13
அரும்பிய காதல் மலரும் முன்னே கருகி போனதில் அருண் ஆறாது சினம் கொண்டது மெய்யே…
எல்லாம் அவளை கண்ணால் காணும் வரை மட்டுமே…அவளை அந்த நிலையில் அதுவும் வெட்கத்தில் சிவந்த முகத்துடன் கண்களில் நீர் மணிகள் கோர்க்க அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாத திணறி நின்றாளே…வந்ததே வெறி கண்ணில் பட்டவரை எல்லாம் எரித்து கொள்ள வேண்டும் என…
அப்பொழுது ஒன்றை புரிந்து கொண்டான் அவனுக்கு பூர்ணா மேல் எவ்வளவு கோவம் இருந்தாலும் அவனால் அவளை எந்நிலையிலும் வெறுக்க இயலாது… ஆணின் காதலும் ஆழம் வரை செல்லும் வேர் போல கண்ணுக்கு தெரியாது வீரியத்தை விருட்சமாக காணலாம்…
எங்கே அவளிடம் பேசினால் அவன் பலவீனம் வெளிப்பட்டு விடுமோ என கருதி அமைதியானான்…என்ன தான் காதல் கொண்ட மனதாக இருந்தாலும் விட்டு தர இடம் கொடுக்கவில்லை ஆணின் சுயமரியாதை/ரோசம்…
விலகி செல்ல வேண்டும் என மூளை சொன்னாலும் இன்னும் இன்னும் அவளோடு ஒட்டி உறவாட துடித்த மனதை வறுத்து விட்டான்… இருப்பினும் பூர்ணா தானாக வந்து பேசியதுமே பாலையில் வெயிலில் வீசிய பனி காற்றானது…
அவள் பேசியதில் இருந்தே அவள் மனம் தெளியவில்லை என புரிந்து கொண்டவனுக்கு இன்னும் எங்கே கோவத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை அவனால்… அவளுக்கே அவளை புரியாத போது அவன் கோவப்பட்டு என்ன பயன்… அவள் உளறி கொட்டிய வார்த்தைகள் அத்தனையும் கோர்த்து பார்த்தால் அதில் தெள்ளதெளிவாக இருப்பது அருணை பூர்ணா அவனை அதிகம் தேடி இருக்கிறாள்…அவன் கோவமும் பிரிவும் அவளை வெகுவாக பாதித்து இருக்கிறது என்பது மட்டுமே…
காதலை உணராமல் பிரிவின் வலியை உரைத்தவளை நினைத்து அருணின் இதழுகிடையில் மெல்லிய புன்னகை… ஊடே வாயால் சொன்னது புரியாத போது அணைப்பேணும் உணர்த்துட்டும் என்றே அவளை இழுத்து அணைத்தான்…
மொட்டு வைத்த பூவுடல் அவனுள்ளே ரசவாதம் செய்யும் என்று எங்கே அவன் எதிர்பார்த்தான் என்ன இருந்தாலும் ஆசை கொண்ட ஆணுக்கு உணர்ச்சிகள் இருக்க தானே செய்யும்… ஆசைகள் அளவு கடக்கும்போது சட்டென்று விலகிக் கொண்டான்…
ஆயிரம் இருந்தாலும் அவள் மாற்றான் தோட்டத்து மல்லிகை ஆக போகிறவள் அவளிடம் அப்படி நடந்து கொண்டோமே என தன்னையே வெறுத்து கொண்டான் அருண்…
ஆசை ஒரு பக்கம் ஆட்சேபனை ஒரு பக்கம் என இந்த காதல் வந்து காவலனை படுத்தும் பாடு இருக்கே சப்பா… இதுக்கு கைலாசாவுக்கு சன்னியாசியாவே போயிடலாம் போல…
******
அருண் இழுத்து அணைத்த இறுக்கம் இன்னும் அவள் உடலில் இருந்து கொண்டே இருப்பது போல் ஒரு பிரம்மை பூர்ணாவுக்கு…
எங்கோ தொடங்கிய எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள் எண்ணம் கடைசியில் அருணிடமே வந்து முடிந்தது…
அதை ஏன் நினைத்துக் கொண்டிருந்தவளின் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஜெயந்தி…
“ இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க அங்க மாப்பிள்ளை வந்தாச்சாம் சீக்கிரம் கிளம்பு பெண் அழைப்புக்கு நேரமாச்சு…!!” என பூர்ணா விரட்டினார் ஜெயந்தி
இதோ என்றவள் எண்ணம் மீண்டும் காலத்தின் பின்னால் ஓடியது…
