ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 19

19

 

 

வான் கடலில் மிதந்த வெண்ணிலவை மாடி ஊஞ்சலில் அமர்ந்து வைஷூ ரசித்து கொண்டிருக்க… அவள் எதிரே கைகளை குறுக்கே கட்டி கொண்டு மாடி திட்டில் சாய்ந்த வண்ணம் நிலவினை ரசிக்கும் தன் நிலவை தான் ரசித்து கொண்டிருந்தான் தேவா.. 

 

பார்வையில் காதல் பொங்கி வழிந்ததே தவிர, காமம் இல்லை பெண்ணவள் மீது…

மனதின் செல்களை அரித்து கொண்டிருக்கும் விசயங்களை இன்று அவளுடன் பேசி விடவே இம்மாடி விஜயம்.. கூடவே ஏகாந்த இரவின் தனிமையில் மனதினை அவளிடம் பகிற பெருவுவகை உந்த அழைத்து வந்து விட்டான்..

ஆனால் எங்கே.. எப்படி.. தொடங்க.. பெரும் பட்டி மன்றமே மனதினுள்.. அவளோ இதை எதையும் அறியாது, பால் நிலவை ரசித்து கொண்டு, பூக்களில் இருந்து வீசும் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்து தன் சுவாசத்தில் நிரப்பி கொண்டு, மெல்ல ஊஞ்சலில் ஆடி கொண்டு இவ்வழகிய தருணத்தை ரசித்தாள்.. 

 

வைஷூ என்று அவளை அழைத்தான், முகத்தில் ததும்பும் புன்னகையுடன் அவன் புறம் திரும்பி என்ன என்று புருவங்கள் நெறிய அபிநயம் பிடித்தாள் மாது.. சின்ன சின்ன அசைவுகளில் கூட மனதை சுண்டி இழுக்க முடியுமா என்ன ? இதோ இழுத்து கொண்டிருக்கிறாளே… டேய் தேவா இவளை பார்த்தா.. நீ சொல்ல வேண்டியது எதுவும் சொல்ல மாட்டேங்கிற… இராத்திரி பூரா பாத்துக்கிட்டே நிக்க போற.. என்று அவனின் மனசாட்சியே அவனை வார.. அதை கண்டும் காணாமல் தன்னவளை மட்டும் கண்ணில் நிரப்பி கொண்டு நின்றான்.

 

பிறகு நிலைமை புரிய கொஞ்சம் பேசணும் இப்போ உன்கிட்ட.. 

 

” சொல்லுங்க ” என்றாள் மென்மையாக..

 

“அது அது.. “என்று இழுத்தவன்.. ” பழைய விஷயம் தான் ” என்று ஆரம்பிக்கும்.. தன் கைகளை நீட்டி மேலே சொல்லாதே என்று தடுத்தவள்.. பின் ஒரு விரல் கொண்டு தன் உதட்டின் மீது வைத்து அமைதியாக இரு என்றாள்..

 

தேவாவுக்கும் முகம் கொள்ளா சிரிப்பு.. நான் ஆயிரம் பேரை அதட்டி உருட்டி வேலை வாங்கினால் இவை என்னையே மிரட்டுறா.. பிசாசு .. மோகினி பிசாசு..என்று மனதுக்குள் செல்லமாக கொஞ்சி கொண்டான். 

 

தன் இரு கரங்களையும் மேலே தூக்கி சரணடைந்தவன் ” ஓகே.. பழையது பேசல.. ஆனால் சில விஷயங்களை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.. நாளைக்கு அது பூதாகாரமாக வந்தாலும் வரலாம்.. சின்ன விஷயம் ஆனாலும் நமக்குள்ள பேசிட்டா பின்னாடி எதுவும் யாரும் நமக்குள்ள வரமாட்டார்கள்… சோ தன்னிலை விளக்கம்தான் ” என்றவன்..

