ATM Tamil Romantic Novels

ரௌடி பேபி -20

20

 

பின்னே பெற்றவர் அறியாத சூதா… அவர் மகளை பற்றி அவருக்கு தானே தெரியும்… பிடிவாதம் குணம் உடையவள் தான்  ஆனால் அக்கறையும் அன்பையும் அதிகம் செலுத்துபவளும் அவளே தான்… போன இடத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ   என்று பயம் அவளைப் பெற்ற தாயாக இதுநாள் வரை அவர் சுமந்து இருந்தது இன்று அவரது மாமியார் கொடுத்த நற்சான்றால் காற்றில் கரைந்து போனது அவர் கலக்கம்…

 

“அப்படியா சம்மந்தி என ஜெயந்தி எதோ பேச வரும் முன்…

 

 அதெல்லாம் இருக்கட்டும் கோவிந்தன் பொண்டாட்டிக்கு இங்கு என்ன வேலை அன்னைக்கு  ரோஷமா  என் புருஷன் தான் முக்கியம்ன்னு போன இல்லை…  அப்புறம் இங்க எதுக்கு வந்த… எனக் கேட்டவளுக்கும் ரோஷம் இருந்தது…

 

 என்னமா பூர்ணா இது வீட்டுக்கு வந்தவங்க கிட்ட  இப்படி பேசுற…என சாந்தி மருமகளை கண்டிக்க…முகத்தை சுழித்தாள் பூர்ணா 

 

 “அடி வாய் மேலே போட்டன்னா பாரு … என்னை மாதிரி கட்டின புருஷனுக்கும் பெத்த பிள்ளைக்கும் நடுவல் மாட்டிட்டு நான் படுற பாடு  எந்த பொண்ணுங்களுக்கும் அந்த நிலைமை வரக்கூடாது… பெத்த பிள்ளைக்கு பார்க்காமல் என்ன ஆச்சுன்னு தினம் தினம்  நான் துடிக்கிறது  எனக்கு தாண்டி தெரியும்… நாளைக்கு உனக்கும் குழந்தை பிறக்கும் இல்ல அப்போ தெரியும் உனக்கும்  என் நிலைமை…!!” நீ என்ன ஜெயந்தி கண் கலங்க…

 

“ஆமாம் இப்படியே அழுது அழுது ஆளை ஏமாற்று… உன் புருஷன் என்ன அவர் பொண்ணே இல்லன்னு என் வீட்டு வாசப்படி மிதிக்காதன்னு சொல்லும் போது ஏதாவது பேசுனியா நீ… விட்டது தொல்லைன்னு நீயும் கமுக்கமா தானே இருந்த… இப்ப மட்டும் என்ன புதுசா பொண்ணு பாசம் கொடுத்துக்கிட்டு வந்துடுச்சு உனக்கு…!!” என் அன்னையை பூர்ணா மடக்க…

 

பூர்ணா என சாந்தி குறுக்கே பேச வர…

 

 நீங்க இருந்து சொல்லுங்க நான் பாத்துக்குறேன்… என்றவர் முந்தானை இழுத்து சொறுகி கொண்டு தயாராக…

 

 அங்கு ஏதோ கலவரம் நடக்க போகிறது என்ன சாந்தி அஞ்ச…

 

 நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் என்னடி நீயுமா கூட கூட பேசிட்டு  இருக்க…என ஜெயந்தி தொடங்க…

 

 அடுத்து ஐந்து நிமிடங்களில் நடந்தவையை  நம்ப முடியாமல் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தார் சாந்தி…

 

பின்னே அம்மாவும் பொண்ணும் அடித்துக் கொள்வார்கள் என்று பார்த்தால்…

 

 தாயும் மகளும் மடியில் படுத்துக்கொண்டு அல்லவா கொஞ்சி கொண்டிருந்தனர்…

 

 நாங்க அப்படித்தான் சம்பந்தி, நீங்க ஏதும் தப்பா எடுத்துக்காதீங்க…என மகளின் தலையை கோதி கொண்டு கூற…

 

ச்சே இல்லை சம்மந்தி என வெளியே சொல்லினாலும் நல்ல அம்மா நல்ல பொண்ணு என மனதுக்குள் நினைக்க தான் செய்தார்…

 

