அத்தியாயம் 8
“அக்கா உன் கிட்ட தான கேட்க்குறேன் உன் நம்பர் அவர் கிட்ட தான இருக்கு ஒரு போன் பண்ணி கூட பேசு மாட்டாறா அவரு” என்று மதுமிதா வீராவை பற்றி திவ்யாவிடம் குறை கூறிக்கொண்டே இருந்தாள்.
திவ்யாவுக்கும் அது உருத்தலாக தான் இருந்தது இத்தனை நாட்களில் ஒரு தடவை கூட வீரா தனக்கு அழைத்து பேசவில்லையே என்று இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல்
“அவரு போலீஸ் டி மது டியூட்டி இருக்கும்” என்றாள்.
“என்ன தான் டியூட்டி இருந்தாலும் கட்டிக்க போற பொண்ணு கிட்ட பேச கூடவா அவருக்கு பேச நேரம் இல்லை” என்றாள் மதுமிதா.
திவ்யாவின் மனதிலும் அதே எண்ணம் தான் ஓடிக்கொண்டு இருந்தது “விடு மது நிச்சயத்துக்கு இன்னும் ஒரு நாள் தான இருக்கு அதுக்கு பிறகு பேசுவாறோ என்னவோ” என்றாள் திவ்யா.
“அக்கா இருந்தாலும் நீ அந்த நொண்டி பொண்ணு மேல ஒரு கண்ணு வச்சிக்கோ அவள் வேற பார்க்க நல்லா அழகா இருக்கா எனக்கு என்னவோ இப்போ வரை அவள் மேல சந்தேகமா தான் இருக்கு” என்று கூற
திவ்யாவும் பதிலுக்கு சரி என மட்டும் தலையை ஆட்டினாள்.
மறுநாள் நிச்சயத்துக்கான அனைத்து வேலைகளும் தடபுடலாக நடைபெற்று கொண்டிருந்தது.
இருவர் வீட்டிலும் இல்லாமல் கோவிலில் நிச்சயத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
இருவீட்டாரும் கோவிலுக்கு முகூர்த்த நேரத்திற்க்கு முன்பே வந்திருந்தனர்.
திவ்யா கோவிலில் உள்ள அறையில் உடை மாற்றி கொண்டு இருந்தாள்.
கோவிலில் இருந்த மண்டபத்தில் இருவீட்டு பெரியவர்களும் அமர்ந்து இருந்தனர் அவர்களை சுற்றி உறவினர்கள் கூட்டம் இருக்க சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாடி கொண்டே இருந்தனர்.
வீரா சாம்பல் நிற பார்ட்டி வியர் ஷர்ட் அணிந்து அதற்க்கு ஏற்றார் போன்று கருப்பு நிற பேன்ட் அணிந்து அதை டக்இன் செய்து கொண்டு கம்பீரமாக நின்று இருந்தான் அவனுடன் அவன் நண்பன் சுபாஷ் நின்றிருந்தான்.
சுபாஷ் வேறு ஒரு ஸ்டேஷனில் பணிபுரிந்து வருகிறான் வீராவின் நிச்சயத்துக்காக வந்திருந்தான்.
அருண் அவன் பாட்டி ஊரில் இருப்பதால் அவனால் நிச்சயத்துக்கு வர முடியவில்லை திருமணத்திற்க்கு வருவதாக கூறியிருந்தான்.
அப்போது திவ்யா அலங்காரம் முடித்து நடந்து வந்து கொண்டிருந்தாள் அங்கிருந்த அனைவரின் பார்வையும் திவ்யாவிடம் இல்லாமல் வேறு யாரின் மேலோ இருப்பதை பார்த்த வீரா.
அவளின் பின்னே நந்தினி வருவதை பார்த்தான் நாவல் பழ நிற பட்டு தாவணி பாவடையில் தன் காதில் தங்க ஜிமிக்கிகள் ஆட மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள்
எந்த வித ஒப்பனையும் இன்றி பேரழகுடன் இருந்தாள் அவள் பக்கத்தில் திவ்யா தான் ஏதோ இரண்டு கோட்டிங் மேக்கப்பபை பூசிக்கொண்டு இருப்பதை போல் இருந்தாள் ஆனால் நந்தினி இயற்கையான அழகுடன் மிளிர்ந்தாள்.
