16
பிரிந்த காதலர்களின் துயரை தாங்காது வானம் கண்ணீரை மழையாக கொட்டியதோ… அல்லது ஆணுக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக கோவத்தில் டம் டம் என்று இடியும் முழங்கியதோ…தெரியாது ஆனால் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி கொண்டு இருந்த அந்த இரவு வேளையில்…
“இவர் பெரிய தேவதாசு காதலிச்ச பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு போய் பல்லாண்டு வாழ்கன்னு வாழ்த்திட்டு வந்து இருக்காரு… ஏன்டா நிஜமாவே உனக்கு சூடு சொரணை எதாவது இருக்கா…??
என்ன முறைக்கிற உனக்கு சூடு சொரணை இருந்திருந்தால்…அவளை அங்கேயே வச்சி நாலு அப்பு அப்பி ஏண்டி என்னை ஏமாற்றிட்டு வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக்க போறியே உனக்கு வெக்கமா இல்லையான்னு நாக்கை பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேக்காம சிரிச்சு போட்டோக்கு போஸ் கொடுத்துட்டு வந்து இருக்கனும்…அதை விட்டுட்டு டேய்ய் இவனை எல்லாம் என்ன பண்ணலாம் மாமா ஹக்… இவனை இப்படி இருக்கிறதுனால தான் அவள் இளிச்சவாயனாக்கிட்டு ஓடி போயிட்டா…!!” என நண்பர்கள் கும்பலாக உட்கார்ந்த சரக்கடித்துக் கொண்டிருக்கையில் விவேக் மப்பில் பேச…
“கரெக்ட் இந்த முறை விவேக் மச்சான் சொல்றது தான் சரி… நீ அந்த பொண்ண சும்மா விட்டு இருக்க கூடாது… ஒன்னுல ரெண்டு பார்த்து இருக்கணும்…ஏன்டா சிரிக்கிற… பாருடா இவனை இதுக்கும் சிரிக்கிறான்…!!” என சிவா அங்கலாய்க்க
அப்படி உன் கிட்ட இல்லாதது என்னதான்டா அவன் கிட்ட இருக்குனு உன்னை விட்டுட்டு அந்த **** கட்டிக்க போறாளாம் என விவேக் ஆள் இல்லாத தைரியமோ அல்லது ஆறு ரவுண்டு உள்ளே போன அதுப்போ தெரியவில்லை அவன் இஷ்டத்துக்கு பேசினான்…
அதற்கு அருண் ஏதோ பதில் கூற வரும் முன் அருணின் அன்னை இருமல் சத்தம் கேட்க… போதையில் சலம்பும் நண்பர்களை அடக்கினான்…
ஷ்ஷ் சத்தம் போடாதீங்கடா அம்மா தூங்குறாங்க…
அம்மாவா அப்போ வீட்டில் வைத்து தான் தண்ணி கச்சேரி நடக்குதா ஆம்… பொதுவாகவே நண்பர்கள் முன் வரும் சரக்கு அடிக்க விரும்பினால் கூடுவது என்னவோ அருணின் வீட்டில் தான்… கேட்டால் அவன் தான் பேச்சிலர் பிரச்சனை இருக்காது என்பார்கள்…விவேக் இருக்கானே என்றால் சொல்லவா வேண்டும் சரக்கு என்றால் அவனை சரக்குக்கு சைடிஸ் ஆக வறுத்து விடுவார்கள் அவன் குடும்பத்தார்…
இன்பம் துன்பம் எல்லாவற்றையும் நண்பர்கள் கூடி சரக்குடன் கொண்டாடுவது வழக்கம் அருணுக்கு பழக்கம் உண்டா என்று கேட்டால் உண்டு… அவனாக விரும்பினால் மட்டுமே மது அருந்தவான்… விரும்பா விட்டால் நண்பர்களுக்கு வெறும் கம்பெனி மட்டும் கொடுப்பான்… எந்த விஷயத்திலும் அவனை யாராலும் கட்டாயப்படுத்த முடியாது…
