23
பெண் அரிமாவென சங்க கூட்டத்தில் முழங்கிய தன் சரிபாதியை எண்ணி வியந்து கொண்டிருந்தான் தேவா. அதுவும் கிளம்பும் நேரத்தில் தங்களுடன் பேசாமல் தள்ளி அமர்ந்தவாறே தங்களைக் கவனித்துக் கொண்டிருந்த நந்தனை நோக்கி ” வரேனுங்க தம்பி ” என்று குறும்பு மின்ன கோவை பாஷையில் கூறிவிட்டு வந்தவளை நினைத்து இதழ்கள் ஓரம் அவனுக்கு புன்னகை விரிந்தது. சரியான கேடி டி நீ என்று மனதின் உள்ளே செல்லம் கொஞ்சிக் கொண்டான் மனைவியை..
தீனாவுக்கு வைஷாலியின் பேச்சு, எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெயை வார்த்தது போலானது. இப்போது பழி வாங்கும் படலத்தில் தேவாவுடன் வைஷாலியும் இணைக்கப்பட்டாள்..
அவர்களை பற்றி நினைத்துக் கொண்டே இருந்தவன் மனதில் சட்டென்று ஒரு பொறி. அது எப்பொழுதும் கூட்டத்திற்கு வரும் பொழுது தேவாவுடன் அவன் சித்தப்பா வருவார். பெரும்பாலும் இருவரும் அருகருகே தான் அமர்ந்து இருப்பார்கள். ஆனால் இன்றோ வந்தது நந்தன்.. அதுவும் தனியாக அமர்ந்திருந்தான். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கை கூட்டி பார்த்தவன் தேவாவை பழிவாங்க நந்தனை உபயோகப்படுத்திக் கொண்டால் என்ன? என்ற சிந்தனை தோன்ற அதுவே சரி என உறுதிப்படுத்தி அதை செயல்படுத்தவும் முனைந்தான்.
உடனே தனக்குத் நம்பிகையான ஆட்களை வைத்து தேவா நந்தன் உறவைப்பற்றி தற்போதுள்ள நிலையை அறிய முயல ஒன்றும் கண்டுபிடிக்க இயலவில்லை. பிரம்ம பிரயத்தனை பட… முடிவு என்னவோ ஜீரோ தான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது இப்போது தேவாவுக்கும் நந்தனுக்கும் எதுவோ சரி இல்லை என்று அதை பயன்படுத்திக் கொண்டு தேவா வைஷாலியை பழிவாங்கி பழியை நந்தனின் மீது போட்டால் விட்டால், ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்று சிலாகித்துக் கொண்டான். அதற்கென நந்தனை தனியாக சந்திக்க தன் ஆட்களை கொண்டு ஏற்பாடு செய்யவும் ஆணையிட்டான்.
தொடர்ந்து வேலைகள் என அன்று இரவு வெகு சீக்கிரம் உறங்கி விட்டாள் வைஷூ. இம்மாதிரி கடும் இடைவிடாத வேலைகள் அவளுக்கு பழக்கமில்லை. கல்லூரி செல்வது மாலையில் அன்னையோடு பேசி சிரிப்பது, அன்னைக்கு வேலை இருந்தால் நண்பர்கள் , டிவி , புத்தகம் என அவளுடைய பொழுதுபோக்குகள். இப்போது இந்த புதிய திட்டத்தினால் அவளுக்கு கொஞ்சம் அதீத வேலை அதனால்தான் சீக்கிரமாக உறங்கி விட்டாள்.
மணி 2 அடித்து ஓய்ந்திருக்க வைஷூவின் வயிற்றுக்குள் முணுமுணு என்று சத்தம். தன்னை இருக்க அணைத்தவாறே உறங்கிக்கொண்டிருக்கும் கணவனை பார்த்தவள் ” தூங்கும் போது கூட கெட்டியா படிச்சுகிட்டு தூங்குறதை பாரு.. இஞ்சி மங்கி.. ” என்று விட்டு அவன் கைகளை மெதுவாக எடுத்து எழுந்து உட்கார்ந்தவள், மெல்ல பசியை உணர்ந்தாள்.
