அத்தியாயம் 26
“மெதுவா.. மெதுவா.. வா ப்ரியா..” என்ற நகுல், மெல்ல நொண்டியபடியே வந்த ப்ரியாவை கை பிடித்து வீட்டிற்குள் அழைத்து வர,
“என்னடா வீடு ரொம்ப நிசப்தமா இருக்கு? குட்டி பிசாசு அவங்க வீட்டுக்கே திரும்பி போயிடுச்சா?” என்று அவர்களுக்கு பின்னோடு ப்ரியாவின் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தான் சஜன்.
“அப்படி போனா.. நல்லது தான்.. எப்பப்பாரு ஹர்ஷூ பின்னாடியே சுத்திட்டுருக்கா.. நமக்கும் ப்ரைவஸியே இல்ல..” என்ற நகுலனை ஒருமாதிரி பார்த்த சஜன், அவனது கையை பிடித்தபடி நின்றிருந்த ப்ரியாவையும் பார்க்க, அவனது பார்வையை உணர்ந்து கொண்ட நகுல்,
“ப்ரியா ஒன்னும் வேறாளு கிடையாது.. காலேஜ்ல இருந்து நம்ம கூட படிச்சவ.. அப்புறம் ஹர்ஷூக்கு இவ தான் எல்லாத்துலயும் மேட்ச்.. அந்த குட்டி பிசாசை சின்ன வயசுல இருந்தே பிடிக்காது..” என்ற சஜனிடடவாறே ப்ரியாவை கீழே இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றவன்,
“நீ ரெஸ்ட் எடு ப்ரியா.. நாங்க போய் ஹர்ஷுக்கிட்ட சொல்லிட்டு வந்துடுறோம்..” என்று அவளுக்கு சில உதவிகள் செய்து விட்டு வெளியே வந்தான் நகுல். ஹர்ஷவர்தனின் அறையை நோக்கி மேலே ஏறியவனின் பின்னோடு வந்த சஜன்,
“ஹர்ஷூக்கு யாரை பிடிக்கும்? பிடிக்காதுன்னு நீயா எப்படி முடிவு பண்ணலாம்?” என்று கேட்க, நின்று அவனை திரும்பி முறைத்த நகுல்,
“ஹர்ஷூவோட அழகுக்கும் அறிவுக்கும் அவனோட ஸ்டேட்ஸுக்கும் ப்ரியா தான் மேட்ச்.. விளானியில்ல.. புரியுதா?” என்றவாறே விடுவிடுவென மாடிக்கு ஏறியவன், ஹர்ஷவர்தனின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, அங்கே ஹர்ஷவர்தனின் மார்பில் தலை வைத்து, அவனை இறுக்கி அணைத்து விளானி உறங்கிக் கொண்டிருக்க, அவளை யாருக்கும் தரமாட்டேன் என்பது போல் இறுக்கி அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். அதை கண்ட நகுல், தன் கண்களை நன்றாக கசக்கி கொண்டு பார்க்க, அவனுக்கு மீண்டும் அதே காட்சியே தெரிந்தது. படபடக்கும் மனதுடன், அதிர்ந்து போய் சட்டென வெளியே வந்தவனை பார்த்த சஜன்,
“என்னாச்சுடா உனக்கு? சாக்கடிச்ச மாதிரி வந்து நிற்குற?” என்று கேட்க,
“உள்ள போய் பாரு.. ஹை ஹோல்டேஜ் சாக்கடிக்கும்..” என்றவனை தொடர்ந்து உள்ளே நுழைந்த சஜனின் கண்கள் விரிய அதிர்ச்சியுடன் மீண்டும் நகுலை தேடி வெளியே வந்தான்.
“என்னடா நடக்குதுதிங்க? ரெண்டு பேரும் சாரை பாம்பு மாதிரி இறுக்கி பிணைஞ்சுட்டு இருக்காங்க..”
