அணங்கு -1 & 2
தார் அமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊர்ரதம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமிஅந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே…
என அபிராமி அந்தாதியில் வரும் கணபதி காப்பை பழம் பெரும் பாடகி ஒருவர் தன் கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்தார்… எங்கேயா…?? எல்லாம் அந்த பழைய ரெட்ரோ ஸ்டைல் ரேடியோவில் தான் அதன் உபயத்தால் அவரது காந்த குரல் அந்த தெரு முழுவதும் முழங்கி எதிரொலித்தது…
காலத்திற்கு ஏற்ப மாறி வரும் சிங்காரச் சென்னையில் புதியதாக முளைத்த கான்கிரீட் மரங்களான அப்பார்ட்மெண்டு வீடுகளுக்கு மத்தியில் பழைய காலத்து ஒரு மச்சி வீடு பல ஆண்டு காலங்களாக எத்தனையோ கடுமையான வெயில் மழை புயல் சுனாமி போன்ற பல் வேறு பேரிடர்களையும் தாங்கி நின்றாலும் அதன் தோற்றம் என்னவோ சிதிலமடைந்து பெயர்ந்து விழும் பூசல்களும் பாசிப்படிந்த கரையும் தான் என்றாலும்… சலைக்காமல் இன்னும் எத்தனை பேரிடர் வந்தாலும் தாங்குவேன் என்பது போல் கம்பீரமாக நின்றது அந்த “ரங்கா விலாஸ்…!” அதன் நான்கு சுவர்ககளையும் தனக்குள் வைத்து பொத்தி பொதிந்து பழைய துருப் பிடித்த அந்த இரும்பு கேட்டினை தொடர்ந்து உள்ளே செல்வோம்…
“ கம கம “ என சாம்பிராணியின் நறுமணம் நம்மை வாசலிலே வரவேற்க… அந்த சுகந்தமான நறுமணத்தைக் சுவாசித்தப்படி கடந்து சென்றால் புகை மூட்டம் படிந்த உள்ளறையை தாண்டி பூஜை அறையில் இருந்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் கணீர் கணீர் என்று ஒலிக்க அதனைத் தொடர்ந்து பூஜை மணியோசை ஒலிக்க விட்டப்படி கையில் ஏந்தியே தீபாராதனை தட்டுடன் வெளியே வந்தார் ஒரு பேரிளம் பெண்…அவர் அங்கயற்கண்ணி மூன்று பெண் பிள்ளைகளின் தாய்… அன்பானவர் அடக்கமானவர் அமைதியானவர் இப்படி எல்லாம் இருக்க அவருக்கும் ஆசை தான் ஆனால் விட்டால் தானே யாரா…?? வேற யாரு அவர் பெற்ற மூணு இம்சை குட்டிகள் தான்… என்ன இம்சைகளா ஆமாம் அழகான இம்சைகள் அப்படின்னு சொல்ல சொன்னது இந்த ஹீரோ பயபுள்ளங்கள் இங்க தான் நான் இல்ல சரி வாங்க அந்த இம்சைகளை முறையே உங்களுக்கு இன்ட்ரோ பண்ணி விடுறேன்…
பூஜை முடித்துக் கொண்ட அங்கயற்கண்ணி அடுத்தடுத்த வேளையில் மூழ்கி போனார் அவரது கைகள் தானே வேலை செய்வதற்கு ஏற்ப அவரது வாயும் தானே முணுமுணுத்துக் கொண்டே இருந்தது… அவரது வாய் இன்னும் கடவுளை நினைத்து பாராயணம் செய்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு…
எல்லாம் அவர் பெத்த செல்வ சீமாட்டிகளை தான் வைது( திட்டி ) கொண்டு இருந்தது…
