அத்தியாயம் 12
நந்தினியை பார்த்த வீராவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை மின்சாரம் வந்தவுடன் அவளின் அரைகுறை ஆடையை பார்த்த வீரா பதட்டத்துடனே தான் அணிந்திருந்த சட்டையை கழட்டி அவளிடம் நீட்டினான்.
வீரா கையில் இருந்த சட்டையை பயத்துடனே வாங்கி கொண்டவள் அந்த பக்கமாக திரும்பி அந்த சட்டையை அணிந்து கொண்டாள்
அவள் மீண்டும் அழுது கொண்டே இருக்க “நந்தினி உன்னை நான் எதுவும் பண்ணல டி”என்றான்.
நந்தினி அவனை நிமிர்ந்து நம்பாமல் ஒரு பார்வை பார்த்தாள்
“நீ எதுவும் சொல்ல வேண்டாம் என் வாழ்க்கையவே சீரழிக்க பார்த்தால்ல நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்” என்றாள் நந்தினி தன்னை இருட்டில் சீரழிக்க முயற்சி செய்தது வீரா தான் என்று நினைத்து கொண்டிருந்தாள் இப்போது மின்சாரம் வந்தவுடன் நடிக்கிறான் என்று நினைத்தாள்.
“நந்தினி நான் சொல்றதை கேளு முதல்ல எழுந்துரு வா வெளியே போலாம்” என்று அவளின் கைப்பிடிக்க தட்டுத்தடுமாறி எழுந்து நின்ற நந்தினி கோபத்துடன் அவன் கையை தட்டிவிட்டாள்.
“நந்தினி” என்று வீரா மீண்டும் அவளின் கைப்பிடிக்க அவள் தரையில் விழ போனாள் வீரா உடனே அவளின் இடையில் கைக்கொடுத்து அவளை அணைத்து பிடித்துக் கொண்டான்.
இருவரும் பேசிக்கொண்டே இருக்கும் போதே அந்த குளியலறையின் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்க இருவரும் அங்கே திரும்பி பார்த்தனர்.
கதவை திறந்து கொண்டு திவ்யாவின் தாய் பாக்கியம் உள்ளே வந்தார்
அவர் சாதாரணமாக தான் உள்ளே வந்தார் உள்ளே இருந்த நந்தினியையும் வீராவையும் அப்போது தான் கவனித்தார்.
நந்தினி வீராவின் சட்டையை போட்டு கொண்டு மேலே இருந்த பட்டன்களை போடாமல் விட்டிருக்க அவளின் உள்ளாடை பல்லை காட்டி கொண்டு இருந்தது கீழே இருந்த பாவடை தொடை வரை மேலே ஏறி இருந்தது அலங்கோலமாக வீரா அவளை அணைத்து கொண்டு நின்றிருந்தான் வீரா சட்டை இல்லாமல் கை இல்லா பனியுடன் இருப்பதையும் பார்த்தார்
கீழே அவளின் ஆடைகள் அனைத்தும் சிதறி கிடப்பதையும் பார்த்தார் பாக்கியம்.
அவர்கள் இருவரையும் சந்தேக பார்வை பார்த்தவர் தானே ஒரு யூகத்துக்கு வந்தார் “என்னங்க என்னங்க” என்று பதறி அடித்து கொண்டே வெளியே ஓடினார்.
அவரின் சத்தம் கேட்டு அங்கே வெளியே நின்றிருந்த அனைவரின் பார்வையும் அந்த குளியலறைக்கு சென்றது.
வீரா நந்தினியின் கைப்பிடித்து அழைத்து கொண்டு வெற்றுடம்புடன் வெளியே வந்தான் இருவரும் ஜோடியாக வெளியில் வர சுபாஷ் அப்போது தான் வெளியில் சென்றுவிட்டு தன் நண்பர்களுடன் உள்ளே வந்தான்.
பாக்கியம் கத்தி கதறி தன் கணவரிடம் அழுது கொண்டே ஏதோ கூறிக் கொண்டே இருக்க ‘என்னாச்சி இந்த அம்மாவுக்கு’ என்று மனதில் நினைத்து கொண்டே சுபாஷ் அங்கே திரும்பினான்.
வீராவும் நந்தினியும் நிற்க்கும் நிலையை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டான்
உறவினர்கள் கூட்டம் மொத்தமும் அங்கே கூடிவிட்டது.
