AV 7
காருக்கு அருகில் வந்த அசீம் முதலில் கிருமி நாசினி திரவத்தை எடுத்து கைகழுவினான்.. விஜியின் கை தொட்டு பட்டும் படாது சும்மா நடனம் என்ற பெயரில் நாலு அசைவு அசைந்து விட்டு கூட்டம் கூச்சலிட தேர்ந்த நடிகனாய் தன் தொழில் செய்தான்.
“வில் யூ மேரி மீ?” என்று கேட்டு
விஜியின் வட்டக்கண்ணை விரிய வைத்து.. அன்று கண்ட அதே காட்சியை நினைவு சேகரிப்பு இணையத்திலிருந்து திரும்ப கொண்டு வந்து மேட்ச் பண்ணி “அதே கண்ணு .. இவளே தான் அவள்” நிச்சயப்படுத்திக்கொண்டான் அசீம் எனும் பேரழகன்
முகம் குளுமையை ஊருக்கு காட்டினாலும் உள்ளில் எரிந்த வெப்பம் நாடி நரம்பெல்லாம் கொதிக்க வைத்தது.. கிட்டத்தட்ட தூங்கும் எரிமலையாய் நின்றான் எனலாம்
வேண்டாம்.. என்பது போல தானா தலையாட்டிய விஜியை..
“மாட்டேன் என்றால்
மடலேறுவேன் அன்பே”
கவிதையாய் புலம்பி அப்பெண்கள் நிறை கூட்டதுக்கே வெறியேற்ற..
எக்காள கூச்சல்.. “அசீம் வீ லவ் யூ” திரும்ப திரும்ப ரிதமாய் வெகு சப்தத்தோடு அவர்கள் பதில் தர.. திருப்தியானான்.
பெர்சனல் விசிட்டிங் கார்டை விஜி கையில் மறைவாய் திணித்து..
“கால் மீ டார்லிங்” வசிய பார்வை கண்ணை கண்ணோடு உண்டு சொல்லி..
“இவ்விரவை இனிய இரவாய் மாற்றிய… நான் என்றும் மதித்து ஆராதிக்ககூடிய அனைத்து தேவதைகளுக்கும் நன்றி நன்றி நன்றி.. “
முதுகை பாதி முன் பக்கம் தாழ்த்தி பசப்பு சம்பிரதாய வார்த்தைகள் பேசி .. பெரிய கும்பிடு போட்டு சுத்திக்கொண்ட தேனீக்களை ஜிம்பாய்ஸ் கொண்டு நாசூக்காய் விலக்கி காருக்கு வந்துதான் கைகழுவி எரிச்சலை தீர்த்துக்கொண்டான்..
விஜியின் புதுப்பெண்ணை ஒத்த நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு ஏதும் அந்த கல்நெஞ்சுக்காரனுக்கு அருகில் நெருங்கவில்லை..
“பொட்ட நாயீ கால் பண்ணும்” கேவலமாய் உதட்டை சுளித்தான்..
“என்னை கண்டு கொண்டானா?” முதல் சந்தேகம் விஜிக்கு.. ஆனால் எதிராளியின் முகமோ வார்த்தையோ ஏதும் வெளிப்படுத்தாது இருக்க.. புள்ளி அளவு கூட தெரிய வாய்ப்பில்லை.. இவளோ அலட்சியமா இருந்தாள்..
அசீம் சிறந்த நடிகன்.. பேச தேவைப்படும் போதில் மட்டும் உணர்ச்சிகளை வெளிக்காட்ட தயார்படுத்தப்பட்டவன் எனும் சாதாரண லாஜிக் மறந்துட்டா.. அவன் உணர்வுகளுக்கும் நல்ல விலைகள் கிடைக்கிறது அல்லவா?
இதெல்லாம் அறிய புரிய அவளும் நடிகையாக இருந்திருக்க வேண்டும்.. ஆனால் சாதாரண பெண் தானே.. நொடியில் உள்ளுணர்வு எச்சரித்ததை மறந்து.. ஹிப்னடிசத்துக்கு ஆட்பட்டவள் போன்று அவனை பற்றிய எண்ணங்களிலேயே கிடந்தாள்..
