ATM Tamil Romantic Novels

Rowdy பேபி -8

8

 

காலங்கள் கரைந்தாலும் கன்னங்கள் நரைத்தாலும் நெஞ்சோடு நீங்காது சில நினைவுகள்…சிலருக்கு வரமாக சிலருக்கு சாபமாக…

 

அன்று ஒரு வழக்கு விசாரணைக்காக அருண் அந்த பிரதான சாலையில் தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போது…

 

குறிப்பிட்ட இடத்தில் சாலையோரம் மக்கள் சிலர் காத்து இருக்கு அதில் மின்னல் வெட்டு அருணை கவர்ந்தது… அந்த மின்னல் நம் பூர்ணா என நான் சொல்லி தான் தெரிய வேணுமா…??

 

அதன் அருகில் சென்றான் அவளை யார் என்றே அறியாதவன் போல் தவிர்த்து விட்டு அங்கு பரிசோதனையில் ஈடு பட்ட காவலர்களிடம் விசாரிக்க…

 

ஷேர் ஆட்டோல வந்த இந்த அம்மாவோட செயின யாரோ திருடிட்டாங்களாம் சார் அதன் கூட வந்தவங்களை எல்லாம் விசாரிச்சுட்டு இருக்கோம் என சத்தமாக பதில் அளித்தவன்…

 

“அந்த அம்மா **** ஓட மூணாவது வீடாம்… கண்டிப்பா செயின கண்டு பிடிச்சி கொடுத்தே ஆகணும் உத்தரவு சார்…!!” என காதில் கிசுகிசுக்க…

 

“ஹாஹா சரி பார்த்து முடிச்சு விடுங்க செந்தில்…!!”என்றவன்… கூட்டத்தை ஒரு முறை அளந்தவன் பார்வை பூர்ணாவை மட்டும் நிதானமாக ரசித்தன அஃது யாருக்கும் தெரியாத வகையில்… அதை அறியாத பேதையோ… “ஏன் நம்மள தெரியாத மாதிரி நடந்துக்குறாரு… இதுக்கு முன்னாடியும் ரெண்டு தடவையும் இப்படி தான் பண்ணாரு… அன்னைக்கு ஷாப்பிங் மால்ல அப்படி தான் இதுக்கு முன்னாடி காலேஜ் வெளிய பார்த்த போதும் இப்படி தான்… ச்சே ஏன் இந்த மனுஷன் நம்மள அவொய்ட் பண்றாரு… நான் அப்படி என்ன பண்ணேன்…?? “ என உள்ளுற சுணங்கி போனாள் விடலை பெண்…

 

 அவள் இவ்வாறு வருந்தி கொண்டிருந்த வேளையிலே காவலனின் பார்வை அவளிடம் நினைத்திருக்கும் பட்சத்தில்…அவள் அருகில் செல்ல…இவளோ “அச்சச்சோ என்ன நம்ம கிட்ட வராரு அதுவும் இத்தனை பேர் இருக்கும் போது… என்ன பேசு போறாரோ…ஏன் இப்படி பண்றாரு…??” என அடுத்த கணமே அச்சம் கொண்டது பெண்வளின் விந்தையான மனது…

 

 

கையை நீட்டியப்படி பூர்ணா அருகே போனவன் அவளின் பக்கம் பதுங்கி நின்ற ஒருவனின் சட்டையை பிடித்து இழுத்தவன்… அவனிடம் விசாரிக்க அவன் மழுப்பலாக பதில் சொல்ல… செந்தில் இவனை செக் பண்ணுங்க… என்கவும்…

 

