ATM Tamil Romantic Novels

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 19,20

19

 

“இன்னும் கல்யாணத்துக்கு மூணு நாள்தான் இருக்கு.. ரெண்டு பேரும் என்ன இப்படி சும்மாவே உட்கார்ந்து இருக்கீங்க? இந்நேரத்துக்கு பியூட்டி பார்லர் பிரண்ட்ஸ் ஆட்டம் பாட்டம்னு இருக்க வேணாமா? ரஞ்சனியை பாருங்க.. இதோட மூணு சிட்டிங் போயிட்டு வந்துட்டா பார்லருக்கு.. நீங்க ரெண்டு பேரும் ஒன் டைம் கூட போகல.. ஆல்ரெடி வீட்டுக்கே வந்து பிரைடல் மேக்கப் பண்றவங்க டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு போனாலும்.. நீங்களும் கொஞ்சம் உங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டாமா? ஏன் இப்படி இருக்கீங்க? அவதான் மூஞ்சி தொங்க போட்டுகிட்டு இருக்கானா.. ஆரா.. நீ அவளுக்கு சொல்லக்கூடாதா?” என்று வத்சலா கவலையாக ஆராதனாவிடம் முறையிட்டார்.

 

 

“கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா அப்பாவை பிரிந்து போனா இந்த வருத்தம் இருக்கலாம். ஆனா.. நீங்க ரெண்டு பேரும் இங்கே எங்க கூட தானே இருக்கப் போறீங்க? அப்புறம் ஏண்டி இப்படி ஒரே டல்லா இருக்கீங்க? மயூ!!!” என்று அழுத்தமாக மருமகளை பார்த்து அழைத்தார் வேதவள்ளி.

 

 

காலையில் ஆராதனா இருவருக்குமான டீ கப்பை எடுத்துக்கொண்டு வந்து மயூரியிடம் அமர்ந்தவள் “அண்ணா என்ன சொன்னாங்க? என்ன மாதிரி ப்ளான் போட்டு இருக்காங்க? கட்டாயம் வந்துடுவாங்கள?” என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருந்தாள். 

 

“நானே டென்ஷன்ல இருக்கேன். நீ ஏண்டி வேற நொய் நொய்னுங்குற? கொஞ்ச நேரம் அமைதியா இருக்க முடியுமா? முடியாதா?” என்று மயூரியும் தன் மேலிருந்த குற்றவுணர்ச்சி.. இதுவரை காதலை சொல்லாத ஆரன் மேலிருந்த கடுப்பு.. இதற்கெல்லாம் காரணமான நிரஞ்சன் மீதிருந்த கோபம் அனைத்தும் ஆராதனாவிடம் திரும்ப வெடித்து கத்தியிருந்தாள் மயூரி.

 

 

‘நமக்கே இவ்வளவு டென்ஷன் இருக்கும்போது.. பாவம் அவள்!! அவளுக்கும் இருக்கும் தானே!! நாம தான் சும்மா சும்மா போய் அவளை தொந்தரவு செய்கிறோம் போல..” என்று அமைதியாக டீ கோப்பையை அவளிடம் நீட்டியவள், அருகிலேயே ஆராதனா அமர்ந்து கொள்ள இருவரும் இருவேறு திசைகளில் பார்த்த வண்ணம் அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருக்கும்போது தான் வத்சலா வந்தது.

 

எப்பொழுதும் ஆட்டம் பாட்டம் ரொம்ப சேட்டை என்று செய்கிறவள் அல்ல மயூரி. ஆனாலும் அவள் இருக்கும் இடத்தில் புன்னகையும் மகிழ்ச்சியும் நிரம்பி வழியும். ஆனால் இந்தத் திருமணப் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததிலிருந்தே மகளின் கலக்கமான முகமும்.. சுணக்கமான நடவடிக்கைகளும் பெற்ற அன்னையாக வத்சலாவின் மனதை பிசைந்தது பயத்தில்.. கவலையில்..

 

 

அதுதான் காலையிலேயே வந்து விட்டார் மகளின் மனதை அறிந்திட..

 

 

கூடவே வேதவள்ளியும் வந்துவிட ஆராதனா தான் என்ன பதில் சொல்வது என்பது விழிபிதுங்கி நின்றாள். 

 

 

மயூரியிடம் எவ்வளவு கேட்டாலும் நீ ஒரு பதில் சொல்லப் போவதில்லை என்று புரிந்த வேதவள்ளி “உங்களுக்கு இன்னைக்கு பார்லர்ல சிட்டிங் ஏற்பாடு பண்ணியிருக்கேன். கிளம்புங்க.. 10 மணிக்கு அங்க இருக்கணும்!” என்று அண்ணியிடம் கண்ணை காட்டி கீழே அழைத்து வந்துவிட்டார்.

 

 

மயூரி காரில் போகும் போது கூட எதுவும் பேசவில்லை ஆராதனாவிடம் முழுக்க முழுக்க சிந்தனை மட்டுமே!! அந்த சிந்தனை கூட அவளைப் பற்றிய முழுமையான சுய அலசல்!!

 

அதில் ஆரனை முதன்முதலில் சந்தித்தது முதல் இருவருக்கும் இடையேயான ஈர்ப்பு தாண்டி இப்பொழுது காதல் வரை அனைத்தும் நினைத்து பார்த்தவளின், நினைவில் நின்றது எல்லாம் தானும் அவனிடம் தன் மனதை தெளிவாக எடுத்து உரைக்கவில்லை. அதே போல் அவனும் தன் மீதான காதல் என்ற வார்த்தையை சொல்லவேயில்லை என்றுதான்!!

 

அது மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற அமைப்புடன் கூடிய பார்லர். செலிப்ரட்டிஸ் அதிலும் விவிஐபி மட்டுமே அங்கு கஸ்டமர்கள். இருவரும் உள் நுழைந்தவுடன் தனித்தனியாக அவர்களுக்கு சில சோதனைகள் எடுக்க வேண்டும்.. அவர்களது தோல் அமைப்பு நிறம் பற்றி.. அதற்குப் பின்தான் அனைத்தும் செய்ய முடியும் என்று அந்த நிறுவனத்தை நடத்துபவரே நேரில் வந்து கூறி இருவரையும் தனித் தனி அறைக்குள் அழைத்துச் சென்றார்.

 

 

ஆராதனா “போன் செய்!” என்பது போல சைகை செய்துவிட்டு அவளுக்கு என்று ஒதுக்க பட்ட அறையில் உச்சி முதல் பாதம் வரை அவர்களிடம் கொடுத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் கண்களை மூடி..

 

 

இங்கே மயூரியை முதலில் சோதித்து பார்த்த பெண் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேம்.. வந்துடறேன்!” என்றுவிட்டு சென்றுவிட திரும்பவும் கண்களை மூடி ஆரனின் எண்ணத்தையே தொடர்ந்து கொண்டிருந்தவள் நாசியில் ஆரனின் பிரத்யேக வாசம்.. 