“ஏழு கழுதை வயசு ஆச்சு ஒருத்தியாவது காலையில எழுந்து கூடமாட வேலை செய்றாளுங்களா பாரு…இந்த நாற்பது வயசுலயும் எல்லா வேலையும் நானே பார்க்கணும்னு என் தலையில் எழுதி… இருக்க இருக்க எனக்கு என்ன வயசு குறைஞ்சுகிட்டேவா போகுது… இப்படியே திரியுங்க நாளைக்கு போற இடத்துல மாமியாகாரியம் நாத்தனாகாரியம் இடிக்கும் போது இந்த அம்மாவோட அருமை தெரியும்…!!” என வழக்கமாக பாடும் பல்லவியை தான் இன்றும் பாடினார்…( யுனிவர்சல் அம்மாக்களின் ஒற்றே புலம்பல்)
” எம்மோய் அதென்னமா எங்கள திட்ற சாக்ல அந்நியாயத்துக்கு உன் வயச குறைச்சுக்கிட்ட … உனக்கு நாற்பது வயசு தாண்டி நாலு வருஷம் மேல ஆகுது… இப்படி பொய் அந்நியத்துக்கு ரீடர்ஸ் கிட்ட சொல்லாதம்மா… அப்புறம் சாமி கண்ணை குத்திடும்…? “என தன் அன்னையை வம்பு இழுத்தபடி கையில் புக்குடன் வந்தாள் அவ்வீட்டின் கடைக்குட்டி இசை… இம்சை நம்பர் மூணு…
“ஏன்டி எனக்கு என்ன குறைச்சல்… நீ எல்லாம் என்னடி அழகு நான் எல்லாம் உன் வயசு இருக்கும் போது வெளியே தெருவுக்கு போனா சும்மாவே நாலு பேர் என் பின்னாடி சுத்துவாங்க இப்போ மட்டும் என்ன குறைச்சல் உன்னை மாதிரி நானும் சுடிதார் ஜீன்ஸ் மாட்டின்டு வந்தேன் வை இந்த மெட்ராஸே என் பின்னாடி சுத்தும்…!” என்றவருக்கு தன் வயதை பற்றி சின்னவள் சொன்னதும் ரோஷம் வந்துவிட்டது… அவர்களைப் பொறுத்தவரை என்றும் பதினாறு சோ பண்ணாதே கோளாறு தான்…
தன்னை சோம்பேறி என்றதும் இளையவளுக்கு சுறுசுறுவென்று ரோஷம் பொத்து கொண்டு வந்து விட்டது… “ அம்மா இப்படி அபண்டாமா பேசாதமா நான் காலையிலே நாலு மணிக்கு எழுந்து படிக்க உட்கார்ந்துட்டேன் இவ்வளவு நேரமா படிச்சிட்டு இதோ இப்போ காலேஜ் போக கிளம்பிட்டு இருக்கேன்… அது என்னம்மா நான் என்ன வேலை செஞ்சாலும் அது ஏன் அப்படி செய்யற இதையே ஏன் இப்படி செய்யற கேட்டு வம்பிழுக்க போற அதான் எதுக்கு வேலைய செஞ்சிட்டு திட்டு வாங்கணும் செய்யாமலே திட்டு வாங்கிக்கலாம் முடிவு பண்ணிட்டேன்… ம்ம்ம் அப்புறம் என்னமோ சொன்னியே என்ன ஹான்… ஆமாம் உன்னை யார்மா சுடிதார் ஜீன்ஸ் போட வேணாம்னு சொன்னது… இந்தப் பாடவதியான புடவையை கட்டுறத விட்டுட்டு அப்போவே இந்த சுடிதார் மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டு பளபளன்னு சுத்தி வந்து இருந்தா உன்ற புருஷன் அதாவது எங்க அப்பா மிஸ்டர் ரங்கசாமி ஓடிப் போயிருக்க மாட்டார்ல்ல…!!” என கிண்டல் பண்ணுவதாக நினைத்து அவள் அறியாமலே அவள் அன்னையை ஆழமாக காயப்படுத்தி விட்டாள் இசை…