இன்று அவன் காதலித்த பெண்ணுக்கு நிச்சயம் என்றதுமே புண் பட்ட நண்பனை மது ஊற்றி அனைக்க இவர்கள் வந்து இருக்க…அவனுக்கு ஒரு பெக் ஊற்றி விட்டு அவன் குடித்தானா இல்லையா என்று கூட பார்க்காமல் எட்டு ரவுண்டில் எட்டு பாட்டிலை முடித்து விட்டு போதையில் சளம்பி கொண்டு இருந்தனர் மற்ற இருவரும்…
“காதலிச்ச பொண்ணு நமக்கு கிடைக்கலன்னா அவளை அசிங்க படுத்துறதோ அவள் மேல ஆசிட் ஊத்துறதோ இல்லடா ஆண்மை… நாம உண்மையா காதலிச்ச பொண்ணுடா அவளை கஷ்ட்டப்படுத்தியோ காயப்படுத்தியோ பார்க்க எப்படிடா முடியும்… அவ சிரிப்ப பார்த்து ரசிச்சு நமக்கு அவளை அழ வச்சு பார்க்கிறதா வீரம்…ச்சே இல்லைடா அவ நமக்கு கிடைக்க மாட்டாள் என்று தெரிஞ்சா அப்புறமா… கண்ணியமா விட்டு கொடுத்து ஒதுங்கி போறவன் தான்டா உண்மையான காதலன்… காதலிச்ச நொடிகளோட கடந்து போறான் பாரு அவன் தான் ஆம்பள…!!” என அருண் கூறுவதை கேட்டவர்கள்…
“இவன் இப்படி எல்லாம் பேசுறதால தான் மச்சான் எனக்கு அடிவாயாற்றில் இருந்து அப்பிடியே பொங்கி பொத்துக்கிட்டு வருது… சைக் சொல்லிட்டான் தத்துவ ஞாயானி பெருசா… எங்க நெஞ்ச தொட்டு சொல்ல சொல்லு அவனுக்கு கொஞ்சம் கூட வலி இல்லன்னு…என விவேக் அருண் கண்களை பார்த்து கேட்க…
அருண் அமைதியாகி போனான் இல்லை என்று மறுக்க முடியுமா அவனால் இதயத்தை வேரோடு பிடிங்கி விட்டு வலிக்குதா என்று கேட்டால்…அவன் என்ன பதில் சொல்வான்…??
அருண் அதற்கு பதில் அளிக்கும் முன்…சாந்தி இருமல் சத்தம் தொடர்ந்து அதிகரிக்க எழுந்து ஓடினான் மைந்தன் மருந்தை எடுத்து கொண்டு… சாந்திக்கு இப்படி அடிக்கடி இரவில் நடக்கும் என்பதால் தயாராக வைத்திருந்த மருந்தை அருண் எடுத்து சென்றான்…
மருந்தையும் தண்ணீரையும் தந்து அவரது முதுகை தடவி கொடுத்து சமாதானம் செய்தான் அருமை மைந்தன்…”என்னமா நீங்க வர வர சரியாவே மருந்தை எடுத்துக்க மாட்டிங்குறீங்க…இப்போ பாருங்க இருமல் எப்படி அதிகமாச்சுன்னு… சமயத்துக்கு மருந்து கொண்டு வந்தேன்…இல்லனா என்ன ஆகும் என அன்னைக்கு அறிவுரை கூற…
அவரோ அவன் பேசியதை எல்லாம் கண்டு கொள்ளாமல்…”அந்த மருந்து கசப்பா இருக்குப்பா அதை விடு உனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிக்குமா…?? தாமதம் தான் இருந்தாலும் அம்மா வேணுனா அந்த பொண்ணு கிட்ட பேசி பார்க்கவா…என கேட்க…
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா…நமக்கு பிடிச்சது எல்லாம் கட்டாயம் நடந்தே தீரணும் அவசியம் இல்லையே…!!”என்ற மகன் பேச்சில் உயிர் இல்லை என்பதை கண்டு கொண்டார் அன்னை…
ஏன் கண்ணு அப்போ உனக்கு வருத்தம் இல்லையா