ஏன் ஜெயந்தி எங்க உன் வூட்டுக்காரர் 

வரலை போல ஐயாவுக்கு இன்னும் கோவம் குறையலயோ…?? என பூர்ணா கேட்க 

 

கொழுப்புடி உனக்கு அப்பா கூப்பிட்டா என்ன குறைஞ்சா போயிடுவ… புன்ன மகள் பேசிக்க மாட்டாங்க ஆனா பாசத்துல ஒன்னும் குறைச்சல் இருக்காது… அப்படி எல்லாம் இல்லடி… இப்ப கூட அவர்தான் எனக்கு வந்து கூட்டிக் கொண்டு வந்து விட்டுட்டு போனார்… இங்க பாரு உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி கொடுத்து இருக்கார்… உன் மேல பாசம் இல்லாமலா இதெல்லாம் செய்யுறார்…

 

 வாசல் வரைக்கும் வந்த மனுஷனுக்கு வீட்டுக்குள்ள வந்து என்ன பாக்கணும்னு தோணலை இல்லையா.. ஓஹோ புரிஞ்சி போச்சு அன்னைக்கு கோவத்துல உன் வீட்டு வாசல்ல மிதிக்க  மாட்டேன்னு சொன்னாரு இல்ல… சொன்ன வார்த்தையை காப்பாத்துறாராமா உன் வீட்டுக்காரர்…இருக்கட்டும் நானும் அவர் பொண்ணு தானே பார்த்துக்குறேன்…என பூர்ணாவும் வீம்பு பண்ண…

 

ஏய் என்னடி இப்படி சொல்ற…அப்போ உங்க அண்ணன் விசேஷத்துக்கு நீ வர மாட்டியா…

 

என்ன விசேஷம் எதுக்கு விசேஷம்… என பூர்ணா கேட்டதையே சாந்தியும் முகத்தில் பிரதிபலித்தார்…

 

 

அது தான் நம்ம தினேஷுக்கு அவன் பொண்டாட்டிக்கும் வர முகூர்த்தத்தில்  வரவேற்பு வைக்கலாம்ன்னு உங்க அப்பா முடிவு பண்ணி இருக்கார்… கூடவே உங்க ரெண்டு பேருக்கும் வைக்கலாம் என்று தான் ஆசை ஆனால் மாப்பிளை வேணாம் சொல்லிட்டார்…

 

 உங்க மாப்பிள்ளை கிட்ட கேட்டிங்களா எப்போ…?? எங்க..?? பூர்ணா 

 

ஆமாம் இன்னைக்கு காலைல தான் நானும் உங்க அப்பாவும் போய் மாப்பிள்ளை கிட்ட பேசினோம்…என்றவர் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன…

 

அன்று காலையில்  அலுவலகத்திற்கு சென்ற அருணை எதிர்கொண்டார் கோவிந்தன்…

வரலாமா மாப்பிள்ளை என தயங்க…

 

வாங்க மாமா வாங்க அத்தை என சகஜமாக அருண் அழைத்த பின்பே பெண்ணைப் பெற்றவர்களுக்கு நிம்மதி வந்தது… வீட்டுக்கு வராம ஆபீஸ்ல வச்சு பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… என்றவர் வந்த காரியத்தை பற்றி பேசிவிட்டு பின்பு அருணை அழைத்து கொண்டு தனியாக சென்றவர்…

 

 கண நேர அமைதிக்கு பின்பு உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன மாப்பிளை வயசு கோளாறுல தட்டி கேட்க ஆள் இல்லாமல் தப்பான வழியில் போயிட்டேன்…

 

 உன் வயசு முறுக்குல எல்லாத்தையும் செஞ்சுட்டேன்… இப்போ வயசானதுக்கு அப்புறம் நிம்மதியா உட்கார முடியல உறங்க முடியல உண்ண முடியல… எப்ப எனக்கு சாபம் வரும் நான் பயப்படுறதை விட எப்ப என் கூட இருக்கறவங்களுக்கு என்ன ஆகும்னு பயப்படறத தான் என்னால தாங்க முடியல…

 

 போதும் மாப்பிள்ளை போதும்… எங்கேயோ இருக்கிற  முதலாளிக்காக நான் பாவத்தை சம்பாதித்தது போதும்… திருந்தி வாழனும்னு ஆசைப்படறேன்… எனக்கு சாவைக் கொண்டு எல்லாம் பயமில்லை… என்னோட பயம் எல்லாம் என்னோட பொண்ணு பிள்ளைங்க எல்லாம் சந்தோஷமா பேரபிள்ளையோட வாழறத பார்க்க முடியாம போயிடுமேன்னு தான்…