“அதான் எனக்கும் புரியல.. அவனுக்கு ஹாசினியை கண்டாலே பிடிக்காது.. ஆனா, எப்படி இப்படி?” என்று குழம்பியவன், ஹர்ஷவர்தனின் கதவை தட்ட, சத்தம் கேட்டு, உறங்கிக் கொண்டிருந்த விளானியோ மெல்ல தன் கண் திறந்து தன் முகத்தை உயர்த்தி பார்க்க, அவளின் கண் முன்னே இருந்த ஹர்ஷவர்தனின் முகத்தை தன் ஆள்காட்டி விரலால் அளக்க தொடங்கினாள்.
“குட் மார்னிங்..” என்று கிசுகிசுப்பான குரலில் கூறியவள், அவனது தாடையில் முத்தமிட, அவனது கைகளோ அவளை இறுக்கி அணைத்து கொண்டன. மெல்ல கண் திறந்தவன், தன் முன்னே பளிங்கு போன்று கள்ளம் கபட மற்ற முகத்தையும் காதல் மொழி பேசம் விழிகளையும் கண்டவன், அவளது நெற்றியில் முத்தமிட,
“ஹர்ஷூ.. ஹர்ஷூ..” என்று வெளியே நகுல் கதவை சத்தம் காதை கிழித்தது.
“இவனுக்கு இப்ப என்ன வேணும்?” என்று பல்லை கடித்தவாறே கதவை திறக்க எழுந்து சென்றவனை பார்க்க விளானிக்கு சிரிப்பு தான் வந்தது. மெல்ல பாதி கதவை மட்டும் திறந்து கொண்டவன்,
“என்னடா?” என்று எரிச்சலோடு எறிந்து விழுக,
“இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.. ஞாபகம் இருக்கா? நாற்பது கோடி ப்ராஜெக்ட்.. நீ இன்னும் கிளம்பாம தூங்கிட்டு இருக்க?” என்று கேட்ட நகுலனின் பார்வை முழுவதும் அறையின் உள்ளே பதிந்திருக்க, அறைக்கதவை திறந்து வெளியே வந்த ஹர்ஷவர்தன், நகுல் மற்றும் சஜனின் கண்கள் அறைக்குள் இருப்பதை உணர்ந்து,
“க்கும்..” என்று தன் கணைத்தவன், “நேத்து ராத்திரி விளாக்கும் எனக்கும் ஃபீவர்.. சோ, நான் தான் அவளை என்னோட ரூம்லேயே படுத்துக்க சொன்னேன்.. அவளுக்கு ஏதாவது ஒன்னுன்னா.. பாட்டி நம்ம யாரையும் சும்மா விமாட்டாங்க..” என்று வேறெங்கோ அசால்டாக கூறியவன், தன் கைகளை ட்ராக் பேண்டிற்குள் விட்டவாறே,
“இன்னும் டென் மினிட்ஸ்ல நாம ஆஃபிஸ்ல இருக்கணும்.. சீக்கிரம் ரெடியாகிட்டு வாங்க..” என்று கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான். இவன் பேசிய அனைத்தையும் கதவோரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த விளானிக்கோ, அவன் தன் குடும்பத்திற்கு பயந்து தான் தன்னை அப்படியெல்லாம் பார்த்துக் கொண்டானோ? என்று எண்ணத் தோன்றியது. அவன் தன்னிடம் காட்டிய நெருக்கத்தை அவள் மறந்து போனது விதியின் செயலோ?
*****************************************************
“எப்படி.. எப்படியாச்சு? ஃபையர் ஸ்டேசனுக்கு ஃபோன் பண்ணிட்டீங்களா?”
“பண்ணிட்டோம் சார்.. வந்துட்டுருக்காங்க..”
“யாருக்கும் எந்த காயமும் இல்லையே?!”