“என்னங்க நாம மோசம் போய்ட்டோமேங்க” என்று பாக்கியம் நெஞ்சில் அடித்து கொண்டு அழுது கொண்டே இருக்க “என்னாச்சி பாக்கியம்” என்று அவர் கணவர் சங்கர் கேட்டார்.
“இன்னும் என்னங்க ஆகனும் இந்த படுபாவியும் அந்த நொண்டி பொண்ணும் பாத்ரூம்ல ஒன்னா அரைகுறையா அணைச்சிட்டு நின்னுட்டு இருக்காங்க என் பொண்ணு அப்போவே சொன்னா இவன் சரி கிடையாதுன்னு நான் தான் நம்பல” என்றார் அழுது கொண்டே.
பாக்கியம் கூறியது கேட்ட சுபாஷின் முகம் மாற ஆரம்பித்தது கோபத்தில் பல்லை கடித்து கொண்டே நின்றிருந்தான்.
அப்போது சத்தம் கேட்டு திவ்யாவும் அங்கு வந்து சேர்ந்தாள் தன் தாய் கூறியது அனைத்தையும் கேட்டவளுக்கு தலையில் இடியே விழுந்ததை போல் ஆனது.
சாவித்திரியும் சுவாமிநாதனும் அங்கே வர “அய்யோ படுபாவிகளா நீங்க எல்லாம் நல்லா இருப்பிங்களா எங்களை நம்ப வச்சு கழுத்தறுத்திட்டங்கல்ல இதுக்காக தான் கல்யாணத்தை சீக்கிரமா பண்ண சொன்னிங்களா” என்று கத்தினார் பாக்கியம்.
“என்னங்க என்னாச்சி என்ன நடந்துச்சி ஏன் இப்படி குத்திட்டு இருக்கிங்க” என்று சுவாமிநாதனும் கேட்டார்
“என்ன நடந்துச்சா உன் மகனும் பேத்தியும் ஒன்னு மன்னா இருந்தாங்க அதுவும் பாத்ரூம்ல அதை என் ரெண்டு கண்ணால பார்த்தேன்” என்றார் பாக்கியம்.
“இந்தாம்மா எங்கே வந்து என்ன வார்த்தை பேசுற இதுக்கு மேல ஒரு வார்த்தை தப்பா பேசுனிங்க நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” என்று மிரட்டினார் சுவாமிநாதன்.
திவ்யா அழுது கொண்டே நின்றிருந்தவளுக்கு உடனே கோபம் வந்துவிட்டது “என்ன பண்ணுவிங்க எங்க அம்மா கிட்ட குரல் உசத்தி பேசுற வேலையெல்லாம் வேண்டாம் இப்படி ஒரு கேவலமான பிள்ளையை பெத்துட்டு எப்படி உங்களால இப்படி பேச முடியுது” என்றவள் வீராவின் அருகில் சென்றாள் “இப்போ தான தெரியுது நீ ஏன் என் கிட்ட இத்தனை நாளா பேசலன்னு நாளைக்கு கல்யாணத்தை வச்சிட்டு இன்னைக்கு ஒருத்தி கூட படுக்கிறியே வெட்கமா இல்லை” என்று வீராவை பார்த்து கேள்வி கேட்டாள்.
“ஏய்” என்று வீரா அந்த மண்டபமே அதிரும் படி கோபத்துடன் கத்தினான்
“என்னடி ரொம்ப பேசுற இங்கே என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசுற” என்றான் கோபத்துடன்.
சுபாஷ்க்கு கோபம் வந்துவிட “டேய் போதும் நிறுத்து டா அந்த பொண்ணு என்ன தப்பா சொல்லிட்டா இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன உன்னை நான் சும்மா விட மாட்டேன் இதனால தான் கல்யாணத்துல விருப்பமே இல்லாத மாதிரி இருந்தியா” என்று கோபத்துடன் கத்தி கொண்டே வீராவின் அருகில் கையை ஓங்கி கொண்டு வர வீரா அவனின் கையை பிடித்து தடுத்தான்.
“டேய் முட்டாள் மாதிரி பேசாத சுபாஷ்” என்றான் வீரா கோபத்துடன்
“நான் முட்டாள் தான் ஒரு பொண்ணை பார்த்த உடனே விசாரிக்காம பொண்ணு கேட்டு வந்தேன் பாரு நான் முட்டாள் தான் வெட்கமாயில்லை எப்படி இப்படி ஒரு காரியத்தை உன்னால பண்ண முடியுது” என்றான் சுபாஷ்.