 

தன் சித்தப்பா வந்து பார்த்தது முதல் வைஷூ வீட்டுக்கு வருவதற்கு முன் காவல்துறை ஆணையர் பேசியது வரை ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தான். அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனால் சரியாக கணிக்கமுடியவில்லை.. என்றுதான் அவளை சரியாக கணித்து இருக்கிறான்..

அவள் ஊஞ்சலில் பிடித்திருந்த அழுத்தமான பிடி அவளின் மனநிலையை கூற மெல்ல நெருங்கி அவளிடம் சென்றவன் அவள் கால் அருகில் அமர்ந்தான்.

 

” வைஷூ.. உன் மனநிலை எனக்கு புரியுது, நாங்க செய்தது தப்புதான்.. ஆனா உன்னிலிருந்து கொஞ்சம் இறங்கிவந்து என் நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு… அவர் சொன்னது உன்னை பற்றி அல்ல அதாவது வைஷாலி என்கிற உன்னை பற்றி அல்ல.. ஏதோ ஒரு மூன்றாந்தர பெண்ணை பற்றி பேசுவது போல தான்.. நானும் உன் விஷயத்தில் சரியாக யோசிக்கல.‌. விசாரிக்கல.. தப்புதான்.. என் கண் முன்னால் அப்போ சித்தப்பாவும் நந்தனோட வாழ்க்கை எப்படி சரி செய்றது மட்டும்தான் இருந்தது.. இப்படி ஒரு நல்ல பெண்ணை அவர் விமர்சித்து இருப்பாங்கன்னு நான் கனவுல கூட நினைக்கல… விளங்குதா என்னை.. ஏதாவது பேசு டி ” என்றான் கெஞ்சலாக அவள் கைகளை பற்றி கொண்டு..

 

தான் செய்த தவறுகளை கூறிவிட்டு மன்னிப்பாயா.. மன்னித்துவிடு என்று இறைஞ்சும் இவன் சாமானியப்பட்டவன் இல்லை.. பல தொழில்களை கட்டியாளும் நிபுணன்.. ராஜன் வழித்தோன்றலில் வந்தவன்.. பலரையும் தன் அதிகாரத்தாலும் ஆளுமையாலும் கட்டி ஆள்பவன்.. ஆயினும் தன் தவறை உணர்ந்து.. தவறு செய்தவிட்டு அம்மா மன்னிக்க மாட்டாயா என்று ஏங்கும் சிறு பாலகன் போல் கண்களாலே கெஞ்சும் அவனை பார்க்க அவன்பால் உருகியது மனம்.. தவறு செய்பவர்கள் இரண்டு விதம் ஒன்று சூழ்நிலையால் அதற்கு ஆட்படுபவர்கள்.. தெரிந்தே செய்பவர்கள்.. 

 

 

இவன் சூழ்நிலையால் தீர விசாரிக்காமல் தவறு செய்துவிட்டு அதனால் அவளுக்கு உண்டான பாதிப்புகளின் சிறுகறை கூட இல்லாமல் நீக்கிவிட்டு.. இப்போது

அதற்கு தன்னிடம் மன்னிப்பு கேட்டு தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனை எங்கனம் தண்டிக்க அவளால் முடியும்.. பரிதவிப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்து தன் இரு கைகளை விரிக்க.. பாய்ந்து சென்று அதில் அடைக்கலமானான் தேவா.. 

 

அவளின் வாசத்தை சுவாசித்துக் கொண்டு அவளுக்கும் தனக்குமான இந்த தனிமையை மௌனமாக இதமாக ரசித்துக்கொண்டே அவள் மடியில் தன் தலை வைத்து படுத்திருந்தான் தேவா.. வைஷூவின் கைகளும் தன் போல அவன் தலையை கோதி விட்டது..

