ATM Tamil Romantic Novels

கள்ளழகனின் அழகி

அவன் சிரிப்பதைப் பார்த்த சரவணன் மாப்பிள்ளை நீ எப்பவும் இப்படியே சிரிச்சபடியே இருக்கணும் டா  என்றபடியே ஆஸ்பத்திரியின் வாசலில் காரை நிறுத்தி இருந்தான். விக்ரமன் மறுபடியும் மலர் மொழியை கையில் ஏந்தி  சென்று மருத்துவ  சிகிச்சைக்காக அட்மிட் செய்தான். 

 

 அவர்களின் அலங்காரங்களை பார்த்து  ஓரளவு என்னவென்று யூகித்த மருத்துவர் அவளை பரிசோதித்தார் பின்பு விக்கிரமனிடம் பயப்படறதுக்கு ஒன்னும் இல்ல  அவங்க இதை நினைச்சு ரொம்ப  டென்ஷனா இருந்திருந்ததால  மயங்கி விழுந்து இருக்காங்க  அதுவுமில்லாம அவங்க சரியா சாப்பிடலைன்னு  நினைக்கிறேன். மயக்கம் தெளிய ஊசி போட்டு இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்துல கண்ணு முழிச்சிடுவாங்க அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க 

 

பார்த்தா சின்ன பொண்ணா தெரியுறாங்க முதல்ல அவங்க மனசுல இருக்கிற  பயத்த போக்கிட்டு அப்புறம் இது எல்லாம் வச்சுக்கோங்க. என்று மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றார்.  அப்போ என்னோட அறுபதாவது கல்யாணத்துக்கு தான் ஃபர்ஸ்ட் நைட் வைக்கணும் அப்பதான் இவ பயப்படாம இருப்பா இன்று மனதில் புலம்பியபடி அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தான்.

 

  

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சரவணன் அவன் தோளில் கையை வைத்து கவலைப்படாதடா மச்சான் எல்லாம் சரியாயிடும்    என்றவன் பின்பு சிறிது தயங்கியபடியே  தங்கச்சி தான் பயப்படுதில்லடா கொஞ்ச கொஞ்ச நாள் கழிச்சு சரவணன் பேசுவதை முழுதாக முடிக்க முடியாமல் தடுமாற  

 

உடனே விக்கிரமன் உணர்ச்சிவசப்பட்டு என்னடா எல்லோருக்கு என்ன பார்த்தா காமுகன்  மாதிரி தெரியுதா  என்னமோ எனக்கு இப்பதான் 16 வயசு ஆகுற மாதிரி இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ன்னு சொல்ற எனக்கு முழுசா 36 முடிய போகுதுடா  நான் என்னோட லைஃபை ஃபுல் ஃபீல் பண்ண நினைக்கிறேன்

 

 உனக்கு தெரியுமாடா எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கும் போது என்னென்ன பேச்சு பேசினாங்கன்னு தெரியுமாடா அவ்வளவு ஏன் என்னோட தங்கச்சிக்கு எப்படிப்பட்ட பொண்ணுங்களை பார்த்தாங்கன்னு உனக்கு தெரியும் தானே ஆமாம் என்று தலையாட்டிய சரவணன் அவள் தங்கைகள் கொண்டு வந்த வரன்களை நினைத்துப் பார்த்தான்.

 

விக்ரமன்  தங்கைகளின் கடமைகளை முடித்த பிறகு இவனுக்கு வரன் பார்க்க ஆரம்பித்ததும் வரன் தருபவர்கள் இவனுடைய  வயதை ஓரளவுக்கு ஒத்துக்கொள்ள தயாராக இருந்தாலும் மூன்று சகோதரிகள் என்பதை அவர்கள் விரும்பவில்லை ஏனெனில் இனி காலம் முழு வைக்கும் இந்த மூன்று சகோதரிகளுக்கான அனைத்து கடமைகளையும் இவன்தான் செய்தாக வேண்டும் அப்படி இருக்கையில் தன் பெண் அந்த வீட்டிற்கு சென்றால் சிறப்பாக வாழ முடியாது என்று அவர்களின் நினைப்பாக இருந்தது ஆதலால் அவனுக்கு வரன் கிடைப்பது அரிதாக இருந்தது.