“சுபாஷ் என் மகன் அந்த மாதிரி பண்ற ஆளு கிடையாது பா என்னை நம்பு பா நாளைக்கு கல்யாணத்தை வச்சிட்டு எப்படி பா” என்ற சாவித்திரி அதற்க்கு மேல் பேச முடியாமல் கண்ணீர் வடித்தார்.
“நீங்க இன்னும் இந்த கல்யாணம் நடக்கும்ன்னு வேற நினைச்சிட்டு இருக்கிங்களா உங்க பேத்திக்கு எனக்கும் கல்யாணம் நடக்காது அதுக்கு வேற ஆள பாருங்க கண்டவன் சாப்பிட்ட எச்சி இலையை சாப்பிட நான் ஒன்னும் பிச்சைக்காரன் கிடையாது” என்றான் சுபாஷ் நந்தினியை ஒரு ஏளனப் பார்வை பார்த்து கொண்டே.
“சுபாஷ் என்ன பேசுறிங்க” என்றாள் நந்தினி கோபம் மற்றும் அழுகையுடனே தேம்பி கொண்டே
“ஏய் நடிக்காத டி இதுக்கு மேல என்ன நடக்கனும் நொண்டியா இருந்தா கூட பரவாயில்லை கல்யாணம் பண்ணனும்ன்னு நினைச்சேன் பாரு என்னை சொல்லனும்” என்றான் சுபாஷ்.
“என் பேத்தி பாவம் பா அவள் அந்த மாதிரி பொண்ணு இல்லை பா அவள் ரொம்ப நல்ல பொண்ணு பா” என்றார் சுவாமிநாதன் நடுக்கத்துடனே பதட்டத்தில் அவரால் சரியாக பேச கூட முடியவில்லை.
“ஆமா நல்ல பொண்ணு தான் கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி இன்னொருத்தன் கூட படுத்துட்டு வருவா எல்லாம் தெரிஞ்சும் குடும்பமே நாடகமா ஆடுறிங்க அவள் நொண்டி நம்ம
பையனுக்கு கட்டி வைக்க கூடாதுன்னு நினைச்சி இருப்பிங்க என்னை மாதிரி ஒரு இளிச்சவாயன் கிடைச்ச உடனே என் தலையில் கட்ட பார்த்துருக்கிங்க அதான உங்களை பெரிய மனுசன்னு சும்மா விடுறேன் இல்லைன்னா” என்று அவர் முன் சுபாஷ் விரல் நீட்டி எச்சரித்தான்.
வீராவுக்கு தன் தந்தையை அவதுறாக பேசியவுடன் கோபம் வந்து விட சுபாஷின் நெஞ்சில் தன் காலால் எட்டி மிதித்தான் அதில் சுபாஷ் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டான்.
சுபாஷ்க்கு வீரா தன்னை எட்டி உதைத்தால் கோபம் வந்துவிட
கோபத்துடன் எழுந்தவன் மீண்டும் வீராவை அடிக்க வர
வீரா சுபாஷை அடி பின்னி எடுக்க ஆரம்பித்தான்.
வீரா சுபாஷின் கன்னத்தில் ஓங்கி குத்த சுபாஷின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது அங்கே சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவனை பார்த்து பயந்துவிட நந்தினி நடப்பதை அனைத்தையும் பார்த்து கதறி அழ ஆரம்பித்தாள்.
சுபாஷின் அக்கா லேகா ஓடி வந்து வீராவை தடுக்க அப்போதும் அவன் விடாமல் அடித்து கொண்டு இருந்தான்
வீராவுக்கு இன்னும் கோபம் குறையவேயில்லை.
அங்கே சுற்றி நின்றிருந்த உறவினர்கள் அனைவரும் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.
சுபாஷின் அக்கா திலகா “போதும் நிறுத்து இந்த மாதிரி தரம் கெட்ட குடும்பத்தில சம்மந்தம் பேச வந்தோம் பாரு எங்களை சொல்லனும் எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் டேய் வாடா போலாம்” என்று சுபாஷின் கையை பிடித்து தன்னுடன் இழுத்து சென்றார் திலகா.
சுபாஷ் செல்லும் போது கூட வீராவையும் நந்தினியையும் முறைத்து கொண்டே சென்றான்.