“ அடி கொழுப்பெடுத்த கழுதை நீ ஏன்டி பேசமாட்ட நீங்க எல்லாம் விவரம் தெரியாத சின்ன பிள்ளையா இருந்தப்போ உங்களையெல்லாம் விட்டுட்டு ஓடிப்போனாரே உங்கப்பன் அவர சொல்லணும்.. யாரு துணையும் இல்லாம ஒத்த மனுஷியா நின்னு உங்க அப்பா வாங்கி வச்ச கடன அடைக்கனும்னு உங்க மூணு பேத்தையும் கெளரவமா வளர்க்கணும் ஓடி ஓடி உழைச்சேன்ல அதுக்கு நல்ல பாடத்தை சொல்லி கொடுத்துட்டடி எம்மா… அன்னைக்கு நான் மட்டும் மத்தவங்க சொன்ன மாதிரி எக்கேட கெட்டுப் போகட்டும்னு விட்டு போய் இருந்தேன்னே அப்போ தெரிஞ்சி இருக்கும் உங்க மூணு பேரோட நிலைமை… ஆமாடி நீ சொன்ன மாதிரி எனக்கு என் புருஷனை கட்டி வைக்க தெரியல தான் இப்படி ஊர்ப் பூராவும் கடன் வாங்கி வச்சிருக்க மனுஷன நம்பி எப்படி மூணு பொம்பள பிள்ளை வளர்க்க போறேனோ என்ற கவலையிலே நான் என்னை கவனிக்காம விட்டுட்டேன்… அதனால தான் இப்போ இப்படி சின்ன பொடிசுங்க கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டி இருக்கு… ஐயோ கடவுளே இன்னும் என்ன என்னவெல்லம் கேக்கேனும் இருக்கோ தெரியலையேஓஓஓஓ…என ஆதங்கத்தில் ஆரம்பித்து தன் மனகுமுறல் மொத்தத்தையும் அழகை ஊடே கொட்டினார் அங்கயற்கண்ணி…
தன் தாய் அழுவதை கண்ட இசை அதிர்ந்து போனால்…
இதுதான் இசை தப்பு சரி என்று எதையும் யோசிக்காது… தன் மனதில் தோன்றியதை பட் என்று உடைத்து பேசி விடுவாள்… அதற்காக கொடுமைக்காரி கல்நெஞ்சக்காரி என்றில்லை…பேசி விட்ட பிறகு இப்பொழுது வருத்த படுவதையே வாடிக்கையாக வைத்து இருப்பவள் சுருங்க சொல்ல போனாள் வாய் துடுக்கு அவ்வளவே…
ஆனால் அதற்காக எல்லா நேரமும் எல்லா இடத்திலும் பணிந்து போகும் ரகம் இல்லை… தப்பு என்றால் தப்பு ஒப்புக்கொள்ள கூடியவள்… சரி என்றால் அது யாராக இருந்தாலும் வளைந்து கொடுக்க மாட்டாள்… நேர்மையானவள் கொஞ்சம் முன் கோபி ஒருவரிடம் அன்பு வைத்து விட்டால் கண்மூடித்தனமான அன்பை கொட்டுவாள்…
இதோ தன் அன்னையை புண் படுத்தியது அவள் வார்த்தை தான் என்றதுமே…
அம்மா அழாத அம்மா நான் ஒரு லூசு மா அழாத மா என்னை வேணுனா அடிச்சிக்கோ மா நீ அழாத மா ப்ளீஸ் மா எனஅவள் பேசிய வார்த்தைக்கு பல நூறு அடிகள் அவள் வாய்க்கு அவளே கொடுத்து கொண்டாள்… ஆனால் அவளை மன்னிக்க வேண்டியது அவள் அன்னை அன்றோ அவருக்கு அவ்வளவு எளிதில் அவளை மன்னிக்கும் எண்ணம் இல்லை போலும்… இசையின் கையை தட்டி விட்டு வேறுபுறம் திரும்பி உட்கார்ந்த தன் புடவை முந்தானையில் முகத்தை புதைத்து அல்லவா அழுது கொண்டிருந்தார்…
அன்னையின் அலட்சியம் அவளை வெகுவாக பாதிக்க கண்ணில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் ஊற்றியது இசைக்கு…
