29
எனக்கு அந்த மோதிரம் ரொம்ப முக்கியம் அது இல்லாம நான் போகமாட்டேன் என்று அழுத்தமாக கூறி நின்றவளை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் தேவா.
அதிர்ச்சியில் உறைந்து சிலையாய் நிற்க..
அப்போ இடி இடித்த சமயத்தில் வைஷூ முருகா என்று அழைத்தபோது அவளை தமிழ் என்று உணர்ந்துகொண்ட தேவா, ” அறிவில்ல உனக்கு படிச்ச பொண்ணு தானே.. இந்த நேரத்துக்கு மேல இங்க இருப்பேன் சொல்ற.. இங்க பில்டிங் கட்ட நிறைய தொழிலாளிகள் வேறு வேறு மாநிலத்தில் இருந்து வந்து இருக்காங்க.. எல்லாரையும் நல்லவங்கனு எல்லாம் சொல்ல முடியாது. அதோடு அதற்கான வாய்ப்பை நாம் ஏன் கொடுக்கணும் ” என்று கோபமாக கேட்க.. அவன் சொன்னதில் உள்ள உண்மை அவளுக்கு உணர்ந்ததும் தன் இமை உயர்த்தி அப்போதுதான் அவனை அவதானித்தாள்.
இருட்டில் அவன் முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் அவனின் உயரமே தனித்து தெரிவதாய்..
” இந்த ரிங் கொடுத்த உன்னோட டார்லிங்க்கு உன்னோடு நலன் தான் முக்கியமே தவிர எந்த உயிரற்ற பொருள் இல்லை.. ” என்று அவனுடைய பேச்சு அவளுக்கு முழு நிதர்சனத்தை உணர்த்த சரி என்று தலையை ஆட்டி மெல்ல நடந்தாள்.
” கொஞ்சம் இரு ” என்று கூறி தானும் அவளுடன் சேர்ந்து நடக்க.. இருவருக்கிடையே ஒரு ஆழ்ந்த அமைதி. அவள் ஹாஸ்டல் வரை வந்தவன் பின் தன் இடம் நோக்கி நடக்க.. தேங்க்ஸ் என்று உரக்க கூறினாள் வைஷாலி.
மெல்ல திரும்பியவன் அவள் கண்களை பார்க்காமல் தலையை மட்டும் ஆட்டு விட்டு சென்று விட்டான்.
“அப்புறம் என்ன ஆச்சுண்ணா ?? எப்போ அண்ணியை அடுத்து பார்த்தீங்க?? என்று நந்தன் ஆர்வமாக கேட்க..
” ஒரு வாரம் போச்சு, அப்புறம் அவங்க காலேஜ் கரஸ்பாண்டன்ட் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.. நான் அங்க போனபோது ஃபைனல் இயர் ஸ்டுடென்ட்ஸ் நிறைய பேரு அந்த செமினார் ஹால்ல இருந்தாங்க.. அப்புறம்.. ” என்றவன் தன் நினைவில் மூழ்கினான்.
“டியர் ஸ்டூடண்ட்ஸ் உங்களுக்கெல்லாம் ஒரு கோல்டன் ஆப்புர்ச்சுனிட்டி.. இப்போ நம்ம காலேஜில நியூ பில்டிங்ஸ் கட்டிகிட்டு இருக்காங்க.. அங்க ஒரு லைப்ரரி காட்டலாம்னு மேனேஜ்மென்ட்ல முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த லைப்ரரி கட்டுவதற்கான வரைபடத்தை நாங்க ஸ்டூடண்ட்ஸ் கிட்ட விட போறோம். உங்களில் யாரு அதை பர்ஃபெக்டா பண்றீங்களோ, அவங்களோட வரைபடம் ராஜன் கன்ஸ்ட்ரக்ஷன் மூலமா கட்டப்படும். கூடவே அந்த ஸ்டூடண்ட் அவங்க புராஜெக்ட்டா அதை பண்ணலாம் ” என்று கரஸ்பாண்டன்ட் மாணவர்கள் முன்னிலையில் பேச அதற்கு பலத்த வரவேற்பு…
கூடவே ராஜன் கன்ஸ்ட்ரக்ஷன் எம்டி என தேவாவையும் அங்கு அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் வைஷாலிக்கு அவன் யார் என்பது தெரிந்தது.