அவ்வீட்டின் வேலையாட்களுக்கு தங்குவதற்கான வீட்டிற்கு பின்னால் வீடுகள் உண்டு. தங்கி வேலை பார்ப்பவர்களும் உண்டு… காலையில் வந்து இரவு வீட்டிற்கு செய்பவர்களும் உண்டு. பெரும்பாலும் இங்கே இரவு யாரும் உறங்குவதில்லை. இருக்க இருக்க வைஷூவின் பசி அதிகரிக்க செய்ததே ஒழிய குறையவில்லை. என்ன செய்வது என்ற குறுக்கும் நெடுக்கும் நடந்து திரும்பும்போது எதிலோ முட்டிக்கொள்ள வலித்த நெற்றியை தடவிக்கொண்டே பார்த்தவள் தேவாவை பார்த்து அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.
” உன் சிரிப்பே சரி இல்லையே.. எதுக்குடி ராத்திரி நேரத்துல உலாத்திக்கிட்டு இருக்க.. மோகினி பிசாசு ” என்று கடிய, பாவமாக அவனையே பார்த்தவாறு ” பசிக்குதுங்க என்றாள். சத்தியமாக இப்படி ஒரு பதிலை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை. அடுத்த நொடி அவன் இண்டர்காம் நோக்கிச் செல்ல , அவனை தடுத்தவள் ” இந்நேரம் எல்லாரும் அவங்கவங்க வீட்ல தூங்கிட்டு இருப்பாங்க.. அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே ” என்று கூறி தடுத்தாள்.
சரி வா என்று அவளை அழைத்துக் கொண்டு நேராக சென்றவன் , கிச்சனில் எதை எதையோ தேட.. அவனை பார்த்து ” தள்ளுங்க.. பால் இருந்தா போதும் நான் பார்த்துக்கிறேன் ” என்று ஃப்ரிட்ஜை நோக்கி சென்றாள் வைஷூ. ஆனால் இருக்கும் பசிக்கு பால் மட்டும் போதும் என்று அவளுக்கு தோன்றவில்லை. அங்கே அவள் தயங்கி நிற்க.. பின் கணவனை நோக்கி ” எனக்கு ரொம்ப பசிக்குது பால் எல்லாம் பத்தாது போல.. ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு ” என்றாள்.
” ஆனா எனக்கு டயர்டா தூக்கம் தூக்கமா வருது ” என்று சோர்ந்தவளைப் பார்த்தவன் சிரிப்புடன் அவளைத் தூக்கி சமையல் மேடையில் அமர வைத்தான்.
பரபரவென்று என்னென்ன பொருட்கள் என்று பார்த்து தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து நறுக்க ஆரம்பித்தான் காய்களை.. தேவாவின் கை மிக லாவகமாக நேர்த்தியாக காய்கறிகளை வெட்டுவதை விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷூ.
” சூப்பருங்க.. உங்களுக்கு சமைக்க எல்லாம் தெரியுமா ?” என்றாள் ஆச்சரியம் விலகாமல்…
அவளை நோக்கி புன்னகை புரிந்தவன், ” பீஜி அப்ராட்ல தானே பண்ணினேன்.. அங்கு செல்ப் குக்கிங் தான். ரொம்ப எல்லாம் தெரியாது. நான் எக்ஸ்பர்ட் கிடையாது. நூடுல்ஸ் தான் பண்ண போறேன் ” என்றான்.
கலைந்த அலையலை என கேசம், திரண்டு உருண்ட தேகம், வனப்பான கைகள்.. வெற்று மார்புடன், ஷார்ட்ஸ் மட்டும் அணிந்துகொண்டு சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கும் அவனை தான் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷூ, எப்படி இருந்த தேவாவை இப்படி ஆகிட்டியே வைஷூ என்று அவள் மைண்ட் வாய்ஸ் அலற..
தன்னையே அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த மனைவியை பார்த்தவன் புருவங்களை உயர்த்தி என்ன என்று கேட்க, ஒன்றுமில்லை என்று தலையாட்டி தன்னவனை ரசனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் வைஷாலி.
நூடுல்ஸ் செய்து முடித்தவன் அதை ஒரு தட்டில் இட்டு மேலே முள் கரண்டியை வைத்து அவளிடம் நீட்ட ஆசையோடு வாங்கிய நீட்டியவள் கையை தட்டிவிட்டு.. தானே ஊட்டினான்.
