அத்தியாயம் 7
அன்று காலை சாவித்திரி மாட்டிற்க்கு தண்ணீர் வைப்பதறக்காக ஒரு வாளி நிறைய தண்ணீரை எடுத்து கொண்டு வந்து தொட்டியில் ஊற்றி கலந்து கொண்டு இருந்தார்.
அப்போது கேட் திறக்கும் சத்தம் கேட்டு அங்கே திரும்பி பார்க்க நந்தினி தன் தோளில் பேக்கை மாட்டி கொண்டு கையில் டிராவல் பேக்குடன் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அவளை பார்த்த சாவித்திரி நந்தினியின் அருகில் சென்று அவளின் டிராவல் பேக்கை தன் கையில் வாங்கி கொண்டார்.
“என்ன டி காலேஜ் லீவ்வா இப்போ வீட்டுக்கு வந்திருக்க” என்று அவர் கேட்டு கொண்டே அவளுடன் வர நந்தினி எதுவும் பதில் கூறாமல் வீட்டின் உள்ளே சென்றாள்.
தன் தோளில் மாட்டியிருந்த பையை தூக்கி எறிந்தவள் அழுகையுடனே சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவள் தேம்பி தேம்பி அழுவதை பார்த்த சாவித்திரி “நந்தினி அம்மாடி என்னம்மா ஆச்சு காலேஜ்ல பசங்க எதாச்சும் வம்பு பண்ணினாங்களா சொல்லு டி ஏன் அழற” என்று பதட்டத்துடனே அவள் அருகில் வந்து கேட்க அவள் எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள்.
அவள் அழுது கொண்டே இருக்க
“என்னங்க இங்கே வாங்களேன்” என்று குரல் கொடுத்து பதட்டத்துடனே கத்தி அழைக்க அங்கே சுவாமிநாதனும் வந்தார்.
“எதுக்கு டி இப்படி வீடே அதிரும் படி இப்படி கத்துற என்னாச்சி” என்று கேட்டார் சுவாமிநாதன்.
அப்போது தான் அவரும் நந்தினி அழுது கொண்டே இருப்பதை கவனித்தார் “அம்மாடி என்னாச்சி ஏன் அழற” என்று கேட்க அவள் அப்போதும் எதுவும் பதில் கூறாமல் இருக்க
“ஏன் டி நீ அவளை எதாச்சும் சொன்னியா” என்று கோபத்துடன் சாவித்திரியிடம் கேட்டார் சுவாமிநாதன்.
“நான் எதுவும் சொல்லைங்க” என்று அவர் கூற
“நீ எதுவும் சொல்லாம தான் அவள் இப்படி அழறாளா சொல்லு” என்று இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கொண்டே இருந்தனர்.
“ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் சும்மா இருக்கிங்களா என்னை காலேஜ்ல இருந்து சஸ்பென்ட் பண்ணிட்டாங்க” என்று நந்தினி வீடே அதிரும் படி கத்தினாள்.
வீராவும் அப்போது தான் சத்தம் கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தான்.
“அடிக்கழுதை” என்று துடைப்பத்தை எடுத்து கொண்டு சாவித்திரி அவளை அடிக்க வர
“வயசு புள்ளையை எதுக்கு அடிக்க வர” என்று சுவாமிநாதன் அவரை தடுத்து நிறுத்தியவர் அவர் கையில் இருந்த துடப்பத்தை தூக்கி எறிந்தான்.
“காலேஜ்ல என்ன தப்பு பண்ணின டி சொல்லு” என்று சாவித்திரி கோபத்துடன் கேட்டார்
“நான் ஒன்னும் பண்ணல உங்க பையன் தான் எல்லாம் பண்ணினாரு” என்றாள் நந்தினி தேம்பி கொண்டே.
“என் மகன் என்ன பண்ணினா நீ தான் எதாவது பாடத்துல பெயில் ஆகி இருப்ப” என்றார் சாவித்திரி கோபத்துடன்
“ஏய் கிழவி” என்று கோபத்துடன் நந்தினி அவரின் முன்னே எழுந்து நின்றாள்.
“உன் மகன் தான் ரவுடி மாதிரி ஒரு பையனை போட்டு அடிச்சி
காலேஜ் முழுக்க என் மானத்தை வாங்கிட்டாரு அதனால தான் என்னை இப்போ சஸ்பென்ட் பண்ணிட்டாங்க போதுமா” என்றாள் கோபத்துடன்.
சாவித்திரி அதிர்ச்சியுடன் அவனை திரும்பி பார்த்தார் “என்ன டா தம்பி இவள் என்ன என்னவோ சொல்றா” என்று கேட்டார்.
“ஆமாம் மா நான் அடிச்சேன் அவன் நந்தினியை பத்தி என் கிட்ட தப்பு தப்பா பேசுனான் அதனால தான் அடிச்சேன்” என்றான் வீரா ஓரக்கண்ணால் நந்தினியை பார்த்து கொண்டே.
