ATM Tamil Romantic Novels

மன்னவன் பார்வையிலே 11

அத்தியாயம் 11

 

மறுநாளில் இருந்து திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைவாக நடைபெற ஆரம்பித்தது விருப்பமே இல்லை என்றாலும் வீராவும் அவனுடைய திருமணத்திற்கு தயாரானான்.

 

சுபாஷ்-நந்தினி பல கனவுகளோடு தங்களின் திருமணத்தை எண்ணி தயாராகி கொண்டு இருந்தனர்.

 

திருமணத்திற்கு நலுங்கு என அனைத்து சடங்குகளும் விரைவாக நடந்து கொண்டு இருந்தது.

 

திவ்யாவிற்க்கு இப்போதும் சந்தேகம் தான் வீராவுக்கு தன்னை பிடித்திருக்கிறதா இல்லையா என்று ஏனெனில் இப்போது வரை அவன் ஒரு வார்த்தை கூட அவளிடம் சிரித்து பேசியது இல்லை இருந்தாலும் தன் தாய் பாக்கியத்தின் வற்புறுத்தலால் அவளும் திருமணத்திற்க்கு தயாரானாள்.

 

ஒரு ஜோடி வேண்டா வெறுப்பாக தயாராக இன்னொரு ஜோடி காதலுடன் திருமணத்துக்கு தயாராகினர்.

 

நாட்கள் அதி வேகத்தில் பறந்து ஓடியது ஒரு வாரம் போன தடமே தெரியவில்லை.

 

நாளை திருமணம் என்ற நிலையில் வினோத் அவன் நண்பர்களுடன் வேறு ஒரு திட்டம் தீட்டி கொண்டு இருந்தான்.

 

இத்தனை நாட்களில் வினோத் ஒரு நாள் கூட நந்தினியை கவனிக்காத நாளே இல்லை 

அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவன் கவனித்து கொண்டு தான் இருந்தான்.

 

அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு தன் தலையில் இடியே விழுந்ததை போன்று உருக்குலைந்து நின்றுவிட்டான்.

 

வினோத் அவன் வீட்டில் பெற்றோரிடம் நந்தினியை பெண் பார்க்க சொல்லி கேட்க 

அவன் பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்.

 

அவர்களுக்கு தெரியும் இவனுக்காக பெண் கேட்க சென்றாள் எப்படியும் அசிங்கப்பட்டு தான் வர வேண்டும் என்று அதனால் தான் வினோத்தின் பெற்றோர்கள் அவன் பேச்சை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.

 

ஆனால் வினோத்துக்கு நந்தியுடன் வாழ தான் முடியவில்லை என்றாலும் அவளுடன் ஒரு நாளாவது படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வெறி வந்தது.

 

நந்தினி எங்கேயாவது தனியாக வருவாள் அவளை நெருங்கலாம் என்று பார்த்தால் அவள் கல்லூரிக்கு செல்லாததால் வீட்டை விட்டு எங்கேயும் வரவேயில்லை அதுமட்டுமின்றி அவள் வெளியில் வந்தாள் கூட எப்போதும் யாராவது ஒருவர் அவளுடன் துணைக்கு இருந்து கொண்டே தான் இருந்தனர்.

 

அவளை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி அவனுள் வன்மத்தை வளர்க்க ஆரம்பித்தது.

 

நாளை நந்தினிக்கு திருமணம் என்ற நிலையில் இன்று இரவு தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து கொண்டு இருந்தான் வினோத் அவனுடன் அவன் வாங்கி கொடுக்கும் ஓசி சரக்கிற்க்காக வரும் அவன் நண்பர்களும் இருந்தனர்.

