ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 16

16

 

 

விழா சிறப்பாக முடிய, வீட்டிற்கு வந்தவுடன் இருவரையும் திருஷ்டி எடுத்தே அனுப்பினார் தமயந்தி.. 

 

இருவர் ஜோடி பொருத்தம் பற்றி உறவுகளும் நட்புகளும் சிலாகித்து கூற, பெரும் பெருமை தான் தமயந்திக்கு. ஆனால் தோற்ற பொருத்ததை விட மன பொருத்தம் அல்லவா வேண்டும்? அது இவர்களிடையே எப்போது தோன்றும்? என்ற எண்ணமும் வருத்துவதாய்..

 

தேவா தன் தளத்தை நோக்கி சென்று விட, வைஷூ அத்தை பின்னாலேயே சென்றாள். விழாவிற்காக வைஷூவிற்கு வைர நகைகள் அவர் அணிவித்து இருந்தார் அவள் மறுக்க மறுக்க…

 

அந்நகைகளை அவரிடம் திருப்பி கொடுக்காமல் செல்ல அவளுக்கு பிடிக்கவில்லை. தமயந்தி அவளிடம் நகைகள் பற்றி ஒன்றும் கேட்க வில்லை என்றாலும், அவளுக்கு அது பெரும் சுமையாவே இருந்தது.

 

” அத்தை.. இந்த நகைகள் எல்லாம் ?” என்று அவர் பின்னே வால் பிடித்து வந்தவளை பார்த்து மென்னகையுடன் ” இப்போ என்ன அவசரம்.. அதுவும் இல்லாமல் இவை எல்லாம் உனக்கு சேர வேண்டியது தானே.. அதனால் நீ உன் ரூம் லாக்கர்ல வைத்து கொள் ” என்றார்.

 

” ஐய்யோ அத்தை.. எனக்கு இது எல்லாம் வேண்டாம்.. அப்புறம் எனக்கு இந்த நகை, லாக்கர், சேப்டி இது எல்லாம் ரொம்பவே அலர்ஜி.. சோ.. பிளீஸ் இதை எல்லாம் கழட்டி விடுங்க” என்றாள் அவள் கழுத்தை ஒட்டி இருந்த நகைகளை காட்டி கெஞ்சலாக…

 

” இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு வந்து கொடு. எனக்கும் டயர்ட் ” என்று கூறி அவர் விரைந்து விட..

 

எப்படி கழட்ட.. என்ற யோசனையுடன் சென்றாள் அவள் அறைக்கு..

 

அங்கே தேவா தன் உடையை மாற்றி விட்டு, இலகுவான ஷார்ட்ஸ் டி ஷர்ட்டில் படுத்து இருக்க, அவனின் ஆண்மை நிறைந்த வனப்பும், திரண்ட வலிய புஜங்களும் அவளின் கருத்தில் பதியவில்லை.. அவன் இலகுவாக உடை மாற்றி இருக்க, தான் மட்டும் அலங்கார பூஜிதையாக இருப்பதை கண்டு அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது.

 

வைஷூ தன் முன்னால் நகை பெட்டியை வைத்து மெத்தையில் அமர்ந்து நகைகளை கழட்ட ஆரம்பத்தாள் மிகவும் சிரமத்துடன்… ரொம்ப நேரம் விழாவில் நின்று இருந்தது வேற அலுணணப்பாய்.. களைப்பாய்.. ” ஹாயா படுத்து இருக்கான், வந்து ஹெல்ப் பண்ணாக குறைஞ்சா போய்டுவான்…. போயா கஞ்சி சட்டை… எப்போ பாரு விரைப்பாவே சுத்துறான்” என்று அவனை தாளித்து கொண்டே இவள் நகைகளை கழட்டினாள்.

ஆனால் தேவாவோ அவளை தான் பார்த்து கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல்…

 

 

 படுக்கையில் படுத்திருந்த தேவாவுக்கு, லோ நெக் ப்ளவுஸில் தெரிந்த வெண்ணிற முதுகும், அவள் கைகளை தூக்கி இறக்கி நகைகளை கழட்டும் போது வெளிப்படும்.. இருக்குமோ என்ற இடையும், இளமையின் வனப்பும்

அவன் கண்களுக்கு விருந்தாக.. இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்..

