12
இது காதலா..
இல்லை காமமா..
ஒரு பெண்ணிடம் உருவாகுமா..
தன் வீட்டு பால்கனியில் வழக்கம்போல சிகை கோதி நின்றவனின் மனதில் பல குழப்ப முடிச்சுகள்.
மயூரியை நெருங்கும்போது அவன் மனதில் பல்கிப் பெறுவது என்னமோ காதல் தான்! ஆனால் அதன் பின்னே இருக்கும் அவனது சுயநலமும்.. பழி உணர்ச்சியும் சேர்ந்துகொள்ள.. இது காதலா? காமமா? என்று பிரித்தறியா குழப்பத்தில் ஆரன்!
என்னதான் காதல் என்று நிலையிலிருந்தாலும்… அதையும் தாண்டி பழியுணர்வு பொங்கும் போதெல்லாம் அவன் உள்ளத்தில் ஏற்படும் அந்த தாபமும் தவிப்பும் ஏன் என்று தெரிந்துகொள்ள முடியாமல் தெரிந்து கொள்ள விரும்பாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
கண்களை மூடினால் கன்னங்கள் குழைய வெட்கச்சிரிப்புடன் தன் முன்னே நின்றாள் அந்த மான் விழியாள்!!
இப்போது மருளும் மான்விழிக்கு பதில் மயக்கும் கயல் விழிகளே வந்து இம்சைத்தது!!
திரும்பவும் அவளுடனான ஞாபகம் அவனுடைய சொகுசு கப்பலில் சென்று நின்றது.
அவள் விரல்களை சுவைத்தவனை கண்டு அவள் விழி சொக்கிட நின்றிட..
மேலும் மேலும் அந்தத் தளிர் விரல்களை தன் விரல்களோடு பிணைத்து சிறுசிறு முத்தமாக கொடுத்து அவளை மயக்கி கொண்டிருந்தான் மாயவன்!
அவள் கண்களை மூடி கீழுதட்டை கடித்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயல.. அப்போது அவன் கண்ணில் பட்டது எப்போதும் அவனை மயக்கும் அந்த சிறு மச்சம் கீழுதட்டுக்கு அடியில்!
“லவ்லி..” என்று தன் விரல்களை கொண்டு அதனை தீண்ட..
அவளோ “வேணாமே..!!” என்று கையை வைத்து மறைத்தாள்.
“ஹேய்.. கையை எடு மயூ பேபி? ஐ வான்னா டச் திஸ்” என்றான் ஹஸ்கி வாய்ஸில்..
“ம்ஹீம்” வேகமாக தலையாட்டிச் சிணுங்கினாள்.
“என் ஏஞ்சலோட செர்ரி லிப்ஸ் அடியில் இருக்கும் இந்த குட்டி மச்சத்தை டச் பண்ணனும்னு, கிஸ் பண்ணனும்னு எனக்கு ஏகப்பட்ட ஏக்கம் பேபி. அந்த பாக்கியம் இப்போ தான் எனக்கு கிடைச்சிருக்கு. டச் பண்ண விடேன் ப்ளீஸ்” தன் இதழ்களை மறைந்திருக்கும் அவள் கையை தன் விரல்களால் தள்ளியப்படி அவன் கெஞ்ச.. இவள் மிஞ்ச..
அவனின் கெஞ்சலில் அவளின் மனம் குழைந்தாலும், அவனுக்கு காட்டிட.. அவன் தொட்டிட மறுத்தாள்.
அவன் கெஞ்சி பார்த்தவன், “இந்த ஆரனுக்கு எப்பவும் கெஞ்சி பழக்கமில்லை பேபி.. அதனால..” என்றவன் அவள் என்ன என்று நிதானிக்கும் முன் அவள் கை மீது தன் உதடுகள் வைத்து அழுத்தமாக முத்தமிட,
அவன் இதழ்களின் ஈரத்தில் அவள் கூச்சம் தாளாமல் சட்டென்று கையை நகர்த்தினாள். மிதமிஞ்சிய ஆர்வத்துடன் அவளின் மெல்லிய இதழ்களை தனது விரல்களால் வருடி, சற்றே கீழே சென்று அவளது மச்சத்தை வருடினான்.