 

 என்ன மாப்பிளை அப்படி பாக்கறீங்க… அன்னைக்கு கோவத்துல நான் அப்படி சொன்னேன்னு நினைக்கிறீங்களா… இல்ல மாப்பிளை அன்னைக்கு ஏன் தெரியுமா அப்படி சொன்னேன் என் பொண்ணா பொறந்துட்டு அந்தப் புள்ள பட்ட கஷ்டம் எல்லாம் போதும்… இனி என்னோட பாவம் நிழல் அவளை தொடரக்கூடாதுன்னு தான் அவளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னு சொன்னேன்…

 

 ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு மாப்பிள்ளை என் பொண்ணு என்ன விட நீங்க நல்லா பாத்துப்பீங்கன்னு… என ஆனந்த கண்ணீருடன் கூறியவர் உடனே சுதாரித்த கொண்டு நிமிர்வுடன் 

 

நீங்களே ஒரு நாள் பார்த்து சொல்லுங்க மாப்பிள்ளை நான் எல்லாத்தையும் ஒத்துகிட்டு வந்து   உன்கிட்டயே சரண்டர் ஆகுறேன்…என கூறியவர் கண்களில் துளியும் பயமும் பொய்யும் இல்லை…

 

 இதுக்கு நான் என்ன சொல்றது எனக்கு தெரியல… இது நீங்க தனிப்பட்ட எடுக்க வேண்டிய முடிவு  இல்ல மாமா உங்க குடும்பத்துல இருக்காங்க என்ன சொல்லுவாங்க…முதல்ல பூர்ணா உங்க பொண்ணு இதுக்கு ஒத்துக்க மாட்டாளே… உங்களை மாதிரியே தான் உங்க பொண்ணுக்கும் பிடிவாதம் ஜாஸ்தி…அவளை எப்படி சமாளிக்க போறீங்க… என மருமகனாக பேச…

 

“ என் பொண்ணாச்சே என் பிடிவாதம் அப்படியே தான் இருக்கும்… ஆனால் நியாயமான விஷயத்துக்கு தான் பிடிவாதம் பிடிக்கும்…நேர்மையானவள் அன்பால கட்டி போடுவா… அதுல கட்டுப்பட்டு தான் உங்க முன்னாடி திருந்தி மனுஷனா நிக்குறேன்… என்றார்… பெருமையின் சாயல் அந்தத் தந்தையின் முகத்தில் …அது நினைவுக்கு வர ஜெயந்தி கண்ணில் சிறு துளி வைரம்… அதை எவரும் அறியாமல் உள்ளே இழுத்தார்…

 

மருமகனா என்னால ஒன்னும் சொல்ல முடியல…ஆனால் போலீஸ்காரனா உங்கள நினைச்சு நான் பெருமைப்படுகிறேன்… என்ன பொறுத்த வரைக்கும்  குற்றம் குறைய வேணுமே ஒழிய குற்றவாளிகள் அல்ல… திருந்தி வாழ்றவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறதுல தப்பில்லை நான் மட்டும் இல்லை நம்ம சட்டமும் அப்படி தான் சொல்லுது… இத பத்தின கமிஷனர் கிட்ட தனியா பேசுறேன்… என அருண் கூற…

 

 சிறு நம்பிக்கையின் ஒளி கோவிந்தன் முகத்தில் 

 

 அடுத்து என்ன செய்வது என்று இருவரும் கலந்து ஆலோசித்து பரஸ்பரம் விடைபெற்றனர்… 

 இன்னைக்கு காலையில மாப்பிள்ளை ஓட ஆபீஸ்ல வச்சு நானும் பூர்ணா அப்பாவுமா பேசினோம் சம்மந்தி மாப்பிள்ளைக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம்… அதனால இப்போ வேணாம்னு சொல்லிட்டாரு… மாப்பிள்ளைக்கு வேண்டாம்  என்றாலும் இந்த வரவேற்பு தள்ளி போட முடியாத படி சூழ்நிலை ஆகிப்போச்சு… அதான் சம்மந்தி உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்னு வந்தேன்… பூர்ணாவை அனுப்பி வைங்க சம்பந்தி என ஜெயந்தி சங்கடத்துடன் கூற…