நந்தினியின் மேல் அங்கிருந்த உறவினர்களின் பார்வை படிந்தது “எவ்வளோ அழகா இருக்கா இந்த பொண்ணு ஆனா பாவம் ஊனம் போல” என பரிதாபத்துடன் பேசிக் கொண்டு இருந்தனர்.
நந்தினியின் காதில் அவர்கள் பேசிய அனைத்தும் விழுந்தாலும் அவள் எதையும் கண்டுகொள்ளவே இல்லை அடுத்தவரின் பரிதாபம் அவளுக்கு எப்போதும் பழகிய ஒன்று தான் அதனால் அதை எதையும் கண்டுகொள்ளாமல் நடந்து சென்றாள்.
திவ்யா வந்து சபையில் இருந்த அனைவருக்கும் கையெடுத்து கும்பிட்டு விட்டு அமர்ந்தாள்.
வீராவின் பக்கத்தில் இருந்த சுபாஷின் கண்கள் நந்தினியை விட்டு அகலவேயில்லை.
சுபாஷ் தன்னையே பார்த்து கொண்டே இருப்பதை பார்த்த நந்தினி அவனை ஒரு முறை முறைத்து விட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.
நந்தினி தன் பாட்டி சாவித்திரியின் பக்கத்தில் அமர்ந்து இருந்தாள்.
ஐயர் பத்திரிகையை எழுதி வாசிக்க திவ்யா ஓரக்கண்ணால் தன் பக்கத்தில் இருந்த வீராவை பார்த்தாள்.
ஆனால் வீரா அவள் புறம் திரும்பவேயில்லை கடமையே கண்ணாக அமர்ந்து இருந்தான்.
அவளின் அருகில் வந்து மதுமிதா கைக்குட்டையால் அவள் முகத்தை துடைப்பதை போன்று வந்தவள்
“அக்கா மாமாவையே பார்க்காத நேராவும் கொஞ்சம் பாரு எல்லாரும் உன்னை தான் பார்க்குறாங்க” என்றாள் சிரித்து கொண்டே
“சீ போ டி” என்று அவளை விரட்டி அடித்தாள் திவ்யா.
இருவீட்டு பெற்றோர்களும் தம்பூலத்தை மாற்றி கொள்ள மணமக்கள் இருவரும் மோதிரத்தை மாற்றி கொண்டனர்.
சுபாஷ் அப்போதும் நந்தினியை தான் பார்த்து கொண்டே இருந்தான்.
‘இவரு என்ன இப்படி பார்க்குறாரு’ என்று மனதில் நினைத்து கொண்டே அமர்ந்து இருந்தாள் நந்தினி.
நிச்சயம் நல்லப்படியாக முடிந்து அனைவரும் கிளம்பும் சமயம் சுபாஷ் வீராவின் அருகில் வந்தவன்
“மச்சான் நாவ பழ கலர்ல தாவணி போட்ட பொண்ணு ஒருத்தி இருந்தாளே அது யாரு” என்று கேட்டான்.
“யாரு டா” என்று வீரா கேட்க
“உங்க அம்மா பக்கத்துல இருந்தாளே அதோ அந்த பொண்ணு உன் தங்கச்சியா” என்று சுபாஷ் நந்தினியை கைக்காட்டி கேட்டான்.
வீராவுக்கு உடனே கோபம் வந்துவிட்டது “அவள் என் அக்கா பொண்ணு நீ எதுக்கு அவளை பத்தி கேட்க்குற” என்று கேட்டான்.
“ஏய் சூப்பர் டா மச்சான் எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு மாப்பிள்ளை எதாச்சும் பார்க்குறிங்களா” என்று உடனே கேட்டுவிட வீராவின் முகம் மாறியது “சின்ன பொண்ணு டா அவள் இப்போ தான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறா” என்றான்.
“பரவாயில்லை என்னை கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டுமே” என்று சுபாஷ் ஆர்வத்துடன் சிரித்து கொண்டே கூற.