 

எனவே தங்கைகள் மூவருமே இவனுக்கு வரன் தேடும் வேலையை கையில் எடுத்தார்கள் இப்பொழுது தான் விக்ரமனுக்கு உண்மையான சோதனை காலம் ஆரம்பித்தது தங்கைகள் மூவருமே ஆளுக்கு ஒரு பெண்ணை பார்த்திருந்தனர். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அவனுடைய சந்தோசத்தை பெரிதாக எண்ணாமல்  அவர்களுக்கு சாதகமான பெண்ணை பார்த்து அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் அவரவர்களின் தேவைகளை நிறைவேற்ற எளிதாக இருக்கும் என எண்ணி ஆளுக்கொரு பெண்ணை பார்த்திருந்தனர். அதன்படி மூத்தவள் ராகினி தனது மாமியார் வழியில் ஒரு ஊமைப் பெண்ணை கொண்டு வர சந்தியா தான் வேலை செய்யும் இடத்தில் 35 வயது பெண்ணை கொண்டு வர கனிமொழியும் அதைவிட  ஒரு  படி மேலே போய் அவள் கணவனின் சொந்தத்தில் விவாகரத்தான பெண்ணை பார்த்து இருந்தால் இதில் சரவணனுக்கு மிகவும் வருத்தமே  விக்கிரமனுக்கு வயது ஏறி இருந்தாலும் அவனது உழைப்பால் மெருகேரிய உடலும் அழகான தலைமுடியும் அவனது நிறமும் அவனை 30 வயது ஆண் மகனாகவே  காட்டும்.  மேலும் இவர்களை பார்த்து பார்த்து வளர்த்தவனுக்கு இப்படிப்பட்ட பெண்களை பார்த்த அவனது தங்கைகள் மீது இவனுக்கு கொலைவெறி ஏற்பட்டது.

 

அதை எண்ணி கவலைப்பட்டவன் இப்பொழுது அவன் மலர்மொழியை திருமணம் முடித்தது அவனுக்கு மிக்க மகிழ்ச்சி  மலர் மொழி கிராமத்து ஆட்களாலும் அவனது வீட்டிலும் என்ன பிரச்சனை வந்தாலும் அவன் பக்கம் நின்று அவனை சந்தோஷமாக வைக்க வேண்டும் என முடிவு எடுத்திருந்தான் 

 

விக்ரமன் டேய் சரவணா உனக்கு ஒன்னு தெரியுமாடா எனக்கு எங்க அப்பா அம்மா இருந்திருந்தால் நானும் மத்தவங்க போல குழந்தை குடும்பம் குட்டின்னு சந்தோஷமா இருந்து இருப்பேன். என் வயசு பசங்க சந்தோஷமா வெளியில் போறத பாத்து நானும் ஏங்கி இருக்கேன். என் காது படவே பேசி இருக்காங்க இவனுக்கு வயசாயிருச்சு இனி எப்ப கல்யாணம் ஆகி எப்ப குழந்தை பிறக்கிறது கடைசி வரை தங்கச்சிகளை பார்த்துட்டு இருந்துக்க வேண்டியது தானே என்று எனக்குள்ள அது ஒரு பயமா உருவாகிறுச்சு. சரி கல்யாணம் வேண்டாம் அப்படின்னு முடிவு எடுக்க என்னால முடியல. எந்த ஒரு விசேஷத்திலும் தங்கச்சிங்க அவங்க குடும்பமா நிக்கும் போது நான் தனியா இருக்கிற வலி என்னனைத் தவிர யாருக்கும் வேண்டாம்டா எனக்கு தலைவலி காய்ச்சல் வந்தா அதே உடம்பு சரியில்லாததோடு  எனக்கான தேவைகளை நானே நிறைவேத்திக்கணும் அந்த வலி இருக்குதே அது ரொம்ப கொடுமை டா இன்னும் எனக்கென காலங்கள்  இருக்குதுடா  எனக்கென ஒரு குழந்தை ஒரு குடும்பம் இருக்குன்னு ஆசைப்பட்டது தப்பாடா நீ நினைக்கலாம் ஏன் அதை இவ்ளோ அவசரமான செய்யனும்னு,  என்னோட பயம் மத்தவங்க சொல்ற மாதிரி எனக்கும் குழந்தை பிறக்காம போயிருமோங்கற பயம் .

 

என்னோட பயத்தை போக்குக்காக நான் ஆஸ்பத்திரியில் செக் பண்ணினேன் அப்போ அந்த டாக்டர் நான் ஆரோக்கியமா இருக்கிறதாக சொன்னார். அப்பதான் எனக்கு மனசுல நிம்மதியாச்சு.