 

“மச்சி அவள் எனக்கு வேணும் டா 

ஒரே ஒரு நாள் மட்டும் அந்த அழகு தேவதை கூட இருந்துட்டா எனக்கு அது போதும் டா 

டெய்லி நைட் அவள் கூட எப்படியெல்லாம் இருக்கனும்ன்னு கனவு கண்டேன் தெரியுமா டா ஆனால் நாளைக்கு நைட் இதே நேரம் வேற ஒருத்தன் இதையெல்லாம் அனுபவிக்க போறான்னு நினைச்சாலே கடுப்பா இருக்கு டா” என்று கூறி கொண்டே ஒரு பாட்டிலை எடுத்து தன் வாயில் முழுதாக சரித்து குடித்தான் வினோத்.

 

“விடு மச்சான் நீ சரின்னு ஒரு வார்த்தை சொல்லு டா உனக்காக அந்த பொண்ணை இப்போவே தூக்கிட்டு வரேன்” என்றான் அவன் நண்பன் ஒருவன்.

 

“ச்சை அதெல்லாம் வேணாம் இன்னைக்கு நைட் நான் அவள் கூட ஒன்னா இருந்தே ஆகனும் அதுக்கு என் கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு அதுக்கு மட்டும் உதவி பண்ணுங்க அது போதும்” என்ற வினோத் அவர்களிடம் ஏதோ ரகசியமாக கூறினான்.

 

அவன் கூறியதை கேட்ட அவன் நண்பன் ஒருவன் “மச்சான் உனக்கு இருக்க மூளைக்கு நீயெல்லாம் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை டா சூப்பர் பிளான் டா மச்சான் இப்போவே மண்டபத்துக்கு போறோம் எல்லாத்தையும் முடிக்கிறோம்” என்றான் அங்கு ஓசி குடிக்காக வந்திருந்த அவன் நண்பன்.

 

வினோத் போதை பொருளுடன் கூடிய சிகரெட் ஒன்றை பற்ற வைத்து முழுதாக வாயில் வைத்து இழுத்து முடித்தவன் “இப்போ போலாம் வாங்க டா” என்றான் மூக்கை உறிஞ்சி கொண்டே.

 

முழு போதையில் தன் நண்பர்களை தன்னுடன் அழைத்து கொண்டு அந்த திருமணம் நடக்கும் மண்டபத்திற்க்கு சென்றான் அங்கு சென்றவர்கள் ஏதோ விருந்தினர்களை போன்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டனர்.

 

அங்கே வரவேற்பு நடந்து முடியும் தருவாயில் இருக்க இரு ஜோடிகளும் மேடையில் நின்றிருந்தனர்.

 

வினோத் மற்றும் அவனுடைய நண்பர்கள் தக்க சமயத்திற்க்காக காத்திருந்தனர்.

 

வரவேற்பு முடிந்து உறவினர்கள் அனைவரும் கிளம்பினர் மண்டபமே அடங்கி இருந்த சமயம் நந்தினி குளித்து உடை மாற்ற தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள் அங்கே குளியலறையில் இருந்த குழாயை திறக்க தண்ணீர் வரவேயில்லை.

 

“என்ன இது இப்போ டிரஸ் எப்படி மாத்துறது” என்று புலம்பிக் கொண்டே வெளியே வந்தாள்.

 

அவள் அணிந்திருந்த லெஹங்கா வேறு நிறைய கற்கள் பதித்து வேலைப்பாடுகள் நிறைந்து இருந்தது அதனால் உடல் கசகசவென இருந்தது மேக்கப் வேறு முகத்தில் இருக்க முகத்தை மட்டுமாவது கழுவ வேண்டும் என்று தோன்றியது.

 

அந்த அறையில் இருந்து வெளியே வந்தவள் முதலில் தன் தாத்தா பாட்டியை தேட அவர்கள் அங்கே இல்லை.

 

அவர்கள் இருவரும் மறுநாள் சமையலுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை சரி பார்க்க சமயலறையில் இருந்தனர்.

 

சுபாஷ் திருமணத்திற்க்கு வந்த தன் நண்பர்கள் யாரையோ‌ அழைப்பதற்க்காக வெளியில் சென்றிருந்தான்.

 

நந்தினி வெளியே வந்து நின்றிருந்நாள் அவளை பார்த்த வினோத் தன் நண்பனிடம் கண்ணை காட்டிவிட்டு வெளியே சென்றான்.

