10
ஏன் எனக்கு மட்டும் எல்லாமே தப்பு தப்பா நடக்குது…அப்படி என்ன பெரிய தப்பு செஞ்சேன்… என விரக்தியில் புலம்புவது அருண் அல்ல பூர்ணா…
அருண் விட்டு சென்றதில் இருந்தே பூர்ணா ஆரம்பித்த புலம்பலை நிறுத்தவில்லை அவள் நிறுத்தினாள் அந்த வேலையை அவள் உள்ளம் எடுத்து தொடர்கிறது…
செய்யுறத செஞ்சிட்டு இப்போ கிடந்த எதுக்கு புலம்புர…இவள் புலம்பல் தாங்காமல் அவள் மனசாட்சியே தடால் என்று வெளியே குதித்து விட்டது…
“நான் என்ன செஞ்சேன்…அவர் மனசுல எதையோ நினைச்சி ஆசைய வளர்த்துக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்… நான் என்னமோ அவரை ஏமாற்றி விட்ட மாதிரி பேசிட்டு போறாரு எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா…!!”என பூர்ணாவுக்கு அன்றைய நினைவில் கண்ணின் ஓரம் பனித்துளி எட்டி பார்த்தது…
“எப்படி நீ ஒண்ணுமே பண்ணலயா எங்க உன் நெஞ்சில கை வைச்சு சொல்லு அவர் எதை எதிர்பார்த்து உன் கிட்ட பழகினாறு என்று உனக்கு சத்தியமா தெரியாது என்று…?? என அவள் மனசாட்சி வெடுக்கு என்று கேட்க…
விக்கித்து போனாள் பேதை… அவர்கள் பேசி பழக ஆரம்பித்த காலத்தில் இருந்தே அருண் அவன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக பூர்ணாவிடம் வெளிபடுத்தி கொண்டு தான் இருந்தான்… இவள் தான் அவனுக்கு எந்த வித பிடிமாணத்தையும் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து கொண்டு இருந்தாள்…இப்போது அதை அவள் மனசாட்சி சொன்னது சுரீர் என்று உரைக்க ஊமையாகி போனாள்…
“பதில் சொல்லு ஏன் பேசாம இருக்க… உனக்கு அவர் காதல் பிடிக்கலைன்னா… நீ என்ன பண்ணி இருக்கணும்…??? ஆரம்பத்திலேயே அதை எடுத்து சொல்லி நமக்கு இது சரி வராது என்று ஒதுங்கி போய் இருக்கணும் அப்படி இல்லையா அவர் முதல் முறையாக உன் மேல உள்ள பிரியத்தை வெளிப்படுத்தும் போது இல்லை என்று அப்போவே நீ உன் மறுப்பை உறுதி பதிவு செஞ்சி இருக்கணும்… அதை விட்டுட்டு மனுஷன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து விட்டு…எனக்கு விருப்பம் இல்லைன்னு கழட்டி விட பார்த்தா வேற என்ன செய்வாங்க…எதோ அருணா இருக்க போய் அத்தோட விட்டார் வேற யாராவது இருந்தா என்ன ஆகி இருக்கும்…என மனசாட்சி பாரபட்ச பாக்காமல் பிரித்து மேய…
அவை எதற்கும் பூர்ணாவிடம் பதில் இல்லை…அது அத்தனையும் சாட்டையடியில் சரியான கேள்வி ஆயிற்றே… வெளிறிய முகத்தோடு விக்கித்து போனவளிடம் இரக்கம் சுரந்ததோ…??