மனோஜ் அவளது வருங்கால கணவன்… அவள் வாழ்விலும் தாழ்விலும் அவனோடு பயணிக்க வேண்டியவன்… அவளுக்கு உற்ற தோழனாக இருந்து எதிர்காலத்தில் அவளை பாதுகாக்க வேண்டியவன்…
ஆனால் உண்மையில் நடந்தது வேறாக அல்லவா இருந்தது…
நாளைய தினம் நிச்சயம் என்ற பொழுதில் முந்தைய மாலை அவள் வீட்டு வாசலில் வந்து நின்றான் மனோஜ்…
என்னவாம் என்று கேட்க… திருமணத்துக்கு முன்பு பூர்ணாவை அவன் வெளிநாட்டு நண்பர்கள் பார்க்க விரும்புவதாக வந்து நின்றான்… தொலைபேசியில் கூட அவனை ஆர்ச்சவ் (archive )பண்ணி வைத்து விட்டாள் பிளாக் பண்ணால் தானே தொல்லை என்று…
ப்ளீஸ் அங்கிள் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ப்ரீ எங்கேஜ்மெண்ட் பார்ட்டி குடுக்கிறாங்க… அவங்க எல்லாம் என்னோட பெஸ்ட் பிரெண்ட்ஸ் இப்போ அவங்க எல்லாம் ஆளாளுக்கு ஒவ்வொரு நாட்டில செட்டில் ஆயிட்டாங்க… அவங்களால கல்யாணத்துக்கு வர முடியாததால பூர்ணாவை இப்போவே பாக்கணும் என்று கேட்கிறார்கள்…ப்ளீஸ் அங்கிள் அவளை என் கூட அனுப்பி வைங்க பத்திரமா நான் திருப்பி கொண்டு வந்து விடுகிறேன்… என பவ்யாமாக கேட்க…
அதுக்கு இல்ல தம்பி கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி பொண்ண தனியா அனுப்பி வைக்கிறது…என கோவிந்தன் மறுக்க…
இருங்க அங்கிள் அம்மா பேசுறாங்க என உடனே அவன் அஸ்திரத்தை பயன்படுத்த… அந்த முனையில் காந்திமதி என்ன பேசினரோ… மறுப்பை வாபஸ் வாங்கிக் கொண்டார் கோவிந்தன்…
ஜெயந்தி பூர்ணாவை தயாராகி வர சொல்லு மாப்பிளை வெளியே கூட போய்ட்டு வரட்டும் என்க…
“என்னங்க பொண்ண கல்யாணத்துக்கு முன்னாடியே அனுப்பின ஊர்ல தப்பா பேச மாட்டாங்களா……!!”என பெண்ணை பெற்றவராக பதற…
“அதெல்லாம் வந்த காலம் ஜெயந்தி…இப்போ எல்லாம் இது பெரிய விஷயமே இல்லை… எப்படி இருந்தாலும் நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறவங்க தானே… விடு எனக்கு அதைவிட என் பொண்ணு மேல நம்பிக்கை இருக்கு…!!” என அவர் வாயை அடைத்து விட…
இஷ்டம் இல்லாமல் அலுப்புடன் கிளம்பி சென்றாள் பூர்ணா…
இதோ அதோ இன்று நள்ளிரவு தொடங்கும் நேரத்தில் அவர்களின் பார்ட்டி முடிய… கடுப்பாகி போனாள் பூர்ணா…
அப்பாகிட்ட என்ன சொன்னிங்க இப்போ என்ன பண்ணி வச்சு இருக்கீங்க…மணி என்ன ஆச்சு தெரியுமா… எனக்கு தெரியாது அப்பா கிட்ட நீங்க தான் பதில் சொல்லணும்… என கடுகடுத்து கொண்டே வந்தாள் பூர்ணா…
மனோஜ்க்குமே பார்ட்டி இவ்வளவு நேரம் இழுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை…கோவிந்தனை எப்படி சமாளிப்பது என்பதை விட தன் அன்னைக்கு என்ன பதில் சொல்வது என்பதே அவனுக்கு பதட்டத்தை கொடுத்து இருக்க…இதில் பூர்ணா வேறு அவனை மேலும் பதட்டத்தை கூட்ட… அயர்ந்து போனான்…
பூர்ணா ப்ளீஸ் நீ வேற கொஞ்சம் நேரம் டென்ஷன் கூட்டத என சிடு சிடுக்க அவனது பதற்றத்திற்கு ஏற்றார் போல் வண்டி நடு வழியிலே இன்ஜின் ஆப் ஆகி நின்று விட…
பெரும் தலைவலி ஆகிப்போனது…அர்த்த ராத்திரியில் நட்ட நடு ரோட்டில் ஆளில்லாத சாலையில் வண்டியோடு மனோஜ் போராடிக் கொண்டிருக்க…
