ATM Tamil Romantic Novels

1 ஆசை வெட்கமறியாது

ஆசை வெட்கமறியாது

1 ஆசை வெட்கமறியாது..

“விஜி உன் மெடி கிட் எடுத்துட்டு என் கூட வாயேன் சீக்கிரம்…”

மைக்கின் அவசரக்குரல் கேட்டு.. வாயில் சூயிங்கம் கையில் நாவல் என்று படு பிசியாக இருந்தவள்,

“யாருக்கு என்ன?”அலட்டாமல் கேட்க

“சின்ன கைகலப்பு.. வாத்துக்கு அடிப்பட்டுடுச்சு .. தல க்கு தெரிஞ்சா அவ்ளோதான் வாயேன் ப்ளீஸ்..”

அந்த ஆணவக்காரி ..

“அவனா?” விழி உயர்த்தி..

ம்ம்ம் .. மைக் இசைவா தலையசைக்க..

அதிருப்தியா உதட்டை பிதுக்கி ஆடி அசைந்து வேண்டியது எடுத்து வர…

“முகத்தை மூடு விஜி”

“ம்ம்.. அணிந்திருந்த தன் தாவணி முந்தியையே முகமூடி கொள்ளைக்காரி போல சுத்தி தன் வட்ட பெரிய கண்ணும் பட்டை புருவமும் மட்டும் தெரியும் வண்ணம்.. ஒரு கொத்து முத்து வச்ச கொலுசின் ஒலியோடு..

ராணியின் கம்பீரத்தில் மைக்கோடு தங்கள் வீட்டின் பின்பகுதியில் சுவர் போலவே இருக்கும் ரகசிய கதவை திறந்து இருவரும்.. ஜன்னலே இல்லாத அறைக்கு போக..

அங்கு முதல் பார்வைக்கே கைகால் கட்டப்பட்டு கிடந்த வாத்தின் முகம் பார்த்து…

“ஐ.. இது அசிம் வாத்சவ் இல்ல?” சப்தமிட்டு கத்தியே விட்டாள் ஆர்வக்கோளாறில் விஜி

அங்கிருந்த 3 ஆண்களும் எச்சரிக்கை சைகை செய்து பதற.. உதடு கடிச்சு.. வழிந்து, தொண்டையை ரெண்டு விரலால் பிடித்து செய்கையிலே சாரி கேட்டாள் விஜி

அந்நேரம் குரல் கேட்டு வாத்து கண் திறக்க சிரமப்பட..

விஜியின் தோள் தொட்டு.. வாத்தின் பின் பக்கமாக இழுத்தான் செல்வா… எதிரில் அந்நியன் பார்க்க முடியா வண்ணம்..

அந்த கூட்டத்தின் வயதான பாவா .. வாத்து அருகில் சென்று கை சிராய்ப்புக்கள் வீக்கங்கள் காட்டி தர.. இவள் செய்கையில் சப்தமின்றி சொல்லி தர தர அவரே துடைச்சு சுத்தம் செஞ்சி மருந்து போட்டு விட.. ஊசி மட்டும் இடுப்பிலேயே தானே போட்டு விட்டாள் விஜி.. தன் வட்ட கண் முழுக்க ஆசையில்.. ஆணழகின் திரு உருவமாய் இருந்த தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோ மீதே இருந்தது..

என்னமா இருக்கான்? செம்ம கலர்.. படத்தில் பார்ப்பதை விட ஹான்சம். உடம்பு அம்மம்மா… இறுக்கி கட்டி அணைச்சா மோட்சம் தான்.. வேறு ஏதும் செய்ய வேண்டாம்
22 வயதின் இளமை கிளர்ச்சி செய்து ஆசையை தூண்டியது..

வேலை முடிந்ததால் ஹல்க் செல்வா

“போ” என்பதாய் முகம் இறுக..

ச்சீ போ.. அவனை டீஸ் செய்து வாயிலேயே ஒழுங்கெடுத்து.. விஜி வாயில் நோக்கி நடக்க..

மைக் தான் திரும்ப நிறுத்தினான்..

என்ன? முறைத்தாள் கண்ணழகி

செல்வாவின் முதுகில் பாளமாய் புது வெட்டுக்காயம்.. ஈர துணி போட்டு துடைத்து வச்சுருந்தார்கள்.. சகாக்கள்

காயம் கண்டவளுக்கு ஆச்சரியம்
வலி இருக்குமே? செல்வா முகம் பார்க்க.. அப்புறம் பார்த்துக்கலாம் போ என்ற செய்கை வர.ம்

ஹுக்கும் வாத்துக்கு ஒன்னுமில்லாத சிராய்ப்புக்கெல்லாம் மருந்து போட சொன்னாங்க.. இதைத்தானே முதலில் காட்டி இருக்கணும்..

கிழிந்திருந்த சட்டையை கழற்ற வைத்து விஜி
சிகிட்சை செய்ய.. டிஞ்சர் தடவல் குளிராக இருந்தது.. முதுகில் நடந்த மென் விரல்களின் நர்த்தனத்தை விழி மூடி ரசித்து நின்றது.. ஆறடிக்கும் மேலே உயர்ந்த 110 கிலோ ஹல்க் உடம்பு கொண்ட அந்த மென்மை கொண்ட ஆணின் பூவிதயம்

 

2 thoughts on “1 ஆசை வெட்கமறியாது”

  1. தலைவரை continue பண்ணுங்க plz plz பாதில மையலு தூக்கிட்டு போயிட்டு குயிலு தூக்கிட்டு போய்ட்டுனு சொல்லாதீங்க 😍😍😍

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top