ATM Tamil Romantic Novels

6 ஆசை வெட்கமறியாது

AV 6

பொறாமைகளும் பகைகளும் சாதாரண மக்களுக்கே வரும்போது அபாயகரமான தொழிலை சட்டத்துக்கு புறம்பாய் செய்யும் ரகுவுக்கு வராதா என்ன?!!

அவனும் தன்னோடு உறவாடும் பாம்புகளின் விஷ அளவு தெரிந்துதான் தள்ளி நிற்கிறான்.. இப்படி யாருக்கோ யாரோ வைத்த வலையில் இவர்கள் புறம் வன்மம் திரும்பியதும் விதியே…

“ரகு தம்பி.. லட்சுமிம்மா”

“சொல்லுங்கம்மா”

“விஜி பாப்பா படிப்பு முடிக்குது”

“ஆமாம்..”

“கல்யாணம் பத்தி ..”

“செய்யலாம் .. அதுக்கு இப்போ அவசரம் இல்லம்மா..”

“பொண்ணுங்கள விவரம் தெரியும் முன் கட்டிக்கொடுத்துட்டா ஊணி வாழ்ந்துக்கோம் ப்பா.. என் வயசு அனுபவத்தில் சொல்றேன்..”

“இல்ல லட்சுமிமா அந்த காலம் போல இன்று இல்லை.. அவ இன்னும் MD படிக்கணும் .. பேர் வாங்கணும் .. அப்புறம் நிதானமா அவள் படிப்புக்கு ஏத்த மாதிரி இடம் பார்ப்போம்மா..”

“ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்கக்கூடாது.. செல்வா தம்பிக்கு ஆசை இருக்கும் போல.. “

“நீங்க சமைக்கும் வேலை மட்டும் பாருங்க ப்ளீஸ்.. எல்லாம் சரியா போய்ட்டு இருக்கு.. ஊகம் பேசி யார் மனதையும் கலைக்காதீங்க .. சரியா?”

சட்டென்று அழுத்தமா சொல்லி அவ்விடத்தை விட்டு நகர்ந்துட்டான் ரகு காரியக்காரனாய்..

லட்சுமிக்கு கண்ணீர் பொங்கி அதுபாட்டுக்கு கன்னத்தில் ஊற்றியது.. தள்ளி நிறுத்திட்டார் ரகு என்று .

ஏதேதோ ஏமாற்றங்கள் தோன்றினாலும்.. தன் அருகே இரவில் துணைக்கு படுக்கும் பாவாவிடம் வலியோடு இந்த நிகழ்வை பகிர….

தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் பாவா..

“அன்னைக்கே சொன்னேன்ல.. உனக்கு ஏன் இந்த முந்திரிகொட்டைத்தனம்!.. அவன் தங்கச்சி.. அவன் பிரண்ட்.. நமக்கு முன்னமே அவர்கள் ஒன்றாய் இருக்கிறார்கள்.. செல்வாவுக்கு விஜி தான் வேணும்ன்னா ரகு சட்டையை பிடிச்சு கேட்கட்டும்.. விஜிக்கு பிடித்தம் இருந்தால் அண்ணே .. எனக்கு செல்வா தான் வேணும்னு கேட்கட்டும்.. ரகுக்கு விஜியை பற்றி கனவுகள் அதிகம்.. நீ சம்பந்தமே இல்லாமல் இடையில் போய் கட்டிக்கொடு என்பது எவ்ளோ பெரிய முட்டாத்தனம்.. இதுல வேற லூசு போல அழுவுற.. உன் எல்லை எது புரிஞ்சிக்கோ லச்சு.. நாமளே அனாதைகள் .. ரகுவும் செல்வாவும் தான் நம்ம நல்லது கெட்டதை பார்க்கணும்.. நமக்கு தான் அவர்கள் தயை தேவை அவர்களுக்கு இல்ல.. ஆனால் இருவருமே ஒருநாளும் நம்மை வெளியில் போங்க நீங்க வேணாம் சொல்ல மாட்டார்கள்..

ஒவ்வொரு குணத்தில் இருந்தாலும் அன்பானவர்கள்.. உனக்கு அம்மா ஸ்தானம் தான்.. ஆனா நீ நிஜ அம்மா இல்ல லச்சு..”