“சோ.. பியுட்டிஃபுல் பேபி!” என்றான் வருடியவாறு..
ஒரு கட்டத்திற்கு மேல் நாணம் கொண்ட பெண்ணவள், நெளிந்தபடி தனது வெண்டை பிஞ்சு விரல்களால் அவனின் விரல்களைப் பிடித்து தடுத்தாள். அவள் விழிகளோ கூச்சத்தில் அவனைப் பார்க்க முடியாமல் கடலில் சற்றி சுழன்றன.
“ஓகே.. ஓகே.. மயூ பேபி.. ஐ அண்டர்ஸ்டான்ட்!” என்றவன் அவளிடமிருந்து பிரிந்து வந்து, அச்சிறிய சொகுசு கப்பலின் கம்பிகளை பற்றியவாறு கடலை வெறித்தான்.
அந்தக் கடலை போன்றுதான் ஆரனின் மனமும்.. வெளிப்பார்வைக்கு அமைதியாக காணப்பட்டாலும்.. உள்ளுக்குள் மயூரி மீதான அவனது காதலும் மோகமும் கூடவே காழ்ப்புணர்ச்சியும் கலந்தே போட்டி போட்டு அவனை ஆர்ப்பரிக்கும் கடலாக வைத்தது.
கடல்காற்றை சுவாசித்து அவற்றை அடக்கியவன் “போலாம் பேபி.. டைம் ஆச்சு உனக்கு!” என்று அவன் முன்னே நடக்க… அவனை தொடர்ந்தாள் மயூரி.
எப்பொழுதும் வரும் நேரத்தை விட சற்று தாமதமாக இருந்தது வரதராஜன் ஆபீஸூக்கு… அதுவும் ஆரனே அவளை டிராப் செய்திருந்தான். இறங்கும் முன் அவன் பக்கம் திரும்பி தலையசைத்து விட்டு கதவை திறக்க முயன்றவளின் கையை பிடித்து நிறுத்தியவன் “பேபி ஒன் டைம்.. ப்ளீஸ்!” என்று அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
சற்றுமுன் வரை அவனுடன் நெருக்கமாக இருந்தவள்.. அவனின் முத்தங்களை உள்ளுக்குள் ரசித்தவள் தான், ஆனால் இன்று அவள் வேலை செய்யும் ஆபீஸூக்கு முன்னே அப்படி செய்தவனை அதிர்ந்து அவள் பார்க்க.. அவனோ, ஒன்ஸ்மோர் கேட்டு
மறுபடியும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் எச்சில் அச்சிலாய் பதிய..
“மனசே இல்ல.. பேபி!” என்றான் கிறங்கும் விழிகளோடு..
”ஏனாம்?” என்றாள் சற்றே திணறி.. தன்னை சுருட்டி கொள்ள சுனாமியாய் வரும் அவனின் ஆழ் நிற கண்களை பார்ப்பதை தவிர்த்து..
”உன்னை இப்போ.. இப்படி.. விட்டுப் பிரிய மனசில்ல. அப்படியே கூட்டிட்டு போய்டனும் போல இருக்கு” சட்டென அவள் இழுத்து தன் மார்போடு அழுத்தி, “காலம் முழுதும் இப்படியே உன்னை வைச்சுக்கத்தான் ஆசைப்படுறேன் பேபி!” என்றவனின் இறுகிய அணைப்பில் பெணண்வளின் மனம் பூரித்தது.
இது காதல் இல்லாமல் வேறு என்ன?
வார்த்தையால் சொன்னால்தான் அது காதலா?
அவளுக்கான ஒரு செயல்..