 

வினோத்தின் நண்பன் வேண்டுமென்றே நந்தினியை கடந்து செல்ல போக “அண்ணா நீங்க இந்த மண்டபத்துல தான வேலை பார்க்குறிங்க” என்று அவள் கேட்க

வினோத்தின் நண்பன் பதிலுக்கு 

“ஆமாம் மேடம் என்ன பிரச்சனை” என்று கேட்டான் சாதாரணமாக.

 

“என் ரூம்ல தண்ணீர் வரலை அண்ணா கொஞ்சம் மோட்டார் போட சொல்லுங்களேன்” என்றாள் நந்தினி.

 

“மேடம் அந்த மோட்டார் ரிப்பேர்ல இருக்கு இப்போ தான் சரி பண்ணிட்டு இருக்காங்க எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகும்”

 

“இரண்டு மணி நேரமா” என்றாள் அதிர்ச்சியுடனே நந்தினி ஏனெனில் இவ்வளவு நேரம் நின்றது வேறு அவளுக்கு சோர்வாக இருந்தது.

 

“மேடம் நீங்க வேணும்ன்னா வெளியே இருக்க பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோங்க அங்கே தண்ணீர் வரும்” என்றான்.

 

“தேங்க்ஸ் அண்ணா” என்ற நந்தினி தன் அறையின் உள்ளே சென்று டவலை எடுத்து கொண்டு வெளியில் இருந்த பாத்ரூம்க்கு செல்லலாம் என அங்கு சென்றாள்.

 

சரியாக நந்தினி பாத்ரூம்மின் உள்ளே நுழைந்தவுடன் மின்சாரம் தடைப்பட்டது

வினோத்தின் நண்பன் ஒருவன் மெயின் சுவிட்சை நிறுத்தி இருந்தான்.

 

வினோத் அவளுக்கு முன்பாகவே வந்து அந்த குளியலறையில் காத்திருந்தான் நந்தினி உள்ளே வர‌ அவளின் கைப்பிடித்து இழுத்தான்.

 

நந்தினி இருட்டில் யாரோ தன் கைப்பிடித்து இழுக்க பயத்தில் கத்த போக உடனே வினோத் அவளின் வாயில் துணியை வைத்து இறுக சுற்றி அவள் கத்தாமல் இருப்பதற்க்காக கட்டினான்.

 

அந்த மின்சாரம் இல்லாத சொற்ப நேரத்தில் அவளை கீழே பிடித்து இடித்து தள்ளினான் பாவம் நந்தினியால் நடக்க முடியாது என்பதால் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 

நந்தினி சுதாரித்து எழும் முன்னே அவளின் மீது படர்ந்த வினோத் வேகமாக அவளின் மேலாடையில் கை வைத்து இழுக்க அது அவன் இழுத்து வேகத்தில் அவன் கையோடு வந்தது.

 

போதையின் பிடியில் இருந்த வினோத் அவளின் ஆடைகளை பிய்த்து எறிய ஆரம்பித்தான் 

நந்நினியோ கத்த கூட முடியாமல் முனகலுடனே அவனுடன் போராடி கொண்டு இருந்தாள்.

 

அவளின் எதிர்ப்பை அடக்க வினோத் நந்தினியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் அதில் நந்தினி அப்படியே மயங்கி விட்டாள்.

 

அதே‌ நேரம் வீராவும் அப்போது தான் வெளியில் வந்தான் மின்சாரம் தடைப்பட்டதால் 

என்ன ஆனது என்று பார்ப்பதற்க்காக வந்திருந்தனர்.

 

அந்த குளியலறையின் வெளியில் நின்றிருந்த வீரா மண்டப ஓனரை போன் செய்து அழைத்தான் “சார் இங்கே கரன்ட் இல்லை சார்” என்க

மறுமுனையில் இருந்த அவர்

“சார் மோட்டார் ரிப்பேர் பண்ண ஆள் வந்தாங்க அவங்க தான் நிறுத்திருப்பாங்க இப்போ வந்துரும்” என்றார்.