அவள் இதை சற்றும் எதிர் பார்க்காமல் விழி விரிக்க..” வாய திற வைஷூ.. கண்ணால சாப்பிட முடியாது.. கண்ணை இவ்ளோ பெருசா திறக்கிற ” என்றான் குறும்புடன்…
மெல்ல வாய் திறந்து அவன் நீட்டிய நூடுல்ஸை வாங்கி கொண்டு அவள் உதடுகள் மூடிக்கொள்ள.. தேவாவின் பார்வை அவ்விதழ்கள் விட்டு நகரவில்லை. ஒரு வாய் அவளுக்கு ஊட்டியவன் அடுத்ததை அதே கரண்டியால் தானும் உண்டான். என்றுமில்லாமல் அந்த நூடுல்ஸ் இன்று மிக சுவையாக தெரிந்தது தேவாவிற்கு..
இன்னும் ஓர் கரண்டியை அவளுக்கு கொடுக்க.. அடுத்த வாயை அவன் சாப்பிட்டான். ” எனக்கு பசினு சொன்னா என்னை விட நீங்க தான் ஜாஸ்தி சாப்பிடுறீங்க “என்று முறைத்துக் கொண்டாள் பெண்.
” உட்கார வைத்திருந்த அதே இடத்துல உட்கார்ந்துட்டு ஒரு ஹெல்ப் கூட பண்ணாம.. இப்போ சண்டைக்கு வர.. பாரு உனக்கு சமைச்சு சமைச்சு நான் டயர்ட் ஆகிட்டேன். அதான்.. ” என்று ஒரு வாய் அவளுக்கு ஊட்டி விட்டு அடுத்ததை அவன் சாப்பிட்டான்.
இந்த கள்வன் செய்யும் கள்ளத்தனம் புரியாதா என்ன அவளுக்கு. வைஷூ போதும் என்று கூற.. ” அதுக்குள்ளே வா இப்படி சாப்பிட்டா… இன்னும் கொஞ்ச நாளா நீனு ஆபிசுக்கு கார்ல போக வேண்டாம். காற்று கொஞ்சம் வேகமாக வீசினால் பறந்தே போகலாம் ” என்று வார அவனை முறைத்தாள்.
ஆனால்.. என்று அவளை ஒருமுறை நிதானமாக மேலிருந்து கீழ் பார்வையால் அளந்தவன் “எல்லாம் பக்காவா இருக்கு ” என்று கண் சிமிட்டினான். என்னவெல்லாம் பேசுகிறான் என்று அவள் முகம் சிவக்க..
வெட்கத்தில் சிவந்த அவள் முகத்தை பார்த்து அவளை நெருங்கி நின்றவன் ” நீ எப்படி வெட்கப்பட்டா.. எனக்கு வேற என்னென்னமோ செய்ய தான் மனசு சொல்லுது ” என்றான் கிறக்கமாக..
அவள் அதிர்ந்து அவனை பார்க்க.. அவள் இருபுறமும் கையை வைத்து சிறை செய்தவன் ” என்ன செய்யட்டுமா ” என்றான் மெல்லிய குரலில்..
அவள் வேண்டாம் என்பதாய் தலையசைத்து மறுப்பு கூற…
அவள் காது மடலில் தன் உதடுகள் உரச ஹஸ்கி வாய்ஸில் ஏன் என்றான்.
காதோரமாய் கிசுகிசுப்பாக கேட்ட அவன் குரலில் வைஷூக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய அவனை நிமிர்ந்து பார்க்க.. கண்கள் துடிப்பதை பார்த்தவன் அதற்குமேல் தாங்காமல் தன் முரட்டு இதழ்களை சதைப்பற்றுடன் கூடிய அவளின் ரோஜா வண்ண இதழ்களில் பதித்திருந்தான்.
அவனின் இதழ் ஒற்றலில் துவண்ட வைஷாலி அவன் மார்போடு ஒன்றி விட மிக இறுக்கமாக அணைத்துக்கொண்டான் தேவா. இருவரின் உதடுகள் எது என்று பிரித்தறிய வண்ணம் ஒன்றோடு ஒன்று புதைந்து போயிருக்க.. அவன் கையிலிருந்து நூடுல்ஸ் தட்டு தடாலென்று கீழே விழுந்து சத்தம் எழுப்பியது. அச்சத்தத்தில் அவசரமாக அவனை விட்டு பிரிந்த அவளின் இதயம் ஓட்டப்பந்தய வீராங்கனை போல மிக வேகமாகத் துடித்தது.