“இருக்க தான்மா செய்யுது…மதுரை வீரன் பொம்மிய தூக்கின மாதிரி போய் அவளையும் தூக்கிட்டு வான்னு ஒரு மனசு சொல்லுது தான் ஆனால் யாரையும் கட்டாயப் படுத்தி காதலிக்க வைக்க முடியாதே…என் காதலுக்கு அவ்வளவு தான் அதிஷ்டம் என்று நினைச்சுக்க வேண்டியது தான்…!!” என அருண் பேசியதை வெளியில் நின்ற விவேக் கேட்டான்…
சரக்குக்கு தண்ணி எடுக்க வந்தவன் காதில் விழுந்தவை இவை…
“வருத்தப்படுறியே கண்ணு… உழைச்சலுக்கு ஒருநாளும் சோம்பாத பிள்ளை இன்னைக்கு உன் மனசு சுணங்கி போச்சே ராஜா…அம்மா இருந்தும் இந்த பிள்ளைய நிற்கதியா விட்டுட்டேனே…!!” என அவர் மகனை நினைத்து புலம்ப…அவருக்கு இருமல் மேலும் அதிகமானது…
அம்மா என்னை பற்றி கவலை பட்டு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க இருங்க சூடு தண்ணி எடுத்து வரேன் அதுவரை சஞ்சி உட்காருங்க படுக்காதீங்க இன்னும் இருமல் அதிகம் ஆகும்…என்றவன் சென்ற வேகத்தில் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்து அன்னையின் பக்கத்திலே இருந்து அவர் உறங்கும் வரை உடனிருந்தான்…
அன்னையை உறங்க வைத்து விட்டு வெளியே வர…அந்நேரம் பார்த்து அவன் வீட்டின் கதவு தட்டப்பட்டது முதலில் இடி என நினைத்தவன்… அமைதியாக கடக்க பார்க்க மீண்டும் தட்டலோசை தாளம் தப்பி தட்டியதில் சந்தேகமாக கதவருகே சென்று பார்த்தவன் திகைத்தான்… ஏனெனில் அங்கே கொட்டும் மழையில் நின்று இருந்தது மணமகள் பூர்ணா…வேகமாக கதவை திறந்தான்
அருண் வருவதை பார்த்த விவேக் அவனிடம் பேச அருகே வந்தவனுக்கு அருணின் முதுகு மட்டுமே தெரிந்தது…
“மச்சான் இந்த நேரத்துல எங்கடா வெளிய போற… இப்போ என்ன அந்தப் பிள்ளைக்கு நாளைக்கு காலையில தான கல்யாணம் விடிய இன்னும் நேரம் நாம இப்போவே போய் அந்த பிள்ளை கையை காலை கட்டி தூக்கி வரோம்…
“த த அது உன் கையில கால்ல விழுந்து தூக்கிட்டு வரோம் த்து சீ ஆசீர்வாதம் இல்லை வாழ்த்திட்டு வருவோம்…!!”என அந்த நேரத்தில் பூர்ணாவை பார்த்த பயத்தில் விவேக் உளறி கொட்ட… அவனை கண்டுக் கொள்ளாமல்…
உள்ள வரலாமா என அருணை பார்த்து கேட்க…
“ஹே பூர்ணா என்ன இது இந்த நேரத்துல இங்க…அதுவும் இப்படி என்னாச்சு முதல்ல உள்ள வா தலையை துவட்டு என துண்டை கொடுத்தான்…
அதெல்லாம் அப்புறம் என்பது போல் வாங்காமல் நின்றவள்…
“உன் கிட்ட ஒன்னு கேட்டு வந்து இருக்கேன்… மறுக்காம செய்வியா… என கொக்கி போட…
முதல்ல என்னனு சொல்லுமா என அப்போது உணர்ச்சி வசப்படாமல் நிதானமாகவே இருக்கும் இந்த குணம் தான் பூர்ணாவுக்கு அவன் மேல் ஈர்ப்பை ஏற்படுத்தியது…ஆனால் இந்த நிதானம் இப்போது அவளுக்கு தேவப்படாதே…
நீ மறுக்க மாட்டேங்குற நம்பிக்கைல தான் இங்க வந்து இருக்கேன் என மந்திரத்தை போட்டு விட்டு அருணை பார்க்க ம்ஹும் அசைந்தான் இல்லை…
இதற்கு மேல சூசகம் தேவை இல்லை என நினைத்தவள் நேரடியாகவே கேட்டாள்…
“என்னை கல்யாணம் கட்டிக்கிறியா…??”