 

ஆனாலும் அவர் இன்னொன்று சொன்னார் பெண்ணுக்கு 26 வயதிலும் ஆணுக்கு 32 வயசு வரைக்கும் உருவாகிற குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனா அந்த வயசு கடந்துட்டா குழந்தைகள் சில பல குறைபாடுகளோடு பிறப்பதற்கு வாய்ப்பிருக்குது அதனால தான் அந்த காலத்துல 35 வயசுக்குள்ள இரண்டு குழந்தைகளையும் பெற்றிடுவாங்க என்று சொன்னார்.

எனக்கு பிறக்க போற குழந்தை ஆரோக்கியமாக பிறக்கணும் ஒரு நல்ல தகப்பனாக இருந்து அவனை நல்லபடியா வளர்க்கணும் எனக்கு கிடைக்காத அப்பா  பாசம் நிம்மதியான வாழ்க்கையை அவனுக்கு கொடுக்கணும்.

 

என்னதான் 15 வயசுல நான்  தயாராகி என்னோட வாழ்க்கை பாதையை அமைச்சுக்கிட்டாலும் ஒரு வேதனை  வரும்போது  நான் சாஞ்சிக்க என் அப்பா தோள் எனக்கு கிடைக்கலடா.

என் பையனுக்கு தோழனா நின்று தோள் கொடுக்கணும் டா 

இது என்னுடைய ரொம்ப நாள் ஆசை இல்லை கனவு என்று கூட சொல்லலாம். என்னதான் தொழிலுள்ள ஜெயிச்சு பணம் சேர்ந்தாலும் எனக்குன்னு ஒரு மகன் வேணும்டா.

 

எனக்கு இருக்கிற குழந்தை ஆசை தான் என்னை  அவ கிட்ட அப்படி நடந்துக்க வெச்சது. தனியா இருக்கிற ஆண்களுக்கு தான் யாரும் இல்லா அந்த வலி தெரியும்டா குறிப்பிட்ட வயசுல ஆணாகட்டும் பெண்ணாகட்டும் தங்களுக்கு என்று ஒரு துணையை தேடி  தங்களுக்கு என்று குழந்தைகளை பெத்துக்கணும்டா .

 

கல்யாணம் ஆகாத பெண்கள் மட்டும் இல்லடா கல்யாணமாகாத ஆண்களுக்கும் வலி இருக்குதுடா சொந்தத்தில் ஒரு கல்யாணத்துக்கு போகும்போது  ஏண்டா அந்த கல்யாணத்துக்கு வந்தோம் அப்படிங்கற அளவுக்கு அவன பேசி நோகடிச்சுருவாங்க. எனக்கும் அந்த மாதிரி சூழ்நிலை நிறைய ஏற்பட்டு இருக்குது. இதையெல்லாம் மலர் மொழிக்கு சொன்னால் புரியுமா புரியாதான்னு எனக்கு தெரியல மலர்  மொஈழி பயப்படுறான்னு நான் அதை தள்ளி வச்சேன்னா அந்த பயம் அவளை என்கிட்ட இருந்து விலக்கி வைக்கும் அவ வேண்டாம் என்று நான் முடிவு எடுத்தேன் ஆனா கடவுள் போட்ட முடிச்சு இங்க கொண்டு வந்து நிக்குது நான் அவசரப்பட்டு குழந்தைக்காக இப்படி பண்ணினது என்ன ஒரு தப்பான கோணத்தில் உங்களுக்கு காட்டிருச்சு. நீ நினைக்கலாம் கல்யாணம் ஆன உடனே குழந்தை பிறந்துவிடுமா கண்டிப்பாடா எங்க அப்பா எனக்கு மகனா வந்து பிறப்பார் அந்த சாமியும் எனக்கு கொடுக்கும் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு.

 

 காதலையும் தாம்பத்தியத்தையும் கட்டாயப்படுத்தி வாங்க முடியாதுன்னு எனக்கு தெரியும். அதனாலதான் கல்யாணத்துக்கு முன்னாடி தெளிவா சொல்லி தான் கல்யாணம் பண்ண முடிவு கேட்டேன். அவ எல்லாத்துக்கும் சரின்னு சொன்னதுனால தான் அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இப்ப நீ வந்து என்னமோ அட்வைஸ் பண்ற அந்த டாக்டரம்மா என்னமோ என்ன கொடுமைக்காரன் பாக்குற மாதிரி பார்த்து வச்சிட்டு போகுது 

 நீ கூட என்ன புரிஞ்சுக்கலடா என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே நர்ஸ் வந்து மலர்வழி விழித்து விட்டதாக கூறியதால் அவளை பார்க்க இருவரும் சென்றனர் 

1 thought on “கள்ளழகனின் அழகி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top