அவளின் நிலையை பார்த்து சிரித்தவன் ” இதுவரை தப்பித்துக் கொண்டே இருக்க.. ஆனால் நிறைய நாள் இப்படியே தப்பிக்கக்க முடியாது ” என்று கூறி விலகிக் கொண்டான்.
உயர்தர ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ரிசர்வ் செய்யப்பட்ட பகுதியில் அமர்ந்திருந்தான் தீனா நந்தனை எதிர்பார்த்து.
தீனா சொன்ன நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் தாமதமாக பொறுமையாக வந்து சேர்ந்தான் நந்தன்.
தான் காத்திருந்த பதினைந்து நிமிடங்களும் பொறுமை குறைந்து கொண்டே போக நந்தனை பார்த்ததும் எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டான் தற்போது வீரியத்தை விட காரியம் பெரிது என்று..
ரேபனை கையில் சுழற்றியபடி வந்த நந்தன், தீனா அவனைப் பார்த்து கையசைத்ததும் அவன் எதிரில் வந்து அமர்ந்து என்பது போல அவனை பார்த்தான்..
” எதிரிக்கு எதிரி நண்பன் என்று கூறி தீனா அவனுக்கு கை கொடுக்க கை நீட்ட, கூர்ந்து பார்த்த நந்தன் ” யாருக்கு யார் எதிரி” என்றான் மிக அலட்சியமாக…
” தேவேஷ்வர ராஜனை தான் சொல்றேன். உங்களுக்குள் நல்ல புரிதல் இல்லை என்று எனக்கு தெரியும்… எவ்வளவு நாளைக்குத்தான் நீயும் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.. முதலிடத்துக்கு வர வேண்டாமா ” என்றான். அவன் பேசுவதை கேட்டப்படி அப்படியே அமர்ந்திருந்தான் நந்தன்.
” நீ மட்டும் என்கூட கைகோர்த்த.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கலாம்.. என்ன சொல்ற ?” என்ற தீனாவை பார்த்து கலகலவென சிரித்தான் நந்தன்.
” நீ.. அவன.. ஒன்னும் இல்லாம ஆக்க போறியா ?” என்று இலகுவாக கேட்டவன் பின் குரலில் அழுத்தத்தை கூட்டி ” எனக்கும் அவனுக்கும் ஆயிரம் இருக்கும். இடையில் எந்த குள்ளநரியும் வரமுடியாது. ஒரு ராஜனை இன்னொரு ராஜன் தான் வீழ்த்த முடியுமே தவிர கண்ட நாயும் இல்லை ” என்ற நந்தனை, ” ஏய்.. உன்னை.. ” நாய்னு சொன்ன வார்த்தையில் பெரும் ஆக்ரோஷம் கொண்டு கத்திக்கொண்டே அவனை அடிக்க எழுந்தான் தீனா.
” கூல் கூல் பட்டி.. எதுக்கு இவ்ளோ ஆத்திரம். நான் என்ன புதுசாவா சொன்னேன். நான் தொழிலில் நுழைஞ்ச எவ்வளவு நாளில் தொழிலை படிச்சனோ.. இல்லையோ.. தேவாவை தான் படிச்சேன்”
நந்தாவின் வார்த்தையில் வெறுப்பும் குரோதமும் மின்ன அவனை கண்களாலேயே எரித்துக் கொண்டிருந்தான் தீனா.
” என்னோட கணிப்பு கரெக்டான.. இந்நேரம் தேவா உன்னை டார்கட் பண்ணி இருப்பான். நீ இப்ப தான் அவனை வீழ்த்த ஸ்கெட்ச் போட போற.. டூ ஸ்லோ.. சோ பிட்டி..” என்று நந்தன் போலியாக உச்சுக்கொட்டி வருத்தப்பட்டான்.
“அப்படி என்னங்கடா நீங்க ரெண்டு பேரும் பெரிய ஆளுங்க.. ஒருத்தரை குறைத்து மதிப்பிடுவது தோல்விக்கு சமம் ” என்று தீனா வீரம் பேச…
” எக்ஸாக்ட்லி … அதைத்தான் நான் அவ்ளோ நேரம்ம்மாமா உனக்கு சொல்லிக்கிட்டு இருந்தேன் ” என்றான் அலுப்பு நிறைந்த குரலில்..