“இல்ல சார்.. உடனே அலார்ட் பண்ணதுனால எல்லோரையும் காப்பாத்த முடிஞ்சது.. இல்லேன்னா உயிருக்கு உத்திரவாதம் இல்ல சார்..” என்று மேனேஜர் பேசிக்கொண்டு இருக்கும் போதே, கட்டிடத்திற்குள் இருந்து “காப்பாத்துங்க..” என்று பெண்ணின் குரல் கேட்க, பதறியபடி திரும்பிப் பார்த்தவன், எதை பற்றியும் யோசிக்காது, கட்டிடத்திற்குள் ஓடினான். பற்றி எறியும் கதவினை ஓங்கி உதைத்தவன், அதனை தாண்டி உள்ளே நுழைய, அங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி, நெருங்கி வரும் தீயில் இருந்து தப்பிக்க வழி தெரியாது, தவித்துக் கொண்டிருந்தார். அறையின் பின் புறம் இருந்த கதவை உடைத்து திறந்தவன், அப்பெண்மணியை அங்கிருந்து குதிக்க சொல்ல, முதலில் பயந்த அப்பெண்மணி, பின்னர் கீழே வலை விரித்துக் காத்திருக்கும் தீயணைப்பு வீரர்களை கண்டதும் கண்ணை மூடி குதித்திருந்தார். அவர் குதித்தும் குதிக்க இருந்த ஹரிஷான்திற்கு எரியும் தீயின் புகை காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட, அவ்விடத்திலேயே மயங்கி சரிந்தான். அலுவலகத்தில் இருந்து சிந்துவுடன் வீட்டிற்கு வந்த ஹாசினியின் கண்ணில்,
‘பிரபல தொழிலதிபர் ஹரிஷான்த்தின் ஏஹெச் நிறுவனத்திற்கு சொந்தமான கார்மெண்ட்ஸில் திடிரென தீ விபத்து.. இதுவரை உயிர் சேதம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.. அலுவலகத்திற்குள் மாட்டிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றிய ஏஹெச் நிறுவனத்தின் எம்டி ஹரிஷான்த்.. இன்னும் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியே வராததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. மேலும் நிறைய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த பதிவுகள் கிடைப்பெற்றுள்ளன..’ என்று செய்தி தொகுப்பாளர் வசிப்பது படவே, அதிர்ச்சியில் உறைந்து போனாள் ஹாசினி. தன்னருகே நின்றிருந்த சிந்துவின் கையை பற்றியவள்,
“அவருக்கு என்னாச்சு? என்னாச்சு? நான் அவரை பார்க்கணும்.. என்னைய அங்க கூட்டிட்டு போ..” என்று கத்த,
“ஹாசி.. இந்த மாதிரி நேரத்துல நீ எமோஷனல் ஆகக்கூடாது.. அது உன்னோட குழந்தைக்கு ஆபத்து.. ப்ளீஸ்.. பொறுமையாயிரு.. பாஸ்கு எதுவும் ஆகிருக்காது.. நீ தேவையில்லாம கவலைப்படாத..” என்று பொறுமையாக கூறிய சிந்துவை முறைத்துப் பார்த்த ஹாசினி,
“அப்போ நீ வரமாட்ட.. அப்படித்தானே? சரி வேணாம்.. நானே போயிக்குறேன்..” என்று கூறியவாறே தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்ப, அவள் பின்னோடு சென்றாள் சிந்து. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்தவரின் கண்ணில் எங்கும் புகையுமாக பாதி எறிந்து கொண்டிருந்த கட்டிடம் படவே, ஹரிஷான்த்தை தேடி உள்ளே ஓட முயற்சித்தாள். அவளை கட்டிடத்திறகுள் செல்ல விடாது தடுத்தனர் அவளது நண்பர்கள்.
“என்னை விடுங்க.. அவர்.. அவருக்கு என்னமோ.. நடந்திருக்கு.. என்னைய விடுங்க.. நான் அவரை போய் பார்க்கும்..” என்றவளின் கண்ணில் ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருப்பதும், அதில் ஹரிஷான்த்தின் உடையை போன்று நீல நிற சட்டை அணிந்திருந்தவனை உள்ளே ஏற்ற முற்படுவதும் பட, அங்கே ஓடினாள்.
“தள்ளுங்க.. தள்ளுங்க.. டாக்டர்.. அவர்.. அவர்..”
“அவர் உங்களுக்கு சொந்தமா? தெரிஞ்சவரா?”
“அவர்.. அவர்.. என்னோட ஹஸ்பெண்ட் டாக்டர்.. அவர் எப்படி இருக்காரு?”
“ஓ.. இப்ப எதுவும் சொல்ல முடியாது.. எதுவாயிருந்தாலும் ஹாஸ்பிடல் போய் சர்ஜரி பண்ணதுக்கு அப்புறம் தான் சொல்ல முடியும்..”