 

 “ஐயைய என்ன சம்மந்தி இது நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க… தம்பிக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கு சொன்னானே அப்புறம் என்ன… நான் சொன்னா என்ன தம்பி சொன்னா என்ன எல்லாம் ஒன்னு தான் விடுங்க… உங்க பையனுக்கு செய்யறதுக்கு போய் என்கிட்ட கேட்டுகிட்டே… நீங்க வருத்த படாமல் செய்ங்க சம்மந்தி  பூர்ணாவை தம்பி வந்ததும் அனுப்பி வைக்கிறேன் என்றார் சாந்தி இதெல்லாம் பெரிய விஷயம் என்று பொருட் படுத்தாமல்…

 ஓ அப்போ உங்க மாப்பிள்ளை போய் பார்ப்பீங்க… ஆனா உன் பொண்ண வந்து பார்க்க மாட்டாரா மிஸ்டர் கோவிந்தன்… அப்படி போச்சா அப்ப நானும் அவர் பொண்ணு தானே… அவருக்கு அவ்ளோ எது இருந்தா எனக்கு இவ்ளோ இருக்காதா… என்னையும்  தான் அவர் வீட்டு வாசப்படி மிதிக்க கூடாதுன்னு சொன்னார் அதனால… என பூர்ணா பேசப்பேச கேட்டுக் கொண்டிருந்த ஜெயந்திக்கு வீதி கிளம்பியது அவருக்கு தான் தெரியுமே அவரின் அருமை மகளின் பிடிவாதம்… வந்த சில நாட்களிலேயே மருமகளை பற்றி புரிந்து கொண்ட மாமியாரும் அதே நிலையில் இருக்க

 அதனால நான் முன்வாசல் வழியாக வரமாட்டேன் நீ என்ன பண்ற நம்ம வீட்டு பின் கதவை திறந்தே வை நான் பின் வாசல் வழியாகவே வந்துட்டு போறேன் என்ன சிரிக்காமல் சொல்லி முடிக்க…

 

 அதுவரை பீதியாக அமர்ந்திருந்தவர்கள்… “வாலு” குபீர் என்று சிரித்து விட… “உனக்கு கொழுப்பு கூடி போச்சு எல்லாம் மாப்பிள்ளை கொடுக்குற இடம்…!!” என மகளை மட்டம் தட்ட மறக்கவில்லை அந்த தாய் 

 

 ம்க்கும் கூகிள் மேப்பிலே இல்லாத இடமா பார்த்து கொடுத்துட்டார் உங்க மாப்பிளை… அட அதை விடுமா வரவேற்பை தள்ளி போட முடியாத அளவுக்கு  அப்படி என்னம்மா இக்கட்டான சூழ்நிலை…என மகள் வெளிப்படையாக கேட்டு வைக்க…

 

 நாகரீகம் கருதி  ஜெயந்தி நாசுக்காக மறைத்து   வைத்ததை மகள் பட்டென்று கேட்டு விட… சம்பந்தி முன்பு எதுவும் சொல்ல முடியாமல் திணறியவர் பின்… சின்ன குரலில்  அது தினேஷ் சம்சாரம் முழுகாம இருக்கா… அவளுக்கு வேற  வளைகாப்பு சுத்தணும்… மாசமா இருக்குற பொண்ணு வேற… எங்க சொந்த பந்தத்துக்கு எல்லாம் இன்னும் இவங்க கல்யாணம் விஷயம் தெரியாது… அதுவா பேச்சு வெளியே வரதுக்கு முன்னாடியே வரவேற்பு வச்சுக்கலாம் முடிவு பண்ணி இருக்கோம்…என கூறி முடிக்க…

 

பூர்ணாவுக்கு மண்டையில் மணி அடிக்க… “நமக்கு ஒரு நாள் முன்னாடி தான கல்யாணம் ஆச்சு அதுக்குள்ளே கற்பமா இருக்காளா…???  இந்த போலீஸ நானு…!!” என பல்லை கடித்தாள்…

 பூ ஒன்று புயலாகி போலீசை புரட்டிப் போடா போகுதா…??  கால் தட்டி தலை குப்புற விழ போகுதா அடுத்து எபில பார்ப்போம்…ம்ம்ம்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top