆமாம் இந்த திடீர் மேரேஜ் பத்தி கேட்டா.. என்ன சொல்ல போற தேவா” என்று குறுகுறுப்புடன் மகனை பார்த்தார் மோகன்.

 

டைனிங் ரூம் நோக்கி சென்று கொண்டிருந்தவன், தந்தையை தலையை மட்டும் திருப்பி பார்த்தவன், ” ஆல்ரெடி நீங்க பரப்பினது தான்.. அதிதீவிர காதல்.. உங்கள் மருமகள் மேல எனக்குன்னு.. ” என்று கூறி வைஷு கூர்ந்து துளைத்தது அவனின் கூர் விழிகள்..

 

மோகனும் தமயந்தியின் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். மெதுவாக தான்.. ஆனாலும் அவனுக்கு அதுவும் தெரிந்தாற் போல, ” ரொம்ப எல்லாம் சிரிக்க வேணாம் இரண்டு பேரும், ” என்று டைனிங் டேபிள் அமர்ந்தவாறு கூற, இருவரின் முகம் எப்படி இவனுக்கு தெரிந்தது என்று அதிர்ச்சியை காண்பிக்க… அதையும் பார்க்காமலேயே ” ஷாக் குறைங்க.. என்றவாறு தன் உணவில் கவனம் செலுத்தினான்.

 

இவனுக்கு உடம்பு முழுக்க கண்ணு.. வைஷூ இவன்கிட்ட நீ கொஞ்சம் உசார் உசார்.. என்றது வைஷூவின் மைண்ட் வாய்ஸ்..

 

 

சாப்பிட்டு வந்தவன், ” ப்பா.. பார்ட்டி ரொம்ப எல்லாம் கிராண்ட் ஆ வேண்டாம். நெக்ஸ்ட் ரிசப்ஷன் கிராண்ட் ஆ செய்துகலாம். அதுக்கு எல்லோரையும் இன்வைட் செய்துகலாம் ” என்றவன். எல்லோரையும் ஒரு பொது பார்வை பார்த்து ” ஆபீஸ் கிளம்புறேன் ” என்று கூறி சென்று விட்டான்.

 

வைஷூ செல்லும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாளே தவிர, அவன் பின்னோடும் செல்லவில்லை. அவனுக்கு பதிலும் சொல்லவில்லை. அவனும் இதை அவளிடம் எதிர்பார்க்கவில்லை போலும், தன் வேக நடையில் விரைந்து விட்டான்.

 

பின் அனைவரோடும் காலை உணவு முடிக்க, மிரு அவள் பணி செய்யும் மருத்துவமனைக்கு சென்று விட்டாள். பொழுது போகவில்லை வைஷூவுக்கு. 

 

 

ஒரு மினி வில்லா போல இருந்த அவர்களது அறையை தான் சுத்தி சுத்தி பார்ப்பது, தன் உடைகளை அதற்குரிய இடங்களில் அடுக்குவது, அவனின் புத்தக கலெக்சன் பார்ப்பது என்று நேரத்தை நெட்டி தள்ள, இன்டர்காமில் தமயந்தி அழைத்தார்.

 

” சொல்லுங்க அத்தை.. கீழே வரவா?”

 

” வேண்டாம் வைஷூ.. நாளைக்கு பார்ட்டிக்கு உனக்கு ட்ரெஸ் வேணும் இல்லையா? அதனால் நீ தேவாவிற்கு ஃபோன் செய்து சொல்லு.. ஈவ்னிங் போல அவன் சீக்கிரம் வந்ததும் இரண்டு பேரும் போய் எடுத்திட்டு வந்திடுங்க” 

 

இவனோட ஷாப்பிங் ஆ நினைக்கவே அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவனை சீண்ட கிடைக்கும் வாய்ப்பை எப்படி நழுவ விட.. என்று சந்தோசமாக எண்ணியவாறு, ” சரிங்க அத்தை” என்று கூறி விட்டு, தன் கணவனுக்கு அழைத்தாள். நம்பர் எல்லாம் மிரு உபயம்.

 

அவனுடைய பெர்சனல் நும்பர்க்கு அழைப்பு, அதுவும் அன்நோன் இருந்தது.. யாராக இருக்கும் யோசனை ஊடே போனை எடுத்தான் தேவா.