“என்னை பத்தி யார் என்ன பேசுனா உங்களுக்கு என்ன நீங்க யார் அதை கேட்க” என்று நந்தினி கோபத்தில் அவனை நோக்கி வார்த்தையை விட்டு விட வீராவுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்ன டி சொன்ன” என்று கேட்டுக் கொண்டே வீரா அவளை அடிக்க கையை ஓங்கி வர இடையில் வந்து சுவாமிநாதன் அவனை தடுத்துவிட்டார்.
“அடிங்க நல்லா அடிங்க அம்மா அப்பா இல்லாத பொண்ணுன்னு தான உங்க இஷ்டத்துக்கு எல்லாரும் என்னை அடிக்க வரிங்க” என்றாள் அழுது கொண்டே நந்தினி.
“என்ன பேச்சு பேசுறா பார்த்திங்களா பா அவள்” என்று வீரா கோபத்துடன் சுவாமிநாதனிடம் கூற “விடுப்பா சின்ன பிள்ளை காலேஜ்ல எல்லார் முன்னாடியும் அசிங்கமா இருந்துருக்கும்” என்றார் சுவாமிநாதன்.
“எல்லாம் இவளுக்கு நீங்க கொடுக்குற இடம் தான் இவளை இப்படி பேச வைக்குது” என்றான் கோபத்துடன் வீரா.
நந்தினி அவனிடம் கோபத்தில் பேசிவிட்டாளும் அவன் அடிக்க வந்தவுடன் அவள் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
தன் பேத்தியின் உடல் பயத்தில் நடுங்குவதை பார்த்த சாவித்திரி “நந்தினி நீ உள்ளே வா அழாத” என்று அவளை சமாதானம் செய்து உள்ளே அழைத்து சென்றார்.
அன்றிலிருந்து நந்தினி வீராவிடம் பேசிக் கொண்டு இருந்த ஒன்று இரண்டு வார்த்தைகள் கூட அடியோடு நின்றுவிட்டது.
நந்நினிக்கு வேறு வழியேயில்லை அந்த ஒரு மாதமும் வீட்டில் தான் இருந்தாக வேண்டும் என்ற நிலை உருவானது.
அருணின் வீட்டில் தங்கி கொள்ளலாம் என்று பார்த்தால் அவன் வீட்டில் அனைவரும் அருணின் பாட்டி ஊருக்கு சென்றிருந்தனர்.
வீரா டியூட்டிக்கு சென்ற பிறகு தான் நந்தினி தன் அறையில் இருந்தே வெளியே வருவாள் மற்ற நேரங்களில் அறையிலேயே முடங்கி கொள்வாள்.
அன்றும் அப்படித்தான் வீரா டியூட்டிக்கு சென்று இருக்க
நந்தினி வீட்டில் சுதந்திர பறவையாக சுற்றி கொண்டு இருந்தாள்.
சாவித்திரி மாட்டை ஓட்டிக்கொண்டு வயலுக்கு சென்றுவிட்டார் சுவாமிநாதனும்
டவுனுக்கு ஏதோ வேலையாக சென்றிருந்தார்.
நந்தினி தன் காலில் இருந்த தன் ஷூவை கழட்டி வைத்துவிட்டு குளிக்க சென்றாள்.
பின்கட்டில் இருந்த குளியலறையில் குளித்து முடித்து உள்ளே வருவதற்க்குள் மழை பிடித்துவிட்டது அவள் வீட்டின் உள்ளே வரும்போதே ஒரளவுக்கு நனைந்துவிட்டாள்.
பாவைடையை மார்ப்புக்கு குறுக்காக கட்டியிருக்க அதுவும் நனைந்துவிட்டது அதே ஈர பாவாடையுடன் உள்ளே வந்தவள் அங்கிருந்த சாக்கில் கால் வைக்க வழுக்கி கீழே விழ போனாள் அந்த நேரம் ஏதோ ஃபைல் எடுப்பதற்க்காக வீரா வீட்டிற்க்கு வந்தவன் மழை பெய்து கொண்டு இருந்ததால் ஹாலில் நின்று கொண்டு இருந்தான்.
நந்தினி கீழே விழ போவதை பார்த்த வீரா அவள் அருகில் ஓடிச்சென்று அவளின் இடையில் கைக்கொடுத்து தன்னோடு அவளை சேர்த்து அணைத்து பிடித்து கொண்டான்.
நந்தினி வெறும் பாவாடை மட்டுமே அணிந்திருக்க இருவரின் உடலும் ஒட்டி உரசிக் கொண்டு இருந்தது.
வீரா சாதரணமாக தான் இருந்தான் நந்தினிக்கு தான் பெண்களுக்கே உண்டான சில உணர்வுகள் தோன்றி உள்ளுக்குள் ஏதோ செய்ய அவனை தன்னிடமிருந்து விலக்க முயற்சி செய்தாள்.
அதை புரிந்து கொண்ட வீரா அவளிடமிருந்து விலகியவன் “பார்த்து வர மாட்டியா” என்று அவளை கடிந்து கொண்டான்.
நந்தினிக்கு உடனே கோபம் வந்துவிட்டது “நீங்க என்னை கண்ட இடத்துலை எல்லாம் தொடுற வேலை வச்சிக்காதிங்க நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை” என்று அவன் முகம் பார்க்காமல் கூறிவிட்டு நந்தினி அங்கிருந்து சுவற்றை பிடித்து கொண்டு மெல்ல நடந்து சென்றாள்.