பிரத்தியேகமான ஒரு பார்வை..
லயம் தப்பி துடிக்கும் இதயம்..
கவி பேசும் கண்கள்..
மூச்சு முட்டும் இறுகிய அணைப்பு..
ஒரு ஆழ்ந்த முத்தம்..
இவை அனைத்தும் வார்த்தைகளால் அன்றி.. காதலை பறை சாற்றி விடுமே!!
இருக்க இருக்க அவனின் அணைப்பு இறுக.. “ஸ்ஸ்ஆஆ” என்று மெலிதாக அவள் வலியால் சிணுங்கினாள். உடனே அவளை விலகினான். உதட்டை கடித்தபடி விழி உயர்த்தி அவனைத்தான் பார்த்தாள். அவன் பார்வையோ அவளின் இதழ்களை தான் தின்றது.
“ஓகே.. பை..” என்று அவள் இறங்க..
“இரு நானும் வரேன்.. கண்டிப்பா என் காரை யாராவது பார்த்து இருப்பாங்க.. அதுவுமில்லாம இன்னிக்கு நீ லேட் வேற.. உன் சீனியரை பார்த்து இரண்டு வார்த்தை பேசிட்டு வரேன்!” என்று அவளோடும் அவனும் சேர்ந்து இறங்கினான்.
அதில் அவள் முகத்தில் வெட்கப் புன்னகையும் கண்களில் காதல் மலர்ச்சியுமாக அவனைப் பார்த்தாள்.
அவன் நினைத்தது போலவே அவன் காரை பார்த்து அங்கு வேலை பார்ப்பவன் வரதராஜனிடம் கூற, இவன் ஆபீசுக்குள் நுழையுமுன் அவரே எதிர்கொண்டு இவனை வரவேற்றார்.
அவரின் விவிஐபி கிளைண்டுகளில் இவனும் ஒருவன் அல்லவா??
“வாட் அ பிளஸண்ட் சர்ப்ரைஸ் ஏவி சார்.. இவ்வளோ பிஸில இன்னைக்கு என் ஆஃபிஸ் வந்து இருக்கீங்களே?!!” என்று ஆச்சரியப்பட்டார் வரதராஜன்.
“இன்னைக்கு மும்பை கிளைன்ட் மீட்டிங் சார்.. என்னுடைய கப்பலில் தான். எனக்கு கொஞ்சம் அக்கவுண்ட்ஸ் டீடைல்ஸ் எல்லாம் உங்க ஜூனியர் தான் எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்ணினாங்க.. அதான் கொஞ்சம் லேட்.. உங்கள நேரா பார்த்து தேங்க் சொல்லிட்டு இவங்களையும் டிராப் பண்ணிட்டு போலாம்னு வந்தேன்!” என்றான் கோர்வையாக..
பின்னே இவன் பாட்டுக்கு ஆபீஸில் இருந்து வந்தேன் என்றால்.. நாளை பின்ன இவர்களை துறைமுகத்தில் பார்த்த யாராவது போட்டுக் கொடுத்தால் என்ன செய்வது?
தப்பு செய்யலாம் தப்பில்லை..
ஆனால் அந்தத் தப்பை தப்பில்லாமல் செய்ய வேண்டும்!!
இதுதான் இந்த அசுரனின் தாரகமந்திரம் இப்போது!!
வரதராஜனும் அந்த ஏழுமலையானே நேரில் வந்து காட்சியளித்தது போல பயங்கர உபசரிப்பு கொடுத்தே அனுப்பினார்.
கிளம்பம் முன் மற்ற ஜூனியர் சூழ நின்றிருந்த மயூரியை பார்த்து பிரத்யேகமாக சொல்லிக் கொள்ளும் ஆசை பிறக்க “மிஸ். மயூரி இந்திராக்ஷி!!” என்று கணீர் குரலில் அழைத்தான்.
அவளும் *எஸ் சார்!!” என்று அவன் முன் நிற்க..