“நான்.. நான்.. அவர் கூட வரலாமா?”’
“தாரளமா!” என்ற டாக்டர் முன்னே செல்ல, அவருடன் அழுதவாறு ஓடினாள் ஹாசினி. ஆம்புலன்ஸ் கதவை திறந்ததும் அங்கே இருந்தவனை பார்த்தவளின் உடல் தள்ளாட இரும்பென இரு கைகள் அவளை தாங்கிக் கொண்டன. மயங்கி விழும் முன் அவளது கண்ணில் விழுந்த உருவத்தின் முகத்தினை தன் கைகளால் பற்ற,
“டாக்டர்..” என்றவாறே அவளை தூக்கி தன் தோளில் போட்டவன், மருத்துவமனையை நோக்கி விரைந்தான். தன்னவளை கையில் ஏந்தியபடியே மருத்துவமனைக்குள் விரைந்தவனை பார்த்த அசோக்கிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. ஹாசினியின் உடனேயே இருந்தவனுக்கு அவளது மனதில் யார் இருக்கிறார் என்பது தெரியாது போனது..
“டாக்டர்.. அவளுக்கு ஒன்னுமில்லேயே?!”
“கொஞ்சம் அதிர்ச்சி அடைஞ்சுருக்காங்க.. வேற ஒன்னுமில்ல.. பத்திரமா பார்த்துக்கோங்க..”
“தாங்க் யூ டாக்டர்..” என்ற ஹரிஷான்த்தோ ஹாசினி இருக்கும் இடத்தை விட்டு இம்மியளவு கூட நகரவில்லை. அவள் கண் விழிக்கும் வரை ஊண் உறக்கம் இல்லாது கூடவே இருந்தவன், ஒருபுறம் நஷ்டம் மறுபுறம் சோர்வு என் களைத்திருந்தவனுக்கு, தன் மனைவியின் கண்விழிப்பே உயிர்மருந்தென இருந்தது. மெல்ல கண் விழித்தவளின் முன்னே வந்து அமர்ந்தவன், அவளை தூக்கி தன் மார்போடு அணைத்துக் கொள்ள, அங்கிருக்கும் யாரையும் உணராது, ஹரிஷான்த்தின் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள் ஹாசினி. அவனது நெஞ்சில் முகம் புதைத்தவளின் கண்ணில் இருந்து கண்ணீர் ஆறாய் ஓட, அவளது முகத்தை நிமிர்த்த முயன்று தோற்றான் ஹரிஷான்த்.
“ஏய்.. இங்கப்பாரு.. இப்ப என்னாச்சு? நான் நல்லாத்தான் இருக்கேன்.. இங்கப்பாரு..” என்றவன் அவளது முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்த, அவனை சரமாரியாக அடிக்கத் தொடங்கினாள். மழையாக நினைத்தவள், திடிரென வெயிலாக மாறி சுட்டெரிப்பதன் காரணம் புரியாது திணறியவன், ஒரு கட்டத்தில் அவளது முகத்தை தன் இரு கைகளால் பற்றி, இதழில் முத்தமிட, அதனை அழகாக அங்கிருக்கும் புகைப்படங்கள் பதிவாக்கிக் கொண்டன.
“க்கும்.. சார்.. ஹரி சார்.. இது பப்ளிக் ப்ளேஸ்.. ஊர் வாய்க்கு அவலாகமா நல்ல நேரத்துல கிளம்புங்கப்பா.. உங்களுக்கு புண்ணியமா போகும்..” என்ற ராகுல், அங்கிருக்கும் மற்ற அனைத்து வேலைகளையும் தான் பார்த்துக் கொள்வதாக கூறி, அவர்கள் இருவரையும் அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்க, அடுத்தடுத்து நிகழ்ந்த அதிர்ச்சியான சம்பவங்கள் காராணமாக, இருக்கையில் அமர்ந்தபடியே உறங்கியவளை, வீட்டிற்கு வந்ததும், தன் கையில் ஏந்தியவாறே உள்ளே வந்தவன், படுக்கையில் படுக்க வைத்து, அவளை விட்டு விலக, அவனது கையை விடாது தனது கைக்குள் வைத்தவாறே உறங்கிக் போனாள் ஹாசினி. அவளது இறுக்கமான பிடியில் என்ன உணர்ந்தானோ, அவளை அணைத்தவாறு ஒட்டி அமர்ந்து கொண்டான். அவளது முகத்தை மறைத்த முடிக்கற்றையை ஒதுக்கியவன், அவளது உச்சியில் முத்தமிட, அவனது இடையில் கையிட்டு, நெஞ்சில் தலை வைத்து, குழந்தையென உறங்கியவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் கைப்பேசி அழைக்க, அதனை காதில் வைத்தவனுக்கு கோபம் தலைக்கேறியது.