” சிங்கம் எப்பவும் சிங்கிளாதான் சண்டை போடும். குள்ளநரி கூட எல்லாம் பார்ட்னர்ஷிப் வைச்சுக்காதாம் ” என்று மேலும் அவன் நக்கல் குரலில் கூற.. இம்முறை தீனா வீறுகொண்டு எழுந்து நந்தனின் சட்டையை இறுக்கி பிடித்து இருந்தான்.
” இவ்வளவு ஆத்திரம் ஆகாது தம்பி.. என்று அசட்டையாக கூறி அவன் கைகளை தட்டிவிட்டான் நந்தன்.
” டேய்.. நான் என்ன டோரா புஜ்ஜியில் வர குள்ளநரினு நினைச்சிங்களா.. நீங்க போ போன்னா நான் போறதுக்கு.. தந்திரக்கார நரி டா நான்.. இந்த நரி எப்படி அந்த இரண்டு சிங்கங்களை சாய்க்க போதுனு பார்த்துக்கிட்டே இருங்க ” என்று தீனா சவால்விட..
அவனை ஆழ்ந்த பார்த்த நந்தன் தன் இரு தோள்களையும் குலுக்கிவிட்டு திரும்பி நடந்து சென்றான்.
” இந்த அலட்சியதத்துக்கு கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் அனுபவிப்பீங்க ” என்றான் தீனா வன்மமாக…
சொல்றதெல்லாம் சொல்லிக்கிட்டு போடா என்று அசட்டையாக சென்ற நந்தன்.. ஏதோ தோன்ற திரும்பி அவனை நோக்கி சென்று ” பிரச்சனை தொழில்ல மட்டும் வச்சுக்கோ.. வீட்ல உள்ள பொண்ணுங்க கிட்ட உன்னோட நரி தனத்தை காட்டாத.. என்று கூறிய நந்தனை பார்த்து எள்ளல் சிரிப்பை தீனா கொடுக்க..
” நாங்கள்லாம் பரம்பரை பணக்காரர்கள்.. ஹை சொசைட்டி கீழே இறங்கி வேலை எல்லாம் பண்ண மாட்டோம்னு நினைக்கிறியா.. ஏன் எங்க வீட்ல மட்டும் தான் பொண்ணு எல்லாம் இருக்காங்களா உன் வீட்ல இல்ல.. உனக்கு கூட ஒரு தங்கச்சி இருக்கிறதா கேள்விப்பட்டேனே?” என்று தன் தாடையை தடவியவாறே அவன் யோசிக்க.. ” உன்ன விட இறங்கி நாங்க அடிப்போம். புரிஞ்சுதா ” என்று தன் இரு விரல்களை நெற்றியில் வைத்து அவனை நோக்கி ஒரு சல்யூட் அடித்துவிட்டு தன் ரேபனை சுழற்றிக் கொண்டே சென்றான் நந்தன்.
நந்தனை குறையாத குரோதத்துடன் முறைத்துக் கொண்டே நின்றான் தீனா.
தன் ஆபீஸில் நாற்காலியில் அமர்ந்து ஆடிக்கொண்டே தன் தாடையை ஒரு கையால் தாங்கியவாறு
இவர்களின் உரையாடல்களை மிக சுவாரசியமாக, கன்னங்களில் குழி விழ புன்னகை முகத்துடன் நேரடியாக பார்த்துக்கொண்டிருந்தான் தேவா. ஆம்.. என்று தீனா தன் மீது புகார் கொடுத்தானா.. அப்போதே தீனா தேவாவின் கண்காணிப்பு கீழ்.. அதே போல் தான் நந்தனையும் அவனுடைய கட்டுபாட்டில் கொண்டு வந்து வெகு நாட்களாக ஆகியிருந்தது. ஆனால் இவை எல்லாம் தாண்டி தன்னவளை தீனாவின் குள்ளநரிதனத்தால் பிரிய போவது தான் தேவாவின் விதியோ!!!!!
கர்வம் வளரும்..
Super nandhan …….. Veryyyyy niceeeeeeeee epii ❤️❤️❤️❤️❤️❤️❤️
Kullanari pirittchhuduvana
Nice sis