அடுத்து வந்த நாட்களில் பலருடைய வரைபடங்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியாக வைஷாலி வரைபடம் சிறப்பானது என தேர்வு செய்து அதையே கட்டுமானத்திற்காக அனுப்பி வைத்தனர் தேவாவிடம்.
“என்னது அண்ணியும் இன்ஜினியரா?? அதுவும் சிவில்?? ” என்று அடுத்த அதிர்ச்சியில் நந்தன்..
“டேய் மச்சி நீ உன் கதையை சொல்றதுக்குள்ள இவன் அதிர்ச்சியாகி அதிர்ச்சியாகி ஒருவழியாக போறான்” என்று சிரித்துக் கொண்டே கூறி, நந்தனிடம், ” டேய்.. ஷாக்க குறை நந்து ஷாக்க குறை ” என்று கார்த்திக் அவனையும் கிண்டல் செய்ய.. “நீங்க கன்டினியூ பண்ணுங்கண்ணா” என்றான் நந்தன்.
காலையில் வகுப்பு மாலையில் கட்டுமான பணியை பார்வையிட என வைஷாலி நேரம் செல்ல.. கூடவே தன்னையறியாமல் தேவாவை பார்ப்பதும் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் அன்று அவளைப் பார்த்தவன் பேச எத்தனித்தான். இதுவரை எட்ட நின்று கண்களால் மட்டுமே அவளை பார்வையிட்டவன், அன்றைக்கு பிறகு இன்று முதன்முதலாக அவள் அருகில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அன்று அவன் அடித்த அடியில் இருவருக்கும் ஒரு வித மன சுணக்கம் வேறு. யார் முதலில் பேசுவது என்று..
” ஹாய் ஐ ஆம் ஈஸ்வர்.. ” அவன் ராஜன்ஸ் கம்பெனியின் எம்டி என்றும் அவனை எல்லோரும் ராஜ் என்றும் அழைப்பதும் அவள் கண்டு கொண்டிருந்தாள். ஆனால் ஈஸ்வர் என்று தன்னை அறிமுகப்படுத்தியதும் அவள் நெற்றி சுருங்க அவனை பார்த்தாள்.
அவளின் முகம் பாவனையை கண்டு உள்ளத்தை படித்தவன், ” என் ஃபுல் நேம் ஈஸ்வர ராஜன் ” என்றான். அவனைப் பற்றி முழு விபரத்தையும் அவன் அவளிடம் பகிரவில்லை. ஏற்கனவே அவன் எம்டி என்று எண்ணத்தில் சற்று எட்ட நின்ற அவள் பழகி வர அவனின் முழு விவரமும் தெரிந்தால் முற்றிலுமாக தவிர்த்து விடுவாள் என்ற எண்ணமும்..
தன்னை தனக்காக மட்டுமே அவள் விரும்ப வேண்டும் என்ற எண்ணமும்.. காரணம்..
ஆனால் விதி வேறு மாதிரி யோசித்ததோ!!!! அது என்னைக்கு தான் நமக்கு சாதகமா யோசிச்சு இருக்கு!!!
