சண்டியரே 12
இருவருமே இருந்த இடத்தை விட்டு இன்ச் கூட நகர்வது போல் தெரியவில்லை என்ற புரிந்த கமலாம்பிகை “நீ குழந்தையை கொடு.. நான் தூக்கிட்டு போறேன் இங்க ஹாஸ்பிடல் இருக்க வேண்டாம்” என்று ராகவியை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.
அங்கே மயூரனை வைத்துக்கொண்டு மேலும் அப்போதுதான் வந்து சேர்ந்த தவசியையும் சேர்ந்துக்கொண்டு விருந்தினை முடித்து இருந்தார் விஜயராகவன்.
தவசி மதியத்துக்கு மேல் தான் வருவதாக கூறியிருந்தான். ஏற்கனவே அவன் விருந்துக்காக நிறைய ஓடியாடி வேலை செய்திருந்ததால் அவனது வேலை அங்கே தொய்வாக இருக்க..
“மாப்பி காலையில என்னை எதிர்பார்க்காத யா.. மதியம் கரெக்டா சாப்பாடு டையத்துக்கு வந்துருவேன் “என்று சொல்லி இருக்க, அதற்குள் இங்கே இவ்வளவு விஷயம் நடந்தேறி இருந்தது.
இப்போது தங்கமயிலுக்கு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டவன் விஜயராகவனுக்கு துணையாக அங்கே வேலைகளை முடித்து உறவினர்களுக்கு நல்லபடியாக அனுப்பி வைத்தான். மேலும் வேலை செய்தவர்களுக்கு பணம் பட்டுவாடாவை விஜயராகவன் துணையோடு கொடுத்து முடித்து அப்பாடா என்று அப்போதுதான் அமர, கமலாம்பிகை ராகவியை தூக்கிக் கொண்டு வந்தார்.
“அப்பா.. எங்க தவசி?” என்றபடி உள்ளே நுழைந்த கமலாவிடம்,
“மாமா.. இப்பதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்ன மாப்பி கிட்ட பேசி மயில் எப்படி இருக்குனு கேட்டாங்க கேட்டுட்டு இப்ப உள்ளார படுத்து இருக்காங்க அத்தாச்சி” என்றான்.
“சரி கலாக்காவை கூப்பிட்டு இவளுக்கு கொஞ்சம் சாப்பாடு ஊட்ட சொல்லு” என்றார்.
கலாவும் அவளுக்கு சத்துமாவு காய்ச்சி கரைத்து வர தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு மெல்ல புகட்டி சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவர், மெல்ல ராகவியை தோளில் போட்டு தூங்க வைத்தார்.
பின் கால் நீட்டி அக்கடா என்று அமர்ந்து விட்டார் கமலாம்பிகை.
“சாப்டீங்களா அத்தாச்சி.. வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தவனிடம்,
“எங்கடா தவசி.. இந்த மனுசனா கட்டிக்கிட்டு இத்தனை வருஷமும் ஒரு நிம்மதியான சாப்பாடு சாப்பிட முடியல.. எத்தனை ரகளை பண்ணிட்டு இருக்காரு இந்த மனுஷன்” என்றார்.
அவருக்கு மகளை தம்பியிடம் ஒப்படைத்து ஆகிவிட்டது. அவன் ஆதிரனாக இருந்தால் என்ன? ஆரூரனாக இருந்தால் என்ன? இருவருமே கமலாம்பிகை பொறுத்தவரை இரு கண்கள் தான்.
இதில் எந்த கண்ணிடம் ஒப்படைத்தாலும் மகள் கண்கலங்காமல் இருப்பாள் என்பது அவரது பெரும் நம்பிக்கை. அதனால் தியாகேசன் போல அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை.
“நீ கொஞ்சமாவது சாப்பிட்டு படு அத்தாச்சி” என்று படுக்கப் போனவரை தடுத்து சாப்பாடு எடுத்து வைத்தான் தவசி.
“மயூரன் எங்க தவசி?” என்றதும் “மாமா கூடவே படுத்திருக்கான். நான்தான் கூடவே இருக்க சொன்னேன்.. அவனும் அப்படியே தூங்கிட்டான் போல அசதி வேற..” என்றான்.