“டேய் அதெல்லாம் சரி வராது உன் வயசு என்ன அவள் வயசு என்ன” வீரா முடியவே முடியாது என்பது போல் பேச
“அதெல்லாம் முடியும் நாளைக்கு நான் உன் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரேன் மீதியை நாளைக்கு பேசலாம் அக்கா மாமாவோட வரேன் டா மச்சான் வாழ்த்துக்கள் பாய் டா” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
வீராவின் முகம் முன்பு போல் இல்லாமல் மாற ஆரம்பித்தது
சுபாஷ் பேசிவிட்டு சென்றதில் இருந்து அவன் மனம் குழம்ப ஆரம்பித்தது.
‘நந்தினிக்கு இவனுக்கும் பத்து வயசு வித்தியாசம் எப்படி இது சரி வரும்’ என்று மனதில் யோசித்தவன் ‘எனக்கும் நந்தினிக்கு கூட தான் பத்து வயசு வித்தியாசம் எப்படியும் அம்மா அப்பா ஒத்துக்க மாட்டாங்க’ என்று மனதில் நினைத்தவன் பின் அதை பற்றி நினைக்கவேயில்லை.
மறுநாள் காலை வீரா டியூட்டிக்கு கிளம்பி கொண்டு இருக்கும் போது வெளியில் கார் ஒன்று வந்து நின்றது.
அதிலிருந்து சுபாஷ் இறங்கினான் அவனுடன் அவன் அக்கா திலகா கையில் பூ பழங்களுடன் தாம்பூல தட்டுடன் இறங்கினார் அவரின் கணவர் பாஸ்கரும் உடன் இறங்கினார்.
அவர்களை பார்த்த வீராவுக்கு தெரிந்துவிட்டது அவர்கள் எதற்க்காக வந்திருக்கிறார்கள் என்று சுபாஷ் நேற்று ஏதோ விளையாட்டாக கூறுகிறான் என்று தான் நினைத்தான் வீரா.
அனைவரும் உள்ளே வர சாவித்திரி சுபாஷ் பார்த்து விட்டு “வா பா சுபாஷ் வாங்க” என அனைவரையும் வரவேற்றார்.
நந்தினி இவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் ஹாலில் அமர்ந்து டி ஷர்ட் மற்றும் பாவடை அணிந்து கையில் ரிமோட்டை வைத்து கொண்டு டிவி சேனலை மாற்றி மாற்றி பார்த்து கொண்டே இருந்தாள்.
சாவித்திரி உள்ளே சென்று அனைவருக்கும் காபி எடுத்து வந்து கொடுக்க திலகா தான் பேச ஆரம்பித்தாள் “ஆன்ட்டி உங்க பேத்தி நந்தினியை பொண்ணு கேட்டு வந்துருக்கோம்” என்று கூற
நந்தினிக்கு தூக்கி வாரிப்போட்டது அதிர்ச்சியுடன் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
சாவித்திரிக்கு தலை கால் புரியவில்லை “என்னங்க என்னங்க எங்க இருக்கிங்க இங்கே வாங்க” என்று கத்தி அழைக்க
சுவாமிநாதனும் அங்கே வந்தார்.
“என்னங்க பேசிட்டு இருங்க” என்றவர் நந்தினியின் கைப்பிடித்து தன்னுடன் அழைத்து சென்றவர் “இதோ இப்போ வரேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அவளை இழுத்து சென்றார்.
சுவாமிநாதன் அவர்களுடன் சாதாரணமாக உரையாடி கொண்டு இருக்க ஏனோ வீராவுக்கு தான் அங்கு நடக்கும் நிகழ்வுகள் எதுவும் பிடிக்கவில்லை.
அவன் முகத்தில் கால் கிலோ கடுகை தூக்கி போட்டாலும் அது படபடவென பொறியும் அளவுக்கு இருந்தது.
நந்தினியை உள்ளே அழைத்து சென்ற சாவித்திரி தன் பீரோவில் இருப்பதிலேயே நல்ல புடவை ஒன்றை கையில் எடுத்தவர் “இதை கட்டிக்கோ” என்று அவளிடம் கொடுத்தார்.
