ATM Tamil Romantic Novels

கள்ளழகனின் அழகி

மாங்குளம் விக்ரமனின் சொந்த ஊர் விக்ரமனின் தாய் தந்தை அவனது 15 வது வயதில் வெளியூரில் ஒரு கல்யாணத்திற்கு சென்று வரும்பொழுது விபத்து ஏற்பட்டு அந்த இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். பெற்றோர்களின் திடீர் இழப்பால் கலங்கி நின்ற விக்கிரமன் தானே சுயம்புவாய் தெளிவு பெற்று தங்கைகளுக்காக அதிலிருந்து வெளிவந்தான். 

 

விக்ரமனின் தந்தை இருந்தவரை கடை நன்றாக போய்க் கொண்டிருந்ததால்  அதையே தானும் எடுத்து நடத்திட முடிவு செய்தான். சில நல்ல உள்ளம் கொண்ட சொந்தக்காரர்களின் தயவால் தொழிலைப் பற்றி அறிந்துகொண்டு அவனையும் மெருகேற்றி தங்கைகளையும் கரை சேர்த்தான் பத்தாவது மட்டுமே படித்த விக்ரமன் அதற்குப் பிறகு கரஸ்பாண்டில் படித்து எம்.காம் பட்டம் பெற்றான் பெயருக்கு மட்டுமே பட்டப்படிப்பு மற்றபடி அவன் தந்தை நடத்தி வந்த கடையை கையில் எடுத்து அதில் இந்த காலத்திற்குரிய முறையை புகுத்தி வெற்றியும் பெற்றான். அதில் வந்த லாபத்தில் மதுரையில் ஒரு இடம் வாங்கி போட்டு அதில் தான் இப்பொழுது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஆரம்பித்து இருந்தான்.

 

அவனது முதல் தங்கை ராகினி பக்கத்தில் உள்ள விவசாய குடும்பத்திற்கு மருமகள் அவளுக்கு ஒன்பது வயதில் மகள் மற்றும் ஏழு வயதில் மகன் உள்ளனர். இரண்டாமாவள் சந்தியா சரவணன் மனைவி அவள் விக்ரமன் ஊரிலேயே பால்வாடி  டீச்சராக பணிபுரிகிறாள் அவளுக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை கடைக்குட்டி கனிமொழி அவள் பிஎஸ்சி ஐடி முடித்து பெங்களூரில் உள்ள கம்பெனியில் வேலை செய்கிறாள் கூட வேலை செய்த ரகுவை காதலித்து அண்ணனின் சம்மத்துடன் கல்யாணம் செய்து கொண்டிருந்தாள். அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை. 

 

 

மூத்தவள் ராகினிக்கு படிப்பு ஏறாத காரணத்தினால் அவள் பள்ளி படிப்பு முடிந்ததும் அவளை தையல் படிப்பில் சேர்த்து அவளை அதில் முன்னேற செய்திருந்தான் . இப்படி தங்கைகள் மூன்று பேரையும் அவர்கள் சொந்தக் காலையில் நிக்க வைக்க அவனுடைய காலம் போனதில் அவனுக்கு சிறு வருத்தம் இருந்தாலும் தங்கைகள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்தது அவனுக்கும் மகிழ்ச்சியே.

 

 இவற்றையெல்லாம் வண்டியில் வரும் பொழுது  அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று மலர் மொழியிடம் கூறியிருந்தான். இவற்றையெல்லாம் கேட்ட மலர் மொழிக்கு அவனின் மீதான மதிப்பு இன்னும் கூடி இருந்தது. 

 

அவள் அமைதியாக வரவும் விக்ரமன் திரும்பி அவளைப் பார்த்து என்ன மூன்று பேரை எப்படி சமாளிக்கிறது என்று யோசித்துக்கொண்டு வருகிறாயா என்றவுடன் 

 

எனக்கா எனக்கென்ன பயம் அதுதான் நீங்க இருக்கீங்களே என்று கூற  அவனுக்கும்  தன் மீதான நம்பிக்கையை கண்டு ஆச்சரியப்பட்டான் அதை அவளிடமே கேட்க எப்போது பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நீங்க நினைச்சீங்களோ அப்பவே நீங்க பெண்களை மதிக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன் அப்புறம் எனக்கு என்ன கவலை என்று கூறி சிரிக்க  

 