“ம்ம்ம்.. என்னையும் சாயந்திரம் போல கொஞ்சம் எழுப்பி விடு தவசி. அசதியே வேற.. ஆனாலும் ஹாஸ்பிடல் வேற போகணும்” என்றவர் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு, கூடத்தில் இருக்கும் ராகவி தூளிக்கு அருகிலேயே ஒரு பாய் போட்டு படுத்துக்கொண்டார்.
“கலா அக்கா நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க.” என்றான் தவசி.
“சாயந்தரம் பால் கறக்க ஆள் வருவாங்க தம்பி.. நான் பார்க்கணும்” என்றவரிடம்,
“நான் பார்த்துக்கிறேன் அக்கா. நீங்கள் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க” என்றவன் ஃபோனை எடுத்தவன் “என்ன ஆரூரா மாப்பி.. என்ன சொல்றாரு உன் மாமனாரு??” என்று ஆரூரனிடம் பேச ஆரம்பித்து விட்டான்.
அங்கே மருத்துவமனையில் ஆரூரனும் தங்கமயில் தலை அருகே நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு ஃபோனில் யாரிடமும் ஏதோ பேசிக் கொண்டிருக்க.. அவன் அருகில் இருக்க பிடிக்காமல் எதிரில் போடப்பட்டிருந்த மற்றொரு சிறிய பெட்டில் அமர்ந்து அவனை உற்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார் தியாகேசன்.
அவர் தன்னை பார்ப்பது தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் ஃபோனில் தவசியோடு தான் பேசிக் கொண்டிருந்தான் ஆரூரன்.
‘நெஞ்சு பொறுக்குது இல்லையே.. இந்த ஆரூரனை நினைத்து விட்டால்..’ என்ற பாரதியார் பாடலை சற்றே மாற்றி பாட வேண்டி இருக்கும் இப்படி தியாகேசனுக்காக..
ஆரூரானை கண்டாலே அவருக்கு பிடிக்காது. எவனிடமிருந்து தன் மகளைக் காக்க இத்தனை வருடம் போராடி வேற வேற ஊர்களில் இருந்து மாப்பிள்ளைகளை எல்லாம் வரிசை கட்டிக் கொண்டு பார்த்து.. ஒருத்தனும் மகளுக்கு பொருந்தாமல் தட்டி தட்டி போக.. கடைசியாக ஆதிரனுக்கே மகளை கொடுத்து விடுவது என்று திட்டம் தீட்டி கட்டம் கட்டி எல்லாம் முடித்து நிம்மதியாக இருக்கும் நேரத்தில்..
ஆரூரன் பிள்ளை என்று வந்தவளினால் அவர் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த, கல்யாணத்தை நிறுத்தி, குடிகாரனுக்கு கூட கட்டிக் கொடுக்க போய்விட்டார் தன் அன்பு மகளை அந்த அளவுக்கு ஆரூரன் மீது வெறுப்பு..!!
ஆனால் எதிர்பாராத விதமாக கல்யாணமும் நடந்து விட..
சரி போ அவன் பிள்ளை தானே என்ன இருந்தாலும், நாம் பெண்ணை ஆதிரனுக்கு தானே கட்டிக் கொடுத்தோம் என்று மனதை தேற்றிக்கொண்டு கறிவிருந்தில் பங்கேற்கலாம் என்று வரும் பொழுது தான் விஷயம் அவருக்கு தெரிந்தது வந்திருக்கிறது ஆதிரன் அல்ல ஆரூரன் என்று..!!
ஆதிரன் குழந்தை என்று வந்த உடனே நிஜமாலுமே அவனின் குழந்தை தானா? என்று அவன் சொன்ன கதையிலிருந்து உண்மையை விசாரிக்க, அவருக்கு தெரிந்த இரண்டு மூன்று ஆட்களை அனுப்பி வைத்தார். அவர்களும் இத்தனை நாட்களாக தேடி விஷயத்தை கண்டுபிடித்து வந்து கூற… பொங்கிவிட்டார் தியாகேசன்..!!