சார் சார் நான் அப்பாவி சார்… வீணா என் மேல பழியை போட்டு கொன்னு புடாதீங்க சார்…ஐயோ இதை கேக்க யாருமே இல்லையா… என் வாழ்க்கைஏ போச்சு… இந்த போலீஸ்காரங்க இப்படி அந்நியாயம் பண்ணுறாங்களே… என அவன் கத்தி அழுததில் அங்கிருந்து அனைவருமே அவன் மீது பரிதாபம் தோன்றி அக்காவலர்களை வில்லனாக பார்க்க வைக்க… பூர்ணாவுக்கு அஃது பெரும் கோவத்தை பொங்கியது… இதுதான் மக்களே அநியாயத்தை கண்டால் பொங்குறது…

 

 அருளிடம் பூர்ண கோபமாக ஏதோ கேட்க வரும் முன்… சார் செயின் இவன் கிட்ட தான் சார் இருக்கு என அத்திருடனை பரிசோதித்த காவலர்கள் நகையை மீட்க… அதை கண்ட அனைவருக்குமே அடப்பாவி என்று தான் தோன்றியது… பூர்ணாவுக்கோ அவசரப்பட்டுட்டுமோ… என குற்றவூணர்வு தலை தூக்க… அருணை ஓர கண்ணால் பார்த்து வைக்க…

 

 அவனிடம் வந்த செந்தில்… “எப்படி சார் பார்த்த உடனே அவன் தான் திருடன் கண்டுபிடிச்சீங்க… எங்களுக்கு இவ்வளவு பேரையும் செக் பண்ணி முடிக்கறதுக்குள்ள இந்த வெயில்ல நாக்கு தள்ளி போய் இருக்கும்… நன்றி சார் எங்க வேலையை சுலபமாகிட்டதுக்கு…என நன்றி நவில…

 

 “மனசுல என்ன இருக்குன்னு முகத்தில் பிடிக்கிறவன் போலீஸ்காரன்…!!” என்று விட்டு பூர்ணாவை பார்த்து கண்ணடிக்க… அவள் திகைத்து போனாள் எல்லாம் ஒரு நொடிக்குள் நடந்து முடிந்து இருக்க… நிஜமாகவே என்னை பார்த்து கண்ணடிச்சாரா என அருணை பார்க்க அவன் பார்வையின் நிழல் கூட இவள் பக்கம் வரவில்லை… ஒருவேளை நம்ம கற்பனையோ… ஆஆ பூர்ணா என்னாச்சிடி உனக்கு அவராவது நம்மள பார்க்கிறதாவது மனுஷன் தெரிஞ்ச மாதிரி கூட காட்டிக்கல இதுல கண்ணு வேற அடிக்கிறாரா உனக்கு ஆசை தான் போடி…மனச அலை பாய விடாத பூர்ணா புடிச்சி வச்சிக்கோ… இன்னைக்கு கம்ப்டேஷன் அதை மட்டும் நினை…மற்றத்தை மற மற என தனக்குள் உரு போட்டு கொண்டால் பேதை…

 

சரி செந்தில் அதான் அஃயூஸ்ட் கிடைச்சுட்டா இல்ல ஃபார்மாலிட்டிஸ் முடிச்சிட்டேன் மத்தவங்கள அனுப்பி விடலாமே என்க…

 

பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு மத்தவங்கள விட்டாலும் ஆட்டோ விட முடியாது…சரியான பேப்பர்ஸ் இல்லை முன்னுக்கு பின் முரணா பதில் சொல்றான் திருட்டுல இவனுக்கும் கூட்டோ சந்தேகம் இருக்கு அதனால இப்போதைக்கு ஆட்டோவும் இவனும் எங்க கஷ்டடிக்குள்ள எடுக்கிறோம்…என்க

 

 

 பெரும் சலசலப்பு எது கூட்டத்துக்குள்… செக் இன்னைக்கு எவன் முகத்தில் முழிச்சேன் தெரியல என் பொழப்பே போச்சு என ஆளாளுக்கு புலம்ப… பூர்ணாவுக்கோ பக்கென்று ஆனது அவளது வரைக்கலை படிப்புக்கு இன்றே இறுதி தேர்வு… அதுவும் இன்னும் சற்று நேரத்தில்… அதில் பங்கு கொள்ள முடியாமல் போனால் அவளை இதுவரை பட்டப்பாடு அனைத்தும் வீணாகும்…என்கிற கவலை ஆட்கொள்ள… 