 

இடையின் மென்மையாய் அவன் கரங்கள் அறிய துடிக்க, இதழ்களோ அவள் வெண்ணிற முதுகு பிரசேத்தில் தொலைந்து முக்குளித்து முத்தம் கொடுக்க, பித்தம் கொண்டது…

 

முதலில் ஓர கண்களால் பார்த்து கொண்டிருந்தவன், இப்போது ஸ்ரீரங்க நாதனை போல ஒரு கையால் தலையை தாங்கி பள்ளி கொண்டு அவளை பார்க்க…  

 

தன் முதுகு பின் ஏற்பட்ட குறுகுறு உணர்வில் திரும்பியவள், இவன் என்ன இப்படி பார்க்கிறான் என்று பார்க்க..

 

“நீதானே சொன்ன.. டைரக்ட் அஹ் சைட் அடிக்கலாம்ன்னு அதான்..” என்று குறும்பு மின்ன கூறியவனை பார்த்து…

 

ரைட்டு.. ரெம்மோ மூடுக்கு வந்துட்டான் அந்நியன்.. எண்ணியபடி, ” சும்மா இப்படி பார்க்கிறதுக்கு.. கொஞ்சம் ஹெல்ப் செய்யலாம்ல.. இதை கழட்ட.. ” என்று கண்களால் கெஞ்ச…

 

அவளின் கெஞ்சல் எல்லாம் கொஞ்சலாகவே அவனுக்கு கேட்டது.

 

மெல்ல நகர்ந்தவனின் கைகள் இரண்டும் அவள் இடுப்பில் ஊர்வலம் போக.. அங்கேயே இடையின் மென்மையில் ஆராய்ச்சி நடத்தி கொண்டிருக்க..

 

இப்போது அந்நியன்.. இல்லையில்லை அந்நியள் ஆனால் வைஷூ…

 

” உங்கள நகையை தான் கழட்ட சொன்னேன்.. ” என்றாள் கண்களில் கனலை கக்கி..

 

” அதை தான் செய்யுறேன்… ஒட்டியாணம் ரொம்ப டை்டாக இருக்குல அதான்.. ” என்றான் கூலாக…

 

கண்கள் அவள் கண்களிடம் பேசி கொண்டிருக்க.. கைகள் இன்னும் இடையிடம் தான் பேசி கொண்டிருந்தது.

 

” இங்கே கழுத்தில் இந்த ஜூவல் பேரு என்ன.. வாட்எவர்.. ரொம்ப டைட்டாக இருக்கு.. கழட்டவா ” என்றான் அக்கறையுடன்.. அவன் அக்கறையின் பின்னிருந்த கள்ளம் என்னவோ…

 

” ஆமாங்க.. ரொம்ப உறுத்துது… கழட்டுங்க”

 

” இரு.. கொஞ்சம்.. கழட்ட முடியல.. ஹேய்.. ஆட்டாதடி.. ” என்றான் அவன் கை ஏற்படுத்திய குறுகுறுப்பில் அவள் அசைய…

 

கொக்கி அழுத்தமாக இருக்க.. அவளை நெருங்கியவன் மெல்ல தன் பல்லை அவள் கழுத்தில் பதித்து கொக்கியை விலக, கொக்கி என்னமோ விலகி கொண்டது.. ஆனால் அவன் உதடுகளோ அங்கே நங்கூரம் இட்டு கொண்டது… 

சிறிது நேரம் முன் அவன் பித்தம் கொள்ள செய்த அவ்வெண்ணிற முதுகு பிரதேசம் இப்போது அவன் இதழ்கள் அருகில்…

சிறு சிறு முத்தங்களால் அவன் இதழ்கள் அவள் முதுகில் ஊர்வலம் போக.. வைஷூவின் உள்ளே பதட்டத்துடன் ” என்ன செய்றீங்க ” என்றாள் எழும்பாத குரலில்..

 

அவனோ சாவதானமாக ” என் பர்த்டே கிஃப்ட் நீ தான் தரல.. அதான் எடுத்துக்க வா..” என்றான் ஹஸ்க்கி குரலில் கண்கள் இறைஞ்ச… அவன் பார்வை அவளுக்குள் ஏதோ செய்ய.. வியர்த்து வழிந்தது அவளுக்கு, வியர்வை துளிகள் வைரமென மின்ன.. தன் இதழ் கொண்டே அவற்றை துடைக்க.. அவள் உடம்பில், அவனின் இதழ்களின் உரசல்களினால் ஏதேதோ உணர்வுகள் விழித்து, பின் குழைய.. அவன் மீதே அவள் சாய்ந்தாள். இருவருக்கும் சிறிதாக பற்றிய பொறி உயர உயர ஆரம்பிக்க…தன் உணர்வுக்குள் வந்தவள், மெல்ல அவன் கைகளை விடுவித்து அவனிடம் இருந்து விலகி தன் நகைகளை கழட்ட ஆரம்பித்தாள் வெகு சிரத்தையாக. 