எதார்த்தம் பேசிய பாவாவின் வார்த்தைகள் தவறை சுட்டி காட்டினாலும்.. அன்பால் உறவின் ஆலயத்துக்குள் சென்றிருந்தவருக்கு நிஜம் ஏற்றுக்கொள்ள முடியாது அழுகை தான் வந்தது..

“ச்சு.. அழாதேடி.. “

“கொஞ்ச நேரம் அழுதுக்கிறேன் மச்சான் என் அன்புக்காய்..”

“சரி அழு.. அதை பற்றி ஒன்னும் இல்ல.. வேலையை பார்த்துட்டே அழு.. தூக்கம் வருது..”

ரெட்டை அர்த்தத்தோடு பாவா லச்சுவின் தலையை அவர் இடுப்புக்கு கீழே தள்ள..

“தினமும் செய்யணுமா?”

“அப்படியே ருசி காட்டிட்ட.. போதை போல ஆகிருச்சு..” கையிலிருக்கும் மிக்ஸிங்யுடன் கூடிய சோமபானத்தை குடித்து முன் பல் காட்டி சிரித்தார். லச்சுவோடு சரசம்.. இருவருக்கும் பிடித்த இரவு நிகழ்வுகள்.. வாழ்வின் கடைசி படியில் நின்றுக்கொண்டு ருசிக்க துடிக்கும் தேன் துளிகள்…

“ஏய்.. பொண்ணு நீ யாரு? இங்கு என்ன வேலை?”

ஒல்லியா திரு திரு திருட்டு விழியோடு தங்கள் வீட்டின் முன் வாசல் வரை வந்து நின்ற இளம் பெண்ணை சந்தேகக் கண் கொண்டு விசாரித்தான் மைக்..

“இங்கு எங்க பாட்டி தான் இங்கு வீட்டு வேலை பார்க்கிறாங்க.. அவங்களுக்கு உடம்பு முடில.. என்னை அனுப்பிவிட்டாங்கண்ணா..”

“ஓ.. உனக்கு என்ன வயசு?” சொன்னாள்..

“பார்த்தால் தெரில..ம்ம்ம் உள்ளே போ .. லட்சுமி அம்மான்னு ஒருத்தவங்க இருப்பாங்க.. அவங்க வேலை சொல்வாங்க..”

சரிங்கண்ணா.. மண்டையை ஆட்டி

அவள் அவன் கை காட்டிய திசை வழி போக முனைய..

ஏய் .. நில்லு.. என்னை அண்ணா ன்னு கூப்பிட்டே பார்த்துக்கோ..

சரி ண்.. நா .. நாக்கை கடித்து.. அப்பாவியா முகம் பதட்டப்பட்டு..

சாரிங்க..

இங்கிலீஷ்லாம் பேசுற..

+2 படிச்சிருக்கேன்.. மேல படிக்க வைக்க வழியில்லை.. டைலரிங் பழகி வீட்டில் ஒருவருசமா ஏதோ பண்றேன்..

ஓ.. ரகு கிட்டே சொல்லி படிக்க வச்சா படிப்பியா? படிக்கும் ஆசை உண்டா?

ரொம்பவும் உண்டு.. ஆனா அம்மா விடாது.. சும்மா கட்டிக்க ஆள் தேடிட்டு இருக்கு.. போய்ட்டு வரேன் அங்கிள்..

இதுக்கு அண்ணனே தேவலாம் போல.. அங்கிள் லுக்லேயா இருக்கேன்.. வாய்ப்பே இல்ல..

ஏய் குட்டி.. உன் பேர் என்ன?

சுமதி..

சுமதி நான் அங்கிள் போலவா இருக்கேன்..

சுமதி இப்போ சலித்த பார்வை பார்த்தாள்.. உன் கிட்டேயே இன்னைக்கு பூரா பேசிட்டு இருக்கணுமா? என்பது போல..

புரிஞ்சிகிட்டவன்.. சரி உள்ளே போ. என்றுவிட்டான்..

அழகாத்தான் இருக்கா குட்டி.. கிள்ளு சதை இல்ல.. கோழி எப்படி இருந்தா என்ன? குழம்பு போதும்..

குச்சிக்கு சேலை காட்டினாலும் அதை பெண்ணாகவே பார்க்கும் வீக்னெஸ் கொண்ட மைக்குக்கு.. சுமதியும் அப்படித்தான் போகப்பொருளாய் தெரிந்தாள்.. உயிரா நினைக்கல..