அவரால் இதனை ஏற்கவே முடியவில்லை. எப்படி பொறுமையாக இருக்க முடியும்? டவுசர் போட்ட கால்த்திலேயே தன் முன் தைரியமாக நின்று அவன் சவால் விட்ட தோரணையும் அந்த குரலும் அந்த முகமும் இன்னும் அவரை நிம்மதியை இழக்க செய்கிறதே.. மனதினை இம்சிக்க செய்கிறதே..!!
அப்படி இருக்க..?? எப்படி அவரால் அத்தனை சுலபமாக தன் அருமைப் பெண்ணை தூக்கி அவனுக்கீ கொடுக்க முடியும்? முடியாதா..! முடியவே முடியாது..!!
என் மகளோடு இவனை சேர்ந்து வாழவே விட மாட்டேன். நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் என்று பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார் தியாகேசன்.
மாலை போல உள்ளே வந்த செவிலியர் “சர் பேஷனோட யாராவது ஒரு ஆளு தான் இருக்கணும். ஒருத்தங்க வெளியில போங்க..” என்றதும் தியாகேசனை எள்ளலாக ஒரு பார்வை பார்த்த ஆருரன் “அப்படியா சிஸ்டர்.. நான் இங்க ஹஸ்பண்ட்..!” என்றான்.
“சரி சார் நீங்க இருங்க..” என்ற செவிலியர் தங்கமயிலுக்கு சில செக்கப்கள் செய்ய.. வேற வழியின்றி வெளியே வந்து நின்றார் தியாகேசன்.
அவரால் இந்த சின்ன அவமானத்தைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை “இருக்கு டா உனக்கு..!” என்று பொறுமிக் கொண்டே நின்றிருந்தார்.
“சிஸ்டர்.. டாக்டர் எப்ப செக்கப் வருவாங்க?” என்று ஆரூரன் கேட்க…
“நைட்டு எட்டு மணி போல ரவுண்ட்ஸ் வருவாங்க சார்.. பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ற பத்தி சொல்லுவாங்க.. அனேகமா நாளைக்கு தான் பண்ணுவாங்க போல” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
செவிலியர் வெளியே சென்றவுடனேயே, தியாகேசன் அடுத்து உள்ளே நுழையாமல் சட்டென்று கதவை சாத்தி தாளிட்டவன், மெதுவாக தங்கமயில் அருகே குனிந்து நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து சிறிது நேரம் அப்படியே குனிந்து இருந்தான்.
“ரொம்ப பயமுறுத்திட்டேடி சண்டி ராணி..!” என்று உள்ளம் உருக காதல் வழிய மென் குரலில் கூறியவனோ மெல்ல அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கி மீண்டும் முகம் முழுவதும் தன் எச்சில் தெறிக்க முத்தங்களாக கொடுத்தான். இத்தனை வருடங்களாக அவன் மனதில் இருந்த காதல் அணை உடைத்த வெள்ளமாய் பொங்கி வர, தன் கட்டு உடைத்து அவளுள் கட்டுண்டு போனான் ஆரூரன்.
“ஏய் மயிலு.. உங்க அப்பன பக்கத்துல வச்சு உங்ககிட்ட என்னால நெருங்க கூட முடியலடி..!” என்று மீண்டும் மீண்டும் அவளது சிவந்த கன்னங்கள்.. பிறை நெற்றி..கூர் மூக்கு என்று இதழ்களை பதித்து பதித்து கொண்டே இருந்தான் ஆரூரன்.
“கதவை சாத்திட்டு உள்ள என்ன பண்றான்.. அய்யய்யோ மயிலு..” என்று கத்தி அதற்கு மேல் தாங்க மாட்டாமல் கதவை தட்டி விட்டார் தியாகேசன்.