 

 யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என நினைத்தவளுக்கு டக்கென்று அவள் நினைவில் வந்தவன் அருண் மட்டுமே…

 

அவன் தான் அவளை வேண்டும் என்றே தவிர்க்கிறானே…இவளாக சென்று உதவி கேட்க ரோஷம் தடுக்கிறது…

 

எப்படி கேக்குறது ஒரு முறையாவது என்னை பாறேன்யா போலீஸே என மானசீகமாக அவள் கண்கள் கெஞ்ச அதை கண்டு கொள்ளாதவன் போல் அவளை தவிக்க விட்டவன் வண்டியை கிளப்பி கொண்டு செல்ல…

 

வேறு வழி இன்றி இவள் தான் தன் ரோஷத்தை விட்டு அவனிடம் ஓடினால்… ஏங்க போலீஸ்கார் கொஞ்சம் நில்லுங்க என்றதும் செந்தில் என்னமா என கேட்க…

 

உங்களை இல்லை அவரை என அருணை காட்ட… திரும்பி அவன் குறும்பாக புன்னகைக்க…ஓஓ என்று நகர்ந்து கொண்டான்…

 

“ஏங்க நில்லுங்க போலீஸ்கார் கூப்பிட இப்படி போயிட்டே இருக்கீங்களே…!” என அருண் அருகில் ஓடி சென்று மூச்சு வாங்கி நின்றவளை… அளவெடுத்தவன் “என்னையா கூப்பிட்டிங்க…??? சாரிங்க உங்களை சரியா கவனிக்கல…!!” என வேண்டும் என்றே அவளை வெறுப்பேற்ற…

 

 

  “அன்னைக்கு நான் பேசுனத மனசுல வச்சிட்டு இப்படி பார்த்தும் பார்க்காத மாதிரி போறதெல்லாம் ரொம்ப ஓவர்… அன்னைக்கு திடீர்னு நீங்க அப்படி சொன்னதும் எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியாம அப்படி நடந்துக்கிட்டேன்… ஒருத்தவங்களை தெரிஞ்சே அவொய்ட் பண்ணா எவ்வளவு ஹர்ட் ஆகும் உணர்ந்துட்டேன் சாரி…!!”என பூர்ணா உணர்ந்து கேட்க…

 

அதுக்கு என்ன பரவல விடுங்க… இனி ஃப்ரெண்ட்ஸ் ஓகே… அவ்வளவு தான நான் போகட்டுமா…என அருண் கிளம்ப 

 

 

“ஹ ஹையோ இருங்க ப்ளீஸ் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் அவசரம் ப்ளீஸ் எனக்கு இன்னைக்கு arts எக்ஸாம் என்னை காலேஜ் கொண்டு போய் விடுறிங்களா ப்ளீஸ்…!!” என அவனிடம் வேண்ட 

 

அவசரம் சொல்லி அப்படியே நின்னா எப்படி ஏறுங்க என அருண் அழைக்க…

 

சிரித்து கொண்டே அவன் பின்னால் ஏறி கொண்டால்…அவளை சரியான நேரத்திற்கு கல்லூரிக்குள் விட்டவன் அவள் திரும்பி வருவதற்காகவே காத்திருந்தான்…

 

என்னங்க இங்கையேவா வெயிட் பண்றிங்க என பூர்ணா வினவ…

 

இல்லங்க பக்கத்துல சின்னவேலை முடிச்சிட்டு வரும் போது நீங்க வெளிய வந்துட்டிங்க… இவ்ளோ சீக்கிரமா வெளியே வந்துட்டீங்க சுர புலி படிப்புல சுண்டு எலியோ…என கேலி செய்ய…

 

ஹே… அப்படி எல்லாம் இல்லப்பா இது படம் வரையறை எக்ஸாம் தான் எனக்கு ஈஸியா இருந்தது முடிச்சிட்டு வந்துட்டேன்…என பூர்ணா கூற…

 

அப்போ வீட்டுக்கு போக இன்னும் டைம் இருக்கே என அருண் ஜாடையாக கூற….