“இன்னைக்கு மீட்டிங்ல நாம பார்த்த டீடைல்ஸ் எல்லாம் என் லேப்ல இருக்கு.. கொஞ்சம் வந்தீங்க அதை காப்பி பண்ணி பென்டிரைவ்ல போட்டு தரேன். நைட் முடிந்தால் அதை கொஞ்சம் அனலைஸ் பண்ணிட்டு வாங்க” என்றவன் வரதராஜனிடம் ஒரு தலையசைத்து விட்டு.. வேக நடையுடன் முன்னே சென்றான்.
இவளும் வரதராஜனை பார்த்து கொண்டு நிற்க “அதான் சார் கூப்பிட்டார்ல.. போம்மா போய் வாங்கிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.
காரில் அமர்ந்திருந்தவன் இவள் கார் கதவை திறந்ததும் உள்ளே இழுத்து மெல்ல அணைத்து “பை பேபி!!” என்றான்.
“இதுக்குத்தான் கூப்பிட்டீங்களா?” என்று அவள் கேட்க ஒற்றை புருவத்தை உயர்த்தி “எஸ்!” என்றவன், பின்னர் உன் சீனியர் இருக்காரு.. அவர் முன்னாடி இப்படி செய்தால் அவர் பயந்து விட மாட்டாரா?” என்று சிரித்தான்.
பெருமூச்சுடன் அவளை விட்டு விலகி கதவை திறந்தவன்.. அவள் கையில் ஒப்புக்கு ஒரு பென்டிரைவை கொடுத்து “இதுக்கு மேல நீ இங்க இருந்தா வரதராஜனே உருண்டு பெரண்டு இங்கே வந்து விடுவார். கிளம்பு!” என்று புன்னகைக்க.. அந்த புன்னகை அவள் முகத்திலும் ஒட்டிக்கொள்ள தலையாட்டி விடைபெற்றாள்.
கார் கதவை மூடாமல் அதில் அவன் முழங்கையை வைத்து அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தவனை பார்க்க வயிற்றுக்குள் பல பட்டாம்பூச்சிகள் பறக்க தான் செய்தது மயூரிக்கு.
” எ. . என்ன. என்ன பார்வை?” தயக்கத்துடன் கேட்டாள்.
அவளைப் பார்த்து ”என் நெம்பர் வேணாமா பேபி உனக்கு?” என்றான்.
” எ… எதுக்கு.?” என்றாள்.
”இல்ல… உனக்கு ஏதாவது டவுட் வந்து பேசனும்னு நினைச்சா? அதுக்கு தான் ” என்றான்.
”எனக்கு என்ன டவுட் வரும்?” என்றால் புரியாமல் அவனை பார்த்து..
”மக்கு! மக்கு!! ம்ம்ம்.. இப்போ உன்கிட்ட ஒரு பென்டிரைவ் கொடுத்தேன் இல்லையா? அதில் உள்ள பைல்களை பார்க்கும் போது உனக்கு டவுட் வரும்” என்றான் எரிச்சலோடு..
“ஆனால் இந்தப் பென்டிரைவ்க்குள்ள தான் ஒன்னுமே இல்லையே” என்று அவள் விழி விரித்து கூற..
“சுத்தம்!!” என்று தலையிலடித்துக் கொண்டவன், “அந்த பென்டிரைவில் மட்டும் இல்ல.. இந்த பெண் மண்டைக்குள்ளும் ஒன்னுமே இல்ல!! நல்லா யோசிச்சு வை.. காலைல வந்து அந்த டவுட் கேளு” என்றவன் தன் காரில் பறந்து விட்டான்.
“என்ன டவுட் கேட்கணும் இவர்கிட்ட? இப்படி புரியாம பேசிட்டு போறாரு?” என்று யோசித்தவாறே அலுவலகத்துக்குள் நுழைந்தாள்.
