ATM Tamil Romantic Novels

உயிரோடு விளையாடும் அழகிய 01

அத்தியாயம் -1

 

“மம்மி அந்த வீட்டுக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”

 

“இன்னும் கொஞ்ச தூரம் தான் போகனும்..”

 

“டாடி எப்போ வருவாரு?”

 

“டாடி பிஸ்னஸ் விஷயமா வெளியூர் போயிருக்காரு.. அடுத்த வாரம் வந்துருவாரு..”

 

“நான் பின்னாடி பாட்டிக்கிட்டப் போய் உட்கார்ந்துக்குறேன்..”

 

“டேய் இஷான்.. பார்த்துடா.. இடிச்சுக்கப் போற..”

 

காரை செலுத்திக் கொண்டிருந்த ரக்ஷிதாவின் எச்சரிக்கையை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் பின்சீட்டில் இருந்த தனது பாட்டி ராஜாத்தியிடம் தாவினான் ஐந்து வயதான இஷான்.

 

“டேய்.. எருமை.. பன்னி.. ஒரு இடத்துல உட்கார மாட்டியா? அம்மா இங்கப்பாருங்க.. இவன் என்னோட சிப்ஸ் பாக்கெட்டை பிடிங்கிட்டு தரமாட்டேங்குறான்..” என தனது தம்பியிடம் இருந்து சிப்ஸ் பாக்கெட்டை பிடிங்கினாள் பதிமூன்று வயதான நிலானி. 

 

“அம்மா வண்டி ஓட்டிட்டு இருக்காங்கல்ல.. இப்படி டிஸ்டர்ப் பண்ணக்கூடாது.. இரண்டு பேரும் பேசாம வாங்க..”

 

“நல்லா சொல்லுங்க அத்தை எப்பப் பாரு.. இரண்டு பேரும் அடிச்சுக்குதுங்க..” என அதிகாலை நேர பனிப்பொழிவில் தனது காரை அந்த தேசிய நெடுஞ்சாலையில் செலுத்திக் கொண்டிருந்தாள் ரக்ஷிதா. 

 

“ஐ.. மம்மி.. எவ்ளோ பெரிய வீடு.. இது நம்ம வீடா?” என இஷான் கேட்க

 

“ம்ஹூம்.. இல்ல இது பக்கத்து வீட்டுக்காரங்க வீடு.. நாம ரெண்ட்டுக்கு வந்துருக்கோம்.. போடா.. டேய்.. இது நம்ம அப்பா வாங்குன வீடு தான்..”

 

“ஏன்மா.. ரக்ஷி.. இவ்வளோ தூரத்துல ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற இந்த வீடு தான் உன் புருஷனுக்கு கிடைச்சுதா?”

 

“நான் என்ன அத்தை சொல்றது? நான் சொன்னா மட்டும் உங்க பையன் கேட்கவா போறாரு? இது அவருக்கு தெரிஞ்ச யாரோ ஒரு ப்ரெண்ட் மூலமா வாங்கிருக்காறாம்.. இதே அஞ்சு செண்ட் நிலம் சிட்டிக்கு நடுவுல மூணு மடங்கு அதிக ரேட்டுக்கு சொல்றாங்க.. அதான் இந்த வீட்டை வாங்கிட்டாரு அத்தை..”

 

“அதெல்லாம் சரிமா.. ஆனா இது.. இந்த வீடு ஒரு மாதிரி பார்க்க.. பேன்னு இருக்கு.. நம்ம அஞ்சு பேருக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு? எனக்கென்னமோ இது சரியாப்படல..”

 

“போகப் போக சரியாகிடும் அத்தை.. பசங்க ஸ்கூலும் இங்கிருந்து பக்கம் தான்.. அவருக்கும் ஆஃபிஸ் போக வசதி.. அதான் இங்கேயே வாங்கிட்டாரு..”

 

“நல்லப் புருஷன்.. நல்ல பொண்டாட்டி.. நீ என்னைக்கு அவனை விட்டுக் கொடுத்து பேசிருக்க? சரிமா.. இந்த பால்காரன், பேப்பர் கார்ன், கேஸ் அப்புறம் டிஸ் கணெக்ஷன்.. அவங்களுக்கெல்லாம் சொல்லிட்டியா?”