“இந்த ஆளை..!!” என்று கடுகடுப்பான முகத்தோடு கதவை திறந்த ஆருரன் “என்ன யா?” என்று எரிச்சலோடு கேட்க…
“அறிவு இருக்கா உனக்கு? கதவ சாத்திட்டு உள்ள நீ என்ன டா பண்ற என் பொண்ண? என்னடா பண்ணுன அவள?” என்று அவர் மீண்டும் கத்த…
“என்ன பண்ணுனாங்க.. பெருசா ஒன்னும் இல்லை.. கொஞ்சமா ஒரு ஐம்பது முத்தம் தான் கொடுத்தேன். நீர் தான் நந்தி மாதிரி பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தீரே.. என் பொண்டாட்டிய என்னால கொஞ்சம் கூட முடியல அதுதான் கதவை சாத்திட்டு கொஞ்சிக்கிட்டு இருந்தேன்.. இப்பவும் சிவ பூஜை கரடியா கத்துறீரு..!!” என்றான் கூலாக..
“என்னது கொஞ்சுனியா??” என்று அவர் நெஞ்சை பிடிக்க..
“நீங்க நெஞ்சை பிடிக்கிற அளவுக்கு எல்லாம் இது ஒன்னும் அதிர்ச்சியான விஷயம் இல்ல.. என் பொண்டாட்டிய நான் கொஞ்சனும்னு விருப்பப்பட்டால் கொஞ்சுவேன். ஏன் அதுக்கும் மேலே…” என்று அவன் முடிக்க முன்..
“டேய்..!!” என்று உச்சித்தணியில் அவர் ஆரம்பிக்க…
சற்று தள்ளி இருந்த நர்ஸ் ஸ்டேஷனில் இருந்து இவர்களை எட்டிப் பார்த்த அந்த செவிலியப் பெண் “என்ன சார் அங்க சத்தம்??” என்று அலுப்புடன் கேட்க..
‘இந்த பொண்ணு வேற’ என்று முணுமுணுத்த தியாகேசன் “சும்மா பேசிட்டு இருக்கேன் மா..” என்றார் மெதுவான குரலில்.
அதில் ஆரூரனுக்கு சிரிப்பு கூட முகிழ்த்தது. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் மீண்டும் சென்று மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டான்.
இம்முறை தியாகேசனும் வீம்புக்கு என்று தங்கமயிலின் காலடியில் அமர்ந்து கொண்டார்.
மாலைப்போல் எழுந்த கமலாம்பிகை குழந்தையை கவனித்து விட்டு அப்பாவிடமும் “நான் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்துடுறேன் பா.. நீங்க இருங்க வரவேண்டாம். மயூரா தாத்தாவை பார்த்துக்கோ” என்று தவசியோடு மூவருக்கும் இரவு உணவு எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
“அத்தாச்சி எதுக்கும் ரெண்டு மூணு பெட்ஷீட் மயிலுக்கு டிரஸ் கூடவே மாப்பிக்கும் டிரஸ் எடுத்துட்டு வாங்க” என்றான்.
“நீ சொல்வதும் சரிதான் தவசி..” என்று அதெல்லாம் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே நுழைய..
இருவரும் இருந்த நிலையை பார்த்துவிட்டு “இவனுங்க திருந்த மாட்டானுங்க..!” என்றபடி “ரெண்டு பேரும் கொஞ்சம் தள்ளுறிங்களா?” என்று மகளின் அருகே பெட்டிலயே அமர்ந்தார் கமலாம்பிகை.
மகளின் கன்னம் கை என்று வருடி “முழிச்சாளா தம்பி..” என்றதும் “இல்லக்கா நல்லா தூங்குறதுக்கு மருந்து போட்டு இருக்காங்க.. இன்னைக்கு அவ நல்லா தூங்கட்டும்னு காலைல டாக்டர் சொன்னாரு. இன்னும் அடுத்த ரவுண்ட் டாக்டர் வரல வந்தா தான் கேட்கணும்” என்றபடி மனைவியின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன இவ்வளவு கூட்டம் இங்க.. டாக்டர் வராரு. ஒருத்தர் மட்டும் இருந்தா போதும். மீதி எல்லாம் வெளிய போங்க..” என்றாள் செவிலியப் பெண்.