ஏனோ இன்று உள்ள மனநிலையில் அவர்கள் கம்பெனிக்கு போக மனம் விருப்பம் கொள்ளவே இல்லை.
அதுவும் அண்ணன் அவ்வாறு பேசி இவனுக்கு வர இருந்த டெண்டரை பறித்து விட்டான் என்று தெரிந்ததில் இருந்து முணுமுணுத்துக் கொண்டே இருந்தது அண்ணனை செயலை கண்டித்து அவளது மனம்.
மதியம் உணவை வரவழைத்து உண்ணவும், தந்தைக்கு போன் செய்து இங்கே வேலை அதிகமிருப்பதால் இன்று வரவில்லை என்று மட்டும் தெரிவித்தாள்.
மாலை எங்கே அண்ணன் வந்து தன்னை அழைத்து சென்று விடுவானோ என்று சற்று முன்னதாகவே கிளம்பி ஆராதனாவை பார்க்க சென்றாள்.
அவளின் அறையை திறந்து கொண்டு உள்ளே சென்ற சமயம் மிக நுட்பமாக ஏதோ வரைந்து கொண்டிருந்தாள் ஆராதனா..
“என்னடி அடுத்த டிசைனா?” என்று கேட்க தலையை மட்டும் அசைத்தவள் அந்த படத்தை வரைந்து முடித்தே நிமிர்ந்தாள்.
“சாரிடி.. இடையில பேசினாலோ இல்ல நிமிர்ந்தாவோ அந்த இமேஜனேஷன் போயிடும். அதுதான் உனக்கு பதில் சொல்ல முடியல” என்றவளின் தோளை தட்டிய மயூரி “இதையெல்லாம் நீ எனக்கு சொல்லனுமா? போடி லூசு!!” என்று அவளுக்கு எதிரே அமர்ந்தாள்.
இருவருக்கும் டீ வரவழைக்க என்றுமில்லாத அமைதியாக குடித்த மயூரியைப் பார்த்த ஆராதனா “என்ன விஷயம் மயூ? ஏன் உன் முகம் டல்லடிக்குது?” என்று கேட்க அவள் ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தாள்.
“சரி வா.. வெளியில் எங்கேயாவது போகலாம்” என்று ஆராதனா அவளை அழைத்தாலும் அவளுக்கு எந்த இடம் பிடிக்கும் என்று அவளுக்கு தெரியாதா? அவர்களுக்கு சென்றது பீச்சுக்கு தான்.
ஆர்ப்பரித்து வரும் அலைகளை பார்த்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தாள் மயூரி.
ஆராதனாவோ அந்த அலைகளில் துள்ளி விளையாடும் சில கல்லூரி மாணவிகளையும் சிறுசிறு பிள்ளைகளையும் கண்களில் ஏக்கம் மின்ன பார்த்தாள்.
“கலர் கலரா கனவுகள் வந்து குவியற வயசு இல்ல இது! எந்தவித பொறுப்பும் இல்லாமல் சிறு சிறு சந்தோசங்களையும் அனுபவிக்கிற வயசு! இந்த கல்லூரி போகும் வயசு!!” என்று அவர்களை பார்த்தவரே பேசிய ஆராதனாவை “என்னடி ஆச்சு உனக்கு?” என்று கேட்டாள் மயூரி.
“ஒன்னும் இல்லையே.. நீ தான் டல்லா இருந்த.. அதுதான் இங்க கூட்டிட்டு வந்தேன்”
“அது வொர்க் லோட்.. லீவ் தட்! நீ தான் வயசு என்கிற.. கலர் கலர் கனவு என்கிற.. ஒருவேளை காதல் வந்திருச்சா உனக்கு? கவிதையா பேசுற?” என்று கிண்டலடித்தாள் மயூரி.
“ஏன் காதலிக்கிறது தப்பா?
