ATM Tamil Romantic Novels

காதல் தேவதா 3

அத்தியாயம் 3

 

ஆராதனா தர்மனை பார்க்காதவளை போன்று அமர்ந்து இருந்தாளும் 

ஓரக்கண்ணால் அவன் ஸ்டெயிரிங்கை பிடித்து லாவகமாக காரை செலுத்தி கொண்டு இருக்கும் நேர்த்தியை பார்த்து கொண்டே தான் பயணம் செய்து கொண்டிருந்தாள். 

 

தர்மன் ஒரு ஹோட்டலின் பக்கம் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினான் அவன் காரை விட்டு இறங்கி விட ஆராதனா இறங்காமல் இருப்பதை பார்த்தவன் அவள் புறம் வந்து காரின் கண்ணாடியை தட்டினான் “ம்ப்ச்” என்று ஆராதனா சலித்துக் கொண்டே காரின் கண்ணாடியை கீழே இறக்கினாள். 

 

“இந்தா புள்ளை சாப்பிட வரலையா நீ” என்று தர்மன் கேட்க

“நீ போய் சாப்பிடு மேன் எனக்கு பசிக்கல நான் வரலை” என்றாள். 

 

“இன்னும் ஊருக்கு போக ரெண்டு மணி நேரம் ஆகும் போற வழியில எங்கேயும் வண்டியை நிறுத்த மாட்டேன் பொறவு உன் இஷ்டம்” என்று கூறிவிட்டு அவன் ஹோட்டலின் உள்ளே சென்றான். 

 

“இடியட் சரியான பட்டிக்காட்டான்” என்று வாய்க்குள்ளேயே முனகியவள் காரிலிருந்து கீழே இறங்கினாள். 

 

அந்த ஹோட்டலை பார்த்து முகம் சுழித்து கொண்டே நின்றிருந்தாள் வேறு வழியே இல்லாமல் இறங்கி உள்ளே வந்தாள். 

 

ஆராதனா முட்டை கண்ணுடன் துறு துறு விழிகளுடன் சற்று பூசினார் போன்ற உடல்வாகுடன் அழகு பதுமை என அங்கே நடந்து வந்தாள் ஹோட்டலின் உள்ளே இருந்த ஆண்களின் பார்வை ஆராதனாவின் மீது மையலுடன் படிந்தது. 

 

அங்கிருந்த ஆடவர்களின் பார்வை எதையும் கண்டுகொள்ளாமல் ஆராதனா கையை கழுவி விட்டு வர அவள் எதிரில் வந்த சிவப்பு சட்டை போட்ட இளைஞன் ஒருவன் வேண்டுமென்றே தன் தோள்பட்டையால் அவளின் முன்னெழில்களில் வேகமாக வந்து இடித்துவிட்டு 

“சாரி மேடம்” என்று கூற அதை அறியாத ஆராதனா நெஞ்சை பிடித்து கொண்டே “இட்ஸ் ஓகே” என்று கூறிவிட்டு தர்மனின் எதிரில் வந்து அமர்ந்தாள். 

 

அந்த இளைஞன் தன் நண்பர்கள் அருகில் செல்ல அந்த இளவட்டங்கள் 

“சூப்பர் டா” என்று அவனை பாராட்ட அவன் ஏதோ ஆஸ்கார் அவார்ட் வாங்கி விட்டு வந்தவனை போன்று ஆராதனாவை பார்த்து காலரை தூக்கி விட்டு கொண்டான்.

 

ஆராதனாவும் அப்போது தான் அவனை பார்த்தாள் அவன் வேண்டுமென்றே தான் தன்னை இடித்திருக்கிறான் என்று தெரிந்தவுடன் “பொறுக்கி” என்று தன் வாய்க்குள் முனுமுனுத்து கொண்டே அமர்ந்து இருந்தாள். 

 

இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த வீராவுக்கு கோபம் அதிகரிக்க கோபத்துடன் தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்

தன் வேட்டியை மடித்து கட்டி கொண்டு தன் கையில் இருந்த தங்க காப்பை மேலே ஏற்றி விட்டுக் கொண்டு அவர்கள் அருகில் சென்றான். 

 

இந்த ஆளு எங்கே போறாரு என்று ஆராதனாவும் அவனையே தான் பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தாள். 

 

அவன் அருகில் சென்ற தர்மன் அந்த சிவப்பு சட்டைக்காரனின் தோளில் கை வைக்க அவனும் பதிலுக்கு திரும்பி என்ன என்பதை போன்று புருவத்தை ஏற்றி இறக்கி கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தான்

அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் தர்மன் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான்

தர்மனின் ஒரு அடிக்கே அவன் கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வந்தது காட்டிலும் மேட்டிலும் வேலை பார்த்து அவன் கைகள் உரமேறி போய் இருந்தது அவன் காதில் ஏதோ சத்தம் வேறு கேட்டது தர்மனின் ஐந்து விரல்களின் அச்சு அப்படியே பதிந்துவிட்டது அவன் அதிர்ச்சியுடன் கன்னத்தில் கை வைத்து கொண்டே தலையில் பூச்சி பறக்க நின்றிருந்தான். 

 

அவன் அருகில் இருந்த அவனின் நண்பன் ஒருவன் தர்மனின் சட்டையை பிடித்து “யாருடா நீ?” என்று கோபத்துடன் கேட்டான். 

 

தர்மன் தன் சட்டையின் மீது இருந்த அவன் கையை எடுத்தவன் தன் பலத்துக்கு அவன் கையை பிடித்து பின்னால் வளைக்க ஆரம்பித்தான்

அவனோ வலி தாங்க முடியாமல் “அம்மா வலிக்குது டா டேய் என்னை விட்டுரு” என்று அலறி துடிக்க அங்கிருந்த அனைவரும் இவர்களை தான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். 

 

இன்னொருவன் பக்கத்தில் இருந்த நாற்காலியை தூக்கி கொண்டு தர்மனை அடிக்க வர அவன் நெஞ்சில் எட்டி ஒரு மிதி மிதித்தான் தர்மன். 

 

இவ்வாறாக அங்கிருந்த ஒருவரையும் விடாமல் தர்மன் அடித்து துவைக்க ஆரம்பித்தான் 

இறுதியாக அவர்கள் அனைவரும் அடிப்பட்டு கீழே விழுந்து கிடைக்க 

“இனிமே எந்த பொம்பளை புள்ளையவாது ஒட்டி உரசுறதை பார்த்தேன் துண்டு துண்டா வெட்டி போட்ருவேன் ராஸ்கல்” என்று அந்த சிவப்பு சட்டைக்காரனை மிரட்டி விட்டு அங்கிருந்து வெளியில் சென்றான். 

 

ஆராதனா தர்மன் அடிப்பதையும் அவர்கள் அடி வாங்குவதையும் பார்த்தவள் எதுவும் பேசாமல் எழுந்து வெளியில் சென்றாள். 

 

தர்மனும் வந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டான் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க 

தர்மன் தான் அந்த மெளன 

விரதத்தை கலைத்தான்

“இந்தா புள்ளை நாம போடுற உடுப்பு அடுத்தவங்களை என்னைக்குமே சலனப்படுத்த கூடாது இது ஒன்னும் உங்க பெங்களூர் இல்லை பட்டிக்காடு இடத்துக்கு தகுந்த மாதிரி உடை போட்டு பழகு” என்றான். 

 

ஆராதனா அவன் கூறியதை கேட்டு கண்கள் கலங்கியவள் “இப்போ என்ன என் மேல தான தப்புன்னு சொல்ல வர நீ” என்றாள். 

 

“நான் அப்படி சொல்லலை புள்ளை நாகரிகமாக உடுப்பு போடுவது தப்பு இல்லை அதுக்குன்னு இடம் பொருள் ஏவல்ன்னு ஒன்னு இருக்கு இங்க இருக்கவனுங்க எல்லாம் சல்லி பசங்க நீ இழுத்து போர்த்திட்டு வந்தாலும் உன்னை உரச தான் பார்ப்பானுவ மெத்த படிச்சவ நீ, 

நான் அதிகம் படிக்காதவன் உனக்கு புத்தி சொல்ல தகுதி இல்லாதவன் புரிஞ்சு நடந்துக்கோ அதுக்கு பொறவு உன் விருப்பம்” என்றான் தர்மன். 

 

ஆராதனா அதன் பின் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவள் முகம் சோர்ந்து இருப்பதை பார்த்தவன் இரண்டு மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை அதி வேகமாக காரை ஓட்டி ஒன்றரை மணி நேரத்தில் கடந்தான். 

 

சக்திவேலின் வீடு வந்து சேர்ந்தவன் காரை நிறுத்த ஆராதனா சோர்வுடன் கீழே இறங்கி வந்தாள். 