 

மெல்ல கண்களை திறந்து பார்க்க எதிரே இருந்த கண்ணாடியில் அவனின்‌ பிம்பம். அதில் அதிர்ந்து ஆச்சரியத்தில் கண்களை விரித்து கண்களை கசக்கி பார்க்க அங்கே அவன் இல்லை.. 

 

‘அவன் இங்கே எங்கே வரப்போகிறான்? காலையிலிருந்து அவனை நினைத்து நினைத்து உன்னை சுற்றி வெறும் கானல் காட்சிகளே மயூ!’ என்று தலையில் அடித்துக் கொண்டவளின் கரங்கள் சட்டென்று ஒரு முரட்டு வெம்மையான கையால் பற்றபட விழிவிரித்தவளின் விழிகளை நிறைத்தான் அந்த நீலநிற பாவைகாரன்… இந்த பாவையின் சொந்தகாரன்.. ஆரன் வித்யூத்!!

 

பற்றிய கையில் தன் இதழ்களை பதித்தான் ஆரன். அவள்‌ ஆனந்த அதிர்ச்சியில் அவனை பார்க்க மெல்ல அவள் கைகளைப் பற்றி எழுப்பியவள் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து தன் மடி மீது அவளை அமர்த்திக் கொண்டான்.

 

“வேலைதான் முக்கியம்னு மும்பை போன நீங்க.. இப்ப எதுக்கு இங்கே வந்தீங்க?” என்று கோபம் கொப்பளிக்க மயூரி கேட்க..

 

 

“அது எப்படிடி உன் மேரேஜ்க்கு வராமல் இருக்க முடியும்? நாம் அப்படியா பழகி இருக்கோம். வந்து வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுக்காமல் இருப்பேனா? அதான் அங்க வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஓடி வந்துட்டேன்!” என்று அவள் நெற்றி முடி சிரித்தான் மாயவன்.

 

 

“வாட்!! என் மேரேஜா??” என்று அதிர்ந்து கேட்டவளின் பிளந்த வாயை சிறைப்படுத்த முயன்றான் ஆரன்.

 

அவ்ளோ மறுத்து முகம் திருப்ப,

“ம்ப்ச்.. இருடி.. பத்து நாளுக்கு மேலாகுது. ஒரு கிஸ் மட்டும் கொடுத்துக்குறேன்” என்று அவள் முகத்தில் ஆரம்பித்து.. கழுத்தில்.. மார்பில் எல்லாம் முத்தங்களை அள்ளித் தெளித்தவன் இதழ்களில் வந்து இளைப்பாறினான்.

 

இருவரின் வாய்களும் மிகவும் பிஸியாக இருந்தது. இருவரின் நாக்கும் சுழன்று சுழன்று மற்றவரின் உமிழ் நீரை சுவைத்துக் கொண்டிருந்தது. தான் பலமுறை சுவைத்தாலும் இவளின் இந்த அருகாமை.. குழைவு.. வெட்கம் என்றும் முதல் முறை போலவே உணர வைக்கிறாள் என்ற எண்ணங்களோடு அவள் கன்னங்களை தாங்கி எண்ணிலடங்கா முத்தங்களை கொடுத்து கொண்டிருந்தான் ஆரன்.

 

தன்னவன் கொடுக்கும் முத்தங்களை வாங்கிச் சிலிர்த்த மயூரி அவனாக விடும் வரை அமைதியாக இருந்தாள். நிறைய முத்தங்கள் வாங்கிய பின் அவனை விலக்கினாள்.

 

“ஸ்வீட்ஸ் கூட இவ்வளவு சுவையா இருந்ததில்ல மயூ.. பட் உன் லிப்ஸ்.. ம்ம்ம்” தன்னவளின் இதழ் அமிர்த சுவை வியந்தவனின் கைகள் அவள் அங்கங்களில் மேய்ந்து கொண்டிருந்தது. பத்து நாள் பிரிவு இருவரிடமும் மிகுந்த தாபத்தை தோற்றுவிக்க.. மோக வேட்கையின் தவிப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் கொன்று தின்று விடும் வெறியில் இருந்தனர். மீண்டும் மீண்டும் அவள் இதழ்களை நாடியவனின் இச்சுகள் சத்தமில்லாமல் ஒலிக்க.. இருவரின் முனகல்களும் அந்த அறைக்குள் சன்னமாக உலாவியது.

 

ஒரு எல்லைக்கு மேல் ஆரனால் தன் உணர்ச்சி அலைகளை கட்டுப் படுத்த முடியவில்லை. சட்டென்று அவளை விட்டுப் பிரிந்தவன்..

 

 

“நீ எத்தனை சிட்டிங்ஸ் இங்கே பார்லரில் உட்கார்ந்து இருந்தாலும் உன் இயற்கை அழகு மாறாது!! மயூ பேபி இங்கே உட்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ணாதே.. நீ எப்படி இருந்தாலும் உன்னை நான் ரசிப்பேன். மீட் யூ அட் மேரேஜ்!!” என்றவன், வந்த வேகத்திலேயே சென்று விட்டான்.

 

 

நிச்சயமாக ஆரன் வந்தானா? இல்லையா? காட்சிப் பிழையா? கானல் நீரா? இல்லை உண்மையா? என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தவள் இதழ்களில் மிச்சம் இருந்த அவனது ஈர எச்சில்கள் சொன்னது அவன் வரவை உண்மை என்று!!

 

ஆனால் சென்றவனோ ஆராதனாவிடம் சென்று பேசிவிட்டு வெகு நேரம் கழித்தே சென்றான்.

வரும்போது மயூரி தத்தெடுத்து இருந்த மௌனத்தை இப்பொழுது ஆராதனா தடுத்தெடுக்க.. மயூரியின் முகத்தில் ஆரன் வந்து விட்டான் என்ற செய்தியே பூரிப்பையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

 

 

இவர்கள் இருவரும் தங்கள் எண்ணங்களில் சுழன்று கொண்டிருக்க அங்கே ஆராதனா நிமலன் திருமணத்தை கலைக்க தன் மகளுக்கு ஐடியா சொல்லிக்கொண்டிருந்தார் மோகனா.

 

 

“எப்படியும் தன் தங்கச்சி கல்யாணத்தை தான் முதல்ல நடத்துவான் நிமிலன். மயூரி நிரஞ்சன் கல்யாணம் முடிஞ்சதும் அதுக்கு அடுத்தது அவங்க கல்யாணம் தான் அந்த டைம் பார்த்து நீ வாந்தி எடுக்கிற..”