தன்னோடு நடம் ஆடிய அசீம்ய இன்னும் கூட நம்ப முடில.. தெய்வமே நேரில் வந்து வரம் கொடுத்த பூரித்த உணர்வு தான்.. அதன் சிலிர்ப்பு இன்னும் உடலை விட்டு போகாது அதன் அதிர்வுகளை சுகமாய் பரப்புவதும் பிடித்துதான் இருக்கு..
சும்மாவே படிக்க மாட்டாள்.. இப்பொழுது இவ்வுணர்வு வேற மனசை முழுக்க அபகரித்து அதே எண்ணம் தான்.. உள்ளங்கை சொர சொர ன்னு தான் இருக்கு..
ஆண்களுக்கு அப்படித்தான் இருக்கும் விஜி .. ஒரு மனம்
இல்ல இல்ல எக்ஸர்சைஸ் பண்ணா வெயிட் லிப்ட் தூக்கினால் அப்படி ஆகும் செல்லு கையும் இப்படித்தான் இருக்கும் விஜி .. மறு மனம்
தனக்குள் சிரித்துக்கொண்டாள்.. ஸ்டார் என்பதால் அநியாயத்துக்கு அவன் கை பஞ்சு கையா இருக்கணும் நினைப்பதெல்லாம் அதிகம் என்று..
கற்பனைகளுக்கு ஏது எல்லை….
அவன் எக்ஸுகியூட்டிவ் கார்ட்யே கலக்கியது.. கால் மீ சொன்னாலும் இவளுக்கு பேச தைரியம் இல்ல..
அவன் தொட்ட உள்ளங்கையே மணக்கும் போதில்.. இதே அட்வான்டேஜ் எடுத்து பேச விருப்பம் இல்லை.. இவளுக்கு அவன் அண்ணன் தந்திருப்பது பேசிக் மாடல் போன் மட்டுமே.. அதுவும் அரத பழசு..
இதுதான் நமக்கு சேப் அம்மு
ரகு சொன்னது விஜிக்கு வேதம்
ஓரளவு தங்கள் குழு நிலை விஜிக்கு கடலில் கால் நனைக்கும் அளவே அறிந்தது.. ஆழ கிரிமினல் விவரம் தெரியாது.. தெரிந்தாலும் அண்ணன் காட்டிய வழி தான்.. எதிர்த்து தர்க்கம் செய்யும் எண்ணமும் இல்லை.. வெரி சேப் மைண்ட் செட்
வில் யூ மேரி மீ??!!! கடைசியா கேட்ட அசீமின் வார்த்தைகள் இப்போ நினைச்சு பார்த்து.. சரியான காமெடி.. குலுங்கி சிரித்தாள் லூசு போல.. அதுவும் இனித்தது.. இளைய மனது அந்த கனவில் கூட நடவா நினைவை எண்ணி.. தோழிகளின் கேலிகள் இந்தம்மாக்கு முடி சூடா இளவரசி பிரமை தர ஓசி புகழ் சந்தோசம் அது தனி கணக்கு..
லூசுத்தனத்தையெல்லாம் காலி பண்ணிட்டு புதுசா நாலாம் நாள் காலேஜுக்கு இயல்பு மாணவியா விஜி போயாச்சு.. அசீமை மறந்தாச்சு
நாலுநாள் காத்திருப்பு வெறி ஏற்றியது அசீமை.. எப்போ சிக்கும் மீன் என்று செல்லை பார்த்துட்டே இருந்தான்.. பதில் வரவேயில்லை..
தன் அழகு புகழ் எல்லாம் மாயை தானா? முதன் முதலா ஒரு பெண்ணை பேசு ன்னு நம்பர் கொடுத்துட்டு வந்துருக்கேன் .. அவள் கொஞ்சம் கூட மதிக்கல.. தன்னை குறித்த கர்வம் மற்றும் அதீத தன்னம்பிக்கைக்கு முத அடி..