 

“அதெல்லாம் சொல்லியாச்சு அத்தை.. நம்ம திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்து அரேன்ச் செய்றதுக்கும் ஆள் வந்துருவாங்க.. நாம ஹாயா பால் காய்ச்சினா போதும்..”

 

“ஏதோ நீ சொல்ற.. நான் கேட்குறேன்..” எனக் கூறிய ராஜாத்தியம்மா அந்த வீட்டை சுற்றிப்பார்த்தார். 

 

“ரக்ஷி.. இங்க பூஜை ரூம் எங்கயிருக்கு?”

 

“அங்கன ரைட் கார்னர்ல இருக்குற ரூம் அத்தை..”

 

“ஓ.. சரிமா.. முதல்ல சாமி படத்தை அடுக்கி வச்சு விளக்கேற்றி சாமி கும்மிடனும்..”

 

“பண்ணுங்க அத்தை..”

 

“என்னப் பொண்ணுமா நீ? சாமி தெய்வம்னு எதையும் நம்பாம ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரி தான் ஜோடியா அமைஞ்சிருக்கீங்க இரண்டு பேரும்.. எப்படித்தான் அவனை மாதிரியே ஒரு லைஃப் பார்ட்னரை தேடி கண்டுபிடிச்சானோ?”

 

“என்னை கழுவி கழுவி ஊத்துனதெல்லாம் போதும்.. நீங்க உங்க பூஜையை கண்டினியூ பண்ணுங்க..”

 

“பாட்டி.. நாங்களும் உங்கக்கூட வர்றோம்..” என ராஜாத்தி அம்மாவிற்கு உதவி புரியத் தொடங்கினர் நிலானியும் இஷானும். 

 

சாமிப்படங்கள் அனைத்தையும் பூஜையறையில் மாட்டியவர், விளக்கேற்ற முயற்சித்தார். அவர் ஒவ்வொரு விளக்கேற்றும் போதும் பலமாக காற்று வீசி அதனை அணைத்தது.

 

“என்னப் பாட்டியிது? விளக்கு எரியவே மாட்டேங்குது..”

 

“அ..அ..அ.. வந்து காத்தடிச்சதுல அணைஞ்சுருக்கும்.. திரும்ப ஏத்துவோம்.. நீங்க ரெண்டு பேரும் போய் அம்மாகிட்ட பால் வாங்கி குடிக்க.. பாட்டி பூஜையை முடிச்சுட்டு வர்றேன்..” என தனக்கு இருபுறமும் அமர்ந்திருந்த குழந்தைகளை வெளியே அனுப்பியவர், கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய ஆரம்பித்தார். அவ்வாறு அவர் படித்துக் கொண்டிருக்கும் போது, அவரது காதில் சீற்றமாய் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. 

 

“நிறுத்து.. நிறுத்துடி.. இல்ல..” எனக் கேட்ட குரலையடுத்து சட்டென்று தனது கண்களை திறந்து பார்த்தவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவர் மீண்டும் கண்களை மூடி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய ஆரம்பிக்கும் போது ‘ச்சில்’ என்ற சத்தத்துடன் மாட்டியிருந்த தெய்வப்படங்கள் அதிகப்படியான காற்றின் காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது.

 

“முருகா.. என்னயிது அனர்த்தம்? சாமிப் படங்கள் கீழே விழுந்து உடையுதே.. இங்க என்னயிருக்குன்னு தெரியலையே..” என தெய்வத்தின் முன் நின்று முறையிட்டும் கொண்டிருந்தார் ராஜாத்தியம்மா. 

 

அதே நேரம் காலை உணவிற்காக குக்கரில் சாம்பார் வைத்துவிட்டு திரும்பிய ரக்ஷிதாவின் கண்ணெதிரேயே அடுப்பில் வைத்திருந்த குக்கர் அரையடி மேலே உயர்ந்து சுத்தியது. அதன் மேல் இருந்த மூடி திறந்து , அதிலிருந்த சாம்பார் அனைத்தும் சிதறியது. 

 

“அய்யோ.. அம்மாஆஆஆஆ..” என்ற ரக்ஷிதாவின் அலறல் கேட்டு சமையலறைக்குள் ஓடி வந்தார் ராஜாத்தி அம்மாள். ரக்ஷிதாவின் உடல் மீது சொட்டு சாம்பார்துளி கூட படாமல் அந்த இடமெங்கும் சிதறிக் கிடந்தது. 