 

“அம்மா… இதெல்லாம் ரொம்ப ரொம்ப பாட்டி காலத்து பழைய ஐடியா ம்மா.. புதுசா ஏதாவது யோசியேன்?” என்று தன் முன்னால் இருந்த சிப்ஸ் பாக்கெட்டை காலி செய்து கொண்டே ரஞ்சனி பேச.. அவள் தலையில் நான்கு கொட்டு கொட்டியவர், “புத்தியில்லாத உன்னையும் உங்க அப்பனையும் வச்சுக்கிட்டு என்னதான் செய்ய? புத்தி இருக்குற என் பையனும் நேர்மையா அந்தப் பக்கம் இருக்கான்! ஒழுங்கா நான் சொல்றதை கேளு.. ஓல்டா இருந்தாலும் இதுதான் கோல்ட்! எல்லாருக்கும் முன்னாடியே யார் காரணம்னு கேட்டா நீ நிமிலனை கை காட்டிவிடு.. நானும் குய்யோ முறையோன்னு கத்தி நிமிலனுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுறேன். உனக்கு பார்த்த மாப்பிள்ளையை ஆராதனாவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடுறேன்! எப்படி என் ஐடியா?” என்றார்.

 

 

“எனக்கு அந்த ஆராதனா அத்தான் பக்கத்தில் உட்காரதை பார்த்தாலே புடிக்கல.. அவளை ஆளுங்கள விட்டு தூக்கி விடலாமா?” என்று கேட்டவளை மீண்டும் நான்கு கொட்டு தலையில் கொட்டினார் மோகனா. 

 

“ஆராதனாவை தூக்கனோம்னு தெரிஞ்சா எப்படி மயூரி நிரஞ்சன் கல்யாணம் நடக்கும்? மொத்தமாக மூணு கல்யாணமே நடக்காது!! போட்ட திட்டமெல்லாம் பாழாகும்!! சொல்வதைக் கேட்டு ஒழுங்கா நடந்தா நிமிலன கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருக்கலாம். இல்ல.. அந்த செந்தில்நாதன் தான் உனக்கு!” என்று விட்டு செல்லும் அன்னையே வெறித்துப் பார்த்தாள் ரஞ்சனி.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் சுற்றிக் கொண்டிருக்க.. கல்யாண நாளும் வந்தது முதல் நாள் நிச்சயதார்த்தம் என்றாலும் பொதுவாக பெண்களையும் மாப்பிள்ளைகளையும் வைத்து நலங்கு வைத்தார்களே தவிர ஜோடியாக வைக்க விடவே இல்லை நிரஞ்சன்.

 

இப்போதுள்ள டிரெண்ட் போல மெகந்தி.. சங்கீத்.. முதல் நாளே ரிசப்ஷன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எதுவும் இல்லை எல்லாம் திருமணம் முடிந்தவுடன் என்று எல்லாத்துக்கும் இந்த ஒரு காரணத்தையும் சொல்லி முட்டுக்கட்டை போட்டான் நிரஞ்சன்.

 

 

பொதுவாக இலகுவாக எல்லாத்தையும் எடுத்துக் கொள்பவன், யார் சொன்னாலும் அது நல்லது இருந்தால் தட்டாமல் செய்பவன், சட்டப்படி இதுதான் சரி இது தவறு என்று அக்குவேறு ஆணிவேறாக பிரித்து எடுப்பவன் என்று யார் சொல்வதையும் கேளாமல் திருமணம் முடிந்தவுடன்.. திருமணம் முடிந்தவுடன்.. என்று கூறிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் நிமிலனுக்கு கடுப்பு வந்தது. 

 

 

“எனக்கு இருக்கிறது ஒரே தங்கச்சி அவ கல்யாணத்தை நல்லா பண்ணி பாக்கணும் எனக்கு ஆசை இருக்காதா? இந்த மாதிரி செலிப்ரேஷன்ஸ் எல்லாம் இப்போ டிரன்டிங் டா!! எதுவுமே வேண்டாம் வேண்டாம்னு சொன்னா எப்படி நிரஞ்சா?” என்று கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனிடம் கேட்டான்.

 

 

“இந்த சங்கீத் அதுக்கப்புறம் டான்ஸ் மெஹந்தி இதையெல்லாம் நாம கண்டு படிச்சோம்? நம்மளோட ட்ரெடிஷனல் இதெல்லாம் கிடையவே கிடையாது. நிச்சயதார்த்த ஓலை வாசித்து நலங்கு வைக்கிறது. விடிய காலையில மணமக்களுக்கு எண்ணெய் வைத்து நலங்கு செய்து மணவறையில் அமர வைக்கிறது தான் நம்முடைய வழக்கம் பழக்கம்!! அதை ஏன் மாற்றனும்? உனக்கு என்ன இப்போது இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தானே வேணும்? அதெல்லாம் ஒரு ரிசப்ஷன் வைச்சு நல்ல வச்சுக்கோ.. அப்ப இன்னும் உரிமையாய் இருக்கும் இல்ல.. இப்ப தள்ளி தள்ளி நின்னு ஆடுறத, அப்போ உரிமையா கட்டி பிடிச்சு ஆடலாம் பாடலாம்” என்று ஒரு கண்ணை அடித்து ம்சசான் தோள் மீது கை போட்டுக் கொண்டான் நிரஞ்சன்.

 

 

“அவன் சொல்வதும் சரிதானே இந்த மெஹந்தி சங்கீத் எல்லாம் வடநாட்டு முறைதானே.. நம்மூர் பழக்கவழக்கம் இல்லையே.. அவனை போட்டு கஷ்டப் படுத்தாத டா!!” என்று அங்கே வந்து தெய்வானை அம்மாளும் கூறினார்.

 

 

“ஆமாம் மா.. நிரஞ்சன் சொல்றதும் சரிதான். எல்லோருக்கும் இது கல்யாண டென்ஷன் வேற.. அதிலும் மூணு கல்யாணம் வைச்சுகிட்டு.. அப்பப்பா.. அதனால அதை நல்ல படியா முடிச்சிட்டு அதுக்கப்புறம் ரிலாக்ஸா இந்த மாதிரி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இருக்கட்டுமே!!” என்று வாழ்க்கையில் முதல் முறையாக தன் மகனை ஆதரித்துப் பேசும் தன் அம்மாவைப் பார்த்த நிரஞ்சன் “நீ அவ்வளவு நல்லவ இல்லையே மா.. ஏதோ உள்குத்து வைச்சு இருக்க போலையே!!” என்றான் அன்னையின் அருகே குனிந்து கிசுகிசுப்பாக..

 

ஏனென்றால் நிமிலனுக்கும் ரஞ்சனிக்கும் திருமணம் நடந்த பின்னர் இது மாதிரி கொண்டாட்டங்கள் வைத்தால் மகள் சந்தோஷத்துடன் இருப்பாள். இல்லை என்றால் பேருக்கு என்று இந்த செந்தில்நாதன் உடன் இருக்க வேண்டுமே என்ற கவலை அவருக்கு.

 

 

அவரவர் கவலை..

அவரவர் நியாயம்.. 

அவரவருக்கு!!

 

 

“ஆனாலும் செந்தூரார் குடும்பத்து கல்யாணம் இப்படி ஏதோ போல நடக்குது எனக்கு மனதுக்கு பிடிக்கவே இல்லை” என்று குருபரன் தன் மகன் நிமிலனை ஒத்தே பேசினார்.