 

ஏற்கனவே அவள் மீதும் காதல் பித்தம் தலைக்கு ஏறி இருக்க.. இப்போது இன்னும் இன்னும் காதல் கூடிக்கொண்டே சென்றது தேவாவுக்கு.. அவள் மீதான காதலைக் காட்ட ஒரு ஜன்மம் பத்தாது என்றே எண்ணினான்.. வாழ்நாள் முழுவதும் இம்மடியிலேயே வீழுந்து கிடக்க ஏக்கம் கொண்டான்.. அதை அவன் கண்கள் ஏக்கத்தோடும் காதலுடன் அவளின் பழுப்பு பாவைகளை பார்த்து கூற.. அவன் கண்களைப் படித்தவள் மெல்ல குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தாள்.. குறும்பு மின்ன தன் ஆட்காட்டி விரலால் தன் மூக்கு நுனியை காட்ட ,சிறு சிரிப்புடனே அங்கேயும் தன் இதழ்களைப் பதித்தாள். அவனின் விரல்கள் அவன் முகம் முழுவதும் ஊர்ந்து கொண்டே செல்ல இவளும் தயங்காமல் தன் இதழ்களால் அவ்விரல்களை பின் தொடர்ந்தாள்.. அவ்விரல் கடைசியாக அவன் இதழில் வந்த இளைப்பாற இவளின் இதழ்களும் சற்றும் தாமதியாமல் அவன் இதழ்களை மூடியது… இப்போது செயலை தனத்தாக்கி கொண்டவன், ஒரு நெடிய முத்தமிட்டே விடுவித்தான். 

 

 ” போகலாம் வைஷூ.. நேரம் ஆகுது..” என்று அவளை எழுப்ப.. 

 

தன் இரு கைகளையும் அவனை நோக்கி நீட்ட … மெல்ல சிரிப்புடன் அவள் அருகில் வந்து இடையில் ஒரு கையை கொடுத்து அவளை தூக்கிக் கொண்டான். அழுந்தப் பதிந்த அவன் கைகள் இடையில் விளையாட… அவளின் பெண்மைகள் அவன் வன் மார்பில் அழுந்தமாறு இறுக்கி அணைத்துக் கொண்டவனை, செல்லக் கோபத்துடன் அவள் முறைக்க.. ” நீ விழ கூடாதில்லையா ” என்றான் அந்த மாயவன், அவன் குறும்பை ரசித்தவாறு தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாக்கிக் கொண்டாள் வைஷூ…

 

காமமற்ற காதல் பொழுதுகள் கூட சுவையான சுகம் தான். அத்தருணத்தில் திளைத்தன அவ்விரு காதல் கிளிகள்..

 

இப்பொழுது எல்லாம் ஸ்ட்ரெஸ் பஸ்டர் இல்லாத, அழகான விடியல் தான் தேவாவிற்கு.. ஆழ்ந்து தூங்கும் மனைவியை ரசித்து விட்டு, முகம் கொள்ளா புன்னகையுடன் கீழே இறங்கி சென்றான் துள்ளலுடன்.. 

 

வரவேறப்பறையில் கால் மீது கால் போட்டு அமர்த்தலாக அமர்ந்த வண்ணம், ஒரு கையில் அன்றைய நாளிதழை அதி தீவிரமாக படித்து கொண்டு, மறு கையில் காபி கோப்பையை பிடித்து இருந்தான் நந்தன்.. 

 

லிஃப்டை விட்டு, வெளி வந்த தேவா அவனை பார்த்ததும், மனதில் சற்றே சிரித்து கொண்டான். வழியே வந்து மாட்டுறான் என்று எண்ணி கொண்டே, அவன் எதிரில் அமர்த்தலாக அமர்ந்து, ஒரு கையை சோபா கை பிடியில் வைத்து கொண்டு, மற்றொரு கையில் அன்றைக்கான வேலையை கட்டளையிட்டு கொண்டிருந்தான் தன் போனின் மூலமாக.. அவனை சிறிதும் கண்டு கொள்ளாமல்…

 