விக்கிரமனோ இதையெல்லாம் நல்லா பேசு ஆனா வண்டியில நீ உட்கார்ந்திருக்கிறத பார்த்தா என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கிறதா தெரியல உனக்கு எனக்கு இடையில  ஒரு லாரியை ஓட்டலாம் போல இருக்குது   என்று கூற அவள் வெட்கத்தில் முகம் சிவந்தால்

அதே நேரம் அவன் காலை சிற்றுண்டிக்காக ஒரு சிறு ஹோட்டல் முன்பு நிறுத்தி இருந்தான். இருவரும் இறங்கி உள்ளே சென்று அமர்ந்தனர். மலர் மொழி இப்படி எல்லாம் வெளியே வராத காரணத்தினால் ஹோட்டலை ஆச்சரியமாக சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நல்லா சுத்தி பாத்துட்டின்னா திரும்பி இந்த மாமனையும் கொஞ்சம் பாக்கலாம் என்று விக்ரமன் சிரிக்க அந்த சிரிப்பு இன்னும் அவனை அழகாக காட்ட அவனை வைத்து கண் வாங்காமல் பார்த்திருந்தால் அதில் அவனுக்குமே வெட்கம் வர அதை மறைக்க தன் பின்னந்தலையை கைகளால் கோதிக் கொண்டே அவளைப் பார்த்து மலரு வேணா ஃபர்ஸ்ட் நைட்டை பர்ஸ்ட் பகலா இங்கே ஹோட்டல்ல வச்சுக்கலாமா மாமனை இப்படி பார்த்து வச்சா மாமனுக்கும் கண்ட்ரோல் மிஸ் ஆகுது இல்ல  என்று அவன் கூறியதும் 

அவனிடமிருந்து அவசர அவசரமாக அவளது பார்வையை திருப்பினாள். அடியே மலரு இப்படியா பார்த்து வெப்ப அவங்க என்ன நினைப்பாங்க என்று மனதில் புலம்பியடி வந்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள். 

 

வெளியே வந்தவன் பைக்கில் ஏறி பைக்கை ஸ்டார்ட் செய்ய அதில் ஏறி தள்ளி அமர போனவளுக்கு அவன் சொன்னது ஞாபகத்திற்கு வர தயங்கியபடியே அவனை சற்று நெருக்கி அமர்ந்தால் அவன் திரும்பிப் பார்க்கவும் இன்னும் அவனை நெருக்கமாக அமர்ந்து அவன் இடுப்பை சுற்றி கையை வளைத்து அவனை பின்னிலிருந்து கட்டி அணைத்தவாறு அமர்ந்தாள்.

 

விக்கிரமனுக்கோ உடம்பு முழுவதும் புது இரத்தம் பாய்ந்தது அவளின் முதுகின் மேல் படிந்த பாவையின் மென்மைகள் அவனை இம்சை செய்தது மேலும் அவளிடம் இருந்து வந்த மல்லிகைப் பூவின் வாசமும் அவனை சுற்றி இறுகப்பிடித்திருந்த அவளின் கையின் அழுத்தமும் அவன் உணர்ச்சிகளை பேயாட்டம் போட வைத்தது. அவ வேற நம் மேல நம்பிக்கை அது இதுன்னு சொன்னாலே அதை கெடுத்திடக்கூடாது இது சரி வராது என எண்ணி பைக்கை ஒரம் கட்டி நிறுத்தி விட்டு அவளை கீழே இறங்கச் சொன்னான். அவளும் இறங்க தன் முதுகோடு உரசி வந்ததில் அவளின் சேலை முந்தானை விலகியிருக்க அதன் அழகில் மேலும் சூடேறி அவள் கையை பிடித்து இழுத்து கட்டி அணைத்து அவள் உதட்டில் வன்மையாக முத்தமிட ஆரம்பித்தான்.

அவனது முத்தவன்மையில் அவள் கண்கள் கலங்க ஆரம்பித்து கண்ணீர் அவளையறியாமல் கன்னத்தில் வழிய ஆரம்பித்தது. வழிந்த கண்ணீர் அவன் முத்த யுத்தத்தை கலைக்க ச்சே என திரும்பி கோபத்தில் வண்டியின் இருக்கையை தன் கைகளால் தட்டி தன் ஏமாற்றத்தை அதனிடம் காட்டினான். 

6 thoughts on “கள்ளழகனின் அழகி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top