ஆறு மாதங்களுக்கு பிறகு..

விஜியின் மருத்துவக்கல்லூரியில் நூற்றாண்டு விழா மற்றும் பவுண்டர் டே என்று ஒன்றாய் சேர்ந்து கோலாகல விழா எடுத்தனர்..

அன்றைய சிறப்பு விருந்தினனாக அசிம் ஸ்ரீவாத்சவ்..

ஆண் பெண் என்றும் பாராது அங்கு ஒரே மாதிரியாய் உற்சாக அலை எழும்ப.. தூரத்தில் தான் என்றாலும் அந்த கந்தர்வனின் அழகை அமெரிக்கையை வாத்தா இருந்ததை விட எடை ஏறி தங்க நிறத்தில் ஜொலித்தவனை ரெண்டு கண்ணையும் மூடாது விஜி சைட்டோ சைட்டு..

கிட்டே போய் பழகும் மேலே விழும் ஐடியா லாம் அவளுக்கு இல்ல.. அநாகரிகமாக வழிந்தவர்கள் .. கையில் கழுத்தில் கையெழுத்து வாங்கினவர்களையும் ஏன் எட்டி கன்னத்தில் முத்தமிட்டவர்களையுமே பஃன் மூடிலேயே பார்த்து சிறுகுழந்தையா ரசிச்சுட்டு தான் இருந்தாள்..

“என் ரசிகைகளோடு ஒரு மணிநேரம்” என்று அவனே வாலண்டியரா வந்து இப்படி சிக்கிங்..

ரெண்டு மூணு முறை அவன் பார்வை இவளிடம் பதிந்ததை கூட கூட்டத்தினரை பார்க்கும் போது இயல்புதானே குனிந்தும் கொண்டாள்.. வயது அடிவயிற்றில் கிளர்ச்சி பண்ணியது.. அவனின் பார்வை இவளுக்கு நாணத்தை விளைவித்தது என்றும் கூட வச்சுக்கலாம்..

ஒரே ஒரு டான்ஸ் .. ஆடுங்க அசீம்..

திரும்ப திரும்ப கத்தி பெண்கள் கூட்டம் ஆர்ப்பாட்டம் செய்ய..

இங்கிருப்போரில் ஒரு தேவதை என் கூட ஆடினால் நான் ஆடுறேன்..

யார் வரீங்க??

நான்… நான்.. நான்.. ஒற்றே இரைச்சல்.. ஒழுக்கம் ஒழுக்கம் என்று கூவும் கல்வி நிர்வாகம் கூட.. ஆண்களை வீட்டுக்கு அனுப்பிட்டு.. ஹாஸ்டல் பெண்கள் தானே என்று இன்று கண்டு கொள்ளவில்லை..

ஆசைப்பட்ட பெண்கள் பீர் ஒயின் என்று அருந்தி விழாவை சிறப்பிக்க..
விஜிக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. சாதா பட்சி அது..

தொங்கு தொங்கு ன்னு ஒற்றே ஆட்டம் அசீம் க்கு முன்னாடியே உச்சிக்கு பித்தம் ஏறிய பெண்கள்..

அளவாய் பெண் தேடும் அவனுக்கே அந்த பெண்களின் அட்ராசிடீஸ் பிடிக்கல.. கழுகின் குறி இரையே.. அது விஜியே.. காப்பிகலர் கண்கள் மலர்ந்து விஜியின் அருகில் சென்று நடனத்துக்கு அழைக்கும் விதமாய் கைகள் நீட்ட.. கூட்டம் முழுக்க விஜி விஜி விஜி விஜி என்று எக்காளமிட..

நாணத்தை குத்தகை எடுத்து .. தன் மாநிறம் சிவக்க வெட்கி நடுங்கி நின்றாள் அப்பூமகள்..

சக்தி மிக்க ஆண்களின் விளையாட்டில் காயப்பட போவது இவ் மெல்லிய மலரோ? காலம் சொல்லும் .. ம்ம்

அசீம் தன் விளையாட்டை ரகுவின் பலவீனப்புள்ளியில் இருந்து ஆரம்பித்துவிட்டான்..

ரகுவின் எதிர்வினை என்னவா இருக்கும்???!!!

 

 

.

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top