தன் பாட்டி தன்னை அவசரப்படுத்துவதை பார்த்து நந்தினிக்கு தான் பயமாக இருந்தது “அம்மாச்சி எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம் நான் படிக்கனும்” என்று அவள் கூற
“இன்னும் ஆறு மாசத்துல காலேஜ் முடிய போகுது புடவையை கட்டு சீக்கிரமா” என்று அவளை அந்த புடவையை கட்ட வைத்தவர் தன்னிடமிருந்த அனைத்து நகைகளையும் அவளுக்கு போட்டுவிட்டு அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அழைத்து சென்றார்.
நந்தினி புடவை கட்டி வந்து நின்றவுடன் திலகாவுக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது சுபாஷ் முன்பே அவளை பற்றி கூறியிருந்ததாள் அவளின் குறைகள் எதுவும் அவளுக்கு பெரிதாக தோன்றவில்லை.
“உட்காரு நந்தினி” என்ற திலகா அவளின் கைப்பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டாள் நந்தினியும் அவளுடன் அமர்ந்து கொணடாள்.
“எங்களுக்கு நந்தினியை ரொம்ப பிடிச்சிருக்கு சுபாஷ் பத்தி தான் உங்களுக்கே தெரியுமே நீங்க என்ன சொல்றிங்க” என்று பாஸ்கர் கேட்டான்.
“எங்களுக்கும் சம்மதம் தாங்க சுபாஷ் மாதிரி பையனுக்கு பொண்ணு கொடுக்க நாங்க தான் கொடுத்து வைச்சிருக்கனும்” என்று சுவாமிநாதன் கூறினார்.
அங்கே நின்றிருந்த வீரா இவர்களை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டே நின்றிருந்தான் ‘என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க்குறாங்களா பாரு’ என்று நினைத்தான்.
நந்தினி தலைகுனிந்து அமரந்து இருந்தாள் சுபாஷின் பார்வை இப்போதும் அவளை விட்டு விலகவேயில்லை.
“வீரா வா வந்து உட்காரு” என்று சுவாமிநாதனை அழைத்தார் வீராவும் தன் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டான்.
சுபாஷின் பார்வை நந்தினியிடமே இருப்பதை பார்த்த வீராவுக்கு ஏனோ தன்னையும் அறியாமல் கோபம் கூட வந்தது ‘எப்படி பார்க்குறான் பாரு’ என்று மனதில் நினைத்து கொண்டான்.
அப்போது வீராவின் பாக்கெட்டில் இருந்த மொபைல் வைப்பிரட் ஆக யார் என்று எடுத்து பார்த்தான் திவ்யா தான் அழைத்திருந்தாள்
வீரா உடனே அவள் அழைப்பை துண்டித்துவிட்டு அமர்ந்து கொண்டான்.
இரு வீட்டு பெரியவர்களும் பேசி வீராவின் திருமண நாளிலேயே நந்தினிக்கும் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
‘எதுக்கு இவ்வளவு அவசரப்படுறாங்க’ என்று மனதில் நினைத்தான் வீரா.
சுபாஷ்க்கு தாய் தந்தை யாரும் இல்லை அக்கா மாமா மட்டும் என்பதால் அனைத்தையும் அவர்களே பேசி முடித்தனர்.
சுபாஷின் வீட்டில் அனைவரும் கிளம்பும் சமயம் சுபாஷ் சாவியை மறந்து வைத்துவிட்டதாக கூறிவிட்டு மீண்டும் உள்ளே வந்தான்.
வீட்டின் உள்ளே நந்தினி வீரா மட்டுமே நின்றிருந்தனர் டேபிளில் இருந்த சாவியை சுபாஷ் எடுத்து கொண்டவன்
நந்தினியின் அருகில் வந்து “வரேன் நந்தினி” என்று அவள் அருகில் கண்ணடித்து கூறிவிட்டு செல்ல நந்தினி வெட்கத்தில் தலைகுனிந்து நின்றிருந்தாள்.
அதை பார்த்த வீராவுக்கு அப்படி ஒரு கோபம் சுபாஷ் வெட்டி போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.
வீராவின் இந்த கோபம் எதனாலோ…?
தொடரும்…
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis