அத்தியாயம் 4
வள்ளி தர்மனின் வீட்டில் இருந்து நேரே தன் வீட்டிற்க்கு சென்றாள்
அங்கே வாசலிலேயே அவளுக்காக காத்திருந்தார் அவளின் பெரியம்மா
அஞ்சலை.
“இந்தா டி என்ன போன வேகத்துலையே திரும்பி வந்துட்ட” என்று அவளிடம் சத்தமாக கத்தி கேட்க அவளோ பயத்துடனே “தர்மன் அண்ணா தான் போக சொல்லுச்சு உன் கிட்ட சொல்லுகிடுதேன்னு சொன்னுச்சு அதனால தான் கிளம்பி வந்துட்டேன் எனக்கு பசிக்குது பெரியம்மா” என்றாள் சிறுபிள்ளையை போன்று முகத்தை வைத்து கொண்டே வள்ளி.
“சரி சரி போய் கஞ்சி குடிச்சிப்புட்டு பண்ணையார் தோப்பு வீட்டை போய் சுத்தம் பண்ணு நாளைக்கு அவுக சொந்தக்காரங்க எல்லாம் திருவிழாவுக்கு வாராகளாம் என்னை தான் போக சொன்னாக எனக்கு லேசா காய்ச்சல் வர மாதிரி இருக்கு நீ போயிட்டு வா” என்றார்.
அவளும் பதிலுக்கு சரி என தலையை ஆட்டிவிட்டு வீட்டில் இருந்த பழைய சோற்றை தட்டில் போட்டு பிசைந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
வள்ளியை பார்த்த அஞ்சலைக்கு கண்கள் இரண்டும் கலங்க ஆரம்பித்தது அவளை பார்த்து அழுது கொண்டே குழம்பை அவள் தட்டில் ஊற்றியவர் “நீ அஞ்சு வயசு குழந்தையா இருக்கும் போது உன் ஆத்தா உன்னை என் கையில கொடுத்துட்டு மேல போய் சேர்ந்துட்டா என் சக்திக்கு எப்படியோ உன்னை வளர்த்து விட்டுட்டேன் இனி எவன் கையிலையாவது உன்னை பிடிச்சி கொடுத்துட்டா நான் நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்” என்றார்.
வள்ளிக்கு அவர் கூறிய எதுவும் காதில் விழவேயில்லை அந்த பழைய சோற்றையே ஏதோ பிரியாணியை சாப்பிடுவதை போன்று ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
நிம்மதியாக வயிறு முட்ட சாப்பிட்டவள் தோப்பு வீட்டின் சாவியை வாங்கி கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.
அஞ்சலை அங்கிருந்து நடந்து செல்லும் தன் அக்கா மகளையே பாவமாக பார்த்து கொண்டே நின்றிருந்தார்.
மறுநாள் காலை ஊரில் காப்பு கட்டினர் முதல் மரியாதை சொக்கநாத பண்ணையாருக்கு தான் வழங்கப்பட்டது ஐயர் சாமி கழுத்தில் இருந்த மாலையை அவரின் கழுத்தில் அணிவித்தார் பட்டு துண்டை அவரின் தலையில் தலைப்பாகையாக கட்டிவிட்டார்.
பதிலுக்கு சொக்கநாதன் தன் இடுப்பில் இருந்த பச்சை நிற பெல்டின் உள்ளே இருந்து ஒரு கட்டு நிறைய பணத்தை எடுத்து அவர் தட்டில் வைத்தார் “திருவிழா செலவுக்கு வச்சிக்கங்க ஐயரே இந்த பணத்தை வச்சு திருவிழா வேலையெல்லாம் சிறப்பா பார்த்துக்கிடுங்க” என்று கூற பதிலுக்கு அவர் “நன்றிங்க ஐயா அதெல்லாம் நல்லபடியா நடக்கும் கவலையே படாதிக” என்றார் அந்த ஐயர்.
ஆராதனா இதையெல்லாம் பார்த்து கொண்டே நின்றிருந்தவள் தன் அருகில் இருந்த பாட்டியிடம் “அம்மாச்சி ஏன் தாத்தாவுக்கு மட்டும் இந்த மாதிரி மரியாதையெல்லாம் பண்றாங்க” என்று கேட்டாள்.
“அதுவா கண்ணு இந்த கோவிலை கட்டுறதுக்கு இந்த இடத்தை தானமா கொடுத்ததே உன் தாத்தாவுக்கு தாத்தா தான் அதனால இந்த மரியாதை எங்களுக்கு அப்புறமா உன் மாமனுக்கு தான் இந்த மரியாதையெல்லாம் கொடுப்பாக” என்றார் சந்தோசம்.
“ஓஹோ மாமா எப்போ வராங்க பார்க்கவேயில்லையே அம்மாச்சி” என்று கேட்டாள் ஆராதனா
“இன்னைக்கு ராத்திரி வந்துடுவான் கண்ணு” என்றார்.
காப்பு கட்டி கொடியேற்றம் அன்று சிறப்பாக முடிய அனைவரும் வீட்டிற்க்கு கிளம்பினர்.
ஆராதனா தன் பாட்டியுடன் நடந்து வந்து கொண்டிருக்க அவளை துரத்தில் இருந்து பார்த்தான் நாகலிங்கம் அவனும் சக்திவேலுக்கு பங்காளி முறை தான் ஊரில் இருக்கும் வசதி படைத்தவர்களில் இவனும் ஒருவன்
பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி தான்
ஆராதனாவை பார்த்தவனின் கண்கள் அவளை விட்டு விலகவேயில்லை.
தன் பக்கத்தில் இருந்த அல்லக்கையிடம் “யார் டா அந்த பால்கோவா தொட்ட இனிக்கும் போல சரியான கட்டையா இருப்பா போல” என்று கேட்க அவன் அல்லக்கை பசுபதி “அண்ணன் உங்க முறைப்பொண்ணு தான் அது சக்திவேல் அக்கா மவள் நியாபகம் இல்லை” என்று கேட்டான்.
“சின்ன வயசுல ஊர்க்குள்ள விரல் சூப்பிக்கிட்டு கிடந்தாளே அவளா இது” என்று கேட்டு கொண்டே அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான் நாகலிங்கம்.
நாவல் பழம் நிற தாவணி அணிந்து அதற்க்கு ஏற்றார் போன்று அதே நாவல் பழம் கருப்ப நிறம் கலந்த சிறிய கை வைத்த மேல் சட்டை பாவடை அணிந்து தன் குட்டை முடியை ஒரு கிளிப் குத்தி இழுத்து கட்டி காதில் சிறிய வைர தோடுடன் எந்த வித ஒப்பனையும் இன்றி செப்பு சிலை போன்று இருந்தவளின் மீது அவன் பார்வை மையலுடன் படிந்தது.
“அண்ணன் அப்படி பார்க்காதிக அந்த தோட்டத்தை குத்தகைக்குலாம் எடுக்க முடியாது பொண்ணு பெரிய இடம்” என்றான் பசுபதி தலையை சொரிந்து கொண்டே
“குத்தகைக்கு எவன் டா கேட்டான் விலை கொடுத்து வாங்க தான் பார்க்குறேன்” என்றான் நாகலிங்கம் பார்வையை ஆராதனாவை விட்டு விளக்காமல்.
“சரித்தேன் கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்ண்ணே” என்றான் பசுபதி சிரித்து கொண்டே.
ஆராதனா தன்னை ஒருவன் பார்க்கிறான் என்பதை கூட அறியாமல் சிரித்து கொண்டே தன் பாட்டியுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள்.