தன் போல கமலாம்பிகை தம்பியிடம் தலையாட்டி விட்டு வெளியே வர இம்முறை தியாகேசன் சட்டமாக அமர்ந்திருக்க..
“சித்தப்பு புருஷன்தான் பார்த்துக்குறான்ல.. அப்புறம் ஏன் உனக்கு? வாயா?” என்று அவரை பிடித்து இழுக்காத குறையாக இழுத்தான் தவசி.
தியாகேசன் இன்ச் கூட நகராமல் “நான் இங்கதான் இருப்பேன்.! என் பொண்ணு கூட தான் இருப்பேன்..! நீ போடா..” என்று அவனை துரத்தி விட்டார்.
ஆரூரனை பார்த்த தவசி “உன் பாடு ரொம்பவே கஷ்டம் யா மாப்பி..” என்றப்படி கமலாம்பிகையோடு வெளியே வந்து நின்று கொண்டான்.
மருத்துவர் வந்து தங்கமயிலை பரிசோதிக்க.. அவரிடம் தங்கமயில் உடலைப் பற்றி ஆரூரன் ஆங்கிலத்தில் உரையாட.. அவரும் பதிலுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்க..
“என்ன பேசுகிறார்கள் இருவரும்.. ஏன் தசுபுசுன்னு இங்கிலீஷில் பேசுறாங்க.. தமிழ்ல பேச வேண்டியதுதானே?” என்று புரியாமல் இருவரும் முகத்தையும் டென்னிஸ் பார்ப்பது போல மாறி மாறி பார்த்திருந்தார் தியாகேசன். அவரால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதற்காகத்தானே அவன் ஆங்கிலத்தில் அவரிடம் பேசியது. அவரை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சிரிப்பை மீசைக்கு அடியில் அடக்கிக் கொண்டு “ஓகே டாக்டர்.. ஐ வில் டேக் கேர்..!” என்று ஆரூரன் முடித்துக் கொள்ள,
“நாளை காலையில டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் ஆரூரன்” என்றபடி மருத்துவர் சென்றுவிட தியாகேசன் மீண்டும் ஆரூரனை முறைத்தார்.
“சும்மா சும்மா இப்படி ஆசையா பார்க்காதீர் மாமோய்.. நாளைக்கு உம்ம பொண்ணு வந்து உம்ம கிட்ட சண்டை போடுவா என் புருஷனை நீ எப்படி இப்படி பார்க்கலாம்னு.. நீர் உத்து உத்து பாக்குறது எனக்கே கொஞ்சம் வெட்கமாதான்யா இருக்கு” என்று அவன் சுண்டு விரல் நகத்தை பல்லில் வைத்து கடிக்க..
“அய்யோ ச்சீ…” என்று அவராகவே வெளியில் சென்று அமர்ந்து கொண்டார்.
மயிலுக்கு ட்ரிப்ஸ் போட்டு இருப்பதால் இரவு உணவு வேண்டாம் அவள் தூங்கட்டும் என்று விட்டனர். அதனால் கமலா தம்பியை அழைத்து உணவு பரிமாறினார். தியாகேசனையும் அழைக்க, அவரோ முறுக்கிக் கொண்டார்.
“அவரு கிடக்கட்டும்.. எனக்கு பயங்கர பசி.. சாப்பாடு எடுத்து வை கா” என்று இட்லியை வெட்டினான் ஆரூரன். அவன் சாப்பிடுவதை பார்த்து மெல்ல அவருக்கும் பசி வர “ஏய் கமலா.. எனக்கும் எடுத்து வை. போய் புருஷன் வேணாம்னா அப்படியே விட்டுடுவியா?” என்று தியாகேசனின் பேச்சில் தலையில் அடித்துக் கொண்டா கமலாம்பிகை “உங்கள பத்தி தெரிஞ்சு தான் கூடவே எடுத்து இருந்தேன்.. சாப்பிட வாங்க” என்று உணவை பரிமாறினார்.