அவனை பார்க்காமல் தன் அறைக்கு சென்று கதவடைத்து கொண்டாள்.
நந்தினி தன் அறையின் உள்ளே வந்தவள் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள் தான் இருக்கும் நிலையை குனிந்து பார்த்தவளுக்கு சங்கடமாக இருந்தது.
அந்த மெல்லிய பாவடை அவளின் உடலை மறைக்கவும் முடியாமல் வெளிக்காட்டவும் முடியாமல் தடுமாறி கொண்டிருந்தது மழையில் நனைந்தது வேறு அவளின் முன்னழகின் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டி கொண்டு இருந்தது அதன் கூர் முனை அப்பட்டமாக ஆடையின் உள்ளே நீட்டி நின்று கொண்டு இருந்தது
பதட்டத்துடனே அவசர அவசரமாக உடை மாற்ற ஆரம்பித்தாள்.
அவள் கூறிய வார்த்தைகளை கேட்ட வீராவுக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது ‘நான் என்ன பண்ணிடேன்னு இப்படி பேசிட்டு போறா’ என்று மனதில் நினைத்து கொண்டிருந்தான்.
ஏனோ அன்றிலிருந்து வீராவின் பார்வையே நந்தினியிடம் வேறுபட்டது அவளிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு வர ஆரம்பித்தது
அவளை பார்க்க கூடாது என்று நினைத்தாலும் பார்க்க வேண்டும் என்று தூண்டியது.
மறுநாள் நந்தினிக்கு 20-வது பிறந்த நாள் என்பதால் காலையிலேயே எழுந்து கோவிலுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள்.
அவள் பாட்டி கொடுத்த பட்டு புடவை ஒன்றை கட்டி கொண்டு வெளிய வந்தாள்.
வீரா டியூட்டிக்கு கிளம்பியவன் வெளியே வர அவளை பார்த்து ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டான்.
அடர் நீல நிற பட்டு புடவை ஒன்றை கட்டிக் கொண்டு தலை நிறைய ஜாதி மல்லிப்பூவை வைத்து பளீர் என வந்து நின்றவளை கண் விலக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் வீரா.
இப்போது தான் அவனுக்கு புரிந்தது அவள் கூறிய வார்த்தைகளின் வீரியம் “நான் இன்னும் குழந்தை இல்லை” என்று.
அவளின் அழகை காண கண்கள் கோடி வேண்டும் என்று தோன்றியது தன் அக்கா மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாளா என்று நினைத்தான்.
சாவித்திரி கையில் கையில் உப்பு மிளகாயுடன் வந்தவர் “கிழக்கு பக்கமா நில்லு” என்று கூறிவிட்டு அவளுக்கு சுத்தி போட ஆரம்பித்தார்.
“எதுக்கு பாட்டி இதெல்லாம்” என்று அவள் கேட்க
“நீ சும்மா இரு ஊரு கண்ணே உன் மேல தான் டி” என்று கூறி கொண்டே சுற்றி போட்டு கொண்டு இருந்தார்.
பின்னர் பாட்டியும் பேத்தியும் வெளியே சென்றவர்கள் பக்கத்தில் இருந்த கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்
இருவரும் நடந்து வருவதை பார்த்த அந்த ஊரில் ரைஸ் மில் வைத்திருக்கும் நடேசனின் மகன் வினோத் அப்படியே நின்றுவிட்டான்.
அவனுடன் தான் நந்தினி பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தாள் அதற்க்கு மேல் வினோத் பரீட்சையில் பெயில் ஆகி விட அவன் படிக்கவில்லை.
தன்னுடன் படித்த நந்தினியா இது என்று பார்த்து கொண்டே இருந்தான்.
வினோத் பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டு ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டான்.
அவனின் அப்பா ரைஸ் மில் வைத்திருக்க பணத்திற்க்கு பஞ்சமே இல்லாமல் வீட்டில் இருக்கும் காசை கரியாக்கி கொண்டிருந்தான்.
விக்னேஷ்க்கு ஊரில் உள்ள அத்தனை கெட்ட பழக்கமும் இருந்தது பெண்கள் உட்பட அவனின் கண்கள் நந்தினியின் மீது மையலுடன் படிய ஆரம்பித்தது.
அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தவனுக்கு இவளுடன் ஒரு நாளாவது வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற வேட்கை வந்தது.
நந்நினி அவன் பார்வையை கண்டுகொள்ளாமல் தன் பாட்டியுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள்.
அதே நேரம் திவ்யாவின் வீட்டில் அவளின் தங்கை மதுமிதா “என்ன அக்கா அவரு உனக்கு ஒரு போன் கூட பண்ணி பேச மாட்றாரு உன் மேல அவருக்கு லவ்வே இல்லையா” என்று கேட்டு கொண்டிருந்தாள்.
அவள் பேசியதை கேட்டு திவ்யா முகத்தை தூக்கி வைத்து கொண்டே அமர்ந்து இருந்தாள்.
தொடரும்….