 

 

“ஏன் தடபுடலாக நடக்கக்கூடாது மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு இதையெல்லாம் நாம் கிராண்டாக செய்வோம். சீர்வரிசை எல்லாம் நம் வீட்டிலிருந்து மண்டபத்திற்கு கொண்டு போவோம் சொந்த பந்தங்களோடு!! அதுவே திரும்பிப் பார்க்க வைக்கும் நம் பிள்ளைகளின் திருமணத்தை.. கூடவே சீர்வரிசை எடுத்து வரும்போது சொந்தங்களும் இதில் கலந்து கொள்வார்களும் ஆசிர்வதிப்பார்கள் நம் பிள்ளைகள மனமகிழ்ச்சியோடு.. மனநிறைவோடு!!” என்று மெய்யறிவன் கூற அதுவே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

மெய்யறிவு சொன்னது போலவே திருச்செந்தூரை திரும்பிப்பார்க்க அமர்க்களமாக ஆடம்பரமாக நடத்தப்பட்டது மாப்பிள்ளை அழைப்பும் இல்லை இல்லை மாப்பிள்ளைகள் அழைப்பும் மணப்பெண்கள் அழைப்பும்..

 

 

ராஜாக்கள் கம்பீரத்தோடு குதிரையில் ஊர்வலமாக மணமகன்கள் வந்தார்கள் என்றால்.. மூடிய பல்லாக்குகள் எல்லாம் அல்ல.. ரதத்தில் பவனி வந்தார்கள் ராணிகளாக மணமகள்கள்…

 

அந்த கல்யாண மண்டபத்தில் அருகில் இருந்த கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து இவற்றையெல்லாம் இதழில் தவழும் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் கைகட்டி ஆரன் வித்யூத்!! அருகிலேயே அவனது தந்தை விஜயேந்திரன்.

 

 

அந்த சிரிப்பில் அப்படி என்னதான் இருந்ததாம்?? 

ரசனையா? 

கோபமா? 

இகழ்ச்சியா? 

காழ்ப்புணர்ச்சியா? 

வன்மமா?? 

 

அப்படியெல்லாம் வரையறுக்க முடியாத புன்னகை அது!!

 

புன்னகை மட்டுமா? அதை சிந்திக் கொண்டிருக்கும் அந்த கோமகனும் தான் எந்த ஒரு வரையறைக்கும் உட்படாதவன்!!

 

தன் தந்தைக்கு ஏற்பட்ட நிலைக்கு ஆக்ரோஷம் கொண்டு ஆவேசமாக அவர்களை அடித்து வீழ்த்தி அந்த குடும்பத்தையே நிர்மூலமாக்க முடியும் அவனால்.. ஆனால் அது தேவையில்லை அவனுக்கு!! அந்த குடும்பத்து ஆட்கள் உயிர்களை இழந்தால் அந்தக் கணம் மட்டும்தான் அவர்களுக்கு அந்த வலி. அவர்கள் அப்படி எல்லாம் தப்பித்து விடக்கூடாது. அணுவணுவாக வாழ்நாள் முழுவதும் அந்த வலியை அனுபவிக்க வேண்டும் அதுக்கு தானே..

 

சூரசம்ஹாரத்தை கூட சூட்சமமாக செய்கின்றான் இந்த சூரன்!! ஆரன்!!

 

தன் கண் முன்னே ஒரே மாதிரி உடையில் வெவ்வேறு வண்ணங்களில் கம்பீரமாக வந்து கொண்டிருந்த மணமகன்களை பார்த்தவன் கைத்துப்பாக்கியை போல் அவர்கள் பக்கம் கையை நீட்டி ஒற்றை கண்ணை மூடி, தலை சாய்த்து பார்த்தவன் “நாளைக்கு இந்த மூன்று கல்யாணத்துல இரண்டு தான் நடக்கும்.. நடக்க வைப்பான் ஆரன்!!” என்றான் மர்மப் புன்னகையோடு!!

 

டொம்.. டொம்.. டொம்..

 

யாருக்கு யாரோ ஜோடியாம்!!

 

யாரோடு யாருக்கு கல்யாணமாம்!!

 

யாருக்கு தெரியுமாம்??

 

டொம்.. டொம்.. டொம்..

 

கல்யாணத்தில் சந்திப்போம்!!!

20

 

 

விடியற்காலை வேலை ஆதவன் இன்னும் தன் எண்ணிலடங்கா கரங்களை விரித்து தன் காதலி பூமி பெண்ணை அரவணைத்து கொள்ளவில்லை. அவள் இன்னும் இருள் என்னும் அரக்கன் பிடியில் தான் தத்தளிக்கிறாள். 

 

 

ஆனாலும் இந்த கலி காலத்தில் அரக்கனை தானே ஆராதிக்கிறார்கள் ‘இன்னும் சற்றே நேரம் நீ இருந்திருக்கலாம்!’ என்று!!

 

‘அதுக்குள்ள அந்த சூரியன் வந்து விட்டானே! என்ன அவசரம் அவனுக்கு?’ என்று ஆதவனை நிந்திக்கிறார்கள்!!

 

இது தான் உலகநீதி!! 

 

 

ஊரே அந்த அரக்கனின் பிடியில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மண்டபத்தில் மட்டும்.. அவர்களுக்கு மட்டுமே ஆதவன் காட்சியளித்தது போல செயற்கை விளக்குகள் பளீரென்று ஒளிர்ந்தது. பட்டுச் சுவை சரசரக்க பெண்களும்.. வேஷ்டி கட்டி இருந்தாலும் அதை ஸ்டைலாக ஒற்றை கையால் பிடித்து ஓடி ஆடி வேலை செய்யும் ஆண்களும் என்று அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது அந்த இடம்.

 

 

அதில் ஆனந்தம்.. எரிச்சல்.. குழப்பம்.. பிரச்சினை என்று பலதும் கலந்திருந்தது.. இனிப்பு காரம் புளிப்பு உவர்ப்பு சேர்ந்த அறுசுவை உணவை போல..

 

 

குருபரனும் மெய்யறிவும் வந்தவர்களை வரவேற்று உபசரித்து உள்ளே அனுப்பிக் கொண்டிருக்க.. அங்கே ராகவன் ஐயர் கேட்பதை எடுத்து கொடுத்துக் கொண்டு அவ்வப்போது தனக்கென்று ஒரு ஆளை வைத்து இடையிடையே நொறுக்குத் தீனிகளையும் ஜூஸையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.

 

 

நிமிலனும் நிரஞ்சனும் ஒரே அறையில் இருக்கலாம் என்று எவ்வளவோ கூறியும் நிரஞ்சன் வேண்டாம் என்று மறுத்து விட்டான். நிமிலனோடு இருந்துவிட்டால் அவனுடைய திட்டங்கள் எவ்வாறு நிறைவேறுவது?

 

 

இங்கே ஆராதனாவும் மயூரியும் ஒரே அறையில் இருக்க, ரஞ்சனி மற்றொரு அறையில்.. நிரஞ்சன் சொன்னது போலவே காலையில் எண்ணெய் வைத்து நலங்கு முடித்து குளித்து புத்தாடை அணிந்து இதோ மணப்பெண் அலங்கார நடந்து கொண்டிருந்தது அவர்களுக்கு.