அவளின் மனம் புரிய.. அவனும் மெல்லிய சிரிப்புடன் உதவி செய்தான் சின்ன சின்ன உரசல்களுடனும்… சீண்டல்களுடனும்.. இருவரும் மெல்லிய அணைப்புடனே அன்று இரவு தூங்க.. மறுநாள் ஸ்ட்ரெஸ் பஸ்டர் இல்லாமல் அழகாக விடிந்தது தேவாவுக்கு..

 

மறுநாள் காலை தேவா அலுவலகம் சென்றவுடன் தன் அத்தையை நோக்கி சென்றாள்..

 

” அத்தை.. நான் நாளை மறுநாள் காலேஜ் போகலாம்ன்னு நினைக்கிறேன்” என்று கூற..

 

அதிர்ந்து அவளை பார்த்தார் தமயந்தி. ” வைஷூ நீ வீட்டுலேயே இருக்கனும் நான் சொல்ல வரல.. ஆனா அந்த காலேஜ்க்கு தான் போகணுமா.. வேண்டாமே.. நம்மகிட்ட இல்லாத தொழில்களா.. உனக்கு பிடித்த தொழிலை பாரு” என்று கூறினார்.

 

தன் மேல் அவர் கொண்ட அன்பு புரிய, அவரின் கையை பிடித்து கொண்டு, ” அத்த நான் எந்த தப்பும் செய்யலை.. அப்புறம் நான் ஏன் பயப்படனும்.. ஓடி ஒழியறதுல ஒரு பயனும் இல்லை.. இப்போ காலேஜ் லீவ் தான். நான் ஜஸ்ட் ரிப்போட் செய்ய தான் போறேன் அத்த ” என்று கூறி அவள் செல்ல..

 

செல்லும் அவளை யோசனையுடன் பார்த்தார் தமயந்தி. பின் தன் மகனை ஃபோனில் அழைத்தார்.

 

மெல்லிய வீசிய காற்று அவள் தேகத்தை தீண்டி சென்று அவள் தேகத்தை குளிர்விக்க… ஆனால் அவள் மனமோ கொதிகலனாய்..

 

காலையில் தமயந்திடம் பேசியதும் மனது பழையதை நினைத்து கொண்டு ரணப்பட்டது. அவ்ரணத்தை எவ்வாறு நீக்குவாள் ? கெட்டு போன பெயரை எப்படி சரி செய்வாள் ? பெயரை கெடுத்தான் என்று தேவாவை மணந்தாகி விட்டது.. ஆனால் எங்கனம் அவள் அந்த கல்லூரியில் நுழைவாள் அதே பழைய கம்பீரத்துடன் ?? எல்லாமே அவ்வளவு தானா ?? ஒரே ஒரு மீம்ஸ் இத்தனை வருட நம் பெயரை போக்கி விடுமா ?? வீரமாக பேசி விட்டோம்.. ஆனால் எல்லோரும் பழைய மாதிரி நம்மிடம் பழகுவார்களா? இல்லை வேற மாதிரி பார்த்தால் .. அதை தாங்க முடியுமா ???

 

பல்வேறு எண்ணங்கள் அலை மோத, வானில் உலா வந்த வெண்ணிலவை தான் பார்த்து கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் இரு துளி கண்ணீர் அவள் கையில் விழுந்து தெறித்தது…

 

ஆனால் இவள் அறியாதது ஒன்று.. அது தேவேஸ்வர ராஜன் என்ற தேர்ந்த தொழிலதிபனின் அதிவேக விவேகம்.. அவனின் பார்வையில் நடுங்கும் எதிரிகள்.. நம்பிக்கை துரோகிகளுக்கு சிம்ம சொப்பனமாய்… கீரிடம் இல்லா மன்னனாக அவள் மனையாளன் வலம் வருவது தெரியாது அல்லவா… அவனே அறியாமல் அவன் சறுக்கியது வைஷூ விசயத்தில் மட்டுமே… 

 

அவள் தோளில் வன் கரம் அழுத்தமாக படிய, அவன் தான் என்று உணர்ந்தாலும் திரும்பவில்லை பெண்.. இந்நிலையில் அவனுடன் பேச இயலாது.. மீறி பேசினாலும் ஏதேனும் விவாதம் தான் ஏற்படும் இருவருக்குள்ளும்.. 

