ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 28

28

 

 

வைஷாலி வாழ்க்கையில் வந்த ஒரு ஆண் நான் மட்டுமே என்று தன் முழு உயரத்திற்கும் நின்று கர்ஜித்தவனை பார்த்து நந்தன் மட்டுமல்ல சோபாவில் அமர்ந்து வைஷூவை தேற்றிக் கொண்டிருந்த தமயந்தி மிரு மோகன் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர்.

 

” ஷாலு.. மை லவ் ஷாலு.. ” என்று காதலாக மொழிந்தான் தேவேஷ்வர ராஜன்..

 

அதுவரை தான் பார்த்த அந்த காணொளியின் பாதிப்பில் சிலையென அமர்ந்திருந்தவள் , தேவா கூறிய ஷாலுவில் சிலைக்கு உயிர் வந்தது போல எழுந்து வந்தாள் வைஷாலி. 

 

” இப்ப என்னடா ஷாலு.. ஷாலுனு சொல்லுற.. இத்தனை வருஷமா இந்த ஷாலு எங்கே போயிருந்தா??” என்று ஆத்திர மிகுதியில் தன் மென் கரங்களால் அவன் வலிய உடம்பில் சரமாரியாக தாக்கினாள்.

 

அவள் அடிப்பதையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கொஞ்சமும் தடுக்காமல் அவள் ஓயும் வரை… பின் அவள் கரங்களை தன் கரங்களில் பொதித்துக்கொண்டு தன் நெஞ்சில் வைத்தான். ” இத்தனை வருஷமா என் ஷாலு.. இங்கே தான் இருந்தா ” என்று தன் இதயத்தை சுட்டிக்காட்டினான்.

 

” இப்ப கூட உன் வாயிலிருந்து அந்த வார்த்தை வர மாட்டேங்குதுடி “என்று ஆற்றாமையாக.. ஏக்கமாக.. அவன் கேட்க..

 

” போடா.. வரவே வராது.. எப்பவுமே வராது போ.. ” என்று அழுகையுடன் கத்தி கொண்டே அவள், அவனிடம் இருந்து மெல்ல தன் கைகளை விடுவித்துக் கொண்டு அவசரமாக வெளியில் சென்றாள்.

 

இவன் பின் தொடர்ந்து செல்லும் முன் அவனுடைய லம்பார்கிணி உயிர்த்துக் கொண்டு கேட்டை தாண்டி சென்று விட்டாள் வைஷாலி.

 

” ஷிட்.. இவளுக்கு டிரைவிங் சொல்லிக் கொடுத்து இருக்கவே கூடாது ” என்று தான் அவளுக்கு அவன் கார் ஓட்ட சொல்லிக் கொடுத்த நிகழ்ச்சி கண்முன்னே வந்து செல்ல ஒரு கணம் அதில் லயித்தவன், மறு கணம் தன் தலையில் அடித்துக் கொண்டு அவர்கள் வீட்டு வாயிலில் நின்ற மற்றொரு காரை எடுக்க சென்றான்.

 

அவன் கார் மட்டுமே எப்போதும் அவன் எடுத்துச் செல்ல ஏதுவாக கார் சாவியுடன் எப்பொழுதும் நின்று கொண்டிருக்க.. மற்றவைகளின் சாவியோ வீட்டின் உள்ளே இருக்க , கோபத்துடன் வீடு நோக்கி சென்றவன் முன் மற்றொரு கார் மோதும் வேகத்துடன் வந்து நின்றது. வேறு யார் அந்த காணொளியை பார்த்து விட்டு வந்த வைஷாலியின் பாசமலரான கார்த்திக் தான்.

 

ஆத்திரத்துடன் கார் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த கார்த்திக், எதிரில் நின்ற தேவாவை அடிக்க துவங்க அவன் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டே ” டேய் ஏன்டா.. நீயும் என்னையே அடிக்க வர நான் என்னடா பண்ணினேன் ” என்றான்..