“உன்னையே என்ன பண்ணுறேன்னு பாரு? என்கிட்டயா உன் குள்ளநரி வேலையை காட்டுற?” என்று முணுமுணுத்தவனின் முகம் கல்லென இறுகி போனது.
***************************************************
“நகுல்.. நேத்து உன்கிட்ட ஃபைல் ஷேர் பண்ணேனே? அந்த ஃபைலோட ஹார்ட் காப்பி கொடு..”
“ஹர்ஷூ.. அது வீட்டுல இருக்குடா..” என்ற நகுலை முறைத்துப் பார்த்த ஹர்ஷவர்தன், தன் பல்லைக் கடித்தபடியே,
“இப்ப நீ என்ன பண்ணுவியோ தெரியாது.. ஃபைல் இப்ப வந்தாகணும்..” என்று கூறிவிட்டு மீட்டிங் ஹாலுக்குள் செல்ல, ப்ரியாவிற்கு அழைத்த நகுல், தனது அறையில் இருக்கும் அந்த ஃபைலை எடுத்து வரச் சொல்ல, அவளும் ஃபைலை எடுத்துக் கொண்டு வெளியே வரும் நேரம் எதிரில் விளானி வருவதை கண்டாள். அவளை பார்த்ததும் புருவத்தை சுருக்கி யோசித்தவள்,
“இது.. முக்கியமான ஃபைல் காப்பி.. இதை ஹர்ஷுக்கிட்ட கொடுக்கணும்.. நான் இந்த காலை வைச்சுக்கிட்டு, கொண்டு போய் கொடுக்க முடியாது.. ப்ளீஸ் நீ கொஞ்சம் கொண்டு போய் கொடுக்குறியா?” என்றவாறு விளானியிடம் நீட்ட,
“ஓகே.. கொடு.. நான் கொண்டு போய் கொடுக்குறேன்.. நீ அலைஞ்சு சிரமப்படாத..” என்றவாறே அதனை வாங்கியவள், தனது அறைக்குள் சென்று ஆடை மாற்றிக் கொண்டு கிளம்பி அலுவலகத்திற்கு அவசரமாக கிளம்ப, அவளது ஸ்கூட்டியின் டையரின் இரண்டில் ஒன்று காற்றில்லாமல் இருக்க,
‘நேத்து கூட பார்த்தேனே.. வண்டி நல்லாத்தானே இருந்துச்சு?!’ என்று தனக்குள் புலம்பியவள், வாடகை காரை வரச் சொல்லி கைபேசியில் அழைக்க, அவனோ அரை மணி நேரம் கழித்து வருவதாக கூற, பொறுமையிழந்தவள், அங்கிருந்து ஆட்டோ ஏற்பாடு செய்ய முயல, அந்தோ பரிதாபம்! அவர்கள் இருக்கும் இடம் சற்று உள்ளடங்கிய பகுதி என்பதால் எந்தவிதமான வாகனமும் சட்டென கிடைக்கவில்லை. ஒரு வழியாக அங்கிருந்து அலுவலகத்திற்கு வந்து சேர அரை நாளானது. வேர்க்க விறுவிறுக்க, அலுவலகத்திற்குள் நுழைந்தவள், லிஃப்ட் பட்டனை அழுத்த அது வேலை செய்யவில்லை. அய்யோ என்றிருந்தது விளானிக்கு.. வேக வேகமாக படியில் ஏறி ஆறாவது தளத்திற்கு வந்தவள், நேரே மீட்டிங் அறைக்குள் நுழைய, அங்கே மீட்டிங் முடிந்து ஒப்பந்த கையெழுத்துயிட்டுக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். அவனருகே, சிரித்தபடி நின்றிருந்தாள் ப்ரியா. ப்ராஜெக்ட் கையில் கிடைத்த சந்தோஷத்தில் முகம் பூரித்தபடி நின்றிருந்த ஹர்ஷவர்தனோ, தன்னருகே நின்றிருந்த ப்ரியாவையும் தனது நண்பர்களையும் கட்டியணைத்து வெளிப்படுத்த, தன் கையில் வைத்திருந்த ஃபைலை கண்ணீரோடு பார்த்தாள் விளானி. அதுவோ அவளைப் பார்த்து கைகொட்டி சிரிப்பது போல் தெரிந்தது. மெல்ல அங்கிருந்து வெளியேறியவளை பின் தொடர்ந்து சென்றனர் நகுலனும் ப்ரியாவும்..