அதன்பிறகு தினமும் காலையில் ஒரு பார்வை.. ஒரு சிரிப்பு.. ஒரு தலையாட்டல் என அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்க… அன்று அவன் அடித்தது அவள் மனதுக்குள் ஒரு ஓரத்தில் மூனுமுனுவென சில சமயம் அவனை பார்க்கும்போது அவளை அறியாமல் அது முறைப்பாய் வெளிப்படும். அவள் முறைக்கும் போதெல்லாம் ஒரு குறுஞ்சிரிப்பு கள்ளத்தனமாக அவன் இதழில் நெளிந்து ஓடும். பேசி பழகவில்லை என்றாலும் ஒரு மெல்லிய புரிதலான நட்பையும் தாண்டி ஒன்று அவர்களிடையே வளர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.
அந்த நட்பையும் தாண்டிய ஏதோ ஒன்று என்னவென்று விளங்கும் காலமும் அவர்களுக்கு வந்தது.
அன்று பீல்ட் சைட்டுக்கு வந்தவள் கூடவே தன் நண்பன் சஞ்சய்யையும் கூட்டி வந்து இருந்தாள்.
வைஷாலியின் தந்தை ஜெய்சந்திரனும் சபர்மதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மும்பையில் ஒரு பெரிய கம்பெனியில் ஜெயச்சந்திரனுக்கு வேலை கிடைத்திருக்க தன் மனைவி மகளுடன் கோயம்புத்தூரில் இருந்து மும்பைக்கு வந்து விட்டார். அப்போது வைஷாலி பத்தாவது முடித்து இருந்த சமயம். இங்கே அவர்கள் குவாட்டரசில் அருகிலிருந்த சஞ்சய் அவளுக்கு உற்ற தோழன் ஆனான். இருவரும் ஒரே பள்ளி, ஒரே கல்லூரி ஆனால் டிபார்ட்மெண்ட் வேறு வேறாக அவளோ தன் தந்தையைப் போல் சிவில் எடுக்க சஞ்சய்யோ அவனுக்கு பிடித்த ஐடியில்…
ஜெயசந்திரன் டெல்லி செல்லும் முன் சஞ்சய் பெற்றோர், வைஷாலியை தங்களுடைய வீட்டில் இருக்கட்டும் என்று கேட்டனர். இன்னும் ஆறு மாதம் தானே அதன்பிறகு நீங்கள் டெல்லி அழைத்து செல்லலாம் என்று. ஆனால் சபர்மதி பிடிவாதமாக மறுத்துவிட்டார். வயசு பெண் அல்லவா, அவ்வப்போது சஞ்சய் அவனின் பெற்றோரும் அவளை சென்று பார்த்துக் கொண்டனர்.
இப்போது தன் ஆருயிர் தோழியின் வடிவமைப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் லைப்ரரியை காணத்தான் அவனின் இந்த விஜயம். கூடவே சிறிது நாட்களாக அவளின் முகத்தில் காணப்படும் அந்த வெட்கச் சிரிப்பிற்கும்.. முகச் சிவப்பிற்கும்.. காரணம் யார் என்று அறியும் ஒரு உந்துதல்..
தூரத்திலிருந்து வைஷாலி கூட ஒருவன் வருவதை ஒரு புருவம் முடிச்சுடன் பார்த்துக்கொண்டிருந்தான் தேவா. அவர்கள் நெருங்கி வந்ததும் வைஷாலி சஞ்சய்யை அறிமுகப்படுத்தினாள்.
தேவாவும் தலையசைத்து ஏற்க, அறிமுகத்துக்குப் பின் சஞ்சய் நேரடியாகவே தேவாவை பார்த்து ” நீங்க தானே அவளை அடித்தது ” என்றான்.
” இல்லையே ” என்று தேவா இரு தோள்களை குலுக்கி கூற..
“அடியே.. ஆள மாற்றி சொல்லி விட்டாயா என்ன?? ” என்று சஞ்சய் ஹிந்தியில் வைஷுவை கேட்க.. வைஷூவுக்கும் தேவா எதற்கு இப்படி சொல்கிறான் என்று புரியாமல் அவளை நோக்க அவனின் அதரங்கள் சிரிப்பில் துடித்தது.