அம்மா… என மந்திர உச்சாடனம் போல் அதையே சொல்லி கொண்டு இருக்க அப்பொழுதே கையில் காபி டம்பிளர்களுடன் வந்தால் வேணி அவ்வீட்டின் மூத்தவள் வேணி இம்சை நம்பர் ஒன்னு… இம்சை வகைகளில் இவள் அமைதியான இம்சை… என்ன அமைதியான இம்சைனா கேக்குறீங்க…
அட ஆமாங்க அம்மணி ரொம்ப அமைதியோ அமைதி டைப்… அவளின் இந்த அமைதிய
யே பலருக்கும் அனுமதியாகி விடுகின்றன… அதனால் பல அல்லலும் இன்னல்களும் அவளையே வந்தடைகின்றன… இருப்பினும் அத்தனையையும் அமைதியான புன்னகையுடனும் சில நேரம் வலிகளுடனும் கடந்து விடுகிறாள்…இதுவே இவளது இயல்பு…
என்ன இசை இது அம்மாவை இப்படி காலையிலே அழ வச்சிட்ட… என இளையவளிடம் கேட்க…
அக்கா அக்கா நான் என சின்னவள் திணறி சாரி ப்ளீஸ் க்கா எப்படியாவது சரி பண்ணு தன் காதுகளை பிடித்து கெஞ்சியப்படி சமீஞ்ச்சை செய்ய…உதவிக்கு வந்தாள் மூத்தவள்…
தன் அன்னையருகே மண்டியிட்டு அமர்ந்து அவரது கைகளை தனக்குள் பொதிந்து கொண்டவள்… “அம்மா இங்க பாருமா எதுக்கு அழற எங்களுக்கு தெரியாதா எங்க அம்மாவை பற்றி… எங்களுக்கும் தெரியும் மா ஆம்பளை துணை இல்லாம எங்க மூணு பேரையும் வளர்க்க நீ எவ்வளவு கஷ்ட பட்டேன்னு… உன்னை நினைச்சா எங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா…நீ என் அழகு அம்மா இல்லை இப்படி அழுதா நல்லாவா இருக்கு…??” என்க
“ஆமாம் மா நீ அழுதா நல்லாவே இல்லை…!!” என இசை ஒத்து ஊத…
“நீ பேசாத டீ…?? “என அவள் மீது கோவத்தை அங்கயற்கண்ணி காட்ட..
“அவளை விடு மா சின்ன பொண்ணு உன் அழகு மேல அவளுக்கு பொறாமை… வேணி
நிஜமாவாடி…?? அங்கயற்கண்ணி
“பின்ன இல்லையா மா உன்னோட இந்த அழகு தான எங்க மூணு பேர்க்கும் கிடைச்சு இருக்கு… இல்லனா நாங்கள் எப்படி இவ்ளோ அழகா இருப்போம்… என்ன மா என்னை நம்பலையா நீ மட்டும் சுடிதார் போட்டு எங்க கூட வெளிய வந்தேன்னு வை யாரு உங்க அக்காவான்னு கேப்பாங்க பாரேன்… அப்படி தான இசை என சின்னவளுக்கு ஜாடை காட்ட…
அப்படியே தான் அக்கா… அவ்வளவு ஏன்மா நீ மட்டும் ஜீன்ஸ் போட்டு என் கூட எங்க காலேஜ்க்கு வந்தேன்னு வையென் ஃப்ர்ஸ்ட் இயரான்னு கேப்பாங்க இல்லை இல்லை எந்த ஸ்கூல்ன்னு கேப்பாங்க பாரேன் என புரிந்து ஒரு கூடை ம்ஹும் ஒரு ஐஸ் மலையே அன்னை மீது வைத்தால் அறிவாளி குட்டி இசை…
“ச்சீ ச்சீ போங்கடி காலையிலே பொய் பொய்யா சொல்லிக்கிட்டு… போங்க நேரம் ஆகிடுச்சு பாருங்க கிளம்பி அவங்க வேலையை போய் பாருங்க…!!”என மகள்கள் கூறியது அதிக படி என்றாலும் உள்ளுக்குள் உவகையாக தான் இருந்தது அந்த இளம் தாய்க்கு…