 

 

அறையில் இங்கேயும் அங்கேயும் அல்லாடிக் கொண்டிருந்தான் நிரஞ்சன். பக் பக் என்று மனம் அடித்து கொண்டது. 

 

ஆரன் எப்போது வருவான்? எப்படி வருவான்? என்ன திட்டம் வைத்திருக்கிறான்? ஒன்றும் புரியவில்லை நிரஞ்சனுக்கு. வீணாக மயூரி அருகில் சென்று அமரவும் அவனுக்கு விருப்பமில்லை.

 

 

நிரஞ்சனுக்கு குறையாது தவிப்பில் இருந்தாள் ஆராதனா.. அன்று பார்லரில் ஆரன் பேசிவிட்டு சென்ற விஷயங்கள் அப்படி!!

 

 

ஆராதனாவும் நிரஞ்சனும் தவித்த தவிப்பில் சிறிது கூட இல்லாமல் ஒரு மோனநிலையிலேயே தயாராகிக் கொண்டிருந்தாள் மயூரி.

 

கண்ணாடி பார்த்து தலை வாரிக்கொண்டு இருந்த நிமிலனின் முகத்தில் அப்படி ஒரு வெற்றிப்புன்னகை!!

 

 

முதல் நாள்தான் சென்று ஆரனை சந்தித்து திருமண பத்திரிக்கை வைத்து விட்டு வந்து இருந்தான். ஆனால் வீட்டில் அதை யாருக்கும் சொல்லவில்லை. என்று ஆராதனவோடு அவனைப் பார்த்தானோ.. அன்றுமுதல் மனதுக்குள் இனம் தெரியாத ஒரு பயம் தவிப்பு. எங்கே தொழிலில் சரித்த மாதிரி வாழ்க்கையிலும் தன்னை சரித்து விடுவானோ? என்று!! ஆனால் அதற்கு நான் விடமாட்டேன் என்று சபதம் எடுத்து இதோ திருமணம் வரை கொண்டுவந்து விட்டான். அந்த வெற்றியை எதிரியிடம் பறைசாற்றி கொள்ளாமல் இருந்தால் எப்படி?

 

 

அப்பாயின்மென்ட் எல்லாம் வாங்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. இவன் அவர்கள் அலுவலகத்தில் நுழையும் போது சிசிடிவி கேமராவில் பார்த்திருந்தான் ஆரன் தன் அறையில் அமர்ந்திருந்த இருக்கையில் அரைவட்டம் அடித்தபடியே.. முகத்தில் அப்படி ஒரு கேலிப் புன்னகை விரவி படர்ந்து வழிந்தது.

 

 

நிமிலன் நுழைந்த அடுத்த நொடியே “சார்.. உங்களை அழைத்து வரச் சொன்னார்” என்று ஒரு பணியாளர் வந்து நிற்க.. நெற்றி சுருங்க பார்த்தவன் சிசிடிவி உபயம் என்று புரிந்து கொண்டு அவனோடு சென்று ஆரனை சந்தித்தான்.

 

 

அழகாக விலை உயர்வாக பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டிருந்த அந்தப் பத்திரிக்கையை அவன் முன் நீட்டி “செந்தூரார் குடும்பத்துல நாளைக்கு கல்யாணம். மூன்று கல்யாணம்!! முக்கியமா எனக்கும் ஆராதனாவுக்கும்” என்று அழுத்தி சொல்லி “கண்டிப்பாக நீ வரணும் ஆரன்! வந்து பார்க்கணும் எங்க குடும்பத்தின் பாரம்பரியத்தை!! பழக்கவழக்கத்தை!! அருமை பெருமையை!! மற்றவர்கள் கொண்டாடும் விதத்தை!!” என்று பேசியவனின் வார்த்தைகளில் கர்வம் வழிந்தது.

 

அதற்கும் நக்கல் சுமந்த புன்னகையே பதிலாக கொடுத்த ஆரன் இன்டர்காமில் ஏதோ சொல்ல அடுத்த பத்தாவது நிமிடம் ஜில்ஜில் ஜிகர்தண்டா வந்தது நிமிலனுக்கு.

 

 

“சாப்பிடு நிமலன். ரொம்ப ஹாட்டா வந்திருக்க.. கூலா ஜில்லுனு ஜிகர்தண்டா சாப்பிடு..” என்று கூறியவாறே அவன் கொடுத்த பத்திரிக்கையை முகத்தில் எந்த வித பாவனையும் காட்டாது பிரித்துப் பார்த்தான் ஆரன்.

 

 

“நைஸ் டிசைன்!! யாரு ஆரா செலக்ஷனா?” என்று கேட்டு அவனை வெறுப்பேத்தி விட்டு அதிலிருந்து பெயர்களை பார்த்தவன் முகத்தில் சற்றே கோபம் இருந்ததோ என்ற வகையில் அந்த இளம் நீல நிற பாவை அடர் நிறத்துக்கு மாறியது. ஆனால் அவனின் கோபம் இந்த பாவை வழியாகத்தான் வெளிப்படும் என்பதை அறியாத நிமிலன் பத்திரிக்கையை பார்த்தும் இவ்வளவு அமைதியாக இருக்கிறானே என்று குழம்பினான்.

 

 

“இவ்வளவு தூரம் மெனக்கட்டு எனக்காக பத்திரிக்கை கொண்டு வந்து இன்வைட் பண்ணியிருக்க.. கண்டிப்பா கல்யாணத்துக்கு வருவேன்! நான் இல்லாத கல்யாணமா?” என்று கொக்கி போட்டு நிறுத்தி நிமிலனை பார்க்க.. 

 

இவன் என்ன இப்படி ரியாக்ட் செய்கிறான் என்று குழம்பினாலும் “வரணும்! கண்டிப்பா நீ வரணும்!! நான் ஆராதனா கழுத்துல தாலி கட்டுறதை நீ பார்க்கணும்!!” என்று வஞ்சினத்தோடு கூறிவிட்டு நிமிலன் சென்றுவிட்டான்.

 

 

இப்பொழுது அதை நினைத்துக் கொண்டிருந்தவன் முகத்தில் வெற்றிப் புன்னகை பூத்திருந்தாலும் ஆரனின் அன்றைய பதில் இப்போது உள்ளுக்குள் உறுத்தியது நிமிலனுக்கு. ஆனாலும் இது என் கோட்டை!! என் வீடு!! என் சொந்தங்கள்!! இவற்றையெல்லாம் தாண்டி அவன் என்ன செய்துவிடப் போகிறான் என்று அலட்சியம் வேறு!!

 

 

இன்னும் சிறிது நேரத்தில் அனைத்தும் தலைகீழாக மாறப்போகிறது என்பதை அறியவில்லை நிமிலன்!!