 

அவளின் மனதை படித்தவனாக, ” காலேஜ் போறேன்னு அம்மா கிட்ட சொன்னீயாம். இட்ஸ் யுவர் சாய்ஸ்.. ஆனா.. ” என்று இழுக்க..

 

” நீங்க செய்த காரியத்தால அங்க என்னென்ன காத்து இருக்கு என்று எனக்கு தெரியாது.. ஆனா.. ஐ ஹெவ் டூ ஃபேஸ் ஆல் ” என்று தைரியமாக கூறினாள் அவன் பக்கம் திரும்பாமல்.

 

” குட்.. ஐ லைக் யுவர் போல்ட்நஸ்.. ஆனா.. நான் செய்தது தப்பு தான். எல்லா விஷயத்திலும் சரியாக அணுகுவேன் என்கிற பெருமை.. கர்வம்.. எப்போதும் எனக்குள் உண்டு.. முதல் முறையா உன் விசயத்தில் நான் கொஞ்சம் சரிக்கிட்டேன்.. தீர விசாரிக்கலை.. சோ நான் செய்த தவறை கண்டிப்பா சரி செய்துடுவேன்.. ” என்றான் மனம் உணர்ந்து…

 

இதுவரை அவன் யாரிடமும் தன் செயலுக்கான விளக்கம் கொடுத்தது இல்லை.. அது தவறே ஆனாலும்..

அவனின் இந்த பேச்சு கொஞ்சம் அவளை உசுப்பேற்ற, நிமிர்ந்து அவனை பார்த்து, ” என்ன சரி செய்வீங்க.. எப்படி சரி செய்வீங்க… இன்னொரு மீம்ஸ் போட்டா..” என்று நக்கலாக கூற..

 

அவள் நக்கலில் அவனுக்கு கோபம் துளிர்த்தது.. இவன் பார்வைக்கு அஞ்சி நின்று பேசும் மற்றவர்கள் நினைவு வந்து போக, ” ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி டி.. என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டி… ” நாளைக்கு பாரு, இந்த தேவா யாருன்னு.. எப்படி சரி செய்கிறேன்னு.. இப்போ வந்து தூங்கு.. மோகினி பிசாசு மாதிரி உலாத்தாத…” என்று அவளை இழுத்துக் கொண்டே சென்றான்.

அவனை முறைத்து கொண்டே அவளும் அவன் இழுப்பில் விருப்பமில்லா விருப்புடன் சென்றாள்.

 

மறுநாள் காலை வழக்கம் போல அனைவருக்கும் விடிந்தது என்றால், வைஷூவுக்கு கொஞ்சம் பதட்டமாகவே.. 

என்ன செய்ய போறான்.. அப்படி என்ன செய்வான் என்று புலம்பியவாறு இவள் இருக்க, அவனோ வெகு கூலாக தன் வேலைகளை பார்த்து கொண்டு கிளம்பினான்.

 

இருவரும் கிளம்பி கீழே வர, புன்னகையுடம் எதிர் கொண்டார்கள் மோகன் தமயந்தி தம்பதிகள். அவர்களின் புன்னகை எப்போதும் போல தான். ஆனால் அவளுக்கு தான் ஏதோ வித்தியாசமாய்.. 

 

உணவு முடித்தவுடன், ” கிளம்பு போகலாம் ” என்று கூறி அவள் முன்னே நிற்க.. எங்கே என்று புரிந்தாலும் சின்ன தடுமாற்றம் அவளுக்குள். மெல்ல தலையை ஆட்டிக் கொண்டே அவன் பின்னே சென்றாள்.

 

” தேவா.. கோவில் போய்ட்டு போங்க ” என்றார் தமயந்தி..

 

” கோவில் எதுக்கு அத்த.. நான் என்ன ஃபர்ஸ்ட் டைம் காலேஜ் போறேனா என்ன ” என்று கூற..

 

” கல்யாணம் முடிஞ்ச முதல் தடவை போறேல்ல.. அதான் ” என்று அவர் அழுத்தமாக கூற…

 

தலையை ஆமோதிப்பாக ஆட்டி விட்டு, அவனுடன் கோவிலுக்கும் சென்று விட்டு காரில் அமர, கார் காலேஜ் நோக்கி விரைந்தது..

