ATM Tamil Romantic Novels

Rowdy பேபி – 7

7

 

 தன் மேல் மோதியவளால் தடுமாறி போனான் அருண்…

 

ஹே…என கத்தியபடி இருவரும் ஒருவரை ஒருவர் பிடிமனமாக பற்றி நின்ற பின்பே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்…

 

ஹே ஹாய் எப்படி இருக்கீங்க என அருண் இன் முகமாக கேக்க…

 

யார் என்னும் ரீதியில் பூர்ணா பார்க்க…

 

என்ன பெண் புலி யார் என்று யோசிக்கிறீங்க போல… என அருண் கேக்க…

 

டக்கென நியாபகம் வர… “ஹோ போலீஸ்கார் நீங்களா சாரிங்க அன்னைக்கு நிஜமாவே நீங்க போலீஸ்னு எனக்கு தெரியாது…

 

அன்னைக்கு இருந்த பதட்டத்துல நான் சரியா சாரி கேக்க முடியல அதுக்கு ஒரு சாரி அப்புறம் ஃப்ரெண்ட்ஸை போட்டோ எடுக்குற கவனத்துல பின்னாடியே வந்து பார்க்காம உங்க மேல மோதிட்டேன் அதுக்கு ஒரு சாரி அப்புறம் ஒரு தேங்க்ஸ் என்னை கீழ விழாம பிடிச்சத்துக்கு… உங்களுக்கும் ஒரு சாரி என விவேக்கை பார்த்து கூற…

 

சாரி எல்லாம் வேணாம்ங்க ஒரு ஃப்ரெண்ட்லி அட்வைஸ் இனிமே அடிக்கும்போது ஆளை பார்த்து அடிங்க இல்லாட்டி கொலை கேஸ்ல உள்ள போயிடுவீங்க… எங்கள விட அவ்வளவு மோசமா அடிக்கிறீங்க…என்னா வலி… என விவேக் தன் தலையை தடவ…

 

அச்சோ சாரிங்க… நிஜமாவே வேணும்னு அடிக்கலங்க ஒரு பயத்தில தான்…பூர்ணா தவிக்க 

 

“பரவல விடுங்க அவன் இரும்பு பாடி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்…!”என அருண் கூற

 

“எதே…!” என விவேக் பதற 

 

 “பூர்ணா என்ன பண்ற இங்க வா…!!”அவள் தோழிகள் அழைக்க…

 

“சரிங்க அப்போ நான் வரேன்…!!”என அருண் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட…

 

தன் தோழிகளோடு செல்லும் பூர்ணாவை பார்த்தப்படி நின்ற அருண் தோளில் தட்டிய விவேக்..

 

“இன்னும் என்னடா பார்க்கிற அதான் சாமியே வரம் தந்துடுச்சே அப்புறம் என்ன தயக்கம் போ பொல்லொவ் பண்ணு…!!” என பூர்ணா சென்ற திசையில் அருணை பிடித்து தள்ள… அவனும் உள்ளம் பொங்கும் உவகையோடு அவளை தேடி சென்றான்…

 

அன்று எதோ விஷேசம் என்பதால் கோவிலுக்குள் கூட்டம் கூடி நிற்க… பக்தர்களை வரிசையில் அனுமதித்தனர்… வரிசையில் பூர்ணாவின் பின் போய் நின்றான் அருண்…

 

அவளோ அதை கவனிக்காது நண்பிகளுடன் நீண்ட நேரமாக வரிசையில் நின்று இருக்க அவள் செவியோரம் ஒரு குரல்…யார்டா அது என பார்க்க அங்கு, முகமெல்லம் குறு நகை இளங்க நின்று இருந்தான் அருண்…

 

“உங்களுக்கு கோவிலுக்கு வர பழக்கம் எல்லாம் இருக்கா…??இன்னைக்கு என்னங்க ரொம்ப அடக்கமா பாவாடை தாவணி எல்லாம் போட்டு இருக்கீங்க ஒருவேள உங்களுக்கு புடவை கட்ட மட்டும் தான் பிடிக்காதோ…??அருண் வீடாது அவள் பொறுமையை சோதிக்க…

 

அவள் அப்போதும் பொறுமை காக்க…

 

 

“மேடம் கோவில் என்கிறதால அமைதியை கடை பிடிக்கிறிங்களோ…?? உங்களுக்கு இந்த அமைதியை விட கோவம் தான் அழகா இருக்கு என்றது தான் தாமதம்…

 

“என்ன சார் வேணும் இப்போ உங்களுக்கு…கொஞ்சம் சிரிச்சு பேசிட கூடாதே உடனே முன்ன பின்ன தெரியாத பொண்ணு பின்னாடி வந்துருவிங்களே…உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா…?? “ என பூர்ணா சற்றே குரல் உயர்த்த அருகில் இருந்தவர்கள் கவனம் இவர்கள் மீது பாய…

 

“நான் எங்கங்க உங்க பின்னாடி வந்தேன் நீங்க தான் என் முன்னாடி இருக்கீங்க… சரி ரொம்ப நேரமா நிக்கிறோமே கால் வலி தெரியாம இருக்க கொஞ்சம் பேசினேன் வேண்டாம்னா விடுங்க…!!” என அருண் பயந்தவன் போல் சொல்ல…

 

கூட்டம் கருவறை நோக்கி முன்னே நகர… போக போக கூட்டம் நெட்டி தள்ள அருண் பூர்ணா மேல் விழ அவனை திரும்பி பார்த்து முறைக்க அவன் பின்னாடி தள்றாங்க என சொல்ல… உதடு முனுமுனுக்க அவனை திட்டியபடி முகத்தை சுழித்து கொண்டு திரும்பி நின்றாள்… மூலஸ்தானத்தில் கூட்டம் குறைவாக இருக்க… “ஏங்க நான் யார்னு தெரியலயா…!!”என அருண்…

 

“கண்ணுக்கு முன்னாடி நிக்கிற மனுஷனை எப்படின்னு தெரியாம போகும்… என்னதான் வேணும் இப்போ உங்களுக்கு…!!”என கோவமாக கேட்க 

 

“ஸ்ஸ்ஸ் செம காரம்ங்க… அதான் உங்க கோவம்…

 

ஹிஹிஹி மொக்க ஜோக்…என பூர்ணா அவனை மொக்க பண்ண…

 

 சரி விடுங்க அடுத்த தடவை நிறைய பிராக்டிஸ் பண்ணி நல்ல ஜோக்கா சொல்றேன்…அருண் 

 

 “அடுத்த தடவயா…?? ஹலோ என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல போலீஸ்காரரா இருந்துகிட்டு பொண்ணு பின்னாடி சுத்துறீங்க.. இது தப்பா தெரியல…?? “பூர்ணா

 

 “தப்பா தெரிய என்னங்க இருக்கு… போலீஸ்னா தெரிந்து பொண்ணு கிட்ட பேசுறது தப்பா…??அருண் 

 

“தெரிஞ்ச பொண்ணா…??” விளங்காது பூர்ணா பார்க்க 

 

“ஆமாம் கோவிந்தன் மகள் தான நீங்க…?? “என அருண் அன்று பெண் பார்க்க வந்த விஷயத்தை கூற வர அதற்குள் முந்திக்கொண்ட பூர்ணா…

 

“ ஹார்பர் கோவிந்தன் தெரியாத போலீசே இருக்காதுனு எங்க அப்பா அடிக்கடி சொல்வார்… அது எவ்வளவு உண்மை இப்பதான் புரியுது…!!”

 

 

 அதுவும் ஒரு வகையில உண்மைதான் ஆனால் அதை விட ஒருபடி மேலே உங்க அப்பாவையும் உங்களையும் எனக்கு தெரியும்…!! அருண் 

 

“ப்ச் சரி தெரிஞ்சிருச்சா ரொம்ப சந்தோஷம் நிம்மதியா சாமி கும்பிட விடுங்க சார் …!!”என அருணோடு பேச்சைக் கத்தரிக்க முயல…

 

“ ஏங்க அப்போ உங்களுக்கு நிஜமாவே என்னை யாருன்னு தெரியலையா…

 

“சப்பா முடியல உங்களை பார்த்த உடனே தெரிய நீங்க என்ன இந்த நாட்டோட குடியரசு தலைவரா இல்ல இந்த நாட்டுக்காக ஒலிம்பிக்ஸ்ல விளையாடி பதக்கம் வாங்கி கொடுத்தவரா…!!” என அருணை கலாய்க்க…

 

 “இவ்வளவு பெரிய ஆளுங்களா இருந்தா தான் உங்களுக்கு ஞாபகம் வச்சுக்க முடியுமா இது தெரியாம அன்னைக்கு நான் உங்கள பொண்ணு பார்க்க வந்துட்டேன்… அதான் என்ன ரிஜெக்ட் பண்ணிட்டீங்க போல…!!” என அருண் சிரியாமல் சொல்ல…

 

 அதிர்ச்சியில் சிலையாக உறைந்து போனால் பூர்ணா… நீயா அது என எவ்வளவு ஞாபகப்படுத்த முயன்றாலும் அவளது நினைவலைகளில் அன்று பெண் பார்க்க வந்தது அருண் என அவளால் நம்ப முடியவில்லை பூர்ணாவாள்…

 

 அன்று அவனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை இன்றோ… மிக அருகில் அவன் கனிந்த கண்களும் குறையாத குருநகையும் செதுக்கிய உடல் அழகும் கட்டுக்கோப்பான புஜங்களும் அவன் தின்னென்ற மார்புக்கு அருகில் அவள் முகமும் இருக்க மெய் மறந்து போனாள்…

 

 சிலை என சமைந்து நின்றவளை தோழிகள் அழைத்துச் செல்ல… அருணை பார்த்தபடியே அவர்களுடன் சென்றாள்…

 

 அதன் பிறகு அருண் இருந்த திசை பக்கம் செல்லவதை பூர்ணா தவிர்க்க நினைக்க விட்டானோ கள்வன்…

 

 கோவில் பிரகாரத்தை அவள் சுற்றிவர… அவனும் அவள் பின்னே சுற்றி வந்தான்…

 

 அருண் வருவதைக் கண்டு அவனை தவிர்க்க நினைத்து பூர்ணா வேகமாக பிரகாரத்தை சுற்ற… அதற்குள் குறுக்கே ஒருவர் வந்து விட குப்புற விழ போனவளை மீண்டும் தாங்கி பிடித்தான் அருண்…

 

 எதிர்பாராத அவசர கால நிலையில் விழப்போன பூர்ணாவின் இடையை அருண் வளைத்து பிடித்து இருக்க…

 

 விழப்போனவளுக்கும் தான் விழுந்து விடுவோம் என்கிற பயத்தை விட அருணின் வன் விரல்கள் யாவும் அவள் இடையில் இருப்பதே அவஸ்த்தையை கொடுத்தது… அவன் காப்பாற்ற தான் பிடித்தான் என்றாலும் ஒரு ஆணின் தொடுகை அவளை சிலர்க்க வைத்தது…

 

 நிலையாக நின்று கொண்ட பிறகு பட்டென்று அறிவின் கைகளை தட்டி விட்டவள்… தே…தேங்க்ஸ் என அவன் முகம் பாராமல் கூறிவிட்டுப் போகமுயல 

 

“ ஏங்க இப்ப நான் என்ன பண்ணிட்டேன் நீங்க என்னை பார்த்து இப்படி பயந்து ஓடுறீங்க… பொண்ணு பார்க்க வந்தேன் உங்களுக்கு விருப்பம் இல்லன்னு சொல்லிட்டீங்க அதோட அது முடிஞ்சு போச்சு… தெரிஞ்ச பொண்ணு தைரியமான பொண்ணான்னு உங்க கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது… பேச தோணிச்சு… பேசினேன்… உங்களுக்கும் என்னை பிடிச்சிருந்தா பேசுங்க அதுவும் ஒரு பிரண்டா தான்… மத்தபடி பிடிக்கலைன்னா பரவால்ல நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன்… ஆனா என்னை பார்த்ததும் இப்படி பேய் பார்த்த மாதிரி நீங்க பயந்து ஓடிப் போறது எனக்கு கஷ்டமா இருக்குங்க… என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லை அதை சொல்லத்தான் உங்கள கூப்பிட்டேன்… பைங்க பார்த்து போங்க…!!” என்று விட்டு அருண் போக…

 

 இவள் தலையை உலுக்கி கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தால்… ஆடை மாற்ற கண்ணாடியின் முன்பு நின்றவள்… இடையில் பதிந்திருந்த குங்குமத்தால் ஆன கை அச்சை கண்டு அதிர்ந்தவளுக்கு அது எப்படி வந்தது என்று ஞாபகம் வர… கன்னங்கள் சுடேறியoது…

 

 இறுக பூட்டிய இதயத்தில் கள்ளசாவி போட்டு காவலன் நுழைவானா…??

 

 

 

 

 

Comments and likes pls 🍯🍯🍯

1 thought on “Rowdy பேபி – 7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top