அவளும் கொள்ளை கூட்டத்தை சேர்ந்தவள் தானே உஷார் ஆகி இருப்பாள்.. வேற ஒருத்தின்னா இந்நேரம் மடியில் படுத்துக்கிடப்பா தாடை இறுகினான் அசீம்.. விட மாட்டேன்டி கருவாச்சி.. அழகிய பாம்பு கண்ணாடியா மினுங்கியது..
அவன் பெர்சனல் செல் ஒலியிசைக்க… திரும்ப ஒரு ஏமாற்றம்.. இது அவனுடன் எப்பவும் கோப்பை ஏந்தும் நண்பன் ..
என்ன அசி .. வர வர திருந்திட்டு வர மாதிரி இருக்கு.. மெடிக்கல் காலேஜுக்கு பெரிய தொகை கொடுத்திருக்கப்போல.. மீடியால கொண்டாடுறாங்க..
நாக்கை கடித்தான்.. அச்சோ இதில் தான் அந்த காங் உசாராகி இருக்கும்.. பழமையான காலேஜ் இப்படிலாம் ஏதாச்சும் தந்து தான் உள்ளேயே போவ முடிந்தது..
நான் ரொம்ப பிசி சரண்.. அப்புறம் கூப்பிடுறேன்..
வச்சிட்டு அவனுக்கு கிடைத்த அவள் நம்பர் போட.. உபயோகத்தில் இல்லை என்றது.. பைத்தியம் போல கப கப ன்னு சிரிச்சான்
நல்லா இருக்கு இந்த கேம்… வெரி இன்ட்ரஸ்டிங்.. யெஸ்..
நான் அசர மாட்டேன் வரேன்டி நேரிலேயே.. வீட்டிலேயே ரசனையாக அமைக்கப்பட்டிருந்த பார் ரூமில் 300 ஆண்டுகாலம் பழமையான ஒயின் உண்டு.. அதை இன்று வழக்கத்திற்கு மாறாக எடுத்து சுவைத்தான்.. சொட்டு சொட்டாக.. ஒவ்வொரு துளியிலும் விஜியை என்ன செய்யலாம் நினைப்பே… தன் பிஏ விடம் நாளைய அப்பாயின்மென்ட் முழுக்க கேன்சல் செய்துட்டான்.. எங்கே போறேன் என்று கூட சொல்லல.. இனி எல்லாம் ரகசியம் தான்
மறுநாள் விஜியின் மருத்துவ மனை பயிற்சி நேரத்தில் தாடி வச்சு .. தொப்பி போட்டு லேசா கருப்பு மேக்கப் போட்டு .. விஜியின் எதிரில் நின்று..
“ஏன் போன் போடல விஜி” கேட்க..
சட்டுனு அடையாளம் அடையாளம் தெரியாது.. விஜி மருண்டு விழிக்க..
“நான் அசீம் வாத்சவ்.. பதில் சொல்லு”
இப்போ நார்மல் ஆனவள்..
என் மாமா பையன் கூட சுத்திட்டு இருந்தேன் சார் நிச்சயம் ஆகிருச்சு
அதுக்கும் போனுக்கும் என்ன சம்பந்தம்?
அவரு விடமாட்டாருங்க.. சாரிங்க
ஜஸ்ட் பிரன்ட்ஸ்யா இருப்போம் கே
வேண்டாம்ங்க.. நீங்க வானம் போல நிலா நட்சத்திரம் போல அண்ணார்ந்து பார்த்து பிரமிப்பா ரசிக்க வேண்டியவங்க.. உங்க கூட உறவு எங்களை போலவங்களுக்கு செட் ஆகாதுங்க.. ப்ளீஸ்.. வரேங்க..
திரும்பியும் பாராது மிக தெளிவாய் பேசி விலக்கி சென்றவளை ..
“நாடகக்காரி” சபித்தான் நடிகன்