“ப்ரியா.. உனக்கு ஞானப்பழம் விநாயகருக்கு கிடைச்ச கதை தெரியுமா?”
“தெரியாதே.. நகுல்.. அது என்ன கதை?”
“அது.. ஞானப்பழத்துக்காக முருகன் உலகம் பூரா சுத்துவாராம்.. ஆனா, கடைசில அம்மா, அப்பாவை மட்டும் சுத்தி, ஸ்மார்ட்டா விநாயகர் பழத்தை வாங்கிட்டு போயிடுவாராம்.. ஒரு ஃபையிலை கூட சரியான நேரத்துக்கு கொண்டு வர முடியலை.. இவளெல்லாம் ஹர்ஷூக்கு பெண்டாட்டியாக முடியுமா?”
“அதானே.. என்ன தான் அழகா இருந்தாலும்.. நாலேஜ் வேணுமே.. அது சுத்த ஹீரோவா இருக்கே..” என்று ப்ரியாவும் நிகுலனும் சிரிக்க, அவர்களுக்கு முதுகு காட்டி திரும்பி நின்ற விளானியின் காதில் அவர்கள் கூறிய அனைத்தும் விழுந்தது. காலையில் இருந்து ஏற்பட்ட உடற்சோர்வும் மனச்சோர்வும் ஒன்று சேர, இப்போது விழுகவா? அல்லது பிறகு விழுகவா? என்றிருந்தத கண்ணீரை துடைத்து கொண்டு விளானி, சட்டென அவர்கள் முன் திரும்பி, வராத புன்னகையை வரவழைத்துக் கொண்ட நிலையில்,
“உண்மை தான்.. நான் முருகன் தான்.. ஒத்துக்குறேன்.. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை மேரேஜாகும்.. என்னோட லைஃப் செட்டில்ட்.. பட், நீங்க?” என்று உதட்டை குவித்து உச்சுக் கொட்டியவாறே,
“ஸ்மார்ட்டா இருந்து என்ன புண்ணியம்? மேரேஜ் லைஃப்கு ஜோடி பொருத்தத்தை விட மணப்பொருத்தம் ரொம்ப முக்கியம்.. ஆமா.. ஹர்ஷூக்கு பெண்டாட்டியாகணும்னா, நான் பெங்களூர்ல இருந்து ஊட்டி வந்துருக்கேன்? இது தெரியாம போச்சே? வெரி சாரி.. உங்க ஆட்டத்துக்கு நான் ஆளில்ல.. ஆமா, அதெப்படி நான் வர்றதுக்கு முன்னாடி நீங்க இங்க வந்தீங்க.. ஓஹோ.. என்னைய ஃபைல் எடுத்து கொடுத்து அனுப்பும் மாதிரி அனுப்பிட்டு, இங்க உங்க சின்சியரை காட்டுறதுக்கு நகுல்கிட்ட சொல்லி, காரை வரவழைச்சு வந்துருக்கீங்க.. ஃபைன்.. ஃபைன்.. ரொம்ப அழகா ப்ளான் போட்டுருக்கீங்க.. வெரி குட்.. பட், ஐம் நாட் இன்ட்ரஸ்டட்.. ஒரு அடுக்காக போட்டி போட நான் ரெடியாயில்ல.. அதை விட உருப்படியா பார்க்க எனக்கு ஆயிரம் வேலையிருக்கு.. உங்களுக்கு ஹர்ஷூ தானே வேணும்.. தாராளமா வைச்சுக்கோங்க.. நான் வேணா, ஸ்டாம்ப் பேப்பர்ல, ஹர்ஷுவை மேரேஜ் பண்ற க்யூல நான் நிற்க விரும்பலைன்னு எழுதி கொடுக்கட்டுமா?” என்று ப்ரியாவை சர் பட்டாசாய் வெளுத்து வாங்கியவள், நகுலின் புறம் திரும்பி,