தமயந்தி அவனிடம் காஃபி நீட்ட, ஒரு புன்சிரிப்புடன் வாங்கி கொண்டு, தன் வேலையை தொடர, நந்தனுக்கு சற்றே குழம்பியது மனம்.. அவனை குழப்ப தாம் ஒன்றும் நடவாது போல வந்து அமர்ந்தால், அவன் நம்மை விட கூலாக இருக்கிறானே.. என்று யோசித்த வண்ணம்… தேவாவோ அவனின் மனதை அறிந்து கொண்டு சிரிப்பின் ஊடே தன் வேலையை பார்த்த வண்ணம்… பார்த்த மோகன் தம்பதியருக்கு தான் பீபி எகிறியது…

 

” என்ன ப்ரோ.. நிற்க நேரமில்லாமல் பிசினஸ் பிசினஸ்னு ஓடுவ.. இப்போ மொபைல விளையாண்டு கிட்டு இருக்க.. ” என்று முதல் பாலை போட்டான் நந்தன்.

 

“ப்ரோ… நீ இன்னும் அப்டேட் ஆகல.. ஒரு மொபைல் போதும் உலகமே கையில சொல்லுறாங்க‌‌.. என் பிஸ்னஸ் வராதா என்ன ” இவன் அதை லாவகமாக எதிர்கொள்ள… 

 

” உண்மை ப்ரோ.. மொபைல் வச்சுதான் எல்லோரும்.. எல்லா காரியமும் சாதிக்கிறாங்க ” என்றான் வெறுப்பாக..

 

” தட்ஸ் டெக்னாலஜி இம்ப்ரூவ்மெண்ட் ப்ரோ.. ஓ நீ தான் இன்னும் காலேஜ்ஜே முடிக்கவில்லை தானே… அப்போ இது புரிவது கஷ்டம் தான் “

 

நந்தனனின் இந்த நிதானமான அணுகுமுறை தேவாவிற்கு புதிது.. ஆனாலும் தானாக ஆரம்பிக்காமல் அவனே தொடரட்டும் என்று அவன் போக்கிலேயே சென்றான். 

 

” கத்துக்குறதுக்கு என தனியாக டியூஷன் போகடுமா ப்ரோ ” என்று கொக்கி போட..

 

” உனக்கு கத்துக் கொடுக்குற அளவுக்கு இங்க யாரும் இல்லை ” என்று உதடு பிதுக்கி கொக்கியை தூர போட்டான் தேவா..

 

” ஒரு லக்சரர் கூடவா இல்லை “

 

தன் இரு கைகளையும் விரித்தவன்.. ” சோ சாரி ப்ரோ.. அட்ரஸ் மாறி வந்துட்டீங்க போல இது லக்சரர் வீடு இல்ல.. கரஸ்பாண்டன்ட் வீடு “

 

தேவாவின் பேச்சில் நந்தனுக்கு புரிய ஒரு மெச்சுதல் பார்வை அவனிடம்.. ” பரவால்ல ப்ரோ.. பயங்கரமான பிளான் பண்ணி இருக்கீங்க ” என்று பற்களை கடித்துக் கொண்டு கோபத்தோடு பேசினான். 

 

அவனின் கோபம் தேவாவிற்கு ஒரு மகிழ்வை கொடுக்க அவனும் மேலும் அவனை சீண்ட, ஒற்றைக் கண்ணடித்தான்.

 

” நீ எந்த.. என்ன பிளான் செய்தாலும்.. என் கிட்ட இருந்து வைஷாலியை காப்பாற்ற முடியாது ‘ என்று அவன் பேசி முடிக்க முன் அவன் கழுத்தை தன் ஒரு கையால் இறுக்கி பிடித்து இருந்தான் தேவா..

 

” கொன்னு புதைத்து விடுவேன்.. ஜாக்கிரதை..‌ இன்னொரு தடவை அவ பெயரை சொன்ன.. உங்க அப்பா பேரு சொல்ல.. நீ இருக்க மாட்ட.. அவ என் பொண்டாட்டி இந்த தேவாவோட பொண்டாட்டி… அண்ணிங்கிற வார்த்தை மட்டும் தான் வரணும் வாயிலிருந்து.. அதைத் தாண்டி வந்தது.. ” என்று தன் ஒற்றை விரலை காட்டி பத்திரம் காட்டியவன், அவன் கழுத்தில் இருந்த தன் கையை நீக்கினான்.. 