அந்த நேரம் பார்த்து சிலர் கண்டும் காணாததுமாக கடந்து போக… வைக்கிற என்ன படைத்த சில போதை ஆசாமிகள் மட்டும் அவர்களை நெருங்கி விசாரிக்க…
முதலில் எதையும் கவனிக்காத மனோஜ் அவர்களிடம் நிலைமையை சொல்லி உதவி கேட்க…உதவி செய்கிறேன் என்கிற பேர்வழியில் அவர்கள் எல்லையை கடக்கும் போதே நிலைமை வீரியம் புரிந்தவன்… முதலில் பூர்ணாவை காக்க தான் நினைத்தான் ஆனால் அதற்குள் அருகில் இருந்தவன் அவனை அடித்து கத்தியை காட்டி மிரட்ட தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து ஓட…
மனோஜ்-இன் செயலில் ஏமாந்து போன பூர்ணா அக்கயவர்களிடம் போராடி தனியாக அவர்களை சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து… அவர்களிடமிருந்து தப்பித்து ஓடினாள்…
அந்த பொல்லாத இரவில் பொல்லாத மனிதர்களிடம் மாட்டி சிக்கி சிதைய கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை… காப்பாற்ற வேண்டியவனை கைவிட்ட நிலையில் கதறிய படி கற்பை காக்க ஓடினால் பேதை ஓடினாள் ஓடினாள் வார் அறுந்த செருப்பு தடுக்கி விட கழட்டி விட்டு ஓடினாள் கல்லு முள்ளு கண்ணாடி என எது தடுத்தும் நிக்காமல் ஓடியவளுக்கு தூரத்தில் விடிவிளக்கு தெரிய வெளிச்சம் நோக்கி ஓடியவள் ஒரு தெரு சந்திப்பில் வந்து கால் இடறி விழுந்தாள்…
உயிர் பயத்துடன் எழுந்தவளுக்கு கடவுளே நேரில் வந்தது போன்ற இருந்தது அவள் அருணின் பாத சுவடுகளாக இருக்க…
கதறி அழுதப்படி எழுந்தவள் அவனை பாய்ந்து சென்று கட்டி கொண்டாள்…
இரவில் உறங்கச் சென்றால் பூர்ணாவின் நினைவுகளை அவனை கொல்ல துடிக்க அவற்றிடம் இருந்து தப்பிக்க… தொடர்ந்து இரவு பணியை கேட்டு வாங்கி கொண்டவன்…இரவு வாகனத்தில் பட்ரோல் வர… ஒரு தெரு முனையில் டீ குடிப்பதற்காக வண்டியை நிறுத்த… அப்பொழுது எதிர் பாராமல் ஒரு பெண் தலைத்தெறிக்க ஓடி வந்து அவன் காலடியில் விழ…
முதலில் அவளை தூக்கி விட்டவனுக்கு பிறகே அது பூர்ணா என்று தெரிய வர சற்றே துணுக்குற அதற்குள் அவள் கதறிய படி அவனை அணைத்து கொள்ளவும்… அவனுக்கு குழப்பம் மிஞ்சியது…
பசை போட்டு ஒட்டி கொண்ட அணைப்பும் அவள் மெல்லிய உடலில் அடங்காத நடுக்கமும் அவள் மிகவும் பயந்து இருக்கிறாள் என்பதை கூற அவள் முதுகில் கை வைத்து மென்மையாக வருடி விட்டவன் அவள் அழுகை மட்டு பட்ட பின்னே அவளிடம் விசாரிக்க… அவனிடம் நடந்த அணைத்தையும் கூறிவிட்டு அவன் தோள் சாய்ந்தாள்…
பயத்தில் அவனோட ஒண்டி கொண்டாள் என்றாலும்… அவனது அந்த அணைப்பே அவளுக்கு முழு பாதுகாப்பை கொடுத்தது என்பதும் உண்மை…
பூர்ணாவை துரத்தி வந்தவர்கள் அவள் போலீசிடம் அடைக்கலம் ஆகிவிட்டதை தூரத்திலிருந்து பார்த்தவர்கள் தப்பி ஓடிவிட… கான்ஸ்டபிளிடம் அவர்களை பிடிக்கும் பொறுப்பை கொடுத்து விட்டு பூர்ணாவை அவன் பாதுகாப்பிலேயே அவரது இல்லத்திற்கு கூட்டி சென்றான்…
நடந்ததை சுருக்கமாக கூறி விட்டு வந்துவிட்டான்… எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல்…
பாலும் கசந்தது.. படுக்கையும் நொந்தது… அடி என் காதலுக்கு என்ன தான் பொருள்…??
Super ud sis👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 waiting for your next ud
IaYuhkbyC