” என் கைதான் அடித்தது ” என்று கண்கள் சிரிக்க அவன் கூற, அடித்துவிட்டு அதில் நக்கல் வேறு உனக்கு அவளின் பழுப்பு பாவைகள் அவனிடம் சண்டையிட்டன..
இவர்கள் இருவரின் விழி மோதல்களும் கள்ளச்சிரிப்புகளும் சஞ்சய்க்கு புரிவதாய்…
” ஆனாலும்.. அது தப்பு தானே ” என்றான் சஞ்சய் தோழிக்கு ஆதரவாய்…
” ஒரு பர்செண்ட் கூட கிடையாது ” என்றான் தேவா அழுத்தம் திருத்தமாக..
வயது பெண்ணை அடித்து விட்டு அதில் தவறும் இல்லை என்கிறானே என்று கோபம் பொங்க தேவாவை பார்த்து முறைத்துக் கொண்டே ஏன் என்றான் சஞ்சய்.
” உங்கள் நண்பி செய்தது அப்படி” என்று அன்று நடந்த விஷயங்களை கூற இப்பொழுது முறைப்பை தேவாவிலிருந்து வைஷூவுக்கு மாற்றினான் சஞ்சய்.
‘பாவி மாட்டி விட்டானே.. உன்னை!’ என்று தேவாவை முறைத்தாள் அந்த பழுப்பு பாவை..
“வெல்கம் பேபி” என்று உதட்டளவில் அவளுக்கு செய்தி அனுப்பி கண்களில் சிரித்துக்கொண்டிருந்தான் வெண்ணெய் திருடும் கோபியர் ரமணனாக தேவா..
பின் தேவாவிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்கள் செல்ல தோழியை கண்டிக்கவும் தவறவில்லை சஞ்சய்.
அவளோ வரும் வழியில் தன்னை சஞ்சயிடம் மாட்டி விட்டதற்காக தேவாவை பொரிந்து கொண்டே செல்ல வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான் சஞ்சய்.
“ஏன்டா சிரிக்கிற ” என்று அவனை தன் பையால் அவள் அடிக்க..
” உன் வாய் தான் அவனை திட்டுது கண்கள் வேறு செய்தி சொல்து.. அதாவது அவனை லவ்வுது” என்று அவள் அடித்ததால் வலித்த தன் தோள்களை தேய்த்துக்கொண்டே சஞ்சய் கூற அழகிய நாண சிவப்பு வைஷாலியிடம்.
கை சஞ்சயிடம் சண்டையிட்டாலும், வாய் பேசிக்கொண்டிருந்தாலும் கண்கள் திரும்பி திரும்பி அவனைப் பார்த்துக் கொண்டே செல்ல.. அவள் ஹாஸ்டல் நுழையும் சந்தில் ஒரு மெல்ல தலை ஆட்டலுடன் அவனிடம் விடைபெற்றாள் அவளை அறியாமலே… தேவாவின் கூர் விழிகளும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அதையும் கண்டுகொண்ட சஞ்சய் “கண்ணோடு கண்ணோடு பேசுவாங்களாம்.. ஆனா நான் சொன்னா மட்டும் என்ன அடிக்கிறா..” என்று முணுமுணுத்து, அவளிடம் சற்று சத்தமாக நாளை பிரட்பாஸ்கட்டில் சந்திக்கலாம் வைஷு என்று கூறி தன் பைக்கை நோக்கி சென்று விட்டான்.
வைஷாலியின் முகபாவனைகள் இப்போதெல்லாம் அத்தனையும் அவனுக்கு அத்துபடி. சஞ்சயிடம் அவளின் உரிமை கலந்த பேச்சு.. முறைப்பு.. சிணுங்கல்..திட்டு.. அடி என அவளின் முக பாவனைகள் அனைத்தையும் ரசித்தாலும் உள்ளுக்குள் ஒரு பொறாமை உணர்வு பொங்கி எழுந்தது தேவாவிற்கு சஞ்சயின் மீது..
