ATM Tamil Romantic Novels

மன்னவன் பார்வையிலே 14

அத்தியாயம் 14

 

“தாத்தா நீங்க என்ன சொன்னாலும் என்னால இவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றாள் நந்தினி.

 

“ஆமாம் அந்த சுபாஷ் கல்யாணம் பண்ணி வைங்க மேடம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்றான் கோபத்துடன் வீரா.

 

“போதும் நிறுத்துங்க சின்ன பிள்ளைங்க மாதிரி எதுக்கு இப்போ சண்டை போடுறிங்க 

நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்துருக்கேன்

ஊரே உங்க ரெண்டு பேரையும் பார்த்து சிரிக்குது நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறது தான் எனக்கு சரியா படுது” என்றார் சுவாமிநாதன்.

 

“நான் சொல்றேன்னு கோவப்படாதிங்க தாத்தா உங்க பையன் ஒரு பொம்பளை பொறுக்கி” என்றாள் நந்தினி அவள் பதிலில் கோபமடைந்த வீரா ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அறைவிட்டான்

“யாரை பார்த்து டி பொம்பளை பொறுக்கின்னு சொன்ன” என்று கோபத்துடன் அவளை பார்த்து கேட்டான்.

 

வீரா மேலும் எகிறி கொண்டே அவள் அருகில் நெருங்கி வர

ஒரு அரக்கனை போல் தன்னை நெருங்கி வருபவனை பார்த்து

நந்தினி தேம்பி அழுக ஆரம்பித்தாள்.

 

சுவாமிநாதன் குறுக்கே வந்து அவனை தடுத்து நிறுத்தினார்

“என்ன பழக்கம் டா இது பொம்பள பிள்ளையை கை நீட்டி அடிக்கிறது” என்று கேட்டார் 

அவரின் கேள்வியில் வீரா கொஞ்சமே கொஞ்சம் அடங்கி நின்றான் ஆனால் அவன் பார்வை நந்தினியிடமே இருந்தது.

 

அவளை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான்

“அம்மா அப்பா இல்லாத பொண்ணு தான என்ன சொன்னாலும் கேட்பான்னு மட்டும் நினைக்காதிங்க” என்றாள் தேம்பி கொண்டே நந்தினி.

 

சுவாமிநாதன் நந்தினியின் புறம் திரும்பியவர் “வீரா நீ கொஞ்சம் வெளியே இரு நான் நந்தினி கிட்ட பேசணும்” என்றார்.

 

வீரா அவளை முறைத்து கொண்டே வெளியில் சென்றான்.

 

அவன் வெளியில் சென்றுவிட்டானா என்று பார்த்துவிட்டு சுவாமிநாதன் பேச ஆரம்பித்தார் “அம்மாடி நந்தினி ஊருக்குள்ள உன்னையும் வீராவையும் சேர்த்து வைச்சு ரொம்ப தப்பு தப்பு பேசுறாங்க ஊர் வாயை அடைக்க எனக்கு வேற வழி தெரியலை மா உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன் எனக்காக வீராவை கல்யாணம் பண்ணிக்கோ மா என்னால உங்கே ரெண்டு பேரை பத்தியும் அசிங்கமா பேசுவதை கேட்டு சும்மா இருக்க முடியல கழுத்தை அறுத்துக்கிட்டு செத்துடலாமான்னு தோனுது” என்றார் கண்கள் கலங்க சுவாமிநாதன்.

 

நந்தினி அப்போதும் எதுவும் பேசாமல் அழுது கொண்டே தலை குனிந்து கொண்டே நின்றிருந்தாள்.

 

அவள் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்த சுவாமிநாதனுக்கு தன் பேத்தி எதற்க்கும் சம்மதிக்க மாட்டாள் என்று தெரிந்து விட கண்ணீர் விட்டு கொண்டே அங்கிருந்து செல்ல போனார் நந்தினி அவரின் கையை பிடித்து கொண்டாள்.

 

நந்தினி இதுவரை தன் தாத்தா எதற்க்கும் கண்ணீர் விட்டு பார்த்தது இல்லை முதல் முறையாக அவர் கண்கள் கலங்க அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை “நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் தாத்தா” என்றாள் கண்ணீர் மல்க.