“இதுக்கு மேல நாமளும் இங்கே இருந்து என்ன பண்ண போறோம் த்துஉ தரம் கெட்ட குடும்பம்
என் மகன் இப்படி பண்ணிருந்தா நானா இருந்தா இந்நேரம் தூக்குல தொங்கி இருப்பேன் வாங்க எல்லாரும் போலாம்” என்று கூறிய திவ்யாவின் தந்தை தன் சொந்த பந்தங்கள் என அனைவரையும் அழைத்து கொண்டு வெளியில் சென்றார்.
சுவாமிநாதன் இடிந்து போய் அப்படியே தரையில் அமர்ந்து கொண்டார்.
சாவித்திரி அழுது கொண்டே “என்னங்க என்னாச்சி” என்று கேட்க அதற்க்கும் சுவாமிநாதன் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக அமர்ந்து இருந்தார்.
சுற்றி இருந்த உறவினர்கள்
“பொண்ணு நல்லா இருக்குன்னு தொட்டு இருப்பான் வயசு புள்ளை வீட்ல இருந்தா இப்படி தான்” என்று ஒருவர் கூற இன்னொருவர் “அவங்க சொன்ன மாதிரி நொண்டிங்கறதால தான் அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க யோசிச்சு இருப்பாங்க போல என்னவோ சுவாமிநாதன் ரொம்ப நல்லவர்ன்னுல்ல நினைச்சேன்” என்று கூறிக்கொண்டே அங்கிருந்து ஒவ்வொருவராக சென்றனர்.
நந்நினி “எல்லாம் என்னால தான்” தலையில் அடித்து கொண்டு அழுதவள் மண்டபத்தின் உள்ளே சென்றாள்
வீரா “ஏய் நில்லு டி” என்று கூறிக்கொண்டே அவளின் பின்னே சென்றான் அவள் நிற்காமல் உள்ளே சென்று கொண்டிருந்தாள்.
சுவாமிநாதன் தரையில் அமர்ந்து இருந்தவர் பதட்டத்துடனே எழுந்து
“அம்மாடி” என்று கத்தி அழைத்தவர் நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே தரையில் அமர்ந்து கொண்டார்.
சாவித்திரி நந்தினியை பார்த்து கொண்டே இருந்தவர் “என்னங்க என்னாச்சி” என்று பதறி கொண்டே அவரை பிடித்து கொண்டார்.
சாவித்திரியின் குரலில் நந்தினி அங்கே திரும்பி பார்த்தாள் அங்கே சுவாமிநாதன் நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தார்.
“தாத்தா” என்று அழுது கொண்டே அவரின் அருகில் சென்றாள்
வீராவும் அப்போது தான் தன் தந்தையை கவனித்தான் அவனும் அவர் அருகில் ஓடி வந்தான்.
அத்தியாயம் 13
சுவாமிநாதன் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழ “அப்பா என்னாச்சு” என்று கத்தி கொண்டே வீரா அவர் அருகில் ஓடி வந்தான் அவரால் எதுவும் பதில் பேசவே முடியவில்லை.
அவர் கஷ்டப்பட்டுவதை பார்த்த வீரா அவரை தன் கையில் தூக்கி கொண்டு காரை நோக்கி ஓடினான்.
அப்போது தான் அருணும் அவன் பெற்றோரும் திருமணத்திற்க்காக மண்டபத்தின் வெளியே காரில் வந்து இறங்கினர்.
வீரா சுவாமிநாதனை தூக்கி கொண்டு ஓடுவதை பார்த்த
அருண் வீராவின் அருகில் பதட்டத்துடனே ஓடி வந்தான் “என்னாச்சி வீரா” என்று கேட்டான் “அப்புறமா சொல்றேன் டா வந்து காரை எடு” என்றான் வீரா ஏனெனில் அவன் மிகுந்த பதட்டத்துடன் இருந்தான்.
அருண் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டான் அவனுடன் நந்தினியும் சாவித்திரியும் ஏறிக்கொண்டனர்.
அருணின் பெற்றோர் “என்னாச்சி சுவாமிநாதனுக்கு” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
கார் செல்லும் வழியெல்லாம் நந்தினியும் சாவித்திரியும் அழுது கொண்டே வந்தனர்
வீராவின் மனதில் வலி இருந்தாலும் அவன் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை இறுகி போய் அமர்ந்து இருந்தான்.