அன்று மாலை ஆராதனாவின் பெற்றோர் தேவி ராஜமாணிக்கம் திருவிழாவுக்காக ஊருக்கு வந்து சேர்ந்தனர் அவர்களுடன் ஆராதனாவின் தம்பி வினய்யும் வந்து சேர்ந்தான்.
திருவிழா வேலைகளில் அனைத்திற்கும் சொக்கநாத பண்ணையாரிடம் கேட்டே அனைத்து முடிவுகளையும் எடுத்து கொண்டு இருந்தனர் ஊர் பெரியவர்கள் அவர் மேல் அவ்வளவு மரியாதை.
இரவு மழை வேறு விடாமல் வெளுக்க ஆரம்பித்தது வெகு நாட்களுக்கு பின் மழை பெய்ததால் ஊர் மக்கள் அனைவரும் சந்தோஷப்பட்டனர்.
சக்திவேல் திருநெல்வேலியில் இருந்து வேலைகள் அனைத்தையும் முடிந்தவுடன் இரவோடு இரவாக ஊருக்கு வந்தான் ஆனால் அவன் வீட்டிற்க்கு செல்லாமல் நேரே தோப்பு வீட்டிற்க்கு சென்றான்.
சக்திவேல் பொதுவாக குடித்துவிட்டு வந்தால் வீட்டிற்க்கு வர மாட்டான் தோப்பு வீட்டிற்க்கு தான் செல்வான்
அன்றும் அதே போல் தான் நன்றாக குடித்துவிட்டு வந்திருக்க வீட்டிற்க்கு செல்லாமல் தோப்பு வீட்டுக்கு வந்துவிட்டான்.
மழை வேறு விடாமல் வெளியே பெய்து கொண்டே இருந்தது அவனோ முழு போதையில் வந்து இருந்தான் மழையின் காரணமாக தோப்பு வீடு முழுதாக இருள் சூழ்ந்து இருந்தது.
அந்த தோப்பு வீட்டை பெரிய வீடு என்று கூறிவிட முடியாது அந்த காலத்தில் கட்டப்பட்ட சிறிய மச்சி வீடு தான்.
சக்தவேல் வீட்டின் உள்ளே நுழைய வீடு அவன் வருவதற்க்கு முன்பே திறந்து கிடந்தது ‘என்ன டா இது வீடு திறந்து கிடக்கு ஆள் இல்லாத வீட்ல மோகினி பிசாசு ஏதாச்சும் வந்துருச்சா’ என்று நினைத்து கொண்டே உள்ளே வந்தான்.
அங்கே இருந்த சுவற்றில் மண் விளக்கு எரிந்து கொண்டு இருக்க
சக்திவேல் சந்தேகத்துடன் இன்னும் உள்ளே சென்றான்.
வீட்டின் உள்ளே ஒரு மூலையில் தன் கால்களை கட்டி கொண்டு பயத்துடனே அமர்ந்து இருந்தாள் வள்ளி.
சக்திவேல் உள்ளே வர அவனை பார்த்தவள் பயத்துடனே ஓடிச்சென்று அவனை கட்டிப்பிடித்து கொண்டாள்
திடீரென யாரோ ஒரு பெண் அவனை ஓடி வந்து அவனை கட்டிப்பிடிக்க சக்திவேல் பதறிவிட்டான் இது பேயா இல்லை பெண் தானா என்று அவளை விலக்கி வெளிச்சத்தில் அவள் முகத்தை பார்க்க வள்ளி என்று தெரிந்தவுடன் இன்னும் அதிர்ந்துவிட்டான்.
“என்னாச்சு வள்ளி” என்று அவளிடம் கேட்க “அது… அது…” என்று அவள் திக்கி திணற வெளியே கை காட்ட “என்ன அங்கே என்ன?” என்று கேட்டான் சக்திவேல்.