எல்லாரும் சாப்பிட்டு முடிக்க “சரி வாங்க போவோம்” என்று கமலா அழைக்க…
தியாகேசனோ புதுதாய் கல்யாணமான மணப்பெண் அம்மா வீட்டுக்கு சென்று விட்டு மாமியார் வீட்டுக்கு வர மறுப்பது போல “வரமாட்டேன்.. நான் வரமாட்டேன்..! இங்கதான் இருப்பேன்..!” என்று அடம் பிடித்தார்.
“கொஞ்சமாச்சும் உங்களுக்கு கூறு இருக்கா? நீங்க மட்டும் எப்படி அவ கூட தனியா இருக்க முடியும்? நைட்ல ஒரு ஆளு தான் இருக்கணும்னு சொல்லியிருக்காங்க.. பொம்பள நான் மட்டும் இருக்க முடியாது. நீங்க இருந்திங்கனா மயிலு நைட் பாத்ரூம் ஏதும் போகணும்னா நீங்களா கூட்டிட்டு போவீங்க?” என்று நறுக்கென்று கமலா கேட்க..
“நான் வெளியில நின்னு பார்த்துக்கிறேன்..”
“நல்லா பார்த்துப்பாரு இவரு.. உள்ள அவ மயக்கம் போட்டு விழுந்தானா என்ன செய்வீரு? காலையில இருந்து ஒன்னும் சாப்பிடாம இருக்கா.. சும்மா எனக்கு கடுப்பேத்தாம கிளம்பும்” என்று கணவனை கட்டாயப்படுத்தி இழுத்து சென்றார் கமலாம்பிகை.
“என்ஜாய் மாப்பி..” என்று ஆரூரனின் முதுகில் தட்டி விட்டு தவசியும் வெளியேற..
அனைவரும் சென்ற பிறகு கதவை மூடிவிட்டு வந்த ஆரூரன் எழிலோவியமாக உறங்கும் மனைவியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்துக்கு மேல் “தூங்கின மாதிரி நடிச்சது போதும்டி சண்டி ராணி.. முழிச்சு பாரு டி.. என் மயிலு” என்றதும் சட்டென கோபமாக கண்களை திறந்த தங்கமயிலும் அவன் முகத்தை பார்க்காமல் வெடுக்கின்ற முகத்தை திருப்பிக் கொள்ள..
அப்பவும் அவன் அமைதியாக அவளை வெறித்தான்.
“என்ன..?” லேசான எரிச்சலுடன் அவனை திரும்பிக் கேட்டாள்.
“சும்மா பார்த்தேன்..” என்றான் தோளை குலுக்கி..
அவனை இன்னும் கடுப்பாகப் பார்த்தாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவளது உடம்பில் இவ்வளவு நேரம் இல்லாத ஒரு மாற்றம் இப்போது உண்டாகத் தொடங்கியது. முதலில் எரிச்சல்.. அப்புறம் கோபம்.. அதன்பின் ஈர்ப்பு..!!
“என்னை ஏன் யா அப்படி திங்கற மாதிரி பாக்குற? எல்லாருக்கும் இருக்குறது தான் எனக்கும் இருக்கு!” என்று அவனிடம் கத்தினாள், தன் மனதினை மறைத்தப்படி.. அதனை சபித்தப்படி…!!
அவன் விடாமல் அவளை பார்க்க.. முகத்தை திருப்பிக் கொண்டாள் மயில்.
அவள் தாடையைப் பற்றி அழுத்தமாக தன் பக்கம் திருப்பிய ஆரூரன் “இந்த வெடுக்குனு முகத்த திருப்புவது எல்லாம் என்கிட்ட நடக்கக்கூடாது.. உதட்டை சுழிக்க கூடாது.. ஏற்கனவே உன்கிட்ட சொனீனேன்ல.. மறந்துட்டியா டி சண்டிராணி?” என்றவன் அவள் இதழ்களை இரு விரல்களால் பிய்த்து எடுத்தான்.
துடிக்கும் அவள் இதழ்களை தன் இதழ்களால் கொள்ளைக் கொண்டான் ஆரூரன்…
அதி அழுத்தமாக..
மிக ஆழமாக..
நனி நேசமாக..
பெரும் காதலாக…!!
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super sis