 

ம்ம்ம் ஆமாம் டைம் இருக்கு…பூர்ணாவும் ஆமோதிக்க 

 

பக்கத்துல எங்கையாவது போலாமா என அருண் ஆராய்ச்சியோடு கேக்க….

 

போலாமே என பூர்ணாவும் ஆனந்தமாக சொல்ல…

 

ஊற்று எடுத்த உல்லாசத்துடன் அருண் வண்டியை கிளப்பி கொண்டு சென்றான்…

 

அதெல்லாம் நொடியில் வடிந்து போனது அவர்கள் வந்த இடத்தை பார்த்ததும்… இங்கையா என அருண் வாய் விட்டே கேட்டு விட…

 

இங்க தான் வாங்க போலாம் என பூர்ணா அருணை அழைத்து சென்ற இடம்… ஆதரவற்றவர்களை அரவணைக்கும் மடாலயத்திற்கு தான்…

 

அருணை அழைத்து கொண்டு உள்ளே சென்றவள் வழி எங்கும் நின்றவர்களை அவர்களுக்கு ஏற்றார் போல் விசாரித்து விட்டு சென்றவள் பொறுப்பாளரிடம் வாங்கி வந்த பொருட்களை கொடுத்தவள்…தன் கையில் சில பொறுப்புகளை எடுத்து கொண்டு செய்வதை அருண் வினோதமாக பார்த்து வைக்க… இருவரும் செல்ல எத்தனையோ இடம் இருக்க ஏன் இங்க அழைத்து வந்தாள் என வியந்தவன் அவளிடம் சென்றே கேட்க எத்தணிக்கும் போது…

 

அதற்குள் மடாலயத்தின் தலைவர் வந்து விட வாமா பூர்ணா பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்க என கேட்டவரிடம் இன் முகமாக பதில் சொல்லி கொண்டு இருந்தவள் அருகில் போய் அருண் நிற்க…

 

இவர் என் கூட தான் வந்தார்… இவர்…??என பூர்ணா தலைவரிடம் அறிமுகம் செய்ய முனைகையில் முந்தி கொண்டவர்

 

 

எ சி பி அருண் சார்…யாருக்கு இவரை தெரியாது அப்புறம் சாரும் இங்க அடிக்கடி வருவாறே…கிரேட் ஜெண்ட்ல் மேன்… என முகமன் வாசிக்க… இம்முறை வியப்படைவது பூர்ணாவுடையதாகிற்று…

 

ஆனால் நீங்க ரெண்டு பெரும் ஒண்ணா எப்படி…?? என தலைவர் இழுக்க…

 

தெரிஞ்சவங்க…அருண் 

 

ஃப்ரெண்ட்ஸ்… பூர்ணா இருவரும் ஒரே போல் சொல்லி விட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட பார்வையில் என்ன இருந்தது…??

 

ஹாஹா சரி சரி என கூறி விட்டு இருவரையும் உள்ளே அழைத்து சென்று பேசி அனுப்ப…

 

வெளியே வந்த அருண் பூர்ணாவிடம் தயங்காது மனதில் பட்டதை கேட்டான்… “என்ன இந்த திடீர்னு சேவைல எல்லாம் ஈடுபாடு…??”