இவ்வளவு தூரம் ஆனதுக்கப்புறம் இப்ப உக்காந்து புலம்பி பிரயோஜனம் இல்லை…போனது போகட்டும் வேலைய பாரு என்று விட்டு மனசாட்சி மறைந்து போக… மனமுடைந்து போனாள் பாவை… அவள் வேதனையோ ஆழ் மனதின் ரகசியம்…அவள் அன்றி யாரும் அறியார்…
வேண்டாம் என தூக்கி எறிந்து பின்பு தான் அதன் அருமை தெரியுமாம் இருந்தவரை அவை எத்தனை இன்றியமையாததாக விளங்கியது என்று… பறிகொடுத்த வேதனையும் கிடைக்காது என்றான பின் வரும் வலியும் சொல்லில் அடங்காதது…
அருணையும் அவன் காதலையும் வேண்டாம் என்று மறுத்த பிறகே…ஒவ்வொரு நிமிடமுமாகவும் நொடிகளுக்குள்ளும் அவன் நினைவு பூர்ணாவை வாட்டலாகியது…
அவன் கண்ணியம் மிக்க பேச்சு…அசத்தும் அமர்த்தலான பார்வை…லாவகமான பழக்கம்…இவை யாவும் பெண்ணவளை பார்க்கும் மற்ற ஆண்களிடம் தேடி தேடி தோற்கடித்தது…
அவன் போல் சிரிப்பு வேண்டும்…
அவன் போல் பேச்சு வேண்டும்…
அவன் போல் பார்வை வேண்டும்…
அவன் போல் கனிவு வேண்டும்…
அவன் போல் அன்பு வேண்டும்…
அவன் போல் ஆதரவ வேண்டும்… என ஏங்கியவளின் உள்ளத்திற்கு தெரியவில்லை…
இவை அனைத்திற்கும்
அவன் தான் வேண்டும் என்று…
அறியும் நாள் எந்நாளோ…??
காலம் ஒரு சக்கரம் என்பார்கள் என்னை பொறுத்து வரை அது பிரேக் பிடிக்காத தண்ணி லாரி தான் எதிர்க்க எமன் வந்தாலும் ஏறி மிதிச்சிட்டு எருமை மாட்டு மேலே போயிட்டே இருக்குமே அதே போல தான் என்ன நடந்தாலும் அது பாட்டிற்கு சென்று கொண்டே இருக்கும்…
பூர்ணா பார்த்த மாப்பிள்ளை மனோஜ் ஒரு பொறியியல் பட்டதாரி லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் மென்பொருள் பொறியாளன்… அவள் எதிர்பார்த்தது போல் எந்த வில்லங்கமும் இல்லாத வரன்… இவர்களைப் பற்றி நன்கு அறிந்த பின்னே பெண் பார்க்கும் படலம் நடந்தேறியது… நிச்சய முதல் திருமணம் வரை அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது… பூர்ணாவுக்கு செய்யும் அத்தனையும் கேட்டு அதற்கு மேலேயும் வாங்கி கொண்டார் காரர் மாமியார்…
எதற்கும் தடையிடமால் தாராளமாய் செய்வதாக ஒப்பு கொண்டாலும் பெண் வீட்டு சார்பாக கோவிந்தன் கேட்டு கொண்டது ஒன்றே ஒன்று மட்டுமே அது ஏற்கனவே தடைபட்ட போன காரணத்தால் பூர்ணாவின் நிச்சயம் மட்டும் கோவிலில் நடத்த வேண்டும் என்பது… ஆ லட்சம் சம்பாரிக்கு மகனுக்கு கோவில்ல நிச்சயமா என அங்கலாயித்து கொண்டாலும் ஒத்துக்கொண்டார் காந்திமதி… தாய் பூர்ணாவின் வருங்காலத்தின் அருமை மாமியார்…
சுழல் காற்றாக சுழன்று அடித்தது காலம்…
இன்று காலை நிச்சயம் இரவு மணமக்கள் அழைப்பு நாளை காலை திருமண என்னும் நிலையில்…
அந்தி சாயும் முன்னே அக்கரை வானில் ஆக்ரமித்து விட்டான் கார்கால மேகமவன்… இடியும் மின்னலும் வெட்டி வெட்டி அனைவரையும் துரித கதியில் விரட்டி விரட்டி கூட்டில் அடைத்தான…