 

தைரியமாக கூறிவிட்டாள் தான் ஆனாலும் மனம் டிரம்ஸ் வாசிப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.. மனதின் பதட்டம் முகத்தில் தெரிய.. நகத்தை கடித்து அதனை தணிக்க பார்க்க.. 

 

சுள் என்று ஒரு அடி அவள் கையில் பட, வாயில் இருந்து கையை எடுத்து அடித்தவனை முறைக்க..  

 

” பசிச்சா சொல்லு, சாப்பாடு வாங்கி தரேன்.. நகத்தை கடித்து சாப்பிடாதே” என்றான்.

 

அவளோ இருக்கும் பதட்டத்தில் தன் நகங்கள் பத்தாமல் அவனுடையதையும் சேர்த்து கடிக்கலமா என்ற நிலையில் அவனின் பேச்சு சினமூட்ட.. வேடிக்கை பார்த்த வண்ணம் அமர்ந்து விட்டாள்.

 

இவர்கள் கார் அப்பெரிய கல்லூரிக்குள் நுழைய, கல்லூரியின் மாற்றம் எதுவும் கண்ணிலும் கருத்திலும் படவில்லை வைஷூக்கு..

 

இவர்கள் கார் விட்டு இறங்க, கல்லூரி முதல்வர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை நின்று அவர்களை வரவேற்றனர். 

இக்கல்லூரி இவர்களது என்று தெரியும் அவளுக்கு.. அதான் பலத்த வரவேற்பு போல என்று நினைத்தவாறு அவன் பின்னே தொடர்ந்தாள் ஆனால் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல்… 

 

அவர்கள் பின்னே சென்று கொண்டிருந்தவள் நுழைந்தது அவள் அன்று செமினார் எடுத்த அதே ஹால்.. நிமிர்ந்து கணவனை பார்க்க, அவளை பார்த்து கண்களை மூடி திறந்தவன், அவள் கையை பிடித்து சிறிது அழுத்தம் கொடுத்து, பிடித்த கையுடன் மேடை ஏறினான்.

 

எதற்கு என்று அறியாமல் அவள் பின்னே ஏற, அரங்கம் நிறைந்த அமைதி… 

 

முதலில் பேசிய முதல்வர், ” நம் கல்லூரி சேர்மன் அவர்களுக்கு முதலில் நம் அனைவரின் சார்பாக, திருமண வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன் ” என்று ஆரம்பித்து அவர்கள் கல்லூரி சாதனைகள் பற்றி கூறி கொண்டே செல்ல.. வைஷூவுக்கு சிறிது நேரத்தில் அவஸ்தையானது.. அனைவரும் அவளையே உற்று உற்று பார்ப்பதுபோல ஒரு பிரமை… முதவ்வர் பேசியது எதுவும் காதில் ஏறவில்லை…

 

மனைவியை அவதானித்து கொண்டு தான் இருந்தான் தேவா..

 

அடுத்து தேவாவை பேச அழைக்க, வைஷுவை ஒரு முறை ஆழ்ந்து பார்த்து விட்டு, மைக் முன்னே சென்று நின்றான்.

இதுவரை அவன் இந்த மாதிரி எல்லாம் பேசியது இல்லை.. ஏன் தன் கல்லூரிக்கு கூட வந்தது இல்லை.. தாங்கள் பார்த்திராத ஆளுமையான சேர்மனை பார்த்து அரங்கு நிறைந்த கரவோசம்… 

 

” வெரி குட் மார்னிங் டூ ஆல்.. ஆல்சோ தாங்கஸ் ஃபார் யுவர் வார்ம் வெல்கம்.. 

 அண்ட் ஐ இன்டர்டியூஸ் யவர் நியூ கரேஸ்பாண்டண்ட் கம் சேர்பர்சன் ஆப் தி காலேஜ்… என்று சற்று நிறுத்தி தன் மனைவியை பார்த்தவன், மிசர்ஸ்.. வைஷாலி தேவி தேவேஸ்வர ராஜன் ” என்றான் நிதானமாக அவளை பார்த்து கொண்டே….