 

“சீக்கிரமா சார் சமையல் வேலையெல்லாம் பாதியிலேயே நிக்குது” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் வீரா.

 

அப்போது வீராவுக்கு குளியலறையில் இருந்து ஏதோ ஒரு முனகல் சத்தம் கேட்டது

அது எதோ ஒரு பெண்ணின் முனகலை போன்று கேட்க 

‘என்ன சத்தம் இது’ என்று யோசித்து கொண்டே தன் போனில் இருந்த லைட்டை ஆன் செய்து குளியலறையை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

 

அப்போது கதவை யாரோ திறக்கும் சத்தத்தில் அங்கே திரும்பிய வினோத் ‘தாழ்ப்பாள் போட மறந்துடனே’ என்று தலையில் அடித்து கொண்டான்

அவன் முகத்தை கைக்குட்டையால் மறைந்திருக்க வீராவுக்கு அது யார் என்று தெரியவில்லை.

 

“டேய் நாயே யாரு டா நீ” என்று கேட்டுக் கொண்டே வீரா வர வினோத் அவனை பிடித்து கீழே இடித்து தள்ளிவிட்டு வெளியில் ஓடினான் ஓடும் போது எங்கே வீரா தன்னை பின் தொடர்ந்து விடுவானோ என்று பயத்தில் அந்த குளியலறையின் கதவை வெளியில் தாழிட்டு விட்டு ஓடினான்.

 

வீரா கதவை திறக்க முயற்சி செய்ய அதை திறக்கவே முடியவில்லை 

யார் அந்த பெண் என்று திரும்பி பார்க்க அங்கே நந்தினியை பார்த்தவனுக்கு ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது.

 

“நந்தினி” என்று கத்தி கொண்டே பயத்துடனே அவள் அருகில் ஓடினான்.

 

அவளின் அருகில் சென்று பார்த்தாள் அவளின் ஆடை மொத்தமும் கலைந்து அலங்கோலமாக கிடந்தாள்.

 

நந்தினியின் உடைகள் கிழிந்து பக்கத்தில் கிடந்தது.

 

வீராக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை அங்கே இருந்த பைப்பில் தண்ணீரை எடுத்து வந்து அவளின் முகத்தில் தெளித்தான் அவள் வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு அவள் கன்னத்தில் “நந்தினி நந்தினி” என்று பதட்டத்துடனே எழுப்ப 

அவள் மெல்ல கண்விழித்தாள்.

 

அங்கே வீராவை பார்த்த நந்தினிக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று போனது பயத்துடனே மேலாடை இல்லாமல் உள்ளாடையுடன் இருந்த தன் மேனியை இரு கை கொண்டு மறைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 

என்னாச்சி நந்தினி என்று வீரா கேட்க வாயை திறக்க “நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைச்சி கூட பார்க்கல மாமா” என்று நந்தினி அழுது கொண்டே கூறினாள்.

 

“நந்தினி நான்” என்று வீரா வாயை திறக்க அதற்க்குள் அந்த இடமே வெளிச்சமாகியது தடைப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்திருந்தது.

 

வினோத் நந்தினியின் ஆடைகளை கலையும் போதே வீரா அங்கே வந்துவிட்டான்

நந்தினி வினோத் அடித்ததில் மயக்கத்தில் இருந்ததால் அவள் எதையும் கவனிக்கவில்லை அது மட்டுமின்றி முழுதாக இருட்டாக இருந்ததால் தன்னை யார் நெருங்கினார்கள் என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

 

வினோத் அந்த இடத்தை விட்டு தப்பித்து தன் நண்பர்களுடன் ஓடிவிட்டான்.

 

நந்தினி தன் மாமன் வீரா தான் தன்னை சீரழிக்க முயற்சி செய்தான் என்று மனதில் நினைத்து கொண்டிருந்தாள் இனி என்ன நடக்குமோ….

 

 

தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “மன்னவன் பார்வையிலே 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top