காதல் என்கிறது அற்புதமான… புதுமையான… உற்சாகமான.. ஒரு உணர்வு!! அது உள்ளத்துல ஊற்றெடுத்து அருவி மாதிரி பொங்கி வழியும் நம் இணையிடம்!” எனப் பேசியவாறு மயூரியை கூர்ந்து பார்த்தாள் ஆராதனா.
ஆராதனா பேசும்பொழுது அவளது நினைவுகள் எல்லாம் ஆரனிடம்தான் சென்று நின்றது.
அண்ணன் மீதான ஆராதனாவின் காதலை தெரிந்தவள்தான் மயூரி. அதனால் “அண்ணன் கிட்ட சொல்லிட்டியா ஆரா?” என்றாள்.
“காதலை சொல்லும்னு அவசியம் இல்லடி.. அது உணர்வு நம் இணையோடு செயல்களிலிருந்து அதை நாம புரிஞ்சுக்க முடியும்! அவருக்கும் புரிஞ்சியிருக்கும்!” என்ற ஆராதனாவின் நினைவுகள் நிமிலனின் கண்களில் அவ்வப்போது வெளிப்படும் பாவனைகளிலும் அவனது செயல்களிலுமே சுற்றி சுற்றி வந்தது.
இரு பெண்களின் மனமும் தங்களை நேசிக்கும் அந்த காளையர்களைப் பற்றி தான் நினைத்தது.
ஆனால் அவன்களின் மனதிலோ அப்போது காதல் எல்லாம் இல்லை. ஒருவரை ஒருவர் எப்படி ஜெயிக்கலாம் என்பதிலேயே இருந்தது.
மறுநாள் காலை அனைவரும் சாப்பாட்டில் கூடியிருக்கும் போது.. “உங்க எல்லார்கிட்டயும் கொஞ்சம் பேசணும்” என்றார் தெய்வானை அம்மாள். அவரது முகமும் பலவித யோசனைகள் சிக்கித் தவித்தது போல இருந்தது.
“தூத்துக்குடியில் மிக பிரபலமான குடும்பம். உப்பளம் மற்றும் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் வைத்து நடத்துறாங்க.. அந்த பெரிய இடத்தில் இருந்து நம்ம வீட்டுப் பெண்ணை கேட்டு வந்து இருக்காங்க” என்றார்.
பொதுவாக பெண் என்று தான் சொன்னார். அவர்கள் வீட்டில்தான் மூன்று பெண்கள் இருக்கிறார்களே..
இந்த விஷயம் வேதவள்ளிக்கும் தெரியும். அதேநேரம் இதில் தான் வாய் திறக்கக்கூடாது என்று அமைதியை கடைப் பிடித்தார்.
“யாருக்கா கேட்டு வந்தா? பொண்ணுனு சொல்றீங்க? குறிப்பா யாரை கேட்டாங்க?” என்றார் மெய்யறிவு.
அதே கேள்வியை தான் மற்றவர்கள் முகத்திலும் இருக்க.. அனைவரும் தெய்வானையை பார்த்தனர்.
“அதுதானே இங்கே பெரிய பிரச்சனையே!” என்றார் பெருமூச்சை ஒன்று இழுத்து விடுத்து..
“அம்மா புரியும்படியா சொல்லுங்க? என்ன நடந்தது? என்ன சொன்னாங்க?” என்றார் குருபரன்.
“அவங்க நம்ம வீட்டு பொண்ணுங்கள யாராவது ஒருத்தர் மருமகளா வேணும் தான் சொன்னாங்களே தவிர, இன்னார்தான் வேண்டும் என்று குறிப்பிட்டு எல்லாம் சொல்லலை” என்றார்.
“சரி அதுக்கு என்ன இப்போ?” என்று அலட்சியமாக கேட்டார் மோகனா..