 

” என்ன பண்ணியா?? எப்போ உன் மேல அந்த தீனா கம்ப்ளைன்ட் கொடுத்தானோ அப்பவே அவனை ஒரு வழி பண்ணி இருக்கணும்.. அப்படி செஞ்சாயிருந்தா இன்னைக்கே இந்த மாதிரி அவனுக்கு செய்ய தைரியம் இருக்குமா ?? என்று திரும்பவும் அவனை அடிக்க…

 

” டேய் அந்த அளவுக்கு போவான்னு நினைக்கவே இல்லடா ” என்று லாவகமாக அவனிடம் தப்பிக் கொண்டே தேவா பேச.. 

 

“நினைச்சிருக்கனும் டா.. அதுவும் வைஷூ பத்தி நீ நினைச்சு இருக்கணும் ” என்று மீண்டும் எகிற..

 

அதற்குள் சத்தம் கேட்டு அனைவரும் வெளியில் வந்து இருக்க.. கார்த்திக் தேவாவை அடிப்பதை கண்டு, மிரு கோபம் கொண்டு அவன் முன்னே சென்றாள்.

 

” என் அண்ணனுக்கு இல்லாத உரிமை பாசம் உங்களுக்கு என்ன வந்தது “என்று கேட்க.. கார்த்திக்கு கோபம் ஏறி அவளை அடிக்க கையோங்கியவன் தன் கையை இறுக்கி “போடி என் கண் முன்னால் நிற்காதே” என்று சற்று திரும்பி நின்று தன் கோபத்தை தணிக்க முயன்றான்.

 

தேவாவும் தன்னை சமாளித்துக் கொண்டு ” இதுல நீ தலையிடாதே மிரு ” என்று கோபமாக பேச.. இவர்கள் இருவரும் சண்டை போடுவதை காண இயலாமல், தடுக்க செல்ல, இருவரும் தன்னை கோபமாகக் கடிந்து கொள்ள வழக்கம் போல அவளுக்கு அழுகை பிதுங்கிக் கொண்டு வர அவள் உள்ளே சென்று விட்டாள்.

 

இவற்றை எல்லாம் வெறும் பார்வையாளனாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் நந்தன். 

 

மீண்டும் தேவா கார்த்திகை நெருங்கி மச்சி என்க.. அவர் முறுக்கிக் கொண்டு நின்றிருந்தான்.

 

அதற்குள் நந்தன் ” முதல்ல அந்த தீனாவை ஒரு வழி பண்ண வேண்டும் ” என்று மெதுவாக வார்த்தையை விட…

 

ஹா ஹாஹா என்று கார்த்திக் சிரித்தான். பின் தேவாவை சுட்டி காட்டி, ” இவனுக்கே இந்த அடி விழுந்ததுனா.. அவன் எல்லாம் நான் சும்மா விட்டிருப்பேன் நினைக்கிறியா ?? என்று கார்த்திக் நக்கலாக கேட்டு.. அவனை நைய்ய புடைச்சிட்டுத்தான் இங்கே வரேன்”

 

” இந்நேரம் போலீஸ் வந்து அவனை அள்ளிட்டு போய் இருக்கும் ” என்று தேவா அசால்ட்டாக கூற, இவர்களின் அசூர வேகத்தை பார்த்து அசந்து போய் நின்றான் நந்தன்.

 

 

அச்சோ என்று தலையிலடித்துக் கொண்ட தேவா ” உன் தங்கச்சி வண்டி எடுத்துட்டு தனியா போய் இருக்கா டா கிளம்பு.. கிளம்பு ” என்று அவனிடம் கூற…

 

” நானும் வரேன் ” என்று நந்தனை தேவா முறைத்து பார்க்க, “அதான் நான் இடையில் வந்ததா, நீங்க தான் பர்ஸ்ட் இருந்து லவ் பண்றீங்கன்னு சொன்னீங்க தானே.. அண்ணி கிட்ட சாரி கேட்க தான் வரேன்” என்றவனை பார்த்து தேவா புன்னகைக்க… கார்த்திக் அதிர்ச்சி அடைந்தான். 

 

” என்னது லவ் பண்ணியா.. அதுவும் காலேஜ் டேஸ்ல இருந்தா !!! என்னடா இவன் என்னமோ சொல்றான் ? நீ என்னமோ சிரிக்கிற உண்மையை சொல்லுடா ” என்றவனை பார்த்து தேவா வெட்க சிரிப்பு சிரிக்க… “டேய் தயவுசெய்து இந்த நேரத்தில்.. இந்த வெட்கம் தேவையா உனக்கு ? ” என்று தலையில் அடித்து கொள்ள.. 