“ஐ அக்கா அம்மா கண்டுப்படிச்சிட்டாங்க அறிவாளி அம்மா என அன்னை கட்டி அணைத்து முத்தமிட்டு அவர் அதற்கு எதிர்வினை செயலாற்றும் முன்…அங்கிருந்து ஓடி சென்று விட்டாள் குளிக்க… நின்றாள் தான் அடி நிச்சயம் அன்றோ…
கழுதை வரட்டும் வச்சிக்கிறேன்…என மகள் தன் கண்ணத்தில் படுத்திய எச்சிலை துடைத்தப்படி முத்தவளிடம் வர…
அம்மா சோறு பொங்கிட்டேன்… நான் மதியத்துக்கு தயிர் சாதம் எடுத்துக்கிட்டேன் காலம்பறைக்கு இட்லியும் தொட்டுக்க தக்காளி சட்னியும் பண்ணிட்டேன்…நீ போய் மிச்ச வேலைய பார்த்துக்கோ எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆகிடுச்சு நான் கிளம்புறேன்…!!” என்று பரபரப்புடன் கிளம்பி சென்றால் வேணி…
சரி நீ டிபன் சாப்டியாமா என அங்கயற்கண்ணி கேட்டதற்கு நின்று பதில் சொல்ல நேரமில்லாதவள் ஓடி கொண்டே ஆச்சுமா பதில் அளித்தாள்… நின்று பதில் சொன்னால் காலையில் மட்டுமே வரும் மகளிர் ஸ்பெஷல் பேருந்தை அவள் விட கூடும் அதன் வரும் சாதாரண பேருந்தில் ஏறி கூட்ட நெரிசலில் பெண்களை இடிப்பதற்கென்று ஏறும் கும்பலிடம் சிக்கி சித்திரவதை அனுபவிக்க விருப்பம் இல்லை… அதனாலே இந்த ஓட்டம்…
பேருந்தை பிடிக்க ஓடும் தன் மூத்த மகளை பார்த்த அங்கயற்கண்ணிக்கு ஒரு பக்கம் பெருமையாகவும் மறுபக்கம் வருத்தமாகவும் இருந்தது… கணவர் விட்டு சென்ற பிறகு திக்கற்ற நின்றவர் கஷ்டப்பட்டு வேலைக்கு செல்ல வீட்டு பொறுப்பை ஏற்றாள்… வளர்ந்த படித்து வேலைக்கு சென்ற பிறகு குடும்ப பொறுப்பை சுமக்கிறாள்… இளம் வயதிலேயே பொறுமையும் பொறுப்பும் உள்ள மகளை நினைத்து பெருமை பட்ட போதிலும்… வலியோ வேதனையோ எதுவாக இருந்தாலும் சரி அதை வெளி காட்டி கொள்ளும் ரகம் அவள் அல்லவே… அடித்தால் கூட பல்லை கடித்து பொறுத்து போகும் மகள் அவள்…
கடவுளே இந்த பிள்ளைக்கு ஒரு நல்ல வழிய காட்டுப்பா என மனமாற கடவுளை வேண்டி கொண்டார் அந்த ஒற்றை தாய்… ( வழி தான நல்லா காட்டு காட்டுனு காட்டுவார்…ஹிஹி ஆமா உள் குத்தே தான்… )
“அம்மா இன்னிக்கும் தயிர் சாதமும் எனக்கு வேணாம்… நான் இட்லியே மதியத்துக்கும் எடுத்துக்குறேன்…!!” என்ற படி தயாராகி வந்தாள் சின்னவள்…
சென்னையில் வான் புகழ் பெயர் பெற்ற நடிகர் ஒருவரின் கல்லூரியில் கணிதத்தில் முதுகலையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாள்… பிறந்ததில் இருந்தே தந்தை முகம் காணாதவள்… மூன்றாவதாகவும் பெண்பிள்ளை பிறந்ததால் ஓடிவிட்டார் என உறவுகள் எல்லாம் அவளை கரித்துக் கொட்டும் பொழுது… நான் சாதித்துக் காட்டுவேன் என சபதம் ஏற்றவள்… தன்னை படிக்க வைக்க அன்னையும் தமக்கையும் படும் கஷ்டத்தை உணர்ந்து வாழ்பவள்…அன்னைக்கு கஷ்டம் கொடுக்காமல் பகுதி நேர வேலை பார்த்து தன் படிப்பையும் பார்த்துக் கொண்டு இருப்பவள் யூனிவர்சிட்டியின் கோல்டு மெடலிஸ்ட் வாங்கியவளும் ஆவாள்… இவளிடம் வாலாட்டா வந்தால் முழுவதும் வெட்டி விடுவாள் அட வாலை தான் பா நான் சொன்னேன்… ஹிஹி