மருத்துவமனையின் வாசலில் கார் நின்றவுடன் வீரா தன் தந்தையை தூக்கி கொண்டு வெளியில் வந்தவன் அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தான்.
வெளியே அனைவரும் பதட்டத்துடனே நின்றிருந்தனர்
அருணின் பெற்றோரும் மண்டபத்தில் என்ன நடந்தது என்று கேட்டு விசாரித்து விட்டு அங்கே வந்து சேர்ந்தனர்.
அனைவரும் பதட்டத்துடனே இருக்க சாவித்திரி எதுவும் பேசாமல் பேயறைந்ததை போல் அமர்ந்து இருந்தார்.
வீரா சட்டையில்லாமல் வெறும் பனியன் மற்றும் பட்டு வேஷ்டியுடன் நின்றிருந்தான்
நந்தினி அவன் சட்டையை போட்டுக் கொண்டே கீழே பாவைடையுடன் நின்றிருந்தாள்
அங்கு வருவோர் போவோர் என அனைவரும் இவர்கள் இருவரையும் வித்தியாசமாக பார்த்துவிட்டு சென்றனர்.
அருண் வீராவை தனியே அழைத்து சென்று என்ன நடந்தது என்று விசாரித்தான் வீரா மண்டபத்தில் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.
“அடப்பாவி ரெண்டு கல்யாணமும் நின்னு போச்சா” என்று அதிரிச்சியுடன் அருண் கேட்டான் “ஆமாம் டா” என்றான் வீரா எந்த வித எதிரொலிப்பையும் முகத்தில் காட்டாமல்.
அப்போது மருத்துவர் அறையில் இருந்து வெளியில் வந்தார் அங்கிருந்த அனைவரின் கவனமும் அவரிடம் திரும்பியது “சார் அவரு எப்படி இருக்காரு” என்று அருண் தான் முதலில் கேட்டான்.
“அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருக்கு சார் இப்போ ஓகே வா தான் இருக்காரு பட் மயக்கத்தில் இருக்காரு” என்றார் மருத்துவர்.
“டாக்டர் இனிமே எந்த பிரச்சனையும் இல்லையே” என்று அருண் கேட்டான்.
“அப்படி சொல்ல முடியாது சார் நீங்க அவரை கொஞ்சம் கவனமா பார்த்துக்கனும் அவரு அதிர்ச்சியாகுற மாதிரி எந்த விஷயத்தையும் இனி அவர் கிட்ட சொல்ல கூடாது கவனமா பார்த்துக்கோங்க இன்னொரு அட்டாக் கூட வர வாய்ப்பு இருக்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
வீரா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்
“விடு மச்சான் பார்த்துக்கலாம்” என்று அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தான் அருண்.
நந்தினியை பார்க்கவும் அருணுக்கு பாவமாக தான் இருந்தது.
மறுநாள் சுவாமிநாதனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்க்கு கூட்டி வந்தனர் அடுத்து வந்த ஒரு வாரமும் இப்படியே ஓடியது
வீட்டில் யாரும் சிரித்து பேசவில்லை அனைவரும் ஏதோ ஒரு வெறுமையுடன் சுற்றிக் கொண்டு இருந்தனர்.
அன்று அருண் வீராவின் வீட்டிற்க்கு வந்திருந்தான் நந்தினியை தனியே அழைத்து சென்றவன்
அன்று இரவு என்ன நடந்தது என்று விசாரித்தான்.
அவளும் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவனிடம் கூறி முடித்தாள்.
“உனக்கு யார் மேலையாச்சும் சந்தேகம் இருக்கா பாப்பா” என்று அருண் கேட்டான்
பதிலுக்கு அவள் “எனக்கு வீரா மாமா மேல தான் சந்தேகமா இருக்கு” என்றாள் பட்டென்று
அவள் இப்படி கூறுவாள் என்று எதிர்ப்பார்க்காத அருண்
“என்ன பாப்பா சொல்ற வீரா எப்படி கண்டிப்பா அவன் அப்படி பண்ணக்கூடிய ஆள் இல்லை” என்று அருண் கூறினான்.
“கண்டிப்பா அவரு தான் எனக்கு தோனுது” என்றாள் நந்தினி
“பாப்பா அவன் ஸ்கூல் படிக்கும் போதே எந்த பொண்ணையும் நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை இது வேற யாரோ தான்” என்றான்.