 

அதற்கு உடனே பதில் அளிக்காமல் சிறிது நேரம் மௌனம் காத்தவள்…பின் பெருமூச்சு ஒன்றை சேரிந்தவள்…

 

“உண்மை சொல்லணும்னா… எங்க அப்பா பண்ண பாவத்திற்கு நான் பிராயச்சிதம் தேடுறேன் அதுக்கு தான் இந்த சேவை எல்லாம்… எங்க அப்பாவால எத்தனை பிள்ளைங்க பெத்தவங்க ஆதரவில்லாம இருக்காங்களோ தெரியாது…அத்தனை பேரையும் தேடி சேவை செய்ய என்னால முடியுமா தெரியல…அதான் தெரிஞ்சி வரைக்கும் செய்து அவர் பாவங்களை கழுவிட்டு இருக்கேன் என எங்கோ வெறித்த வண்ணம் பதில் சொன்னவள் கண்களில் சிந்தியது சிறு பனி துளி…

 

அதை தன் விரல்களால் சுண்டி எடுத்தவன்… ஏன்…?? என ஒற்றை கேள்வியை கேட்க…

 

அதில் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தவள்… ஒரு கனம் யோசித்துவிட்டு… “தப்பு சரி சொல்ல எனக்கு தகுதி இருக்குதா தெரியல… ஆனால் அப்பா செய்யுற தப்பை என்னால தட்டி கேக்க முடிஞ்சதே ஒழிய தடுத்து நிறுத்த முடியல… உயிரையும் பொருளையும் பறிகொடுத்தவங்க வீட்டு வாசலில் நின்னு கதறி சபிக்கும் போது இல்லை வேணாம் நெஞ்சு பதறி துடிக்குது… கனம் கூடும் போது இங்க வந்துடுவேன் இவங்களுக்கு செய்யும் போது என்னமோ மனசு லேசாகி போகுது…தப்புன்னு தெரிஞ்சும் என் அப்பாவையும் விட்டு கொடுக்க முடியல…!!”! என்றவள் கண்கள் தாரைதாரையாக வார்த்தது கண்ணீரை…

 

 ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையை உடைத்து பேசும் பூர்ணா அருணின் கண்களுக்கு மேலும் அழகாக தெரிந்தால்…அவன் உள்ளத்தில் விதையாக புதைந்தவள் மேலும் ஆழமாக வேர் ஊன்ற தொடங்கி இருந்தாள்…

 

அதன் பூர்ணாவை அவள் கேட்ட இடத்தில் இறக்கி விட்டவன் சென்று விட… விடாமல் தொடர்ந்தது இருவரது பழக்கமும் தொலைப்பேசி வாயிலாகவும் சிறு சிறு சந்திப்புகளிலும்… நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவர்களுக்குள் இருக்கும் உறவு வளர்ந்தது… இன்னது வரையறுக்காமல் ஒருவரை பற்றி ஒருவர் அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர்… அவன் அறியாத ஒரு அந்தரங்கமும் இல்லை அவள் அறியாது ஒரு ரகசியமும் இல்லை என இருவரும் அத்தனையும் அறிந்து கொண்டனர்…

 

அருண் தனக்குள் பொத்தி வைத்து வளரத்த காதலை பூர்ணாவிடம் சொல்ல நாள் பார்த்து காத்திருந்தவன்… அவளை அலைபேசியில் அழைத்து அவர்கள் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வர சொல்ல… அவள் தானும் ஒரு முக்கிய சொல்ல போவது கூறி வர சம்மதம் தெரிவிக்க…

 

 அவர்கள் எதிர்பார்த்த நாளும் வந்தது… அவளும் வந்தாள் அவனும் வந்தான்…

 

 

ஆசை ஆசையாய் அவன் காதலை அருண் வெளிப்படுத்த…

அதற்கு பதிலாக அவளது திருமண செய்தியை பரிசளித்தாள் பேதையவள்…

 

நொறுங்கியது நேச நெஞ்சம்… இனி மீள்வானோ…?? அல்லது பாய்வானோ…??

 

For next ud 15 likes must 

 

43 thoughts on “Rowdy பேபி -8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top