 

சுவாமிநாதனுக்கு சந்தோஷம் தாளவில்லை கண்ணீருடன் மெல்ல புன்னகைத்தவர் “அம்மாடி எனக்கு இது போதும் மா இது போதும்” என்றார்.

 

சாவித்திரிக்கும் இப்போது தான் மனநிறைவாக இருந்தது முன்பு இருந்தே தன் பேத்தியை யாருக்கோ கட்டி கொடுப்பதில் அவருக்கு சுத்தமாக விருப்பமே இல்லை எப்படியோ தன் பேத்தி சம்மதித்துவிட்டாள் என்று மனதில் திருப்தி பட்டுக் கொண்டார்.

 

வீரா மீண்டும் உள்ளே வர 

“இன்னும் நாலு நாள்ல உனக்கும் நந்தினிக்கும் நம்ம ஊர் முருகன் கோவில்ல கல்யாணம் நம்ம சொந்தக்காரங்க யாரையும் கூப்பிட வேண்டாம் அருணோட அப்பா அம்மாவுக்கு மட்டும் விஷயத்தை சொல்லு போதும்” என்று கூறி முடித்தார் சுவாமிநாதன்.

 

‘எப்படி இப்போ மட்டும் ஒத்துக்கிட்டா’ என்ற யோசனையுடன் வீரா நந்தினியை முறைத்து பார்த்து கொண்டிருந்தான் ‘கல்யாணம் மட்டும் முடியட்டும் உனக்கு இருக்கு டி’ என்று மனதில் நினைத்து கொண்டான்.

 

ஆனால் நந்தினியோ அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை

அவள் மனதில் வேறொன்று ஓடிக்கொண்டிருந்தது ‘திருமணம் முடிந்த உடன் இங்கே இருக்க கூடாது கல்லூரி விடுதிக்கு சென்று விட வேண்டும்’ என்று நினைத்து கொண்டிருந்தாள்.

 

இருவரில் யார் நினைப்பது நடக்குமோ…

 

திருமணம் என்ற பேச்சை எடுத்ததில் இருந்து நந்தினி வீட்டு பக்கமே வரவேயில்லை அருண் வீட்டிலேயே இருந்து கொண்டாள்.

 

 அருண் வீட்டிலும் சரி அவள் வீட்டிலும் சரி அவள் ஏன் இங்கு இருக்கிறாள் என ஒரு வார்த்தை கூட யாரும் கேட்கவில்லை.

 

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் சாதாரணமாக இருப்பதை பார்த்த அருண் மனம் தாங்காமால் அவளிடமே கேட்டுவிட்டான் “பாப்பா உனக்கு வீராவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானா” என்று கேட்க

“ம்ம் சம்மதம் தான்” என்று மட்டும் பதில் கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டு கொண்டாள்.

 

நான்கு நாட்கள் நிமிடத்தில் காணாமல் போக அன்று அதிகாலை 6-7.30-க்குள் முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருக்க மணமக்கள் இருவரும் கிளம்பி வந்தனர்.

 

சுவாமிநாதன் உறவினர்கள் ஒருவரை கூட திருமணத்தை அழைக்கவில்லை போதும் இந்த ஊராரும் சொந்தங்களும் தன் மகனையும் பேத்தியையும் தூற்றியது போதும் என்று நினைத்து கொண்டார்

அதனால் தான் அவர் யாரையும் அழைக்கவில்லை‌.

 

அருணின் தாயும் சாவித்திரியும் நந்தினியை அலங்கரித்து அழைத்து வந்தனர்.

 

வீரா மணமேடயில் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து ஐயர் கூறிய மந்திரங்களை கூறிக்கொண்டே இருந்தான்.

 

எதார்த்தமாக நிமிர்ந்தவனின் பார்வை எதிரில் நடந்து வந்த நந்தினியிடம் சென்றது

அரக்கு நிற சிறிய கரை வைத்த பட்டு புடவை ஒன்றை கட்டியிருந்தாள் நீண்ட கூந்தலை நேர் வகடு எடுத்து பின்னலிட்டு மல்லிப்பூ சூடியிருந்தாள்

சாவித்திரி தன் பேத்திக்கும் மகனுக்கும் திருமணம் என்ற சந்தோஷத்தில் தன்னிடம் இருக்கும் அனைத்து நகைகளையும் நந்தினிக்கு அணிவித்து இருந்தார்.

 

நந்தினி ஏதோ நகை கடை விளம்பரத்தில் வரும் மாடலை போன்று நடந்து வந்து கொண்டிருந்தாள்.

 

என்ன தான் அவள் மேல் வீரா கோபமாக இருந்தாலும் அவளை மையலுடன் பார்க்கும் அவன் விழிகளை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

அவன் பார்வையை பார்த்த நந்தினி அவனை முறைத்து கொண்டே அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

 

ஐயர் மந்திரங்களை கூறிக் கொண்டே இருந்தவர் நந்தினி மணமேடையில் அமர்ந்தவுடன் அவளை ஒரு பார்வை பார்த்தார் மந்திரம் சொல்வதை நிறுத்தினார்.

 

“ஏங்க பொண்ணுக்கு 18 வயசு வந்துடுச்சா பொண்ணை பார்த்தா மைனர் பொண்ணு மாதிரி இருக்கு” என்று கேட்டார்.

 

“பொண்ணுக்கு 20 வயசு ஆகுது ஐயரே நீங்க மந்திரத்தை சொல்லுங்க” என்றான் அருண்

இருந்தாலும் அந்த ஐயர் நந்தனியையும் வீராவையும் சந்தேகப் பார்வை பார்த்து கொண்டே மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தார்.

 

நந்நினி ஒல்லியான உடல்வாகுடன் சிறுபிள்ளை போன்று இருப்பாள் 

வீராவோ அதற்க்கு எதிர்மறையாக ஆஜானுபாகுவான தோற்றத்தில் முரட்டு உடல்வாகுடன் 

பெரிய மீசை 

ஆள் பார்ப்பதற்க்கு கரடுமுரடான தோற்றத்துடன் இருந்ததால் ஒருவேளை இது கட்டாய கல்யாணமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.

 

ஐயர் மந்திரிங்கள் ஒவ்வொன்றாக கூற மெலிதாக சத்தமே வராமல் கூறிக்கொண்டே இருந்தாள் நந்தினி வீராவின் குரலோ அந்த அறை எங்கும் கணீர் என ஒலித்து கொண்டு இருந்தது.

 

அனைத்து சடங்குகளும் முடிய ஐயர் தாலியை எடுத்து வீராவின் கையில் கொடுத்தார் வீரா அதை கையில் வாங்கியவன் தலை குனிந்து அமர்ந்து இருந்த நந்தினியின் கழுத்தில் கட்டி முடித்தான்.

 

நந்தினியின் கழுத்தில் வீரா தாலியை கட்டும் போதே நந்தினி அழுதேவிட்டாள் 

அவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவன் கரங்களில் விழ வீரா திரும்பி அவளை முறைத்து பார்த்தான்.

 

நந்தினி அழுவதை பார்த்த அந்த ஐயருக்கு இன்னும் சந்தேகம் வர 

அருண் அவரின் பார்வையை கவனித்தவன் “ஐயரே அது ஆனந்த கண்ணீர்” என்றான்.

 

ஐயர் இருவரையும் அக்னியை சுற்றி வர கூற அருண் வீராவின் கையை பிடித்து முன்னே அழைத்து சென்றான்.

 

ஒரு‌ அண்ணனாக தன் தங்கைக்கு அனைத்து கடமைகளையும் செய்தான்.

 

இவ்வளவு ஏன் நந்தினிக்கு தாய் தந்தையாக இருந்து அனைத்து சடங்குகளையும் அருணின் பெற்றோர் தான் செய்தனர்.

 

திருமணம் முடிந்து இருவரும் ஜோடியாக வெளியில் வர ஊரில் இருந்த அனைவருக்கும் தெரிந்துவிட்டது வீராவுக்கும் நந்தினிக்கும் திருமணம் முடிந்த செய்தி.