 

அதன் பின் ஒவ்வொரு மணமகளாக வரவழைக்கப்பட்டு தாய்மாமன் கைகளால் அவர்களுக்கு கல்யாண புடவைகள் கொடுக்கப்பட்டன. அதேபோல மாப்பிள்ளைகளுக்கும் தாய்மாமன் கைகளால் கொடுக்கப்பட்டு உடைகள் மாற்றி வேறு அனுப்பப்பட்டனர்.

 

 

மூன்று மணப்பெண்களும் தயார் ஆகி வர.. ஆராதனா குழப்பத்தின் உச்சியில் இருந்தாள். மயூரியோ ஆரன் வந்தாலும் தன் காதலை அவனிடம் உணர்த்த வேண்டுமே என்ன செய்வது? ஏது செய்வது? என்று தன் மனதோடு போராடிக் கொண்டிருந்தாள். ரஞ்சனி எப்படியாவது நிமிலன் கையால் தாலி வாங்கி விட வேண்டும் என்ற வெறியில் இருந்தாள்.

 

மணமகன்களில் செந்தில்நாதன் மட்டுமே மகிழ்ச்சியோடு இருந்தான். நிரஞ்சனோ ஆரன் வருவானா? இல்லயேனில் என்ன சொல்லி திருமணத்தை நிறுத்துவது? என்று தலையை பிய்த்துக் கொள்ளாத குறைதான். நிமிலன் ஆரனின் கண் முன்னாலேயே ஆராதனாவை என் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டு அவனை ஒரு வெற்றிப் பார்வை பார்க்க வேண்டும். இதில் நான் அவனை வெற்றி கொள்ள வேண்டும் என்று காத்திருந்தான்.

 

 

பலரும் பலவித மன நிலையில் இருக்க… ஆரனோ அதே மண்டபத்தில் தான் இருந்தான் அவர்களை பார்த்த வண்ணம்.. இதழ் கொண்ட இகழ்ச்சி சிரிப்பில்!!

 

 

இப்பொழுது மூன்று ஜோடிகளின் பெற்றோர்களும் மணமேடைக்கு அருகில் வந்து நிற்க.. ஐயர் “முதல்ல எந்த ஜோடிக்கு? வந்து உட்கார சொல்லுங்கோ? மாப்பிள்ளையோட மச்சானையும் பக்கத்துல வர சொல்லுங்கோ” என்று அழைக்க..

 

 

“முதல்ல ஆராதனா கல்யாணத்தை முடிப்போம் அவதான் பெண்களில் மூத்தவள்!” என்று தெய்வானை அம்மாள் கூற மோகனாவுக்கோ பக் பக்கென்று ஆனது.

 

 

“அது எப்படி தங்கச்சி இருக்கும்போது முதல்ல நிமிலன் கல்யாணத்தை பண்ணறது? என்ன தான் ஒரே மேடையில் கல்யாணம் இருந்தாலும் முதல தங்கச்சிக்கு முடிச்சிட்டு தான் அவனுக்கு முடிக்கணும். அதனால மயூரி நிரஞ்சன் கல்யாணத்தை பஸ்ட் முடியட்டும். நிரஞ்சா வந்து மணையில் உட்காரு” என்று மோகனா கூற…

 

 

“என்னடா பலியாடு நாமளா? வந்து உட்கார சொல்கிறாங்களே!” என்று ஒரு கணம் அதிர்ந்தாலும் சற்று யோசித்தவன் அன்னையின் வார்த்தைகளிலேயே தனக்கான தீர்வைத் தேடி கொண்டான்.

 

 

“கரெக்ட் மா நீ சொல்றது!! இதுக்கு தான் எங்க அம்மா வேணும்ங்குறது” என்று அவன் பாசமாக கூற மிதப்பாக ஒரு பார்வையை அனைவரிடமும் பார்த்தார் மோகனா.

 

“நீ சொல்ற மாதிரி தங்கச்சி இருக்கும்போது அண்ணன் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதனால ரஞ்சனி மட்டுமல்ல ஆராதனாவும் என் தங்கை தான். அவங்க கல்யாணத்த முதல்ல முடிச்சிட்டு அடுத்தது எங்க கல்யாணத்துக்கு வரேன் சரியா? மாப்பிள்ளை வாங்க உங்களுக்கு மச்சான் முறை நான் தான் செய்யணும்..” என்று செந்தில்நாதனை மண மேடையில் அமர வைக்க அவர்கள் பெற்றோரும் அருகில் வந்து நிற்க மோகனாவால் வாயை திறக்க முடியவில்லை.

 

 

ரஞ்சனி அதிர்ந்து அன்னையை பார்த்து “என்ன செய்ய? வாந்தி எடுக்கவா?” என்று கேட்க..

 

“இவள் ஒரு கூமுட்டை! தானா யோசிக்க தெரியாது. எதற்கெடுத்தாலும் என் மூஞ்சிய பார்த்துக்கிட்டு இருக்கா.. இப்போ இவ வாந்தி எடுத்தாலும் நிமிலனை இவளுக்கு கட்ட முடியாதே.. இவள் கல்யாணமும் நடக்காது! நிரஞ்சன் கல்யாணமும் நடக்காதே!! ஆண்டவா எது எப்படி ஆனாலும் என் அண்ணன் பொண்ணு என் வீட்டுக்கு தான் மருமகளாக வரணும்” என சுயநலமாக யோசித்தவர் பெண்ணை பார்த்து மணையில் அமரமாறு கண்ணசைத்தார்.

 

 

வேறுவழியின்றி ரஞ்சனி அமர செந்தில்நாதனுக்கு மச்சான் முறை அருகில் நின்று நிரஞ்சன் செய்ய “மாங்கல்ய தானம் பண்ணுங்கோ!!” என்று ஐயரின் வார்த்தையில் செந்தில்நாதனின் மனைவியானாள் ரஞ்சனி. 

 

‘அப்பாடி!! ஒரு விக்கெட் அவுட்!!’ என்று மன நிம்மதியோடு அடுத்து ஆராதனா நிமலன் கல்யாணத்தை முடித்துவிடலாம் என்று நினைத்து திரும்ப.. அமர்க்களமாக ஆரன் முதல் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

 

 

இப்போதுதான் இன்னும் ஆசுவாசமாக இருந்தது நிரஞ்சனுக்கு ஆரன் வந்தவுடன்.

 

 

“அதான் ரஞ்சனி கல்யாணம் முடிந்துவிட்டது தானே.. நீ மனையில் உட்கார்!! உனக்கு நிமிலன் செய்ய வேண்டியதை செய்வான் மச்சான் முறையில்.. அடுத்த நீ அவனுக்கு செய்யலாம்! இல்லை இருவருமே ஒரே நேரத்தில் தாலியை காட்டினாலும் சரி!!” என்று வேதவள்ளி கூறினார். அவர் ஆரனை கவனிக்கவில்லை. எத்தனையோ விஐபிகளும் தொழிலதிபர்களும் வந்திருக்க.. அவரின் கவனம் முழுவதும் மூன்று திருமணமும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று எண்ணம் மட்டுமே!!