 

” ஹலோ ” என்ற அவனின் ஆளுமையான குரலை கேட்டு, எப்படி தன்னை சொல்ல என்று அவள் யோசிக்கும் முன், பல ஹலோக்கள் அவனிடம் இருந்து.

 

” வைஷாலி பேசிறேன் ” என்றாள் மெதுவாக..

 

இனிய அதிர்ச்சி அவனுக்கு, ” ம்ம்.. சொல்லு ‘ என்றான் விரைப்புடன்..

 

” நாளைக்கு பார்ட்டிக்கு ட்ரெஸ் எடுக்கணுமாம்.. அத்தை சீக்கிரம் வர சொன்னாங்க” என்று அவள் கூற..

 

” அது எல்லாம் நான் எடுத்திட்டேன்.. சொல்லிட்டு” என்று அவள் அடுத்து பேசும் முன் அணைத்து விட..

 

அவளோ அவனை அர்ச்சித்து கொண்டிருந்தாள். என் விசயம் மட்டும்னா இவனுக்கு யோசிக்க தெரியாது போல.. டர்ட்டி.. டர்ட்டி.. போடா.. என்று அவனை தாளித்து விட்டு போனை தூக்கி போட்டு விட்டாள்.

 

உண்மையில் தேவாவிற்கு அவளை பற்றிய ‌எண்ணம் இல்லை.. வேலை மிகுதி ஒரு புறம்.. அவனுடைய வழக்கமான பர்த்டே பார்ட்டி என்ற எண்ணமே.. பெண் கணவனிடம் எதிர்பார்க்கும் சராசரியான விஷயங்கள் தெரியாது அவனுக்கு..

 

 

வழக்கம் போல இரவு லேட் ஆக வந்த மகனை பார்த்து, தமயந்திக்கு கோவம் ஏறியது. என்றைக்கும் இல்லாமல் உள்ளே நுழைந்தவனை பார்த்து, ” உன் கிட்ட நான் இதை எதிர் பார்க்கல தேவா.. ஈவ்னிங் வந்து வைஷூவை ஷாப்பிங் கூட்டிட்டு போ தானே சொன்னேன். அவகிட்ட என்ன சொன்ன நீ?” என்று கோபமாக பேசும் அன்னையை பார்க்க..

 

என்ன சொன்னோம்.. நமக்கு எடுத்தாகி விட்டது தானே சொல்ல சொன்னோம்.. இவ என்ன சொல்லி வைச்சா என்று வைஷூவை பார்த்து முறைக்க.. அவள் அப்பாவியாக இமை கொட்டி பாவமாக பார்க்க..

 

இவ பார்வையே சரி இல்லையே.. என்று தேவா யோசிக்க..

 

” ஏன் டா.. உன்கிட்ட தானே கேட்கிறேன். எதுக்கு அவளை முறைக்கிற.. ” 

 

“மா.. என்னன்னு சொல்லுங்க.. ஏற்கனவே இரண்டு மூணு நாள் ஆபீஸ் போகாதது.. ஏகப்பட்ட ஒர்க்.. ரொம்ப டயர்டா இருக்கு..

என்று கூறி சோம்பல் முறித்து, தன் கோட்டை கழட்டி சோஃபாவில் போட்டு விட்டு அமர்ந்து அன்னையை பார்த்து சொல்ல..

 

” டிரஸ் எடுக்க போக சொன்னது வைஷூக்கு.. உனக்கு இல்ல .. இந்நேரம் கடை கூட இருக்காது, என்னமோ பண்ணுங்க,” என்று அறைக்குள் சென்று விட..

 

“ம்ப்ச்.. சொன்னதை ஒழுங்கா சொல்ல மாட்டியா என்று அவளை கடிந்து விட்டு, மணியை பார்க்க அது பதினொன்று கடந்து இருந்தது.

 

” சரி.. கிளம்பு ” என்றான்.

 

” அர்த்த ராததிரியில்ல பேய்கள் தான் உலாத்தும்.. அதுக போட்டு இருக்கிற ட்ரெஸ் எல்லாம் என்னால போட முடியாது.. ” என்று நக்கல் செய்ய..