“அப்படியெல்லாம் அவங்க குடும்பத்தை நாம் தவிர்த்துவிட முடியாது. சொந்தத்துக்கு சொந்தம்! கூடவே நல்ல இடமும் கூட.. நம்ம பொண்ணை நல்லபடியாக வச்சிருப்பாங்க.. ஆனா…” என்று இழுத்தவரின் கண்கள் தன் பேத்திகள் பேரன்களையே சுற்றி சுழன்றது.
யாருக்கு யாரை முடிச்சு போடுவது? யாரை வெளியில் கொடுப்பது? என்று ஒன்றும் புரியவில்லை.
மயூரியை நிரஞ்சன் கொடுக்கலாம் என்றாலும் மயுரிக்கு இணையாக நிரஞ்சனை ஏனோ அவர் மனதால் நினைக்கவே முடியவில்லை. தன் பேரன் என்றாலும் பேத்திக்கு அவன் சற்று குறைவே என்று நினைத்தார்.
கூடவே ரஞ்சனி ஆராதனா இருவருமே இரு பெண்களின் மகள்கள். இதில் யாரை நிமிலனுக்கு கொடுப்பது? யாரை வெளியில் கொடுப்பது?
ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்க கூடாது அல்லவா? அதனால் அவர்களுக்கு பதில் சொல்லவும் முடியாமல் இங்கே முடிவெடுக்கவும் முடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருந்தார்.
ஆனால் மெய்யறிவுக்கு நன்றாக புரிந்து விட்டது ஒன்றுவிட்ட அக்காவின் மனக்கவலை.
“இந்த வீட்டுக்கு பெரியவங்க அக்கா நீங்க.. உங்க முடிவு எதுனாலும் அதுக்கு நாங்க கண்டிப்பா கட்டுப்படுவோம்!” என்றார் பெருந்தன்மையாக.. அவருக்கும் நிமிலனை மாப்பிள்ளையாக அடைய வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் கூட்டு குடும்பத்தில் சட்டென்று வாயை விட்டு விட முடியாதே..
மெய்யறிவு அப்படி சொன்னதும் சட்டென்று நிமிலனும் பார்வையும் ஆராதனாவின் பார்வையும் ஒன்றுக்கொன்று நேர் கோட்டில் பதிந்து பின் விலகியது.
மோகனாவுக்கோ கொண்டாட்டம்..
தன் மகள் ரஞ்சனியை நிமிலனுக்கு கொடுத்து.. மயூரியை நிரஞ்சன முடித்து ஒன்றோடு ஒன்று கலந்துவிடலாம். ஆராதனாவை அந்த தூத்துக்குடியில் பெரிய குடும்பத்தில் கொடுத்து தள்ளி வைத்துவிடலாம் என்று எண்ணம் எழுந்தது. ஆனாலும் வாய் விடாமல் அமைதியாகத்தான் இருந்தார்.
அப்போது குருபரன் ஒரு முடிவை கூறினார்.
“மூணு பொண்ணுங்களுக்கும் கிட்டத்தட்ட ஆறு மாசம் வித்தியாசம் தான். கல்யாண வயசும் ஆகிடுச்சு. நாமும் இந்த விஷயத்தை பேச பயந்து தள்ளி போட்டுக்கிட்டே போறோம். ஆனாலும் என்றாவது ஒருநாள் பேசி முடிக்க தானே வேண்டும்?”
“எனக்கு என் இரண்டு தங்கைகளும் ஒன்று தான். மாமா மெய்யறிவுனாலும்.. மாப்பிள்ளை ராகவனாலும் எனக்கு ஒன்றுதான்.
அதனால் இரண்டு இடத்திலும் நான் சம்பந்தம் பண்ணனும்னு நினைக்கிறேன். ஒரு இடத்துல பொண்ண கொடுத்தால் இன்னொரு இடத்துல பொண்ணு எடுத்துக்குவேன்!” என்றார் வெளிப்படையாகவே!!
“இல்லையென்றால் நாம் எல்லா பிள்ளைகளுக்கும் வெளியிலேயே பார்த்துக்கலாம். இப்போ இதுல முடிவு உங்களோடது தான் அம்மா!” என்றார் குருபரன் தெளிவாக.