 

சொல்லப்போனால் குருபரன் மெய்யறிவு ராகவன் யாருமே அவனை கண்டு கொள்ளவில்லை. ஆனால் கண்டு கொள்ள வேண்டியவர்கள் சரியாக கண்டு கொண்டனர் அதில் முதலில் நிமிலன்!! அடுத்து மயூரி!! அப்புறம் நிரஞ்சன்!!

 

 

அப்போது மயூரி அருகே நெருங்கி நின்று நிரஞ்சன் “இங்கே பார் மயூ.. என்னால் முடிந்த அளவுக்கு உன் காதலுக்காக சப்போர்ட் பண்ணிட்டேன். இனி நீங்க ரெண்டு பேரும் தான் பார்த்துக் கொள்ளணும். இனி மணையில் எல்லாம் உட்கார்ந்தால் அது சரிவராது.. அதற்கு முன்னமே ஏதாவது செய்து விடு” என்று கிசுகிசுத்தான் மயூரியிடம்.

 

ஆரனும் மயூரியை தான் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான. அவன் கண்களின் கூலர் அவன் யாரை பார்க்கிறான் என்று கணிக்க முடியாமல் தடை செய்தது!!

 

 

ஒரு பெருமூச்சு விட்டவள் “இவன் ஒருத்தனை லவ் செய்துவிட்டு நான் படுற பாடு!!” என்று நினைத்தவள், ‘காதலிக்கு கல்யாணம் நடக்க ரெடியா இருக்கு.. இவன் ஜம்பமா சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறான். இவனையெல்லாம்??’ என்று ஆத்திரமாக வந்தது பெண்ணவளுக்கு. பெற்றோரை.. உடன் பிறந்தானை.. கூட வளர்ந்தவர்களை.. சுற்றத்தை.. உறவினர்களை எல்லாம் மறந்தவள் கண் முன் அவள் காதல் மட்டுமே!! அதன் நாயகன் ஆரன் மட்டுமே அவள் கண்களில் முழுதாக நிறைந்திருந்தான்!!

 

 

தன் பெற்றோரை.. அத்தை மாமன்களை.. அண்ணனை ஒரு முறை பார்த்தவள் பின்பு விடுவிடுவென்று மணவறையில் இருந்து இறங்க.. அனைவரும் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்து “மயூ!!” “மயூரி!!!” என்று அழைக்க.. அதை காதல் வாங்காதவள் நேராக வந்து ஆரன் முன்னே நின்றாள். 

 

மண்டபமே அதிர்ச்சியோடு அவளைப் பார்த்து அதிர்ந்து நிற்க…

 

 

அவளோ தீர்க்கமான பார்வையோடு ஆரனை பார்த்து “இத்தனை நாளா என் மனம் உன் காதலுக்காக என்ன பண்ணினேனு தவித்துக் கொண்டே இருந்துச்சு.. என் காதலுக்கான நியாயத்தை நான் செய்திட்டேன் இப்போ” என்றவள் இரு கைகளையும் கட்டி அவனைப் பார்த்தாள் இனி நீ என்ன செய்வாய் என்று..

 

“மயூரி என்ன பண்ற?” என்று கர்ஜித்தவாறு நிமலன் மணையிலிருந்து எழ முற்பட்ட.. 

வத்சலா அவனை அழுத்தி பிடித்து அமர வைத்தார்.

 

“மணையில் உட்கார்ந்துட்டு எழக்கூடாது தம்பி!” என்று கண்கள் கலங்க மகளைப் பார்த்துக் கொண்டே.. 

 

 

குருபரன் கண்களில் தீப்பொறி பறக்க மகளை பார்த்த வண்ணம் கீழே இறங்க.. ஏதும் தவறுதலாக நடந்து விடுமோ என்று மெய்யறிவும் அவருடனே கீழே இறங்கி வந்தார். “கோபப்படாத குரு அமைதியா இரு.. பேசிக்கலாம்” என்றவாறு..

 

 

மோகனாவும் தெய்வானை அம்மாளுக்கும் இந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றிருக்க..

வேதவள்ளி அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

 

இத்தனை ஆயிரம் பேர் கொண்ட மண்டபத்தில் அதுவும் மணையில் கூட அமராமல் தன் முன்னே வந்து காதலை கூட கெத்தாக சொல்லி நிற்கும் மயூரியை பார்த்தவனுக்கு காதல் தாறுமாறாக பிய்த்துக் கொண்டு வந்தது. ஆனால் அசுரன் சற்றே அவனை அடக்கி வைத்து எழுந்து நின்றவன் அவள் முன்னே தனது வலது கையை நீட்ட.. அவளும் அந்த கையை பற்றிக்கொள்ள..

திரும்ப அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.

 

நிமிலன் ‘இவன் ஆராதனாவோடு தானே அன்று பேசிக்கொண்டிருந்தான். இதில் மயூரி எங்கிருந்து வந்தாள்? ஒருவேளை நம்மை திசை திருப்புவதற்காக அந்த போட்டோவை அனுப்பி வைத்துவிட்டு இவன் மயூரியை கரெக்ட் செய்து விட்டானோ?’ என்று முதல்முதலாக ஆரனை பற்றி சரியாக சிந்தித்தான். ஆனால் முழுவதுமாக அவன் அறியவில்லை.

 

 

மகளை அடைந்திருந்த குருபரன் “மயூரி என்ன இது?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க..

 

 

“முன்னாடியே இவனைத்தான் காதலிக்கிறேன் என்று சொல்லுவதற்கு என்ன மயூ? இப்படி எல்லோரும் முன்னிலையிலும் வைத்து அசிங்கப்படுத்தி விட்டாயே!” என்று மெய்யறிவு தாளமாட்டாமல் கேட்டார்.

 

 

“அதற்கான வாய்ப்பை நீங்கள் எல்லாம் எனக்கு கொடுக்கவே இல்லையே மாமா..‌”

 

 

“என்ன நாங்க கொடுக்கல? திருமண விஷயம் பேசியதிலிருந்து நீ மௌனியாக வாய மூடிட்டு தானே இருந்த.. ஒரு முறையாவது உன் மனதில் இருக்கிற காதலை சொன்னியா இல்லை இவரைதான் பிடித்துத் இருக்குனு எங்க கிட்ட சொன்னியா? அதுவும் இல்லை. நீ செய்திருந்தா நாங்கள் ஏன் நிரஞ்சனை உனக்கு ஜோடி சேர்க்க போறோம்? இதோ பார் மணையில் தனியாக நின்று பரிதாபமாக நிற்கும் அவன் நிலைமை என்ன?” என்று அவளுக்கு குற்ற உணர்ச்சியை தூண்டி மனதை மாற்ற முயற்சித்தார் மெய்யறிவு.

 

 

ஆனால் ஒரு வார்த்தை இருவரும் ஆரனிடம் பேசவே இல்லை. அமைதியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தவன், “மயூ முகூர்த்தத்துக்கு டைம் ஆயிடுச்சு கிளம்பலாமா?” என்று அவன் கேட்க ஆத்திரமாக குருபரன் அவன் சட்டையை எட்டிப்பிடிக்க முனைய சட்டென்று இடையில் புகுந்தான் நிரஞ்சன்.