“அண்ணா நீ என்ன சொன்னாலும் எனக்கு அவரு மேல தான் சந்தேகமா இருக்கு” என்றாள் நந்தினி தீர்க்கமாக
அவள் இவ்வளவு தெள்ள தெளிவாக கூறும் போது எதற்க்கும் ஒரு முறை விசாரித்து பார்ப்போம் என்று நினைத்த அருண் “சரி நான் விசாரிக்கிறேன்” என்றான்.
இப்படியே நாட்கள் உருண்டோடின இந்த இடைப்பட்ட நாட்களில் வீரா வீட்டில் இருந்தால் நந்தினி தன் அறையில் இருந்து கொள்வாள் வெளியே வரவே மாட்டாள் அவன் முகத்தை பார்க்க கூட பிடிக்காமல் அவனிடம் இருந்து ஓடி ஒளிந்து கொண்டு இருந்தாள்.
இரண்டு வாரம் கழித்து…
சுவாமிநாதன் ஓரளவுக்கு முன்பு போல் வெளியில் செல்ல ஆரம்பித்தார்.
அவர் வெளியில் நடந்து சென்றால் அவரின் காது படவே வீராவை பற்றியும் நந்தினியை பற்றியும் ஊரில் உள்ளவர்கள் கேவலமாக பேச ஆரம்பித்தனர்.
அவரும் எவ்வளவு தான் பொறுத்து கொள்வார் அன்றும் அப்படித்தான் அவர் வயலில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வரப்பில் வேலை செய்து கொண்டு இருந்த இரு பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.
“சுவாமிநாதனேக்கே அவரு மகன் இவரு பேத்தியை வச்சிக்கிட்டு இருந்த விஷயம் தெரியாதாமே” என்று ஒருத்தி கூற
“அது எப்படி தெரியாமல் இருக்கும் ஒரே வீட்ல தான இருக்காங்க அந்த பொண்ணு சரியான ராசி இல்லாதவை அதனால தான் சின்ன வயசுல இருக்கும் போதே அவங்க அப்பா அம்மாவை முழுங்கினா இப்போ
இவரு மகன் அவளை வச்சிட்டு இருக்க விஷயம் தெரிஞ்சி எங்கே தன் மகன் உயிரும் பறி போய்டுமோன்னு பயந்து தான் சுவாமிநாதன் தெளிவா அவளை வெளியவே கட்டிக்கொடுக்க பார்த்தாரு அதுக்குள்ள மாப்பிள்ளை வீட்ல எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சி போச்சு இது தான் நடந்துருக்கு” என்றாள் இன்னொருத்தி.
“என்னவோ டி பெரிய மனுஷங்க வீட்ல எல்லாம் இப்படி தான் நடக்குது போல இதெல்லாம் நமக்கு எதுக்கு வேலையை பாரு” என்றாள்.
இவர்கள் இருவரும் சுவாமிநாதன் அங்கு நின்றதை கவனிக்கவில்லை.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்கு கோபம் அதிகரித்தது அவர்களிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று திரும்பியவருக்கு கை,கால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்தது உடல் வியர்த்து வடிய தலை சுற்றி வரப்பில் விழ போக அங்கே வேலை பார்த்த ஆண்கள் அவரை ஓடி வந்து பிடித்து கொண்டனர்.
அவரை வீட்டிற்கு கைத்தாங்கலாக அழைத்து வர
சாவித்திரி மாட்டிற்க்கு தண்ணீர் வைத்து கொண்டு இருந்தவர் சுவாமிநாதனை பார்த்து பதட்டத்துடனே அங்கே ஓடி வந்தார் “என்னங்க” என்று அவரை பிடித்து கொள்ள
“அம்மா ஐயா வரப்புல மயங்கி விழ போனாரு அதான் இங்கே கூட்டிட்டு வந்தோம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
“என்னங்க பார்த்து வரக்கூடாதா” என்று புலம்பிக் கொண்டே அவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து சென்றார் சாவித்திரி.
தங்கள் அறையின் உள்ளே அழைத்து சென்று சுவாமிநாதனை கட்டிலில் அமர வைத்தார்.
சுவாமிநாதன் சாவித்திரி கேட்டதற்க்கு எந்தவித பதிலும் கூறாமல் ஏதோ யோசனையுடனே அமர்ந்து இருந்தார்.