வழக்கத்து மாறாய் வான் இறைந்து நின்றாலும் எதை பற்றியும் கவலை கொள்ளாமல்…அலங்கார ஒளி விளக்குகளில் மிளிர்ந்து கொண்டு இருந்தது கோவிந்தனின் இல்லம்… தெருவையே வளைத்து பந்தலிட்டு… வழினேடுக்க போஸ்டர் கட்அவுட்க்கள் வைத்து அமர்க்களம் படுத்தி கொண்டு இருந்தார்…
படபட என இடிக்கும் இடியோசையே அவர் வைத்த டி ஜே கச்சேரியில் கதி கலங்கி போனது தொன்னுறுகள் தொட்டு இந்த கால இளசுகள் வரை விரும்பும் அத்தனை பாடல்களும் பல விதமாக ஒலிக்க…ஒய்யாரமாக ஆடி பாடி மகிந்தது வானவில்லாக மழலையர் கூட்டம்…
வாசல் தாண்டி வீதி வரை நிறைந்த இருந்த காலணிகள் அவ்வீட்டின் ஜன தொகையை அதிகரித்து காட்ட… தட்டும் கையுமாக பெண்கள் அங்கே இங்கே என அலைந்து திரிய இளசுகள் விழுந்து விழுந்து வேலையை பார்க்க பெருசுகள் அரட்டையில் இறங்க… என எல்லாரையும் கடந்து உள்ளே சென்றால்…
பூட்டிய அறைக்குள் கண்ணாடி முன்பு சர்வ அலங்காரத்துடன் பதுமையாக அவள் பூர்ணா… மணபெண் இன்று செல்வி நாளைய திருமதி என்னும் பட்டதை அடைய போகும் பக்கியவதி…
எல்லாம் சரியாக இருக்கா என அவளுக்கு அலங்கரித்த ஒப்பனையாளர் சரி பார்த்து சீர் செய்து விட்டு போக கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தை உற்று பார்த்த பூர்ணாவுக்கு ஏனோ ஏமாற்றம் தான் வந்தது…
ஏனாம்…அவள் மனசாட்சியே அவளை கேள்வி கேட்டது…
தெரியல…??பூர்ணா
“என்ன தெரியல நீ எதிர் பார்த்தபடி உனக்கு பிடிச்சபடி நீ விரும்பியப்படி தான இந்த கல்யாணம் நடக்குது…!!”மனசாட்சி குத்தல் தூக்கலாக தான் கேட்டது…
“ப்ச் ஆமாம் எல்லாம் என் இஷ்டப்படி தான் நடக்குது அதுக்கு என்ன இப்போ…
நானே வெறுப்புல இருக்கேன் இதுல நீ வேற கடுப்பேத்தாத…என எட்டி பார்த்த மனசாட்சியை குட்டி அமர்த்தி போடா பார்க்க…
ஹா யார் கிட்ட பூர்ணாவின் மனசாட்சி என்றால் சும்மாவா…
ஏன் வெறுப்பு…?? எதுக்கு வெறுப்பு…?? யார் மீது வெறுப்பு…??விடாப்பிடியாக நிற்க
ஐயோ என் மேல தான் வெறுப்பு போதுமா சாமி கொஞ்சம் நேரம் சும்மா இருயேன்…இருக்குற கடுப்பு பத்தாது நீ வேற எரிச்சலை கிளப்பி கிட்டு…என ஆத்திரம் கொள்ள…
நான் சொல்லட்டா ஏன் இந்த கடுப்பு வெறுப்புன்னு…என்ற மனசாட்சியை வேணாம் பேசாதே என பார்க்க…
நான் சொல்லுவேன் சொல்லியே தீருவேன்…அதுக்காக தான் ஆடியின்ஸ் எல்லாம் ஆர்வமா இருக்காங்க…
அது ஒன்னும் இல்லை மக்களே இவள் நிச்சயத்திற்கு திரு அருண் அவர்கள் அழையா விருந்தாளியா வந்ததுக்கு தான் அம்மணி முகாரி ராகம் வாசிச்சிட்டு இருக்காங்க…அது ஏன்னா கேக்குறீங்க…
ஷ் கிட்ட வாங்க… ம்ம்ம்… அடுத்த எபில சொல்றேன்…பை ஈஈ நோ வன்மம்ஸ்…