 

அதற்குள் மோகன் ” வைஷூ போய் ரொம்ப நேரம் ஆகுது.. இப்போ நீங்க போறீங்களா இல்ல நான் போகட்டுமா ? என்று அழுத்தமாக கேட்க மூவரும் பாய்ந்தது சென்று கார்த்தியின் வண்டியில் ஏறி விரைந்தனர்.

 

கார்த்திக் வண்டி ஓட்ட தேவா அருகில் அமர்ந்திருக்க பின்னால் நந்தன் இருந்தான். தேவா எப்பொழுது வைஷாலியை காதலித்தேன் என்றானோ அப்போது முதல் எப்போ எங்கே என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எழுந்தது நந்தனுக்கு. 

 

” டேய் வண்டி எடுத்துட்டு வைஷூ எங்கடா போய் இருப்பா? நாம இப்போ எங்க போறது? என்று கார்த்திக் கேட்க.. ” எல்லாம் அவங்க அம்மா வீட்டுக்கு தாண்டா போயிருப்பா.. நேரா எங்க மாமியார் வீட்டுக்கு வண்டிய விடு ” என்று சொல்லி கார்த்தி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான்.

 

அண்ணா என்று நந்தன் அழைக்க ஆச்சரியமாக திரும்பிப் பார்த்தான் தேவா. பெரும்பாலும் பெரியவர்கள் அதுவும் தாத்தா இருக்கும்போது மட்டுமே அவன் வாயில் அண்ணா என்று வரும் மற்ற நேரங்களில் எல்லாம் தேவா தான்.

 

” சொல்லுடா ” என்று தேவா கேட்க, ” அண்ணியை எங்கே எப்போ பார்த்தீங்க??” என்று சுவாரசியமாக நந்தன் கேட்க, வண்டி ஓட்டிக் கொண்டிருந்த கார்த்திக்கும் அதே எண்ணம்தான். “ஆமாம்டா.. ட்ராபிக்ல அங்க போர வரை.. உன் காதல் கதையைக் கேட்டுக் கொண்டே போகலாம் ” என்று அவனும் கூறினான்.

 

தேவா கண்கள் மின்ன வைஷாலியை முதன் முதலில் பார்த்த அந்த காட்சியை சொல்ல ஆரம்பித்தான்.

 

” நான் பீஜி அப்ராடில் முடிச்சுட்டு தொழிலில் கையில் எடுத்த நேரம்.. மூணு வருஷம் முன்னாடி.. மும்பை உள்ள ஃபேமஸ் நௌராஜிவ் இன்ஸ்டுயூஷனுக்கு புதிய பில்டிங் கான்ட்ராக்ட் எனக்கு கிடைச்சது. அந்த கான்ட்ராக்ட் எடுத்து நான் மும்பையில் தங்கி பில்டிங் கட்டிக்கிட்டு இருந்த நேரம் அப்போ மழைக்காலம் ஆரம்பித்து இருந்தது.

 

ஈவினிங் வேலை முடிஞ்சு வரும்போது நல்ல மழை புடிச்சிட்டு, வெளிச்சமே தெரியாம நல்ல இருட்டு வேற, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாம்னு பார்த்தா மழை விடற மாதிரி தெரியலை.

சரின்னு பில்டிங்கை விட்டு வெளியே வந்தேன், திடீர்னு ஒரு மின்னல் வெட்டு என் முன்னாடி தலையை விரிச்சுப் போட்டுட்டு ஒரு உருவம் தெரிந்தது, நான் கண்ணை தேய்ச்சு பார்க்கிறதுக்குள்ள அந்த உருவம் அங்கில்லை.. நம்ம பிரம்மை தான் நினைச்சு அடுத்த அடி எடுத்து வைக்கும் போது .. கொஞ்ச தூரத்தில் அதே உருவம் மறுபடியும் தெரிஞ்சது.. ஆனால் கொஞ்சம் குனிந்த மாதிரி அந்த நேரம் பார்த்து எனக்கு நான் பார்த்த கோஸ்ட் படமெல்லாம் ஒன்னு ஒன்னா ஞாபகத்துக்கு வர கொஞ்சமே கொஞ்சம் திகிலடித்தது.