“என்னங்க யோசனை” என்று அவரின் தோளில் சாவித்திரி கை வைத்து கேட்டார்
“ஒன்னும் இல்லை வீரா எங்கே” என்றார்.
“வேலைக்கு தான் போய்ருக்கான்”
“அப்போ நந்தினி” என்று கேட்டார்
“அவள் ரூம்ல தான் இருக்கா கூப்பிடவாங்க” என்று சாவித்திரி கேட்டார்.
“இல்லை வேண்டாம் சாவி நான் கொஞ்ச நேரம் படுக்குறேன் வீரா வந்தா என்னை எழுப்பு கொஞ்சம் பேசணும்” என்றார் சுவாமிநாதன்.
“சரிங்க” என்று கூறிவிட்டு வெளியில் வந்தார் சாவித்திரி இருந்தாலும் அவரின் மனதில் ‘என்ன பேசப் போறாரு இவரு’ என்ற எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.
இரவு ஒரு எட்டு மணி போல் வீடு வந்து சேர்ந்தான் வீரா
சுவாமிநாதனும் தூங்கி எழுந்து வந்து ஹாலில் அவனுக்காக காத்திருந்தார்.
வீரா அவரை கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு செல்ல போக
“வீரா ஒரு நிமிசம் நில்லு பா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் சுவாமிநாதன்.
“என்னப்பா” என்று கேட்டுக்கொண்டே
வீரா அங்கே வந்து நின்றான்
“சாவி நந்தினியை வர சொல்லு” என்றார்.
சாவித்திரி நந்தினியின் அறைக்குள் சென்று பார்க்க அவள் சோர்ந்து போய் படுத்திருந்தாள் அவளை பார்க்கவே அவருக்கு பாவமாக இருந்தது ‘எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆகிட்டாளே’ என்று மனதில் நினைத்தவர்.
அவள் அருகில் சென்றார் “அம்மாடி நந்தினி” என்று அவளின் தோளில் கை வைத்து எழுப்ப “என்ன அம்மாச்சி” என்றாள் கண்ணை திறந்த நந்தினி.
“உன்னை தாத்தா கூப்பிட்டாரு” என்றார் சாவித்திரி
மெல்ல எழுந்து அமர்ந்த நந்தினி தனது சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து மேலே போட்டு கொண்டவள் அவருடன் நடந்து சென்றாள்.
வீரா ஹாலில் வந்து நின்றிருப்பதை பார்த்தவள் அவனை பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பி கொண்டாள்.
“உங்க ரெண்டு பேருக்கிட்டையும் ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசனும்” என்று சுவாமிநாதன் கூறினார்.
என்ன என்பது போல் நந்தினி அவரை பார்க்க வீராவும் தன் தந்தை என்ன சொல்ல போகிறார் என்று அவரையே பார்த்து கொண்டிருந்தான்.
“வீரா உனக்கும் நந்தினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்” என்று நந்தினியின் தலையில் ஒரு இடியை இறக்க வீராவும் அவரை அதிரிச்சியுடன் பார்த்தான்.
“அப்பா ஏற்கனவே ஒரு தடவை பட்ட அவமானம் எல்லாம் போதாது இன்னும் வேற அசிங்கப்படனுமா” என்று வீரா கூறினான்.
“தாத்தா நீங்க ரோட்ல போற கழுதையை காட்டி கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா கூட பண்ணிப்பேன் ஆனா இவரை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்” என்றாள் நந்தினி வீராவை நிமிர்ந்து கூட பார்க்காமல் தலையை குனிந்து கொண்டே.
அவள் பேசியதை கேட்ட வீராவுக்கு உடனே கோபம் வந்துவிட “ஏய் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன பேச வாய் இருக்காது டி உனக்கு” என்றான் கோபத்துடன்.
“டேய் கொஞ்ச நேரம் சும்மா இரு டா உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கிறிங்களான்னு கேட்கல கல்யாணம் பண்ணி வைக்க போறன்னு சொன்னேன் நான் உங்க ரெண்டு பேர் விருப்பத்தையும் கேட்கல போதும் நான் பட்ட அசிங்கமெல்லாம்” என்றார் கோபத்துடன் சுவாமிநாதன்.
தொடரும்….
Global news that impacts you, stay informed.
alan carter global news [url=http://www.pick-news.com/global-trade-agreements-and-their-impacts]http://www.pick-news.com/global-trade-agreements-and-their-impacts[/url] .
Super sis 💞
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