தந்தை பேசப்பேச மயூரியின் கண்களில் நீர் ஊற்று. அதை யாரும் பார்க்காமல் உள்ளே இழுத்து உதட்டை கடித்து கட்டுபடுத்தி அமர்ந்து இருந்தாள்.
“அப்போ என் பொண்ண மட்டும் யாரோ தெரியாத வெளி ஆளுக்கு கொடுக்கணுமா? இதுக்கு நான் கொஞ்சம் கூட சம்மதிக்கவே மாட்டேன்!” என்று கத்தினார் மோகனா..
“அப்போ எல்லாருக்கும் நாம வெளியிலேயே பார்த்துக்கலாம். அந்த தூத்துக்குடி மாப்பிள்ளையோட ஜாதகத்தை வாங்குங்க.. நம்ம மூணு பொண்ணுங்கள்ல யாருக்கு ஒத்து வருதோ அவங்களுக்கு முடித்துவிடலாம்” என்று குருபரன் தீர்மானமாகக் கூற மோகனாவுக்கு பக்கென்று ஆனது.
சொத்தில் பாதியாவது வேண்டுமே.. சம்மதிக்கவில்லை என்றால் முழுதும் வேறு யாருக்கோ போய் விடுமே என்று பயந்தவர், எப்படியும் மயூரி திருமணம் முடித்து தான் நிமிலன் திருமணம் செய்து கொள்வான். அதனால பர்ஸ்ட் மகனின் திருமணத்தை முடிப்போம். அதன்பிறகு ஆராதனாவை எப்படி நிமிலம் திருமணம் செய்து கொள்கிறான் என்று பார்க்கிறேன்? என்று அவர் மனதில் வஞ்சகத் திட்டம் ஒன்று முளைக்க..
“சரி அண்ணா நீங்க சொன்னது போலவே நடக்கட்டும். முதல்ல மயூரி நிரஞ்சன் கல்யாணத்தை முடிச்சிடலாம்!” என்றார்.
“அது எப்படி ரஞ்சனியை வச்சுக்கிட்டு நிரஞ்சனுக்கு முன்னாடி கல்யாணம் பண்ண முடியும்?” என்றார் ராகவன்.
‘இந்தாளு பேச வேண்டிய இடத்தில் எல்லாம் பேச மாட்டார்! இப்ப மட்டும் கரெக்டா வாயை திறந்து விடுவார்!’ என்று மனதுக்குள் திட்டியவர்,
“ரஞ்சனியை விட ஆராதனா மூத்தவள். அப்படி பார்த்தா அவளுக்கு தான் கல்யாணம் செய்யணும். ஆனால் மயூரிக்கு கல்யாணம் ஆகாமல் நிமலன் கல்யாணம் செய்துக்க மாட்டான். அதனால்தான் முதலில் மயூரி கல்யாணத்தை முடித்துவிட்டு அடுத்தது ஆராதனா செய்யலாம்.. கடைசியாக நாம் ரஞ்சனிக்கு செய்யலாம் என்று சொன்னேன் இது ஒரு தப்பா?” என்று அவர் கூற..
“பேசாம மூணு கல்யாணத்தையும் ஒரே மேடையில் அடுத்தடுத்த முகூர்த்தத்தில் நடத்தினால் என்ன?” என்றார் தெய்வானை!
என்னது?? என்று குடும்பமே அது இருந்தது.
மயூரியின் காதல் கை கூடுமா?
ஆரனின் ஆட்டம் என்னவாக இருக்கும்?
மோகனாவின் வஞ்சக திட்டம் பலிக்குமா?
யாருக்கு யாரோ…

👌👌👌👌👌👌👌👌👌
Sama intresting 👌
Sis nxt ud yeppo poduvinga we are waiting for the ud
Sema and intresting sis