 

” ஏன் முடியாது.. பேய் போடுறதை மோகினி பிசாசு போடலாம்.. எல்லாமே ஒரே குடும்பம் தானே.. பேய் குடும்பம்.” என்று அவளை வார..

 

அவள் ரோசத்துடன்.. ” நாளைக்கு நீங்க நல்ல டிப் டாப் ஆ வாங்க.. ஆனா நான் தலை நிறைய எண்ணெய் வைச்சு, வழிச்சு சீவி, பெரிய போட்டு நல்லா ஒரு ரூபா சைசுக்கு வைச்சு, அடிக்கிற மஞ்சள் கலருல புடவை கட்டி, அதுவும் கெண்டை கால் தெரிய வந்து உங்களை தெறிக்க விட போறேன் ” என்று கூறி விட்டு அவர்கள் லிஃப்ட் நோக்கி சென்றாள்.

 

அவள் சொல்லி சென்றதை அவன் கற்பனையில் கொண்டு வர, வாய் தன்னை அறியாமல் ஸ்ஸ்ப்ப்பா என்றது. ராங்கி ஒரு வேளை சொன்னதை செய்தால், எல்லோர் முன்னிலையிலும் தன் கௌரவம் என்னாவது.. ஓஹ்ஹ்.. நோ.. என்று தலையை குலுக்கி விட்டு அவள் பின்னாடியே சென்றான்.

 

” இப்போ நீ வரல.. தூக்கி காரில் போட்டு போய் கிட்டே இருப்பேன்,” என்றான் மிரட்டும் தொனியில்..

 

” நான் எப்போ வர மாட்டேன் சொன்னேன்.. ஆனாலும் நான் சொன்ன மாதிரி தான் நாளைக்கு ரெடி ஆவேன். ” என்று கூறி அவள் லிஃப்ட்யை மூட.. 

 

இவன் கை வைத்து திறந்து, ” படுத்தாதடி.. வந்து தொலை.. ” என்று உள்ளே நுழைந்து அவளை இழுத்து கொண்டு சென்றான் அவர்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு.

 

அங்குள்ள பொட்டிக்கில் இவள் அளவுக்கு பார்ட்டி டிரஸ் எடுக்க சொல்லி அவன் அமர்ந்து, அவளை கை காட்டி போக சொன்னான்.

 

அவளோ மிக தீவிரமாக தன் ஃபோனில் கட் தே ரோப் விளையாடி கொண்டு அவனின் பீபயை ஏகிற வைத்தாள்.

 

அவனே எழுந்து அந்த பெண்ணிடம்‌ சென்று, அவளின் சைஸ்க்கு ஏற்றார் போல உடைகளை எடுக்க சொல்லி, எதுவும் பிடிக்காமல் நாளை மாலை வேண்டும் என கூறி வேற ஆர்டர் செய்து விட்டு வந்தான்.

 

அவனின் செய்கைகள் யாவையும் ஓர கண்களால் பார்த்தபடி தான் அமர்ந்து இருந்தாள் வைஷூ.

 

இரவு வீடு வந்து சேர்ந்ததும் இருந்த களைப்பில் உண்ண கூட இல்லாமல் படுத்து விட்டான் தேவா.

 

உறங்கும் அவனை கூர்ந்து பார்த்துவிட்டு, தன் லப் டாப்பில் சிறிது நேரம் நோண்டி கொண்டிருந்தாள் தூக்கம் வராமல்.

 

மறுநாள் காலை, தேவாவின் பிறந்தநாள்,‌ அன்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை உலுக்கி எழுப்பியது ஒரு பாடல்.. அவன் வாழ்வில் இப்படி ஒரு பாடலை கேட்டது இல்லை. அவன் வளர்ந்தது ஹை பை சொசைட்டி, கல்லூரியும் அப்படி தான்..‌ அதற்கு பின் வெளிநாட்டு படிப்பு என்று இருந்தவனுக்கு தெரிந்து எல்லாம்.. வெஸ்டர்ன் மட்டுமே… 

பாடலை தெறிக்க விட்டு கொண்டிருந்தாள் அவனின் மனையாட்டி..

 

அப்படி என்ன பாடலாக இருக்கும் ???

 

கர்வம் வளரும்..

3 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top