வழக்கம் போல இடையிட்ட நந்தன் “அவங்க பிரபாஸ்கட்ல சந்திக்கும் போது நீங்களும் அங்க போனீங்க தானே அண்ணா ?? ” என்றான்.
கார்த்திக் நந்தனின் ஆர்வக்கோளாறில் வாய்விட்டு சிரிக்க , இல்லை என்று மறுத்தான் தேவா..
” என்னது நீங்க அப்போ போகலையா ? !” என்று ஒரு சிறு ஏமாற்றம் நந்தனிடம்…
” அவங்க வர்ற டயத்துக்கு நான் போகல காலையில் கடை திறக்கும் பொழுதிருந்து நான் அங்கே தான் இருந்தேன் ” என்றான் தேவா சிறு வெட்கத்துடன்..
இப்போது வெடித்து சிரித்தான் நந்தன் அண்ணனின் காதலில்…
” டேய் மச்சி.. உன் கெத்து அவ்வளவுதானா ” என்று கார்த்திக்கும் அடக்கம் மாட்டா சிரிப்புடன் கேட்க..
” அந்தப் பக்கி பய, ப்ரெட்பாஸ்கட்டில் சந்திக்கலாம் என்று சொன்னானே தவிர எப்போது சந்திக்கலாம் என்று சொல்லவே இல்லையே மச்சி.. சொல்லவே இல்லையே ” என்று நொந்த குரலில் தேவா கூற இருவரும் மீண்டும் சிரித்தனர்.
அன்று பிரட்பாஸ்கட்டில் நுழைந்து எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து தனக்கு பிடித்த பிளாக் ஃபாரஸ்ட் கேக்கும் சஞ்சய்க்கு சாக்லேட் கேக் ஒன்றையும் அவர்கள் ஆர்டர் சொல்லி கொண்டிருக்க..
அவள் அருகில் இருந்த நாற்காலியில் சுவாதினமாக அமர்ந்து ” எனக்கு ஒரு ஸ்ட்ராபெரி ” என்று ஆர்டர் கொடுத்தான் தேவா..
நம்ப மாட்டாமல் திகைத்து வைஷாலி விழியகல… இவன் எப்போ ? எப்படி இங்கே வந்தான் ? என்று விழி விரிய அவனை பார்க்க..
” பார்வை எல்லாம் என்ன பலமா இருக்கு, சைட் அடிக்கிறீயா என்ன? ” என்று தன் ஒற்றை புருவத்தை தூக்கி கண்கள் சிரிப்புடன் கேட்க..
” ஆசை தான் ” என்று கீழ் உதடு வளைய சுழிக்க, ” இன்னொரு முறை இப்படி சுழிச்ச.. அப்புறம்.. “என்று அவன் கண் அவள் இதழ்களில் அழுத்தமாக பதிய வியர்த்து விட்டது வைஷாலிக்கு.
அதன் பின் அவன் புறம் திரும்பவே இல்லை அவள். தேவாவின் இந்த நெருக்கம் அவனின் ரசனையான பார்வைகள் அவளை ஏதோ செய்தது..
சஞ்சய்யோ இவர்களின் ஊடல் காதல் நாடகங்களை கண்டும் காணாதது போல கேக்கை மிக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
தேவாவின் நெருக்கத்தில் அவளிடம் ஏற்பட்ட நடுக்கம்.. எதிரிலிருந்த சஞ்சய்யை பார்த்து ‘கேக்கை பார்க்காதது போல திங்குது பாரு பக்கி ‘என்ற அவளின் கோபம்.. அவனின் பார்வை எதிர் கொள்ள முடியா ஒருவித அவஸ்தை.. என்று அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் தேவா, இலகுவாக மார்புக்கு குறுக்கே இரு கைகளையும் கட்டிக்கொண்டு அமர்ந்தபடி…
சட்டென்று அவளின் அருகே மிக நெருக்கமாக அவன் நெருங்க , அவளின் முகம் வெளிப்படையாக பயத்தை காட்ட.. அவளின் பயத்தை உள் வாங்கியபடி தன் ஸ்பூனால் அவளின் கேக்கை எடுத்து ரசித்து ருசித்துச் சாப்பிட்டான் தேவா.