 

“அம்மா.. என்னாச்சும்மா?”

 

“நிலானி.. அங்கேயே நில்லு.. உள்ள வராத.. பூரா சாம்பாரா இருக்கு.. வந்தா வலுக்கி விழுந்துடுவ..” என ரக்ஷிதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே “அம்மாஆஆஆ..” என்ற அலறல் சத்தத்தோடு அதில் வலுக்கி விழுந்தான் இஷான். 

 

“டேய் இப்போ தானே சொன்னேன்.. வலுக்கி விழுந்துருவன்னு.. அதுக்குள்ள ஏன்டா இப்படி?”

 

“அம்மா.. நானா விழுகலம்மா.. யாரோ என்னைய தள்ளிவிட்ட மாதிரி இருந்துச்சு.. அதான் விழுந்துட்டேன்..”

 

“நம்பிட்டேன் வா.. உனக்கு மருந்து போட்டு விடுறேன்.. மங்கம்மா..”

 

“அம்மா.. இந்த ரூமை கொஞ்சம் க்ளீன் பண்ணிட்டு ப்ளீஸ்..”

 

“அய்ய.. என்னம்மா நீ.. வீட்டு வேலை செய்றதுக்குத்தானே வந்துருக்கேன்.. அதுக்கு என்னாத்துக்கு ப்ளீஸ் போடுற.. நீ போய் குழந்தைய கவனி.. நான் துடைச்சு வைக்குறேன்..” எனக் கூறிய மங்கம்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இஷானின் காயத்திற்கு மருந்திட தங்களது அறைக்கு அழைத்துச் சென்றாள் ரக்ஷிதா. அவனது காலில் மருந்திட்டு கட்டியவளிடம் வந்த ராஜாத்தியம்மா,

 

“ரக்ஷி.. எனக்கென்னமோ இந்த வீடு புடிக்கலம்மா.. நாம நம்ம பழைய வீட்டுக்கே போயிடுவோம்மா..”

 

“ஏன் அத்தை?”

 

“காலைல பால் திரிஞ்சு போயிடுச்சு.. பூஜையறையில் இருந்த சாமி படம் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு.. விளக்கெறிய மாட்டேங்குது.. இப்போ சமையலறையில் குக்கர் வெடிச்சு.. இஷானுக்கு காயமாகிடுச்சு.. இத்தனையும் ஒரே நாள்ல நடந்துருக்குமா.. அதான்.. எனக்கென்னமோ மனசுக்குள்ள ஏதோ ஒரு அலைப்புறதலாவே இருக்கு.. சொன்னா கேளுமா..”

 

“அத்தை பால் பாத்திரம் சுத்தமா இருந்துருக்காது.. அதுனால திரிஞ்சுப் போயிருச்சு.. சாமிப்படத்தை சரியா மாட்டிருக்க மாட்டீங்க.. அதனால அதுவும் கீழே விழுந்து உடைஞ்சுருக்கும்.. விளக்கு காத்துக்கு எரியாமல் போயிருக்கும்.. அப்புறம் குக்கர் மூடியில் ஏதாவது அடைச்சுட்டு இருந்துருக்கும்.. அதான் வெடிச்சுருச்சு.. அப்புறம் இஷான்.. அவன் ஏற்கனவே சரியான வாலு.. அதான் ஓடி வந்து விழுந்து அடிபட்டுகிட்டான்.. இதெல்லாம் அன்எக்ஸ்பெக்ட்டடா நடந்தது.. அதனால அதையெல்லாம் முடிச்சு போட்டுவிடாதீங்க அத்தை.. எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? இந்த கலிகாலத்துலப் போய் பேய்.. பிசாசுன்னு பயங்காட்டிட்டு.. மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க.. இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அப்புறம் விஜய் நாளைக்கு சாயங்காலம் இங்க வந்துருவாறாம்.. பீ கூல் அத்தை..” என ரக்ஷிதா எவ்வளவு தான் ராஜாத்தியம்மாவை சமாதானப் படுத்த முயற்சித்தாலும் அவரது மனம் சமாதானம் அடையவில்லை. 