“இன்னைக்கு வேலை முடிச்சிட்டு கிளம்ப போனனா அப்போ இருட்டுல ஒரு… பெ… ரி… ய… பா… ம்… பு ஒன்னு என் கால் மேல ஏறி போச்சு நான் பயந்து வீட்டுக்குள்ளேயே வந்து இருந்துட்டேன் இன்னைக்கு நைட் மட்டும் இங்கனையே தங்கிட்டு நான் காலையிலேயே எழுந்து போய்டுறேங்க ஐயா எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று வியர்த்து வடிய அவள் திக்கி திணறி கூறி முடிக்க சக்திவேலுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.
“சரி சரி ஒன்னும் இல்லை இந்த தண்ணீயை குடி” என்று தன் பையில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு வீட்டின் கதவை அடைத்துவிட்டு கீழே இருந்த சந்தில் எந்த வித பூச்சியும் வராமல் இருக்க துணியை அடைத்துவிட்டு உள்ளே வந்தான்.
அவன் மீண்டும் உள்ளே வருவதற்க்குள் அந்த பாட்டிலில் இருந்த முக்கால்வாசி தண்ணீரை குடித்துவிட்டு போதையுடனே அமர்ந்து இருந்தாள் வள்ளி.
“என்னங்க இது குடிச்ச பிறகு ஏதோ ஒரு மாதிரி உள்ளே பண்ணுது” என்று வள்ளி நாக்கு குலறி கொண்டே பேச
சக்திவேல் பதறி அடித்து கொண்டு அவள் அருகில் சென்றான்.
திருநெல்வேலியில் இருந்து வரும்போது அவன் நண்பன் போதை மருந்தை தண்ணீரில் கலந்து வைத்திருந்தான் அதை சக்திவேல் வரும்போது எடுத்து வந்திருந்தான்
தனியாக இருக்கும் போது அவ்வப்போது அவன் பயன்படுத்தி இருக்க இன்றும் அதே போல் எடுத்து வந்திருந்தான்.
சக்திவேல் வேறு ஒரு பாட்டிலை எடுத்துக் கொடுத்திருக்க அவளோ இந்த பாட்டிலை எடுத்து குடித்திருந்தாள்.
“ஏய் வள்ளி நான் உனக்கு இந்த பாட்டில் தான எடுத்து கொடுத்தேன் நீயேன் இதை குடிச்ச” என்று அவள் கையில் இருந்த பாட்டிலை பிடுங்க
“கொடுங்க நான் மீதியையும் குடிக்கனும்” என்று அவன் கையில் இருந்த அந்த பாட்டிலை வள்ளி பிடுங்க போக அதற்குள்
சக்திவேல் கையிலிருந்த பாட்டிலை தன் வாயில் சரித்து குடித்துவிட்டு தூக்கி எறிந்தான்.
சக்திவேல் அவளை கண்டு கொள்ளாமல் போதை மயக்கத்தில் அங்கிருந்த அறையின் உள்ளே சென்று கதவடைத்துவிட்டு படுத்து கொண்டான்.
வெளியே வள்ளி போதை மயக்கத்திலேயே கீழே தரையில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
வீட்டின் வெளியே மழை வேறு விடாமல் பொழிந்து கொண்டே இருந்தது இடி பலமாக இடித்து கொண்டே இருக்க
‘என்ன பொண்ணு டா இவள்’ என்று மனதில் நினைத்து கொண்டே அவனும் போதை மயக்கத்தில் உறங்க ஆரம்பித்தான்.
நடு இரவில் வள்ளி “அம்மா பாம்பு பயமா இருக்கு மா” என்று வள்ளி கத்தும் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தான் சக்திவேல்.
என்னாச்சு இவளுக்கு என்று பதட்டத்துடனே கதவை திறந்து வெளியில் வந்தான் சக்திவேல்.
தொடரும்….
super sis daily ud update pannugga……
Super sis
Enna bro atleast weekly once aavuthu novel podalamala ipdiya time edukurathu 😕😕