திடுக்கிட்டு அவள் திரும்பிப் பார்க்க “அப்படி என்ன செஞ்சிடுவேன் உன்னைனு இந்த பார்வை?? அதுவும் இவ்வளவு கூட்டத்துல, கூடவே உன் வீர தீர பிரண்ட் வேறே.. ம்ம்” என்றவாறு மீண்டும் ஒரு வில்லை கேக்கை எடுத்து சாப்பிட்டான்.
அவள் விழிகளில் தன் விழிகளை நுழைத்து ” கேக் ரொம்ப டேஸ்டி ” என்று கூறி கண்ணடிக்க.. அவள் பயத்தில் தன் தலையை சுழற்றி சுற்றும் முற்றும் பார்க்க..
” நானெல்லாம் பார்க்கவே இல்ல பா” என்றான் எதிரில் இருந்த சஞ்சய்..
அவன் பதிலில் தேவா கன்னக் குழி தெரிய சிரிக்க வைஷாலி அவனை முறைத்தாள்.. ஆனால் அவள் முறைப்போ அந்த கன்ன குழியில் வீழ்ந்து போனது..
அவளை சோதித்தது போதும் என்று எண்ணிய தேவா இருவருக்கும் பொதுவாக ஒரு பாயுடன் எழுந்தவன்,
டிஷ்யூ எடுப்பதுபோல அவள் அருகில் குனிந்து ” பாய் மை மோகினி பிசாசு” என்றே விடைபெற்றுச் சென்றான்.
ஒரு பெரு மூச்சை இழுத்துவிட்டு வைஷாலி நிமிர்ந்து பார்க்க புன்னகையுடன் சஞ்சய் அவளைப் பார்த்து ” ராஜன் பிளாட் .. தேவியோ டபுள் பிளாட் ” என்று சொல்லி சிரிக்க போடா என்று முறைக்க முயன்று தோற்று அவளும் சிரித்துக்கொண்டாள்.
கிறிஸ்துமஸ் விடுமுறை ஒட்டி அவர்களுக்கு கல்லூரியில் பத்து நாட்கள் விடுமுறை விட்டுருக்க அவளைப் பார்க்க வென்று அவளின் பெற்றோர் டெல்லியில் இருந்து வந்ததால் , அந்த ஒரு வாரமும் அவள் கல்லூரி விடுதியை காலி செய்து விட்டு ஹோட்டலில் தங்கி இருந்தனர்.
பகலில் பெற்றோருடன் சஞ்சய் குடும்பத்துடனும் விடுமுறையை குதூகலமாக கொண்டாடினர். இரவுக்கு மட்டுமே ஹோட்டலுக்கு. முதல் மூன்று நாட்களில் அவர்களுக்கு சாதாரணமாக சென்றாலும் அடுத்தடுத்த நாட்கள் அவளுக்கு ஏதோ ஒரு வெறுமை என்னவென்று புரியவில்லை.
என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருக்க.. அப்போது அவளின் தந்தை தும்மியவுடன் அவரின் வழக்கம்போல ஈஸ்வரா என்றார்.
ஈஸ்வரா விளிப்பில் அவள் அதிர்ந்து திரும்ப, திரும்பத் திரும்ப இரண்டு மூன்று தரம் தும்மலிலும் ஒவ்வொரு முறையும் அவர் ஈஸ்வரா ஈஸ்வரா என்க.. அவளுக்கு அவளின் ஈஸ்வர் முகம் கண்ணின் முன்னே மின்னி மின்னி மறைய.. ஒவ்வொரு ஈஸ்வராவிலும் அவளின் மனம் சென்ற விதம் கண்டு வைஷாலிக்கு தன் மனதினை புரிந்தது.. வெறுமைக்கான காரணமும் புரிந்தது.. ஆனால் நம் மன ஆசை அவனிடமும் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்று ஒரு மனம் கேட்க மனம் தொய்ந்து தான் போனாள் வைஷாலி.