 

இப்போது ஆத்திரம் சற்று மட்டுப்பட்டு இருந்தது நந்தனுக்கு.. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.. இவனை இந்த தேவாவை அதனால் ஒன்றும் செய்ய முடியாது.. புத்தியினால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று நினைத்தவன் தன்னை நிதானித்து கொண்டான்..

 

தன் கழுத்தை நீவிவிட்டு கொண்டே.. ” என்ன ஸ்டிராங் ப்ரோ நீ… நல்ல ஜிம் பாடி..

குட் ” என்று அவனை பாராட்டினான்.

 

நந்தனின் இந்த நிதானம் பார்த்து புருவங்கள் சுருங்க அவனை முறைத்தான் தேவா. 

 

” என்ன ப்ரோ… ரொம்ப லவ்வா லக்சரர் இல்லை இல்லை கரஸ்பாண்டன்ட் மேல…

அண்ணி என்ற வார்த்தையே முற்றிலுமாக அவன் தவிர்ப்பதை நோட் செய்து கொண்டது தேவாவின் புத்தி..

 

உனக்கு நான் சளைத்தவன் அல்ல என்று நினைத்தவன். முகத்தில் மென்மையை கொண்டு வந்து ” உங்க வீட்டு.. எங்க வீட்டு லவ் இல்ல ப்ரோ.. எக்கச்சக்க லவ்.. ” ஹஸ்கி வாய்ஸில் அனுபவித்து தேவா கூற..

 

மீண்டும் துளிர்க்க இருந்த கோபத்தை அடக்கிக் கொண்டு.. ” நீ எல்லாம் கர்வம் பிடித்தவன் ப்ரோ.. ஸ்டேட்டஸ் .. அந்தஸ்து.. பரம்பரை.. இப்படிதானே பார்ப்ப.. உனக்கு எல்லாம் லவ் செட் ஆகாது ப்ரோ ” என்றான் நக்கல் குரலில்.. 

 

அவன் சொன்னது உண்மைதானே என்று மனதினில் ஒரு சிறு வலி எடுக்க.. உடனே வைஷாலியின் முகம் மனதில் மின்னி மறைய.. ” ப்ரோ அது வை.மு. இது வை.பி.” என்றான் அவனுக்கு குறையாத நக்கலில்..

 

அவன் புரியாமல் நோக்க.. ” வைசாலி பாக்குறதுக்கு முன்..வைசாலி பார்த்ததுக்கு பின்.. ” என்று சிரித்தான். பார்க்க பார்க்க நந்தனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

 

“அப்போ காதல்தான் இல்லையா ??” என்றான் நந்தன் அழுத்தமாக..

 

” கண்டிப்பாக.. சந்தேகமே வேண்டாம்.. ” என்றான் தேவா மிகக் கூர்மையாக..

 

“வா வா வா ப்ரோ ” என்று கைதட்டியவன்.. தேவாவை நெருங்கி நின்று அவன் கண்களை பார்த்தது ” ஒரு பொருள் நம்ம கிட்ட இருக்கும் போது அதோட மதிப்பு நமக்குத் தெரியாது.. அது எந்த அளவுக்கு நாம் விரும்பினோம்னு நமக்குத் தெரியாது.. அது நம்ம வீட்டு போகும்போதுதான் அதோட மதிப்பும் அதன் மேல் வைத்த பிரியமும்.. விருப்பமும் நமக்கு தெரிய வரும்.. அந்த.. அந்த புரிதல் நமக்கு வலியை கொடுக்கும்..