 

கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் “பார்த்தியா டி ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குறது உண்மை தான் போல காதும் காதும் வைச்ச மாதிரி யாருக்கும் சொல்லாம கல்யாணத்தை முடிச்சிட்டாங்க பாரு” என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

 

அவர்களின் பின்னே நின்றிருந்த அருணின் காதுகளிலும் இது விழுந்தது.

 

“ஏன் மா ஏய் நீங்களாம் கோவிலுக்கு வந்தா சாமியே கும்பிட மாட்டிங்களா அடுத்தவங்களை பத்தி மட்டும் தான் பேசுவிங்களா உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா” என்று அருண் அவ்விருவரையும் பார்த்து கேட்க அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

 

“பொம்பளைங்களா இதுங்க” என்று கூறிக்கொண்டே அருண் அங்கிருந்து சென்றான்.

 

மணமக்கள் இருவரையும் வீட்டிற்க்கு ஆலம் சுற்றி உள்ளே அழைத்து வந்தனர்.

 

வீராவையும் நந்தினியையும் அமர வைத்து பால் பழம் கொடுக்க நந்தினி வேண்டா வெறுப்புக்கு வாங்கி உண்டாள்.

 

எப்போதடா இந்த சடங்கெல்லாம் முடியும் என்பதை போன்று இருந்தது நந்தினிக்கு அனைத்தும் முடிந்து அவள் அறைக்கு சென்று படுத்து உறங்கி ஒய்வெடுக்க ஆரம்பித்தாள்.

 

நந்தினி காலையிலேயே கண்விழித்ததால் யாரும் அவளை தொல்லை செய்யவில்லை தூங்கட்டும் என்று விட்டுவிட்டனர்.

 

இரவு சாந்திமுகூர்த்துக்கு நேரம் குறித்து கொடுத்திருக்க சாவித்திரி வந்து நந்தினியை எழுப்ப “என்ன அம்மாச்சி” என்றாள் தூக்கத்திலேயே “போய் குளிச்சிட்டு வா டி” என்று அவளை துரத்திவிட்டார்.

 

நந்நினி குளித்துவிட்டு வர அவளுக்கு மெலிதான புது புடவை ஒன்றை கட்டி அலங்காரம் செய்து அருணின் தாய் லலிதா அவளை வீராவின் அறைக்குள் அனுப்பி வைத்தார்.

 

நந்தினிக்கு கோபமாக வந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் பால் சொம்புடன் வீராவின் அறையின் உள்ளே சென்றாள்.

 

லலிதா வெளியில் இருந்து கதவை அடைத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

 

அங்கே வீரா ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு படுத்திருந்தான் அவனை பார்த்தவளுக்கு கோபமாக வர பால் சொம்பை மேஜையின் மீது பொத்தென்று வைத்தாள் நந்தினி.

 

அந்த சத்தத்தில் மெல்ல எழுந்தமர்ந்த வீரா “வந்துட்டியா டி என் அக்கா பெத்த ரத்தினமே” என்றான் அவன் குரலில் ஒரு துள்ளல் தெரிய அதில் எரிச்சலடைந்த நந்தினி “பொறுக்கி” என்று முனுமுனுத்தாள்.

 

அது அவன் காதில் தெளிவாக விழ அவன் பெரிதாக அலட்டி கொள்ளாமல் அவளை மையலுடன் பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான்.

 

அவன் பார்வை அவளுக்கு கோபத்தை வரவழைத்தது வீராவின் அருகில் இருந்தால் அவன் மீது இருந்த வந்த வாசனையை உணர்ந்தவள் இது அன்னைக்கு என்று அவளுக்கு ஏதோ ஒன்று நினைவு வர “உண்மையை சொல்லு அன்னைக்கு நீ தான அந்த பாத்ரூம்ல என் கிட்ட வந்த” என்று திக்கி திணறி பயத்துடனே கேட்டாள் நந்நினி.

 

“ஆமா நான் தான் வந்தேன் அதுக்கு என்ன இப்போ” என்றான் அசால்ட்டாக வீரா தோளை குலுக்கி கொண்டு.

 

தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “மன்னவன் பார்வையிலே 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top