 

அங்கே சமையலறையில் துடைத்துக் கொண்டிருந்த மங்கம்மாவின் பின்புறம் தரையில் சிந்திக்க கிடந்த சாம்பாரில் யாரோ நடந்து செல்லும் கால்தடம் பதிந்தது.

 

இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது நிலானிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துப் பார்த்தால், அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை.

 

“ச்சே.. இதுல தண்ணியே இல்ல.. இந்த அம்மாவிற்கு கொஞ்சங்கூட பொறுப்பேயில்ல..” என முணுமுணுத்து கொண்டே பெட்டில் இருந்து கீழே இறங்கி சமையலறைக்கு வந்தாள். குளிர் சாதன பெட்டியில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து கொண்டு மீண்டும் தங்களது அறைக்கு செல்ல திரும்பியவளின் கண்ணில் விழுந்தது அருகில் காற்றுக்காக அடித்துக் கொண்டிருந்த ஜன்னல். அதன் அருகே சென்று அதனை இழுத்துப் பூட்டியவள், அந்த ஜன்னலுக்கு எதிர்புற சுவற்றில் தெரிந்த உருவத்தை கண்டாள். ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அந்த நிழருவத்திடம் சென்றாள். நிலானி அதன் அருகே மெல்ல மெல்ல நடந்து சென்று கொண்டிருந்த சமயம், அவளின் காதினில் ஒலித்தது அந்த நிழலருவத்தின் குரல். 

 

“வா.. இன்னும் அருகே வா.. வா..” என அக்குரல் அழைக்க மெது மெதுவாக அந்த நிழலருவத்துடன் சேர்ந்து நிலானியும் நகரத் தொடங்கினாள். இறுதியாக அவ்வீட்டின் மொட்டை மாடியின் கைப்பிடி சுவற்றில் ஏறி நிற்கச் சொல்லியது. அந்த நிழலருவத்தின் சொற்படி, ஒரு மந்திரத்திற்கு கட்டுப்பட்டவளைப் போன்று நடந்து கொண்டாள். மொத்தம் இரண்டு மாடிகளைக் கொண்ட பெரிய மாளிகை போன்ற வீட்டின் மொட்டை மாடியில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் நின்று கொண்டிருந்தாள் நிலானி. 

 

“நிலானி.. வா.. என்கிட்ட வா.. இன்னும் கொஞ்ச நேரம் தான்.. நம்ம உலகத்துக்கு போகலாம்.. வா.. நிலானி..” என அவளை அழைத்தது அந்த நிழலருவம். 

 

இங்கே தனதறையில் ரொம்ப நேரம் தூக்கம் வராமல் மனதை ஏதோ ஒன்று அழுத்துவது போல் இருக்கவே, எழுந்து வெளியே வந்தார் ராஜாத்தி அம்மாள். மனதை ஏதோ உந்த அவ்வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கே அந்த சுவற்றின் விழும்பில் இருந்து கீழே விழுவதற்கு தயாராக நின்றுக் கொண்டிருந்த நிலானியைக் கண்டதும், அவரது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. 

 

“அய்யோ நிலானி.. வேண்டாம்டா.. கீழே இறங்குமா..” எனக் கூறியவாறே கிலானியின் அருகே நெருங்க முயற்சித்தவரை நெருங்கவிடாமல் ஏதோ ஒன்று நடுவில் நின்று தடுத்தது. கைக் கெட்டிய தூரம் தனது பேத்தியிருந்தும் அவளை நெருங்கவிடாத அளவுக்கு சூறாவளி காற்று வீசியது. 

 

“நிலானி.. குதி.. இன்னும் என்ன தாமதம்? இந்த உலகம் உனக்கானதில்லை.. சீக்கிரம் குதி..” என மீண்டும் மீண்டும் நிலானியின் காதில் விழுந்தது அந்த நிழலருவத்தின் குரல். 

 

“அய்யோ.. முருகா.. என் பேத்தியை காப்பாத்து..” எனக் கதறியவரின் வாயில் இருந்து வெறும் காற்று

தான் வந்தது. ராஜாத்தி அம்மாள் துடிக்கும் துடிப்பைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டு அந்த நிழலருவம். 

1 thought on “உயிரோடு விளையாடும் அழகிய 01”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top