 

திரும்ப ஒரு கரவோசம் அரங்கில்… 

 

” உங்களில் நிறைய பேருக்கு என் மனைவி வைஷாலியை தெரியும்.. அவன் கூறியதும் அவள் சட்டென்று அவனை பதட்டத்துடன் பார்க்க… கண்களை மூடி அவளை அமைதிப்படுத்தி… மீண்டும் தொடர்ந்தான். ” சில நாள் முன்னாடி.. என் தொழில் துறை எதிரிகளால் என்னை வீழ்த்த முடியாத காரணத்தினால், என் மனைவியாக போகிற வைஷாலி பற்றி அவதூறு பரவி விட்டார்கள். அதற்கு ஆன தண்டனையை அவர்களுக்கு சட்டம் மற்றும் அல்ல.. என் வழியிலும் கிடைத்து விட்டது.. அதற்கு கமெண்ட் பண்ணிய நெட்டீசன்களில் பலர் இங்கேயும் இருக்கிங்கன்னு எனக்கு தெரியும்.. அவங்க ஜாதகம் உட்பட… ஸ்டூடண்ட் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் விட்டு வைச்சு இருக்கேன்.. இனி என் மனைவி பத்தி ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை வந்தாலும்… மார்க் மை வேர்டுஸ்.. அவனை விட துரதிஷ்டசாலி யாரும் கிடையாது.. காட் இட்..” என்று கர்ஜித்தவனின் சிம்ம குரல் மட்டுமே அங்கே ஓங்கி ஒலித்தது….

 

 

” கோலாகலமாக நடக்க வேண்டிய எங்கள் கல்யாணம், சிம்பிளா நடந்தாலும்.. எங்கள் ரிசப்ஷன் கிராண்ட் ஆக நடக்கும்.. உங்கள் எல்லோருக்கும் அழைப்பும் வரும். நன்றி..” என்று கூறி அமர்ந்து விட்டான்.

 

வைஷூவுக்கு தான் எப்படி உணருகிறோம் என்று தெரியவில்லை.. அவனின் இந்த அதிரடியை அவள் எதிர்பார்க்கவில்லை.. 

 

 

மீட்டிங் முடிந்ததும் அவளை அழைத்து கொண்டு, கரெஸ்பண்டெண்ட் அறைக்கு வந்தான், பதுமை போலவே அவனின் அழைப்புக்கு வந்தாள் வைஷூ..

 

அவளை அந்நாற்காலியில் அமர்த்தி, அவள் முகம் நோக்க.. அவளோ அதிர்ச்சியில் தான் இன்னமும்…

 

“ஏன்.. இப்படி.. உங்க தப்பிற்கான பிராய்சித்தம் ஆ இந்த போஸ்ட் ” என்றாள்.

 

” தப்பிற்கான பிராய்சித்தம் இல்லை.. என் மனைவிக்கு ஆன உரிமை.. ” என்றான் அழுத்தமாக.. 

 

” எனக்கு இந்த போஸ்ட் வேண்டாம்..”

 

” எந்த போஸ்ட்.. மனைவியா ?” என்றான் அவளை கூர்ந்தப்படி…

 

” அது போஸ்ட் இல்லை பந்தம் ” என்றாள் அவனை முறைத்து கொண்டே…

 

” அந்த பந்தத்திற்கான அடையாளம் தான் இது ” என்றான் அவனும் விடாமல்..

 

” அடையாள படுத்த, இதை தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..” என்று அவள் கூற, கண்கள் மின்ன பார்த்தவன், ” இதை மட்டும் நம்ம ரூமில நீ சொல்லி இருக்கணும்.. அப்போ தெரிஞ்சு இருக்கும் ” என்று முணுமுணுத்து கொண்டான்.

 

” என்ன.. “

 

” ஒன்னும் இல்லை.. எதை.. எப்படி.. எப்போ.. கொடுக்கணும் எனக்கு தெரியும். அதனால்.. நீ நான் சொன்னதை மட்டும் செய்” என்று கட்டளையிட்டான். அவள் முன் சில பேப்பர்களை வைத்து, கையெழுத்து இட சொல்ல, அவனை முறைத்து கொண்டே ” சரியான.. கஞ்சி சட்டை.. அந்நியன்.. ஜிஞ்சி மங்கி.. ” என்று ஆசையாக வசை பாடி கொண்டே காட்டிய இடங்களில் கையெழுத்து இட்டு, ஆபீஸியலாக அக்கல்லூரியின் தாளாளராக பொறுப்பேற்று கொண்டாள்.

 

அவளை எழுப்பி, கை கொடுத்து, ” கங்கிராட்ஸ் கரஸ்பாண்டெண்ட் மேடம் ” என்றான் தேவா.

 

இவர்கள் இங்கே கை கொடுத்து கொண்டிருக்க, இவர்கள் இணைவுக்கு காரணமானவன் இந்தியாவில் கால் பதித்து இருந்தான்.

 

கர்வம் வளரும்..

3 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 16”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top