 

அவள் பாட்டி சந்தோசம் அவளுக்காக வாசலில் காத்திருந்தவர் “வா டி என் ராசாத்தி” என்று அவள் கன்னத்தை வழித்து முத்தம் கொடுத்தவர் “ஆரு மா எப்படி இருக்க டா உன்னை பார்த்து எவ்வளவு வருசமாச்சு” என்று கூற ஆராதனா வராத புன்னகையை வரவழைத்து கொண்டே

“நல்லாருக்கேன் அம்மாச்சி” என்றாள். 

 

ஆராதனாவின் தாத்தா சொக்கநாதன் இவர்களின் குரல் கேட்டு வெளியில் வந்தவர்

“ஆரு கண்ணா என் பேத்தி வந்துட்டாளா இனி வீடே கலை கட்ட போகுது” என்று கூறிக் கொண்டே இருக்க

தர்மன் அவளின் டிராலியை 

எடுத்து கொண்டு அங்கே வந்தான். 

 

“பண்ணையார் ஐயா அப்போ நான் வரேங்க” என்று தர்மன் அவளின் பெட்டியை வாசலில் வைத்து விட்டு செல்ல போக “இரு தர்மா சாப்பிட்டு போலாம்” என்றார். 

 

“காலையிலேயே கிளம்பி போனேங்க வூட்ல எல்லாம் போட்டது போட்ட படியே இருக்கு நான் பொறவு வாரேன்ங்க ஐயா” 

 

“சரி தர்மா திருவிழா வேலையெல்லாம் இருக்கு நீ தான் முன்னாடி நின்னு எல்லாத்தையும் முடிச்சு கொடுக்கனும்” என்றார். 

 

“அதுக்கு என்னங்க ஐயா செறப்பா செஞ்சிருவோம்” என்று கூறிவிட்டு தர்மன் அங்கிருந்து செல்ல திரும்பியவன் ஆராதனாவிடம் வருகிறேன் என்று கண்களால் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். 

 

“என்ன ஆரு மா ஏன் சோகமா தெரியுற” என்று சந்தோசம் அவளிடம் கேட்க “ஒன்னும் இல்லை அம்மாச்சி டிராவல் பண்ணினது டயர்டா இருக்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து உள்ளே சென்றாள். 

 

தர்மன் நேரே அவன் வீட்டிற்க்கு வர 

கதவு அனாமத்தாக திறந்து கிடந்தது 

யோசனையுடன் அவன் உள்ளே வர வள்ளி சமையலறையில் சமைத்து கொண்டு இருந்தாள். 

 

“நீ எப்போ கண்ணு வந்த” என்று குரல் கொடுக்க அவளோ பதறி அடித்து கொண்டே அதிர்ச்சியுடன் அவன் புறம் திரும்பினாள். 

 

“பயப்படாத கண்ணு நான் தான்” என்று தர்மன் கூற அதில் அசுவாசமடைந்தவள் 

“அண்ணே சக்திவேல் ஐயா தான் உங்க வீட்டு சாவியை கொடுத்து வீட்டை ஒதுங்க வைக்க சொன்னாக” என்றாள். 

 

“சரி கண்ணு நீ கிளம்பு மீதியை நான் பார்த்துக்கிடுதேன்” என்றான் தர்மன்

“அம்மா பாதியிலேயே வேலையை விட்டு வந்தா ஏசுமே அண்ணே” என்றாள் வள்ளி பயத்துடன். 

 

“பரவாயில்லை உங்க ஆத்தா 

கிட்ட நான் சொல்லிக்கிடுதேன் நீ கிளம்பு” என்றான் தர்மன்

“அப்ப சரிண்ணே” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் வள்ளி. 

 

வள்ளி பண்ணையார் வீட்டில் தான் வேலை செய்கிறாள் தாய் தகப்பன் இல்லாதவள் அவளின் பெரியம்மா தான் அவளை வளர்த்து கொண்டு இருக்கிறார் உலகம் தெரியாதவள் 

மழைக்கு கூட பள்ளி பக்கம் செல்லாதவள் பயந்த சுபாவம் உடையவள். 

 

தர்மனுக்கு வள்ளி மீது எப்போதும் மிகுந்த அக்கறை உண்டு அவள் அனாதை பெண் என்பதால்… 

 

தொடரும்… 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “காதல் தேவதா 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top