அப்புறம் ஒரு வழியா மனசு தைரியப்படுத்தி கிட்ட போய் பார்த்தா.. “

 

“அண்ணி தான!!” என்றான் நந்தன் குதூகலமாக…

 

“இல்லை மோகினி பிசாசு..” என்றான் தேவா காதலாக..” எனக்கு அப்படித்தான் தெரிஞ்சா. அடுத்த மின்னல் வெட்டில், வீட்டில கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கண்ணெல்லாம் கலங்கி, முகமெல்லாம் சிவந்து கோபத்தில.. அந்த மூக்குநுனி கன்னகதுப்பு இரண்டும் ரோஸ் கலர்ல.. உதடு துடிக்க துடிக்க எப்படி இருந்தாளோ… அதே மாதிரி தான் அந்த மழைக்கால இரவு நேரத்தில் எனக்கு தெரிஞ்சா”

 

” அண்ணி உங்க கிட்ட சண்டை போட்டது ஒரு ரெண்டு நிமிஷம் தான் இருந்தாங்க.. அதுக்குள்ள இவ்வளவு நோட் பண்ணிட்டீங்களா…” என்றான் நந்தன் அதிசயத்து… 

 

” அவ நூறு பேருக்கு நடுவுல நின்னாலே அவ கண்கள் பேசும் மொழி, முகம் பேசும் தோரணை எல்லாம் எனக்கு தெரியும்.. இவ்ளோ பக்கத்துல நின்னா என்னால நோட் பண்ண முடியாதா என்ன ?”என்றான் சற்று கர்வமாகவே…

 

” அப்புறம் வைஷூ கிட்ட போயி பேசினியா டா மச்சி ” நீ என்றான் கார்த்திக்..

 

” இல்லடா அவ கண் பார்த்ததுக்கு அப்புறம் எங்கிருந்து நான் பேச.. அந்த பழுப்பு நிறப் பார்வை காந்தமென அவளை நோக்கி இழுக்க ஆரம்பித்தது, அவளையே பார்த்தபடியே அந்த மழையில் நின்று கொண்டிருந்தேன் ” என்ற தேவா பழைய நியாபகத்திற்குள் சென்றான்.

 

சிலையென அவளை பார்த்த வண்ணமே நின்றுகொண்டிருந்தான் தேவா.. அவளோ கண்ணீர் ததும்பும் விழிகளோடு கீழே எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

 

” எக்ஸ்க்யூஸ் மீ.. யார் நீங்க ?? இங்க என்ன தேடிட்டு இருக்கீங்க ?? என்றான் தேவா ஆங்கிலத்தில்..

 

ரொம்ப நேரமாக மழையில் நனைந்ததால் குளிர் வாட்ட, நடுங்கிய தன் அதரங்களை மெல்ல திறந்தாள் அவள்.

” நான் வைஷாலி.. பைனல் இயர் ஸ்டூடண்ட். என் மோதிரம் ஒன்று எங்கே தொலைஞ்சு போச்சு.. அதான் தேடிட்டு இருக்கேன் ” என்றாள் அவளும் பதிலுக்கு ஆங்கிலத்திலேயே..

 

“அவ்வளவு முக்கியமானதா அந்த மோதிரம் ” என்றான் சற்று பொறாமையாக…

 

“என் டார்லிங் கொடுத்தது ” என்றாள் வைஷூ..

 

டார்லிங் என்ற வார்த்தையில் இவன் மனம் சற்று வருத்தம் கொள்ள.. ” அவ்வளவு முக்கியமானதுனா உங்க டார்லிங் வந்து தேட சொல்ல வேண்டியது தானே.. இந்த ராத்திரில இங்கே நீங்க ஏன் வந்தீங்க… ” என்றான் கோபமாக..

 

” என் டார்லிங் தான் என்னை ஹாஸ்டலில் விட்டுட்டு.. அவரு டார்லிங் தான் முக்கியம்ன்னு டெல்லி போய் விட்டாரே” என்றாள் அழுகுரலும் வைஷாலி..