ஆக மொத்தத்தில் செயலில் படுச்சுட்டி படிப்பில் படுக்கெட்டி…அது தான் சின்ன குட்டி என அங்கயற்கண்ணி எண்ணும் போதே…
தட்டில் இருந்து இட்லியை அவசர அவசரமாக பிட்டு தின்னும் மகளை பார்த்தவர்…
“நேரமே கிளம்பி இருந்தால் நீங்கள் நிதானமா சாப்பிட்டு போகலாம் இல்ல… என்னவோ சொல்லுவாங்களே நாய்க்கு ஒரு வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லைனு… அது மாதிரி இருக்கு உன் கதை… வீட்ல உருப்புடியா ஒரு வேலையும் செய்ய மாட்டாளாம் காலேஜுக்கு நானும் பரபரப்பாக கிளம்புறேன்னு கடைசி நேரத்தில் இரண்டு இட்லியை பிச்சு போட்டு ஒரு இட்லி வச்சிட்டு போவா கேட்ட நேரம் ஆயிடுச்சு அதுக்கு இதுன்னு வாய் அளப்பா…!!” என்னை திட்டிக் கொண்டே இருந்தாலும் சாப்பிடும் தன் மகளுக்கு தண்ணீர் வைக்க தவரவில்லை அந்த அன்பான தாய்…
“அம்மா தாயே போதும் திட்டி திட்டி நீ இன்னைக்கு என் கோட்டாவை முடிச்சிட்ட… அதுல ஏதாவது இன்னும் மிச்சம் இருந்தா உன் அருமை ரெண்டாவது பொண்ணுகிட்டே கொட்டு… ஏன்னா அந்த எருமை தான் இன்னும் எந்திரிக்கவே இல்லை …!!” என கனக்கச்சிதமாக அன்னையிடம் தன் இரண்டாவது சகோதரியை கோர்த்துவிட்டு தன் கடமையை ஆற்றோ ஆற்று என்று ஆற்றினால் சின்னவள்…
“என்னது இன்னும் இரண்டாவது எருமை எந்திரிக்கவே இல்லையா… அடியே…நடு எருமை… இவள …!!” என வேகமாக படுக்கை அறை உள்ளே சென்றவர்…
“எருமை என்று புனை பெயரோடு அழைக்கும் போதே தெரிய வேணாம் இவள்தான் நம் கதையின் கதாஆஆஆஆநாயக்க்க்க்க்கி என்று…
அவளை பற்றி சொல்லணும்னா… ஹாஆஆ வாய் வலிக்குது மக்களே… ஹீரோயின் பில்டப் கொடுக்கற அளவுக்கு ஒர்த் இல்லை…சிம்ப்ளி டெல்லிங் எதோ போனா போகுதேன்னு செலக்ட் பண்ணிட்டேன் அம்புட்டு தான் வேற ஒண்ணும் இல்லை…
“ எதே…போனா போகுதுனு செலக்ட் பண்ணியா…?? பண்ண ஹீரோயின் ரோலை நீதான் பண்ணனும் கெஞ்சிட்டு இப்போ நான் ஒர்த் இல்லனா சொல்ற எடு அந்த கல்ல…இன்னைக்கு உன் மண்டை உடைக்காமல் விடமாட்டேன்…!!”
ஹீரோயின் கொலைவெறியுடன் ரைட்டரை துரத்துவதால் அடுத்து எபில மீட் பண்றேன் மக்களே…யது
பை தி பை மக்களே நான் தான் இந்த கதைக்கு ஹீரோயின் என் பேரு…ம்ம்ம்ம்ம் என் பேரு ம்ம்ம்ம்…
இங்க என்ன பேச்சு வேண்டி கிடக்கு நான் தான் அடுத்த எபில சொல்றேன் சொல்லிட்டேன்ல ஒழுங்கு மரியாதையா என்னை துரத்து…வா…
நெஸ்ட் மீட் பண்றேன்…