இப்ப வந்த வலியை நான் அனுபவித்து கொண்டு இருக்கேன்.. கூடிய சீக்கிரம் அதே வலி உனக்கு வரும்டா… வர வைப்பான் இந்த நந்தன் ” என்று கடுமையாக அதே நேரத்தில் அழுத்தமாக உரைத்து கண்களில் பொறி பறக்க நின்றான் நந்தன்..

 

நந்தனின் வார்த்தையில் ஒரு சிறு வலி வந்து போனது தேவாவிற்கு.. அதை அவன் கண்கள் பிரதிபலிக்கும் முன்னே அடக்கியவன்.. தன் முன்னே கோபத்தோடு நிற்கும் தம்பியை பார்த்து இளநகை ஒன்றை புரிந்தான். 

 

” எப்பவுமே வாழ்க்கையில நாமே ஜெயிச்சிகிட்டு இருந்தா ஒரு சுவாரசியம் இருக்காது ப்ரோ.. ஒரு டஃப் கம்பெடிட்டர் வேணும்.. இப்பதான் எனக்கும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.. உன்னால முடிஞ்சா… அந்த தில் உனக்கு இருந்தால் செஞ்சு பாரு.. லைஃப்ல மட்டுமில்ல தொழிலையும் என்னை நீ நெருங்கவே முடியாது..” என்று நக்கலாக கூறி தன் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி சோம்பல் முறித்தான் தேவா..

 

தேவா செய்கையில் ” வாழ்க்கையில மட்டுமில்ல தொழிலையும் உனக்கு நான் தான் எதிரி ப்ரோ.. ” என்று சினந்து கூற, நந்தனே அறியாமல் அவன் கோபத்தை தொழில் மீது மிக லாவகமாக மடை மாற்றினான் தேவா.. 

 

அவனை பார்த்து மீண்டும் சிரித்து.. ” எவ்வ்வ்வளவோ பேரை பார்த்து இருப்பேன். உன்னை.. ” என்று அவனை மேலும் கீழும் தேவா பார்க்க…

 

அவனின் இந்த செய்கை நந்தனுக்கு புசுபுசுவென்று மீண்டும் கோபம் ஏற்றியது.

அவனை காயப்படுத்த எண்ணி

” தில்லு மீச வச்ச ஆம்பளையா இருக்கிறவனுக்கு தான் முடியும் ப்ரோ.. நான் மீச வச்ச ஆம்பள ” என்று தன் மீசையை முறுக்கிக் கொள்ள…

 

 

“கரப்பான் பூச்சிக்கு கூட தான் மீசை இருக்கு.. அதுக்காக அதுக்கு தில்லன்னும்.. தைரியம்னும்.. இல்ல அது ஆம்பளனும் சொல்ல முடியுமா.. ” என்று குரல் உரத்து ஒலிக்க..தேவா இல்லையில்லை சொன்னது வைஷாலியே தான்.

 

துயில் எழுந்தவள் கணவனைக் காணாது கீழே இறங்கி வர, இவர்களின் இந்த வாக்குவாதம் அவள் கண்ணில் பட்டது. முதலில் மனது கொஞ்சம் வலி எடுத்தாலும் தேவாவை நினைத்து, தைரியத்தை மீட்டு கணவனை நோக்கி வந்தவள் , நந்தனுக்கு பதில் கூறியவாறே வந்து கணவன் அருகில் நின்று கொண்டாள்.

 

வைஷாலியின் பேச்சில் கோபம் கொண்டாலும் அவளை கண்டதும் கண்கள் மின்ன அவளைப் பார்த்து ” குட் மார்னிங் மேம் ” என்றான் நந்தன்.

 

இவன் அடங்கவே மாட்டானா என்று தேவா அவனை பார்க்க.. அப்படி எல்லாம் என்னை அடக்க முடியுமா என்று பதில் பார்வை பார்த்தான் நந்தன்..

 

கர்வம் வளரும்..

 

5 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 19”

  1. Wowww wowwwwww semaaaaa …… Sabarshh sariyaana potiiiii…… Intresting…. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top