“அப்புறம் சார் நீங்க என்ன அனுமாரா? இல்ல இவங்க தான் சீதா தேவியா? இல்ல ஹர்ஷு தான் ராமனா? இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சே தீருவேன்னு சபதம் போட்டு சுத்துறீங்க? அவனோட வாழ்க்கைல என்ன நடக்கணும்? யார் அவனுக்கு பொண்டாட்டியா வரணும் முடிவு பண்ண நீங்க யாரு? அவே என்ன மூணு மாச குழந்தையா? அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கு தெரியாது? உண்மையான ப்ரெண்ட்.. தன்னோட நண்பனோட கண் பார்வைல கண்டு பிடிச்சுருவான்.. அவனுக்கு யாரை பிடிக்கும்னு.. உனக்கு அவன் இவக்கூட தான் சேர்ந்து வாழணும்னா.. இவளையே அவனுக்கு கட்டி வையி.. யார் வேணாம்னு சொன்னா? நான் என்ன காட்டுனா ஹர்ஷூவை தான் கட்டுவேன்னு உன் வீட்டுக்கு முன்னாடி வந்து உண்ணாவிரதமா இருந்தேன்? இன்னொரு தடவை என்கிட்ட இந்த சின்னப்புள்ள தனத்தை எல்லாம் காட்டுனீங்க? மவனே.. அல்லு விட வைச்சுருவேன்.. ஜாக்கிரதை..” என்று பொறுமி தள்ளியவள், அதற்கு மேல் அங்கு நிற்காது, அங்கிருந்து ஓடினாள். விளானியின் கடைசி இரு வாக்கியங்களில் அங்கு வந்த ஹர்ஷவர்தன், நடப்பது புரியாது ப்ரியாவையும் நகுலையும் பார்க்க,
“அது.. அது.. உன்னோட மேரேஜ்பத்தி பேசிட்டு இருந்தோம்.. அதான் விளா கோவிச்சுக்கிட்டு போயிட்டா..” என்ற நகுலனை பார்த்து மேலும் பேசுமாறு புருவம் உயர்த்தினான் ஹர்ஷவர்தன்.
“என்னோட மேரேஜ்.. அது எதுக்கு இப்போ? உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” என்றவன் அவர்கள் கையில் ஒரு ஃபைலை கொடுத்து,
“இன்னைக்கு ஈவினிங்குள்ள இதோட மொத்த மாடலும் எனக்கு டிசைன் பண்ணி அனுப்பியிருக்கணும்..” என்றவாறே விளானி சென்ற திசையை நோக்கி ஓடினான்.