 

” என்னது அண்ணியோட டார்லிங் ?? அது யாரு ?? என்று அதிர்ச்சியான குரலில் நந்தன்… 

 

கரீீச் என்று சத்தத்தோடு காரை நிறுத்திய கார்த்திக் “வைஷூகே ஒரு டார்லிங், அதுக்கு இன்னொரு டார்லிங் ஆ ??? “என்று நந்தனுக்கு மேல் அவன் அதிர்ச்சியாக கத்த..

 

கார்த்திக் சட்டென்று காரை நிறுத்தியதில் பின்னர் வந்த கார்களும் உடனே நிறுத்தப்பட, இவனை முந்தி வந்து நல்ல நல்ல வார்த்தைகள் கொண்டு திட்டிக் கொண்டே சென்றார்கள். அதைக் கண்டு கொள்ளும் மனநிலையில் இருவருமே இல்லை. 

 

” ஒழுங்கா சொல்லி தொலையேன்டா ” என்று கார்த்திக் கேட்க நந்தனின் முக நிலையும் அதுவே காட்டியது..

 

” அவ டார்லிங்னு சொன்னது அவங்க அப்பாவை.. அவரோட டார்லிங் என்று சொன்னது அவங்க அம்மாவை ” என்று தேவா கூற எப்படி உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை நந்தனும் கார்த்திக்கும்.. பிறகு வாய்விட்டு சிரித்தனர்.

இந்த விளக்கத்தை வைஷூ வாயிலாக கேட்ட பிறகுதான் தேவாவிற்கும் ஆசுவாச பெருமூச்சு வெளிவந்தது. 

 

அந்நேரம் பார்த்து பெரும் இடி ஒன்று இடிக்க, ஏற்கனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தவள், பயத்தில் அவன் அருகே வந்து அவன் முழங்கையை இறுகப் பற்றிக்கொண்டு முருகா முருகா முருகா என்று முணுமுணுத்தாள். அவளின் இந்த செயல்களை ரசித்துக்கொண்டே அவள் தோளில் தட்டியவன்..” இப்போ போங்க.. நாளைக்கு வந்து தேடலாம் ” என்றான்.

 

” அந்த மோதிரம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் . என்னால் அதைவிட்டு இருக்க முடியாது.. நான் தேடி எடுத்தால் தான் போவேன் ” என்றாள் விடாப்பிடியாக மிக அழுத்தமாக…

 

இடையை நந்தன ” அடுத்து என்ன நடந்ததுனு நான் சொல்லவா ” என்றான்.

 

சொல்லு என்றான் தேவா..

 

” நீங்க அண்ணிக்காக நைட் விடிய விடிய அங்கு உட்கார்ந்து அந்த மோதிரத்தை தேடி கண்டுபிடிச்சு கொடுத்து இருப்பீீங்க.. அண்ணிக்கும் உங்க மேல ஒரு சாப்ட் கார்னர் தோன்றி இருக்கும்.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி லவ் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க.. கரெக்ட்டா ” என்றான் ஆர்வமாக..

 

கார்த்திக் நந்தாவை நக்கலாக பார்த்து ” நீ ரொம்ப தமிழ் படம் பார்ப்பீயோ ” என்றான் காரை ஓட்டி கொண்டே..

 

நந்தன் கார்த்திக்கை பார்த்து ” ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க அத்தான்” என்றான்.

 

” நீ சொல்லு மச்சி அவன் சொன்ன மாதிரிதான் செய்தீயா? ஆனா நீ அதெல்லாம் பண்ணி இருக்க மாட்டேன்னு எனக்கு தோணுது ” என்றான் கார்த்தி யோசனையாக..

 

“கரெக்ட் மச்சி.. என் நண்பேன்டா நீ ” என்று அவன் தோளில் தட்டி.. ” ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டேன் ” என்றான் கூலாக..

 

என்னது அறைஞ்சியா ?? ஏக கணத்தில் நந்தனும் கார்த்திக்கும் ஒன்றாக கூவினர்.. 

கர்வம் சரியும்..

3 thoughts on “என் கர்வம் சரிந்ததடி சகியே.. 28”

  1. 🤩🤩🤩🤩🤩🤭🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣❤️❤️❤️❤️❤️❤️❤️💕 niceeeeeeeee epii ❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top