அருண் அசந்து நிற்க…விவேக் வாயை பிளந்தான்…
இதுதான் பழம் நழுவி பால்ல விழறதா…?? என நினைத்தான்…
சொல்லு என்னை கட்டிப்பியா…?? மாட்டிய…?? என அருணை வற்புறுத்த…
பூர்ணா…பூர்ணா…. என்னாச்சு ஏன் இப்படி செய்யுற முதல்ல உனக்கு என்ன ஆச்சு இந்த நேரத்தில மண்டபத்தில் இருக்க வேண்டிய நீ எப்படி இங்க வந்த…இதுக்கெல்லாம் பதில் nee சொன்னதுக்கு அப்புறம் உன் கேள்விக்கு நான் பதில் சொல்றேன் என தெளிவாக நழுவினான்…
பதில் சொன்னதுக்கு அப்புறம் என்னை கட்டிப்பியா என இவள் அதிலே நிற்க…
“என்னடா இது…!!”என்றனது அருணிற்கு…
நீ சொல்லு பார்ப்போம்…நீ எப்படி கேட் போட்டாலும் நான் அவ்வளவு லேசில் சிக்க மாட்டேன் என்கிற ரீதியில் அருண் இருக்க…
இன்னைக்கு இந்த போலீஸை புடிக்காமல் விட கூடாது என்று பூர்ணா நிற்க…
இன்னொரு பக்கம் பொண்ணை காணோம் எடுறா வண்டிய தூக்குடா பொண்ணை என்கிற ரீதியில் தினேஷ் மற்றும் கோவிந்தன் கத்தியும் கம்புமாக வலை வீசி தேடி கொண்டு இருந்தனர்…
இத்தனை கலவரத்துக்கு மத்தியில் ரவுடி பேபி இன் திருமணம் நிறைவேறுமா…??
ஹாய் செல்லம்ஸ் என்மேல கொலவெறில இருப்பிங்கன்னு தெரியும் 🫣🫣 இருந்தாலும் தாமதம் ஆனதுக்கு மன்னிச்சு… நானும் ரெகுலரா கொடுக்க தான் நினைக்குறேன்… விடமாட்டிங்கிறாங்களே ஞாயன் எந்தா செய்யுங் தெய்வமே 😭😭😭
после капельницы от запоя на дому [url=https://kapelnica-ot-zapoya-kolomna11.ru/]после капельницы от запоя на дому[/url] .
Emergency Departments are here to deal with emergencies, but for minor illness or injury, there are a range of other care options to consider.
offers received from reputable pharmacies before you actually zithromax z pak dosage , a great treatment, by using online discounts
Share cups, glasses or utensils among family members, especially during peak cold and flu seasons.
Usually they do not cause problems.
Make sure you talk to a real person when you where to buy stromectol at great prices when you purchase from respectable online
Want it tomorrow, Aug.
Car rental is the best choice for traveling, wide range of services.