“இவன் எதுக்கு அவளை தேடி இப்படி ஓடுவான்? ஒருவேளை அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் சம்திங் சம்திங் ஏதாவது இருக்குமோ?” என்று ப்ரியா கேட்க,
“ப்ச்.. நீ வேற காமெடி பண்ணாத ப்ரியா.. எங்க அவளால அவனோட அப்பாக்கிட்டேயும் பாட்டிக்கிட்டேயும் திட்டு வாங்கிடுமோன்னு பயத்துல வேணா.. ஓடுவான்..” என்ற நகுலை யோசனையுடன் பார்த்த ப்ரியா,
“அவனோட அப்பா, பாட்டின்னா அவ்வளவு பயமா?” என்று கேட்க,
“அப்பாக்கிட்ட பயமெல்லாம் இல்ல.. ஆனா, ஒருவித மரியாதைன்னு வைச்சுக்கலாம்.. சின்ன வயசுல இருந்தே விளானியை ஹர்ஷூ தான் பார்த்துக்குறான்.. விளானியோட பாட்டியை தன்னோட பாட்டியாத் தான் பார்த்துக்குறான்.. சோ, அவங்களோட ஒப்பீனியன் அவனுக்கு ரொம்ப முக்கியம்..” என்ற நகுலன் அங்கிருந்து செல்ல முயல,
“அப்போ நாளைக் அவங்க ரெண்டு பேரும் என்னைய ஹர்ஷுக்கு வேணாம்னு டிசைட் பண்ணாங்கன்னா.. நான் ஹர்ஷூவை மேரேஜ் பண்ண முடியாதா?” என்று குழந்தையென கேட்டவளை பார்த்து சிரித்தவன்,
“அதெல்லாம் ஹர்ஷூவோட கையில தான் இருக்கு.. அவனுக்கு ஒன்னு வேணும்னா, அதை எப்படியாவது அடைஞ்சே தீருவான்.. அது யார் தடுத்தாலும் சரி.. அதுனால நீ அவங்களை பத்தி கவலைப்படாத.. எல்லாத்தையும் ஹர்ஷூ பார்த்துக்குவான்..” என்று கூறி அவளை சமாதானப்படுத்தி, அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்ல, அவனோடு சென்றவளுக்கோ ஏதோ ஒன்று சரியில்லை என்பதை போல் உணர்ந்தாள். சில சமயங்களில் நமது உள்ளுணர்வு கூறும் மொழியை நாம் கவனிப்பதில்லை. கவனித்திருந்தால் பின் நாட்களில் ஏற்படவிருக்கும் ஏமாற்றங்களை தவிர்த்திருக்கலாம்.
“வினி.. வினி.. நில்லு.. நில்லுங்குறேன்ல..” என்ற ஹர்ஷவர்தனின் குரல் காதில் விழுந்தாலும் விழுகாதது போல், கீழ் தளத்தை நோக்கி படியில் இறங்கிக் கொண்டிருந்தாள் விளானி.
“ஹேய் நில்லுங்குறேன்ல..” என்ற ஹர்ஷவர்தன், விளானியின் இடையோடு கையிட்டு, அவளை துண்டு போல் தோளில் அள்ளிக் கொண்டு, அங்கிருந்து நடந்தவனிடம் இருந்து துள்ளினாள் விளானி.
“இறக்கி விடு.. இறக்கி விடுன்னு சொல்றேன்ல..” என்று கத்தியவள், அவனது முதுகில் பல் பதிய கடித்து வைக்க,
“ஆஆஆ..” என்றவாறே அவளை கீழே இறக்கி விட்ட ஹர்ஷவர்தன்,
“ஆஆஆஆஆ.. நாயாடி நீ? இப்படி கடிச்சு வைக்குற? நாய் கடிக்கு மருந்திருக்கு.. பேய் கடிக்கெல்லாம் மருந்துக்கு நான் எங்கடி போவேன்? கிராதகி..” என்றவன் தன் முதுகை தேய்க்க முயல, பாவம் அவனது கை தான் எட்டவில்லை.
“இப்ப நான் உன் கண்ணுக்கு பேயாத்தான் தெரிவேன்.. அதான் அவ வந்துட்டாளே.. இனிமே அவ தான் உனக்கு தேவதையா தெரிவா.. நானெல்லாம் உன் கண்ணுக்கு தெரிவேணா? இன்னொரு தடவை வினி.. வினின்னு பக்கத்துல வந்த.. மவனே! கடிச்சு திண்ணுடுவேன்.. இந்தா.. உன்னோட வேலையும் நீயும்..” என்றவள், தன் கழுத்தில் அணிந்திருந்த ஐடி கார்டை கலட்டி, அவன் மீது விட்டெறிந்து விட்டு, அங்கிருந்து ஓடினாள் விளானி. என்ன நடக்கிறது என எதுவும் புரியாது விழித்தவாறு நின்றிருந்தான் ஹர்ஷவர்தன். கோபித்துக் கொண்டு செல்லும் பைங்கிளி மன்னவனைத் தேடி திரும்புமா?
Interesting epiiii ❤️❤️❤️❤️ waiting