விடிந்தால் புத்தாண்டு.. மக்கள் அனைவரும் ஆரவாரமாக புதிய ஆண்டை குதூகலமாக வரவேற்க தயாராகிக் கொண்டிருந்த பின்னிரவு வேளை. அவள் மனதின் வெறுமை காரணமாக எதிலும் விருப்பம் இன்றி வெறுமனே, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தாள் வைஷாலி.
வைஷாலியின் பெற்றோர் சஞ்சயின் பெற்றோர் மற்றும் அவர்கள் நண்பர்கள் எல்லாம் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு புத்தாண்டை எதிர் நோக்கிய சந்தோஷத்தில்.. இவள் மட்டும் தனிமையில்…
சட்டென்று அவள் கண்கள், ரோமங்கள் ஓடிய வலிய கரங்கள் கொண்டு மூடப்பட பயத்தில் துள்ளி குதித்தாள் வைஷாலி.
” ஷாலு நான்தான் “என்று காதோரம் கிசுகிசுத்த அந்த கம்பீர குரலின் கரகரப்பில் தன் போல உதட்டை அழுத்தமாக கடித்தாள் வைஷாலி. அவளுக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை கணிக்க முடியாத ஒரு மாயை சூழலில் சிக்கிக் கொண்டு தவித்தாள்.
மெல்ல அவளை திருப்பியவன், அவள் கண்களுக்குள் ஆழ்ந்து நோக்க.. ஆழி பேரலையென அவனை வீழ்த்தி அவளுள் அமிழ்த்தி சென்றது அப்பழுப்பு பாவை… விரும்பியே அதில் தன்னை தொலைத்தான் தேவா..
அவளை நெருங்கி நின்று தன் முதல் முத்திரையை அழுத்தமாக அவள் கண்களில் பதிக்க.. அவள் அதிர்ச்சியோடு அவனை பார்க்க.. தன் கன்ன குழி சிரிப்பில் அவளை வீழ்த்தி, தன் அதரங்கள் கொண்டு அவள் முகதன்னில் இசைக்க.. அவ்விசையினால் ஏற்படும் மெல்லிய சத்தம் அவளுக்கு சங்கீதமாய்..
சரியாக புத்தாண்டு பிறந்த அந்த நொடியில் அவள் விரலில், அன்று அவள் தொலைத்த மோதிரத்தை அணிவித்து, ” காலம் முழுவதும் , உன் காதலில் சிக்கி கிடக்க வேணுமடி.. இந்த பழுப்பு பாவையுள் என்னை கட்டி போட வேணுமடி.. செய்வாயா… ” என்றான் கிறங்கிய குரலில்..
அவள் முக சிவப்பே அவளின் மனதை உணர்த்த, ” சொல்லு ஷாலு ” என்றான், மீசையினால் அவள் காதுகளில் உரசியவாறு.. அவளும் மெல்ல தலையாட்ட,” ம்ஹூம் மௌனம் வேண்டாம்.. வார்த்தை வேணும் ” என்றான்.
அவனை நாண புன்னகையுடன் பார்த்தவள், மெல்ல அவனின் உயரத்திற்கு எக்கி, அவன் நுதலில் தன் முதல் முத்தம் பதித்து, தன் செயலில் அவள் மனதை.. காதலை.. காட்டினாள் வைஷாலி…
கர்வம் சரியும்…
Super sis 💞
Awesome 👍👍 niceeeeeeeee epii ❤️❤️❤️❤️❤️❤️❤️
Very interesting flashback
Nice sis