 

 

“வேண்டாம் மாமா!! எனக்கு முன்னேயே இவங்க காதல் தெரியும்!! இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேனு மயூ சொன்னா.. நான் தான் சம்மதிக்க வைத்தேன். இல்லேன்னா ஆராதனா நிமிலன் கல்யாணம் நடக்காது. எங்கம்மா நடக்க விட மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். தயவுசெய்து அவளை தடுக்காதீங்க” என்றான்.

 

 

‘ஏற்கனவே ஒரு காதலால் நம் குடும்பம் பட்ட வடு இன்னும் தீராமல் இருக்க.. காயம் மாறாமல் இருக்க.. அதற்குள் இன்னொன்றா?’ என்று மெய்யறிவு சிந்திக்கும் போதுதான் ஞாபகம் வந்தவராய் வேதவள்ளியை திரும்பிப்பார்க்க.. அவரின் முகத்தில் தெரிந்த கலவரத்தில் வேகமாக மனைவியின் அருகே ஓடினார் அவர்.

 

 

“வள்ளி.. வள்ளி மா.. என்ன ஆச்சு?” என்று அவரை உலுக்க அவரின் கைகள் ஆரனை மட்டுமே காட்டின நடுக்கத்தோடு. வாய் வார்த்தைகள் அங்கே பஞ்சம் ஆகிவிட.. உடலெல்லாம் ஒரு வித படபடப்பு!! நடுக்கம் கொண்ட அவரது கைகள் வழியே கண்களைத் திருப்பியவர் கண்டது என்னவோ மயூரி ஆரன் ஜோடியை தான்.

 

 

‘மயூரி எப்படி செய்ததைத் தாங்க மாட்டாமல் அதிர்ச்சியோடு நிற்கிறாள். பாவம்!’ என்று நினைத்த மெய்யறிவு “வள்ளி மா.. மயூ அப்படி எல்லாம் செய்யமாட்டா.. நாம் அவளை மாத்திடலாம். கண்டிப்பா நிரஞ்சனோடு தான் கல்யாணம் நடக்கும்” என்று மனைவியைத் தேற்றுவதற்காக ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தார் மெய்யறிவு.

 

 

நிமிலன் அங்க மணையில் அமர்ந்திருக்க முடியாமல் எழவும் முடியாமலும் ஆரன் மேல் உள்ள கோபத்தை காட்ட முடியாமலும் கொதித்து அமர்ந்திருந்தான் அந்த ஹோம குண்டத்திற்கு இணையாக..

 

“இங்க பாருங்க.. இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு அதுக்குள்ள எங்கள் திருமணத்தை நாங்க முடிக்கணும்” என்ற ஆரன் யாரையும் கண்டுகொள்ளாமல் மயூரியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு செல்ல.. நிமிலனின் வெறித்த பார்வை முதுகை துளைக்க.. சில நிமிடங்கள் நின்றவன் மீண்டும் திரும்பி மணமேடை ஏறினான்.

 

 

“என்ன மச்சான்.. இப்போ தான் கரெக்டா என்ன கண்டுபிடிச்சிட்ட போல!” என்று சிரித்தவன் “இன்னும் முழுதாக என்னைப் பற்றி உனக்கு தெரியல.. ஆமாம் பொண்ணு இருக்கு. ஆனா நாத்தனார் முடிச்சு போட நாத்தனார் வேண்டுமே?”

என்றவன் மெல்ல ஆராதனாவின் பக்கம் திரும்பினான்.

 

“என்ன ஆரா போகலாமா?” என்று அவன் கேட்க “போகலாம் அண்ணா!!” என்று முன்னால் வந்து நின்ற ஆராதனாவை பார்த்தவர்கள் அனைவரும் இன்னும் திகைக்க அதிர்ச்சியில் நிமிலன் எழுந்தே நின்று விட்டான்.

 

 

ஆரன் கொடுத்து ஒவ்வொரு அதிர்ச்சியையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தாக்க தன் கண்களில் இருந்த கூலரை கழட்டி தன் நீல நிற பாவையால் எதிரில் நின்று வேதவள்ளியே கூர்மையாக அவன் பார்க்க.. இதுவரை ‘அப்படி இருக்குமோ?’ என்று இருந்த சந்தேகம்.. அவனது கண்களை பார்த்ததும் ஊர்ஜிதமாகி விட.. அப்படியே சாய்ந்து விட்டார் வேதவள்ளி.

 

“எவ்வளவு தைரியம் இருந்தால் எங்கிருந்தோ வந்து என் தங்கச்சி மனசை மாத்தியிருப்ப.. கூடவே என் ஆராவை கூப்பிட்டு போகிறேன் சொல்லுவ.. யாருடா நீ? உனக்கு யாருடா உரிமை கொடுத்தது?” என்று ஆரனின் சட்டையை பிடித்து நிமிலன் சண்டை போட…

 

 

“அதானே நல்லா கேளு நிமிலா.. எங்கிருந்தோ பொழப்பு தேடி வந்த உனக்கு இங்கே எங்க வீட்டு பொண்ணு கேக்குதா? இதில் போதாக்குறைக்கு நாத்தனார் முடிச்சு போடவும் ஆராதனாவை கூட்டிட்டு போறேன்னு சொல்றே.. அவ யாரு தெரியுமா? செந்தூராரின் பேத்தி!!” என்று மோகனா வாய்க்கு வந்தபடி பேச…

 

“எனக்கு இல்லாத உரிமையா ஆராதனா மீது!!” என்று சிரித்தவன்,

“அவள் செந்தூராரின் பேத்தியின் அப்போ நான் யாரு?” என்ற அவனின் பார்வை வேதவள்ளி குருபரனை துளைத்தது.

 

 

“நானும் செந்தூராரின் பேரன் தான்.. பேருலையே இருக்கே.. அவரின் விகுதி ஆரன்!! 

ஆரன் வித்யூத் விஜயேந்திரன்!!

அவள்‌ ஆராதனா விஜயேந்திரன்!!”

என்றவன் சற்றும் யோசிக்காமல் ஒரு கையால் ஆராதனாவை கை பிடித்தவன் மறுகையால் மயூரியையும் அழைத்துக்கொண்டு அம்மண்டபத்தில் இருந்து விடுவிடுவென்று வெளியேறினான்.

 

ஏற்கனவே அறிந்த உண்மையின் படபடப்பு அடங்கவே சற்று நேரம் பிடித்த வேதவள்ளி ஆரனின் பேச்சில் மொத்தமாக வேரறுந்த மரம் போல விழுந்தார்.

 

அசுரன் ஆட்டம் இனி..

2 thoughts on “ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 19,20”

  1. Качественная спецтехника от производителя: инвестиции, которые оправдаются
    продажа грузовых авто и спецтехники [url=https://www.proizvodstvo-spectekhniki.ru]https://www.proizvodstvo-spectekhniki.ru[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top